பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 ஜூலை, 2014

கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா - Part2

 Part -1)  (Part-3) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7)
                          
           தமிழ் திரை இசை உலகின் பொற்காலம் என போற்றப்படும் காலம் தான் 1960 முதல் 1970 வரையான காலம்.  எம்.எஸ்..விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், கண்ணதாசன், வாலி, டி.எம்.எஸ், பி.சுசீலா என்ற ஜாம்பவான்களின் முழு திறமையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, திரை இசையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய காலம் இது. கர்நாடக இசை, வடக்கத்திய இசை, மேற்கத்திய இசை. பக்தி இசை என எல்லா இசை வடிவங்களையும் மக்கள் ரசிக்கும் விதத்தில் கொஞ்சம் எளிமைபடுத்தி, அதன் தரம் குறையாமல் நம் காதுகளில் தேன் வார்த்த காலம். இக்கால கட்டத்தில் தான் கே.வி.எம் இசையில் பி.சுசீலா முழு வீச்சுடன் ஒளிர முடிந்தது. ஒரு நேர்முகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் அவருக்கு பிடித்த பாடல்கள் பற்றி கேட்ட போது, “கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடிய எல்லா பாடல்களும் பிடிக்கும்” என பதில் அளித்தார். இது தான் இந்த கூட்டணியின் வெற்றி.                50-களில் பி.சுசீலா அவர்களுக்கு குறைந்த அளவே வாய்ப்பு அளித்த கே.வி.எம், 60’s களில் பெரும்பாலான வாய்ப்புகளை பி.சுசீலாவுக்கே அளித்தார். 50-களில் கிராமிய இசையில் மிளிர்ந்த கே.வி.எம். 60’களில் மெல்லிசையின் தேவையை புரிந்து கொண்டு அத்தகைய பாடல்களை சிறப்போடு வழங்கினார். ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.ராஜேஸ்வர ராவ். பெண்டியாலா, ஆதி நாராயண ராவ் போன்ற போட்டி இசை அமைப்பாளர்களின் தரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் இவர் இசையும் அமைந்தது. இந்த போட்டி நிறைய சிறப்பான பாடல்களை தமிழ், தெலுங்கு திரை இசை உலகுக்கு அளித்தது. தெலுங்குப்பட உலகை பொறுத்த வரை 1958-ல் தான் கே.வி.எம் இசை அமைக்க ஆரம்பித்து இருக்கிறார்.  “ஆலு மகளு” படம் தான் அவர் இசை அமைத்த முதல் தெலுங்குப்படம் என நினைக்கிறேன். அதன் பின் "வண்ணக்கிளி"யின்  ரீமேக் ஆன “அண்ணா செல்லேலு” மூலம் ஒரு பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார்.  "பொம்மல பெள்ளி" , "சம்பூர்ண ராமாயணம்" போன்றவை தமிழில் இருந்து  டப்பிங் செய்யப்படட் படங்கள் ஆகும்.1962-க்கு பிறகு குறிப்பிடத்தக்க வகையில் நேரடி தெலுங்கு படங்களிலும்  இசை அமைத்து இருக்கிறார்.
                             

      இக்கால கட்டத்தில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களை பற்றி ஒரு அலசல்.

        1960 - ல் கே.வி.எம் இசையில் “ஆட வந்த தெய்வம்”. “எங்கள் செல்வி”, “மகாலஷ்மி”, “பாவை விளக்கு”, “படிக்காத மேதை”, “பொன்னித்திருநாள்”, “தங்க ரத்தினம்”, “தங்கம் மனசு தங்கம்”, “வீரக்கனல்”, “யானைப்பாகன்” போன்ற தமிழ் படங்களிலும், அண்ணா செல்லேலு (வண்ணக்கிளி ரீமேக்), sahasra chirai setha apoorva sinthamani (ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியின் தெலுங்கு பதிப்பு), mangalyam போன்ற படங்களிலும் பாடி இருக்கிறார்.
                           
