பின்பற்றுபவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

ஆதி நாராயணராவ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - பாகம் 1



          இசை அமைப்பாளர் ஆதி நாராயணராவ் அவர்கள் 1946–ல் “Varudhini” என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மொழி படங்களில் இசை அமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார். இசை அமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும். ஸ்டுடியோ அதிபராகவும் ஜெயித்தவர். இவர் நடிகை அஞ்சலி தேவியின் கணவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என்னிடம் யாராவது உங்களுக்கு பிடித்த ஐந்து இசை அமைப்பாளர் பெயர்களை கூற சொன்னால் கூட இவர் பெயர் அதில் இருக்கும். இவர் இசை அமைத்த படங்கள் எண்ணிக்கையில் முப்பதை தாண்டுமா என்பது சந்தேகம். ஆனால் தரத்தில் எல்லாமே மாணிக்கங்கள.
           ஆதி நாராயண ராவ் இசையில் எப்போது பி.சுசீலா பாடினார் என தேடிய போது  “Anna data” ( 1953 ) என்ற தெலுங்கு படம் கிடைத்தது. அதில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பளித்தார் ஆதி நாராயண ராவ் அவர்கள். ஹிந்துஸ்தானி இசையில் நல்ல ஞானம் உள்ள ஆதி நாராயண ராவ் அவர்கள் இசையில் “பிரளயபயோதி ஜலே”  என்ற ஜெயதேவ அஷ்டபதி தான் இவர் இசையில் பாடிய முதல் பாடலாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வயதிலேயே என்ன ஒரு இசை ஞானம்!!. கிளாசிக்கல் இசையில் அசத்தி இருப்பார் பி.சுசீலா. பி.சுசீலாவின் ஆரம்ப காலத்தில் இப்பாடல்கள் அவர் திறமையையும் குரல் வளத்தையும் மெருகேற்ற  உதவின. அப்போது கதாநாயகிகளாக நடித்த பெரிய நடிகைகளில் அஞ்சலி தேவிக்கு தான் முதலில் பி.சுசீலா பின்னணி பாடினார் என நினைக்கிறேன்.  


    அதை தொடர்ந்து அவர் இசை அமைத்த எல்லா படங்களிலும் அவர் பி.சுசீலாவுக்கு வாய்ப்பளித்தார். அவர் இசையில் அதிகமாக பாடியவரும் பி.சுசீலா அவர்கள் தான்.
    மிக அருமையான பாடல்களையும் மிக சவாலான பாடல்களையும் இவர் இசையில் பி.சுசீலா அதிகமாக பாடி இருக்கிறார். ஒரு பாடகி வளர்ந்து வரும் நேரத்தில் அவர் குரலை பண்படுத்த தரமான பாடல்கள் அமைய வேண்டும். நல்ல இசை ஞானம் உள்ளவர்களிடம் பணி புரிய வேண்டும். இவை இரண்டும் பி.சுசீலா விஷயத்தில் சரியாக அமைந்தன. இயற்கையாகவே கிடைத்த இனிய குரல் வளத்தை அப்பாடல்கள் மேலும் மெருகேற்றின. அதில் ஆதி நாராயண ராவ் அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
    . சவாலான பாடல்கள் என்றால் ..... !!!!?
இப்போதும் வட இந்திய ரியாலிட்டி ஷோக்களில் Final களில் பாடப்படும் பாடலில் ஒன்று  “Kuhoo Kuhoo bole koyalia”.  இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆதி நாராயண ராவ் அவர்கள். இப்பாடலை முதலில் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் பாடியவர் பி.சுசீலா அவர்கள். பின்னர் தயாரிப்பாளர் விருப்பத்துக்காக தெலுங்கில் மட்டும் ஜிக்கி அவர்களின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்தது. தயாரிப்பாளரின் முந்தைய சூப்பர் ஹிட் படமான  “அனார்கலி”யில் “ராஜசேகரா” என்ற சூப்பர் ஹிட் பாடலை ஜிக்கி பாடி இருந்ததால் இப்பாடலை ஜிக்கியை வைத்து பாட வைக்க விரும்பினார் தயாரிப்பாளர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழில் “தேசுலாவுதேதேன் மலராலே” என ஒலிக்கும் இந்த பாடலை பாடியவர்கள் கண்டசாலா மற்றும் பி.சுசீலா அவர்கள். எத்தனை அருமையான பாடல்!. எத்தனை சங்கதிகள்.!! ஒரு டூயட்டுக்குள் இத்தனை சங்கதிகளை அழகாய் பயன்படுத்த ஆதி நாராயண ராவால் மட்டுமே முடியும்.
       இது தான் சவால் என்றால் இதையும் மீறிய ஒரு சவாலை “மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்” என்ற படத்தில் அளித்தார். ராஜ சபையில் காதலனை தேடும் காதலியின் பாடல்.. எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயியில் துவங்கும் ஆலாப்.. அதில் கொஞ்சம் வலியும் தேடலும் இருக்க வேண்டும்.. அந்த வலியை கூட்டிக்கொண்டே போகும் படி ஒன்றுக்கு பின் ஒன்றாய் மூன்று ஹம்மிங்குகள்.. .. திடீரென காதலனை கண்டதும் குரலில் பொங்கும் சந்தோஷம், அருவியாய் கொட்டும் சங்கதிகள் என அந்த ஹம்மிங்களிலேயே ஆயிரம் வித்தை காட்டியிருப்பார் பி.சுசீலா அவர்கள். இந்த குரலில் தான் அந்த வித்தைகளை வர வைக்க முடியும் என ஆதி நாராயண ராவுக்கும் தெரிந்தே இருக்கிறது. அதை தொடர்ந்து “வருமோ இது போல் ஒரு நாள்” என பல்லவியுடன் பி.சுசீலாவின் குரலால் நம்மை மயங்க வைக்கும் ஒரு நடனப்பாடல் . இறுதியில் வட இந்திய  நடனப்பாடல்களில் இடம் பெறும் ஒரு அழகிய தில்லானா, அதுவும் கிட்டத்தட்ட இரு நிமிடங்கள் ஒலிக்கும். “தரிகிட தக..” என துவங்கும் அந்த தில்லானாவில் என்ன இல்லை ?! ..நிறைய கஷ்டமான  ஜதிகள், ஸ்வரங்கள், ஆலாபனைகள் என ஒரே இசை மழை தான்!! அதில்  “கிடதித்தா கிடதித்தா” என வரும் இடத்தில் அஞ்சலி தேவியின் நடனத்தில் தெரியும் குறும்பு கூட பி.சுசீலாவின் குரலிலேயே வந்திருக்கும். இப்பாடலை மேடைகளில் பாடும் தைரியம் இன்னும் யாருக்கும் வரவே இல்லை போலிருக்கிறது.. நான் யாரும் பாடி கேட்டதில்லை..  
     அதே படத்தில் “ஜல்ஜல் ஜல் சலங்கை ஜதி நாதமே நாட்டியம்” என ஒரு நடனப்பாடல் தனிப்பாடலாக அமைந்தது. “நாட்டியமே ஜீவிதம்” என முடியும் நேரங்களில் அருவி போல் விழும் சங்கதிகளின் அழகினை கேட்டு ரசியுங்கள். பாடல் முடிந்ததும் இதைப்போலவே ஆலாபனைகள், ஜதிகள், ஸ்வரங்கள் என தொடரும் இசை மழையில் கண்டசாலா அவர்களும் சேர்ந்து கொள்வார். மிக கஷ்டமான அப்பாடலை இருவரும் அனுபவித்து பாடி இருப்பார்கள். இப்படி பல பாடல்களை குறிப்படலாம்..

