பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 27 ஜூன், 2017

பி.சுசீலாவின் குரலில் ஒலித்த வைரமுத்துவின் பாடல்கள் - பாகம் 1






       ஒரு கலைஞரை இன்னொரு கலைஞர் இதை விட அதிகமாக கௌரவப்படுத்த முடியாது. தன் கடைசி ஆசையாக, தனது  அபிமான பாடகியின் பாடலை கேட்க விரும்பும் அந்த ரசிகரின் வார்த்தையை விட பெரிய விருதுகளும் இருக்க முடியாது. அப்படி ஒரு கவரவத்தை பி.சுசீலாவுக்கு அளித்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். பாக்யராஜ் நடத்திய பாக்யா இதழில் இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்” (லிங்க்) என்ற பெயரில் ஒரு தொடரை எழுதினார் வைரமுத்து அவர்கள். அதில் பி.சுசீலா அம்மையாரை பற்றியும் சில பக்கங்கள் எழுதி இருந்தார். ( பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது.) ஒவ்வொரு பி.சுசீலா ரசிகர்களும் படித்து ரசிக்க வேண்டிய அருமையான படைப்பு அது. அதில் தான் இப்படி ரசித்து, அனுபவித்து எழுதி இருந்தார் கவிப்பேரரசு அவர்கள்.


      பெரும்பாலும் திரைத்துறையில் இருப்பவர்கள் மேடை நாகரீகத்துக்காக மற்ற கலைஞர்களை புகழ்ந்து பட்டும் படாமல் சில வார்த்ததைகள் பேசுவதுண்டு. தனக்கு பேர் வாங்கி தந்த பாடல்களை பாடிய பாடகரையோ, அல்லது பாடகியையோ கூட தனக்கு பிடித்த பாடகராக அல்லது பாடகியாக சொல்ல தயங்குவது உண்டு.  ஆனால் தனக்கு பிடித்தமான கலைஞர்களை பற்றி எந்த மேடையிலும் தயங்காமல் பேசுபவர் வைரமுத்து அவர்கள். ஒரு நல்ல ரசிகரே கவிஞராக அமைந்ததாலோ என்னவோ அவரது பாடல்கள் ஒன்றுமே சோடை போகவில்லை. அதீத புலமையும், திறமையும் ஒருங்கே அமைந்ததால் எந்த கொம்பனாலும் அவரை அசைக்கவும் முடியவில்லை. திறமை இருக்கும் இடம் தேடி வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன..

    வைரமுத்து அவர்கள் இசைக்குயில் பி.சுசீலா அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது.  உதாரணத்துக்கு குமுதம் இதழில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்.. 
    

         பி.சுசீலா அவர்களைப்பற்றி பல மேடைகளிலும் புகழ்ந்து பேசி வருபவர் வைரமுத்து அவர்கள். ஜெமினி சினிமா என்ற இதழில் தனக்கு பிடித்த 10  விஷயங்களை பட்டியல் இடும் போது “நிலா நனைந்த ராத்திரியில் பி.சுசீலாவின் பாடல்கள்” என குறிப்பிட்டார்.


       பி.சுசீலாவுக்கு ராஜ் டி.வி நடத்திய பொன்விழாவில் வைரமுத்துவின் பங்கு இருந்தது. அத்தோடு அவரின் அருமையான பேச்சும் முத்தாக அமைந்தது.

      சமீபத்தில் விஜய் டி.வியில் கூட அவர் சிறப்பு விருந்தினராக அமர்ந்த போது தன அபிமான பாடகியை பற்றி பேச மறக்கவில்லை. பல பத்திரிக்கைகளிலும். தொலைக்காட்சிகளிலும், மேடைகளிலும் பி.சுசீலா அவர்களை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.  

     பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்த செய்தி கேட்டு நேரில் சென்று பாராட்டிய நல்ல உள்ளங்களில் அவரும் ஒருவர். ஒரு புத்தர் சிலையை பரிசளித்து மகிழ்ந்தார்.  

      இந்த தொகுப்பில் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த வைரமுத்துவின் பாடல்களை பார்க்கலாம்..