        ஆட வந்த தெய்வம் படத்தில் “கோடி கோடி இன்பம் தரவே” என்று பி.லீலாவுடன் இணைந்து பாடிய ஒரு நடனப்பாடல் மிக தரமானதாக இருக்கும். இரு பெண்குரல்களும் ஒன்றோடொன்று இணைந்து ஒரே அலைவரிசையில் அழகாக ஒலிக்கும். இரு பாடகியர் இணைந்து பாடும் பாடல்களில் சில கஷ்டமான பாடல்களை குறிப்பிடச்சொன்னால் இந்த பாடலையும் குறிப்பிடலாம். இப்பாடல் தனிப்பாடலாகவும் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கிறது. “நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்” என நெஞ்சை உலுக்கும் இன்னொரு சோகப்பாடல் மிக பிரபலம். இப்படி ஒரு பாடலை பாட சுசீலாம்மாவால் மட்டுமே முடியும். “தீ இந்த உயிர்க்கூட்டை எரித்தாலும் அது நீ இருக்கும் என் நெஞ்சை நெருங்காது” என கவிஞரின் வரியை, இதை விட அழகாக குரலில் கொண்டு வர முடியாது. வலி. ஏக்கம் அதே நேரம் மனதில் உள்ள உறுதி. என பல உள்ளுணர்வுகளை குரலில் கொண்டு வந்திருப்பார் நமது இசை அரசி. “சொட்டு சொட்டுன்னுசொட்டுது பாரு இங்கே” என ஒரு நகைச்சுவை கலந்த அழகிய டூயட் இப்போதும் கேட்கப்படும் ஒரு பாடல். “சங்கம் முழங்கி வரும் சிங்கார தமிழ் கலையே” என டி.ஆர்.மகாலிங்கத்துடன் பாடும் ஒரு அருமையான ஜோடிப்பாடல் இருக்கிறது. இது வரை கேட்காதவர்கள் ஒரு முறை தவறாமல் கேளுங்கள். பாரதியின் பாடலான “கண்ணில் தெரியுதொரு தோற்றம்” ஒரு மனதைப்பிசையும் வரிகளுடன் தொகையறா போல் ஒலிக்கிறது. இந்த பாடலில் வரும் "ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி" என்ற வரிகளை வைத்து விகடனில் ஒரு கதை வெளிவந்தது. சொன்னாலும் கேட்காத உலகம் என இன்னொரு தனிப்பாடலும் படத்தில் உண்டு. இப்படி ஒரு படத்திலேயே ஒரு குரலை வைத்து இத்தனை நல்ல பாடல்களை தந்தவர் கே.வி.எம் அவர்கள்.


                Kodi Kodi inbam tharave
                 Sangam muzhangi varum   
                Sottu sottunnu sottuthu 
                 Kodi kodi inbam -solo
     

        எங்கள் செல்வி படத்தில் வரும் “சொல்லத்தான்நினைக்கிறேன் முடியவில்லை” பாடல் மிக பிரபலமான பாடல். இதை தெலுங்கில் “வின்னாவா ரகிலே ஈ ப்ரதுகுலோனா” என சுசீலாம்மாவின் குரலில் கேட்டிருக்கிறேன். குழந்தைக்கும் பேர் சூட்டும் போது நடக்கும் சந்தோஷமான கேலி, கிண்டல்கள் கலந்த பாடலாக “என்ன பேருவைக்கலாம்” பாடல் ஒலிக்கிறது., “வாராயோ வாராயோ” என ஒரு தனிப்பாடலும் இருக்கிறது. மகாலக்ஷ்மி படத்தில் “தாயே ஜகன்மாதா” என்ற ஒரு பாடலை கேட்டிருக்கிறேன். படிக்காத மேதை படத்தில் “இன்ப மலர்கள் பூத்து குலுங்கும்சிங்கார சோலை” என்ற இளமை துள்ளும் பாடல் இடம் பெற்றது. தங்க ரத்தினம் படத்தில் “இன்னொருவர் தயவெதற்கு”, “எனக்கு நீ உனக்கு நான்” என இரு தனிப்பாடல்களை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.
   