       இனி கொஞ்சம் விளக்கமாக ஆதி நாராயண ராவ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களை பற்றி பார்ப்போம். ஆதி நாரயண ராவ் தெலுங்கில் தான் அதிக படங்களுக்கு இசை அமைத்தார். சில படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. காரணம் அஞ்சலி தேவிக்கு தமிழிலும் தெலுங்கிலும் மார்க்கட் ஒரே போல் சீராக இருந்தது தான். அதனால் சில படங்கள் தமிழிலும் அவர் இசையில் வெளிவந்தன.
    ஏற்கனவே சொன்னது போல் “Anna data” படத்தில் “ப்ரளய பயோதி ஜலே” என்ற அருமையான அஷ்டபதி பி.சுசீலாவின் குரலில் இடம் பிடித்தது. அதை தவிர “jaya jagadeesa”, “ontari vadane bhama “ என இன்னும் இரு இனிமையான பாடல்கள் இடம் பிடித்தன. அதை தொடர்ந்து 1955-ல் “அந்த நாள் தான் இதடா ஆருயிரே என் ராஜா” என்ற அருமையான பாடலையும் பாடும் வாய்ப்பளித்தார். இதே பாடல் தெலுங்கில் “Anda Chandalagani”  என ஒலித்தது. இதற்கு திரு.விக்கி எழுதிய அருமையான விளக்கத்தை படியுங்கள்..( விளக்கம் ) இதை தொடர்ந்து மிக பெரிய வெற்றிப்படமான “மணாளனே மங்கையின் பாக்கியம்” என்ற படத்திலும் ஆதி நாராயண ராவின் இசை கொடி கட்டி பறந்தது. எல்லா பாடல்களுமே ஹிட்.. “அழைக்காதே நினைக்காதே”, “தேசுலாவுதே தேன் மலராலே”. “கண்ணே நீ வாடா,  “நீயே என் வாழ்வின் நிதி ஆகுமேஜகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா”, “ தேவா தயை புரிய வா, “ஜோரான பொம்மை பாருங்க” எல்லாமே மிக அருமையான பாடல்கள். மூன்று காதல் பாடல்கள், ஒரு சோக தாலாட்டு., இரு பக்தி பாடல்கள், ஒரு ஜனரஞ்சக பாடல் என சுசீலாவின் குரலிலேயே பல வெரைட்டி கொடுத்திருப்பார் ஆதி நாராயன் ராவ் அவர்கள். இந்த படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. சுவர்ண சுந்தரி என்ற அப்படத்திலும் பி.சுசீலா ஏழு பாடல்கள் பாடினார்.
            1959-இல் வெளிவந்த “அதிசய பெண்” படம் ஆஷா என்ற ஹிந்தி படத்தின் டப்பிங் என நினைக்கிறேன். “ஈனா மீனா டிகா” பாடல் தமிழில் பி.சுசீலாவின் குரலில் அதே துள்ளலுடன் ஒலித்தது. உன்ன நெனச்சாலே கிளிகிளுங்குது மச்சானே” என ஒரு கிராமிய மணம் தவழும் பாடலும் இனிமையாக ஒலித்தது. “எப்போ வருவாரோ” என ஒரு வித்தியாசமான பாடலுடன் “கலங்காத உள்ளமும்”. “வெண்ணிலவே ஓ வெண்ணிலாவே” போன்ற பாடல்களும் இடம் பெற்றன. ஹிந்தியில் ஆஷாவும் லதாவும் பாடிய பாடல்களை தமிழில் பி.சுசீலாவே பாடினார்.
       1960-இல் வெளிவந்த “அடுத்த வீட்டு பெண்” மிகப்பெரிய ஹிட் ஆனது. தெலுங்கில் 1953-ல் வெளிவந்த “பக்கிண்டி அம்மாயி” (இசை: அஸ்வத்தமா) என்ற திரைப்படம் தமிழில் “அடுத்த வீட்டு பெண்” ஆக ரீமேக் செய்யப்பட்டது. அவர்கள். அழுது வடியும் ரோல்களில் நடித்த அஞ்சலி தேவி ஒரு மகிழ்ச்சியான ரோலில் நடித்தார். இப்படத்தில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்களுக்கும் இசை அமைத்தார் ஆதி நாராயண ராவ் . “மன்னவா வா வா”, “மலர்க்கொடி நானே” பாடல்களை கேட்டாலே புரியும்.. இவ்விரு பாடல்களும் காலத்தையும் கடந்து ஜெயித்த பாடல்கள் என்றால் மிகை இல்லை. அவை தவிர “ப்ரேமையின்ஜோதியினாலே”. “கன்னித்தமிழ் மணம் வீசுதடி”, “எனக்காக நீயே ராஜா” போன்ற பாடல்களும் சிறப்பாக அமைந்தன. எஸ்,ஜானகி குரலில் ஒரு ஜப்பானிய மொழி பாடல் கூட படத்தில் இடம் பெற்றது.

