பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 மார்ச், 2014

பெண்டியாலா இசையில் பி.சுசீலா P.Susheela Sings for Pendyala

                                                                           

              இன்ப லோக ஜோதி ரூபம் போலே, நீலவான வீதி மேலே”, என்றொரு இனிமையான பாடலை நினைவிருக்கிறதா? மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே, “ஓ எழில் ராஜா” போன்ற மெலடிகளை கேட்டிருக்கிறீர்களா? இதற்கெல்லாம் சொந்தக்காரர் தான் மதிப்புக்குரிய இசை அமைப்பாளர் “பெண்டியாலா நாகேஸ்வர ராவ்” அவர்கள். பி.சுசீலா என்னும் குயிலை, “பெற்ற தாய்” திரைப்படத்தின் மூலமாக திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே நடிகர் “நாகேஸ்வர ராவ்” பிரபலமாக இருந்ததால், பெண்டியாலா என்னும் பிறந்த ஊரின் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.. அப்பெயரிலேயே அவர் பின்னாளில் அறியப்பட்டார். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கும், பக்திப்பாடல்களுக்கும், இசை அமைத்து இருக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார்.
அவரின் தனித்தன்மையாக குறிப்பிடுவது யாதெனில், மிக கடினமான சங்கதிகளை போட்டு, அவர் கம்போஸ் செய்யும் பாடல்கள் தான். எந்த சங்கதிகளையும் அனாயாசமாக பாடும் கண்டசாலா போன்றோரே ரிக்கார்டிங் முடிவதற்குள் திணறி விடுவார்களாம். பாடி முடித்த பின், அந்த பாடல்களால், பாடகர்களுக்கு பெரும் திருப்தியும், நற்பெயரும் கிடைத்ததோடு சாகாவரம் பெற்ற பாடல்களும் கிடைத்தது. பாடல்களில் ஒரு நல்ல தரம் இருக்கும் படி இசை அமைத்த அவர் போதிய அளவு புகழப்படாத ஒரு நல்ல இசைக்கலைஞர். ஒரு பேச்சுக்காக இதை சொல்லவில்லை. அவர் இசை அமைத்த பல பாடல்களை கேட்ட போது அவர் மேல் ஒரு பெரிய மரியாதை ஏற்பட்டது.
Yamuna theeramuna (jayabheri)
nee daya rada ee (atta okinti kodale)
jaya Jaya Sharada,  (Mahakavi kalidasu),
Neera jaala galada, oho mohana roopa (sri Krishna tulabaram),
 kalagantino swamy (daana veera soora karna)
Ninnu choosinandaga (bhaktha sabari)… 
     இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். கிளாசிகல் ஆகட்டும், மெல்லிசை ஆகட்டும் அதில் ஒரு தனித்துவமும். ஜீவனும் இருக்கிறது இவர் இசையில்.
     பெண்டியாலா அவர்கள் 1948-இல் “துரோகி” என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர். நான்கைந்து படங்கள் இசை அமைத்த பின் கிடைத்த வாய்ப்பு தான் “கன்னதல்லி” பட வாய்ப்பு. (தமிழில் பெற்ற தாய்). அப்படத்தில் இசைக்குயில் பி.சுசீலாவை அறிமுகம் செய்தார். 1952-ஆம் வருடம் “பெற்ற தாய்” பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பி.சுசீலா அவர்களை வைத்து முதலில் ஒரு ஸ்லோகமும், அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஏ.எம்.ராஜாவுடன் ஒரு டூயட்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. “எந்துக்கு பிலிச்சாவெந்துக்கு” என தெலுங்கிலும், “ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு” என தமிழிலும் துவங்கும் அந்த பாடல்.   
      தான் அறிமுகப்படுத்திய பாடகியின் தரத்தில் அவருக்கு நிறைய மன நிறைவு இருந்திருக்க வேண்டும். அதனால் தான் என்னவோ அதற்கு பின் அவர் இசை அமைத்த எல்லா படங்களிலும் ஒரு பாடலையாவது பி.சுசீலாவை பாட வைத்து இருக்கிறார். பி.சுசீலா அவர்கள் பெண்டியாலா அவர்களின் இசையில் 400-க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். 1977-இல் பி.சுசீலா “கலஃகிந்தனோ ஸ்வாமி” என்ற தெலுங்கு பாடலுக்காக இரண்டாவது மாநில விருதை பெற்றார். அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் பெண்டியாலா அவர்கள். எத்தனை கஷ்டமான கம்போசிஷன் ஆக  இருந்தாலும் பி.சுசீலா பாடி விடுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் தான் மிக அற்புதமான பல பாடல்களை பாடும் வாய்ப்பு சுசீலாம்மாவுக்கும் கிடைத்தது. பெண்டியாலா அவர்களின் ரிக்கார்டிங்க்கு செல்லும் போது தேவையான குரல் பயிற்சியுடன் தான் செல்வாராம். பி.சுசீலா அவர்கள் மிகவும் மதிக்கக்கூடிய ஒரு இசை அமைப்பாளர் பெண்டியாலா அவர்கள்.