   இன்னொரு இசை அமுதமாய் அமைந்த படம் தான் “பாவை விளக்கு”. சிதம்பரம் ஜெயராமனுடன் இணைந்து பாடிய “காவியமா நெஞ்சில் ஓவியமா” பாடல் சூப்பர் ஹிட் வகை. பல தலைமுறைகளையும் தாண்டி நிற்கும் பாடல். அதைப்போல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “சிதறிய சலங்கைகள் போலே”. வேகமான இசையும். குமரி கமலாவின் நடனமும், அழுத்தமான குரலும் இப்பாடலின் மிகப்பெரிய பலம். போதிய அளவு வெற்றி பெற்றதா என்று தெரியாது. பாடலின் முதல் சரணத்தில் “இதயத்தை கொள்ளை கொள்ள தோன்றிய நாதம், இன்பமெல்லாம் வழங்கும் சங்கீதம்” குரலில் தேனைக்குழைத்திருப்பார் இசைஅரசி. இரண்டாவது சரணத்தில் “பாட்டிலேசோக பாவமே மீறுதே. மனமே தடுமாறுதே” என்ற வரிகளில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் கடினமான சங்கதிகள், மாறும் உணர்வுகள், கடினமான மொழி பிரயோகம் என பாடல் முடியும் வரை ஒரே இசை மழை தான். சிரமமான பாடல். அருமையாக பாடி இருப்பார் பி.சுசீலா. இப்பாடலை நான் யாரும் மேடைகளில் பாடி கேட்டதே இல்லை. “நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ” என தேஷ் ராகத்தில் அமைந்த கிளாசிகல் பாடலும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.       
                     
               kaviyama nenjil oviyama
    Nenjathil iruppadhu enna enna


       பொன்னித்திருநாள் படத்தில் இடம் பெற்ற பாடல்களில் பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய  “வீசு தென்றலே வீசு” பாடல் ஒரு மெல்லிய தென்றல். ஏ.எம்.ராஜாவுடன் “கண்ணும் கண்ணும் கதை பேசி” , “பட்டு சிறகடித்தே பறக்கும்” , கை வீசம்மா கை வீசு என குறிப்பிடப்படத்தக்க சில நல்ல பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தன. “தங்கம் மனசு தங்கம்” படத்தில் சீர்காழியுடன் “சிரிக்குது முல்லை அது பறிக்குது கண்ணை”, “பொங்கும் அழகு பூத்து” மற்றும் “மங்கள துளசி மாதா”, போன்ற இனிமையான பாடல்களை பாடினார் பி.சுசீலா. வீரக்கனல் படத்தில் “சிலையோடு விளையாட வா” என குமாரி கமலா நடனமாடும் ஒரு நடனப்பாடல் சிறப்பாக இருக்கும். “பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக” “சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” “தங்க சிலையே வாடா”, “சித்திரமே சித்திரமே சிரிக்க கூடாதா”, “கைகள் இரண்டில் வளை குலுங்க” போல எல்லா பாடல்களும் சிறப்புடன் அமைந்தன. யானைப்பாகன் படத்தில் சீர்காழியாருடன் பாடிய “செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்” ஓரளவு பிரபலமான பாடல். “துள்ளி விழும் அருவியைப்போல் கண் பார்வை என் மேல் விழுதே” இன்னொரு ஹிட் பாடல். “நெஞ்சினிலே இன்பம் பொங்கிடுதே” “உயர்வு தாழ்வு இல்லாமலே” என எல்லா பாடல்களும் வெற்றிப்பாடல்கள்.
                           

     தெலுங்கில் “அண்ணா செல்லேலு” (வண்ணக்கிளியின் தெலுங்கு வடிவம்) படத்தில் “Bandi nadipinchi” ( வண்டி உருண்டோட) , “Chinni papa nannu kanna papa”(சின்ன பாப்பா), “indhena brathu” “kottina cheyye koru”(அடிக்கிற கைதான் அணைக்கும்), “maataadavela raja”, “sana cheera kattindi” (சித்தாடை கட்டிக்கிட்டு) பாடல்கள் ஹிட் ஆனவை. “Maattaada vela raja” indena brathuku” பாடல்கள் தெலுங்கில் புதிதாக சேர்க்கப் பட்டது. Sahasra SiraChheda apoorva Chintamani” படத்தில் andalunnavi kannulalo”   , “anuraga ee kanulale”  போன்ற பாடல்கள் இனிமையானவை. “amba jagadamba” , evaru nanu jeyinchiபோல பி.சுசீலா பாடிய வேறு பாடல்களும் படத்தில் ஒலித்தன. 