     அதே வருடத்தில் “Runanu bandham” என்ற தெலுங்கு படத்திலும் அவர் இசை சிறப்பாக அமைந்தது. “Runanu bandham” படத்தில் “lokala nele challanayya” என்ற ராமர் புகழ் பாடும் பக்தி பாடல் அருமையாக இருக்கும். “Nindu Punnami nelaஎன்ற பாடலை பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடி இருப்பார்கள். கதாநாயகி அஞ்சலிதேவி சோகமாக பாடுவது பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.  இப்படத்தில் “தீபாவளி பண்டிகை” கொண்டாடும் “Vachindi Deepavali”  பாடலும் குறிப்பிட படத்தக்கது. இவை தவிர “RavelaAndala bala, “andalu chinduganu” மற்றும் “ehe ehe neelu thodali” பாடல்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்கள்.
            இதை தொடர்ந்து “ஸ்வர்ண மஞ்சரி” என தெலுங்கிலும் “மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்”  என ஒரு இசை பிரளயத்தை கொடுத்தார் ஆதி நாராயண ராவ் அவர்கள். நிறைய பரீட்சார்த்தமான பாடல்கள் என்றால் மிகை இல்லை... ஹிந்துஸ்தானி  இசை சாயலில் நடனப்பாடல்கள், காதல் பாடல்கள், சோகப்பாடல்கள் எல்லாமே இசையை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடிய தரத்தில் அருமையாய் இருக்கும்.  “வாழ்க நீடூழி மன்னவா”. “ஜல் ஜல் ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்” போன்ற நாட்டிய பாடல்களுடன் “இதுவே வாழ்வின்ஆனந்தமே” என்ற ஒரு மெல்லிய டூயட்டும் பி.பி.எஸ், மற்றும் பி.சுசீலா குரல்களில் இனிமையாக ஒலித்தது. “மங்கள மேடை மாலை செல்வம்” என ஒரு திருமணப்பாடல் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி குரல்களில் ஒலித்தது. “ஏனோ ஏனோ எந்நாளும் இல்லாத ஆனந்தம்” என பி.பி.எஸ், பி.சுசீலா, S.ஜானகி குரல்களில் ஒரு சிச்சுவேஷன் பாடல் இடம் பெற்றன. ஜெயந்தி  சந்தோஷமாகவும், அஞ்சலி தேவி  சோகமாகவும் பாடும் சூழலுக்கு பொருத்தமாக அமைந்தது அந்த பாடல். இதே பாடல்கள் தெலுங்கிலும் அதே பாடகர்களால் அழகு பெற்றது.
        அஞ்சலி பிக்சர்ஸ் எடுத்த சில படங்கள் போதிய வெற்றி பெறாததால் அவர்கள் சோர்ந்திருந்த வேளையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுத்த படம் “சதி சக்குபாய்”. இப்படத்தில் எல்லாமே பக்திப்பாடல்கள் தான் என்றாலும் எல்லாமே அருமையாக இருக்கும். இப்படம் தமிழிலும் அதே பெயரில் வெளி வந்தது.. ஆனால் பாடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. “Niluma madhusudana என்று சில வரிகளே  வரும் ஒரு பாடலிலேயே மயங்கி போயிருக்கிறேன். ராமா இது நியாயமா என வழுக்கிக்கொண்டே போகும் குரலோடு கூடவே பயணம் செய்ய தோன்றும். “Ghallu Ghallumani Gajjalu Mroyaga”  பாடல் மிக பிரபலமான பக்தி பாடல். “Nanda Gopala Daya cheyara” என பி.சுசீலா அவர்களின் குரலில் கேட்கும் போது இனிமை பொங்கும். Jaya panduranga prabhoஎன மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இடம் பெரும் பாடல்களில் பக்தி மணம் கமழும்.  "aanadhi seyavara" என இனிமையான ஒரு பாடல் கேட்க வேண்டிய பாடல். இதைப்போலவே படம் முழுவதும் பாடல்கள், ஸ்லோகம், விருத்தம் என 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார் பி.சுசீலா. எல்லாமே மிக தரமான பாடல்கள். ஒரு முறையாவது கேட்டு அனுபவிக்க வேண்டியா பாடல்கள். எப்படியோ தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய இசையை கொடுத்த இசை அமைப்பாளர் ஆதி நாராயண ராவ் என நிருபிக்கும் பாடல்கள் இவை..
( தொடரும் ... ) 