      வைரமுத்து அவர்களின் பாடல்  வரிகளை பி.சுசீலா பாடிய அனுபவத்தை வைரமுத்து அவர்களே பகிர்ந்து கொள்கிறார். பஞ்சமி என்ற படத்துக்காக இவர் எழுதிய “உதய காலமே நனைந்த மேகமே” என்ற பாடல் தான் பி.சுசீலாவின் குரலில் ஒலித்த முதல் வைரமுத்துவின் பாடல். குரலிலும் வார்த்தைகளிலும் என்ன ஒரு தெளிவும் இனிமையும் !!! இந்த பாடலை பதிவு செய்யும் போது பி.சுசீலா அவர்களுக்கு 46 வயது என்றாலும் 16 வடது பெண் போல் குரலில் என்ன ஒரு இளமை!!!. பாடல் ஏன் பிரபலம் ஆகாமல் போனது என தெரியவில்லை.. கேட்காதவர் ஒரு முறை தவறாமல் கேளுங்கள். இந்த பாடலுக்கு நண்பர் விக்கி அவர்கள் எழுதிய பக்கத்தை படியுங்கள்.. ( லிங்க் ) நமக்கு தெரியாத சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களை கூட அலசி இருப்பார் அவர்.



    1980-ல் ஊஞ்சல் என்றொரு திரைப்படத்தின் "கிராமபோன்" ரிக்கார்ட் கிடைத்தது. அதில் ஷ்யாம் இசையில் வைரமுத்து எழுதிய "பூமாலை" என துவங்கும் பாடலை பி.சுசீலா பாடி இருக்கும் தகவல் கிடைத்தது. 


     ராம நாராயணன் இயக்கிய "சிவப்பு மல்லி" படத்தில் இடம் பெற்ற "ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்" பாடல் அக்கால கட்டத்தில் பிரபலமான பாடல்களில் ஓன்று. .. "நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ, வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டதோ" என வைரமுத்துவின் கற்பனை பாடல் முழுவதுமே பரவிக்கிடக்கும். அப்படத்தில் "ஊருக்குள்ளே நான் தான் மகாராஜா" என்ற தெருக்கூத்து பாடல் ஓன்று TMS, T.L.மகாராஜன், பூங்குயிலன், பி.சுசீலா அவர்கள் குரலில் இடம் பெற்றது. கொஞ்சம் வசன  நடையில் ஒலித்த "ஆண் தொடாத கன்னிப்பெண்ணை" என்ற பாடலை TMS, பி.சுசீலா இணைந்து பாடினர். "அவள் மோகமூச்சு இன்று தீயை சுட்டது" என்று வைரமுத்துவின் தனித்துவமான வரிகள் பாடலில் இடம் பெற்றன.


              ( Rendu kannam santhana kinnam )

        
Vairamuthu on "Rendu kannam" song


                   
                     ( Avan Thodatha Kanni Pennai )       

   கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "தண்ணீர் தண்ணீர்" படத்தில் இடம் பெற்ற "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்ற தாலாட்டு பாடல் ஒரு கிராமத்து தாயின் சோகத்தை மொத்தமாக பிரதிபலித்தது. தண்ணீரின்றி தவிக்கும் மக்களின் துயரத்தை மொத்தமாக பிரதிபலிக்கும் பாடல் அது. "ஊத்து மலை தண்ணீரே என் உள்ளங்கை சர்க்கரையே" என்பது போல் மிக இயல்பான கிராமத்து வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடலில் அருமையாக பிரயோகித்து இருப்பார் வைரமுத்து அவர்கள். 
"தண்ணி தந்த மேகம் இன்று
ரத்த துளி சிந்துதடா
காத்திருந்த பானைக்குள்ளே 
கண்ணீர் துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு 
கண்ணே எண்ணெய் இல்லையடா"
                    இந்த பாடல் பற்றி வைரமுத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் ? வீடியோவை பாருங்கள்..
    

            கண்ணான பூமகனே

        
வைரமுத்துவின் பேச்சு.




