பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 மே, 2019

விஜய நிர்மலாவிற்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்.



     விஜய நிர்மலா கின்னஸ் சாதனை படைத்த ஒரு சாதனைப்பெண். குழந்தை நட்சத்திரமாக தன  வாழ்க்கையை துவங்கி. கதாநாயகியாகவும், டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் கூட தன்னை நிரூபித்தவர்.  ஒரு பெண் டைரக்டராக 44 படங்களை இயக்கி சாதனை படைத்ததற்காக இவருக்கு கின்னஸில் இடம் கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளர்ந்து தமிழ், தெலுங்கு,  மலையாள மொழிகளில் கிட்டத்தட்ட 2௦௦ படங்களில் நடித்து பெயர் பெற்றார். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆக இருந்தார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களை இயக்கி இருக்கிறார். இவரது கணவர் நடிகர் கிருஷ்ணா தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர். இவரது மகன் நரேஷ் தெலுங்கு படவுலகில் நடிகர் ஆக இருக்கிறார்.
   
இவர் தமிழில் 1965-ஆம் ஆண்டு வெளியான “எங்க வீட்டு பெண்” என்ற படத்துன் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் பி. சுசீலாவே அவருக்கு பின்னணி பாடினார். கால்களே நில்லுங்கள் என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல். மலையாளத்தில் 1965-இல் வெளிவந்த பார்கவி நிலையம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் “அரபிக்கடலொருமணவாளன்” என்ற பாடலை பி,சுசீலா பாடி இருந்தார். தெலுங்கில் RangulaRatnamஎன்ற படத்தில் அறிமுகம் ஆனார். அப்படத்திலும் அவருக்கு பி.சுசீலாவே பின்னணி பாடினார். இவர் கவிதா என்ற மலையாள படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் பி.சுசீலா அவர்கள் எல்லா  பாடல்களையும் ( 7 பாடல்கள்) பாடி இருந்தார். தெலுங்கில் இவர் இயக்கிய முதல் படமான மீனாஎன்ற .படத்திலும் பி.சுசீலாவே பாடினார்.

இவரது கணவர் கிருஷ்ணா பத்மாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தக்காரர். இவர்கள் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல படங்களை தயாரித்தார்கள். விஜய நிர்மலா ஒரு பி.சுசீலாவின் ரசிகை என்பதால் அவர்கள் தயாரித்த எல்லா படங்களிலும் பி.சுசீலாவுக்கு பாட வாய்ப்பு அளித்தார். அந்நிறுவனம் தயாரித்த ஹிந்தி படங்களிலும் பாட வைக்க விரும்பி பி.சுசீலாவை அணுகியதாகவும் பி.சுசீலா ஹிந்தி பட உலகின் சூட்சுமங்களை அறிந்திருந்ததால் பாட மறுத்து விட்டதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இருந்தாலும் “Singhasan” போன்ற ஹிந்தி படங்களில் பி.சுசீலாவின் குரலை பயன் படுத்தி இருப்பார்கள். அவர்கள் ஹிந்தியில் தயாரித்த ஸ்ரீதேவியின் முதல் வெற்றிப்படமான “ஹிம்மத்வாலா” படத்தின் டைட்டில் ட்ராக் முழுவதும் பி.சுசீலாவின் குரலிலேயே ஒலித்தது.

பி.சுசீலா அவர்கள் விஜய நிர்மலாவுக்கு 200 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி இருக்கிறார்கள். 

சில அருமையான பாடல்களின் வீடியோக்கள் கீழே..

     "Alluri Seetharama Raju" திரைப்படம் தெலுங்கில் ஒரு மைல்கல் படம். அந்த படத்தில் விஜய நிரமலாவிற்கு பி.சுசீலா பாடிய அற்புதமான பாடல் "vasthadu na raju ee roju".

நடிகர் கிருஷ்ணா இவருடன் நடித்த முதல் படமான "சாக்ஷி" என்ற படத்திலேயே இருவரும் காதலர்களாகி விட்டனர். அந்த படத்தில் இருந்து ஒரு அருமையான பாடல் காட்சி. "Amma kadupu Challaga"

விஜய நிர்மலா தெலுங்கில் அறிமுகமான "Rangula Ratnam" திரைப்படத்தில் ஒரு அருமையான தனிப்பாடல். "Koyila Koyani Pilichinadi"

"Manchi Kutumbam" திரைப்படத்தில் "neelo yemundo" பாடல் இனிமையான பாடல். இத்திரைப்படம் "மோட்டார் சுந்தரம் பிள்ளை" படத்தின் ரீமேக் என்பது இன்னொரு தகவல்.

