பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

T.G.லிங்கப்பாவின் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் - 1



            பி.சுசீலாவை இசை உலகின் உச்சத்தில் தூக்கி நிறுத்திய பாடல்களில் ஓன்று “அமுதை பொழியும் நிலவே” என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த உண்மை. அப்பாடல் இடம் பெற்ற தங்கமலை ரகசியம் படத்துக்கு இசை அமைத்தவர் T.G.லிங்கப்பா ( திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா ) அவர்கள். திருச்சியில், ஒரு இசை குடும்பத்தில்  பிறந்து வளர்ந்த இவரின் தந்தை “கோவிந்தராஜுலு நாயுடு”வும்  ஒரு மாபெரும் இசை கலைஞர். அவரும் “பாக்தாத் திருடன்”, “மாய மனிதன்”, “ராஜபக்தி”. “கள்வனின் காதலி” போல பல படங்களுக்கு இசை அமைத்தவர். அவர் இசை அமைப்பிலும் பி.சுசீலா அவர்கள் பல பாடல்களை பாடி இருக்கிறார்.
            T.G.லிங்கப்பா அவர்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார். கன்னடத்தில் மட்டுமே இவர் இசை அமைத்த படங்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டும். B.R.பந்துலு தயாரித்து டைரக்ட் செய்த பல கன்னட படங்களுக்கும் இவரே இசை அமைத்து வந்தார்.

            இத்தொகுப்பில் பி.சுசீலா அவர்கள் T.G.லிங்கப்பா அவர்கள் இசையில் பாடிய பாடல்களை பற்றி பார்ப்போம். முதல் முதலில் இவர் இசையில் பி.சுசீலா பாடிய பாடல் “அமுதை பொழியும் நிலவே” தான் என நினைக்கிறேன். அப்படத்தில் பல பாடல்கள் இருந்தாலும் ஒரே ஒரு பாடலை மட்டுமே பி.சுசீலாவை பாட வைத்தார் T.G.லிங்கப்பா அவர்கள். அது படத்தின் மொத்த பாடல்களையும் விட பாப்புலர் ஆகி பி.சுசீலாவுக்கு பெரும் புகழை தேடி தந்தது. “அமுதை பொழியும் நிலவே” பாடல் படத்தில் இரு முறை இரு வெவ்வேறான சூழ்நிலையில் ஒலிக்கும். இப்படம் கன்னடத்தில் B.R.பந்துலு தயாரிப்பில் “ரத்னகிரி ரஹஸ்யா” என்ற பெயரில் உதயகுமார். ஜமுனா நடிப்பில் வெளியானது. அப்படத்திலும் “அமுதை பொழியும் நிலவே” பாடல் “அமரா மதுரா ப்ரேமா” என பி.சுசீலாவின் குரலிலேயே ஒலித்தது. அப்பாடல் கன்னடத்திலும் சூப்பர் ஹிட் ஆகி பி.சுசீலாவுக்கு நல்ல பேரை பெற்று தந்தது. பின்னர் தெலுங்கிலும் அது “Ratnagiri Rahasyam” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய நான்கு பாடல்கள் என் தொகுப்பில் இருக்கிறது. அமுதை பொழியும் நிலவே பாடல் “Yamune mukhamum kanave என தெலுங்கில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. T.M.S-பி.லீலா பாடிய இக லோகமே இனிதாகுமேஎன்ற இனிமையான காதல் பாடல் தெலுங்கில் கண்டசாலா-பி.சுசீலா குரல்களில் Ika lokame edhi Gaanmeஎன ஒலித்தது. T.M.S-பி.லீலா பாடிய இன்னொரு அருமையான பாடலான “கல்யாணம் நம் கல்யாணம்” என்ற பாடலும் “Kalyanam mana kalyanam” என கண்டசாலா-பி.சுசீலா குரல்களில் ஒலித்தது. இத்திரைப்படம் ஹிந்தியிலும் தயாரிக்க பட்டது. அதில் “அமுதை பொழியும் நிலவே” பாடலின் டியூன் உபயோகிக்க பட்டு அதை ஆஷா போன்ஸ்லே பாடினார் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
                         


