“ இன்ப லோக ஜோதி ரூபம் போலே,
நீலவான வீதி மேலே”,
என்றொரு இனிமையான பாடலை நினைவிருக்கிறதா? “ மாலை
நேரத்திலே யமுனா தீரத்திலே”, “ஓ எழில்
ராஜா” போன்ற மெலடிகளை கேட்டிருக்கிறீர்களா? இதற்கெல்லாம் சொந்தக்காரர் தான்
மதிப்புக்குரிய இசை அமைப்பாளர் “பெண்டியாலா நாகேஸ்வர ராவ்” அவர்கள். பி.சுசீலா
என்னும் குயிலை, “பெற்ற தாய்” திரைப்படத்தின் மூலமாக திரை உலகுக்கு
அறிமுகப்படுத்தியவர். ஏற்கனவே நடிகர் “நாகேஸ்வர ராவ்” பிரபலமாக இருந்ததால்,
பெண்டியாலா என்னும் பிறந்த ஊரின் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்..
அப்பெயரிலேயே அவர் பின்னாளில் அறியப்பட்டார். இவர் 100-க்கும்
மேற்பட்ட படங்களுக்கும், பக்திப்பாடல்களுக்கும், இசை அமைத்து இருக்கிறார். தெலுங்கு,
தமிழ், கன்னட மொழிகளில் இசை அமைத்து இருக்கிறார்.
அவரின் தனித்தன்மையாக குறிப்பிடுவது யாதெனில்,
மிக கடினமான சங்கதிகளை போட்டு, அவர் கம்போஸ் செய்யும் பாடல்கள் தான். எந்த
சங்கதிகளையும் அனாயாசமாக பாடும் கண்டசாலா போன்றோரே ரிக்கார்டிங் முடிவதற்குள்
திணறி விடுவார்களாம். பாடி முடித்த பின், அந்த பாடல்களால், பாடகர்களுக்கு பெரும்
திருப்தியும், நற்பெயரும் கிடைத்ததோடு சாகாவரம் பெற்ற பாடல்களும் கிடைத்தது.
பாடல்களில் ஒரு நல்ல தரம் இருக்கும் படி இசை அமைத்த அவர் போதிய அளவு புகழப்படாத
ஒரு நல்ல இசைக்கலைஞர். ஒரு பேச்சுக்காக இதை சொல்லவில்லை. அவர் இசை அமைத்த பல
பாடல்களை கேட்ட போது அவர் மேல் ஒரு பெரிய மரியாதை ஏற்பட்டது.
mohana raga maga , thirumala thirupathi
venkateswara (Mahamantri timmarasu)
Yamuna theeramuna (jayabheri)
nee daya rada ee (atta
okinti kodale)
jaya Jaya Sharada, (Mahakavi kalidasu),
Neera jaala galada, oho mohana roopa (sri Krishna
tulabaram),
kalagantino swamy (daana veera soora karna)
oh nelaraja (bhatti
vikramarka) , Natinchana (Bhatti Vikramarka)
Ninnu choosinandaga
(bhaktha sabari)…
இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். கிளாசிகல் ஆகட்டும்,
மெல்லிசை ஆகட்டும் அதில் ஒரு தனித்துவமும். ஜீவனும் இருக்கிறது இவர் இசையில்.
பெண்டியாலா அவர்கள் 1948-இல்
“துரோகி” என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர். நான்கைந்து
படங்கள் இசை அமைத்த பின் கிடைத்த வாய்ப்பு தான் “கன்னதல்லி” பட வாய்ப்பு. (தமிழில்
பெற்ற தாய்). அப்படத்தில் இசைக்குயில் பி.சுசீலாவை அறிமுகம் செய்தார். 1952-ஆம்
வருடம் “பெற்ற தாய்” பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பி.சுசீலா அவர்களை வைத்து
முதலில் ஒரு ஸ்லோகமும், அதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஏ.எம்.ராஜாவுடன்
ஒரு டூயட்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. “எந்துக்கு பிலிச்சாவெந்துக்கு” என
தெலுங்கிலும், “ஏதுக்கு
அழைத்தாய் ஏதுக்கு” என தமிழிலும் துவங்கும் அந்த பாடல்.