"Poola Rangadu" படத்தில் இடம் பெற்ற "Chigurula vesina kalalanni" பாடல் மிக இனிமையான பாடல். மோகன் ராஜு என்ற புதிய பாடகருடன் இந்த பாடலை பி.சுசீலா பாடி இருந்தார்.
 உயிரா மானமா திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடியில் இரண்டு மலருண்டு" பாடல் மிகவும் பிரபலமான பாடல்.
"Athagaru kotha kodalu" படத்தில் இடம் பெற்ற ஒரு இனிமையான பாடல். "Repalle vadalu veduka".

"Bommalu Cheppina katha" படத்தில் இருந்து ஒரு துள்ளலான பாடல். "Mememme mekalanni"
"Buddhimanthdu" படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான ஒரு பாடல். "Thotaloki Rakura"
"Rendu Kutumbala katha" படத்தில் இடம் பெற்ற "Madilo Virise theeyani raagam" என்ற பாடல் அருமையான வீணை இசைப்பாடல்.
"சித்தி" திரைப்படம் 1989-இல் "pinni" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் "காலமிது காலமிது" பாடல் காட்சி தெலுங்கில் வேறு டியுனில்.
"vichitra Dampathyam" படத்தில் இடம் பெற்ற மனம் கரைய வைக்கும் பாடல். "Evari Kosam entha kaalam".



YearLanguageMovieSongMusic
1964Malayalambhargavi nilayamarabikadaloru manavalanBaburaj
1965Tamilenga veetu penndeivam malarOdu vaitha K.V. Mahadevan
1965Tamilenga veetu pennkaarthigai viLakku thirukK.V. Mahadevan
1965Tamilenga veetu pennkalgale nillungal kangalE K.V. Mahadevan
1965Tamilenga veetu pennkalgale nillungal -soloK.V. Mahadevan

