பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஜூலை, 2013

P.Susheela sings to actress Ambika.

நடிகை அம்பிகாவுக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்:

ஏசியாநெட் டி.வி நிகழ்ச்சியில் பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் நடிகை அம்பிகாவிடம், உங்களுக்கு பிடித்த பாடகி யார் என கேட்டார். அம்பிகா உடனேயே “பி.சுசீலா” என்றார். தொடர்ந்து “உங்களுக்காக அவர் பாடி இருக்கிறாரா?” என கேட்க, மலையாளத்தில் பாடி இருக்கிறாரா என தெரியாது. ஆனால் தமிழில் “காலம் காலமாய் பெண் தானே கற்பூர தீபம்” என ஒரு பாடல் பாடி இருக்கிறார் என்றார். “காலைத்தென்றல் பாடி வரும்”, “பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள” போன்ற பாடல்களை எப்படி மறந்தார் என தோன்றியது எனக்கு!.அதை தொடர்ந்து அம்பிகாவுக்கு பி.சுசீலா பாடிய பாடல்களை தொகுக்க ஆரம்பித்தேன். இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நாற்பது பாடல்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இன்னமும் இருக்கும்.
proof : video ( Ambika interview)

Year Language Song Movie
1985 Tamil kaalai thendral  uyarntha ullam
1987 Tamil kaanalukkul meem pidithen kaadhal parisu
1985 Tamil pattu kannam thottu kolla kaakki sattai
1985 Tamil thEnaandaal kOyilukku naagam
1985 Tamil veeram dhaan un vedham pudhiya therpu
1985 Tamil kaalam kaalamaai peN thaanE karpoora deepam
1984 Tamil atha maga thangathukku thangamadi thangam
1984 Tamil kaalam ilamai kaalam thangamadi thangam
1984 Tamil rottoram seriyile thangamadi thangam
1988 Tamil thaane paaduthe manam  kann chimittum neram
1987 Tamil muthukkumaranai velundu vinaiyillai
1980 Malayalam kannipalunge ponnum  angaadi 
1981 Malayalam kala kala mozhi Premageethangal
1980 Malayalam oru paathayil vaiki vanna vasantham
1980 Malayalam kinavil eden thottam eden thottam
1982 Malayalam hara shankara siva shankara anuraaga kodathi
1982 Malayalam panineer poochoodi  saram
1982 Malayalam venmegam kudachoodum saram
1983 Kannada rangeri bandhu avala neralu
1983 Kannada nija heluveno amma ninage Chakravyuha
1984 Kannada artha rathri swathanthra indhina bharatha
1987 Kannada haaduve naa athiratha maharatha
1987 Kannada maagiya kaalada athiratha maharatha
1981 Telugu noru manchidaiyithe adhala meda
1981 Telugu kallu kallu kalusu nayadu gaari abbayi
1981 Telugu akasam aliginidhi nayadu gaari abbayi
1981 Telugu chukka vesanante nayadu gaari abbayi
1981 Telugu poruginti pillodu nayadu gaari abbayi
1981 Telugu Tharalani mallelelaithe adhala meda
1981 Telugu tholi choopu oka parichayam adhala meda
1981 Telugu kannulu chalavu manasu viswaroopam
1981 Telugu nootiko kotiko okaru viswaroopam
1982 Telugu ila kahani palletoori simham
1983 Telugu maatalu ranivela kurukshetramlo seetha
1984 Telugu takkari takkari bhama mukhya mantri
1984 Telugu neelona naalona dongalu baaboy dongalu
1984 Telugu nenante emo dongalu baaboy dongalu
1984 Telugu ososi kurradhana dongalu baaboy dongalu
1984 Telugu oyi magada dongalu baaboy dongalu
1984 Telugu naa puvvai  priyamanina rajinikanth
1986 Telugu vetagalla chinnodu sooryodayam (tamil dub)




செவ்வாய், 23 ஜூலை, 2013

P.Susheela Sings to khushboo


குஷ்புவுக்கு பி.சுசீலா குரல் கொடுத்த பாடல்கள்.


பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பி.சுசீலாவுக்கு குஷ்புவின் கையால் விருது வழங்கினார்கள். அப்போது குஷ்பு, “எனக்காக பி.சுசீலாம்மா பாடி இருக்கிறார்களா என தெரியாது என கூற, கூட்டத்தில் இருந்தவர்கள் “பூ பூக்கும் மாசம் தைமாசம்” என உதவி செய்ய, “இதை எப்படி மறந்தேன்? என் கணவர் சுந்தர்.சி க்கு என்னை பிடித்துப்போக இந்த பாடலும் ஒரு காரணம்” என குறிப்பிட்டார். அன்று ட்விட்டரில் “Had the honor of giving away the award to Legend P.Susheela ma..she sang my most famous song till date,"poo pookum maasam thai maasam" :.

      இதை தொடர்ந்து நான் குஷ்புக்கு பி.சுசீலா பாடிய பாடல்களை தேடினேன். தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இருபது பாடல்களுக்கு மேல் குஷ்புவுக்காக பாடி இருக்கிறார்.  

     குஷ்பு தென்னிந்திய திரைப்படங்களில் முதலில் அறிமுகமானது  “கலியுக பாண்டவுலு” என்ற தெலுங்குப்படத்தின் மூலமாக. அதில் "oka paapaku padaharellu" பாடலை குஷ்புவுக்காக பாடி இருக்கிறார்.

     கன்னடத்தில் முதல் படம் “ரணதீரா”. அதில் பி.சுசீலா  பாடிய “ondanondu kaladalli aarambha இன்றும் ரசிக்கப்படும் சூப்பர்ஹிட் பாடல். குஷ்பூ நடித்த “தாலிஃகாஃகி” என்ற கன்னடப்படத்திலும் பாடி இருக்கிறார்.