         ஏ,வி,எம் நிறுவனம் சரிதாவை நாயகியாக்கி "அம்மா"  என்ற திரைப்படத்தை தயாரித்தது. அதில் "பூமுகம் சிவக்க சோகம் என்ன நான் இருக்க" என்ற இன்னொரு தாலாட்டு பாடலை வைரமுத்து எழுதினார்... "இந்த இரவு விடிந்து விட வேண்டும் இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்" போன்ற மனதை உருக்கும் வரிகளும் பாடலில் இடம் பெற்றன.
"என் வீணை போனதெங்கே 
கலைகின்ற ராகம் இங்கே 
அவன் தூங்க வைத்தேன் அங்கே 
என் தூக்கம் எங்கே 
இந்த இரவு விடிந்து விட வேண்டும் 
இல்லை.. 
பருவம் கரைந்து விட வேண்டும் "




            Ammave Deivam

        
பூமுகம்  சிவக்க - வைரமுத்து 



     "அம்மாவே தெய்வம் ஆகாய  தீபம் தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும் " என்ற அம்மாவின் பெருமையை உணர்த்தும் பாடலையும்  வைரமுத்து எழுதினார்.
"தாய்மையின் தவிப்பால் குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம் துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினை தடுப்பாள்
காயம் படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்
அவள் தன்மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள்"


                       
   ஸ்ரீதர் இயக்கி கார்த்திக் - ஜிஜி நடிப்பில் வெளிவந்த நினைவெல்லாம்   நித்யா படத்தில் இடம் பெற்ற "கன்னிப்பொண்ணு கைமேல கட்டி வச்ச பூமால" பாடலும் வைரமுத்துவின் வரிகளே.
      மஞ்சு பார்கவி நடிப்பில் வெளிவந்த "மகனே மகனே" படத்தில் இருக்கும் ஒரே மகனும் தன்னை பார்க்க வராத ஏக்கத்தில் 
 "மகனே இளமகனே நான் அழுதேன் உன்னை எண்ணி" என தாய் நெஞ்சுருகி பாடும் பாடும் பாடல் இடம் பெற்றது. ஒவ்வொரு வரியிலும் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார் வைரமுத்து அவர்கள்.  
"கருவில் வந்த பந்தமெல்லாம் கணக்கு சொல்லவில்ல 
இடுப்ப விட்டு போன பின்னே எனக்கு சொந்தமில்ல
நெஞ்சுக்குள்ள தீமூட்டி உள்ளங்கையில் சோறாக்கி 
இறக்கி வச்சேன் மகனை மட்டும் காணவில்ல"

      "பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்" என ஜேசுதாஸ்-பி.சுசீலா குரல்களில் ஒலித்த பாடலை எழுதியவரும் வைரமுத்து அவர்களே.. 
  
       "தேர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி" என்ற வரிகளுக்கு சொந்தக்காரரும் வைரமுத்து அவர்களே ..
      
    
             Paada vanthatho gaanam




 ( பாகம் -2       
Ther kondu sentravan




         
( தொடரும் )    

    

புதன், 7 ஜூன், 2017

பி.சுசீலாவும் எஸ்.பி.ஷைலஜாவும் இணைந்து பாடிய பாடல்கள்.


        எஸ்.பி.ஷைலஜா  அவர்கள் 1977-இல் "Maarppu" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக பின்னனி பாடகியாக அறிமுகம் ஆனார். தமிழில் பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதற்கு  முன்னாலேயே ஷ்யாம், சங்கர் கணேஷ் இசைகளில் ஓரிரு பாடல்கள் பாடியதாக ஏதோ ஒரு இன்டர்வியுவில் அவர் சொல்லி இருந்தார். சோலைக்குயிலே பாடல் அவருக்கு நல்ல புகழை ஏற்படுத்தி கொடுத்தது. அதற்கு  பின் தமிழில் அவரும் ஒரு முன்னணி பாடகியாகவே திகழ்ந்தார்.  அவருக்கெனவும் ஒரு தனி ரசிகர் வட்டாரம் இருந்தது.
                 
                       எஸ்.பி.பியின் தங்கை என்றாலும் தனக்கென ஒரு identity-ஐ ஏற்படுத்திக்கொண்டார்.  பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி  ஜெயராம் என மூவரும் மிகவும் பாப்புலராக இருந்த கால கட்டத்தில் இவர் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.




       இவர் தனக்கு பிடித்த பாடகியாக பி.சுசீலாவை குறிப்பிடுகிறார். பி.சுசீலாவின் influence தனது குரலில் இருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார். கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.  (தெலுங்கில் )



இன்னொரு வீடியோ .. ( தெலுங்கில் )




           இவரும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல், சக்கரவர்த்தி இசையில் "Charithra Heenalu" என்ற தெலுங்கு படத்துக்காக "Evaru neevu Evaru nenu"  என்ற பாடல் என அவரே குறிப்பிடுகிறார். அந்த பாடலை பாடும் போது தனக்கு பிடித்த பாடகியை பார்த்துக்கொண்டே இருந்ததாகவும் அதனால் பாடல் வரிகளை மறந்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார். இதோ அந்த பாடல்..