1967TELUGUrangula ratnamKanarani DevudeS. Rajeshwara Rao
1967TELUGUrangula ratnamKoyila koo aniS. Rajeshwara Rao
1967TELUGUrangula ratnamRaaga SudhaS. Rajeshwara Rao
1967TELUGUsakshiAmma kadupuK.V. Mahadevan
1967TELUGUsakshiatu ennelaK.V. Mahadevan
1967TELUGUsakshiradha madhavamK.V. Mahadevan
1967TELUGUsakshigunakaari gunnammaK.V. Mahadevan
1967TELUGUsaakshiCheera dochukunnodaK.V. Mahadevan
1967TELUGUuppayanlu appayampadaru gadichiK.V. Mahadevan
1967TELUGUuppayanlu appayamo baala raajaK.V. Mahadevan
1967TELUGUmanchi kutumbamPreminchadam pillallaS.P. Kodandapani
1967TELUGUrangula ratnamKannulo dagina S. Rajeshwara Rao
1967TELUGUmanchi kutumbamYevaruleni chotaS.P. Kodandapani
1967TELUGUmanchi kutumbamNeelo Emundho yemoS.P. Kodandapani
1967TELUGUpoola rangaduchigurulu vesinaS. Rajeshwara Rao
1967Tamilpandhayamnaalapuramum kodukattiT.R. Papa
1967Tamilpandhayampaarthaal pOdhumaa pazhagaT.R. papa
1967Tamilpandhayamthendral vandhu thottadhinaalET.R. papa
1968TELUGUathagaaru kothakodaluchituku Mannathi ChitigameG.K. Venkatesh
1968TELUGUnadamantrapu siriaakali mantalu babuT. Chalapthi rao
1968TELUGUbangaru picchikamanase gani karaganiK.V. Mahadevan
1968TELUGUnadamantrapu sirinee challani manasuT. Chalapthi rao
1968TELUGUathagaaru kothakodaluRepella Vadalu VedukaG.K. Venkatesh
1968TELUGUbangaru gajuluAnniah sannidhi adhe T. Chalapathi Rao
1968TELUGUbangaru pichukapo po nidurapoK.V. Mahadevan
1968TELUGUbangaru pichukaEe radhaK.V. Mahadevan
1968TELUGUathagaaru kothakodaluvayasu aagaduG.K. Venkatesh
1968Tamiluyira manamaaathirathil -ver1M.S. Viswanathan
1968Tamiluyira manamaathirathil thuduppeduthaiM.S. Viswanathan
1968Tamiluyira manamakodiyil iraNdu malaruNduM.S. Viswanathan
1968Tamilneelagiri expresspereecham pazhangalukkuT.K. Ramamurthy
1968Tamilsopu sepu kannadinichayam naanE natural beautyT.K. Ramamoorthy
1968Tamilsopu sepu kannadithookkam kannilE yEkkam T.K. Ramamoorthy
1969TELUGUaathmeeyuluChilipi navvula ninuS. Rajeshwara Rao
1969TELUGUanna dammulunannu choosi vennelaK.V. Mahadevan
1969TELUGUanna dammulusiggesthundoi cheppaK.V. Mahadevan
1969TELUGUbommalu cheppina kathameme mekhalanni kalaseS.P. Kodandapani
1969TELUGUbommalu cheppina kathamememme makhalanni-version2S.P. Kodandapani
1969TELUGUbommalu cheppina kathasirulitu levamma srilakshmideviS.P. Kodandapani
1969TELUGUbommalu cheppina kathajodu neevani thoduS.P. Kodandapani
1969TELUGUbommalu cheppina kathaGanduthummedha ramantondhiS.P. Kodandapani
1969TELUGUbandhipotu bheemannanee katukaT.V. Raju
1969TELUGUbandhipotu bheemannaThadi Thadi CheeraT.V.Raju
1969TELUGUbandhipotu bheemannachiraku ravi kanthmaT.V.Raju
1969TELUGUanna dammulunavve o chilakammaK.V. Mahadevan
1969TELUGUasthulu anthasthulu(old)Ninnemo anukundanuS.P. Kodandapani
1969TELUGUasthulu anthasthulu(old)adenu oka puvvuS.P. Kodandapani
1969TELUGUbuddhimanthuduthotaloki raaku raaK.V. Mahadevan
1969TELUGUprema kaanuka(old)yetti thapulaT.Chalapathirao
1969TELUGUprema kaanuka(old)okate korika  T.Chalapathirao
1969TELUGUprema kaanuka(old)yetidapulaT.Chalapathirao
1969TELUGUaathmeeyuluEe rojulo aadavaruS. Rajeshwara Rao
1969TELUGUbuddhimanthuduGuttameedha guvva kusindhiK.V. Mahadevan
1969TELUGUasthulu anthasthulu(old)Okatai podhamaS.P. Kodandapani
1970TELUGUagni pareekshaNaalona ninnu choosukoAdi Narayana Rao
1970TELUGUagni pareekshaKalavari VinodhalaAdi Narayana Rao
1970TELUGUagni pareekshaYelagani YelaganiAdi Narayana Rao

