பி.சுசீலா
அறிமுகமாகி நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பின்னணிப்பாடகியாக அறிமுகமானார்
எஸ்.ஜானகி. ஏ.வி,எம் இல் பி.சுசீலாவின் ஒப்பந்தம் முடிந்த பின் எஸ்,ஜானகியை ஏ.வி.எம்
பாடகியாக ஒப்பந்தம் செய்தனர். பி.சுசீலா அவர்கள் 1950-இல்
இருந்தே பாடினாலும், படிப்படியாகத்தான் உயர்ந்தார். அவரது திறமையை
ஏ.வி.எம் அவர்கள் அங்கீகரித்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்வு வந்தது. ஜி.ராமநாதன்,
எஸ்.ராஜேஸ்வர ராவ், எம்.எஸ்.வி, கே,வி,எம் போன்றோர் இசையில் பாடவே சில வருடங்கள்
ஆயிற்று. சாவித்திரி, பத்மினி போன்ற பெரிய நடிகைகளுக்கு பின்னணி பாடவே மூன்று வருடங்கள் ஆயிற்று. 1955-இல்
இருந்து பி.சுசீலாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தது.
1957-இல்
அறிமுகமான, எஸ்.ஜானகிக்கு அறிமுகம் அமர்க்களமாகவே இருந்தது. ஏ.வி.எம் பாடகி
என்பதாலேயே அறிமுகமான வருடத்திலேயே பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதே வருடத்திலேயே தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என எல்லா
மொழிகளிலும் பாடினார். பெரிய பேனர், பெரிய இசை அமைப்பாளர்கள், பெரிய
கதாநாயகிகள் இடம் பெற்ற படங்களில் பாடினார். பெரிய அளவில வருவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அதிகம் நீடிக்கவில்லை. அக்கால கட்டத்தில் கதாநாயகிகளுக்கு ஹெவியான
கதாபாத்திரங்கள் அமைந்தன. அதனால் பாடல்களில் வெயிட்டான குரல்கள் தேவைப்பட்டன. கர்நாடக இசை சார்ந்து அமைக்கப்பட்ட பாடல்களை பாடும் குரலில் weight இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எஸ்,ஜானகியின் குரல் ரொம்ப
மெல்லியதாக இருந்ததால், பல கதாநாயகிகளின் பாத்திரங்களுக்கு பொருந்தவில்லை. பாடிய பாடல்கள் அதிக
அளவில் பிரபலம் ஆகவில்லை. வெற்றி பெற்ற படங்களும் குறைவு தான். ஒரு வருடத்திலேயே ஏ.வி.எம்முடன்
செய்து கொண்ட ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. இப்படி பல காரணங்களால் பாடும் வாய்ப்பும்
குறைந்தது. இருந்தாலும், இசை அமைப்பாளர் டி..சலபதி ராவ், ஜி.கே.வெங்கடேஷ், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர்
வாய்ப்பு அளித்து வந்ததால் ஓரளவு தாக்குப்பிடித்து வந்தார். ( பின்னாளில் கூட
சலபதி ராவிடம் உதவியாளராக இருந்த சத்யம், வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த இளையராஜா
அவருடைய முன்னேற்றத்தில் பங்கேற்றனர்.) மலையாளத்தில் எம்.எஸ்.பாபுராஜ் அவர்கள்
இசையில் பாடிய பார்கவி நிலையம் (1964) பாடல்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாபுராஜின் இசையிலும் மற்றவர் இசையிலும் மலையாளத்தில் பாடி வந்தார். அதே நேரத்தில் அங்கு முன்னணியில் இருந்த தேவராஜன்
பி.சுசீலாவையே பாட வைத்தார் . கன்னடத்தில் விஜயபாஸ்கர் சுசீலாவுக்கும்,
ஜி,கே,வெங்கடேஷ் ஜானகிக்கும் வாய்ப்பு அளித்து வந்தார்கள்.