                           
                                                 ore kelvi ore kelvi 

                        
1961-ல் எல்லாம் உனக்காக, கொங்கு நாட்டு தங்கம், குமுதம், பணம் பந்தியிலே, பனித்திரை, சபாஷ் மாப்பிள்ளே, தாயில்லா பிள்ளை போன்ற தமிழ் படங்களிலும் “Evaru Donga” என தெலுங்கு டப்பிங் படத்திலும் இவர் இசையில் பி.சுசீலா பாடி இருக்கிறார். குமுதம் படத்தில் பி.சுசீலா பாடிய “என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?”, “கல்யாணம் ஆனவரே சௌக்கியமா? பாடல்கள் பிரபலமானவை. சபாஷ் மாப்பிள்ளே படத்தில் “யாருக்கு யார் சொந்தம் என்பது” பாடல் ஹிட் பாடல், தவிர “மனதில் இருக்குது ஒண்ணு”, “மாப்பிள்ளை மாப்பிள்ளை” போன்ற பாடல்களையும் பாடினார் பி.சுசீலா, தாயில்லா பிள்ளை படத்தில் “தொட்ட கைகள் தவழ்ந்ததடி”, “வாம்மா வாம்மா சின்னம்மா” பாடல்கள் குறிப்பிடப்பட தக்கவை. பணம் பந்தியிலே படத்தில் “கல்லும் கல்லும் மோதும் போது” என டி.எம்.எஸ் உடன் ஒரு டூயட் இருக்கிறது. எல்லாம் உனக்காக படத்தில் “அசைந்து குலுங்கும் சலங்கை ஒலியும்” பாடல் வேகமான தாளக்கட்டில் அமைந்த நல்ல பாடல். “மலரும் கொடியும் பெண் என்பார்” பிரபலமான ஒரு டூயட். தவிர “கொஞ்சி வரும் நெஞ்சில்” மனசு போல் மாப்பிள்ளையை”, “தங்கமகனே கொஞ்சி வரும்” போல தரமான பாடல்கள் இடம் பெற்றன. கொங்கு நாட்டு தங்கம் படத்தில் “கரும்பாக இனிக்கின்ற பருவம்”, “எங்கே வந்தாய்”, “நெஞ்சினிலே என்ன வீரம்” போன்ற பாடல்கள் இடம் பெற்றன. இந்தக்கூட்டணியில் இந்த வருடத்தில் வந்த பாடல்களில் சிறப்பானவை என்றால் அது “பனித்திரை” பாடல்கள் தான்.”ஒரே கேள்வி ஒரேகேள்வி எந்தன் நெஞ்சிலே” என பி.பி.எஸ் உடன் பிரபலமான டூயட். “இருக்குமிடம் எங்கேசொல் இறைவா”, “குங்குமத்தை அழிக்கவா”, "வருக வருக என்று சொல்லி அழைப்பார்” போல பிரபலமான சில பாடல்களுடன் “ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்” என கல்லூரியில் பாடும் ஒரு இளமை துள்ளும் பாடலும் இடம் பெற்றது.

  1962-ல் “அழகு நிலா”, கவிதா, “குடும்ப தலைவன்”. “மாடப்புறா”, “முத்து மண்டபம்”, “நான் வணங்கும் தெய்வம்”, “நீயா நானா?”, “ராணி சம்யுக்தா”, “சாரதா”, “தாய் சொல்லை தட்டாதே”, “தாயைக்காத்த தனியன்”, “வடிவுக்கு வளைகாப்பு” “வளர்பிறை” போல பல பிரபலமான படங்கள் வெளிவந்தன. தெலுங்கில் “Atma bandhavu”, “manchi manasulu”, “nuvvaa nena”, “ veera putrudu” போன்ற படங்களிலும் கே.வி.எம்இசையில் பி.சுசீலாவின் குரல் இடம் பெற்றது. இவ்வருடத்தில் குடும்ப தலைவன், மாடப்புறா, தாயைக்காத்த தனையன்”, தாய் சொல்லை தட்டாதே”, “ராணி சம்யுக்தா” என எம்.ஜி.ஆர் நடித்த ஐந்து படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார் கே.வி.எம். கிராமிய இசை, செமி-கிளாசிகல் பாடல்கள், மெல்லிசை என திரை இசைக்கு தேவையான எல்லா வகையான இசையையும் இவ்வருடத்தில் அளித்திருக்கிறார் கே.வி.எம். நிறைய காதல் பாடல்கள் இவ்வருடத்தில் வெளிவந்து வெற்றிபெற்றன.
                      