1970TELUGUakkachellelusanthosham chesukundaK.V. Mahadevan
1970TELUGUamma kosamee loyalonaAdi Narayana Rao
1970TELUGUamma kosampaapi kondalaAdi Narayana Rao
1970TELUGUamma kosamrepu vatthuvugaaniAdi Narayana Rao
1970TELUGUthaalibottupaadamanteK.V. Mahadevan
1970TELUGUthaallibottuchitti chittiK.V. Mahadevan
1970TELUGUthaallibottuevarannaruK.V. Mahadevan
1970TELUGUthaallibottunaa kanneK.V. Mahadevan
1970TELUGUallude mena alludupelli kudirindammaB. Shankar
1970TELUGUallude mena alluduNeevani nenani lenalevuB. Shankar
1970TELUGUpaga saadhisthachitti chitti paapasatyam
1970TELUGUpaga saadhisthamanasu uyyaalaaSatyam
1970TELUGUpaga saadhisthaee biguvu ee thagavusatyam
1970TELUGUakkachelleluo pilla fata fataK.V. Mahadevan
1970TELUGUmalli pellijeevtham entho teeyanidiK.V. Mahadevan
1970TELUGUmalli pelliaahamante aahalenuK.V. Mahadevan
1970TELUGUpacchani samsarampaadamani paatavineS.P. Kodandapani
1970TELUGUrendu kutubala kathakamalabhuvuniGhantasala
1970TELUGUrendukutumbalakathaMadhilo verese theeyani raagamGhantasala
1970TELUGUrendukutumbalakathaVenuganaloluni kanaGhantasala
1970TELUGUaadajanmachalo annadhi vayasuMaster Venu
1970TELUGUakkachelleluSrimati yemanna srivaruK.V. Mahadevan
1970TELUGUakkachelleluChita pata chinnukulatho kurisindhiK.V. Mahadevan
1970TELUGUpacchani samsaramamma neevuleniS.P. Kodandapani
1970TELUGUpacchani samsaramAnuraga mala virisindhiS.P. Kodandapani
1970TELUGUpacchani samsaramammaa neevuleni-pathosS.P. Kodandapani
1970TELUGUpacchani samsaramPaccha PacchagaaS.P. Kodandapani
1971TELUGUvichitra daampathyampanditha nehru puttina[1]Adi Narayana Rao
1971TELUGUanuradhainthalesi kallakkoK.V. Mahadevan
1971TELUGUanuradhakoorakani rara konte kurroduK.V. Mahadevan
1971TELUGUbangaru kutumbampillagali ooyalau pallavinchuSatyam
1971TELUGUbomma borusaollu jillendunnadhiR. Govardhan
1971TELUGUvichitra daampathyamevvari kosam enthaAdi Narayana Rao
1971TELUGUvichitra daampathyamnaa manase veenayagaAdi Narayana Rao
1971TELUGUvichitra daampathyamroopa sundarudeni-padyamAdi Narayana Rao
1971TELUGUvichitra daampathyamJaya subha charithaAswathama
1971TELUGUvichitra daampathyamSri gowri sri gowriyeAswathama
1971TELUGUnindu thampathuluounantadu jathaka vuntaduT.V. Raju
1971TELUGUnindu thampathuluporabadi naavammaT.V. Raju
1971TELUGUmallela manasuluchalo chalo navani jayaramawanL. Malleswara Rao
1971TELUGUmallela manasulunanu choodavelaL. Malleswara Rao
1971TELUGUmaster killadiVeedani jataSatyam
1971TELUGUmosagalaku mosagaduKorinadhi neraverinadhiAdi Narayana Rao
1971TELUGUmosagalaku mosagaduKathilanti PillanoyAdi Narayana Rao
1971TELUGUvikramarka vijayamuendukku bidiyamuG.K.Venkatesh, A.A.raj
1972TELUGUalluri seetarama rajuKonda Devata ninnu Adi Narayana Rao
1972TELUGUkathula rathaiahHappy Birthday -1Satyam
1972TELUGUkathula rathaiahrattayya maavasatyam
1972TELUGUPraja nayakadueru vakkammaK.V. Mahadevan
1972TELUGUbhale mosagaduEmayyo errati Satyam
1972TELUGUbhale mosagaduEe HusharuloSatyam
1972TELUGUpraja nayakudunuvve edolaK.V. Mahadevan
1972TELUGUbullamma bulloduzindabad swatanthraSatyam
1972TELUGUsabaash pappanaanuraga rasi urvasiS.P. Kodandapani
1972TELUGUsabhash papannanaajooku andhaluraS.P. Kodandapani
1972TELUGUsabaash pappanaivi naajooku andaaluraS.P. Kodandapani
1972TELUGUpandanti kapuramEenadu kattukunnaS.P. Kodandapani
1972TELUGUpandanti kapuramaadi paade kaalamloneS.P. Kodandapani
1972TELUGUpandanti kapuramYemamma jagadalaS.P. Kodandapani
1973TELUGUnija roopaluraja raja sriHanumantha rao
1973TELUGUdevudu chesina manushulutholisari NinnuRamesh Naidu
1973TELUGUdevudu chesina manushuluDora vayasu chinnadhiRamesh Naidu
1973Malayalamkavitha aadam ende appooppanraghunath
1973Malayalamkavitha abalakal ennumraghunath
1973Malayalamkavitha swargathil vilakku vakkumraghunath
1973Malayalamkavitha kalamizhukathilurumbayraghunath
1973Malayalamkavitha nischalanam kidapporeejalamraghunath
1973Malayalamkavitha varidhi vanine pulkumeeraghunath
1973Malayalamkavitha vettanaikkalal choozhumraghunath
1973MalayalamthEnaruvipranayakala vallabha vallaba[2]G.Devarajan
1974TELUGUdanavanthulu gunavanthulunadiche kavithavupendyala
1974TELUGUdanavanthulu gunavanthuluTerachi vunchevu suma pendyala
1974TELUGUdhanavanthulu gunavanthulunadichependyala
1974TELUGUdhanavanthulu gunavanthulutherachi unchevu sumapendyala
1974TELUGUbantrothu bharyaDhanalakshmi DhanyalakshmiRamesh Naidu
1974TELUGUbantrothu bharyaMallipula theppagattiRamesh Naidu
1974TELUGUalluri seetarama rajuvasthadu naaraju eerojuAdi Narayana Rao
1974TELUGUdevadas(new)Ee roju chaala Manchi RojuRamesh Naidu
1974TELUGUjeevithasayamatukulathu chaloS. Rajeshwara Rao
1974TELUGUjeevithasayamavuna padanaS. Rajeshwara Rao
1974TELUGUdevadas(new)PorugintiRamesh Naidu
1974MalayalamDurgasabarimalayude thazhvarayilG.Devarajan
1974MalayalamDurgasanchari swapna sancahriG.Devarajan
1975TELUGUkavithaAbalaga janminchotaRamesh Naidu
1975TELUGUkavithaVirajaji PoovullaraRamesh Naidu
1975TELUGUpichodu pelliNannu choosavanteSatyam
1975TELUGUsantanam sowbhagyambava baava paneeruB. Shankar
1975TELUGUsantanam sowbhagyampalike kannuluB.shankar
1975TELUGUswamy drohulumana jeevithamhanumantha rao
1975TELUGUpaadi pantaluIrusuleni abndi Ishwaruni bandiK.V. Mahadevan
1975TELUGUpaadi pantaluAtlathadhoi aaratloiK.V. Mahadevan
1975TELUGUpaadi pantaluaaduthu paaduthuK.V. Mahadevan
1976TELUGUdhaanadharmaluNeelala Ningilona rathanalaMaster Venu
1976TELUGUdhaanadharmalusri venkatesha oh srinivasaMaster Venu
1976TELUGUkurukshethramegu bhujambalavadaS. Rajeswararao
1976TELUGUkurukshethramalukala kula kalaS. Rajeshwara Rao
1976TELUGUkurukshethramMrogindhi kalyana veenaS. Rajeshwara Rao
1976TELUGUkurukshethramHarivilluS. Rajeswararao
1976TELUGUramarajyamlo rakthapaathamyendu kosamochhavuK.V. Mahadevan
1977TELUGUneram evaridhiMrudhu madurambhanumathi
1977TELUGUpanchayithiee nelakuK.V. Mahadevan
1977TELUGUpanchayithigali andariK.V. Mahadevan
1977TELUGUpanchayithikalyana vaibogameK.V. Mahadevan
1978TELUGUprema chesina pellinee anubavaluSatyam
1978TELUGUpatnavasamrathamosthunnadhiK.V. Mahadevan
1978TELUGUmoodu puvvulu aaru kaayaluYem cheyamantaruSatyam
1978TELUGUmoodu puvvulu aaru kaayalurachchaa pattusatyam
1978TELUGUmoodu puuvulu aaru kayaluradhamosthundiSatyam
1978TELUGUmoodu puvvulu aaru kaayaluemi ee pellisambaramSatyam
1979TELUGUallari pillaluoye rajulusatyam
1979TELUGUhemahemeeluNe kola kallakuRamesh Naidu
1979TELUGUhemahemeeludhaname ee jagathiki mulamRamesh Naidu
1979TELUGUsangam chekkina shilpalumaa papa manickyamERamesh Naidu
1979TELUGUsangam chekkina shilpalumurali krishna mohana krishnaRamesh Naidu
1979TELUGUhemahemeeluAndala silpamaRamesh Naidu
1979TELUGUhemahemeeluAvvayi chuvvayiRamesh Naidu
1979TELUGUhemahemeelupunnami vennelaRamesh Naidu
1979TELUGUhemahemeeluYevoru Yevada andhagadaRamesh Naidu
1979TELUGUMaster khiladiveedani jatha okesatyam
1979TELUGUsakshichukki NinnuK.V. Mahadevan
1980TELUGUragilina pagaee pasupu kungumalechakravarthy
1981TELUGUantham kadidi aarambhamammalalao abbalaloramesh naidu
1981Tamilsathiyam thavaraadhemuthuk kuLippavareCN Pandurangam
1982TELUGUnipputho chalagatamthuru thuruSatyam
1984TELUGUevaryveeru evaru veerukalalu vachhe velaramesh naidu
1986TELUGUkrishna paramathmakatha mugisindiJ.V.Raghavulu
1986TELUGUkrishna paramathmavunna vunnaJ.V.Raghavulu
1986TELUGUkrishna paramathmatakithe taha tahaladeJ.V.Raghavulu
1988TELUGUcollector vijayasirimalle dandalubappi lahari
1989TELUGUGandipeta Rahashayam aresukovaliJ.V. Raghavulu
1989TELUGUGandipeta Rahashayamolammi tikkaJ.V. Raghavulu
1989TELUGUpinni(new)Nidharantu ledhamma ee janmakiRaj Koti
1989TELUGUpinni(new)Yennelo amma yennelaRaj Koti
1989TELUGUprajala manishiandhamlona pandamvesipendyala
1989TELUGUprajala manishi chaka chaka nadumulapendyala
1992TELUGUvadhina maatakoluvundaraaJ.V. Raghavulu
1992TELUGUvadhina maatavache vachenammaJ.V. Raghavulu
1992TELUGUvadhina maatakarthika masanaJ.V. Raghavulu