எஸ்.ஜானகி அவர்களுக்கு சில தனித்துவங்கள் உண்டு. குழந்தைக்குரலில் பாடுவதில் எஸ்.ராஜேஸ்வரி பெயர் பெற்றவர். அவரைப்போலவே எஸ்,ஜானகியும் குழந்தைக்குரலில் பாடி பெயர் பெற்றவர். முக்கல் முனகல் பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கென ஒரு தனித்துவம் உண்டு. எண்பதுகளில் அந்த மாதிரி பாடல்களில் எஸ்.ஜானகியும் வெற்றி பெற்றார். தவிர சிங்காரவேலனே போல செமி கிளாசிகல் பாடல்களிலும், "மச்சான பாத்தீங்களா" போல கிராமியப்பாடல்களிலும் அவரால் மிளிர முடிந்தது. எல்லா வகை பாடல்களும் அவர் குரலில் வெளி வந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி இசை சார்ந்த பாடல்களுக்கு அவர் குரல் பொருந்தும் என கேள்விப்பட்டதுண்டு.
எஸ்.ஜானகி அவர்களுக்கு சில தனித்துவங்கள் உண்டு. குழந்தைக்குரலில் பாடுவதில் எஸ்.ராஜேஸ்வரி பெயர் பெற்றவர். அவரைப்போலவே எஸ்,ஜானகியும் குழந்தைக்குரலில் பாடி பெயர் பெற்றவர். முக்கல் முனகல் பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கென ஒரு தனித்துவம் உண்டு. எண்பதுகளில் அந்த மாதிரி பாடல்களில் எஸ்.ஜானகியும் வெற்றி பெற்றார். தவிர சிங்காரவேலனே போல செமி கிளாசிகல் பாடல்களிலும், "மச்சான பாத்தீங்களா" போல கிராமியப்பாடல்களிலும் அவரால் மிளிர முடிந்தது. எல்லா வகை பாடல்களும் அவர் குரலில் வெளி வந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி இசை சார்ந்த பாடல்களுக்கு அவர் குரல் பொருந்தும் என கேள்விப்பட்டதுண்டு.
பி.சுசீலாவையும்
ஜானகியையும் ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கிட்டத்தட்ட ஒரே கால
கட்டத்தில் அறிமுகமாகி நீண்ட ஆண்டுகள் இத்துறையில் பணி ஆற்றியவர்கள் என்பதை தவிர வேறு
ஒற்றுமை இல்லை. இருவரின் குரலின் தன்மையும் வெவ்வேறானவை. குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், 80-களில் எஸ்,ஜானகி தமிழ், கன்னடத்தில் முதன்மை இடத்தில் அமர்ந்த போதும், பி.சுசீலா அவருக்கு இணையாக பாடிக்கொண்டு தான் இருந்தார். ( ஆதாரம் ). பி.சுசீலா தெலுங்கில் முதன்மை இடத்தில் இருந்தார். தொண்ணூறுகளில் இருவரின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்று தான் (proof) . தமிழில் சில குறிப்பிடத்தக்க படங்களில் எஸ்.ஜானகி பாடினார். ஆனால், பி.சுசீலாவுக்கு திரைப்படங்கள் தவிர நிறைய பக்திப்பாடல்கள் பாடும் வாய்ப்புகளும் வந்தன. (proof1, proof2 ). ஐம்பதுகளின் பின்பாதி,. அறுபது. மற்றும் எழுபதுகளில் பி.சுசீலாவின் கொடி பறந்தது. அப்போதைய பாடல்களுக்கு வேண்டிய குரல் தரம், இனிமை, இளமை, வார்த்தை சுத்தம், சுருதி சுத்தம், எவ்வகை பாடலானும் அதற்கு உயிர் கொடுப்பது, எந்த நடிகைக்கானாலும் பொருந்துகிற குரல் என பல்வகை ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்ததால் இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகைகள் பி.சுசீலாவையே தங்கள் சாயிஸாக கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இசை அமைப்பாளர்களுக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. இசை அமைப்பாளர்கள் தங்கள் மனதில் நினைத்ததை இசைக்கருவி மூலமாக இசைத்து விடலாம். அதை அப்படியே குரலில் கொண்டு வருவது சிலருக்கே சாத்தியம் ஆகும். அப்படி ஒரு வரமாய் கிடைத்தது பி.சுசீலா அவர்களின் குரல். அதனாலே எல்லா தென்னக மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. காலையில் பெண்டியாலா இசையில் கடினமான சங்கதிகளை போட்டு பாட வேண்டி இருக்கும். மதியம் ராஜேஸ்வர ராவ் இசையில் இன்னொரு கஷ்டமான பாடலை பாடி விட்டு, எம்.எஸ்.வி இசையில் பாட சென்றால். அவர் முழு வால்யுமில் பாட வைத்து ரெகார்ட் செய்வார். மாற்றங்களை செய்து கொண்டே இருப்பார். ஒரு பாடலில் ஏ.எம்.ராஜாவின் மென்மையான குரலுக்கு ஈடு கொடுத்தால், அடுத்த ரிக்கார்டிங்கில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும். தூங்க மட்டுமே நேரம் கிடைக்கும். அப்போது ஜானகிக்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்தன. எப்போதாவது தான் சொல்லிக்கொள்ளும் படியாக பாடல்கள் அமைந்தன. இயக்குனர் ஸ்ரீதர் கூட சில படங்களுக்கு பின் மீண்டும் சுசீலாவையே பாட வைத்தார். மலையாளமும், கன்னடமும் ஜானகிக்கு கொஞ்சம் கை கொடுத்தன. சின்ன பட்ஜெட் படங்களும் கொஞ்சம் உதவின. சினிமாவில், பத்து முதல் பதினைந்து
வருடங்கள் முன்னணியில் இருந்தவரையும், முப்பத்தைந்து வருடங்கள் முன்னணியில் இருந்தவரையும் எப்படி ஒப்பிடுவது? அதிலும் 15
வருடங்கள் பி.சுசீலாவுக்கு போட்டியே இல்லாத நிலை, அதனால் பி.சுசீலாவின்
சாதனைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சாதித்த பாடகிகள் தென்னிந்தியாவில் வரவில்லை
என்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
அதே போல் ஒருவரால்
இன்னொருவர் மார்க்கெட் போயிற்று என்று சொல்வதை கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும்
குறிப்பாக பி.சுசீலாவுக்கு இன்னொருவர் மார்க்கட் பற்றி எல்லாம் யோசிக்க கூட
முடியாத அளவுக்கு வாய்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன. பெரும்பாலான வேளைகளில் அவர்
கால்ஷீட்டுக்காக இரண்டு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஏன்...?
சித்தி பட செட், அவருக்காக சில மாதங்கள் கூட காத்திருந்தது. 1955-இல்
இருந்து 1990- வரை இடை
விடாத ரிக்கார்டிங் இருந்தது. குறிப்பாக 80-களில்
நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதனால் பாடகர்களின் தேவை அதிகரித்தது. அதனால்
பி.சுசீலா, எஸ்,ஜானகி, வாணி ஜெயராம் என
மூவருக்கும் வாய்ப்புகள் குறையாமல் இருந்தன. மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு
என நான்கு மொழிகளிலும் இவர்களே பாடி வந்தார்கள். தமிழில் எஸ்,ஜானகி முதல் இடத்தில்
இருந்தார். தெலுங்கில் பி.சுசீலா முதல் இடத்தில் இருந்தார். வாணி ஜெயராம், ஜானகி இருவரும்
கன்னட பாடல்களை பகிர்ந்து கொண்டார்கள். 1985 வரை மலையாளத்தில் ஜானகி, வாணி, பி,சுசீலா மூவரும் பாடிக்கொண்டு இருந்தார்கள். யாரும் யார் வாய்ப்பையும் பறிக்க வேண்டிய
நிலையில் இருக்கவில்லை. பாடல்கள் எளிமையாக்கப்பட்டதால் எந்த பாடலையும் யார்
வேண்டுமானாலும் பாடி விடலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால் இவர் இல்லையேல் அவர்,
அவர் இல்லையேல் இன்னொரு பாடகி என்ற நிலையில் இருந்தது திரை இசை உலகம். Even in 80's P.Susheela sang more songs than the other Singers of South. ( Proof )
பி.சுசீலாவும்,
எஸ்.ஜானகியும் இணைந்து தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் என
ஆறு மொழிகளில் பாடி இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் கூட பாடி இருக்கலாம்.