      தமிழில் கதாநாயகியாக நடித்த முதல் படம் “வருஷம்-16”. அதில் வரும் “பூ பூக்கும் மாசம்தைமாசம்” ஒரு ஹிட் பாடல். அதை தவிர அவர் பாக்யராஜுடன் நடித்த அம்மா வந்தாச்சு படத்தில், தேவா இசையில் “இது உனக்காக பாடும் ராகம்” என்ற பாடலை குஷ்புவுக்காக பாடி இருக்கிறார்.

     தெலுங்கில் பல ஹிட் பாடல்களை குஷ்புவுக்காக பாடி இருக்கிறார். பாடல்களின் தொகுப்பு கீழே..


yearSongMovie
1989 poo pookkum maasam  varusham 16
1992 idhu unakkaaga paadum  amma vanthachu
1989 koothakku vechenu premanjali
1989 Hey chitti naana premanjali
1986 ee moodulolaku captain nagarjun
1986 nuvvu nenu captain nagarjun
1986 taitaka captain nagarjun
1986 muvvalanni captain nagarjun
1986 oka paapaku padaharellu kaliyuga pandavulu
1987 Ee jeevitham chadarangamu trimoorthulu
1987 challenge trimoorthulu
1986 ayyayo ayyayo trimoorthulu
1988 ennenno andaali lokaana aathma katha
1988 jaabilee cheppave aathma katha
1987 chitti chitti bang marana homam
1988 gubulu gubulaga prema kireetam
1988 varadosthe godari prema kireetam
1987 ondanondu kaladalli ranadheera
1987 biduvene chinna Thaaligaagi
1987 haale haaleyallu Thaaligaagi

வெள்ளி, 19 ஜூலை, 2013

Poet Vaali and Singer P.susheela

கவிஞர் வாலியும், பாடகி சுசீலாவும்.

மறைந்த கவிஞர் வாலி ஒரு பேட்டியில் சொன்னார். “நான் எழுதிய ஏழாயிரம் பாடல்களில் ஈராயிரம் பாடல்களை பாடியவர் பி.சுசீலா”. 

            1978-இல் வெளிவந்த அழகர் மலைகள்வன் படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற தாலாட்டுப்பாடல் தான் வாலி எழுதிய முதல் பாடல். அதை பாடியவர் பி.சுசீலா.  ஒருவர் மேல் இன்னொருவர் நல்ல மரியாதை வைத்து இருந்தார்கள்.

              ஒரு விழாவில் வாலி இப்படி பேசினார். “என் முதல் பாடலை பாடி என் வாழ்வில் வெற்றியை  வர வைத்தவர் பி.சுசீலா அவர்கள். எனவே,  வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் கவிஞர்களே, இசை அமைப்பாளர்களே, உங்கள் முதல் பாடலை பி.சுசீலாவை வைத்து பாட வையுங்கள். அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது போல் பேசினார். 

            வாலி எம்,ஜி.ஆருக்கு முதலில் பாடல் எழுதியது “நல்லவன் வாழ்வான்” படத்தில்.  அதன் பிறகு அவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக இருந்தார். “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்” என்ற அந்த பாடலை  பாடியவர் பி.சுசீலா. 

            எம்.எஸ்.வியுடன் இணைந்த முதல் படம் “இதயத்தில் நீ”. அதில் இடம் பெற்ற பெண்குரல் பி.சுசீலாவின் குரல் ( உறவு என்றொரு சொல் இருந்தால்).  

                                                              கற்பகம் படத்துக்கு ஒரு தனித்துவம்  உண்டு.    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி, கே.ஆர்.விஜயா அறிமுகமான அந்த படத்தில் பி.சுசீலா மட்டுமே ஆறு பாடல்களையும் பாடினார். வேறு பெண் குரலோ, ஆண் குரலோ இல்லை. அந்த பாடல்களை எழுதியவர் வாலி. கே.எஸ்.ஜிக்கு  அவர் பாடல் எழுதிய முதல் படம் அது தான்.

                   கே.வி.மகாதேவன் அவர்களுக்காக முதலில் எழுதிய படம் "நீங்காத நினைவு" படத்தில் வரும் "சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே". அதை பாடியவர்கள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும்.

                  மத்திய அரசு  1969-இல் இருந்து பின்னணி பாடகிகளுக்கும் தேசீய விருது வழங்கி வருகிறது. அறிவிக்கப்பட்ட முதல் விருதை பெற்றுக்கொண்டவர் பி.சுசீலா. “நாளை இந்த வேளை பார்த்து” என்ற அந்த பாடலை எழுதியவர் வாலி அவர்கள்.

                  இளையராஜா அவர்களுக்கு வாலி எழுதிய முதல் பாடல் , பத்ரகாளி படதில் வரும்  “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல். அதுவும் பி.சுசீலா, ஜேசுதாஸ் பாடியது.

   திரை இசையில் தனது முப்பதாவது வருடத்தை 1988-இல் நிறைவு செய்தார் வாலி. அந்த நாளில் அவர் தனது முதல் பாடலை பாடிய பி.சுசீலாவே அன்றும்  பாட வேண்டும் என விரும்பி இளையாராஜாவிடம் கூற, இளையராஜா அதை ஏற்றுக்கொண்டு,  “தூரி தூரி தும்மக்க தூரி” என்ற பாடலை பாட வைத்தார். 
  
  A.R.Rahman இசையில் கூட, வாலி எழுதிய "கப்பலேறி போயாச்சு" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார்.

     வாலி எழுதிய மிக அருமையான பாடல்களை பி.சுசீலா அவர்கள் பாடி இருக்கிறார்கள்.