    Moodi thirantha imai irandum
    katti thangam vetti eduthu
               

எம்.ஜிஆர் நடித்த “குடும்ப தலைவன்” படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்ஸ். “அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன்”, “கட்டான கட்டழகு கண்ணா”, “எதோ எதோ எதோ ஒருமயக்கம்”, “குருவிக்கூட்டம் போல நிக்கிற பூவம்மா”, “மழை பொழிந்து கொண்டே இருக்கும்” போல ஹிட் மேல் ஹிட் அடித்த பாடல்கள். 
               அதைப்போல் இன்னொரு மியுசிகல் ஹிட் “தாய் சொல்லை தட்டாதே” திரைப்படம். “சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்”, “பட்டுசேலை காத்தாட”. “பாட்டு ஒரே ஒரே பாட்டு”, “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்”, “காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா”, “பூ உறங்குது பொழுதும் உறங்குது” என ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் சூப்பர்ஹிட் பாடல்கள் வரிசையாய் வந்தன. 
         அதைப்போல் எம்.ஜி.ஆர் படமான “தாயைக்காத்த தனயன்” படத்திலும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே அமைந்தன. “கட்டித்தங்கம் வெட்டி எடுத்து”, “காவேரிக்கரை இருக்கு கரைமேலே பூவிருக்கு”, “மூடித்திறந்த இமைஇரண்டும்”, “காட்டுராணி கோட்டையிலே”, “பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா”, “சண்டிக்குதிரை,நொண்டிக்குதிரை” மிக பிரபலமான, இப்போதும் மக்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களாக அமைந்தன.           ராணி சம்யுக்தா படத்தில் “ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என மனதைக் குளிர்விக்கும் ஒரு டூயட். “நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்” என்ற ஒரு செமி-கிளாசிகல் பாடல். “நிலவென்னபேசும்” என இன்னொரு அழகிய டூயட். “பாவை உனக்கு சேதி தெரியுமா” , “மன்னவர் குலம்பாரம்மா” என இரு இனிமையான தனிப்பாடல்கள் என கே.வி.எம்மின் இசை ராஜ்ஜியம் படம் முழுவதும் வியாபித்து இருந்தது. இன்னொரு 
  எம்.ஜி.ஆர் படமான “மாடப்புறா”வில் “மனதில்கொண்ட ஆசைகளை மறந்து போய்விடு” என்ற அருமையான பாடல் ஒலித்தது. “வருவார் ஒரு நாள்இருப்பார் இங்கே”, “வணக்கம் வணக்கம் அய்யா”, “கண்ணை பறிக்குதா, கருத்தை மயக்குதா” என குறிப்பிடத்தக்க பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.  




                oruthi oruvanai ninaidhu


              O vennila O vennila



                Sirithu sirithu ennai



             kaatukkulle thiruvizha
                 
     
இவ்வருடத்தில் வெளிவந்த “சாரதா”, “வளர்பிறை”, “வடிவுக்கு வளைகாப்பு”, “முத்து மண்டபம்”, “கவிதா”, “நீயா நானா”. “நான் வணங்கும் தெய்வம்” போன்ற படங்களிலும் சிறப்பான பாடல்கள் அமைந்தன. சாரதா படம் மிகப்பெரிய வெற்றிப்படம். அதில் “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்” “கண்ணானால் நான் இமை ஆவேன்”, போன்ற பாடல்களை யாரால் மறக்க முடியுமா? ஜேசுதாஸ் அவர்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களில் “ஒருத்தி ஒருவனை” பாடலும் ஒன்று. 