    பி.சுசீலா அவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த பெரிய “ப்ரேக்” என்றால், “கணவனே கண்கண்ட தெய்வம்” மற்றும் “தொங்க ராமுடு” படங்கள். ஆதி நாராயண ராவ் (நடிகை அஞ்சலி தேவியின் கணவர்) அவர்கள் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து தமிழில் அவர் திறமையை நிருபிக்க உதவினார். தெலுங்கில் “தொங்க ராமுடு” மூலமாக ஒரு ப்ரேக் கொடுத்தார் பெண்டியாலா. “அனுராகமு விரிசென ஈ வேளா” என துவங்கும் அந்த பாடலில் தென்றலின் சுகம் இருக்கும். நடிகை ஜமுனா அத்தனை அழகாக நடித்து இருப்பார். அந்த பாடலின் வெற்றிக்கு பின் தான் சாவித்திரி இனி சுசீலாவும் எனக்காக பாடட்டும் என தயாரிப்பாளர்களிடம் கூறினாராம். அந்த படத்தில் balagopala maamudhara krishna  என்ற  சாஸ்திரிய சங்கீத பாடல் ஒன்றையும் பாட வைத்தார். தேசத்தந்தை மகாத்மா காந்தியை பற்றி பாடும் “பலே தாத்தா மன பாபுஜி” பாடல் இப்போதும் சுதந்திர திருநாளில் தவறாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது. “தெலிசிந்தா பாபு இப்புடுஎன்று குழந்தைகள் பாடும் பாடலும் படத்தில் இடம் பெற்றது. இப்பாடல்கள் சுசீலாவுக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது. இந்த பாடல்களை கேட்டுத்தான், தெலுங்கு திரை இசை உலகின் ஜாம்பவான், இசை அமைப்பாளர்  எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்கள் மிஸ்ஸியம்மா (தமிழ் மற்றும் தெலுங்கு) படத்தில் பி.சுசீலாவுக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தார்கள். அதிலும் நடித்தது ஜமுனா தான். பிருந்தாவனமும் நந்த குமாரனும், அறியா பருவமடா என இரு பாடல்களை பாடும் வாய்ப்பை கொடுத்தார். அதற்குப்பின் எஸ்.ராஜேஸ்வரராவின் ஆஸ்தான பாடகி ஆனார் பி.சுசீலா. “தொங்க ராமுடு”  படம் தமிழில் “திருட்டுராமன்” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. “எந்தன் காதலும் “, “பலே சாது எங்கள்”, “தெரிஞ்சிக்கோ பாபு” பாடல்களை தமிழில் பாடினார் சுசீலா அவர்கள்.
இனி பெண்டியாலா இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களில் சில முத்தான பாடல்களை பற்றி குறிப்பிடுகிறேன்.
      “muddu bidda” (1956) படத்தில் “Choodalani undiமற்றும் ஜாவளி டான்ஸ் antalone tellavare பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. “Bhagyarekha” (1957) படத்தில் nuvvundedi aa koda pai”  ஒரு அருமையான பாடல். kaaru cheekati” , “oh naa moravina raja”,  “manasooge thanuvu”  உட்பட பத்து பாடல்களுக்கு மேல் அந்த படத்தில் பாடினார்.  அதே வருடம் வெளிவந்த “akka chelleluபடத்தில் “chekka chekalade” உட்பட ஐந்து பாடல்கள் பாடினார். எம்.எல்.ஏ படத்தில் சில  பாடல்களை பாடினார்.  எம்.எல்.ஏ படம் தமிழிலும் அதே பெயரில் வெளியானது. அதே வருடம் “நான் வளர்த்த தங்கை” என்ற தமிழ் படதுக்கும் இசை அமைத்தார் பெண்டியாலா. அதில் “ஆண்கள் மனமே அப்படித்தான்”, “இன்ப முகம் ஒன்று கண்டேன்” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. sati savitri (1957)”  படத்தில் “ Challani thalli”, “ dharma edhi”  உட்பட சில பாடல்களை பாடினார். 1958-இல் வெளிவந்த “atha okkinti kodale” ( தமிழில் – “மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே”) படத்தில் “Nee daya rada, naalo kaliginavi”, “ashokavanamuna seetha”   என சில பாடல்களை பாடினார். Ganga Gowri Samvadham  படத்தில் சில பாடல்களை பாடினார். Jayabheri (1959) பட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. “daivam idhena”  பாடல் டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய ஒரு தெலுங்கு பாடல். Sangeetha sahityame”, Yamuna teeramuna,  saval saval, unnara jodunnara,  வரிசையாய் ஹிட் அடித்த பாடல்கள். இப்படம் தமிழிலும் “கலைவாணன்” என்ற பெயரில் வெளியானது. “மாலை நேரத்திலே” பாடல் பிரபலமான பாடல். sri venkateswara mahatyamபடத்தில் evaro athadevaro”  என குயிலை வெல்லும் குரலில் ஒரு பாடல் இருக்கிறது. அதற்கு இணையான இனிமையுடன் kalaga kammani kalaga  பாடலும் jhuma jhuma jhum jhum   என்ற பாடலும் குறிப்பிடப்படத்தக்கவை. இதே வருடம் “ Sri Krsihna Garudi”  என்ற பெயரில் ஒரு கன்னடப்படமும் வெளிவந்தது. “ee maayaveno” என சுசீலா அவர்கள் குரலில் ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்.