வியாழன், 30 மே, 2019

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்



P.Susheela and Vennira Aadai Nirmala.



1965-இல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படம் பல திறமையான நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தது. ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா என பலரும் அந்த படத்தில் அறிமுகம் ஆனவர்கள் தான். வெண்ணிற ஆடை நிர்மலா அறுபதுகளின் மத்தியில் அறிமுகம் ஆனாலும் எழுபதுகளின் இறுதிவரை பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பின் அம்மா, அக்கா வேடங்களிலும் நடித்து குணசித்திர நடிகையாக விளங்கினார், மென்மையான அழகும், நடன திறமையும் ஒருங்கே இணைந்த நடிகை இவர். முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பதால் நிறைய நடன நிகழ்சிகளையும் நடத்தி நடன துறையிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொண்டார். இப்போதும் சீரியல்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் உஷா குமாரி என்ற பெயரில் நடித்து வந்தார்.

இவர் முதலில் நடித்து வெளிவந்த “வெண்ணிற ஆடை” படத்தில் “ஒருவன் காதலன் ஒருத்தி காதலி” என்ற பாடலை இவருக்காக பி.சுசீலா பாடி இருந்தார். அப்படத்தின் முதல் கதாநாயகியான ஜெயலலிதாவுக்கு எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடி இருந்தாலும் இரண்டாவது கதாநாயகியான நிர்மலாவுக்கும் பி.சுசீலா பாடி இருந்தார். பி.சுசீலா இவருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பின்னணி பாடி இருக்கிறார். பக்த பிரஹலாதா ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியான போது அதிலும் ஒரு பாடலை பி.சுசீலா இவருக்காக பாடி இருந்தார்.. பி.சுசீலா இவருக்கு கிட்டத்தட்ட 100 பாடல்கள் வரை பின்னணி பாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆருடனும் ( ரகசிய போலிஸ், நாளை நமதே, இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க, ,மீனவ நண்பன்) , சிவாஜியுடனும் ( எங்க மாமா, சொர்க்கம், பாபு,) என  பல படங்களில் நடித்திருக்கிறார். மற்றும் ஜெய்சங்கர், முத்துராமன். ரவிச்சந்திரன், சிவகுமார். மு,க,முத்து போன்ற எழுபதுகளின் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். எண்பதுகளில் ரஜினி, கமலுடனும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் உஷா குமாரி என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

பி.சுசீலாவுக்கு தகுந்த மரியாதை செய்யும் நடிகைகளில் இவரும் ஒருவர். பி.சுசீலா கின்னஸில் இடம் பிடித்த செய்தி கேட்டு நேரில் வந்து பாராட்டிய நடிகைகளில் இவரும் ஒருவர். பி.சுசீலாவுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டு பி.சுசீலாவை பாராட்டி பேசினார்.



பக்த பிரஹலாதா படத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா என நால்வரும் ஹிரண்யகசிபு அரசவையில் நடனமாடும் பாடல் காட்சியை ஜெயஸ்ரீ, கீதாஞ்சலி, விஜயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என  நால்வரின் நடனத்துடன் படமாக்கி இருந்தனர். பி.சுசீலா, எஸ்,ஜானகி, சூலமங்கலம் ஆகியோர் பாடினர். ரம்பாவுக்கும் திலோத்தமைக்கும் பி.சுசீலா பாடி இருந்தார். இப்பாடல் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் இதே குரல்களிலேயே இடம் பெற்றது.  தெலுங்கில் இவர் நடித்த முதல் படமும் இதுவே.


மலையாளத்தில் அவர் நடித்த முதல் படமான சேட்டத்தி படத்திலும் "பதினாறு வயஸ்ஸு கழிஞ்சால்" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார்.

அதே போல் கன்னடத்திலும் அவர் நடித்த முதல் படமான "RenukaDevi Mahatme" என்ற படத்திலும் "Priyathama swagatha" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார். மொத்தத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் இவருக்கு அறிமுக  பாடலை பாடியது பி.சுசீலா அவர்களே.

பி.சுசீலா இவருக்கு பாடிய முக்கியமான பாடல் என்றால் லக்ஷ்மி கல்யாணம் படத்தில் இடம் பெற்ற "ராமன் எத்தனை ராமனடி" பாடலை சொல்லலாம். காலங்கள் பல கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்களில் அதுவும் ஓன்று.

அதே போல் பி.சுசீலாவுக்கு தமிழ் நாட்டின் அரசு விருதை பெற்று தந்த "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" என்ற பாடலுக்கும் பெரும் பங்கு உண்டு.

தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற " கல்யாண ராமன் கோலம் கண்டான்" பாடலும் மிக சிறந்த பாடலே.

மன்னிப்பு படத்தில் பி.சுசீலாவும் கோமளாவும் இணைந்து பாடிய "குயிலோசையை வெல்லும்" பாடல் மிக சிறந்த பாடல். இப்படத்தில் "நீ எங்கே என் நினைவுகள் எங்கே" என்ற இன்னொரு பாடலையும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக பாடி இருந்தார் பி.சுசீலா.
இதயக்கனி படத்தில் இடம் பெற்ற "தொட்ட இடமெல்லாம்" பாடலும் புகழ் பெற்ற பாடல்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம் பெற்ற "அழகெனும் ஓவியம்  இங்கே"  பாடல் ஹிட்டான பாடல். அருமையான மெலடி.

ஒரு டப்பிங் படம். ஆனால் அருமையான பாடல். வி.தட்சிணாமூர்த்தி இசையில் "Sri Anjaneya charithra" என்ற படத்தில் அருமையான ஒரு செமி;கிளாசிகல் பாடல்.



YearLanguageMovieSongmusic
1965Tamilvennira adaioruvan kaadhalanMSV-TKR

1965MalayalamChettathipathinaru vayasu kazhinjalG.Devarajan
1967Tamilbhaktha prahaladavaazhgave mannulagumS. Rajeshwara Rao
1967Telugubhaktha prahladaJayaho andani suraseemaS. Rajeshwara Rao
1967Hindibhaktha prahladaJayaho jayaho aaj naya mereS. Rajeshwara Rao
1967Tamilkaadhalithaal podhumaaayyaa muzhikkiRa muzhiyaiVeda
1967Tamilkaadhalithaal podhumaakonjam nilladi en kannEVeda
1967Tamilpandhayamnaalapuramum kodukattiT.R. Papa
1967Tamilpandhayamthendral vandhu thottadhinaalET.R. papa
1968Tamillakshmi kalyaanambrindavanathukku varugintrenM.S. Viswanathan
1968Tamillakshmi kalyaanamraman ethanai ramandiM.S. Viswanathan
1968Tamilneelagiri expresspereecham pazhangalukkuT.K. Ramamurthy
1968Tamilsopu sepu kannadinichayam naanE natural beautyT.K. Ramamoorthy
1968Tamilsopu sepu kannadithookkam kannilE yEkkam T.K. Ramamoorthy

1969Tamilmannippukuyilosayai vellumS. M. Subbiah Naidu
1969TamilmannippuNee engeen ninaivugal -ver2S. M. Subbiah Naidu
1969Tamilmannippuvennilaa vaanil varumS. M. Subbiah Naidu
1969Tamilpoova thalayapaaladai meni panivaadai M.S. Viswanathan
1969Tamilthangaikkagaazhage neeyoru kadhaiM.S. Viswanathan
1970Tamilnoorandu kalam vazhgamaangalyam thirumaangalyamK.V. Mahadevan
1970Telugupelli koothururamunu roopameM.S. viswanathan
1970Telugupelli koothuruchakkani pilla pakkanaM.S. Viswanathan
1971Tamilbadhilukku badhilEzhettup peNgaL endhanS.M. subbaiah naidu
1971Telugubangaru thallibangaru thalliS. Rajeshwara Rao
1971Tamilneedhi devanmaanikka padhumaikkuK.V. Mahadevan
1971MalayalamPanchavan kaadumanmadha pournami G.Devarajan
1971Tamilthanga gopuramMuthuthamizh madurayin[1]S. M. Subbiah Naidu
1972Tamilavalboys and girlsShankar Ganesh
1972TamilavalGeetha oru naal pazhagumShankar Ganesh
1972Telugudatta putruduandhaniki andanivaiT. Chalapathi rao
1972Tamilkaadhalikka vaangakadhal entral thenallavoRagava naidu
1972Tamilkaadhalikka vaangaunakkum enakkum uravuRagava naidu
1972Telugukattula rattayyaentho machu rojuK.V. Mahadevan
1972Tamilprarththanaiadimai naan anaiyiduShankar Ganesh
1972Telugusomari pothuyemanukkunnavo naavoduG.K.Venkatesh
1972Tamilthaaikku oru pillaikalyana raaman kolam Shankar Ganesh
1972Tamilthaaikku oru pillaimaadhulai muthukkalShankar Ganesh
1972Tamilthaaikku oru pillainaan kaadhal kilishankar ganesh
1973Tamilanbu sahodarargalethir paarthen unnai ethirK.V. Mahadevan
1973Telugudhanama deivamaEmito edhi emito GuduguduT.V. Raju
1973Tamilengal thaairaamanin naayagi kambanin M.S. Viswanathan
1973Tamilnalla mudivumaamaa veetu kalyanathilaShankar Ganesh
1973Tamilpetha manam pithuammadi ereduthu vanthavareV. Kumar
1973Tamilprarththanainetru varai pathinaaruT.K. Ramamoorthy
1973Tamilprarththanaikaadhal piRandhadhuT.K. Ramamoorthy
1973Telugusthree gowravamamma manasanthaV. Kumar
1973Telugusthree gowravampapa chinni papav. kumar
1973TamilvaakkuruthikannE thEdi vanthathuShankar Ganesh
1973TamilvaakkuruthipaadangaLai sollida vaaShankar Ganesh
1973Tamilvaakkuruthithanneeril meniShankar Ganesh
1974Tamilavalukku nigar avalesElai virkum kadayai kandEnV. Kumar
1974Malayalamdurgakaatoodum malayoramG.Devarajan
1974Tamilidhayakanithotta idamellamM.S. Viswanathan
1974Telugumangalya bhagyampuvvula renduS.P. Kodandapani
1974Telugumangalya bhagyamneeli gagnala thakeS.P. Kodandapani
1974Tamilpaththu madha bandhamaathooru maamaa pottaarushankar ganesh
1974Tamilsamayalkaranunakkum vishayamM.S. Viswanathan
1975Tamileduppar kai pillaiponnum mayangumM.B. Srinivasan
1975Teluguprema dharma (D)vayasulo vasanthamM.S. Viswanathan
1976Telugudatta putruduravamma ravammaT. Chalapthi rao
1977Tamilellam avalekulirukku bayanthavanM.S. Viswanathan
1977Tamiloorukku uzhaippavanazhagenum oviyam ingeM.S. Viswanathan
1977MalayalamSree Murugan jnanappazham neeyalleG.Devarajan
1977KannadaSri Renukadevi Mahatmepriyathama swagatha Hanumantharao
1978Tamilkaviraja kaala megamyaaraaga irunthaal ennaS.M. Subbiah naidu
1978Tamilkaviraja kaala megampodhigai thendral paduthuS.M. Subbiah naidu
1979MalayalamPuthiya velichamchuvanna pottumsalil choudry
1980Teluguchukkallo chandruduputtukathoneS. Rajeshwara Rao
1980Teluguchukkallo chandruduboga bhagyalathoS. Rajeshwara Rao
1980Teluguchukkallo chandruduninu kannadi evaroS. Rajeshwara Rao
1980Telugusri anjaneya charitranaadha niradham swara sancharamV. Dakshinamurthy
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyammanasu theerkaraS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamnee papanu naanaS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamninnati kathaveruS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamvalle ani allukoneS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamveena na veenaS. Rajeshwara Rao
1981Tamilsathiyam thavaraadhemuthuk kuLippavareCN Pandurangam
1984Telugubhola sankarududrama-song-2Chakravarthy