பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

பி.சுசீலா - பக்தி பாடல்கள் - வரிசை -8 -அன்னமைய்யா பாடலகள்

அன்னமைய்யா பாடல்கள் 


                 அன்னமைய்யா பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவில் வாழ்ந்த ஒரு மறைஞானி.  இவர் திருப்பதி வெங்கடாச்சலபதியை பற்றி  ஆயிரக்கணக்கான பாடல்களை தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதி இருக்கிறார்.  இப்பாடல்கள் ஆந்திராவில் மிக பிரபலம்.  சில   வருடங்களுக்கு முன் இவரது வாழ்க்கை கூட திரைப்படமாக வந்தது.
                 பி.சுசீலா அவர்கள் திரைப்படங்களிலும், தனி தொகுப்புகளிலும் நிறைய அன்னமய்யா கீர்த்தனைகளை பாடி இருக்கிறார். தனிப்பாடல்களின் தொகுப்பு கீழே.

adaro padaro g.nageshwara naidu
amaranganalade g.nageshwara naidu
aragimpavo g.nageshwara naidu
bhogi sayanamu g.nageshwara naidu
chudachuda g.nageshwara naidu
muguru velupulaku g.nageshwara naidu
nanadikkula g.nageshwara naidu
vanitaku g.nageshwara naidu
joachutananda purushotham sai
kondalalo purushothama sai
rama dayapaara seema nedunuri krishnamurthy
ramachanrudithadu nedunuri krishnamurthy
chakkani sarasapu ramesh naidu
hari yavathara mitadu ramesh naidu
kanarate pencharate ramesh naidu
pasidi akshintalive ramesh naidu
pillamgrovi ramesh naidu
sharanu veduga unknown
vicheyavamma vennela unknown
adivo alladivo nageshwara naidu
pidikitta talambralu purushothama sai
sri matvadeeya purushothama sai
choochi valachi 
nidirinchi paala
bhoogololulagoluve
ksheerabdi kanyakaku Ramesh Naidu
choodaramma g.nageshwara naidu
navarasamuladhi g.nageshwara naidu
annamayya paata unknown
kondameeda koluvunna unknown
he manigopaludu Ramesh Naidu
adi venkatachalamathilonnathavu Ramesh Naidu
alamelu manganu g.nageshwara naidu
anganuku neeve g.nageshwara naidu
o kamuneeya kanjamuki g.nageshwara naidu
chaalu chaalu nee jaajara g.nageshwara naidu
eththare aarathulu g.nageshwara naidu
gandhamu poosevela g.nageshwara naidu
enni raasulu ooniki g.nageshwara naidu
mangalamammaku g.nageshwara naidu
mikkili meludhi g.nageshwara naidu
nela moodu sobanaalu g.nageshwara naidu
paluku theniyalanu g.nageshwara naidu
vicheyavamma g.nageshwara naidu
nallani meni g.nageshwara naidu
sobhaname g.nageshwara naidu
poobonula koluve g.nageshwara naidu
namo namo narayanathi shobha raju
jo jo mukunda shobha raju
rama govinda shobha raju
rave paramananda shobha raju
raavekodala nageshwara naidu
allonerelloallonerllo nageshwara naidu
yedukondama venkatagiri nageshwara naidu
adi venkatachala mathilonnathvu ramesh naidu
annavaram enthati Y.N.Sharma
kudamini paalinche Y.N.Sharma
melukondi melukondi Y.N.Sharma
sathakodi devuniki Y.N.Sharma
thadisina kanule chepputhayi Y.N.Sharma
velathatineni Y.N.Sharma
vinnara thelukkunnara  Y.N.Sharma
annavaramulona n surya prakash
kartheeka punnami n surya prakash
pampa teerana n surya prakash
vasanta vennala n surya prakash
veera venkata n surya prakash
ammara Ramesh Naidu
podagantimayya Ramesh Naidu
yogyathaleni Ramesh Naidu
kolani dopariki ?
chinni sisuvu ?
lalenchu ?


வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய பாடல்கள்

                                                                   

             பி.சுசீலா அறிமுகமாகி நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பின்னணிப்பாடகியாக அறிமுகமானார் எஸ்.ஜானகி. ஏ.வி,எம் இல் பி.சுசீலாவின் ஒப்பந்தம் முடிந்த பின் எஸ்,ஜானகியை ஏ.வி.எம் பாடகியாக ஒப்பந்தம் செய்தனர். பி.சுசீலா அவர்கள் 1950-இல் இருந்தே பாடினாலும், படிப்படியாகத்தான் உயர்ந்தார். அவரது திறமையை ஏ.வி.எம் அவர்கள் அங்கீகரித்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு வந்தது. ஜி.ராமநாதன், எஸ்.ராஜேஸ்வர ராவ், எம்.எஸ்.வி, கே,வி,எம் போன்றோர் இசையில் பாடவே சில வருடங்கள் ஆயிற்று. சாவித்திரி, பத்மினி போன்ற பெரிய நடிகைகளுக்கு பின்னணி பாடவே மூன்று  வருடங்கள் ஆயிற்று. 1955-இல் இருந்து பி.சுசீலாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தது. 
          1957-இல் அறிமுகமான, எஸ்.ஜானகிக்கு அறிமுகம் அமர்க்களமாகவே இருந்தது. ஏ.வி.எம் பாடகி என்பதாலேயே அறிமுகமான வருடத்திலேயே பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதே வருடத்திலேயே தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் பாடினார். பெரிய பேனர், பெரிய  இசை அமைப்பாளர்கள், பெரிய கதாநாயகிகள் இடம் பெற்ற படங்களில் பாடினார். பெரிய அளவில வருவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அதிகம் நீடிக்கவில்லை.                    அக்கால கட்டத்தில் கதாநாயகிகளுக்கு ஹெவியான கதாபாத்திரங்கள் அமைந்தன. அதனால் பாடல்களில் வெயிட்டான குரல்கள் தேவைப்பட்டன. கர்நாடக இசை சார்ந்து அமைக்கப்பட்ட பாடல்களை பாடும் குரலில் weight இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எஸ்,ஜானகியின் குரல் ரொம்ப மெல்லியதாக இருந்ததால், பல கதாநாயகிகளின் பாத்திரங்களுக்கு பொருந்தவில்லை. பாடிய பாடல்கள் அதிக அளவில் பிரபலம் ஆகவில்லை. வெற்றி பெற்ற படங்களும் குறைவு தான். ஒரு வருடத்திலேயே ஏ.வி.எம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. இப்படி பல காரணங்களால் பாடும் வாய்ப்பும் குறைந்தது. இருந்தாலும், இசை அமைப்பாளர் டி..சலபதி ராவ்,  ஜி.கே.வெங்கடேஷ், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் வாய்ப்பு அளித்து வந்ததால் ஓரளவு தாக்குப்பிடித்து வந்தார். ( பின்னாளில் கூட சலபதி ராவிடம் உதவியாளராக இருந்த சத்யம், வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த இளையராஜா அவருடைய முன்னேற்றத்தில் பங்கேற்றனர்.) மலையாளத்தில் எம்.எஸ்.பாபுராஜ் அவர்கள் இசையில் பாடிய பார்கவி நிலையம் (1964)  பாடல்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாபுராஜின் இசையிலும் மற்றவர் இசையிலும்  மலையாளத்தில் பாடி வந்தார். அதே நேரத்தில் அங்கு முன்னணியில் இருந்த தேவராஜன் பி.சுசீலாவையே பாட வைத்தார் . கன்னடத்தில் விஜயபாஸ்கர் சுசீலாவுக்கும், ஜி,கே,வெங்கடேஷ்  ஜானகிக்கும் வாய்ப்பு அளித்து வந்தார்கள்.
     எஸ்.ஜானகி அவர்களுக்கு சில தனித்துவங்கள் உண்டு. குழந்தைக்குரலில் பாடுவதில் எஸ்.ராஜேஸ்வரி பெயர் பெற்றவர். அவரைப்போலவே எஸ்,ஜானகியும் குழந்தைக்குரலில் பாடி பெயர் பெற்றவர். முக்கல் முனகல் பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கென ஒரு தனித்துவம் உண்டு. எண்பதுகளில் அந்த மாதிரி பாடல்களில் எஸ்.ஜானகியும் வெற்றி பெற்றார். தவிர சிங்காரவேலனே போல செமி கிளாசிகல் பாடல்களிலும், "மச்சான பாத்தீங்களா" போல கிராமியப்பாடல்களிலும் அவரால் மிளிர முடிந்தது. எல்லா வகை பாடல்களும் அவர் குரலில் வெளி வந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி இசை சார்ந்த பாடல்களுக்கு அவர் குரல் பொருந்தும் என கேள்விப்பட்டதுண்டு.