தான் அறிமுகப்படுத்திய
பாடகியின் தரத்தில் அவருக்கு நிறைய மன நிறைவு இருந்திருக்க வேண்டும். அதனால் தான்
என்னவோ அதற்கு பின் அவர் இசை அமைத்த எல்லா படங்களிலும் ஒரு பாடலையாவது பி.சுசீலாவை
பாட வைத்து இருக்கிறார். பி.சுசீலா அவர்கள் பெண்டியாலா அவர்களின் இசையில் 400-க்கும்
அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார். 1977-இல் பி.சுசீலா “கலஃகிந்தனோ ஸ்வாமி” என்ற
தெலுங்கு பாடலுக்காக இரண்டாவது மாநில விருதை பெற்றார். அந்த பாடலுக்கு இசை
அமைத்தவர் பெண்டியாலா அவர்கள். எத்தனை கஷ்டமான கம்போசிஷன் ஆக இருந்தாலும் பி.சுசீலா பாடி விடுவார் என்ற
நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் தான் மிக அற்புதமான பல பாடல்களை பாடும்
வாய்ப்பு சுசீலாம்மாவுக்கும் கிடைத்தது. பெண்டியாலா அவர்களின் ரிக்கார்டிங்க்கு
செல்லும் போது தேவையான குரல் பயிற்சியுடன் தான் செல்வாராம். பி.சுசீலா அவர்கள்
மிகவும் மதிக்கக்கூடிய ஒரு இசை அமைப்பாளர் பெண்டியாலா அவர்கள்.
பி.சுசீலா அவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த
பெரிய “ப்ரேக்” என்றால், “கணவனே கண்கண்ட தெய்வம்” மற்றும் “தொங்க ராமுடு” படங்கள்.
ஆதி நாராயண ராவ் (நடிகை அஞ்சலி தேவியின் கணவர்) அவர்கள் ஒரு அருமையான வாய்ப்பை
கொடுத்து தமிழில் அவர் திறமையை நிருபிக்க உதவினார். தெலுங்கில் “தொங்க ராமுடு”
மூலமாக ஒரு ப்ரேக் கொடுத்தார் பெண்டியாலா. “அனுராகமு விரிசென ஈ வேளா”
என துவங்கும் அந்த பாடலில் தென்றலின் சுகம் இருக்கும். நடிகை ஜமுனா அத்தனை அழகாக
நடித்து இருப்பார். அந்த பாடலின் வெற்றிக்கு பின் தான் சாவித்திரி இனி சுசீலாவும்
எனக்காக பாடட்டும் என தயாரிப்பாளர்களிடம் கூறினாராம். அந்த படத்தில் “balagopala maamudhara krishna” என்ற சாஸ்திரிய சங்கீத பாடல்
ஒன்றையும் பாட வைத்தார். தேசத்தந்தை மகாத்மா காந்தியை பற்றி பாடும் “பலே
தாத்தா மன பாபுஜி” பாடல் இப்போதும் சுதந்திர திருநாளில் தவறாமல்
கேட்டுக்கொண்டிருக்கிறது. “தெலிசிந்தா
பாபு இப்புடு” என்று குழந்தைகள் பாடும் பாடலும் படத்தில் இடம் பெற்றது. இப்பாடல்கள்
சுசீலாவுக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது. இந்த பாடல்களை
கேட்டுத்தான், தெலுங்கு திரை இசை உலகின் ஜாம்பவான், இசை அமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்கள் மிஸ்ஸியம்மா (தமிழ்
மற்றும் தெலுங்கு) படத்தில் பி.சுசீலாவுக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தார்கள். அதிலும்
நடித்தது ஜமுனா தான். பிருந்தாவனமும் நந்த குமாரனும், அறியா பருவமடா என இரு
பாடல்களை பாடும் வாய்ப்பை கொடுத்தார். அதற்குப்பின் எஸ்.ராஜேஸ்வரராவின் ஆஸ்தான
பாடகி ஆனார் பி.சுசீலா. “தொங்க ராமுடு” படம் தமிழில் “திருட்டுராமன்” என்ற பெயரில் மொழிமாற்றம்
செய்யப்பட்டது. “எந்தன் காதலும் “, “பலே சாது எங்கள்”, “தெரிஞ்சிக்கோ பாபு”
பாடல்களை தமிழில் பாடினார் சுசீலா அவர்கள்.