YearLangMovieSongs
1954TeluguAnnadathaPralaya payothi jale
1954TeluguAnnadathajaya jagadeesa
1954TeluguAnnadathaontari vadane bhama
1955Tamilanarkaliandha naal thaan idhada
1955TeluguanarkaliAnda chandalu gani
1956Telugusuvarna sundariSambhO, naa mora vinavaa
1956Telugusuvarna sundariBommalamma bommalu
1956Telugusuvarna sundariJagadeeswara pahi parameswara
1956Telugusuvarna sundariNee needalona
1956Telugusuvarna sundariPiluvakura alugakura
1956Telugusuvarna sundariidhi naa jeevithaalaapana
1956Telugusuvarna sundariNaa Chittipapa
1957Tamilmanalane mangayin bhagyamjagatheeswaraa paahi 
1957Tamilmanalane mangayin bhagyamazhaikkadhe ninaikkadhe
1957Tamilmanalane mangayin bhagyamdevaa dayaipuriya vaa
1957Tamilmanalane mangayin bhagyamjOraana bommai paarunga
1957Tamilmanalane mangayin bhagyamkanne nee vaada
1957Tamilmanalane mangayin bhagyamneeye en vaazhvin nidhi
1957Tamilmanalane mangayin bhagyamthEsulaavudhe thEnmalaraalE
1959Tamiladhisaya penneena meena teeka jai jaama
1959Tamiladhisaya penneppo varuvaaro
1959Tamiladhisaya pennkalangatha ullamum
1959Tamiladhisaya pennunna nenachale kilikilukkuthu
1959Tamiladhisaya pennunthan jaalam sellathu
1959Tamiladhisaya pennvellinilave o vennilaave
1959TeluguPatiya Pratyaksha Daivam (D)devaa dayakara
1959TeluguPatiya Pratyaksha Daivam (D)jagatheeswaraa, paahi paramEswaraa in telugu
1960Tamiladutha veetu pennelelo elelo (mannava vaa)
1960Tamiladutha veetu pennenakkaaga neeye raja
1960Tamiladutha veetu pennkanni thamizh manam vEsuthadi
1960Tamiladutha veetu pennmalarkodi naane maghiznthiduvEnE
1960Tamiladutha veetu pennpremayin jyothiyinale
1960Telugurunanubandhamlokala nele pathos
1960Telugurunanubandhamlokala nele challanayya
1960Telugurunanubandhamnindu punnami nila
1960TelugurunanubandhamRavela andala bala
1960Telugurunanubandhamandalu chinduganu
1960TelugurunanubandhamOh jagiri (deepavali no)[1]
1960Telugurunanubandhamehe ehe neelu thodali
1962Tamilmangayar ullam mangadha selvamEnO EnO ennalumilla aanadham
1962Tamilmangayar ullam mangadha selvamIdhuvE vaazhvin aanandhamE
1962Tamilmangayar ullam mangadha selvamjall jall jall salangai jathi
1962Tamilmangayar ullam mangadha selvammangala medai maalai selvam
1962Tamilmangayar ullam mangadha selvamvarumo idhu pol orunaal
1962Tamilmangayar ullam mangadha selvamarugil varai
1962Teluguswarna manjarimai maripinche ee soguru
1962Teluguswarna manjarichootham rare chooda
1962Teluguswarna manjariEdhiye jeevithanandhamu
1962Teluguswarna manjariMadhuramaina guru deevena
1962Teluguswarna manjarijanana janana
1962Teluguswarna manjariemo emo ethalona
1962Teluguswarna manjaridarali rava mahadeva
1965Telugusathi sakhubaighallu ghallumani
1965Telugusathi sakhubaiPrabho dayanaanide
1965Telugusathi sakhubaiJaya panduranga prabhu
1965Telugusathi sakhubaiJaya panduranga -ver2
1965Telugusathi sakhubaijegela gopala baala
1965Telugusathi sakhubailokha sikkalenu
1965Telugusathi sakhubainamoshanthaya
1965Telugusathi sakhubainiluma madhusudana
1965Telugusathi sakhubaiprabho vithobha neevuvina
1965Telugusathi sakhubaisreerama
1965Telugusathi sakhubairanga ranga naa aasey
1965Telugusathi sakhubaiswamee aanathi seyavaya
1965Telugusathi sakhubaivachinadava krishna
1965Telugusathi sakhubaiyamuna vihara vitala
1965Telugusathi sakhubaiveda sikhalan velugonda
1965Telugusathi sakhubaisharma padajala parakidi(padyam)
1965Telugusathi sakhubaivenna paalaaraginchi (padyam)


( தொடரும் )

சனி, 5 நவம்பர், 2016

எண்பதுகளில் அதிகம் பின்னணி பாடிய பாடகி யார் ?

                  பொதுவாக  திரை இசை சார்ந்த விவாத தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை "இது தான் உண்மை" என்கிற ரீதியில்  ஆணித்தரமாக பதிவு செய்வதை பார்க்கிறோம். இதில் எது உண்மை எது பொய் என்பது ஒரு புறம் இருக்க தனது அபிமான பாடகர், பாடகியர் மற்றும் இசை அமைப்பாளரை உயர்த்தி பேச எல்லா ஆதாரங்களும் இருப்பது போல பலரும் பல விதமான கணக்குகளையும் கருத்துக்களையும்  வெளியிடுவர். அவற்றுக்கு பதில் எழுத சென்றால் தெருவில் சண்டை போடுவது போல் வெறும் கூச்சல் குழப்பங்களும், ஆபாச அர்ச்சனைகளும் மட்டுமே மிஞ்சும். ஆனால் யாரும் முழு ஆதாரத்துடன் வருவதில்லை. எல்லாமே அனுமானங்கள் தான். சும்மா 30000, 40000 என ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையை சொல்வார்கள்.  ஒரு வருடம் எத்தனை படங்கள் வெளியாகிறது? தமிழில் 100 படங்கள் வெளியானால், அதில் சராசரியாக ஐந்து பாடல்கள் என வைத்துக்கொண்டாலும் 500 பாடல்கள் தான் வெளிவரும். அதில் டூயட்டுகள் 200-250 இருக்கலாம். மற்றவை தனிப்பாடல்கள். இவற்றை பாட பல பாடகர்கள் இருப்பதால் முன்னணியில் இருக்கும் பாடகருக்கு 100 முதல் 150 பாடும் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைப்பதே அதிகம். பத்து  வருடங்கள் முன்னணியில்  இருப்பவரால் தமிழில் 1500 பாடல்களை அதிக பட்சமாக பாடி இருக்க முடியும். இரண்டு மூன்று மொழிகளில் வெற்றி பெற்றவராக இருந்தாலும் கூட 5000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்க முடியாது. இந்த ஒரு சின்ன லாஜிக் கூட இல்லாமல் வாயில் வந்த எண்ணிக்கைகளை எல்லாம் எழுதி அது தான் உண்மை என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடுவார்கள்.  தன்னுடைய அபிமான பாடகர் / பாடகி குறைந்த  பட்சமாக "சுருதி சுத்தமாக பாடுகிறாரா?" என்று கூட கணிக்க முடியாதவர்கள் கூட சாதனையாளர்கள் பாடும் பாடல்களை விமரிசனம் செய்து பெரிய அறிவாளியாய்  காட்டிக்கொள்வார்கள்.. . 
              பி.சுசீலாவின் கின்னஸ் சாதனைக்காக பல மொழி படங்களின் பாடல்களை தொகுத்த போது மற்றவர்கள் பாடிய பாடல்களையும் ஓரளவு குறித்துக்கொண்டே வந்தேன். பாடல்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது ஆண்  பாடகர்களில் எஸ்.பி.பியை நெருங்கும் அளவுக்கு கூட யாரும் இல்லை என்ற உண்மை புரிந்தது.. பாடகிகளில் பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்பது ஊரறிந்த உண்மை. இப்போது நான் பேசப்போகும் விஷயம் என்னவென்றால் எண்பதுகளில் அதிகம் பாடிய Female Singer யார் என்பதே ..!!! ஆண் பாடகர்களை பொறுத்த வரை சந்தேகம் இன்றி  அது எஸ்.பி.பி தான். பாடகியரில் யாராக இருக்கும்..?!! தமிழ்  ரசிகர்களை கேட்டால் எஸ்.ஜானகி என்பர். கன்னட ரசிகரை கேட்டாலும் அதே பதில் தான். மலையாளத்தில் கூட எஸ்.ஜானகி தான் என்பர்.. அது தான் உண்மையும் கூட. ஆனால் தெலுங்கு ரசிகரை கேட்டால் !!!???? .
        உண்மை நிலை அறிய இவர்கள் எந்தெந்த மொழிகளில் எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்கள் என ஒரு சின்ன ஆராய்ச்சியை நடத்தினேன். ரசிகர்கள் என்ற பெயரில்  தெருச்சண்டை போடும் அரைவேக்காடுகளுக்கு உண்மையை புரிய வைக்க என்னுடைய நேரத்தில் கொஞ்சம் அதிகமாகவே வேஸ்ட் செய்து விட்டேன் என்பது எனக்கு வருத்தமே..
       இனி விஷயத்துக்கு வருவோம்..
முதலில் தமிழ் படங்களில் பாடிய பாடல்களை பார்ப்போம்.. கீழே காணும் லிஸ்ட்.. அந்த லிஸ்டை இங்கே பாருங்கள் ( லிங்க் )

TamilYearPSSJVJSPBMVDKJY
1980121109641285722
1981839675984216
19829575931368634
1983731008612510913
198411913311112012437
19858615611314513050
198681137651679754
19876083481489950
198854574715111055
19893547471407636
81210327491401930367
     இந்த விஷயத்துக்காக  நான் எடுத்துக்கொண்ட படங்களின் எண்ணிக்கை ( 1980 – 133 படங்கள், 1981 – 118 படங்கள்,, 1982 – 135 படங்கள், 1983 – 115 படங்கள்,, 1984  - 149 படங்கள், 1985 – 150 படங்கள், 1986 – 122 படங்கள்,, 1987 – 127 படங்கள், 1988 – 133 படங்கள்,, 1989 – 119 படங்கள் ) . இதில் சில டப்பிங் படங்களும் அடங்கும். சில படங்களின் பாடல்கள் கிடைக்கவில்லை என்பதால் 10 - 15% வரை பாடல்களை ஒவ்வொருவருக்கும் சேர்த்துக்கொள்ளலாம். எப்படி பார்த்தாலும் எண்பதுகளில்  1200 பாடல்களுக்கு மேல் தமிழில் எஸ்.ஜானகி பாடி இருக்க வாய்ப்பில்லை. மற்றவர்களை விட தமிழில் எஸ்.ஜானகி அதிகம் பாடி இருந்தாலும் அவரே முழு அளவில் ஆட்சி செய்தார் என கூற முடியாது. ஏனெனில் பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.சைலஜா என மற்ற பாடகியரும் குறிப்பிட்ட அளவில் பாடிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். சங்கர் கணேஷ், எம்,எஸ்,வி மற்றும் சந்திரபோஸ் இசைகளில் வாணி ஜெயராம் அதிகமாக பாடி இருக்கிறார். இளையராஜா இசையில் எஸ்.ஜானகி அதிகம் பாடி இருக்கிறார். இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகிக்கு அதிகம் ஹிட்ஸ் கிடைத்ததால் இன்று வரை அவருக்கு அப்பாடல்கள் பெயரும் புகழும் வாங்கி கொடுத்திருக்கின்றன.. 1987-இல் இருந்தே சித்ராவுக்கு அதிக பாடல்கள் கிடைத்து இருக்கின்றது. இன்னொரு குறிப்பிட படத்தக்க விஷயம்... 1980 வரை பல படங்களில் வாணி ஜெயராம் பெயருக்கு பின்னால் எஸ்.ஜானகியின் பெயர் டைட்டிலில் வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். 1957-இல் இருந்தே பாடிக்கொண்டிருக்கும் எஸ்.ஜானகியின் பெயர் 74-இல் அறிமுகமான வாணியின் பெயருக்கு பின்னால் வருவது அநியாயம்.. . இதற்கு உதாரணமாக  நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, நீயா?, வண்டி சக்கரம், மரியா மை டார்லிங்,  பாமா ருக்மணி, குப்பத்து ராஜா,  நீல மலர்கள், பேர் சொல்ல ஒரு பிள்ளை, நான் சூட்டிய மலர், எங்கள் வாத்தியார் என பல படங்களை சொல்லலாம். இந்த discrimination -க்கு காலமும் பதில் சொல்லியது. இந்த நிலை எண்பதுகளில் மாறி எஸ்.ஜானகியின் பெயருக்கு பின் வாணியின் பெயர் வர துவங்கியது.. ஒரு சில படங்களில் இந்த மாதிரி பெயர் மேலே கீழே வருவது அவ்வப்போது நடப்பது தான். இசை அமைப்பாளர் அல்லது தயாரிப்பாளர் விருப்பத்தின் படி நடக்கலாம். ஆனால் இப்படி பெரும்பாலான படங்களில் இப்படி நடந்திருப்பது குறிப்பிட படத்தக்கது. இந்த பதிவுக்கு இந்த தகவல் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அன்னக்கிளிக்கு பிறகு எஸ்.ஜானகியை தவிர யாருமே பாடவில்லை என்பது போல் ஒரு மாயையை பரப்பும் சில ரசிகர்களுக்கு 80-வரை அவர் நிலைமை இது தான் என அதாரபூர்வமாக உணர்த்தவே இதை குறிப்பிட்டேன்.

இனி மலையாள பாடல்களை பற்றி பார்ப்போம்.. 
        
Malayalam
Year
P.Susheela
S.Janaki
Vani Jayaram

1980
24
59
63

1981
17
84
50

1982
28
100
58

1983
13
108
52

1984
33
81
47

1985
19
41
48

1986
16
26
22

1987
1
17
15

1988
8
17
14

1989
2
11
9






Total
161
544
378

    மலையாளத்தில் 1984 –க்கு பிறகு சித்ராவின் வரவு காரணமாக எல்லோருக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. மலையாளத்தில் கூட விடுபட்ட பாடல்களுக்காக 10% பாடல்களை எல்லோருக்கும் சேர்த்துக்கொள்ளலாம். எண்பதுகளை பொறுத்த வரை எஸ்.ஜானகி அவர்கள் மலையாளத்தில் அதிக பட்சமாக 600 பாடல்கள் வரை பாடி இருக்கலாம். . மலையாளத்தில் 1978 வரை ஜானகியும் பி.சுசீலாவும் சம அளவிலேயே பாடி இருக்கிறார்கள்.  1978-இல் இருந்து 1984 வரை ஜானகிக்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருந்திருக்கிறது. ஷ்யாம், ஏ.டி.உம்மர் ஆகிய இருவர் இசையிலும் அந்த கால கட்டத்தில் அதிகம் பாடி இருக்கிறார். 85-இல் இருந்து இறங்கு முகம் தான். அதே போல் வாணியும் 1984 வரை நிறைய பாடி இருக்கிறார்.  இந்த தளத்தில் விரிவான அளவில் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது. நம்பகமான இணைய தளம்.

      இனி  கன்னட படங்களைப்பற்றி பார்க்கலாம். கன்னடத்தில் எஸ்,ஜானகியும் வாணி ஜெயராமும் நிறைய பாடி வந்தனர். ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஜானகிக்கு கன்னட மார்க்கட் சீராகவே இருந்திருக்கிறது. ஆனால் கன்னடத்தில் தமிழ், தெலுங்கு அளவுக்கு பட தயாரிப்போ. பட்ஜெட்டோ இல்லாததால் படங்களின் எண்ணிக்கையும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கின்றது. தமிழிலும் தெலுங்கிலும் சராசரியாக 130 படங்கள் வெளிவந்த போது கன்னடத்தில் சராசரியாக 65 படங்களே வெளிவந்திருக்கிறது.  போதாக்குறைக்கு வேறு மொழி படங்களை டப் செய்யவும் கன்னடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அதில் பெண்கள் பாடும் பெரும்பாலான  பாடல்களை பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. அதனால் கன்னடத்தில்; அதிகம் பாடிய பாடகி  என்ற பெருமையும் எஸ்.ஜானகிக்கு கிடைத்தது. வாணி ஜெயராமை பொறுத்த வரை இந்த கால கட்டத்தில் எஸ்.ஜானகிக்கு அடுத்தபடியாக கன்னடத்தில் பாடி வந்திருக்கிறார். கன்னடத்தில் கூட 1987-க்கு பிறகு எஸ்.ஜானகியின் வாய்ப்புகள் பெருமளவில் குறைந்திருப்பதை காணலாம். மஞ்சுளா குருராஜ்,  பி,ஆர்.சாயா, பி.கே.சுமித்ரா, லதா ஹம்சலேகா,  பெங்களூர் லதா,  ரத்னமாலா என சில கன்னட பாடகிகளின் வரவே இதற்கு காரணம். கூடவே சித்ராவும் கன்னட பட உலகில் பாட துவங்கி இருந்தார். 

Kannada
Year
P.Susheela
S.Janaki
Vani Jayaram

1980
22
79
43

1981
15
105
18

1982
12
75
20

1983
10
77
57

1984
44
107
54

1985
28
85
41

1986
13
82
32

1987
13
51
62

1988
25
16
55

1989
2
26
41





Total

184
703
423

       கீழ்கண்ட இணைய தளத்தில் இருந்து படங்களின் பெயர்கள் எடுத்து பல தளங்களில் அதை சரி பார்த்து கிடைத்த எண்ணிக்கை இது.  https://kannadamoviesinfo.wordpress.com/ மற்றும் http://chiloka.com/ தளங்கள் எனக்கு உதவியாக இருந்தன. கிட்டத்தட்ட 665 பட பாடல்களை சரிபார்த்து எடுக்கப்பட்ட லிஸ்ட் இது.  சில படங்களின்  விபரம் கிடைக்காததால் இன்னும் ஒரு 15% பாடல்களை சேர்த்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. அப்படி பார்க்கும் போது எண்பதுகளை பொறுத்த வரை  எஸ்.ஜானகி அவர்கள் 800  பாடல்களுக்கு மேல் பாடி இருக்க  வாய்ப்பு இல்லை. நான் கிடைத்த படங்களின் பாடல்களை வைத்து ரொம்ப தேடி இந்த லிஸ்டை எடுத்தேன். இருந்தாலும் எஸ்.ஜானகி அவர்கள் இதை விட அதிகம் பாடி இருக்கலாமோ என்ற ஒரு ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதை விட அதிகமான பாடல்களின் தொகுப்பு  யாரிடமாவது  இருந்தால் அனுப்பலாம். நான் அப்டேட் செய்து கொள்கிறேன்.


              இனி தெலுங்கு படங்களில் இவர்களின் பங்களிப்பை பார்ப்போம்.

Telugu
Year
P.Susheela
S.Janaki

1980
476
77

1981
275
64

1982
318
58

1983
350
78

1984
359
95

1985
275
113

1986
363
133

1987
311
104

1988
280
136

1989
139
138





Total
3146
1006

      நான் இதற்காக எடுத்துக்கொண்ட தெலுங்கு படங்களின் எண்ணிக்கை 1196. ( 1980 - 130 படங்கள். 1981 -  108 படங்கள், 1982 - 102 படங்கள். 1983 - 112 படங்கள், 1984 - 127 படங்கள். 1985 - 120 படங்கள், 1986 - 125 படங்கள், 1987 - 142 படங்கள், 1988 - 119 படங்கள், 1989 - 109 படங்கள் .. )
         பாடல்களின் எண்ணிக்கையில் தான் எத்தனை வித்தியாசம் !!  இதற்கு காரணம் தெலுங்கு மொழி படங்களின் வித்தியாசமான வரைமுறைகளே.. பெரும்பாலான படங்களில் ஆறு முதல் எட்டு வரை பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன.. அவைகளில் நிறைய டூயட்டுகள் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றை பெரும்பாலும் எஸ்.பி.பி, பி.சுசீலாவே பாடி இருக்கின்றனர்.. NTR –ANR ஆகிய சீனியர் நடிகர்களும், ஷோபன் பாபு, கிருஷ்ணா, கிருஷ்ணா ராஜு, முரளி மோகன். சந்திர மோகன் என எழுபதுகளின் நாயகர்களும் சிரஞ்சீவி, மோகன்பாபு, நாகர்ஜுனா, வெங்கடேஷ் என இளைய தலைமுறை நாயகர்களும் எண்பதுகளில் வெற்றிகரமாக உலா வந்தனர். எல்லோரும் ஹிட் கொடுத்தார்கள். இசை அமைப்பாளர்களில் சக்கரவர்த்தி. கே.வி.எம், சத்யம், ஜே.வி.ராகவுலு, ராஜன் நாகேந்திரா, ரமேஷ் நாயுடு என பலரும் வெற்றிகரமாக இருந்தனர். இவர்கள் இசையில் இந்த மூன்று ஜெனெரேஷன் நடிகர்கள் நடித்த படங்களின் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் பாடினர்.  எஸ்.ஜானகியும் கூட பல  படங்களில் பிரதான பாடகியாக விளங்கினார். இளையராஜா இசை அமைத்த படங்கள், ராமோஜி ராவ் தயாரித்த படங்கள், வம்சி இயக்கிய படங்களில் எஸ்.ஜானகி தான் பிரதான பாடகி. அதனால் தான் அவரும் எண்பதுகளில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பாடல்களுக்கு தெலுங்கிலும் குரல் கொடுத்து இருக்கிறார்.  தெலுங்கை பொறுத்த வரை வாணி ஜெயராமின் பங்களிப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் தெலுங்கு மொழி படங்கள் மூலமாக இரு முறை தேசீய விருது ( சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ) பெற்று இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே இவரை லிஸ்டில் இருந்து ஓரம் கட்டி விடலாம். 
      இப்போது   பி.சுசீலா , எஸ்.ஜானகி ஆகிய இருவரில் யார் அதிகம் பாடினார்கள என்ற கேள்வி வருகிறது.. அதற்கு மொத்த பாடல்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம். 
     
மொத்த  பாடல்களின் எண்ணிக்கை... ( இது வரை லிஸ்ட் செய்தது )
Language
P.Susheela
S.Janaki
Tamil
  811
1026
Telugu
3144
1006
Malayalam
  161
554
Kannada
  184
703



Total
4380
3264


Add 15% for missing songs for S.Janaki




    எப்படி பார்த்தாலும் எஸ்.ஜானகி அவர்கள் 1980 முதல் 1989 வரையான கால கட்டத்தில் 4000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்க வாய்ப்பு இல்லை.  மொத்தத்தில் பார்த்தால் எஸ்.ஜானகியை விட பி.சுசீலா அதிகமாக பாடி இருப்பது தெரிகிறது. தமிழில் தனக்கு எதிராக நடந்த சதியை புரிந்து கொண்ட பி.சுசீலா அவர்கள், தெலுங்கில் முழு கவனத்தையும் செலுத்தி நிறைய பாடல்களை பாடி தன்னை முதல் இடத்திலேயே நிலை நிறுத்திக்கொண்டார் என நான் நினைக்கிறேன். இதற்காக பி.சுசீலா ரசிகர்கள் சக்ரவர்த்தி அவர்களுக்கும், கே.வி.மகாதேவன் அவர்களுக்கும் எப்போதும் நன்றி சொல்லலாம். என்.ஜானகி அவர்களின் இணைய தளத்தில் பார்த்த போது அவர் இளையராஜாவுடன் பணி ஆற்றிய பாடல்கள் கிட்டத்தட்ட 1200 ஐ நெருங்கி இருந்தது. ஆனால் சக்ரவர்த்தி அவர்கள் இசையில் பி.சுசீலா 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். கே.வி.மகாதேவன் அவரகள் இசையிலும் 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். . 

  • ·         இதில் பக்தி பாடல்களை நான் சேர்க்கவில்லை. இந்த கால கட்டத்தில் நிறைய பக்தி பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். எஸ்.ஜானகி கூட பல  ஆல்பங்கள் பாடி இருக்கிறார். ஆனால் பி.சுசீலா அளவுக்கு பாடி இருப்பாரா என்பது சந்தேகம்.
  • ·         நிறைய டப்பிங் படங்கள் வெளி வந்தன.. ஒன்றிரண்டு தவிர வேறு டப்பிங்  படங்களின் பாடல்கள் கிடைக்கவில்லை. தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட படங்களில் பி.சுசீலாவுக்கு நிறைய பாடல்கள் இருந்தன.
  • ·         பக்தி பாடல்களையும் டப்பிங் பாடல்களையும் சேர்த்தால் பி.சுசீலா எண்பதுகளில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டலாம் என்பது என் யூகம்.
  • ·         வேறு மொழிகளில் கூட பி.சுசீலா, எஸ்.ஜானகி இருவரும் பாடி இருக்கிறார்கள்.. குறிப்பாக ஹிந்தியில் எஸ்.ஜானகி குறிப்பிடத்தக்க அளவில் பாடி இருக்கிறார். தவிர ஒரியா, துளு போன்ற மொழிகளிலும் அவர்கள் பங்களிப்பு இருந்திருக்கின்றது.
நான் நிறைய நேரம் எடுத்து, நிறைய படங்களை youtube-இல் பார்த்து, பல இணைய தளங்களையும் அலசி இந்த தகவல்களை சேகரித்தேன். எனக்கு தெரியாத தகவல்கள் இருந்தாலோ அல்லது தவறான தகவலாக இருந்தாலோ அதற்கு அனுமானமாக பதில் அளிக்காமல் ஆதாரத்துடன் பதில் அளித்தால் எந்த பதிலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.. .