                                                           ( Evaru Neevu Evaru Nenu )

     இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் கூட சில அருமையான பாடல்களை பாடி இருக்கிறார்கள்.. சில விடியோக்கள கீழே ..

           



       Kannukkulle Yaaro

        
Deepangal Ayiram 
         


        
( Vaalai Paruvathile)
          

     Paasa Malare Anbil
       

Sholappur Raja ( Sandhippu )

         


பி.சுசீலாவும் , எஸ்.பி.ஷைலஜாவும் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார்கள். சில வீடியோக்கள் கீழே.. .


          



      Kondantha Chilakkallara ( Nindu Noorellu)

        
Pasupu Pacha ( Buchi Babu)
         

    Ananda Natanam
        
Kanni Malare ( Malayalam )
          

    Kalyanam Kamaneeyam ( Swathi )
       

Ammala Kanna Amma



   Gorantha Pasupe
       

Naa  mogude Brahmachari


List of Songs ..

NoYearLanguageMovieSongMusic
11977TeluguCharithraheenuluevaru neevu evaru nenuChakravarthy
21977TeluguAll India Radioprakruthe manishi pratahmaL.Krishnan
31979Telugubottu kaatukaswagathamChakravarthy
41979Telugunindu noorelluchinni ponni chilakallaraChakravarthy
51979Telugunindu noorellukundella kalyanamChakravarthy
61979Telugunindu noorellukondanta devudavu neevuChakravarthy
71980Telugubutchi babupasupa pacchaChakravarthy
81980Teluguchandi priyao priya priyaAdi Narayana Rao
91980Telugumogudu kavaalioh chilaka palukeJ.V. Raghavulu
101980Telugupilla zamindarNee choopulona muthyalaChakravarthy
111980Teluguram robert rahimoka ammayiChakravarthy
121980Telugusri anjaneya charitraaananda nilayam naatyamV. Dakshinamurthy
131980Teluguthodu dongaluhoyi allari mallalesatyam
141980Tamilkuruvikkooduvai vai vaiK.V. Mahadevan
151980TamilMangala NayakiVinn padaithanV. Kumar