“கௌசல்யா சுப்ரஜா” பாடலை இருவரும் பாடி கேட்டிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு
முன்னால், ஒரு வலைத்தளத்தில் இருவரும் சேர்ந்து பாடி இருக்கிறார்களா என்ற கேள்வி வந்த போது 10-15 பாடல்களை
தான் குறிப்பிட முடிந்தது. இப்போது என்னால் கிட்டத்தட்ட 170 பாடல்களுக்கு மேல் சேர்க்க முடிந்திருப்பது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.
80-களின்
மத்தியில் “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தை ரீ-ரிலீஸ் செய்த போது நெல்லையில் ஒரு
தியேட்டரில் அந்த படத்தை பார்த்தேன். அதில் வரும் “பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி” பாடல் தான் இவர்கள் இணைந்து பாடியதில், நான் கேட்ட முதல் பாடல். பாடலை
ஆரம்பித்த ஜானகியை பாராட்ட தோன்றியது. கதாநாயகி பாட முடியாமல் விக்கி நிற்க, அவர்
சகோதரி உதவி செய்ய வேண்டி பாட வருவார். மீரா.. மீரா... என பாட முடியாமல் திக்க.. அப்போது...
“மீரா பாடிய பாடலை கேட்க கண்ணன்
வரவில்லையோ” என பி.சுசீலா துவங்குவார். பட்டென்று பாடலில் அப்படி ஓர் பளிச் !!! குரலில்,
உச்சரிப்பில் தெரிந்த தெளிவில், பாடலின் தரம் இன்னும் ஒரு படி அதிகரித்ததாக தோன்றியது. தியேட்டரில் கேட்கும் போது அந்த வித்தியாசம் நன்றாக தெரிந்தது. நல்ல தரமான பாடகிகளிடம் பாடும் போது வரும் போட்டி , பாடலை ஒரு படி அழகாக்கும் என்று உணர்ந்து கொண்டேன்.
தொடர்ந்து
நான் கேட்ட பாடல் , “அடிமைப்பெண்” படத்தில் வரும் “காலத்தை வென்றவன் நீ” பாடல்.
அப்பாடலிலும் இதே மாயம் தான். தனக்கே உரிய ஸ்டைலில் எஸ்.ஜானகி பல்லவியையும், ஒரு சரணத்தையும் அழகாக பாடுவார். பி.சுசீலா பாட ஆரம்பித்தவுடன் பாடலுக்கு புது எனர்ஜி
கிடைத்து விடும். அதுவும் கடைசி ஹம்மிங் வரும் போது என்ன ஒரு breath
control !! எஸ்.ஜானகியும் போட்டி போட்டு பாடி இருப்பார். இருவரின் குரலும், ஜெயலலிதா மற்றும் ஜோதி லக்ஷ்மியின் நடனமும் மிக நன்றாக
இருக்கும்.