                           seerulaavum inba nadham

     
      வடிவுக்கு வளைகாப்பு படத்தில் “சீருலாவும் இன்பநாதம் தேவ சங்கீதம்” என டி.எம்.எஸ். சுசீலா இணைந்து பாடும் பாடல் ஒரு தேவ சங்கீதம் தான். அவ்வளவு இனிமையாக பாடி இருப்பார்கள். “சாலையிலே புளிய மரம் ஜமீன்தாரு வச்ச மரம்” என ஜனரஞ்சகமான ஒரு கிராமியப்பாடல். “நில்லடியோ நில்லடியோ” “சில்லென பூத்து சிரிக்கின்ற” என இரு தனிப்பாடல்கள் என சிறப்பான இசை அமைந்த படம்.                  வளர்பிறை படத்தில் “நான்கு சுவர்களுக்கும் எது நடந்தாலும்” என ஒரு சோகப்பாடல் மனதைக்கவரும். “சலசலக்குக்து காத்து” என டி.எம்.எஸ் உடன் ஒரு டூயட், “மௌனம் மௌனம்” “பச்சைக்கொடியில்” என இரு தனிப்பாடல்கள் அமைந்தன. 
   “அழகு நிலா” படத்தில் “அருவிக்கரை ஓரத்திலே”காட்டுக்குயிலுக்கும்”, “மூங்கில் மரக்காட்டினிலே” போன்ற பாடல்களை பாடினார் பி.சுசீலா. கவிதா படத்தில் “அப்பா உன் மகளை பார்த்தாயா” என மனதைப்பிழியும் ஒரு பாடல் இருக்கிறது. “கனவும் பலித்தது” என ஒரு இனிமையான பாடல் “நான் வணங்கும் தெய்வம்” படத்தில் இடம் பிடித்தது.
 “முத்து மண்டபம்” படத்தில் “கொடியிலே பூங்கொடியவளே”, “என்ன சொல்லிப் பாடுவேன்”, “போர்க்களம் போர்க்களம்” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை.  “நீயா நானா” படத்தில் “பொன்னும் பொருளும் பெரிசல்ல”, “ஆத்தங்கரை மேட்டினிலே”, “உனக்காகவே இன்று எனை மறந்தேன்”, “கூகூகூகூ குயிலக்கா” போன்ற பாடல்கள் இடம் பெற்றன.
   1962-ல் "Atma bhandavu", "manchi manasulu" என இரண்டு நேரடி தெலுங்கு படதுக்கு இசை அமைத்து  இருக்கிறார். "Atma bandhavu" படம் படிக்காத மேதையின் ரீமேக். மஞ்சி மனசுலு குமுதம் படத்தின் ரீமேக். " படிக்காத மேதை" யில் பி.சுசீலாவுக்கு ஒரே ஒரு பாடல் தான். ஆனால் தெலுங்கில் Chaduvurani vadavani (படித்ததினால் அறிவு பெற்றோர்), Anaganaga oka raju (ஒரே ஒரு ஊரிலே) பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் அதே டியுனில் வெளி வந்தன. தவிர  teeyani oohala , maradu maradu  என எல்லாமே ஹிட் பாடல்கள்.  "manchi manasulu" படத்தில்  "yemandoy sreevaru" ஒரு ஹிட் பாடல். "nannu vadili neevu poolevule" , ravoyi ravoyi (thyagam idhena) போன்ற பாடல்களும் பிரபலமானவை. 

List of Songs (Between 1960-1962 ) All links are in Real Audio format.