  1960-இல் வெளிவந்த “பக்த சபரி” படத்தில் பாடல்களும், ஸ்லோகங்களுமாய் கிட்டத்தட்ட 12  பாடல்கள். அதில் Ninnu choosunandaga”  என்ற பாடலில் ஒரு வயதான மூதாட்டிக்கு குரல் கொடுத்து  இருப்பார். தவிர  “emi rama katha”. Koorimi thamunitho, “neela megha shyama” போன்ற பல நல்ல பாடல்கள் இடம் பெற்றன. இப்படம் தமிழிலும் “பக்த சபரி” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “bhatti vikramarka” படத்தில் oh nela raja vennela raja”  என கண்டசாலாவுடன் பாடிய பாடல் மிக பிரபலம். கேட்க கேட்க சலிக்காத மெலடி. Oh sailasudha matha”,   “O sundari andhame”, பாடல்களும் பிரபலமானவை. Oh nela raja” பாடல்  தமிழில் “ஓ எழில் ராஜா” என்ற பெயரில் ஒலித்தது. “Mahakavi kalidasu”  படத்தில் இடம் பெற்ற Jaya Jaya Jaya Sharada  பாடலின் அழகைப்பாருங்கள். இசை அமைப்பாளரும், பி,சுசீலாவும் ரசித்து ரசித்து பணி புரிந்து இருக்கிறார்கள். இடையிடையே யில் வரும் ஆலாபனைகளை கேளுங்கள். பி.சுசீலாவின் குரலில் என்னவெல்லாம் வித்தைகளை கொண்டுவந்திருக்கிறார், இசை அமைப்பாளர் !! . yendukku vesina veshamaya பாடலும் வெற்றி பெற்ற பாடல். அதே வருடத்தில் uyyala jampala”, “nithya Kalyanam Pachatoranam”  படங்களில் இடம் பெற்ற பாடல்களும் தரமான பாடல்களாய் அமைந்தன.  baava maradalluபடத்தில் கண்டசாலாவுடன் பாடிய payninche mana valapulu”  பாடல் குறிப்பிடப்படத்தக்கது.. 1961-இல் வெளிவந்த jagadeka veeruni katha” படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட். கண்டசாலாவுடன் பாடிய Ayyinadhemo ayyinadhi, manoharamuga madhura பாடல்கள் பிரபலமானவை. பி.லீலாவுடன் இணைந்து பாடிய jalakaalaatalalo”, “jaya jaya jagadeka”, “varinchi vachina manava  பாடல்கள் குறிப்பிடப்பட தக்கவை. இப்படம் கன்னடத்தில் அதே பெயரிலும், தமிழில் “ஜெகதல பிரதாபன் என்ற பெயரிலும் வெளிவந்தது. “ஜலம் தனில் ஆடுகிறோம்”, “ஆவதென்னவோ “, ”வனத்தில் ஓடிய” என ஆரம்பிக்கும் இந்த பாடல்கள். Krishna prema”  படத்தில் பல பாடல்கள் பாடினாலும், PBS-உடன் பாடிய Sudha madhuramu பாடல் தனிச்சிறப்புடன் ஒலிக்கிறது. மற்ற பாடல்களும் மிக சிறந்த பாடல்கள். vagdanam”  படத்தில் இடம் பெற்ற Naa kanti papalo பாடலை கேட்டு  மயங்காதோர் இருக்க  முடியாது. அப்படி ஒரு இனிமையான மெலடி Velugu needalu”  படத்தில் இடம் பெற்ற haayi haayiga jabilli tholi இன்னொரு சூப்பர் மெலடி. கண்டசாலாவும். பி.சுசீலாவும் அப்படி ஒரு மெலடி மேஜிக் செய்திருப்பார்கள்.
          1962 –இல் வெளிவந்த “Chitti thammudu” படத்தில் mayabazaru lokamDikkuleni vaalaki”, “ adagali adagali “  உட்பட  ஆறு பாடல்களை பாடினார் பி.சுசீலா. mahamantri timmarasu” படத்தில் mohana raga maha என ஒரு டூயட் இருக்கிறது கேளுங்கள். இப்படி ஒரு டூயட் இனி வருமா என எங்க வைக்கும் விதத்தில் பாலையும் தேனையும் அள்ளி தெளித்திருப்பார் பெண்டியாலா. தமிழில் “ஜி.ராமநாதன் அவர்களின் , “முல்லை மலர் மேலே” பாடலை கேட்ட போது தோன்றிய மலைப்பு இந்த பாடலை கேட்ட பின்னும் தோன்றியது. அதே படத்தில் எஸ்.வரலக்ஷ்மி, பி,சுசீலா இணைந்து பாடும் “திருமல திருப்பதி வெங்கடேஸ்வரா” பாடல் இன்னுமோர் இசை விருந்து. இரு பெண்குரல்கள் இணைந்து பாடும் போது அப்படியே ஒன்றோடொன்று இழைய வேண்டும். பி.சுசீலாவுக்கு அந்த வரம் கிடைத்து  இருக்கிறது. ஜிக்கியுடன் “மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக”, பி.லீலாவுடன் “ஜகம் புகழும்”, சூலமங்கலத்துடன் “திருப்பரங்குன்றத்தில்”, எஸ்.வரலக்ஷ்மியுடன் “திருமல திருப்பதி”, A.P.கோமளாவுடன் “குயிலோசையை வெல்லும்”, எல்.ஆர்.ஈஸ்வரியுடன் “ஓ ஓ சின்னஞ்சிறு மலரை” முதல் சித்ராவுடன் “ஸ்ருங்கரானிக்கி” பாடல் வரை எல்லோர் குரலோடும் அழகாய் இழையும் குரல் பி.சுசீலா அவர்களின் குரல்.    Sri krishnarjuna yuddham”  படத்தில் Manasu parimalinchane என்றொரு அருமையான டூயட் இருக்கிறது. தவறாமல் அனுபவித்து கேட்க வேண்டிய பாடலில் ஒன்று. Neekai Vechidinayya”  இன்னுமோர் அழகான பி.சுசீலாவின் தனிப்பாடலும்  குறிப்படப்பட வேண்டியது. இப்படம் தமிழிலும், கன்னடத்திலும் அதே பெயரில் வெளியானது. “ மனசு பரிமளித்ததே” என தமிழிலும் ஒலித்தது அப்பாடல். Raamudu Bheemudu” படத்தில் telisindile telisindile nelaraju nee roopu” என இன்னுமோர் மனசை அள்ளும் டூயட் இருக்கிறது. தேன்குரல் குரல் என்பார்களே, அதற்கு சாட்சி இந்த பாடல். eedu jodu” படத்தில் idhemi lahiri” என இன்னுமோர் மெலடி.