(kunguma pottu kulunguthadi)
அதைப்போல் தான் “குங்குமப்பொட்டு குலுங்குதடி” (இது சத்தியம்) பாடலும். இருவரும் கலக்கி இருப்பார்கள். இப்படி பல பாடல்கள் இவர்கள் இருவரின் குரலிலும் வளம் பெற்றிருக்கின்றன. இவர்கள் பாடிய பாடல்களில் சிலவற்றை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். (video attached)
அதைப்போல் தான் “குங்குமப்பொட்டு குலுங்குதடி” (இது சத்தியம்) பாடலும். இருவரும் கலக்கி இருப்பார்கள். இப்படி பல பாடல்கள் இவர்கள் இருவரின் குரலிலும் வளம் பெற்றிருக்கின்றன. இவர்கள் பாடிய பாடல்களில் சிலவற்றை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். (video attached)
eno eno ennalumilla (mangayar ullam
mangatha selvam - Telugu version is “Swarna manjari” )
(eno eno ennalummilla )
(mangale medai)
(eno eno ennalummilla )
karuninchave thulasi maatha (sri Krishna tulabaram -Telugu)
(karuninchave tulasi matha)
irulilum oli tharum , andani surasundara ( bhaktha prahlada – movie dubbed in tamil. Kannada and hindi )
irulilum oli tharum , andani surasundara ( bhaktha prahlada – movie dubbed in tamil. Kannada and hindi )
sari leru neekkevvaru (kanchu kota - Telugu)
ponnoonjale (unniyarcha -malayalam)
kanyamariyame punya (althara) -malayalam
Collection of Songs
1959
|
Telugu
|
mahishasura
mardini
|
|
1959
|
Telugu
|
mahishasura
mardini
|
|
1959
|
Telugu
|
srivenkateswara
mahatyam
|
|
1959
|
Tamil
|
kann
thiranthathu
|
|
1960
|
Telugu
|
pelli
kanuka
|
|
1960
|
Telugu
|
rama
sundari
|
|
1960
|
Telugu
|
redukadevi
mahatyam
|
|
1960
|
Telugu
|
runanubandham
|
|
1960
|
Telugu
|
sahasra
chirai setha apoorva sinthamani
|
|
1960
|
Tamil
|
adutha
veetu penn
|
|
1960
|
Kannada
|
Asha sundari
|
|
1961
|
Telugu
|
bhikari
raamudu
|
|
1961
|
Telugu
|
stree
hrudayam
|
|
1961
|
Telugu
|
vagdanam
|
|
1961
|
Malayalam
|
unniyarcha
|
|
1961
|
Malayalam
|
unniyarcha
|
|
1961
|
Malayalam
|
unniyarcha
|
|
1961
|
Kannada
|
kantheredu nodu
|
edavidare naakurulu
|
1961
|
Hindi
|
Mera suhag
|
|
1962
|
Telugu
|
bheeshma
|
|
1962
|
Telugu
|
chitti
thammudu
|
|
1962
|
Telugu
|
swarna
manjari
|
|
1962
|
Tamil
|
bandha
paasam
|
|
1962
|
Tamil
|
deivathin
theivam
|
|
1962
|
Tamil
|
mangayar
ullam mangadha selvam
|
|
1962
|
Tamil
|
mangayar
ullam mangadha selvam
|
|
1962
|
Tamil
|
mangayar
ullam mangadha selvam
|
|
1963
|
Telugu
|
sirisampadhalu
|
|
1963
|
Telugu
|
Naranthakudu
|
|
1963
|
Tamil
|
idhu
saththiyam
|
|
1964
|
Telugu
|
aggipidugu
|
|
1964
|
Tamil
|
thozhilali
|
|
1964
|
Tamil
|
maayamani
|
|
1964
|
Malayalam
|
aal thaRa
|
|
1964
|
Hindi
|
chakravarhy vikramaditya
|
|
1964
|
Hindi
|
chakravarhy vikramaditya
|
|
1965
|
Telugu
|
dorikithe
dongalu
|
|
1965
|
Telugu
|
sri
simhachala kshetra mahima
|
|
1965
|
Telugu
|
veerabhimanyu
|
|
1966
|
Telugu
|
mohini
basmasura
|
|
1966
|
Telugu
|
sangeetha
lakshmi
|
|
1966
|
Telugu
|
srikrishnatulabaram
|
|
1966
|
Telugu
|
bhoolokamlo
yamalokam
|
|
1966
|
Kannada
|
mantralaya mahime
|
aabharanada
|
1967
|
Telugu
|
bhaktha
prahaladha
|
|
1967
|
Telugu
|
devune
gelisinna manavadu
|
|
1967
|
Telugu
|
kanchu
kota
|
|
1967
|
Telugu
|
kanchu
kota
|
|
1967
|
Telugu
|
manchi
kutumbam
|
|
1967
|
Telugu
|
premalo
pramadam
|
|
1967
|
Telugu
|
manchi
kutumbam
|
|
1967
|
Telugu
|
bhaktha
prahaladha
|
|
1967
|
Tamil
|
bhaktha
prahaladha
|
|
1967
|
Malayalam
|
aval
|
|
1967
|
Kannada
|
Bangarada Hoovu
|
|
1967
|
Kannada
|
Bhaktha prahlada
|
|
1967
|
Kannada
|
Devara gedda manava
|
|
1968
|
Telugu
|
kalasina
manasulu
|
|
1968
|
Telugu
|
panthaalu
pattimpulu
|
|
1968
|
Telugu
|
panthaalu
pattimpulu
|
|
1968
|
Telugu
|
panthaalu
pattimpulu
|
|
1968
|
Telugu
|
sriramakatha
|
|
1968
|
Telugu
|
panthaalu
pattimpulu
|
|
1968
|
Kannada
|
bhagya devathe
|
|
1969
|
Telugu
|
kondaveeti
simham(D)
|
|
1969
|
Telugu
|
ukku
piduku
|
|
1969
|
Telugu
|
gopaludu
bhoopaludu
|
|
1969
|
Telugu
|
sri
rama katha
|
sarvakala saramu natyamu
|
1969
|
Tamil
|
adimai
penn
|
|
1969
|
Tamil
|
kuzhanthai
ullam
|
|
1969
|
Kannada
|
chaduranga
|
|
1970
|
Telugu
|
dasara
bullodu
|
|
1970
|
Telugu
|
pacchani
samsaram
|
|
1971
|
Telugu
|
andham
kosam pandhem
|
|
1971
|
Telugu
|
vikramarka
vijayamu
|
|
1971
|
Tamil
|
kulama
gunama
|
|
1971
|
Tamil
|
kulama
gunama
|
|
1972
|
Telugu
|
koduku
kodalu
|
|
1973
|
Telugu
|
raamude
devudu
|
|
1973
|
Telugu
|
vaade
veedu
|
|
1973
|
Tamil
|
sollaththan
ninikkiren
|
|
1974
|
Telugu
|
mangalya
bhagyam
|
|
1974
|
Telugu
|
vandemataram
|
|
1974
|
Telugu
|
bantrothu
bharya
|
|
1974
|
Kannada
|
SriKrishna Devarya
|
|
1975
|
Telugu
|
maa
nanna nirdoshi
|
|
1975
|
Telugu
|
ammayulu
jagratha
|
|
1975
|
Telugu
|
ramayya
tandri
|
|
1975
|
Telugu
|
raktha
sambandhalu
|
|
1975
|
Telugu
|
raktha
sambandhalu
|
|
1975
|
Kannada
|
Kalla Kulla
|
|
1975
|
Kannada
|
kalla kulla
|
|
1976
|
Tamil
|
unarchigal
|
|
1977
|
Telugu
|
allari
bullodu
|
|
1977
|
Telugu
|
dhanaveerasurakarna
|
|
1977
|
Telugu
|
dhanaveerasurakarna
|
|
1977
|
Telugu
|
janma
janmala bandham
|
|
1977
|
Telugu
|
khaidi
kalidasu
|
|
1977
|
Telugu
|
naalaaga
endaro
|
|
1977
|
Telugu
|
mugguru
moorkkurallu
|
|
1977
|
Telugu
|
adavi
ramudu
|
|
1977
|
Telugu
|
adavi
ramudu
|
|
1977
|
Telugu
|
adavi
ramudu
|
|
1977
|
Telugu
|
khaidi
kalidasu
|
|
1977
|
Tamil
|
engal
thalaivan -adavi ramudu
|
|
1977
|
Tamil
|
perumaikkuriyaval
|
|
1977
|
Kannada
|
kittu puttu
|
|
1978
|
Telugu
|
katakatala
rudraiah
|
|
1978
|
Telugu
|
katakatala
rudraiah
|
|
1978
|
Telugu
|
raajaaputra
rahasyam
|
|
1978
|
Telugu
|
vichitra
jeevitham
|
|
1978
|
Tamil
|
kai
pidithaval
|
|
1978
|
Tamil
|
mariyamman
thiruvizha
|
|
1978
|
Tamil
|
thirukkalyanam
|
|
1978
|
Malayalam
|
kaithappoo
|
|
1978
|
Malayalam
|
kaithappoo
|
|
1978
|
Malayalam
|
ThachOLi ambu
|
|
1978
|
Kannada
|
balina guri
|
|
1978
|
Kannada
|
Singapuralli raja kulla
|
|
1979
|
Telugu
|
karthika
deepam
|
|
1979
|
Telugu
|
oka
deepam veligindhi
|
|
1979
|
Telugu
|
bhuvaneshwari
|
Naa hridayama naa udaya
|
1979
|
Tamil
|
naan
nantri solven
|
|
1979
|
Tamil
|
pattakathi
bhairavan
|
|
1979
|
Tamil
|
pattakathi
bhairavan
|
|
1980
|
Telugu
|
gandaragolam
|
|
1980
|
Telugu
|
kotha
jeevithalu
|
|
1980
|
Telugu
|
maha
sakthi
|
|
1980
|
Telugu
|
menatha
koothuru
|
|
1980
|
Telugu
|
nayukudu
vinayakudu
|
|
1980
|
Telugu
|
ragilina
paga
|
|
1980
|
Telugu
|
thathayya
premaleelalu
|
|
1980
|
Telugu
|
kaali
|
|
1980
|
Tamil
|
kannil
theriyum kathaigal
|
|
1980
|
Kannada
|
Vajrada Jalapada
|
|
1980
|
Kannada
|
Huliya haalina mevu
|
|
1981
|
Telugu
|
prema
mandiram
|
|
1981
|
Tamil
|
baala
nagamma
|
|
1981
|
Kannada
|
Guru Shisyaru
|
|
1982
|
Telugu
|
bangaru
kanuka
|
|
1982
|
Telugu
|
patnam
vachina pativrathalu
|
Nookalamma cheputhondhi
|
1982
|
Tamil
|
thaai
moogambigai
|
|
1982
|
Malayalam
|
john jaffer janardhan
|
|
1983
|
Telugu
|
ee
pillaku pellavuthunda
|
|
1983
|
Telugu
|
punyamkodhi
purushudu
|
|
1983
|
Telugu
|
sardar
|
|
1983
|
Telugu
|
dharmatmudu
|
|
1983
|
Tamil
|
muthu
engal sothu
|
|
1983
|
Kannada
|
bhayankara bhasmasura
|
|
1983
|
Kannada
|
Chakravyuha
|
|
1984
|
Telugu
|
iddaru
dongalu
|
|
1984
|
Telugu
|
inti
guttu
|
|
1984
|
Telugu
|
pralaya
simham
|
|
1984
|
Telugu
|
bhola
sankarudu
|
|
1984
|
Telugu
|
maha
sangramam
|
|
1984
|
Kannada
|
vigneswarana vahana
|
vigneshwaranu
|
1985
|
Telugu
|
sravana
sandhya
|
|
1985
|
Tamil
|
karpoora
deepam
|
|
1986
|
Telugu
|
bandham
|
|
1986
|
Telugu
|
kaliyuga
krishnudu
|
|
1986
|
Telugu
|
patnam
pilla palletturi chinnodu
|
|
1986
|
Telugu
|
kondaveeti
raja
|
|
1986
|
Telugu
|
apoorva
sahodarulu
|
|
1986
|
Telugu
|
kondaveeti
raja
|
|
1986
|
Tamil
|
pookalai
parikkathergal
|
|
1988
|
Telugu
|
bharya
bharthalu(new)
|
|
1988
|
Telugu
|
chattamtho
chadarangam
|
|
1988
|
Telugu
|
chattamtho
chadarangam
|
|
1988
|
Telugu
|
bharya
bharthalu(new)
|
|
1988
|
Kannada
|
moovthonthu december
|
|
1989
|
Telugu
|
balagopaludu
|
|
1991
|
Tamil
|
pondati
sonnaketukanum
|
|
0
|
Singhaleese
|
Ahinsaka Prayoogaya
|
பி.சுசீலா ஒரு மொழியில் பாடிய பாடல்களை எஸ்.ஜானகி வேறு ஒரு மொழியில் பாடி இருக்கிறார். அதைப்போல் ஜானகி பாடிய பாடல்களை சுசீலாவும் வேறு மொழியில் பாடி இருக்கிறார். சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக