பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2016

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ...

பி.சுசீலாவின் கின்னஸ் சாதனை :


         கின்னஸ்  புத்தகத்தில் 1980-லேயே இடம் பிடித்திருக்க வேண்டியவர் பி.சுசீலா அம்மையார்.. லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய எண்ணிக்கையை அப்போதே அவர் தாண்டி விட்டார். இதற்கு காரணம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பி.சுசீலாவே பெரும்பாலான பாடல்களை பாடியது தான். லதா அவர்கள் 25,000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி விட்டார் என ஆதாரமில்லாமல் ஒரு செய்தி உலா வந்தது.  அதனால் தான் என்னவோ பி.சுசீலா அவர்கள் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யாமல் இருந்திருக்கிறார். மேலும் நேரமின்மை கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் நீண்ட வருடங்கள் கழித்து இந்த சாதனைக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான்,
       சுசீலா அவர்களை ஓரம் கட்டி விட வேண்டும் என தமிழ் சினிமாவில் நடந்த முயற்சிகள் ( எண்பதுகளுக்கு பின் ) ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்லலாம். ஆனால் ரசிகர் மனதில் அவர் இடம் அப்படியே தான்  இருந்தது. நிறைய சுமாரான பாடகர்களின் வெற்றியை பார்த்த பின் பி.சுசீலாவின் தரமும் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது. ஆனால் தெலுங்கு சினிமா பி.சுசீலாவை அப்படியே தலையில் தூக்கி வைத்தி கொண்டாடியது. எண்பதுகளில் கூட தெலுங்கில் வருடத்துக்கு சராசரியாக 350 பாடல்களுக்கு மேல் பாடி வந்தார். (ஆதாரம் ) தெலுங்கில் அன்றைய முன்னணி  இசை அமைப்பாளர் சக்ரவர்த்தியும், கே.வி.மகாதேவனும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள். அவர்கள் இருவர் இசையிலும் தலா 2000 பாடியிருப்பது கூட ஒரு பெரிய சாதனை எனலாம். மற்ற இசை அமைப்பாளர்களும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள்.

     இதில் ஒரு உண்மை புரிந்தது.. பி.சுசீலாவை ஓரம் கட்டி விட்டோம் என  இறுமாந்த நெஞ்சங்களுக்கு இந்த சாதனை, ஒரு பாடம். என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாதனை மகுடம் ரொம்ப தாமதமாக வந்து  இருக்கிறது. அவ்வளவு தான். தமிழில் சொல்வது போல் “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை” என்று நிருபணம் ஆகி இருக்கிறது.. நான் ஆயிரம் கைகள் என சொல்வது புரிந்தவர்களுக்கு புரியட்டும்..