      1964-இல் Sabash Suri” படத்தில் “ee vennela”, kalavani  aliveni” உட்பட ஆறு பாடல்களை பி.சுசீலா பாடினார். 1966-இல் வெளிவந்த “ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்” படத்தில் இசை ஆறு ஓட விட்டுருப்பார் பெண்டியாலா. Nirajaala galada”,  “Konumithe kusumanjali”, oho mohana roopa உட்பட 11 பாடல்களை பாடினார் பி.சுசீலா. neera jaala galada”  பற்றி சொல்ல வேண்டுமானால், “என்ன ஒரு கம்போசிஷன் !!!!”, இப்போதும் கூட ரியாலிட்டி ஷோக்களில் இப்பாடலை தவறாமல் பாடுவதுண்டு. பி.சுசீலா பின்னி எடுத்திருப்பார். Bandhipotu Dongalu படத்தில் Vinnanule priya பாடல் இதம். “முத்துக்களோ கண்கள்” பாடல் சிறிய மாற்றத்துடன் கண்டசாலா- பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.  Yadanu dachina mounaveena  குறிப்பிடத்தக்க பாடல். பாக்யசக்ரம் படத்தில் “vaana kadu vaana kadu குறிப்பிட பட வேண்டிய பாடல். “Satha harischandra” படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் ananda sadana”  என ஒரு தாலாட்டுப்பாடல் இருக்கிறது. தவறாமல் கேளுங்கள்.
    umachandi gowri shankarula katha” படத்தில்  “Yemito Ee maya”, “aakasaki ee vaname” போல் அருமையான பாடல்கள் இடம் பெற்றன. Manasu mangalyam  படத்தில் “ee musugu theeyaku”,  என்ற சோகப்பாடல் இருக்கிறது. அருமையான ஆலாபனைகள் பாடலில் இருக்கிறது. Sri Krishna viajyam”  படத்தில் pillana grovi pilupu” , jayjamma thallikki jey jeylu, “haayi haayi emito”  “ramani hoo ramani”joharu sikhipincha mouli, போல பல நல்ல பாடல்கள் இடம் பெற்றன. “Joharu sikhipincha mouli” பாடலுக்கு நடம் ஆடியவர் நடிகை “ஹேமாமாலினி” அவர்கள்.  “Naa Tammudu” படத்தில் Chinnari papala”  பாடலை பேபி ஸ்ரீதேவிக்காக பாடி இருக்கிறார். Mathru devatha” படத்தில்  “nee needaga nannu” , ammakku neeviddaru okate” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை.
      Sri Rajeswari vilas coffee club  படத்தில் “aakasa pandirilo”, “raakoyi anukonee athithi”  பாடல்கள் மிக பிரபலம் ஆனவை. Chanakya Chandragupta”  படத்தில் Chiru navvula tholakrilo”, “idhi tholi reyi”  போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள். “Daana veera soora karna” படத்தில் பாடிய kalagintino swamy “ பாடலுக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஆந்திர மாநில விருதை பெற்றார் பி.சுசீலா. அதே படத்தில் “Chitram Bhalare Vichitram” பாடல் மிக பிரபலமான பாடல். “  Telisenule priya rasika”, “ye talli ninu”  போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள். 1978-இல் வாணிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த “ Sati Savitri  படத்தில் 15-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார் பி.சுசீலா ( Proof ).
  “Srirama pattabhishekam”  படதுக்காக வயதான குரலில் Pratikoma naa kalisi”   என்ற பாடலை பாடினார் பி.சுசீலா. aalapinchana eevela. “Sarvamangala”, “Raajounata பாடல்களும் ஹிட்டான பாடல்கள். Sri Tirupathi venkateswara kalyanam”  படத்தில் “idhi naa hrudayam”   உட்பட பத்து பாடல்களுக்கு மேல் பாடினார். எண்பதுகளில்  “karpoora Shilpam”, “kotha vennela”, “kalaranjani”  போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் பெண்டியாலா. எல்லா படங்களிலும் படி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.
      முக்கியமான ஒரு ஆல்பமாக குறிப்பிடப்பட வேண்டியது “Telugu Jateeya Geetalu”. இதில் Jana gana mana”, “ maa telugu talliki “, “ Telugu patakam”  மற்றும் “  vande mataram “  பாடல்கள் இடம் பெற்றன. எல்லாமே முத்துக்கள். 