இனி பெண்டியாலா இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களில் சில முத்தான
பாடல்களை பற்றி குறிப்பிடுகிறேன்.
“muddu bidda” (1956) படத்தில் “Choodalani undi” மற்றும் ஜாவளி
டான்ஸ் “antalone tellavare” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. “Bhagyarekha” (1957) படத்தில்
“nuvvundedi aa koda pai” ஒரு அருமையான பாடல். “kaaru cheekati” , “oh naa moravina raja”, “manasooge thanuvu” உட்பட பத்து பாடல்களுக்கு மேல் அந்த படத்தில் பாடினார். அதே வருடம் வெளிவந்த “akka chellelu” படத்தில் “chekka chekalade”
உட்பட ஐந்து பாடல்கள் பாடினார். எம்.எல்.ஏ படத்தில் சில பாடல்களை பாடினார். எம்.எல்.ஏ படம் தமிழிலும் அதே பெயரில்
வெளியானது. அதே வருடம் “நான் வளர்த்த தங்கை” என்ற தமிழ் படதுக்கும் இசை அமைத்தார்
பெண்டியாலா. அதில் “ஆண்கள்
மனமே அப்படித்தான்”, “இன்ப
முகம் ஒன்று கண்டேன்” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. “sati
savitri (1957)” படத்தில் “ Challani thalli”, “ dharma edhi”
உட்பட சில பாடல்களை பாடினார்.
1958-இல் வெளிவந்த “atha okkinti kodale” ( தமிழில் – “மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே”) படத்தில் “Nee daya rada”, naalo
kaliginavi”, “ashokavanamuna seetha”
என சில பாடல்களை பாடினார். Ganga
Gowri Samvadham படத்தில் சில பாடல்களை
பாடினார். Jayabheri (1959) பட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. “daivam idhena” பாடல் டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடிய ஒரு தெலுங்கு பாடல். “ Sangeetha sahityame”, Yamuna teeramuna, saval saval, unnara jodunnara, வரிசையாய் ஹிட் அடித்த
பாடல்கள். இப்படம் தமிழிலும் “கலைவாணன்” என்ற பெயரில் வெளியானது. “மாலை நேரத்திலே”
பாடல் பிரபலமான பாடல். “sri
venkateswara mahatyam” படத்தில் “evaro athadevaro” என குயிலை வெல்லும் குரலில் ஒரு பாடல் இருக்கிறது. அதற்கு இணையான
இனிமையுடன் “kalaga kammani kalaga” பாடலும் “ jhuma jhuma jhum jhum” என்ற பாடலும் குறிப்பிடப்படத்தக்கவை. இதே வருடம் “ Sri Krsihna Garudi” என்ற பெயரில் ஒரு கன்னடப்படமும் வெளிவந்தது. “ee
maayaveno” என சுசீலா அவர்கள் குரலில் ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்.
1960-இல்
வெளிவந்த “பக்த சபரி” படத்தில் பாடல்களும், ஸ்லோகங்களுமாய் கிட்டத்தட்ட 12 பாடல்கள். அதில் “ Ninnu
choosunandaga” என்ற பாடலில் ஒரு வயதான மூதாட்டிக்கு குரல்
கொடுத்து இருப்பார். தவிர “emi rama katha”. Koorimi thamunitho, “neela megha
shyama” போன்ற பல
நல்ல பாடல்கள் இடம் பெற்றன. இப்படம்
தமிழிலும் “பக்த சபரி” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “bhatti vikramarka” படத்தில்
“oh nela raja vennela raja” என கண்டசாலாவுடன் பாடிய பாடல் மிக பிரபலம். கேட்க
கேட்க சலிக்காத மெலடி. “ Oh sailasudha matha”, “O sundari andhame”, பாடல்களும் பிரபலமானவை. “Oh nela raja” பாடல் தமிழில் “ஓ எழில் ராஜா” என்ற பெயரில் ஒலித்தது.
“Mahakavi kalidasu” படத்தில் இடம் பெற்ற “ Jaya Jaya Jaya Sharada “ பாடலின்
அழகைப்பாருங்கள். இசை அமைப்பாளரும், பி,சுசீலாவும் ரசித்து ரசித்து பணி புரிந்து
இருக்கிறார்கள். இடையிடையே யில் வரும் ஆலாபனைகளை கேளுங்கள். பி.சுசீலாவின் குரலில்
என்னவெல்லாம் வித்தைகளை கொண்டுவந்திருக்கிறார், இசை அமைப்பாளர் !! . “yendukku vesina veshamaya” பாடலும்
வெற்றி பெற்ற பாடல். அதே வருடத்தில் “uyyala
jampala”, “nithya Kalyanam Pachatoranam” படங்களில் இடம் பெற்ற பாடல்களும் தரமான
பாடல்களாய் அமைந்தன. “baava
maradallu” படத்தில் கண்டசாலாவுடன் பாடிய “payninche mana valapulu” பாடல் குறிப்பிடப்படத்தக்கது.. 1961-இல்
வெளிவந்த “jagadeka veeruni katha” படத்தில்
எல்லா பாடல்களுமே ஹிட். கண்டசாலாவுடன் பாடிய “Ayyinadhemo ayyinadhi”, “manoharamuga
madhura”
பாடல்கள் பிரபலமானவை. பி.லீலாவுடன் இணைந்து பாடிய “jalakaalaatalalo”, “jaya jaya jagadeka”, “varinchi vachina manava” பாடல்கள் குறிப்பிடப்பட
தக்கவை. இப்படம் கன்னடத்தில் அதே பெயரிலும், தமிழில் “ஜெகதல பிரதாபன் என்ற பெயரிலும்
வெளிவந்தது. “ஜலம் தனில் ஆடுகிறோம்”, “ஆவதென்னவோ “, ”வனத்தில் ஓடிய” என
ஆரம்பிக்கும் இந்த பாடல்கள். “Krishna prema” படத்தில் பல பாடல்கள் பாடினாலும், PBS-உடன்
பாடிய “Sudha madhuramu” பாடல் தனிச்சிறப்புடன் ஒலிக்கிறது. மற்ற பாடல்களும் மிக சிறந்த
பாடல்கள். “vagdanam” படத்தில் இடம் பெற்ற “ Naa kanti papalo “ பாடலை
கேட்டு மயங்காதோர் இருக்க முடியாது. அப்படி ஒரு இனிமையான மெலடி “Velugu
needalu” படத்தில் இடம் பெற்ற “haayi haayiga jabilli tholi” இன்னொரு
சூப்பர் மெலடி. கண்டசாலாவும். பி.சுசீலாவும் அப்படி ஒரு மெலடி மேஜிக்
செய்திருப்பார்கள்.
1962 –இல்
வெளிவந்த “Chitti
thammudu” படத்தில் “mayabazaru lokam” “Dikkuleni
vaalaki”, “ adagali adagali “
உட்பட ஆறு
பாடல்களை பாடினார் பி.சுசீலா. “mahamantri timmarasu” படத்தில்
“mohana raga maha” என ஒரு
டூயட் இருக்கிறது கேளுங்கள். இப்படி ஒரு டூயட் இனி வருமா என எங்க வைக்கும்
விதத்தில் பாலையும் தேனையும் அள்ளி தெளித்திருப்பார் பெண்டியாலா. தமிழில்
“ஜி.ராமநாதன் அவர்களின் , “முல்லை மலர் மேலே” பாடலை கேட்ட போது தோன்றிய மலைப்பு
இந்த பாடலை கேட்ட பின்னும் தோன்றியது. அதே படத்தில் எஸ்.வரலக்ஷ்மி, பி,சுசீலா
இணைந்து பாடும் “திருமல
திருப்பதி வெங்கடேஸ்வரா” பாடல் இன்னுமோர் இசை விருந்து. இரு பெண்குரல்கள்
இணைந்து பாடும் போது அப்படியே ஒன்றோடொன்று இழைய வேண்டும். பி.சுசீலாவுக்கு அந்த
வரம் கிடைத்து இருக்கிறது. ஜிக்கியுடன்
“மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக”, பி.லீலாவுடன் “ஜகம் புகழும்”, சூலமங்கலத்துடன்
“திருப்பரங்குன்றத்தில்”, எஸ்.வரலக்ஷ்மியுடன் “திருமல திருப்பதி”, A.P.கோமளாவுடன்
“குயிலோசையை வெல்லும்”, எல்.ஆர்.ஈஸ்வரியுடன் “ஓ ஓ சின்னஞ்சிறு மலரை” முதல்
சித்ராவுடன் “ஸ்ருங்கரானிக்கி” பாடல் வரை எல்லோர் குரலோடும் அழகாய் இழையும் குரல்
பி.சுசீலா அவர்களின் குரல்.
”Sri krishnarjuna yuddham” படத்தில் “Manasu parimalinchane” என்றொரு
அருமையான டூயட் இருக்கிறது. தவறாமல் அனுபவித்து கேட்க வேண்டிய பாடலில் ஒன்று. “Neekai Vechidinayya” இன்னுமோர் அழகான பி.சுசீலாவின் தனிப்பாடலும் குறிப்படப்பட வேண்டியது. இப்படம்
தமிழிலும், கன்னடத்திலும் அதே பெயரில் வெளியானது. “ மனசு
பரிமளித்ததே” என தமிழிலும் ஒலித்தது அப்பாடல். “Raamudu
Bheemudu” படத்தில் “telisindile telisindile nelaraju nee roopu” என
இன்னுமோர் மனசை அள்ளும் டூயட் இருக்கிறது. தேன்குரல் குரல் என்பார்களே, அதற்கு
சாட்சி இந்த பாடல். “eedu jodu” படத்தில்
“idhemi lahiri” என இன்னுமோர் மெலடி.
1964-இல் “Sabash
Suri” படத்தில் “ee
vennela”, kalavani aliveni” உட்பட
ஆறு பாடல்களை பி.சுசீலா பாடினார். 1966-இல் வெளிவந்த “ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்”
படத்தில் இசை ஆறு ஓட விட்டுருப்பார் பெண்டியாலா. “
Nirajaala galada”, “Konumithe kusumanjali”, “oho mohana roopa” உட்பட 11
பாடல்களை பாடினார் பி.சுசீலா. “neera jaala galada” பற்றி சொல்ல வேண்டுமானால், “என்ன ஒரு கம்போசிஷன்
!!!!”, இப்போதும் கூட ரியாலிட்டி ஷோக்களில் இப்பாடலை தவறாமல் பாடுவதுண்டு.
பி.சுசீலா பின்னி எடுத்திருப்பார். “Bandhipotu Dongalu” படத்தில் “Vinnanule priya” பாடல்
இதம். “முத்துக்களோ கண்கள்” பாடல் சிறிய மாற்றத்துடன் கண்டசாலா- பி.சுசீலா
குரல்களில் ஒலித்தது. “Yadanu dachina mounaveena ” குறிப்பிடத்தக்க
பாடல். பாக்யசக்ரம் படத்தில் “vaana kadu vaana kadu” குறிப்பிட
பட வேண்டிய பாடல். “Satha
harischandra” படம் தெலுங்கிலும் கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் “ananda sadana” என ஒரு தாலாட்டுப்பாடல் இருக்கிறது. தவறாமல்
கேளுங்கள்.
“umachandi gowri shankarula katha” படத்தில்
“Yemito Ee maya”, “aakasaki ee vaname” போல் அருமையான பாடல்கள் இடம் பெற்றன. Manasu mangalyam படத்தில்
“ee musugu theeyaku”, என்ற
சோகப்பாடல் இருக்கிறது. அருமையான ஆலாபனைகள் பாடலில் இருக்கிறது. “Sri Krishna viajyam” படத்தில் “pillana grovi pilupu” , jayjamma thallikki jey jeylu, “haayi haayi emito” “ramani hoo ramani”, joharu sikhipincha mouli, போல பல நல்ல
பாடல்கள் இடம் பெற்றன. “Joharu sikhipincha mouli” பாடலுக்கு
நடம் ஆடியவர் நடிகை “ஹேமாமாலினி” அவர்கள். “Naa Tammudu” படத்தில் “Chinnari papala” பாடலை பேபி ஸ்ரீதேவிக்காக பாடி இருக்கிறார். “Mathru
devatha” படத்தில் “nee needaga nannu” , “ammakku neeviddaru okate” பாடல்கள்
குறிப்பிடப்படத்தக்கவை.
Sri Rajeswari vilas coffee club படத்தில் “aakasa pandirilo”, “raakoyi
anukonee athithi” பாடல்கள் மிக பிரபலம் ஆனவை. “ Chanakya
Chandragupta” படத்தில் “Chiru
navvula tholakrilo”, “idhi tholi reyi” போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள். “Daana veera soora karna” படத்தில்
பாடிய “ kalagintino swamy “ பாடலுக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான
ஆந்திர மாநில விருதை பெற்றார் பி.சுசீலா. அதே படத்தில் “Chitram Bhalare Vichitram” பாடல்
மிக பிரபலமான பாடல். “ Telisenule priya rasika”, “ye talli ninu” போன்றவை குறிப்பிடத்தக்க பாடல்கள். 1978-இல்
வாணிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த “ Sati Savitri ” படத்தில் 15-க்கும்
மேற்பட்ட பாடல்களை பாடினார் பி.சுசீலா ( Proof ).
“Srirama
pattabhishekam” படதுக்காக வயதான குரலில் “Pratikoma
naa kalisi” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா. “aalapinchana
eevela “. “Sarvamangala”, “Raajounata” பாடல்களும் ஹிட்டான பாடல்கள். “Sri
Tirupathi venkateswara kalyanam” படத்தில் “idhi naa hrudayam” உட்பட பத்து பாடல்களுக்கு
மேல் பாடினார். எண்பதுகளில் “karpoora Shilpam”,
“kotha vennela”, “kalaranjani” போன்ற படங்களுக்கு இசை
அமைத்தார் பெண்டியாலா. எல்லா படங்களிலும் படி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.
முக்கியமான ஒரு ஆல்பமாக
குறிப்பிடப்பட வேண்டியது “Telugu
Jateeya Geetalu”. இதில் “ Jana gana mana”, “ maa telugu
talliki “, “ Telugu patakam” மற்றும் “ vande mataram “ பாடல்கள் இடம் பெற்றன. எல்லாமே
முத்துக்கள்.
பக்தி ஆல்பங்களில்
“ஸ்ரீ கிருஷ்ண கர்ணாமிர்தம்” ஆல்பம் குறிப்பிடப்படத்தக்கது.
ஆரம்பத்தில்
பெண்டியாலாவின் இசையில் 400 பாடல்களுக்கு மேல் பாடி
இருக்கிறார் என கூறி இருந்தேன். இது எங்களிடம் இருக்கும் பாடல்களின் அடிப்படையில்
மட்டுமே. ஆனால் பல படங்கள் குறிப்பாக, பல புராண, இதிகாச படங்கள் தமிழில் டப்
செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக “சதி சாவித்திரி” படம் “கற்புக்கரசி சாவித்ரி”
என்ற பெயரிலும். “ Sri pramaleenjaneyam” படம் “பிரமீளா அர்ஜுனா” என்ற பெயரிலும், “sri
Krishna tulabaram” படம் “கிருஷ்ண துலாபாரம்” என்ற பெயரிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு
இருக்கிறது. இதைப்போல் பல படங்கள் இருக்கிறது. அதில் இருக்கும் பாடல்களின் லிஸ்ட்
கிடைக்கும் போது இந்த எண்ணிக்கை 500- ஐ தாண்டலாம்.
Year Movie Song | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Songs in Tamil :
Year | Movie | Song | |
1952 | petra thaai | yethukku azhaithaai yethukku | |
1952 | petra thaai | Slokam | |
1956 | thiruttu raman | bhale saadhu engal | |
1956 | thiruttu raman | endhan kaadhalum | |
1956 | thiruttu raman | therinjukko babu | |
1957 | MLA | arivilum kalayilum | |
1957 | MLA | kottayul | |
1958 | naan valartha thangai | iysa pysa ulagamada | |
1958 | naan valartha thangai | paarthaya maanidanin leelayai | |
1958 | naan valartha thangai | aangal maname appadithan | |
1958 | naan valartha thangai | Inba mugam ontru kanden | |
1958 | veettukku vantha varalakshmi | kanneerum marainthu | |
1959 | kalaivaanan | chikkatha meenum | |
1959 | kalaivaanan | deivam nee thaana | |
1959 | kalaivaanan | irukkara ingirukkara | |
1959 | kalaivaanan | maalai nErathilE | |
1959 | sowbhagyavathi | ohoho machan | |
1960 | bhaktha sabari | annal unnai | |
1960 | bhaktha sabari | ariyamal thavaru | |
1960 | thooya ullam | desamengum viduthali | |
1960 | thooya ullam | inba loga jothi roopam | |
1960 | thooya ullam | intha pazhasai avuthu | |
1960 | bhaktha sabari | janaki thodara | |
1960 | thooya ullam | kanne kanne unniathodum | |
1960 | thooya ullam | naano un adimai | |
1960 | bhatti vikramathithan | Oh ezhil raja | |
1960 | bhatti vikramathithan | O sundara | |
1960 | thooya ullam | o velappa thanga velappa | |
1960 | bhaktha sabari | oorodu vaazha venum | |
1960 | bhaktha sabari | raama bhaadame | |
1960 | bhaktha sabari | rama nyayama | |
1960 | thooya ullam | valarum kalayin | |
1960 | bhaktha sabari | o aayi nee | |
1961 | maamiyarum oru veetu marumagale | asoka vanathil seetha | |
1961 | maamiyarum oru veetu marumagale | sodhanai eno pedhai | |
1961 | maamiyarum oru veettu marumagale | vaa entru sonnadhum | |
1963 | jagathala prathapan | aavathennavo | |
1963 | jagathala prathapan | jalam thanil adugirom | |
1963 | jagathala prathapan | vanathil odiya | |
1963 | sri krishnarjuna yuddham | manasu parimalithade | |
0 | sri Krishna karnamirtham | ahimakara | |
0 | sri Krishna karnamirtham | arunamrutha | |
0 | sri Krishna karnamirtham | asthiswatharuni | |
0 | sri Krishna karnamirtham | barhotham savila | |
0 | sri Krishna karnamirtham | chitam thathe | |
0 | sri Krishna karnamirtham | hey deva | |
0 | sri Krishna karnamirtham | hey gopalaka | |
0 | sri Krishna karnamirtham | jaya jaya devadeva | |
0 | sri Krishna karnamirtham | kalathvanitha | |
0 | sri Krishna karnamirtham | karara vinthena | |
0 | sri Krishna karnamirtham | kusuma sheera | |
0 | sri Krishna karnamirtham | lavanyaveeji | |
0 | sri Krishna karnamirtham | madhuram adharabimbe | |
0 | sri Krishna karnamirtham | madhuram madhuram | |
0 | sri Krishna karnamirtham | mandhara moule | |
0 | sri Krishna karnamirtham | mukulayamana | |
0 | sri Krishna karnamirtham | sajala jala neelam | |
0 | sri krishna karnamrutham | samsare | |
0 | sri Krishna karnamirtham | kasthoori tilakam |
KANNADA
Film | Movie | Songs | |
1961 | jagatheeka veeruni katha | aadadheno ayithe priye | |
1961 | jagatheeka veeruni katha | adhi lakshmi | |
1961 | jagatheeka veeruni katha | manohara mukha madhura | |
1961 | jagatheeka veeruni katha | sthree naarttagalu | |
1965 | Sathya Harichandra | aanada sadana | |
1965 | Sathya Harichandra | neenu namage siggi | |
1965 | Sathya Harichandra | sathyavadhu | |
1963 | sri krishna arjuna yudha | manavu prema | |
1963 | sri krishna arjuna yudha | ninage kaithidenayya | |
1963 | sri krishna arjuna yudha | swamigasavai | |
1963 | sri krishna arjuna yudha | ella mangala | |
1958 | sri krishna garudi | ee maayaveno |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக