பின்பற்றுபவர்கள்

சனி, 5 நவம்பர், 2016

எண்பதுகளில் அதிகம் பின்னணி பாடிய பாடகி யார் ?

                  பொதுவாக  திரை இசை சார்ந்த விவாத தளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை "இது தான் உண்மை" என்கிற ரீதியில்  ஆணித்தரமாக பதிவு செய்வதை பார்க்கிறோம். இதில் எது உண்மை எது பொய் என்பது ஒரு புறம் இருக்க தனது அபிமான பாடகர், பாடகியர் மற்றும் இசை அமைப்பாளரை உயர்த்தி பேச எல்லா ஆதாரங்களும் இருப்பது போல பலரும் பல விதமான கணக்குகளையும் கருத்துக்களையும்  வெளியிடுவர். அவற்றுக்கு பதில் எழுத சென்றால் தெருவில் சண்டை போடுவது போல் வெறும் கூச்சல் குழப்பங்களும், ஆபாச அர்ச்சனைகளும் மட்டுமே மிஞ்சும். ஆனால் யாரும் முழு ஆதாரத்துடன் வருவதில்லை. எல்லாமே அனுமானங்கள் தான். சும்மா 30000, 40000 என ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையை சொல்வார்கள்.  ஒரு வருடம் எத்தனை படங்கள் வெளியாகிறது? தமிழில் 100 படங்கள் வெளியானால், அதில் சராசரியாக ஐந்து பாடல்கள் என வைத்துக்கொண்டாலும் 500 பாடல்கள் தான் வெளிவரும். அதில் டூயட்டுகள் 200-250 இருக்கலாம். மற்றவை தனிப்பாடல்கள். இவற்றை பாட பல பாடகர்கள் இருப்பதால் முன்னணியில் இருக்கும் பாடகருக்கு 100 முதல் 150 பாடும் பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைப்பதே அதிகம். பத்து  வருடங்கள் முன்னணியில்  இருப்பவரால் தமிழில் 1500 பாடல்களை அதிக பட்சமாக பாடி இருக்க முடியும். இரண்டு மூன்று மொழிகளில் வெற்றி பெற்றவராக இருந்தாலும் கூட 5000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்க முடியாது. இந்த ஒரு சின்ன லாஜிக் கூட இல்லாமல் வாயில் வந்த எண்ணிக்கைகளை எல்லாம் எழுதி அது தான் உண்மை என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடுவார்கள்.  தன்னுடைய அபிமான பாடகர் / பாடகி குறைந்த  பட்சமாக "சுருதி சுத்தமாக பாடுகிறாரா?" என்று கூட கணிக்க முடியாதவர்கள் கூட சாதனையாளர்கள் பாடும் பாடல்களை விமரிசனம் செய்து பெரிய அறிவாளியாய்  காட்டிக்கொள்வார்கள்.. . 
              பி.சுசீலாவின் கின்னஸ் சாதனைக்காக பல மொழி படங்களின் பாடல்களை தொகுத்த போது மற்றவர்கள் பாடிய பாடல்களையும் ஓரளவு குறித்துக்கொண்டே வந்தேன். பாடல்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது ஆண்  பாடகர்களில் எஸ்.பி.பியை நெருங்கும் அளவுக்கு கூட யாரும் இல்லை என்ற உண்மை புரிந்தது.. பாடகிகளில் பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்பது ஊரறிந்த உண்மை. இப்போது நான் பேசப்போகும் விஷயம் என்னவென்றால் எண்பதுகளில் அதிகம் பாடிய Female Singer யார் என்பதே ..!!! ஆண் பாடகர்களை பொறுத்த வரை சந்தேகம் இன்றி  அது எஸ்.பி.பி தான். பாடகியரில் யாராக இருக்கும்..?!! தமிழ்  ரசிகர்களை கேட்டால் எஸ்.ஜானகி என்பர். கன்னட ரசிகரை கேட்டாலும் அதே பதில் தான். மலையாளத்தில் கூட எஸ்.ஜானகி தான் என்பர்.. அது தான் உண்மையும் கூட. ஆனால் தெலுங்கு ரசிகரை கேட்டால் !!!???? .
        உண்மை நிலை அறிய இவர்கள் எந்தெந்த மொழிகளில் எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்கள் என ஒரு சின்ன ஆராய்ச்சியை நடத்தினேன். ரசிகர்கள் என்ற பெயரில்  தெருச்சண்டை போடும் அரைவேக்காடுகளுக்கு உண்மையை புரிய வைக்க என்னுடைய நேரத்தில் கொஞ்சம் அதிகமாகவே வேஸ்ட் செய்து விட்டேன் என்பது எனக்கு வருத்தமே..
       இனி விஷயத்துக்கு வருவோம்..
முதலில் தமிழ் படங்களில் பாடிய பாடல்களை பார்ப்போம்.. கீழே காணும் லிஸ்ட்.. அந்த லிஸ்டை இங்கே பாருங்கள் ( லிங்க் )