171981Teluguillalueddari krishnudu muddulaChakravarthy
181981Tamilmanamadurai mallibadhil solladiK.C.Swaminathan
191981Tamilneedhidevan mayakkamothikayil thaane ippadi aanaalShankar Ganesh
201981Kannadasnehithara savaalalla nee illi barayyaSatyam
211981Telugusathyam sivammanchi tharunamK. Chakravarthy
221982Telugubangaru kanukaThamara poovanti Satyam
231982Telugudevatha(new)challagali cheppedhi emaniChakravarthy
241982Telugukranti kalalenaadinaKaladhar
251982Telugukranti kalaleswagathaKaladhar
261982TelugukrishnavataramMeluko radha krishnaK.V. Mahadevan
271982TeluguswayamvaramHarivillu podharilluSatyam
281982Tamilkanne radhavaalai paruvathile iru Ilayaraja
291982Tamilmarumagale vaazhgadeepangal aayiram Shankar Ganesh
301982Tamilmuraipponnuunna nenechi nenachi M.S. Viswanathan
311983Teluguramarajyamlobheemarajukaaboye srimathiChakravarthy
321983Telugusri anjaneyam prasannanjaneyammammu brovaraRaj-Koti
331983Telugusri anjaneyam prasannanjaneyamjai bhajarangaRaj-Koti
341983Tamilennai par en azagai parammadiyov pothum pothumIlayaraja
351983Tamilennai par en azagai parbangalore thakkaali periyaIlayaraja
361983Tamilennai par en azagai paren dEham paigintra paalodaiIlayaraja
371983Tamilennai par en azagai parthottu paar thottuppaarIlayaraja
381983Tamilsanthippusolappur raja kolapur raniM.S. Viswanathan
391983MalayalamJustice RajaKanni MalareGangai Amaran
401983TamilNeethipathiPaasa malare anbilGangai Amaran
411984TeluguAnthagathela Sawalammadiyov Ilayaraja
421984TeluguAnthagathela SawalbangalooruIlayaraja
431984TeluguAnthagathela Sawalnaa dEham Ilayaraja
441984Telugujustice chakravarthiseethammaku cheyisthiRamesh Naidu
451984Telugujustice chowdurySrilakshmi pellikiChakravarthy
461984Teluguseethamma pelliPapikondalo paitaS.P. Balasubrahmanyam
471984Tamilaathora aathamalarodu naan pesaNemai nathan
481984Tamilkai kodukkum kaikannukkuLLE yaarOIlayaraja
491984Tamilthiruttu raajaakkalkattabomman oomaithuraiShankar Ganesh
501984Kannadavigneswarana vahanavigneshwaranuselvaraj
511985Telugumaharajupelli mata ethakEChakravarthy
521985Telugurechukkakannuku kannu kottiJ.V.Raghavulu
531985TeluguswathiKalyanam kamaniyamChakravarthy
541986Telugubaala nagammanaa edalo viresenammaIlayaraja
551986Telugujailu pakshiAmmalagana ammaK.V. Mahadevan
561986Telugunippulanti manishimaa amma kotimirakuchakravarthy
571986Telugusrimati kanukamangala gaurichakravarthy
581986Tamildharma pathinisumangali poojai idhuIlayaraja
591987Telugudonga moguduardhamu leni maddelaChakravarthy
601987Telugukiladi dongaludi di dikkuRajan Nagendra
611987Telugumuddu biddachitti chitti matalloK.V. Mahadevan
621987Telugunaaku pellam kaavaliPutthadi bomma maa akkaS. Vasu Rao
631987Tamilveshakkaranartha raathriyilChakravarthy
641988Tamilen thangachi padichavamaamaannu solla oru aaluGangai Amaran
651989Teluguayyappa swamy mahatyammammelu maa swamy K.V. Mahadevan
661989Teluguchinnari snehamChinnari snehama chirunamaChakravarthy
671991Teluguiddaru pellala muddula polisuammana kokokaroJ.V. Raghavulu
681991Telugumamasriaada pillalamsree
691991Teluguprema khaidhiAntakshari songRajan Nagendra
701992TeluguSamsarala mechanicgorantha pasupedititheJ.V.Raghavulu
711992TeluguseetharatnamgariabbayiNaa mogude bhramachari Raj Koti
721995Telugupavithraoka chukka chethiloniKrishna Chakra




திங்கள், 5 ஜூன், 2017

பி.சுசீலாவும் இளையராஜாவும் இணைந்து பாடிய பாடல்கள்.




ஒரு நண்பர் எழுதிய Blog-இல் இளையராஜாவின் முதல் டூயட் பற்றி அலசி இருந்தார்கள்..  (லிங்க்  )


      "  ராஜா பாடிய முதல் டூயட் என்னவாக இருக்கும்? படம் வெளிவராது பாடல்கள் பிரபலமான மணிப்பூர் மாமியார் படத்தில் ஷைலஜாவுடன் " சமையல் பாடமே"? இருக்கலாம்.

என் யூகம், அவர் பாடிய முதல் டூயட் ...அந்தப்பாடகியுடன் அவர் அதற்குப் பிறகு டூயட் பாடவேயில்லை.....இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாடகியுடன், மற்ற பாடகர்களுடனும் ( மனோ) சேர்ந்து அவர் திரைப்பட வாழ்க்கையில் இன்னும் ஒரே பாடல்தான் பாடியிருக்கிறார், தேங்காய் ஶ்ரீனிவாசன் தயாரித்து நடித்து அழிந்த கிருஷ்ணன் வந்தான் படத்தில்.

அந்தப் பாடகி..பி.சுசீலா. பாடல் 1978 ல் வெளியாகி , 1979 வெளியான லட்சுமி படத்தில் " தென்ன மரத்துல தென்றலடிக்குது" .   


    இன்னொரு தளத்தில் ஒரு நண்பர் இப்படி எழுதி இருந்தார்... "I still remember myself and my brother attended the light music prog (1st in a grand scale) of IR for PiLLayar Chathurthi near Luz PiLLayar temple (Luz circle). I was a student that time. PS also sung with him, but she sung only 3 songs (KetteLe ange, KaNNan oru kuzhandhai, Thenna marathula thendral..). Before that duet, IR said "This is my first duet, that too with PS, whom I always respect".




     சரி..  முதல் நண்பர் தெரிவித்தபடி அல்ல... பி.சுசீலாவுடன் இன்னும் சில டூயட்டுகள் பாடி இருக்கிறார்.  பி.சுசீலாவுடன் இணைந்து இளையராஜா பாடிய பாடல்கள் எவை?

1.  1979-ஆம் வருடம் வெளிவந்த லக்ஷ்மி படத்தில் இடம் பெற்ற "தென்ன மரத்துல தென்றல் அடிக்குது" என்ற பாடல் தான் இருவரும் இணைந்து பாடிய முதல் பாடல்.   Here is the beautiful Write up by Vicky Iyengar ( Link
                                             ( தென்ன மரத்துல தென்றல் ) 
2. 1987 -இல் மோகன், ரேகா நடித்து வெளிவந்த  "கிருஷ்ணன் வந்தான்" திரைப்படத்தில் "தனியாக படுத்து படுத்து" என்ற டூயட்.. இப்படம்  தேங்காய் ஸ்ரீநிவாசன் அவர்களின் சொந்தப்படம் என்பது இன்னொரு செய்தி..





3. அதே படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன். மோகன், ரேகா ஆகியோர் நடிப்பில் இடம்பெற்ற "அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க" என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து மனோவும், இளையராஜாவும் பாடி இருந்தார்கள் .



4. 1989-இல் ராமராஜன், கவுதமி நடிப்பில் வெளிவந்த "பொங்கி வரும் காவேரி" படத்தில் இடம் பெற்ற " மன்னவன் வாழும் குடி பிறந்த" என்ற சோகப்பாடல்.


5.  1991-இல்  வெங்கடேஷ், தபு நடிப்பில் வெளிவந்த "கூலி நம்பர் 1 " என்ற தெலுங்கு படத்துக்காக் பாடிய   "கலயா நிசமா" என்ற டூயட்..



6.  பாடாத தேனீக்கள் படத்தில் இடம் பெற்ற "ஆதி அந்தம் இல்லாதவனே" என்ற பாடல்.



7. 1986-இல் சிவாஜி-பத்மினி நடிப்பில் வெளிவந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" படத்தில் இடம் பெற்ற கதம்ப பாடல் "அலையிலே மிதந்தவள்" என்ற பாடலை பி.சுசீலா,  இளையராஜா, மலேஷியா வாசுதேவன்" இணைந்து பாடினார்கள். 





8. தங்கமடி தங்கம் படத்தில் இடம் பெற்ற "அத்த மக தங்கத்துக்கு என்ன மயக்கம்" என்ற பாடலில் மலேஷியா வாசுதேவன், பி.சுசீலாவுடன் இளையராஜாவும் இணைந்து பாடி இருப்பார்.




9.  காளிதாசன் கண்ணதாசன் பாடலில் ஒலிக்கும் ஆரம்ப ஹம்மிங் இளையராஜாவின் குரல் தான்.




10. சீர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி சொல்லடி தோழி பாடலில் ஜதி இளையராஜாவின் குரல் என்று தான் நினைக்கிறேன்..




 

நன்றி .. 
     

       

ஞாயிறு, 4 ஜூன், 2017

பி.சுசீலாவும் சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்கள்.


       


       சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழ் இசை உலகில் மறக்க முடியாத தனித்தன்மை வாய்ந்த பாடகர். கோயில் மணி போல் கணீர் என ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.  தெளிவான குரல் , வார்த்தை சுத்தம்,  கம்பீரம், அருமையான சங்கதிகள் என ஒவ்வொரு பாட்டிலும் அவர் தனித்துவம் வெளிப்படும். ஐம்பதுகளில் ஒரு குரலுக்கும் இன்னொரு குரலுக்கும் ஒற்றுமை கண்டு பிடிக்கவே முடியாது. எல்லா பாடகர்கள் குரலிலும் தனித்துவம் இருந்தது. டி.எம்.எஸ், ஏ.எம்.ராஜா டி.ஆர்.மஹாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி,  பி.பி.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் என யார் குரலிலும் இன்னொருவர் குரலின் சாயல் இருக்காது.
    
       சீர்காழி அவர்கள் 1953-இல் பொன்வயல் என்ற திரைப்படத்தில் பாடி தன் திரை இசை பயணத்தை ஆரம்பித்தார். அதே போல் கர்நாடக இசை கச்சேரிகளும் நிறைய செய்து வந்தார். அவர் பாடிய பக்தி பாடல்கள் ஆலயங்கள் உள்ள வரை ஒலித்துக்கொண்டே இருக்கும் என கூறும் அளவுக்கு பிரபலம் ஆனவை. அகத்தியர், கந்தன் கருணை, தெய்வம் போல பல  படங்களில் நடித்தும் இருக்கிறார். 1988-ல் இவர் இறைவனடி சேர்ந்தார்..

  
        எண்பதுகளில் பொம்மை, பேசும் படம், ஜெமினி சினிமா, சினிமா எக்ஸ்ப்ரஸ் என பல சினிமா பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஒரு முறை சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையில் பி.சுசீலாவை பற்றி இப்படி குறிப்பிட்டார். “இன்று சமயபுரத்தாளே சாட்சி” பாடல் ரிக்கார்டிங்குக்காக சென்ற போது சகோதரி பி.சுசீலா பாடிக்கொண்டு  இருந்தார். அன்று “கண்ணான கண்ணனுக்கு அவசரமா” என்று பாடிய அதே குரலை இப்போதும் கேட்டேன். அன்று முதல் இன்று வரை அதே இனிமையுடன் பாடும் அந்த குரலை “தேவ அமுதம் என்று தானே கூற வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். உண்மை தானே.
  .

             
     பி.சுசீலா பாட ஆரம்பித்து 25 வருடங்கள் நிறைவு செய்ததை ( வெள்ளி விழா ) அடுத்து அவருக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அதற்காக அன்றைய பொம்மை பத்திரிக்கை பி.சுசீலாவுக்கு ஒரு சிறப்பு மலரும் வெளியிட்டது. அதில் பாடகர், பாடகியர் பலரும் பி.சுசீலாவை புகழ்ந்து எழுதி இருந்தார்கள். அதில் சீர்காழி அவர்கள் பி.சுசீலாவை பற்றி எழுதியதை படியுங்கள்..




             பி.சுசீலாவும், சீர்காழியாரும் இணைந்து பாடிய முதல் பாடல் எது என அவரே குறிப்பிட்டு இருக்கிறார். 1957 –இல் மாஸ்டர் வேணு இசையில்  வெளிவந்த “எங்க வீட்டு மகாலக்ஷ்மி” படத்தில் இடம் பெற்ற “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே” என்ற பாடலே அது.  அதற்கு பின் பல படங்களில் அவர்கள் இணைந்து பின்னணி பாடினார்கள்.   சில பாடல்களின் வீடியோவை இணைத்திருக்கிறேன்.. 

           

       Pattanam thaan Pogalamadi
        
Vandi urundoda
         

     Sirikkintraal intru
        
Sengani Vaay thiranthu
         

      Ennai vittu odippoga
       


Oh Ezhil Raja
         

     Yaarukku Yaar Sontham Enbathu


Kannana Kannanukku
       

    Sange Muzhangu Sange Muzhangu


Paaradi kanne konjam

         

    Vatta Vatta Paarayile ( pazhani )


Shambo Mahadeva ( thiruvilayadal )
       



மொத்த பாடல்களின் தொகுப்பு :


1957enga veetu mahalakshmipattanam than pOgalaamadi Master Venu
1957maayaabazarthayai seiveeraGhantasala
1958panai pidiththaval bhagyasalisOlaikkuLLe kuyilu S. Rajeshwara rao
1958penn kula perumaikangal urangida maranthidum?
1958periya koyilkoLLai koLLum azhaginileK.V. Mahadevan
1958periya koyilvalai veesamma valai veesuK.V. Mahadevan
1958pillai kani amudhuseevi mudichi singarichiK.V. Mahadevan
1958pillai kani amudhuOdugira thanniyila K.V. Mahadevan
1958thirumanamengal nadu andhra naduS.M. subbaiah naidu
1958thirumanammalayalam pugazhS.M. subbaiah naidu
1958thirumanamnaanga pirantha thamizhnaduS.M. subbaiah naidu
1958thirumanamthulli vara porenS.M. subbaiah naidu
1959engal kula devioh! Vandu aadatha K.V. Mahadevan
1959kalaivaananen kannil ambu unduPendyala Nageswara Rao
1959kann thiranthathukann thiranthathu oliT. R. rajagopal
1959kann thiranthathupengalai kandaaleT. R. rajagopal
1959kann thiranthathupudhu vazhvu peruvomeT. R. rajagopal
1959manaiviye manidanin manikkamthathith thathi hanumantha rao
1959penn kulathin ponn vilakkuvanakkam vaanga maapillaiMaster Venu
1959penn kulathin ponn vilakkuvizhi vaasal azhaganaMaster Venu
1959sollu thambi sollupanbodu ennaalume K.V. Mahadevan
1959thaai magalukku kattiya thaalithanjavooru bommaiK.V. Mahadevan
1959ulagam sirikkirathuSanthosham than ini vaazhvilESusarla Dakshinamoorthy
1964naatukkoru nallavanvaNNa malarOdu konjum Susarla Dakshinamoorthy
1959vannakkilivandi urundoda achaaniK.V. Mahadevan
1960paattaaliyin vetrientha nalume naame Master Venu
1960patti vikramathithanOh ezhil rajapendyala
1960thangam manasu thangampongum azhagu poothuK.V. Mahadevan
1960thangam manasu thangamsirikkudhu mullai adhuK.V. Mahadevan
1960veerakkanalkaigaL iraNdil vaLai kulungaK.V. Mahadevan
1960veerakkanalsithiramE sithiramEK.V. Mahadevan
1960yanaippaganchengani vaai thirandhuK.V. Mahadevan
1961kongu natu thangamkarumbaga inikkintraK.V. Mahadevan
1961kongu natu thangamnenjinile enna veeram K.V. Mahadevan
1961kumudhamennai vittu odi poga mudiyumaK.V. Mahadevan
1961maamiyarum oru veettu marumagalevaa entru sonnadhumPendyala Nageswara Rao
1961nallavan vazhvansirikkintal intu sirikkintralT. R. Papa
1961sabaash maapillemaapillai maapillaiK.V. Mahadevan
1961sabaash maapilleMandhil irukkuthu oNNuK.V. Mahadevan
1961sabaash maapilleyaarukku yaar sontham K.V. Mahadevan
1961sri valliainthezhuthanG. Ramanathan
1961sri vallikaalaan kudai pidikkaG. Ramanathan
1961sri vallithaagam thaninthadhuG. Ramanathan
1961thaai illa pillaivaamma vaamma ChinnammaK.V. Mahadevan
1962aalaya maniKannana kannanukku avasaramaM.S. Viswanathan
1962azhagu nilakaattukkuyilkkum K.V. Mahadevan
1962azhagu nilamoongil mara kaatrinilEK.V. Mahadevan
1963aasthikkoru anum asaikkoru pennumennumpazhathaikkande oruK.V. Mahadevan
1963aasthikkoru anum asaikoru pennumnnumpirivu enbadhuK.V. Mahadevan
1963chittoor rani padminichittu sirithadhuG. Ramanathan
1963kalayarasinee iruppathu ingE K.V. Mahadevan
1965iravum pagalumkoothaadum kondayileT. R. Papa
1965kalankarai vilakkamsange muzhanguM.S. Viswanathan
1965pazanivatta vatta paaRaiyilEM.S. Viswanathan, T.K. Ramamurthy
1965thiruvilayadaldeva  mahaDevaK.V. Mahadevan
1965vallavanukku vallavanpaaradi kanne kOnjam veda
1966gowri kalyanamthottathu pol kanavu kandenM.S. Viswanathan
1966naan aanaiyittaalodi vanthu meetpatharku(mehangal)M.S. Viswanathan
1967seethanaadi thudikkudhu K.V. Mahadevan
1969kuzhanthai ullamkudagu naadu ponniS.P. Kodandapani
1969magane nee vaazhgaazhagu mayil kolamenaT. R. Papa
1971paatondru kettenninaippadhu nadappthuC. Ramachandra
1973Raadhahari hari giridariShankar Ganesh
1958mangalya bhagyamkannodu kann  kalanthalG. Ramanathan
1977odi vilayadu papaadikkadhe thiruthadeVijaya Krishnamoorthy
1978varuvan vadivelanPathu malaithiru muthukkumaraniM.S. Viswanathan
1981devi dharisanamsamayapura thaayEM.S. Viswanathan