1960 Tamil aada vantha deivam kannil theriyuthoru thotram
1960 Tamil aada vantha deivam kodi kodi inbam -solo
1960 Tamil aada vantha deivam nilayaga en nenjil oli vEsum
1960 Tamil aada vantha deivam Sonnalum ketkatha ulagam
1960 Tamil aada vantha deivam kodi kodi inbam tharave
1960 Tamil aada vantha deivam sangam muzhangi varum
1960 Tamil aada vantha deivam sottu sottunnu sottuthu paaru
1960 Tamil engal selvi sollathaan ninaikkirEn 
1960 Tamil engal selvi vaaraayO vaaraayO
1960 Tamil engal selvi enna peru vaikkalam
1960 Tamil mahalakshmi thaaye jaganmatha
1960 Tamil paavai vilakku kaaviyama,nenjin oyiama
1960 Tamil paavai vilakku naan unai ninaikkatha 
1960 Tamil paavai vilakku sidhariya salangaigal pole
1960 Tamil paavai vilakku kaalam marinum
1960 Tamil padikkatha medhai inba malargal poothu 
1960 Tamil ponnithirunal Enaku nee unakku naan
1960 Tamil ponnithirunal kannum kannum kadhai
1960 Tamil ponnithirunal pattu chiragadithe parakkum
1960 Tamil ponnithirunal veesu thendrale veesu
1960 Tamil ponnithirunal kai veesamma kaiveesu
1960 Tamil thanga rathinam enakku nE unakku naan
1960 Tamil thanga rathinam Innoruvar thayavatherkku
1960 Tamil thangam manasu thangam mangala thulasi matha 
1960 Tamil thangam manasu thangam pongum azhagu poothu
1960 Tamil thangam manasu thangam sirikkudhu mullai adhu
1960 Tamil veerakkanal thanga siLiyE vaada
1960 Tamil veerakkanal silayOdu vilayaada vaa
1960 Tamil veerakkanal poo mudippathum pottum
1960 Tamil veerakkanal siridhukkondE irukka
1960 Tamil veerakkanal sithiramE sithiramE
1960 Tamil veerakkanal kaigaL iraNdil vaLai kulunga
1960 Tamil yanaippagan uyarvu thaazhu illaamale
1960 Tamil yanaippagan nenjinile inbam pongudhe
1960 Tamil yanaippagan chengani vaai thirandhu
1960 Tamil yanaippagan thulli vizhum aruviyaipol
1960 Telugu anna chellelu (old) bandi nadipinchi
1960 Telugu anna chellelu (old) chinni paapa nannu kanna
1960 Telugu anna chellelu (old) Idhena brathuku
1960 Telugu anna chellelu (old) Kottina cheye koru
1960 Telugu anna chellelu (old) Maatadavela raaja
1960 Telugu sahasra chirai setha apoorva sinthamani amba jagadamba
1960 Telugu sahasra chirai setha apoorva sinthamani andalanni kannulalo
1960 Telugu sahasra chirai setha apoorva sinthamani anuragamulo manayogamulo
1960 Telugu sahasra chirai setha apoorva sinthamani anuraganiki thauve neevani
1960 Telugu sahasra chirai setha apoorva sinthamani evaru nanu jaynchi
1961 Tamil ellaam unakkaaga asainthu kulungum