TamilYearPSSJVJSPBMVDKJY
1980121109641285722
1981839675984216
19829575931368634
1983731008612510913
198411913311112012437
19858615611314513050
198681137651679754
19876083481489950
198854574715111055
19893547471407636
81210327491401930367
     இந்த விஷயத்துக்காக  நான் எடுத்துக்கொண்ட படங்களின் எண்ணிக்கை ( 1980 – 133 படங்கள், 1981 – 118 படங்கள்,, 1982 – 135 படங்கள், 1983 – 115 படங்கள்,, 1984  - 149 படங்கள், 1985 – 150 படங்கள், 1986 – 122 படங்கள்,, 1987 – 127 படங்கள், 1988 – 133 படங்கள்,, 1989 – 119 படங்கள் ) . இதில் சில டப்பிங் படங்களும் அடங்கும். சில படங்களின் பாடல்கள் கிடைக்கவில்லை என்பதால் 10 - 15% வரை பாடல்களை ஒவ்வொருவருக்கும் சேர்த்துக்கொள்ளலாம். எப்படி பார்த்தாலும் எண்பதுகளில்  1200 பாடல்களுக்கு மேல் தமிழில் எஸ்.ஜானகி பாடி இருக்க வாய்ப்பில்லை. மற்றவர்களை விட தமிழில் எஸ்.ஜானகி அதிகம் பாடி இருந்தாலும் அவரே முழு அளவில் ஆட்சி செய்தார் என கூற முடியாது. ஏனெனில் பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.சைலஜா என மற்ற பாடகியரும் குறிப்பிட்ட அளவில் பாடிக்கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். சங்கர் கணேஷ், எம்,எஸ்,வி மற்றும் சந்திரபோஸ் இசைகளில் வாணி ஜெயராம் அதிகமாக பாடி இருக்கிறார். இளையராஜா இசையில் எஸ்.ஜானகி அதிகம் பாடி இருக்கிறார். இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகிக்கு அதிகம் ஹிட்ஸ் கிடைத்ததால் இன்று வரை அவருக்கு அப்பாடல்கள் பெயரும் புகழும் வாங்கி கொடுத்திருக்கின்றன.. 1987-இல் இருந்தே சித்ராவுக்கு அதிக பாடல்கள் கிடைத்து இருக்கின்றது. இன்னொரு குறிப்பிட படத்தக்க விஷயம்... 1980 வரை பல படங்களில் வாணி ஜெயராம் பெயருக்கு பின்னால் எஸ்.ஜானகியின் பெயர் டைட்டிலில் வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். 1957-இல் இருந்தே பாடிக்கொண்டிருக்கும் எஸ்.ஜானகியின் பெயர் 74-இல் அறிமுகமான வாணியின் பெயருக்கு பின்னால் வருவது அநியாயம்.. . இதற்கு உதாரணமாக  நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, நீயா?, வண்டி சக்கரம், மரியா மை டார்லிங்,  பாமா ருக்மணி, குப்பத்து ராஜா,  நீல மலர்கள், பேர் சொல்ல ஒரு பிள்ளை, நான் சூட்டிய மலர், எங்கள் வாத்தியார் என பல படங்களை சொல்லலாம். இந்த discrimination -க்கு காலமும் பதில் சொல்லியது. இந்த நிலை எண்பதுகளில் மாறி எஸ்.ஜானகியின் பெயருக்கு பின் வாணியின் பெயர் வர துவங்கியது.. ஒரு சில படங்களில் இந்த மாதிரி பெயர் மேலே கீழே வருவது அவ்வப்போது நடப்பது தான். இசை அமைப்பாளர் அல்லது தயாரிப்பாளர் விருப்பத்தின் படி நடக்கலாம். ஆனால் இப்படி பெரும்பாலான படங்களில் இப்படி நடந்திருப்பது குறிப்பிட படத்தக்கது. இந்த பதிவுக்கு இந்த தகவல் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அன்னக்கிளிக்கு பிறகு எஸ்.ஜானகியை தவிர யாருமே பாடவில்லை என்பது போல் ஒரு மாயையை பரப்பும் சில ரசிகர்களுக்கு 80-வரை அவர் நிலைமை இது தான் என அதாரபூர்வமாக உணர்த்தவே இதை குறிப்பிட்டேன்.

இனி மலையாள பாடல்களை பற்றி பார்ப்போம்.. 
        
Malayalam
Year
P.Susheela
S.Janaki
Vani Jayaram

1980
24
59
63

1981
17
84
50

1982
28
100
58

1983
13
108
52

1984
33
81
47

1985
19
41
48

1986
16
26
22

1987
1
17
15

1988
8
17
14

1989
2
11
9






Total
161
544
378

    மலையாளத்தில் 1984 –க்கு பிறகு சித்ராவின் வரவு காரணமாக எல்லோருக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. மலையாளத்தில் கூட விடுபட்ட பாடல்களுக்காக 10% பாடல்களை எல்லோருக்கும் சேர்த்துக்கொள்ளலாம். எண்பதுகளை பொறுத்த வரை எஸ்.ஜானகி அவர்கள் மலையாளத்தில் அதிக பட்சமாக 600 பாடல்கள் வரை பாடி இருக்கலாம். . மலையாளத்தில் 1978 வரை ஜானகியும் பி.சுசீலாவும் சம அளவிலேயே பாடி இருக்கிறார்கள்.  1978-இல் இருந்து 1984 வரை ஜானகிக்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருந்திருக்கிறது. ஷ்யாம், ஏ.டி.உம்மர் ஆகிய இருவர் இசையிலும் அந்த கால கட்டத்தில் அதிகம் பாடி இருக்கிறார். 85-இல் இருந்து இறங்கு முகம் தான். அதே போல் வாணியும் 1984 வரை நிறைய பாடி இருக்கிறார்.  இந்த தளத்தில் விரிவான அளவில் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது. நம்பகமான இணைய தளம்.

      இனி  கன்னட படங்களைப்பற்றி பார்க்கலாம். கன்னடத்தில் எஸ்,ஜானகியும் வாணி ஜெயராமும் நிறைய பாடி வந்தனர். ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஜானகிக்கு கன்னட மார்க்கட் சீராகவே இருந்திருக்கிறது. ஆனால் கன்னடத்தில் தமிழ், தெலுங்கு அளவுக்கு பட தயாரிப்போ. பட்ஜெட்டோ இல்லாததால் படங்களின் எண்ணிக்கையும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கின்றது. தமிழிலும் தெலுங்கிலும் சராசரியாக 130 படங்கள் வெளிவந்த போது கன்னடத்தில் சராசரியாக 65 படங்களே வெளிவந்திருக்கிறது.  போதாக்குறைக்கு வேறு மொழி படங்களை டப் செய்யவும் கன்னடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அதில் பெண்கள் பாடும் பெரும்பாலான  பாடல்களை பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. அதனால் கன்னடத்தில்; அதிகம் பாடிய பாடகி  என்ற பெருமையும் எஸ்.ஜானகிக்கு கிடைத்தது. வாணி ஜெயராமை பொறுத்த வரை இந்த கால கட்டத்தில் எஸ்.ஜானகிக்கு அடுத்தபடியாக கன்னடத்தில் பாடி வந்திருக்கிறார். கன்னடத்தில் கூட 1987-க்கு பிறகு எஸ்.ஜானகியின் வாய்ப்புகள் பெருமளவில் குறைந்திருப்பதை காணலாம். மஞ்சுளா குருராஜ்,  பி,ஆர்.சாயா, பி.கே.சுமித்ரா, லதா ஹம்சலேகா,  பெங்களூர் லதா,  ரத்னமாலா என சில கன்னட பாடகிகளின் வரவே இதற்கு காரணம். கூடவே சித்ராவும் கன்னட பட உலகில் பாட துவங்கி இருந்தார். 

Kannada
Year
P.Susheela
S.Janaki
Vani Jayaram

1980
22
79
43

1981
15
105
18

1982
12
75
20

1983
10
77
57

1984
44
107
54

1985
28
85
41

1986
13
82
32

1987
13
51
62

1988
25
16
55

1989
2
26
41





Total

184
703
423

       கீழ்கண்ட இணைய தளத்தில் இருந்து படங்களின் பெயர்கள் எடுத்து பல தளங்களில் அதை சரி பார்த்து கிடைத்த எண்ணிக்கை இது.  https://kannadamoviesinfo.wordpress.com/ மற்றும் http://chiloka.com/ தளங்கள் எனக்கு உதவியாக இருந்தன. கிட்டத்தட்ட 665 பட பாடல்களை சரிபார்த்து எடுக்கப்பட்ட லிஸ்ட் இது.  சில படங்களின்  விபரம் கிடைக்காததால் இன்னும் ஒரு 15% பாடல்களை சேர்த்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. அப்படி பார்க்கும் போது எண்பதுகளை பொறுத்த வரை  எஸ்.ஜானகி அவர்கள் 800  பாடல்களுக்கு மேல் பாடி இருக்க  வாய்ப்பு இல்லை. நான் கிடைத்த படங்களின் பாடல்களை வைத்து ரொம்ப தேடி இந்த லிஸ்டை எடுத்தேன். இருந்தாலும் எஸ்.ஜானகி அவர்கள் இதை விட அதிகம் பாடி இருக்கலாமோ என்ற ஒரு ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதை விட அதிகமான பாடல்களின் தொகுப்பு  யாரிடமாவது  இருந்தால் அனுப்பலாம். நான் அப்டேட் செய்து கொள்கிறேன்.


              இனி தெலுங்கு படங்களில் இவர்களின் பங்களிப்பை பார்ப்போம்.

Telugu
Year
P.Susheela
S.Janaki

1980
476
77

1981
275
64

1982
318
58

1983
350
78

1984
359
95

1985
275
113

1986
363
133

1987
311
104

1988
280
136

1989
139
138





Total
3146
1006

      நான் இதற்காக எடுத்துக்கொண்ட தெலுங்கு படங்களின் எண்ணிக்கை 1196. ( 1980 - 130 படங்கள். 1981 -  108 படங்கள், 1982 - 102 படங்கள். 1983 - 112 படங்கள், 1984 - 127 படங்கள். 1985 - 120 படங்கள், 1986 - 125 படங்கள், 1987 - 142 படங்கள், 1988 - 119 படங்கள், 1989 - 109 படங்கள் .. )
         பாடல்களின் எண்ணிக்கையில் தான் எத்தனை வித்தியாசம் !!  இதற்கு காரணம் தெலுங்கு மொழி படங்களின் வித்தியாசமான வரைமுறைகளே.. பெரும்பாலான படங்களில் ஆறு முதல் எட்டு வரை பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன.. அவைகளில் நிறைய டூயட்டுகள் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றை பெரும்பாலும் எஸ்.பி.பி, பி.சுசீலாவே பாடி இருக்கின்றனர்.. NTR –ANR ஆகிய சீனியர் நடிகர்களும், ஷோபன் பாபு, கிருஷ்ணா, கிருஷ்ணா ராஜு, முரளி மோகன். சந்திர மோகன் என எழுபதுகளின் நாயகர்களும் சிரஞ்சீவி, மோகன்பாபு, நாகர்ஜுனா, வெங்கடேஷ் என இளைய தலைமுறை நாயகர்களும் எண்பதுகளில் வெற்றிகரமாக உலா வந்தனர். எல்லோரும் ஹிட் கொடுத்தார்கள். இசை அமைப்பாளர்களில் சக்கரவர்த்தி. கே.வி.எம், சத்யம், ஜே.வி.ராகவுலு, ராஜன் நாகேந்திரா, ரமேஷ் நாயுடு என பலரும் வெற்றிகரமாக இருந்தனர். இவர்கள் இசையில் இந்த மூன்று ஜெனெரேஷன் நடிகர்கள் நடித்த படங்களின் பெரும்பாலான பாடல்களை எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் பாடினர்.  எஸ்.ஜானகியும் கூட பல  படங்களில் பிரதான பாடகியாக விளங்கினார். இளையராஜா இசை அமைத்த படங்கள், ராமோஜி ராவ் தயாரித்த படங்கள், வம்சி இயக்கிய படங்களில் எஸ்.ஜானகி தான் பிரதான பாடகி. அதனால் தான் அவரும் எண்பதுகளில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பாடல்களுக்கு தெலுங்கிலும் குரல் கொடுத்து இருக்கிறார்.  தெலுங்கை பொறுத்த வரை வாணி ஜெயராமின் பங்களிப்பு குறைவாகவே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் தெலுங்கு மொழி படங்கள் மூலமாக இரு முறை தேசீய விருது ( சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ) பெற்று இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்திருக்கிறது. எனவே இவரை லிஸ்டில் இருந்து ஓரம் கட்டி விடலாம். 
      இப்போது   பி.சுசீலா , எஸ்.ஜானகி ஆகிய இருவரில் யார் அதிகம் பாடினார்கள என்ற கேள்வி வருகிறது.. அதற்கு மொத்த பாடல்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம். 
     
மொத்த  பாடல்களின் எண்ணிக்கை... ( இது வரை லிஸ்ட் செய்தது )
Language
P.Susheela
S.Janaki
Tamil
  811
1026
Telugu
3144
1006
Malayalam
  161
554
Kannada
  184
703



Total
4380
3264


Add 15% for missing songs for S.Janaki




    எப்படி பார்த்தாலும் எஸ்.ஜானகி அவர்கள் 1980 முதல் 1989 வரையான கால கட்டத்தில் 4000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்க வாய்ப்பு இல்லை.  மொத்தத்தில் பார்த்தால் எஸ்.ஜானகியை விட பி.சுசீலா அதிகமாக பாடி இருப்பது தெரிகிறது. தமிழில் தனக்கு எதிராக நடந்த சதியை புரிந்து கொண்ட பி.சுசீலா அவர்கள், தெலுங்கில் முழு கவனத்தையும் செலுத்தி நிறைய பாடல்களை பாடி தன்னை முதல் இடத்திலேயே நிலை நிறுத்திக்கொண்டார் என நான் நினைக்கிறேன். இதற்காக பி.சுசீலா ரசிகர்கள் சக்ரவர்த்தி அவர்களுக்கும், கே.வி.மகாதேவன் அவர்களுக்கும் எப்போதும் நன்றி சொல்லலாம். என்.ஜானகி அவர்களின் இணைய தளத்தில் பார்த்த போது அவர் இளையராஜாவுடன் பணி ஆற்றிய பாடல்கள் கிட்டத்தட்ட 1200 ஐ நெருங்கி இருந்தது. ஆனால் சக்ரவர்த்தி அவர்கள் இசையில் பி.சுசீலா 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். கே.வி.மகாதேவன் அவரகள் இசையிலும் 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். . 

  • ·         இதில் பக்தி பாடல்களை நான் சேர்க்கவில்லை. இந்த கால கட்டத்தில் நிறைய பக்தி பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார். எஸ்.ஜானகி கூட பல  ஆல்பங்கள் பாடி இருக்கிறார். ஆனால் பி.சுசீலா அளவுக்கு பாடி இருப்பாரா என்பது சந்தேகம்.
  • ·         நிறைய டப்பிங் படங்கள் வெளி வந்தன.. ஒன்றிரண்டு தவிர வேறு டப்பிங்  படங்களின் பாடல்கள் கிடைக்கவில்லை. தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட படங்களில் பி.சுசீலாவுக்கு நிறைய பாடல்கள் இருந்தன.
  • ·         பக்தி பாடல்களையும் டப்பிங் பாடல்களையும் சேர்த்தால் பி.சுசீலா எண்பதுகளில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டலாம் என்பது என் யூகம்.
  • ·         வேறு மொழிகளில் கூட பி.சுசீலா, எஸ்.ஜானகி இருவரும் பாடி இருக்கிறார்கள்.. குறிப்பாக ஹிந்தியில் எஸ்.ஜானகி குறிப்பிடத்தக்க அளவில் பாடி இருக்கிறார். தவிர ஒரியா, துளு போன்ற மொழிகளிலும் அவர்கள் பங்களிப்பு இருந்திருக்கின்றது.
நான் நிறைய நேரம் எடுத்து, நிறைய படங்களை youtube-இல் பார்த்து, பல இணைய தளங்களையும் அலசி இந்த தகவல்களை சேகரித்தேன். எனக்கு தெரியாத தகவல்கள் இருந்தாலோ அல்லது தவறான தகவலாக இருந்தாலோ அதற்கு அனுமானமாக பதில் அளிக்காமல் ஆதாரத்துடன் பதில் அளித்தால் எந்த பதிலாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.. .