    பி.சுசீலாவையும் ஜானகியையும் ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் அறிமுகமாகி நீண்ட ஆண்டுகள்  இத்துறையில் பணி ஆற்றியவர்கள் என்பதை தவிர வேறு ஒற்றுமை இல்லை. இருவரின் குரலின் தன்மையும் வெவ்வேறானவை. குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், 80-களில் எஸ்,ஜானகி தமிழ், கன்னடத்தில் முதன்மை இடத்தில் அமர்ந்த போதும்,  பி.சுசீலா அவருக்கு இணையாக பாடிக்கொண்டு தான் இருந்தார். ( ஆதாரம் ). பி.சுசீலா தெலுங்கில் முதன்மை இடத்தில் இருந்தார். தொண்ணூறுகளில் இருவரின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்று தான் (proof) . தமிழில் சில குறிப்பிடத்தக்க படங்களில் எஸ்.ஜானகி பாடினார். ஆனால், பி.சுசீலாவுக்கு திரைப்படங்கள் தவிர நிறைய பக்திப்பாடல்கள் பாடும் வாய்ப்புகளும் வந்தன. (proof1, proof2 ). ஐம்பதுகளின் பின்பாதி,. அறுபது. மற்றும் எழுபதுகளில் பி.சுசீலாவின் கொடி பறந்தது. அப்போதைய பாடல்களுக்கு வேண்டிய குரல் தரம், இனிமை, இளமை, வார்த்தை சுத்தம், சுருதி சுத்தம், எவ்வகை பாடலானும் அதற்கு உயிர் கொடுப்பது, எந்த நடிகைக்கானாலும் பொருந்துகிற குரல் என பல்வகை ப்ளஸ் பாயிண்ட்ஸ்  இருந்ததால் இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகைகள் பி.சுசீலாவையே தங்கள் சாயிஸாக கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. இசை அமைப்பாளர்கள் தங்கள் மனதில் நினைத்ததை இசைக்கருவி மூலமாக இசைத்து விடலாம். அதை அப்படியே குரலில் கொண்டு வருவது சிலருக்கே சாத்தியம் ஆகும். அப்படி ஒரு வரமாய் கிடைத்தது பி.சுசீலா அவர்களின் குரல். அதனாலே எல்லா தென்னக மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. காலையில் பெண்டியாலா இசையில் கடினமான சங்கதிகளை போட்டு பாட வேண்டி இருக்கும். மதியம் ராஜேஸ்வர ராவ் இசையில் இன்னொரு கஷ்டமான பாடலை பாடி விட்டு, எம்.எஸ்.வி இசையில் பாட சென்றால். அவர் முழு வால்யுமில் பாட வைத்து ரெகார்ட் செய்வார். மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார். ஒரு பாடலில் ஏ.எம்.ராஜாவின் மென்மையான குரலுக்கு ஈடு கொடுத்தால், அடுத்த ரிக்கார்டிங்கில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு நாளும். தூங்க மட்டுமே நேரம் கிடைக்கும். அப்போது ஜானகிக்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்தன. எப்போதாவது தான் சொல்லிக்கொள்ளும் படியாக பாடல்கள் அமைந்தன. இயக்குனர் ஸ்ரீதர் கூட சில படங்களுக்கு பின் மீண்டும் சுசீலாவையே பாட வைத்தார். மலையாளமும், கன்னடமும் ஜானகிக்கு கொஞ்சம் கை கொடுத்தன. சின்ன பட்ஜெட் படங்களும் கொஞ்சம் உதவின. சினிமாவில், பத்து முதல் பதினைந்து வருடங்கள் முன்னணியில் இருந்தவரையும், முப்பத்தைந்து  வருடங்கள் முன்னணியில் இருந்தவரையும் எப்படி ஒப்பிடுவது? அதிலும் 15 வருடங்கள் பி.சுசீலாவுக்கு போட்டியே இல்லாத நிலை, அதனால் பி.சுசீலாவின் சாதனைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சாதித்த பாடகிகள் தென்னிந்தியாவில் வரவில்லை என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. 
         அதே போல் ஒருவரால் இன்னொருவர் மார்க்கெட் போயிற்று என்று சொல்வதை கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக பி.சுசீலாவுக்கு இன்னொருவர் மார்க்கட் பற்றி எல்லாம் யோசிக்க கூட முடியாத அளவுக்கு வாய்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன. பெரும்பாலான வேளைகளில் அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஏன்...? சித்தி பட செட், அவருக்காக சில மாதங்கள் கூட காத்திருந்தது. 1955-இல் இருந்து  1990- வரை இடை விடாத ரிக்கார்டிங் இருந்தது. குறிப்பாக 80-களில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதனால் பாடகர்களின் தேவை அதிகரித்தது. அதனால் பி.சுசீலா, எஸ்,ஜானகி, வாணி  ஜெயராம் என மூவருக்கும் வாய்ப்புகள் குறையாமல் இருந்தன. மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளிலும் இவர்களே பாடி வந்தார்கள். தமிழில் எஸ்,ஜானகி முதல் இடத்தில் இருந்தார். தெலுங்கில் பி.சுசீலா முதல் இடத்தில் இருந்தார். வாணி ஜெயராம், ஜானகி இருவரும் கன்னட பாடல்களை பகிர்ந்து கொண்டார்கள். 1985 வரை மலையாளத்தில் ஜானகி, வாணி, பி,சுசீலா மூவரும் பாடிக்கொண்டு இருந்தார்கள். யாரும் யார் வாய்ப்பையும் பறிக்க வேண்டிய நிலையில் இருக்கவில்லை. பாடல்கள் எளிமையாக்கப்பட்டதால் எந்த பாடலையும் யார் வேண்டுமானாலும் பாடி விடலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால் இவர் இல்லையேல் அவர், அவர் இல்லையேல் இன்னொரு பாடகி என்ற நிலையில் இருந்தது திரை இசை உலகம். Even in 80's P.Susheela sang more songs than the other Singers of South. ( Proof )
       
    பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் இணைந்து தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் பாடி இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் கூட பாடி இருக்கலாம். “கௌசல்யா சுப்ரஜா” பாடலை இருவரும் பாடி கேட்டிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால், ஒரு வலைத்தளத்தில் இருவரும் சேர்ந்து பாடி இருக்கிறார்களா என்ற கேள்வி  வந்த போது 10-15 பாடல்களை தான் குறிப்பிட முடிந்தது. இப்போது என்னால் கிட்டத்தட்ட 170  பாடல்களுக்கு மேல் சேர்க்க முடிந்திருப்பது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.

                    
        80-களின் மத்தியில் “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தை ரீ-ரிலீஸ் செய்த போது நெல்லையில் ஒரு தியேட்டரில் அந்த படத்தை பார்த்தேன். அதில் வரும் “பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி” பாடல் தான் இவர்கள் இணைந்து பாடியதில், நான் கேட்ட முதல் பாடல். பாடலை ஆரம்பித்த ஜானகியை பாராட்ட தோன்றியது. கதாநாயகி பாட முடியாமல் விக்கி நிற்க, அவர் சகோதரி உதவி செய்ய வேண்டி பாட வருவார். மீரா.. மீரா... என பாட முடியாமல் திக்க.. அப்போது...  “மீரா பாடிய பாடலை கேட்க கண்ணன் வரவில்லையோ” என பி.சுசீலா துவங்குவார். பட்டென்று பாடலில் அப்படி ஓர் பளிச் !!! குரலில், உச்சரிப்பில் தெரிந்த தெளிவில், பாடலின் தரம் இன்னும் ஒரு படி அதிகரித்ததாக தோன்றியது. தியேட்டரில் கேட்கும் போது  அந்த வித்தியாசம் நன்றாக தெரிந்தது. நல்ல தரமான பாடகிகளிடம் பாடும் போது வரும் போட்டி , பாடலை ஒரு படி அழகாக்கும் என்று உணர்ந்து கொண்டேன். 

      தொடர்ந்து நான் கேட்ட பாடல் , “அடிமைப்பெண்” படத்தில் வரும் “காலத்தை வென்றவன் நீ” பாடல். அப்பாடலிலும் இதே மாயம் தான். தனக்கே உரிய ஸ்டைலில் எஸ்.ஜானகி பல்லவியையும், ஒரு சரணத்தையும் அழகாக பாடுவார். பி.சுசீலா பாட ஆரம்பித்தவுடன் பாடலுக்கு புது எனர்ஜி கிடைத்து விடும். அதுவும் கடைசி ஹம்மிங் வரும் போது என்ன ஒரு breath control !! எஸ்.ஜானகியும் போட்டி போட்டு பாடி இருப்பார்.  இருவரின் குரலும், ஜெயலலிதா மற்றும்  ஜோதி லக்ஷ்மியின் நடனமும் மிக நன்றாக இருக்கும். 
                           (kunguma pottu kulunguthadi)
          அதைப்போல் தான் “குங்குமப்பொட்டு குலுங்குதடி” (இது சத்தியம்) பாடலும். இருவரும் கலக்கி இருப்பார்கள். இப்படி பல பாடல்கள் இவர்கள் இருவரின் குரலிலும் வளம் பெற்றிருக்கின்றன.  இவர்கள் பாடிய பாடல்களில் சிலவற்றை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். (video attached)

 Anname surname (Deivathin deivam)
                                                             
eno eno ennalumilla  (mangayar ullam mangatha selvam - Telugu version is “Swarna manjari” )


                                             (eno eno ennalummilla )   
                                                    (mangale medai)
raasa kireeda ika chaalu  ( Sangeetha lakshmi - Telugu)                             
karuninchave thulasi maatha  (sri Krishna tulabaram -Telugu)
                                             (karuninchave tulasi matha)   
irulilum oli tharum , andani surasundara ( bhaktha prahlada – movie dubbed in tamil. Kannada and hindi )
                                         (Irulilum oli tharum )
sari leru neekkevvaru (kanchu kota - Telugu)
nee nadeva haadiyalli ( bangarada hoovu - kananda)
                                            (nee nadeva haadiyalli)
thirupathi girivasa  ( Sri Krishna devaraya  - kannada)
                                 (thirupathi girivasa )

nallavade  (dasara bullodu) - Telugu

                                      
tulli tulli  (manchi kutumbam) ( “thulli thulli vilaiyaada” in tamil)
                                                   ( Tulli Tulli tholakari )
venuganamu vinipinchane (siri sampadhalu –telugu)
                                       (venuganamu vinipinchane)
ponnoonjale (unniyarcha  -malayalam)
naanam kunungikale (thacholi ambu) -malayalam

                                             
en kadhai than un kadhaiyum (bandha paasam)

                                       


aaranikuma ee deepam (karpoora deepam – “kaalam kaalamaai penthaane” in tamil
                                
tham thana tham thana (kotha jeevithalu) – “thanthana thanthana” in tamil

isai arasi ennalum (thaay mookambikai)
                                        
    
Collection of Songs
1959
Telugu
mahishasura mardini
1959
Telugu
mahishasura mardini
1959
Telugu
srivenkateswara mahatyam
1959
Tamil
kann thiranthathu
1960
Telugu
pelli kanuka
1960
Telugu
rama sundari
1960
Telugu
redukadevi mahatyam
1960
Telugu
runanubandham
1960
Telugu
sahasra chirai setha apoorva sinthamani
1960
Tamil
adutha veetu penn
1960
Kannada
Asha sundari
1961
Telugu
bhikari raamudu
1961
Telugu
stree hrudayam
1961
Telugu
vagdanam
1961
Malayalam
unniyarcha
1961
Malayalam
unniyarcha
1961
Malayalam
unniyarcha
1961
Kannada
kantheredu nodu
edavidare naakurulu
1961
Hindi
Mera suhag
1962
Telugu
bheeshma
1962
Telugu
chitti thammudu
1962
Telugu
swarna manjari
1962
Tamil
bandha paasam
1962
Tamil
deivathin theivam
1962
Tamil
mangayar ullam mangadha selvam
1962
Tamil
mangayar ullam mangadha selvam
1962
Tamil
mangayar ullam mangadha selvam
1963
Telugu
sirisampadhalu
1963
Telugu
Naranthakudu
1963
Tamil
idhu saththiyam
1964
Telugu
aggipidugu
1964
Tamil
thozhilali
1964
Tamil
maayamani
1964
Malayalam
aal thaRa
1964
Hindi
chakravarhy vikramaditya
1964
Hindi
chakravarhy vikramaditya
1965
Telugu
dorikithe dongalu
1965
Telugu
sri simhachala kshetra mahima
1965
Telugu
veerabhimanyu
1966
Telugu
mohini basmasura
1966
Telugu
sangeetha lakshmi
1966
Telugu
srikrishnatulabaram
1966
Telugu
bhoolokamlo yamalokam
1966
Kannada
mantralaya mahime
aabharanada
1967
Telugu
bhaktha prahaladha
1967
Telugu
devune gelisinna manavadu
1967
Telugu
kanchu kota
1967
Telugu
kanchu kota
1967
Telugu
manchi kutumbam
1967
Telugu
premalo pramadam
1967
Telugu
manchi kutumbam
1967
Telugu
bhaktha prahaladha
1967
Tamil
bhaktha prahaladha
1967
Malayalam
aval
1967
Kannada
Bangarada Hoovu
1967
Kannada
Bhaktha prahlada
1967
Kannada
Devara gedda manava
1968
Telugu
kalasina manasulu
1968
Telugu
panthaalu pattimpulu
1968
Telugu
panthaalu pattimpulu
1968
Telugu
panthaalu pattimpulu
1968
Telugu
sriramakatha
1968
Telugu
panthaalu pattimpulu
1968
Kannada
bhagya devathe
1969
Telugu
kondaveeti simham(D)
1969
Telugu
ukku piduku
1969
Telugu
gopaludu bhoopaludu
1969
Telugu
sri rama katha
sarvakala saramu natyamu
1969
Tamil
adimai penn
1969
Tamil
kuzhanthai ullam
1969
Kannada
chaduranga
1970
Telugu
dasara bullodu
1970
Telugu
pacchani samsaram
1971
Telugu
andham kosam pandhem
1971
Telugu
vikramarka vijayamu
1971
Tamil
kulama gunama
1971
Tamil
kulama gunama
1972
Telugu
koduku kodalu
1973
Telugu
raamude devudu
1973
Telugu
vaade veedu
1973
Tamil
sollaththan ninikkiren
1974
Telugu
mangalya bhagyam
1974
Telugu
vandemataram
1974
Telugu
bantrothu bharya
1974
Kannada
SriKrishna Devarya
1975
Telugu
maa nanna nirdoshi
1975
Telugu
ammayulu jagratha
1975
Telugu
ramayya tandri
1975
Telugu
raktha sambandhalu
1975
Telugu
raktha sambandhalu
1975
Kannada
Kalla Kulla
1975
Kannada
kalla kulla
1976
Tamil
unarchigal
1977
Telugu
allari bullodu
1977
Telugu
dhanaveerasurakarna
1977
Telugu
dhanaveerasurakarna
1977
Telugu
janma janmala bandham
1977
Telugu
khaidi kalidasu
1977
Telugu
naalaaga endaro
1977
Telugu
mugguru moorkkurallu
1977
Telugu
adavi ramudu
1977
Telugu
adavi ramudu
1977
Telugu
adavi ramudu
1977
Telugu
khaidi kalidasu
1977
Tamil
engal thalaivan -adavi ramudu
1977
Tamil
perumaikkuriyaval
1977
Kannada
kittu puttu
1978
Telugu
katakatala rudraiah
1978
Telugu
katakatala rudraiah
1978
Telugu
raajaaputra rahasyam
1978
Telugu
vichitra jeevitham
1978
Tamil
kai pidithaval
1978
Tamil
mariyamman thiruvizha
1978
Tamil
thirukkalyanam
1978
Malayalam
kaithappoo
1978
Malayalam
kaithappoo
1978
Malayalam
ThachOLi ambu
1978
Kannada
balina guri
1978
Kannada
Singapuralli raja kulla
1979
Telugu
karthika deepam
1979
Telugu
oka deepam veligindhi
1979
Telugu
bhuvaneshwari
Naa hridayama naa udaya
1979
Tamil
naan nantri solven
1979
Tamil
pattakathi bhairavan
1979
Tamil
pattakathi bhairavan
1980
Telugu
gandaragolam
1980
Telugu
kotha jeevithalu
1980
Telugu
maha sakthi
1980
Telugu
menatha koothuru
1980
Telugu
nayukudu vinayakudu
1980
Telugu
ragilina paga
1980
Telugu
thathayya premaleelalu
1980
Telugu
kaali
1980
Tamil
kannil theriyum kathaigal
1980
Kannada
Vajrada Jalapada
1980
Kannada
Huliya haalina mevu
1981
Telugu
prema mandiram
1981
Tamil
baala nagamma
1981
Kannada
Guru Shisyaru
1982
Telugu
bangaru kanuka
1982
Telugu
patnam vachina pativrathalu
Nookalamma cheputhondhi
1982
Tamil
thaai moogambigai
1982
Malayalam
john jaffer janardhan
1983
Telugu
ee pillaku pellavuthunda
1983
Telugu
punyamkodhi purushudu
1983
Telugu
sardar
1983
Telugu
dharmatmudu
1983
Tamil
muthu engal sothu
1983
Kannada
bhayankara bhasmasura
1983
Kannada
Chakravyuha
1984
Telugu
iddaru dongalu
1984
Telugu
inti guttu
1984
Telugu
pralaya simham
1984
Telugu
bhola sankarudu
1984
Telugu
maha sangramam
1984
Kannada
vigneswarana vahana
vigneshwaranu
1985
Telugu
sravana sandhya
1985
Tamil
karpoora deepam
1986
Telugu
bandham
1986
Telugu
kaliyuga krishnudu
1986
Telugu
patnam pilla palletturi chinnodu
1986
Telugu
kondaveeti raja
1986
Telugu
apoorva sahodarulu
1986
Telugu
kondaveeti raja
1986
Tamil
pookalai parikkathergal
1988
Telugu
bharya bharthalu(new)
1988
Telugu
chattamtho chadarangam
1988
Telugu
chattamtho chadarangam
1988
Telugu
bharya bharthalu(new)
1988
Kannada
moovthonthu december
1989
Telugu
balagopaludu
1991
Tamil
pondati sonnaketukanum
0
Singhaleese
Ahinsaka Prayoogaya


பி.சுசீலா ஒரு மொழியில் பாடிய பாடல்களை எஸ்.ஜானகி வேறு ஒரு மொழியில் பாடி இருக்கிறார். அதைப்போல் ஜானகி பாடிய பாடல்களை சுசீலாவும் வேறு மொழியில் பாடி இருக்கிறார். சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறேன். 


         P.SUSHEELA          S.JANAKI
inbam pongum vennila impu sompu vennela
anjatha singam en kaalai andala basavanna
chigurakula ooyalalo intha manradhil
poovuvale vira   ponnenben siru
mrogindi veena then sindhuthe vaanam
rasave unna jabilli kosam
choosave andala rojavai thalattum thendral
roju muddu roja ontru mutham
galagala navvula kana kana kanavena
nelavanagi dinam oonjal manam
aakasame paade thalattuthe vaanam
radha radha raa radha raatha radha nee enge
ninna rathiri yamma  nethu rathiri yamma
idhi teeyani teerani nagu endhide
megham chiru jallai vaanam niram maarum
naa puvvai puvvai then poove poove vaa
laali naa paapa velli thene thenpaandi meene
oho korinka uyire  uyire ontru 
kalala veedhilo kadhal vanile
chinni chinni kanna chinnanchiru kiliye
thalapula ragam anthi varum neram
gadasari naa maava velakku vacha nerathile
raavoye naa mogude naan pudikkum 
kalla thoravaro kanan thorakkanum
jinjanaku janaku jinjanaku janaku
aada janmaku chinna thaayaval
jola paata paadi ippadi or thalattu
nee muditha mallige (kannada) ye divilo virisena(telugu)

நன்றி ...