பின்பற்றுபவர்கள்

புதன், 26 அக்டோபர், 2016

நாட்டிய பேரொளி பத்மினிக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்.





               கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூஜாபுரம் பகுதியில் திருவாங்கூர் அரச குடும்பத்தில் (1932) பிறந்தவர். 4-வது வயதில் பரதநாட்டியம் பயின்றார். 10 வயதில் அரங்கேற்றம் நடந்தது. இவரைப் போலவே இவரது அக்கா லலிதா, தங்கை ராகிணியும் நடனக் கலைஞர்கள், நடிகைகள். மூவரும் ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்று புகழ்பெற்றவர்கள்.
         
             நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு 1948-ல் அறிமுகமாகினர். தொடர்ந்து 3 ஆண்டுகாலம் இவர்களது நாட்டியம் இடம்பெறாத படங்களே இல்லை. மூவரிலும் பத்மினியே உலகப் புகழ்பெற்ற நாட்டியத் தாரகையாகவும், நடிகையாகவும் மிளிர்ந்தவர். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.

                  கல்பனா’ என்ற இந்தித் திரைப்படத்தில் முதன்முதலாகத் தோன்றினார். ‘வேதாள உலகம்’ படத்தில் நடன மங்கையாகவும், ‘மணமகள்’ படத்தில் நடிகையாகவும் தமிழில் அறிமுகமானார்.
                       ‘பணம்’ திரைப்படத்தில் (1952) முதன்முதலாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார். சிவாஜி - பத்மினி ஜோடி தமிழ்த் திரையுலகில் இணையற்ற ஜோடியாகப் பிரபலமடைந்தது. ஏறக்குறைய 60 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தித் திரையுலகையும் தன் அழகாலும் அற்புத நாட்டியத்தாலும் கொள்ளை கொண்டார். அசோக்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவி குமார் உள்ளிட்ட அனைத்து பிரபல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
                       
                    தமிழ்,, மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழ்பெற்று விளங்கி, ‘நாட்டியப் பேரொளி’ என்ற பட்டம் பெற்றவர்.

                       தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘தூக்குத் தூக்கி’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘ராணி சம்யுக்தா’ போன்ற படங்கள் இவரது அபார நாட்டியத் திறன், நடிப்பாற்றலை பறைசாற்றுபவை.

   


     பி.சுசீலா அவர்கள் 1955-இல் வெளிவந்த கோடீஸ்வரன் படத்தில் இருந்து பத்மினிக்கு  பாட ஆரம்பித்தார் என நினைக்கிறேன். அதற்குப்பின் நிறைய படங்களில் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார்.  தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பத்மினிக்காக நிறைய பின்னணி பாடி இருக்கிறார்.  பத்மினி தவிர அவர் சகோதரிகளான லலிதா ( எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ ),, ராகினி ( பொன்னுலகம் நோக்கி போகின்றோம்) ஆகியோருக்கும் தமிழ் மலையாள மொழிகளில் பின்னணி பாடி இருக்கிறார். 

      தில்லானா மோகனாம்பாள் படத்தில் அழகும், நளினமும், திறமையும், அத்துடன் கம்பீரமும் கலந்த மோகனா என்னும் நாட்டிய தாரகைக்கு  பி.சுசீலாவின் குரல் கன கச்சிதமாக பொருந்தியது. "நலந்தானா, நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா" என பத்மினியே பாடி ஆடியது போல் இருந்தது.  "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" என சிவாஜியை பார்த்து பாடும் பாடல்  காலத்தை கடந்து நிற்பதற்கு அந்த சிருங்கார நடனமும் பாடலும் முக்கிய பங்கு வகித்தன. 38 வயதான பத்மினி ஒரு 20 வயது இளம் பெண்ணின் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். அதே  போல "மன்னவன் வந்தானடி" பாடலும் அதற்கு பத்மினி வடிமைத்து ஆடிய நடனமும், சிவாஜியின் கம்பீரமும்  பார்க்க பார்க்க திகட்டாதவை. அதைப்போல் "வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் பத்மினி பாடி ஆடும் "எத்தனை கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன்" பாடலும் ஒரு துள்ளலான நடன விருந்து.. 
         
     பல அருமையான பாடல்கள் இவர்கள் கூட்டணியில் வெளி வந்தன.. "கனிய கனிய மழலை பேசும் கண்மணி", "கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ" "நீயோ நானோ யார் நிலவே" ( மன்னாதி மன்னன் ), "முல்லை மலர் மேலே". "உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்). இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, "அஞ்சாத சிங்கம் என் காளை" ( வீர பாண்டிய கட்டபொம்மன்), " துயிலாத பெண்ண ஓன்று கண்டேன்". "கலையே என் வாழ்கையின் திசை மாற்றினாய்", "மன நாட்டிய மேடையில் ஆடினேன்" (மீண்ட சொர்க்கம்). "ஒ வெண்ணிலா ஒ வெண்ணிலா வண்ண பூச்சூடவா வெண்ணிலா" ( ராணி சம்யுக்தா), "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே"  "தங்க மோகன தாமரையே ( புதையல்), " நீல வண்ண கண்ணனே உனது  எண்ணம் எல்லாம் நான் அறிவேன்", " வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே", ( மல்லிகா). "என்றும் துன்பமில்லை இனி சோகம் இல்லை" (புனர் ஜென்மம்), "சின்ன சீனன கண்ணுக்கு என்ன வேண்டும்" " ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு" ( காட்டு ரோஜா), "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" (சித்தி), "மன்னிக்க வேண்டுகிறேன்", "கடவுள் தந்த இரு மலர்கள்" ( இரு மலர்கள் ), "தை மாத மேகம் அது தரையில் ஆடுது" ( குழந்தைக்காக ), "அழகு தெய்வம் மெல்ல மெல்ல", " பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா ( பேசும் தெய்வம் ), "ஆயி மகமாயி", "நானாட்சி செய்து வரும் நான் மாட கூடலிலே", ( ஆதி பராசக்தி), "கருணை மழையே மேரி மாதா ( அன்னை வேளாங்கண்ணி) பல அருமையான பாடல்களை பத்மினிக்காக பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.
   
      "Rikshaw Karan" படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் குடி ஏறினார் பத்மினி.  நீண்ட வருடங்களுக்கு பின்  மீண்டும்  "பூவே பூச்சடவா" படத்தின் மூலமாக நதியாவின் பாட்டி வேடத்தில் நடித்து பெயர் பெற்றார். அத்துடன் வேறு சில படங்களிலும் நடித்தார். அப்படங்களிலும் பி.சுசீலா அவருக்கு பின்னணி பாடினார். "இளமை காலம் எங்கே" . "அலைகளில் மிதந்தவள்" ( தாய்க்கு ஒரு தாலாட்டு (1986), "அம்மா தாயே மகமாயே" ( ஆயிரம் கண்ணுடையாள்) போன்ற பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

List of Songs ..
     
YearLangMovieSongMUSIC
1954Tamilvaira maalaiunai ennum podheMSV-TKR
1955Tamilkodeeswaranaasaikanavu thaanS.V. Venkatraman
1955Tamilkodeeswaranaasaikkanavu palikkuma-sadS.V. Venkatraman
1955Tamilkodeeswarankulavum thenral nilavaiS.V. Venkatraman
1956Telugusahasa veerudumaata meedhaG. Ramanathan
1956Teluguamara jeevitheniyalandu marumalliT. Chalapathi rao
1957Tamilmallikaendhan kannilveda
1957Tamilmallikamangaamal valarumveda
1957Tamilmallikaneela vanna kannanE unadhuveda
1957Tamilmallikavarundhaadhe ezhai manameveda
1957TamilmallikavaruvEn naan unadhu maaligayinveda
1957Tamilpudhayalaasaikaadhalai maranthu pOMSV-TKR
1957Tamilpudhayalchinna chinna izhai pinni MSV-TKR
1957Tamilpudhayalnalla kaalam porakkudhuMSV-TKR
1957Tamilpudhayalthanga mOhana thaamarayEMSV-TKR
1957TamilpudhayalvinnOdum mughilOdumMSV-TKR
1957Teluguvijayakota veerudukanabadi kalalona haayiC. Ramachandra
1957Teluguvijayakota veeruduvayasu okadu adigeneC. Ramachandra
1958Tamilpillai kani amudhupillaikkani amudhuK.V. Mahadevan
1958Tamilpillai kani amudhupillaikkani amudhu-sadK.V. Mahadevan
1958Tamilthanga padhumaien vazhvil pudhu paadahiMSV-TKR
1958Tamilthanga padumaien vazhvil pudhu-sad MSV-TKR
1958TamiluththamaputhirananbE amuthE arum kaniyeG. Ramanathan
1958Tamiluththamaputhiranmannulagellam ponnulagagaG. Ramanathan
1958Tamiluththamaputhiranmullai malar meleG. Ramanathan
1958Tamiluththamaputhiranunnazhagai kanniyargal G. Ramanathan
1958Tamilvanjikkottai valibanEntha ooru (ethani kelvi)C. Ramachandra
1958Tamilvanjikkottai valibaninba kanavonRu naneC. Ramachandra
1958Tamilvanjikkottai valibankanagamellam C. Ramachandra
1958Teluguveera pratapJagame eppude kannu theracheG. Ramanathan
1958Teluguveera pratapmadhuvanameleG. Ramanathan
1958Teluguveera pratapmanjula ghanamG. Ramanathan
1958Teluguveera pratap sundaruda nee sogasuG. Ramanathan
1959Tamilponnu vilayum bhoomisollamathan purinjikkaK.H. Reddy
1959Tamilponnu vilayum boomikarumbaana en vaazhvu K.H. Reddy
1959Tamilponnu vilayum boomiangila nagarigamK.H. Reddy
1959Tamilveera pandiya kattabommananjatha singam en kaaLaiG. Ramanathan
1959Tamilveera pandiya kattabommanInbam pongum vennilaaG. Ramanathan
1959Tamilveera pandiya kattabommantakku takku takkunnuG. Ramanathan
1960Tamilmannadhi mannankangal irandum entru unnai kanduMSV-TKR
1960Tamilmannadhi mannankaniya kaniya mazhalai pesumMSV-TKR
1960Tamilmannadhi mannanneeyo naano yaar nilaveMSV-TKR
1960Tamilmeenda sorgamKalaye en Vaazhkayin thisaiT. Chalapathi rao
1960Tamilmeenda sorgamKalaye en Vaazhkayin thisai (solo)T. Chalapathi rao
1960Tamilmeenda sorgammana naatiya medayil aadinEnT. Chalapathi rao
1960Tamilmeenda sorgamThuyiladha penn ontru kandenT. Chalapathi rao
1960Tamilraaja desingukadhalin bimbamG. Ramanathan
1960Tamilraajaa desingukaadhalin bimbham endanG. Ramanathan
1960Telugudesingu raja kathaprematoG. Ramanathan
1960Telugudesinguraja kathayenati yenatiG. Ramanathan
1961Tamilarasilankumarihaav en asai puraveG. Ramanathan
1961Tamilarasilankumarithillalangadi thillalangadiG. Ramanathan
1961Tamilpunar jenmamentrum thunbamillai ini sogamillaiT. chalapathi rao
1961Tamilpunar jenmamkannadi pathirathil(inba kaviyam)T. chalapathi rao
1961Tamilpunar jenmamullangal ontragi thullum pothileT. chalapathi rao
1961Tamilpunar jenmamurundodum naalilkarainthodumT. chalapathi rao
1961Tamilsri valliaalolamG. Ramanathan
1961Tamilsri valliainthezhuthanG. Ramanathan
1961Tamilsri valliidhaya koyil irukkaG. Ramanathan
1961Tamilsri vallikaalaan kudai pidikkaG. Ramanathan
1961Tamilsri vallinjnanappazhameG. Ramanathan
1961Tamilsri vallithaagam thaninthadhuG. Ramanathan
1961Tamilsri valliunnaye deivamenaG. Ramanathan
1961Tamilsri vallivannamigum (cho cho)G. Ramanathan
1961Tamilsri vallivanthanga mapillaiG. Ramanathan
1961Telugusrivalli kalyanamchinni chinni guvvalaraG. Ramanathan
1961Telugumaya maschindra haayiga aadana priya madiniT.M.Ibrahim
1961Telugusrivalli kalyanamom saravana bhava shanmugaG. Ramanathan
1962Tamilnaan vanangum deivamkanavum palithadhu K.V. Mahadevan
1962Tamilraani samyukthamannavar kulam paarammaK.V. Mahadevan
1962Tamilraani samyukthanenjirukkum varai ninaivirukkumK.V. Mahadevan
1962Tamilraani samyukthanilavenna pesumK.V. Mahadevan
1962Tamilraani samyukthaOh! vennilaa oh! vennilaa K.V. Mahadevan
1962Tamilraani samyukthapaavai unakku sethi theriyumaK.V. Mahadevan
1962TamilsenthamaraipoovirukkuMSV-TKR
1962TamilsenthamaraisenthamizhMSV-TKR
1962Tamilvikramathithananbin uruvamS. Rajeshwara rao
1962Tamilvikramathithankannip peNNin rOjaaS. RajeswaraRao
1962Tamilvikramathithanvannam paadutheyS. RajeswaraRao
1962TamilvikramathithanvenmughilE konja neram S. RajeswaraRao
1962Telugusrivalli kalyanamNinne koritiraG. Ramanathan
1963Tamilkaattu rojachinna chinna kannanukku K.V. Mahadevan
1963Tamilkaattu rojachinna chinna kanni enakkennaK.V. Mahadevan
1963Tamilkaattu rojaEnadi roja ennadi sirippuK.V. Mahadevan
1963Tamilkaattu rojakadhavu thirandhadhaaK.V. Mahadevan
1963Tamilkaattu rojavaNdondru vandhadhuK.V. Mahadevan
1964Tamilveeranganaineela varna kangal iranduVeda
1966Tamilchiththichanginaal paal koduthaalM.S. Viswanathan
1966Tamilchiththikaalamidhu kaalamidhu M.S. Viswanathan
1966Tamilchiththipaadum kanni(kalamidu-sad)M.S. Viswanathan
1966TamilchiththithaNNEr suduvadhennaM.S. Viswanathan
1966Telugumohini bashmasurakonda konaloS. Rajeshwara Rao
1966Telugumohini bashmasuranenu nenesumaS. Rajeshwara Rao
1966Telugumohini bashmasuraoh neeta naa needaS. Rajeshwara Rao
1966Telugumohini bashmasurapaadaali madiS. Rajeshwara Rao
1966Telugumohini bhasmasuraprasanthameS. Rajeshwara Rao
1966Telugumohini bashmasurateeyanaina oohalaS. Rajeshwara Rao
1966Telugumohini bashmasuravijayamidigoS. Rajeshwara Rao
1967Tamilengalukkum kalam varumkalla paarvai kannukku inbamMSV-TKR
1967Tamiliru malargalKadavul thantha iru malargalM.S. Viswanathan
1967Tamiliru malargalmannikka vEndukirEn ungalM.S. Viswanathan
1967Tamiliru malargalmannikka vEndukirEn ungal(pathos)M.S. Viswanathan
1967Tamilpesum deivamidhaya oonjal aada vaaK.V. Mahadevan
1967Tamilthiruvarut chelvarmannavan vanthaanadiK.V. Mahadevan
1967Teluguvasanthasenaeduru choosina reyiS. Rajeshwara Rao
1967Teluguvasanthasenaemi ivvagalavadana naaS. Rajeshwara Rao
1967Teluguvasanthasenakilakila nagavulaS. Rajeshwara Rao
1968TamilkuzhanthaikkagaAnbinaal endrumM.S. Viswanathan
1968Tamilkuzhanthaikkagathai madha megam adhu[1]M.S. Viswanathan
1968TamilkuzhanthaikkagaThottu paarungal pattu poovaiM.S. Viswanathan[2]
1968Tamilpesum deivamazhagu deivam mellaK.V. Mahadevan
1968Tamilpesum deivampathu maatham sumakkavillaiK.V. Mahadevan
1968Tamilthillana moghanambalmarainthirunthu paarkkumK.V. Mahadevan
1968Tamilthillana moghanambalNalanthaana nalanthaanaK.V. Mahadevan
1968Tamilthirumal perumaikaraiyeri mEn vilayadumK.V. Mahadevan
1968Telugumuddu papamaa brathukepamarthi
1968Malayalamaparadhinidevayaani (kumudhini priyathama)M.B. sreenivasan
1969Tamilguru dakshinaiontre ontru ontre ontru Pugazhenthi
1969Teluguraagagaalnee dhegaK.V. Mahadevan
1969Telugusivabhaktha vijayam (D)pallavi paadenuleK.V. Mahadevan
1969Malayalamkumara sambhavamnalla haimavathabhoomiyilG.Devarajan
1970Tamiledhirkaalammajaa majaa maapilleM.S. Viswanathan
1970Tamilpenn deivamthaiyoru pakkam thanthaiV. Kumar
1970Tamilvietnam Veeduendrum puthithaagaK.V. Mahadevan
1970Tamilvietnam VeeduIraivan ennai padaithaanK.V. Mahadevan
1970Tamilvietnam VeeduKannojnal aadinaarK.V. Mahadevan
1970Tamilvietnam Veedupaalakkaattu pakkathilE K.V. Mahadevan
1970Tamilvilaiyattu pillaieru perusaa indha ooruK.V. Mahadevan
1970Tamilvilayattu pillaiaasaikku pillaiK.V. Mahadevan
1970Tamilvilayattu pillaithaazhnthirunthomK.V. Mahadevan
1970MalayalamSabarimala Sri dharmasastha neyyitta vilakkuv.Dakshinamurthy
1970Malayalamvivahithapachamalayil pavizhamalayilG.Devarajan
1970Malayalamvivahithapachamalayil -sadG.Devarajan
1970Malayalamvivahithavasanthathin makalalloG.Devarajan
1971Tamilaadhi parashakthiAyi mahamAyi MaNi K.V. Mahadevan
1971Tamilaadhi parashakthinaanatchi seidhu varumK.V. Mahadevan
1971Tamilannai velankannikarunai mazhayeG. Devarajan
1971Tamiliru dhuruvamraathiri nadanthadhai M.S. Viswanathan
1971Tamiliru dhuruvamthErupaarkka vandhirukkum M.S. Viswanathan
1971Tamilkulama gunamapillaik kali theera un annai K.V. Mahadevan
1971Tamilkulama gunamaUlagil irandu kiligalK.V. Mahadevan
1971Tamiltherottamnantri solla vEndumS. M. Subbiah Naidu
1971Tamilthirumagalpunnagayil pooppokkumK.V. Mahadevan
1971TamilThenum Paalumoruvanukku oruthi entreM.S. Viswanathan
1971Telugumary mathaKarunaaMayiveG. Devarajan
1971Malayalamveilankanni mathavu karunamayiye maryamathaG.Devarajan
1972Tamilappaa taataKinnathil then eduthuV. Kumar
1972Tamilappaa taatathamizhE piLLaith thamizhEV. Kumar
1976Teluguraagaalu anuraagaaluneedagaK.V. Mahadevan
1976Teluguraagaalu anuraagaaluPonchina nee roopamK.V. Mahadevan
1986Tamilaayiram kannudayaalAmma thaaye magamaayeShankar Ganesh
1986Tamilthaaikku oru thaalattualayinil mithanthathoru padaginilIlayaraja
1986Tamilthaaikku oru thaalattuilamai kaalam ingeentru Ilayaraja
1987Telugunagadevi mahatyamamma thallishankar ganesh