         பக்தி ஆல்பங்களில் “ஸ்ரீ கிருஷ்ண கர்ணாமிர்தம்” ஆல்பம் குறிப்பிடப்படத்தக்கது.

         ஆரம்பத்தில் பெண்டியாலாவின் இசையில் 400  பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார் என கூறி இருந்தேன். இது எங்களிடம் இருக்கும் பாடல்களின் அடிப்படையில் மட்டுமே. ஆனால் பல படங்கள் குறிப்பாக, பல புராண, இதிகாச படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக “சதி சாவித்திரி” படம் “கற்புக்கரசி சாவித்ரி” என்ற பெயரிலும். “ Sri pramaleenjaneyam”  படம் “பிரமீளா அர்ஜுனா” என்ற பெயரிலும், “sri Krishna tulabaram” படம் “கிருஷ்ண துலாபாரம்” என்ற பெயரிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதைப்போல் பல படங்கள் இருக்கிறது. அதில் இருக்கும் பாடல்களின் லிஸ்ட் கிடைக்கும் போது இந்த எண்ணிக்கை 500- ஐ தாண்டலாம். 

Songs in Telugu 

Year          Movie                                          Song

1952 kanna thalli yendukku pilichavendukku
1952 kanna thalli Slokam
1954 balanadham poojenu poola vanam
1954 menarikam chitti potti
1954 menarikam gupchu pilla
1955 donga ramudu anuragamu virisena
1955 donga ramudu Bala gopala
1955 donga ramudu Bhale thatha mana
1955 donga ramudu thelisinda babu
1956 muddu bidda antalone tellavare
1956 muddu bidda chittipotti varalamuta
1956 muddu bidda choodalani undhi amma
1956 muddu bidda (old) mudduga eppudu mustabu
1957 bhagya rekha kannuneeti-sad
1957 akka chellellu Chatela Oh chandamama
1957 akka chellellu inte magavallu
1957 akka chellellu lokham antha garadi
1957 akka chellellu Nee Rupu Naa Hridhayam
1957 akka chellellu choosave manava leelalu
1957 bhagyarekha Neevundetha kondapai
1957 bhagyarekha gaaru theekati
1957 bhagyarekha Kanneeti kadalilona
1957 bhagyarekha manasooge sakha
1957 bhagyarekha nedu -padhyam
1957 bhagyarekha oh naa maravina raja
1957 bhagyarekha Thallini thandrini
1957 bhagyarekha yavvaniche jeninchu
1957 bhagyarekha tharuvooge sakhi
1957 MLA matru deshamunu
1957 MLA namo namo babu
1957 MLA vandanalu cheyandi
1957 sathi savitri(old) challani thalli
1957 sathi savitri(old) dharmaa edhi
1958 atta okinti kodale ashokavanamuna seeta
1958 atta okinti kodale naalO kaliginavi avi Emo Emo
1958 atta okinti kodale needaya raada -sad
1958 atta okinti kodale nee daya raada ee dasi-happy
1958 ganga gowri samvadham nyayama idhu
1958 ganga gowri samvadham vaadulatho apavaadulatho
1958 ganga gowri samvadham swamy idhe saranagathi
1959 jayabheri daivam neevena dharmam
1959 jayabheri Sangeetha sahityame
1959 jayabheri saval saval
1959 jayabheri unnara joduunnara
1959 jayabheri yamuna theeramuna
1959 jayabheri Shantanu - satyavati ghatam
1959 mayabazaar (D) niduralao melikovalo
1959 Sowbhagyavathi niduralo (slokam)
1959 Sowbhagyavathi oho bale dheerule
1959 srivenkateswara mahatyam chinnari Oh chilukka vinnava
1959 srivenkateswara mahatyam Yevaro athadevaru
1959 srivenkateswara mahatyam jhuma jhuma jhum
1959 srivenkateswara mahatyam Kalaga kamani kalaga
1959 srivenkateswara mahatyam kalaye jeevitha manna(padhyam)
1960 bavaa maradallu Hridayama Oh bela hridayama
1960 bavaa maradallu Payaninche manavalapula(happy
1960 bavaa maradallu Payaninche manavalapula(sad)
1960 bhaktha sabari emi rama katha
1960 bhaktha sabari koorimi thamunitho
1960 bhaktha sabari maarali maarali manathierulu
1960 bhaktha sabari neela megha syama
1960 bhaktha sabari ninnu choosu nandaka
1960 bhaktha sabari ranai yunnadu
1960 bhaktha sabari bhava tharaka 
1960 bhaktha sabari aalu magala (padyam)
1960 bhaktha sabari huh u hu saaga
1960 bhaktha sabari rama nyayama
1960 bhaktha sabari thalli naa (padhyam)
1960 bhatti vikramarka manasara premincharaa
1960 bhatti vikramarka Natinchana
1960 bhatti vikramarka Oh nelaraja
1960 bhatti vikramarka O sundari andame
1960 bhatti vikramarka oh sailasutha matha
1960 bhatti vikramarka jai nava nava
1960 mahakavi kalidasu Avunnule avvunnule
1960 mahakavi kalidasu Jaya Jaya jaya saradha
1960 mahakavi kalidasu yendukku vesina
1960 nithya kalyanam pacha toranam nee madi padenu
1960 nithya Kalyanam Pachatoranam nee madi padenu
1960 oyyala jampala andala ramudu
1960 oyyala jampala Dachina dagathu valapu
1960 oyyala jampala kondagaali tirigindi
1960 oyyala jampala rukminamma
1960 oyyala jampala ungarala juttuvadu
1960 sri venkateswara mahatyam kalyana vaibhava ee nade
1960 baava maradallu (old) hrudayama o bela
1961 jagadeka veeruni katha jaya jaya jagadeka 
1961 jagadeka veeruni katha ayinademo ayinadi
1961 jagadekaveeruni katha Ayyinadhemo ayyinadhi
1961 jagadekaveeruni katha jalakaalaatalalo
1961 jagadekaveeruni katha Manoharamu
1961 jagadekaveerunikatha Adi lakshmivanti athagarivamma
1961 jagadekaveerunikatha varinchi vacchina manava
1961 krishna prema nee chirunavvu (padhyam)
1961 krishna prema Anuraga bagya mana nathe
1961 krishna prema hayi ranga hayi
1961 krishna prema Sudha madhuramu kala
1961 krishna prema Yekkadaunnave pilla
1961 krishna prema Intini Minjina kovila
1961 vagdanam Bangaru naava brathuku
1961 vagdanam Kasipatnam choodara
1961 vagdanam Naa kanti paapalo nilichipora
1961 vagdanam pahi rama prabhu
1961 vagdanam thapatloi thallaloi
1961 vagdanam veluguneeyavaya rama
1961 velugu needalu challani vennela
1961 velugu needalu chitti potti chinnari puttinaroju
1961 velugu needalu Hayi hayiga jabbili tholi
1961 velugu needalu Oh rangayyo poola rangayyo
1961 velugu needalu Paadavoyi bharatheeyuda
1961 velugu needalu sariganju cheera thechi
1962 chitti thammudu adakale adikethi evaro
1962 chitti thammudu thikuleni vadiki devude thidhu
1962 chitti thammudu yesuko naa yesuko
1962 chitti thammudu Maya bazaruloka
1962 chitti thammudu Meruppu Merisundaoi
1962 chitti thammudu Neevu nenu jabili
1962 mahamantri thimmarasu Mohana raaga maha murthi
1962 mahamantri thimmarasu Thirumala thirupathi venkateswara
1962 swarna manjari dhanadhanyadhi -padhyam
1963 anuragam Padhe Padhe kannulive
1963 eedu jodu chirugali vanditi-sad
1963 eedu jodu chirugali vanti(happy)
1963 eedu jodu Rasamaya jeevana dinaavanaa 
1963 Paruvu Prathista Ala vykunta puramulo nagarilo
1963 srikrishnarjuna yuddham Anni manchi sakunamule
1963 srikrishnarjuna yuddham Manasu parimalinchene
1963 srikrishnarjuna yuddham Neekai vechithinaiya
1963 srikrishnarjuna yuddham Swamula sevakku
1964 raamudu bheemudu Adhe adhe
1964 raamudu bheemudu Desamu marindoi kalamu
1964 raamudu bheemudu O taluku
1964 raamudu bheemudu Telisindhile telisindhile nelaraju
1964 raamudu bheemudu Undhile manchi kalam mundhu
1964 sabaash suri ee vennela ee-chorus ver
1964 sabaash suri Ee vennela Ee punnami(happy)
1964 sabaash suri Ee vennela Ee punnami(sad)
1964 sabaash suri kalavani aliveni ade
1964 sabaash suri Poovu poovu yempoovu
1964 sabaash suri vinura vinura
1964 donga notelu naveti pedavula tho
1964 donga notelu pilichenoka chiluka
1964 donga notelu orige thanuve
1965 oyyala jampala neelona ooge
1965 prachanda bhairavi banalu bavalu bavalu
1965 prachanda bhairavi kondalalo nene
1965 Prameelarjuneeyem jayahe aadhi sakthi
1965 Prameelarjuneeyem ninnu choosi choodaga
1965 Prameelarjuneeyem sarikotha kanne
1965 satya harischandra aadalevu
1965 satya harischandra neevu maapu
1965 Raktha tilakam(D) Palumaatalela selavidiea
1966 papa kosam kondapaina kondalona -solo
1966 srikakula andhara maha vishnu katha oh suma bana
1966 srikrishnatulabaram Bhale manchi chowkaberamu
1966 srikrishnatulabaram dana dhanyamulani
1966 srikrishnatulabaram ee lolakshulu-padhyam
1966 srikrishnatulabaram Idhi saragala thota
1966 srikrishnatulabaram ika nee geethuna
1966 srikrishnatulabaram Jayaho jayaho
1966 srikrishnatulabaram karuninchave thulasi matha
1966 srikrishnatulabaram konumithe kushimanjali
1966 srikrishnatulabaram Meerajalagalada
1966 srikrishnatulabaram Oho mohana roopa
1966 srikrishnatulabaram vrathamulo -padhyam
1967 eedu jodu Edheme lahiri
1967 eedu jodu I evokimtayu ledu dhairyamu(verse)
1968 bandhipotu dongalu Kanniah puttinaroju
1968 bandhipotu dongalu Vinnanule priya
1968 bandhipotu dongalu vunnadu oo chakini
1968 bandibottu dongalu ey killadi donga
1968 bhagya chakram Neevulekha nimishamaina 
1968 bhagya chakram okarikosam okarimadhina
1968 bhagya chakram thaalaenu thaapamaayi
1968 bhagya chakram vaanakadhu vaanakadhu varadaraja
1968 kumkuma chandana lepitha lingam omkaram
1968 panthaalu pattimpulu evare ekkuava paramashiva
1968 panthaalu pattimpulu gowreeshaa
1968 panthaalu pattimpulu netidhaa eenaatidhaa
1968 panthaalu pattimpulu pallorayya pallu
1968 panthaalu pattimpulu paruvapu sogase
1968 panthaalu pattimpulu rangu poosukuni
1968 papa kosam kondala paina ko nalalona
1968 papa kosam Ulli puvula padaga gatti
1968 umachandi gowri shankarula katha aakasaki ee vaname
1968 umachandi gowri shankarula katha Nee leelalone oka haayile
1968 umachandi gowri shankarula katha Yemito Ee maya
1968 Graama devathalu Daachaku nijam ide samayam
1968 Graama devathalu Janani jhanma bhoomi 
1968 Graama devathalu Pillalamu pasi pillalamu bhavi
1969 bandhipotu dongalu kiladi donga diyo diyo
1969 bandhipotu dongalu  gandara ganda soggadi
1969 Pelli sammandham intike kala thechu
1969 Pelli sammandham neeli mekallalu
1969 pelli sammandham paluku kathamunu
1969 pelli sammandham piluvadeppudu nee
1970 ananda nilayam Yeduru choose
1970 manasu mangalyam ee musugu theeyaku
1970 manasu mangalyam Ninnu nenu choosthunna
1970 manasu mangalyam Ee subha samayamlo 
1970 srikrishnavijayam Anaradhe baala
1970 srikrishnavijayam Haayi Haayi haayi yemito
1970 srikrishnavijayam je jela talliki
1970 srikrishnavijayam Joharu sikhipincha mouli
1970 srikrishnavijayam krishna premamaya
1970 srikrishnavijayam Naa jeevithamu neekankithamu
1970 srikrishnavijayam Pillana grovi pilupu
1970 srikrishnavijayam priyatma nenikkada
1970 srikrishnavijayam Ramani naa tappu
1971 ananda nilayam eduru choose nayanalu
1971 ananda nilayam gootilone pillaku gunda
1971 Naa tammudu akkada kaadu
1971 Naa tammudu Chinnari papala ponnari thotalo
1971 Naa tammudu Chinnari papala ponnari thotalo(sad)
1971 Naa tammudu dandalu dandalanti
1971 Naa tammudu ramani naa tappa -sample
1972 maa amma devatha nee needaga nannu
1972 maa amma devatha ammakku meeriddaru
1972 mathrumurthy ammaku neeriddaru
1972 mathrumurthy Nee Needaga nannu
1974 danavanthulu gunavanthulu nadiche kavithavu
1974 deeksha poolalnne poolochindi
1974 dhanavanthulu gunavanthulu Terachi vunchevu suma 
1974 dhanavanthulu gunavanthulu nadiche
1975 kolleti kapuram ellare nallamanu
1975 kolleti kapuram Iddarame Manamiddarame
1975 maa naanna nirdoshi alakalu theerina
1975 maa naanna nirdoshi nanu bhavadeeya
1975 maa naannaa nirdoshi chinnari paapallara
1975 maa nanna nirdoshi yenthentha dooram
1975 vandeham gananaayakam ekadandam
1975 vandeham gananaayakam ekanda satvaka
1975 vandeham gananaayakam gowri nandana
1975 vandeham gananaayakam sannindi cheradi
1976 bhoomi kosam chellee chendramma
1976 bhoomi kosam oh vanne chinnela
1976 bhoomi kosam chinnari chilakkamma
1976 sri rajeswari vilas coffee club Aakasa pandirilo
1976 sri rajeswari vilas coffee club Raakoyi anukonne athithi
1976 sri rajeswari vilas coffee club Yemani piluvanura 
1976 sri rajeswari vilas coffee club vecchani kowgitloo
1976 suprabatham anukuntunnanu
1976 suprabatham evi evi nee kallu-pathos
1976 suprabatham evi evi nee kallu
1977 chanakya chandragupta Chiru navvula tholakarilo
1977 chanakya chandragupta edhi tholi reye
1977 chanakya chandragupta Yevaro aa chandrudu
1977 dhanaveerasurakarna chitram balare vichitram
1977 dhanaveerasurakarna jabili kante challanidi
1977 dhanaveerasurakarna Kalagantino swami
1977 dhanaveerasurakarna ranamuna -padhyam
1977 dhanaveerasurakarna Telisenule priya rasika
1977 dhanaveerasurakarna Ye thalli ninu
1978 sathi savitri adugaduguna
1978 sathi savithri aarkonna -padhyam
1978 sathi savithri ambavu neevamma
1978 sathi savithri chinnari navvulu
1978 sathi savithri dharmama
1978 sathi savithri emitto emitto
1978 sathi savithri kaasi annapoorani
1978 sathi savithri pamputhunamamma ninu
1978 sathi savithri srivakdev -solokam
1978 sathi savithri uthvalaya-padhyam
1978 sathi savithri varambike-padhyam
1978 sathi savithri yamini bamini
1978 sathi savithri yeh matha
1978 sathi savithri lalitha siva
1978 sathi savithri ye shakthi
1978 sathi savitri abhayavu neeveyamma
1978 sathi savitri ya vidyaa sivakusavaadi
1978 sree rama pattabhishekam aalapinchana eevela
1978 sree rama pattabishekam prati koma naa kalisi
1978 sree rama pattabishekam Raajounata
1978 sree rama pattabishekam Sarvamangala
1979 gaalivaana chethulara
1979 gaalivaana Gala galamani navake
1979 koyilamma koosindi koyilamma koosindi
1979 priyabandhavi rara bhuvana sundara
1979 sri tirupathivenkateswara kalyanam aa tholi choopE
1979 sri tirupathivenkateswara kalyanam ee palle repalle
1979 sri tirupathivenkateswara kalyanam Edhi naa hridayam edhi nee nilayam
1979 sri tirupathivenkateswara kalyanam poyi raavE
1979 sri tirupathivenkateswara kalyanam Prabhu
1979 sri tirupathivenkateswara kalyanam suprabhatham-kausalya
1979 sri tirupathivenkateswara kalyanam vesindhi Gunamaavi
1979 sri tirupathivenkateswara kalyanam yenadu pondhina varamO
1979 sri tirupathivenkateswara kalyanam yevaru leru naku
1979 sri tirupathivenkateswara kalyanam kalayao
1980 karpoora silpam malli teegala
1980 karpoora silpam nee valapu choopule
1980 karpoora silpam piliche ee polla
1980 kotha vennela chitteluka chitteluka
1980 kotha vennela padamantara nijamga pada
1981 dharma vaddi ettu pallala vangara
1983 telugu jateeya geetalu jana gana mana
1983 telugu jateeya geetalu maa tenugu tallilki
1983 telugu jateeya geetalu telugu patakam
1983 telugu jateeya geetalu vande mataram
1985 kalaranjani idi ganam adi natyam
1985 kalaranjani sakala kala ranjani
0 songs on nehru jhohar
0 songs on Nehru vadipoyane




Songs in Tamil :

Year Movie Song
1952 petra thaai yethukku azhaithaai yethukku
1952 petra thaai Slokam
1956 thiruttu raman bhale saadhu engal
1956 thiruttu raman endhan kaadhalum
1956 thiruttu raman therinjukko babu
1957 MLA arivilum kalayilum
1957 MLA kottayul
1958 naan valartha thangai iysa pysa ulagamada
1958 naan valartha thangai paarthaya maanidanin leelayai
1958 naan valartha thangai aangal maname appadithan
1958 naan valartha thangai Inba mugam ontru kanden
1958 veettukku vantha varalakshmi kanneerum marainthu
1959 kalaivaanan chikkatha meenum
1959 kalaivaanan deivam nee thaana
1959 kalaivaanan irukkara ingirukkara
1959 kalaivaanan maalai nErathilE 
1959 sowbhagyavathi ohoho machan
1960 bhaktha sabari annal unnai
1960 bhaktha sabari ariyamal thavaru
1960 thooya ullam desamengum viduthali
1960 thooya ullam inba loga jothi roopam
1960 thooya ullam intha pazhasai avuthu
1960 bhaktha sabari janaki thodara
1960 thooya ullam kanne kanne unniathodum
1960 thooya ullam naano un adimai
1960 bhatti vikramathithan Oh ezhil raja
1960 bhatti vikramathithan O sundara
1960 thooya ullam o velappa thanga velappa
1960 bhaktha sabari oorodu vaazha venum
1960 bhaktha sabari raama bhaadame
1960 bhaktha sabari rama nyayama
1960 thooya ullam valarum kalayin
1960 bhaktha sabari o aayi nee
1961 maamiyarum oru veetu marumagale asoka vanathil seetha
1961 maamiyarum oru veetu marumagale sodhanai eno pedhai
1961 maamiyarum oru veettu marumagale vaa entru sonnadhum
1963 jagathala prathapan aavathennavo
1963 jagathala prathapan jalam thanil adugirom
1963 jagathala prathapan vanathil odiya
1963 sri krishnarjuna yuddham manasu parimalithade
0 sri Krishna karnamirtham ahimakara
0 sri Krishna karnamirtham arunamrutha
0 sri Krishna karnamirtham asthiswatharuni
0 sri Krishna karnamirtham barhotham savila
0 sri Krishna karnamirtham chitam thathe
0 sri Krishna karnamirtham hey deva
0 sri Krishna karnamirtham hey gopalaka
0 sri Krishna karnamirtham jaya jaya devadeva
0 sri Krishna karnamirtham kalathvanitha
0 sri Krishna karnamirtham karara vinthena
0 sri Krishna karnamirtham kusuma sheera
0 sri Krishna karnamirtham lavanyaveeji
0 sri Krishna karnamirtham madhuram adharabimbe
0 sri Krishna karnamirtham madhuram madhuram
0 sri Krishna karnamirtham mandhara moule
0 sri Krishna karnamirtham mukulayamana
0 sri Krishna karnamirtham sajala jala neelam
0 sri krishna karnamrutham samsare 
0 sri Krishna karnamirtham kasthoori tilakam

KANNADA

Film Movie Songs
1961 jagatheeka veeruni katha aadadheno ayithe priye
1961 jagatheeka veeruni katha adhi lakshmi
1961 jagatheeka veeruni katha manohara mukha madhura
1961 jagatheeka veeruni katha sthree naarttagalu 
1965 Sathya Harichandra aanada sadana
1965 Sathya Harichandra neenu namage siggi
1965 Sathya Harichandra sathyavadhu
1963 sri krishna arjuna yudha manavu  prema
1963 sri krishna arjuna yudha ninage kaithidenayya
1963 sri krishna arjuna yudha swamigasavai
1963 sri krishna arjuna yudha ella mangala
1958 sri krishna garudi ee maayaveno