1961 Tamil ellaam unakkaaga konji varum nenjil 
1961 Tamil ellaam unakkaaga thanga magane,inbam thantha
1961 Tamil ellaam unakkaaga manasu pol maapillayai
1961 Tamil ellaam unakkaaga malarum kodiyum penn enbar
1961 Tamil kongu natu thangam kannal idhu(enge vanthai)
1961 Tamil kongu natu thangam nenjinile enna veeram 
1961 Tamil kongu natu thangam karumbaga inikkintra
1961 Tamil kumudham kalyanam anavare sowkyama
1961 Tamil kumudham ennai vittu odi poga mudiyuma
1961 Tamil kumudham enna un idhaym
1961 Tamil panam panthiyile Kallum kallum modhum
1961 Tamil panithirai april fool april fool
1961 Tamil panithirai Irukkumidam enge sol
1961 Tamil panithirai kungumathai azhikkava
1961 Tamil panithirai ore kelvi ore kelvi
1961 Tamil panithirai varuga varuga entru solli
1961 Tamil panithirai adi athirathil
1961 Tamil sabaash maapille yaarukku yaar -sad
1961 Tamil sabaash maapille maapillai maapillai
1961 Tamil sabaash maapille Mandhil irukkuthu oNNu
1961 Tamil sabaash maapille yaarukku yaar sontham 
1961 Tamil sabash maapille sirippavar sila per
1961 Tamil thaai illa pillai thotta kaigal thavzhnthathadi
1961 Tamil thaai illa pillai padikka varum pudhiya
1961 Tamil thaai illa pillai vaamma vaamma Chinnamma
1961 Tamil thaayilla pillai thotta kaigal thavazhnthadi
1962 Tamil azhagu nila aruvikkarai orathile
1962 Tamil azhagu nila kaattukkuyilkkum 
1962 Tamil azhagu nila moongil mara kaatrinilE
1962 Tamil kavitha mEgam vanthadhu minnal 
1962 Tamil kavitha appa un magaLai
1962 Tamil kavitha paarkka paarkka 
1962 Tamil kudumba thalaivan antoru naal avanudaya perai 
1962 Tamil kudumba thalaivan kuruvi kootam pole nikkira 
1962 Tamil kudumba thalaivan mazhai pozhinthu konde irukkum
1962 Tamil kudumba thalaivan kattaana kattazhagu kanna
1962 Tamil kudumba thalaivan etho etho etho oru mayakkam
1962 Tamil maadappura Varuvar oru naal iruppar inge
1962 Tamil maadappura vanakkam vanakkam ayya
1962 Tamil maadappura kannai parikkudha karuthai
1962 Tamil maadappura manadhil konda aasaigalai
1962 Tamil muththu mandapam enna solli paaduvEn
1962 Tamil muththu mandapam pOrkkaLam, pOrkkaLam, kaadhal
1962 Tamil muththu mandapam kodiyavaLE, poongkodiyavaLE
1962 Tamil naan vanangum deivam kanavum palithadhu 
1962 Tamil neeya naana ? aathankarai mEttinilE
1962 Tamil neeya naana ? ponnum poruLum parisalla
1962 Tamil neeya naana ? unakkaagave intru enai 
1962 Tamil neeya naana ? kuku ku ku kuyilakka
1962 Tamil raani samyuktha mannavar kulam paaramma
1962 Tamil raani samyuktha nenjirukkum varai ninaivirukkum
1962 Tamil raani samyuktha paavai uankku sethi theriyuma
1962 Tamil raani samyuktha nilavenna pesum
1962 Tamil raani samyuktha Oh! vennilaa oh! vennilaa vanna
1962 Tamil saaradha oruthi oruvanai ninaidhu vittal
1962 Tamil saaradha kannaanaal imaiyaavEn
1962 Tamil thaai sollai thattathe ennadi sonnar
1962 Tamil thaai sollai thattathe Kattukkulle thiruvizha
1962 Tamil thaai sollai thattathe oruthi maganai poranthavanam
1962 Tamil thaai sollai thattathe poo uranguthu, pozhthum uranguthu
1962 Tamil thaai sollai thattathe paatu ore paatu, paatu ore oru paatu
1962 Tamil thaai sollai thattathe pattu selai kaathada paruva meni
1962 Tamil thaai sollai thattathe Siridhu siridhu ennai sirayillittai
1962 Tamil thaayai kaatha thanayan katturaani kottayile
1962 Tamil thaayaik kaaththa thanayan chandi kudhirai nondikudhirai
1962 Tamil thaayaik kaaththa thanayan kaavrrik karaiyirukku
1962 Tamil thaayaik kaaththa thanayan katti thangam vetti eduthu
1962 Tamil thaayaik kaaththa thanayan moodith thiRandha imai iraNdum
1962 Tamil thaayaik kaaththa thanayan pErai sollalaama kanavan pErai
1962 Tamil vadivukku valai kappu chillentru poothu sirikkintra
1962 Tamil vadivukku valai kappu nilladiyo nilladiyo nenachi
1962 Tamil vadivukku valai kappu chaalayilE puliyamaram jamEndaaru
1962 Tamil vadivukku valai kappu seerulaavum inba naadham
1962 Tamil valarpirai mounam mounam 
1962 Tamil valarpirai pachai kodiyil mazhai
1962 Tamil valarpirai naangu suvarkalukkul ethu
1962 Tamil valarpirai salasalakkudhu kaathu
1962 Telugu atmabandhuvu Anaganaga oka raju
1962 Telugu atmabandhuvu Chaduvuvu rani vaadavani
1962 Telugu atmabandhuvu Maaradhu maaradhu manushula
1962 Telugu atmabandhuvu Theeyani oohalu
1962 Telugu Manchi manasulu Nannu vadali neevu po 
1962 Telugu manchi manasulu Thyagam edhe
1962 Telugu manchi manasulu Yemandoi sreevaru
1962 Telugu nuvva nena kuhu kuhu koyilamma
1962 Telugu nuvva nena masakka masakka cheekatilu
1962 Telugu nuvva nena merise venti bangarama
1962 Telugu nuvva nena nee korake
1962 Telugu veera putrudu (D) ayya choodu aata
1962 Telugu veera putrudu (D) challagali ooyalale
1962 Telugu veera putrudu (D) mudduloluku ramani
1962 Telugu veera putrudu (D) peruna pilichama
1962 Telugu veera putrudu (D) thaavulane chindinche
1962 Telugu veera putrudu (D) bangaram

(தொடரும்....)
Part -1) (Part-3 )  ( Part-4) (Part-5) (Part-6) (Part-7 )