        அமுதை பொழியும் நிலவே-sad


               அமுதை பொழியும் நிலவே 





        Amara Madhura Prema ( kannada )



              Amara Madhura Prema (Sad)

        Yamuna Mukhamum - Telugu


              Ihalokhame idhi Gaaname ( Telugu )

1958-இல் வெளியான “சபாஷ் மீனா” படத்துக்கு T.G.லிங்கப்பா அவர்களே இசை அமைத்தார்கள். அதில் சிவாஜியும் , மாலினியும் மழையில் நனைந்து கொண்டே பாடும் “காணா இன்பம் கனிந்ததேனோ” என்ற பாடலை T.A.மோதியும் பி.சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். அப்பாடலை பற்றி அன்றைய விமர்சகர் ஒருவர் இப்படி எழுதி  இருந்தார். “T.A.மோதியும். பி.சுசீலாவும்” மழையில் நனைந்து கொண்டே பாடினார்களோ?!.. மிக கஷ்டமான சங்கதிகள் இருந்தாலும் அதிலேயே ஒரு சிலிர்ப்பை கொண்டு வந்திருப்பார்கள் பாடகர்கள் இருவரும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல் என்பது என் எண்ணம். T.A.மோதி அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றாலும் அது வரை தமிழில் கேட்காத ஒரு வித்தியாசமான குரல் வேண்டும் என்பதற்காக அவரை அழைத்து வந்து பாட வைத்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன். “கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ” என பாடகர் பாட அதோடு சேர்ந்து பி.சுசீலாவின் குரலில் ஒரு நீளமான ஹம்மிங் வருமே .. இனிமையோ இனிமை...
                           

 காணா இன்பம் கனிந்ததேனோ 


              ஆணாக பிறந்ததெல்லாம்

    சபாஷ் மீனா படத்தில் சரோஜாதேவியும் நடித்திருந்தார். அதில் “ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா” என துவங்கும் ஒரு நகைச்சுவை ததும்பும்  பாடல் “பி.சுசீலா, T.G.லிங்கப்பா மற்றும் சந்திர பாபு” ஆகியோர் குரல்களில் இடம் பெற்றது.  இதே படத்தில் பி.சுசீலாவும். ஜமுனாராணியும் சேர்ந்து பாடிய “ஆணாக பிறந்ததெல்லாம்” பாடலும் இனிமையான பாடல்களில் ஓன்று. சபாஷ் மீனா திரைப்படம் தெலுங்கில் “Sabash Pilla” என்ற பெயரில் “மொழி மாற்றம் செய்து வெளியிட பட்டது”. அதிலும் தமிழில் பாடிய அதே பாடல்களை தெலுங்கில் பி.சுசீலாவே பாடினார்.

    1958-இல் B.R.பந்துலு தயாரித்து, T.G.லிங்கப்பா இசையில் வெளியான   கன்னட திரைப்படம் “ஸ்கூல் மாஸ்டர்”. இத்திரைப்படத்தில் சிவாஜி அவர்களும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதில் இடம் பெற்ற “ராதா மாதவ வினோத ஹாசா” என்ற இனிமையான காதல் பாடல் மிகவும் பிரபலமாகியது. இப்பாடலை தவிர Sompada sanje velaஎன்ற பாடலும் மிகவும் இனிமையாக இருக்கும். இப்பாடல்களை பி.சுசீலாவுடன் இணைந்து பாடியவர் T.B.லிங்கப்பா என்பது தான் இதன் சிறப்பு. தமிழில் சபாஷ் மீனா மீனா படத்தில் ஒரு பாடலை ஏற்கனவே பி.சுசீலாவுடன் இணைந்து இவர் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிட படத்தக்கது. ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் “Badi Banthulu” என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.  “Radha madhava vinoda hasa”, “undala sampadana:” என தெலுங்கிலும் இதே பாடல்கள் ஒலித்தன. தமிழில் இத்திரைப்படம் “எங்க குடும்பம் பெரிசு” என்ற பெயரில் வெளியானது. “ராதா மாதவ வினோத ராஜா” என TMS. P.சுசீலா குரல்களில் இப்பாடல் ஒலித்தது. மூன்று மொழிகளிலுமே ஹிட் ஆனா பாடல்கள் இவை.. அதே போல் TMS. P.சுசீலா குரல்களில் ஒலித்த “சுகமான அந்தி வேளை” பாடலும் இனிமையான பாடலே..                           

                Sompada Sanje vela
                     Radha madhava vinodahasa


                         

                Radha Madhava ( Tamil )
                       Sugamana Anthi velai 


1958-இல் வெளிவந்த திருமணம் என்ற திரைப்படம் S.M.சுப்பையா நாயுடு மற்றும் T.G.லிங்கப்பா இசையில் வெளி வந்தது. அதில் “துள்ளி வர போறேன்”. “எங்கள் நாடு ஆந்திர நாடு” என சியல் பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தன. அதே வருடம் வெளிவந்த “புதுமைப்பெண்” என்ற படத்தில் இடம் பெற்ற “மாறாத காதலாலே மனம் ஒன்றாய்ஆனதாலே” என்ற மெல்லிய காதல் பாடலும் “நெனச்சதை முடிச்சிடுவா பொம்பள தங்கம்”. என்ற இளமையான  பாடலும் குறிப்பிட படதக்கவை.

தேடி வந்த செல்வம் படத்திலும் பங்குனி போய்சித்திரை வந்தா” என்ற கிராமிய பாடல் TMS. பி.சுசீலா குரலில் ஒலித்தது. ஜல்லிக்கட்டு காளை தொட்டா துள்ளி விழும் மேலே” என்ற பாடலும் TMS. பி.சுசீலா குரல்களிலேயே ஒலித்தது. அதை தவிர “தங்கமே தங்கம் யாரு அந்த மாப்பிள்ளை சிங்கம்” என்ற பாடல்  A.P.கோமளா மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.                           

               Panguni poi chithirai
                        Thangame Thangam


1960-ஆம் வருடம் வெளிவந்த “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” திரைப்படத்தில் ஏ.எம.ராஜாவும் பி.சுசீலாவும் இனைந்து பாடிய “மனம் என்னும் வானிலே” பாடல் ஹிட் ஆன பாடல்.  
   1960-ல் வெளிவந்த “makkala Rajya” என்ற கன்னட திரைப்படத்தில் இடம் பெற்ற “Malaye Suridubabaa”  பாடல் இனிமையான பாடல். அதே படம் “குழந்தைகள் கண்ட குடியரசு” என தமிழிலும் வெளியானது. அத்திரைப்படதிலும் “அமுதே ஓடி வா” என்ற பாடலை பாடினர் பி.சுசீலா அவர்கள்.
                            

               Manam ennum vaanile


                        Malaye Suridubaa

1960-ல் வெளிவந்த சங்கிலி தேவன் படத்தில் "சரச கலையில் இவள் ராணி" என்ற பாடல் குறிப்பிட பட தக்கது..

( பாகம் 2 )

தொடரும்...


சனி, 22 ஏப்ரல், 2017

பி.சுசீலாவும் சூலமங்கலம் சகோதரிகளும் ...



     ஒரு நேர்காணலில் பி.சுசீலா அவர்களிடம் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பி.சுசீலா அவர்கள் ஒரு அருமையான கருத்தை சொன்னார்கள்.  "எம்.எஸ்.அம்மா பாடிய “சுப்ரபாதம்” ஒரு ஸ்டாம்ப் மாதிரி.. அது அப்படி தான் இருக்கணும். மாற்ற முயற்சிக்க கூடாது" என்றார். அதே போல் சில பாடகர்கள் பாடிய சில பாடல்களுக்கு வேறு மாற்று முயற்சிக்கவே முடியாது என்பது போல் மக்கள் மனதில் அது ஆழமாய் பதிந்து விடும். அந்த மாதிரி சில பாடல்களை பாடியவர் தான் சூலமங்கலம்  சகோதரிகள். தமிழ் கடவுளாம் முருகனை பாடி புகழ் பெற்றவர் பலர் உண்டு.. உள்ளம் உருகுதையா ( TMS), “நீயல்லால் தெய்வம் இல்லை” ( சீர்காழி), மருதமலை மாமணியே ( மதுரை சோமு), சொல்ல சொல்ல இனிக்குதடா ( பி.சுசீலா), சிங்கார வேலனே தேவா ( எஸ்.ஜானகி). என பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அமைந்த “கந்த சஷ்டி கவசம்” பாடலை பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் ஆவர். காலையில் எழுந்தால் ஏதாவது ஒரு கோயிலில் இருந்து "சக்தியை நோக்க சரவண பவனா" என கேட்காத நாள் இருக்காது. எல்லா முருகன்  கோயில்களிலும் தவறாமல் ஒலிக்கின்ற பாடல் இது என்றால் மிகை இல்லை. இப்பாடலும் அப்படி தான். இதற்கு மாற்று முயற்சிக்க கூடாது என்பது போல் ஒரு தனித்துவம் மிக்க பாடல்.


     சூலமங்கலமும் பி.சுசீலாவும் இணைந்து திரைப்படங்களில் பாடிய தொகுப்பு இது. பெரும்பாலும் இரு பெண் குரல்கள் இணைந்து பாடும் போது அந்த பாடலின் தேவைக்கேற்ப குரல்களை தேர்ந்தெடுப்பார்கள். பக்தி பாடல்கள் என வரும் போது சூலமங்கலம் சகோதரிகள் குரல்களுக்கும் ஒரு தனி இடம் இருந்தது. அதனால் திரையில் பல பாடல்களை பாடும் வாய்ப்புகளையும் பெற்றார்கள். முறையான கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட இவர்களுக்கு பக்தி பாடல்களும், மெல்லிசையும் பாடும் வாய்ப்புகளும் கூட கிடைத்தது. இவர்கள் பி.சுசீலாவுடன் இணைந்தும் பல நல்ல பாடல்களை பாடி  இருக்கிறார்கள் என்பது இந்த தொகுப்பின் மூலம் விளங்கும். பி.சுசீலா அவர்கள் பின்னணி பாட ஆரம்பித்து 25 வருடங்கள் ஆனதை ஒட்டி ( வெள்ளி விழா ) அவருக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அதற்காக ஒரு சிறப்பு மலரை அன்றைய பொம்மை பத்திரிக்கை வெளியிட்டது. அதில் சூலமங்கலம் அவர்களும் பி.சுசீலாவை பாராட்டி பேசி இருந்தார். அந்த படம் கீழே..  


   கே.வி.எம் இசை அமைத்த கந்தன் கருணை படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்ஸ். அதில் இடம் பெற்ற  “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்” என்ற பாடல் பி.சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரல்களில் ஒலித்த காலத்தையும் வென்ற பக்தி பாடல்களில் ஓன்று. இப்பாடலை கேட்காத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. முருகனை போற்றும் இப்பாடலை தொடர்ந்து பல படங்களில் இது போன்ற பாடல்கள் இடம் பிடித்தன. சூலமங்கலம் சகோதரிகள் குரல்களில் கூட “எழுதி எழுதி பழகி வந்தேன்” என பாடல்  வெளிவந்தது.

        எம்.எஸ்.வி இசையில் கௌரி கல்யாணம் படத்தில் இடம் பெற்ற “திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்” என்ற முருகன் பக்தி பாடலும் இதே குரல்களில் பிரபல ஆனது.

    அதே போல் T.K.ராமமூர்த்தி இசையில் வெளி வந்த “நீலகிரி எக்ஸ்ப்ரஸ்” படத்திலும் “திருத்தணி முருகா தென்னவர் தலைவா” என்று திருத்தணி முருகனை போற்றி பாடும் பாடல் பி.சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரல்களில் பிரபலம் ஆனது.

   D.B.ராமச்சந்திரன் இசையில் வெளிவந்த கற்பூரம் படத்திலும் “வணங்கிடும் கைகளின் வடிவத்தை பார்த்தால்” என ஒரு முருகனை பாடும் பாடல் இடம் பெற்றது.

       குங்குமம் படத்தில் இடம் பெற்ற “குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்” என்ற பாடலும் குறிப்பிட தக்க பக்தி பாடல். அதே போல் சீதா படத்தில் இடம் பெற்ற “நலம் காக்கும் குல தெய்வமே” பாடலும் சிறந்த பக்தி பாடல்களில் ஓன்று.  





கே.வி.எம் இசையில் வெளிவந்த :திருமால் பெருமை” படத்தில் இடம் பெற்ற “கரை ஏறி மீன் விளையாடும் காவிரி நாடு”  என்ற நடனப்பாடலும் இவர்கள் குரலில் ஒலித்தது. அதே போல எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் வெளிவந்த “பக்த பிரஹலாதா” படத்தில் இடம் பெற்ற “இந்திர லோகம் உன் சொந்தம்” என்ற நடனப்பாடல் “பி.சுசீலா, சூலமங்கலம். எஸ்.ஜானகி” ஆகியோர் குரல்களில் ஒலித்த பாடல். இதே பாடல் தெலுங்கிலும் இதே குரல்களில் Andani Sura seema Needenoyiஎன ஒலித்தது. கன்னடத்தில் கூட இதே குரல்களில் இப்பாடல் ஒலித்தது.



   குடும்ப உறவுகளுக்குள் பெண்கள் பாடுவது காட்சி அமைப்புகளுடன் சில படங்கல் வெளிவந்தன. எம்.எஸ்.வி இசை அமைத்த “மோட்டார் சுந்தரம்பிள்ளை” படத்தில் இடம் பெற்ற “துள்ளி துள்ளிவிளையாட துடிக்குது மனசு” என சகோதரிகள் ஒன்றாக விளையாடி களிக்கும் பாடல் ஓன்று “பி.சுசீலா, சூலமங்கலம்  மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலித்தது.

      குடும்பத்தின் மருமகள்கள் ஒன்றாய்  பாடுவது போல அமைந்த அருமையான பாடல்களில் ஓன்று இது. எம்.எஸ்.வி இசை அமைத்த  “பாமா விஜயம்” படத்தில் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகியோர் பாடிய  “ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே” என்ற பாடல் ஆகும்.  இப்பாடல்  இப்போதும் கூட அடிக்கடி போட்டிகளில் பாடப்படும் பாடல்களில் ஓன்று.. இதே குரல்களில் “எல்லாம் உனக்காக” படத்திலும் ஒலித்த  “மனசு போல் மாப்பிள்ளையை” என்ற பாடல் குறிப்பிட படத்தக்கது..

பக்தி படங்களில் வெற்றி பெற்ற இந்த ஜோடிக்குரல்கள் ஒரு தாலாட்டிலும் தங்களை நிரூபித்தது. “குலமா குணமா” படத்தில் இடம் பெற்ற “பிள்ளைக்கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்” என்ற தாலாட்டு கவனிக்க தக்க பாடல்.

    அதே போல ஒரு சோகப்பாடலும் இக்குரல்களில் மனதை கவர்ந்தது. கே.வி.எம் இசையில் எம்.ஜி.ஆர் நடித்த “மாடப்புறா” படத்தில் இடம் பெற்ற “மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்களில் ஓன்று.

மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் இடம் பெற்ற “கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்” என்ற பாடலை TMS, பி.சுசீலா, பொன்னுசாமி மற்றும் சூலமங்கலம் இணைந்து பாடினர். பாடலுக்காக மட்டும் அல்ல காட்சி அமைப்புக்காகவும் பார்க்க வேண்டிய பாடல் காட்சி இது.

இவை தவிர வியட்நாம் வீடு” படத்தில் இடம் பெற்ற “என்றும் புதிதாக இளமை குறையாமல் தென்றல் போல்” என அறுபதாம் கல்யாண விழா பாடல் ஓன்று இடம் பெற்றது..

     ஜி.ராமநாதன் இசை அமைத்த அரசிளங்குமரி படத்தில் இடம் பெற்ற “ஊர்வலமாக மாப்பிள்ளை  பெண்ணும் சேர்ந்து வருகிறார்” என்ற கிராமிய மணம் கமழும் பாடலும் கேட்க இனிமையாக இருக்கும்.

             கவனித்து கேட்டால் எல்லாமே அருமையான பாடல்கள் தான். இதை தொகுக்கும் போது ரெண்டு மூன்று ஹிட்ஸ் இருக்கும் என நினைத்தேன். தொகுத்து முடித்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

   இவை தவிர சில படங்களுக்கும் சூலமங்கலம் சகோதரிகள் இசை அமைத்தனர். அவர்கள் இசை அமைத்த “தரிசனம்” படத்தில் இடம் பெற்ற “கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்” என்ற பாடலை TMS; ப.சுசீலா இணைந்து பாடினர். தரிசனம் படத்தில் இடம் பெற்ற “என்றும் புதிதாக பாடலும்” அறுபதாம் கல்யாண நிகழ்வை கொண்டாடும் பாடலே.



அதே போல், சூலமங்கலம் சகோதரிகள் இசையில் வெளிவந்த “பிள்ளையார்” என்ற  படத்தில் ஜேசுதாஸ், பி.சுசீலா பாடிய “மரகத தோரணம் வாசலில் அசைந்திட” என்ற பாடலும் தவறாமல் கேட்க வேண்டிய பாடல்களில் ஓன்று. 

List of Songs..

YearLangMovieSongsMusic
1961TamilarasilankumarioorvalamagaG. Ramanathan
1961Tamilellaam unakkaagamanasu pol maapillayaiK.V. Mahadevan
1962Tamilmaadappuramanadhil konda aasaigalaiK.V. Mahadevan
1963Tamilkungumamkungumam mangala mangayar[1]K.V. Mahadevan
1963Tamilkungumamkungumam mangala -ver2K.V. Mahadevan
1966Tamilgowri kalyanamthirupugahzhai paada paadaM.S. Viswanathan
1966Tamilmahakavi kaalidaskalaimagal enakkoruK.V. Mahadevan
1966Tamilmotor sundarampillaiThulli thulli vilayada thudikkuthuM.S. Viswanathan
1967Telugubhaktha prahaladhajayaho(andani suraseema)S. Rajeshwara Rao
1967Tamilbhaktha prahaladhaindira logam un sonthamS. Rajeshwara Rao
1967Tamilkandhan karunaiThiruparankuntrathilK.V. Mahadevan
1967TamilkarpooramVanagidum kaigaLin vadivathaiD.B. Ramachandran
1967Tamilseethanalam kaakkum kulaK.V. Mahadevan
1968Tamilbhama vijayamaanimuthu vaangi vanthenM.S. Viswanathan
1968Tamilneelagiri expressthiruthani muruga thennavarT.K. Ramamurthy
1968Tamilthirumal perumaikaraiyeri mEn vilayadumK.V. Mahadevan
1970Tamilvietnam Veeduendrum puthithaagaK.V. Mahadevan
1971Tamilkulama gunamapillaik kali theera un annai K.V. Mahadevan
1969TamilDarisanamKalyanamam kalyanamSoolamangalam
1985TamilPillaiyarMaragatha thoranamSoolamangalam


Thanks.. 


புதன், 19 ஏப்ரல், 2017

பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள்




          பி.சுசீலாவிற்கு இசை உலகில் தோழி யார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் .. அவரது சக  பாடகிகள் எல்லாரும் தோழிகள்  தான்.  யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இத்தனை வருடங்கள் திரை உலகில் நிலைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. அதை பின்பற்றி மற்ற பாடகிகள் கூட ஒருவருக்கொருவர் சுமுகமாகவே பழகி வருகிறார்கள்.. தென்னகத்தில் பாடகிகளுக்குள் பெரிய  சண்டையோ, புழுதி வாரி தூற்றிக்கொள்வதோ இல்லாமல் நீண்ட வருடங்கள் திரை உலகில் பயணம் செய்திருக்கிறார்கள். பி.சுசீலா போன்றவர்கள் பாடுவதில் மட்டுமல்ல, சக கலைஞர்களுடன் பண்புடன் பழகுவதிலும் கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.

                                            ( P.Susheela, Jikki and Jamuna Rani )
       
            இருந்தாலும் பி.சுசீலாவுக்கு நெருக்கமான ஒரு தோழி இருக்கிறார் என்றால் அது பின்னணி பாடகி "ஜமுனா ராணி " அவர்கள் தான். "மாமா மாமா மாமா", "காளை வயசு கட்டான சைசு",  "பாட்டொன்று கேட்டேன்", "காவிரி தாயே காவிரி தாயே",  "செந்தமிழ் தேன் மொழியாள்", "தாரா தாரா வந்தாரா:, "பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு", "யாரடி நீ மோகினி",  "குங்கும பூவே கொஞ்சு புறாவே", "நெஞ்சில் குடியிருக்கும்",  "ஆதி மனிதன் காதலுக்கு பின்". "சித்திரத்தில் பெண் எழுதி", "காமுகர் நெஞ்சில் நீதியில்லை"  என  பல ஹிட்ஸ் நினைவில் வந்து போகிறதா?   ஜமுனாராணி வயதில் பி.சுசீலாவை விட சிறியவர் என்றாலும் பி.சுசீலா  திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னாலேயே திரை உலகில் அறிமுகமானவர். ஐம்பதுகளில் நிறைய இசை அமைப்பாளர்கள் திரை உலகை ஆக்கிரமித்து இருந்தார்கள். அதைப்போல் நிறைய பாடகிகளும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் நிறைய இருந்தது. அந்த  கால கட்டத்தில் ஜமுனாராணி நிறைய ஹிட்ஸ் கொடுத்தார்.


       ஜமுனாராணி பி.சுசீலாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி பி.சுசீலாவை சந்திப்பதுண்டு. அவர் பி.சுசீலா டிரஸ்டில் ஒரு டிரஸ்டீ எனபது  பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்ப்பில்லை. பி.சுசீலாவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருக்கிறார்.

 

  இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில்  இணைந்து பாடி இருக்கிறார்கள்.
   
   பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் முதன் முதலில் நினைவுக்கு வருவது "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடல் தான். அவ்வளவு பாப்புலர் அந்த பாடல் என்றால் மிகை இல்லை.




என்னிடம் இருக்கும் தகவல்களின் படி  இவர்கள்   இணைந்து பாடிய முதல் பாடல் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த பொம்மை கல்யாணம் படத்தில் இடம் பெற்ற "நில்லு நில்லு மேகமே" பாடல் தான். இத்திரைப்படம் வெளியான வருடம் 1958 ஆகும். இவர்கள் இருவரும் ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே அறிமுகமாகி விட்டதால்,  இதற்கு முன்னாலேயே இணைந்து பாடி இருக்க வாய்ப்பு இருக்கிறது.


 பலே பாண்டியா படத்தில் கவிஞர் கண்ணதாசனின் ஈடு செய்ய முடியாத வரிகளில் "அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" பாடலையும் TMS, PBS. பி.சுசீலா, ஜமுனாராணி இணைந்து அசத்தி இருப்பார்கள். காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஓன்று.



இரு கதாநாயகிகளும், ஒரு கதாநாயகனும் நடிக்கும் முக்கோண காதல் கதைகளில் மூவரின் நிலைமையையும் சொல்லும் சோக காதல் பாடல்கள் இடம் பெறுவதுண்டு. அப்படி ஒரு காதல் பாடல் தான் மன்னாதி மன்னன் படத்தில் பி.பி.எஸ், பி.சுசீலா, ஜமுனாராணி பாடிய "நீயோ நானோ யார் நிலவே" என்ற பாடல். பத்மினிக்காக பி.சுசீலாவும், அஞ்சலி தேவிக்காக ஜமுனா ராணியும் பாடிய பாடல் அவ்வளவு அருமையாக இருக்கும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டு ரசியுங்கள்.



அதே போல் சித்ராங்கி படத்திலும் "நெஞ்சினிலே நினைவு முகம்"  என்ற பாடலும் முக்கோண காதலை சொல்லும் அழகான பாடல்.


A.M.ராஜா இசை அமைத்த மாபெரும்க வெற்றிப்படமான ல்யாண பரிசு படத்தில் " அக்காவுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு" பாடலும் இனிமையான பாடல்.



T.G.லிங்கப்பா இசை அமைத்து பெரும் வெற்றி பெற்ற "சபாஷ் மீனா" படத்தில்  இடம் பெற்ற "ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்த பின்னும்" என்ற பாடலும் பி.சுசீலா மற்றும் ஜமுனாராணி குரல்களில் ஒலித்த இளமையான பாடல்.



             இரு கோடுகள் படம்  தெலுங்கில் "Collector Janaki" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடல் "Neevannadi Nenanukkunnadi" என ஒலித்தது. சௌகாரின் வேடத்தில் ஜமுனா நடித்திருந்தார்.


1987-இல் வெளிவந்த நாயகன் படத்தில் இளையராஜா இசையில் "நான் சிரித்தால் தீபாவளி"  என்ற பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும். ஜமுனாராணியும் இணைந்து பாடி இருந்தார்கள். அதே பாடலை "Naa Navve Deepavali" என தெலுங்கில் பி.சுசீலாவும். ஜமுனாராணியும் இணைந்து பாடினர்.



YearLanguageMovieSong
1958Tamilsabaash meenaaanaaga piranthathellam
1958Tamilbommai kalyanamnillu nillu megame
1958TeluguBommala pellininne ninne megama
1959Tamilamudhavallikanngal rendum vandu
1959Tamilbhagya devathai illara poonkaavil
1959Tamilkalyaana parisumangayar mugathile konji
1959Tamilponnu vilayum boomiangila nagarigam
1959Telugusabhash pillaaadala maggala

1960Tamilmannadhi mannanneeyo naano yaar nilave
1960Tamilontru pattal undu vazhvuenga vazhkayile ulla
1960Tamilpadikkatha medhaiinba malargal poothu 
1960Kannadasahasra sirachedaanuraagake kannilyenulla
1962Tamilazhagu nilaAttam AdAthO
1962Tamilbhale pandiyaAthikkai kai kai alankai
1962Tamilkavithapaarkka paarkka 
1963Tamilaasai alaigalalli alli kodutha
1963Tamilkadavulai kandenanna anna sughamthana 
1963Tamilpenn manampaar paar
1964TamilchithranginenjinilE nilavu mugham
1964Telugunavaraathripremaku - aantakshari song
1965Tamilvaazhkai vaazhvatharkeaada kaanbadhu kanniyar
1965Telugukanne manasuluammalaganna
1965Telugukanne manasulusukkalaanti sinnodu
1968Tamildelli mapillaimalai mudiyil pani azhagu
1968Tamiledhir neechalSethi ketto sethi ketto
1968Tamiliru kodugalnavraathriyil kolu
1969TamilniraikudamazhaikintrEn Deva
1972Telugucollector janakineevannadi neevanukunnadi
1987TelugunaayakuduNaa navve deepavali
0Teluguunknownnenu paaduthu unde



Thanks...