திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் 1918-ல் குமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில் என்ற ஊரில் பிறந்தவர்.
அவரது தந்தையார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இசைக்கலைஞராக இருந்ததால், இவரும் இள
வயதிலேயே இசையை தந்தையிடம் கற்றுக்கொண்டார். 1942-இல் இசை அமைப்பாளராக
அறிமுகமாகி கிட்டத்தட்ட 40
ஆண்டுகள் இசை உலகில்
கோலோச்சியவர். தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 600 திரைப்படங்களுக்கு மேல் இசை அமைத்து நீங்கா புகழ் பெற்ற பாடல்களை
தந்தவர். கர்நாடக இசையில் கை தேர்ந்தவராக இருந்தாலும் கிராமிய இசையையும் ரசிக்கும் படி தந்தவர்.
கந்தன் கருணை, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக இரு தேசீய விருதுகளை பெற்றவர். தமிழக,
ஆந்திர மாநில விருதுகளையும் பெற்றவர். மாமா என அன்புடன் திரை உலகினரால்
அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் நடித்து, கே.வி.எம் இசை அமைத்த எல்லா படங்களுமே மியுசிக்கல்
ஹிட்ஸ். அதைப்போல் தேவர் பிலிம்ஸ், ஏ.பி.நாகராஜன் படங்களில் இவர் பாடல்கள் மிகவும்
பேசப்பட்டன.
கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா அவர்கள்
பாடிய பாடல்களைப்பற்றிய தொகுப்பு இது. இசை அமைப்பாளருக்கான முதல் தேசீய விருதை பெற்றவரும், பாடகியருக்கான முதல் தேசிய விருதை பெற்றவரும் இணைந்து இசைப்பணி ஆற்றினால் எப்படி இருக்கும்? ஒரு தொகுப்பு கீழே ..
1955-ல் கே.வி.எம் இசை
அமைத்த “ஆசை அண்ணா அருமை தம்பி” படத்தில் தான் பி.சுசீலா பாடி இருக்கிறார் என
தோன்றுகிறது. அதற்கு முன் பாடிய பாடல்கள் எதுவும் என்னிடம் இல்லை. அதற்குப்பின் 1958-ல் சில படங்களில் பாடி இருக்கிறார். 1959-ல்
இருந்து கே.வி.எம் இசையில் பி.சுசீலா தான் பிரதான பாடகி. இந்த கூட்டணி அவர்
கடைசியாக இசை அமைத்த “கபீர்தாஸ்” திரைப்படம் வரை தொடர்ந்தது. பி.சுசீலா அவர்கள் 2000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை இவர் இசையில் பாடி இருக்கிறார். இது
ஒரு பெரிய சாதனை. ஒரு கால கட்டத்துக்கு பின் பி.சுசீலா பாடாத கே.வி.எம் படங்கள்
மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. பி.சுசீலா அவர்கள் கே.வி.எம் இசையில், தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி (டப்பிங் படங்கள்) என ஐந்து மொழிகளில் பாடி
இருக்கிறார். கே.வி.எம் இசை அமைத்த “சிரிசிரி முவ்வா” என்ற தெலுங்குப்படத்தின்
மூலமாக மூன்றாவது தேசிய விருது பி.சுசீலாவை தேடி வந்தது. ஒரு தெலுங்கு
இணையதளத்தில் இவர் இசை அமைத்த தெலுங்கு படங்களின்
பட்டியல் மட்டுமே 320-ஐ தாண்டி இருந்தது. 80-களில் இவர் தமிழை
விட தெலுங்கில் பிரபலமாக இருந்திருக்கிறார். தமிழில் 225 படங்களுக்கு மேல் இசை அமைத்து இருக்கிறார். மொத்த படங்கள் 600-ஐ தாண்டும்.
பி.சுசீலா அவர்கள் கே.வி.எம்மை பற்றி குறிப்பிடும் போது மிக உயர்வாகவே
பேசுவார். ஒரு நேர்முகத்தில், கே.வி.எம் அவர்கள் பாடகர், பாடகியர்களுக்குக்கும்
நிறைய சுதந்திரம் தருவார் என குறிப்பிட்டு இருக்கிறார். “நலந்தானா நலந்தானா”,
“மறைந்திருந்து பார்க்கும்”, “மன்னவன் வந்தானடி”, “சொல்ல சொல்ல இனிக்குதடா” போல
எத்தனை காலத்தால் அழியாத கானங்கள்..!!!
50-களில் இந்த கூட்டணியில் வந்த பாடல்களை பற்றி இந்த தொகுப்பில்
பார்ப்போம். 1955-ல் வெளிவந்த “ஆசை அண்ணா அருமை தம்பி” படத்தில் “பொழைக்கிற வழியைப்பாரு” என்கிற ஒரு பாடல்
என்னிடம் இருக்கிறது. அதே வருடத்தில் வெளிவந்த குலேபகவாலி ஹிந்தியில் டப்
செய்யப்பட்ட போது “bade tum veer sahi” எனற ஒரு பாடலை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். அதற்குப்பின் 1958-ல் பொம்மை கல்யாணம், மாதவி, பெரிய கோயில், பிள்ளைக்கனி அமுது,
செங்கோட்டை சிங்கம் போல படங்களில் பாடி இருக்கிறார். பொம்மை கல்யாணம் படத்தில்
பி.சுசீலா. ஜமுனாராணி இணைந்து பாடிய
“நில்லு நில்லு மேகமே” என ஓரளவு பிரபலமான பாடல், “பெரிய கோயில்” படத்தில்
“வலை வீசம்மா வலை வீசு”, “கொள்ளை கொள்ளும் அழகினிலே” போல குறிப்பிடத்தக்க சில
பாடல்கள். மாதவி படத்தில் “சுதந்திரதாகம் கொண்ட”, பாடலை குறிப்பிடலாம். பிள்ளைக்கனி அமுது படத்தில் TMS உடன் “சீவி முடிச்சி சிங்காரிச்சி”,
“ஓடுகிற தண்ணியிலே”, சீர்காழியாருடன் "பிள்ளைக்கனி அமுது ஒண்ணு" போல சில கிராமிய மணம் வீசும் பாடல்களை பாடினார்.. செங்கோட்டை சிங்கம் படத்தில் “இதுவும்இறைவன் லீலையா” என ஒரு பாடலை பாடினார் பி.சுசீலா.
1959-ம் ஆண்டில் "அபலை அஞ்சுகம்", "அல்லி பெற்ற பிள்ளை", எங்கள் குலதேவி, "காவேரியின் கணவன்", "நாலு வேலி நிலம்". பாஞ்சாலி, "சபாஷ் ராமு", "சொல்லு தம்பி சொல்லு", "தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை", "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்", "வாழ வைத்த தெய்வம்", வண்ணக்கிளி போன்ற தமிழ் படங்களிலும் "பொம்மல பெள்ளி", "ஆலு மகளு". "சம்பூர்ண ராமாயணம்", "சுமங்கலி" போன்ற தெலுங்குப்படங்களிலும் கே.வி.எம்.இசையில் பாடினார்.
அபலை அஞ்சுகம் படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், பி.சுசீலா குரலில் "வெண்ணிலா குடைபிடிக்க, வெள்ளி மீன் தலை அசைக்க" என்ற ஜோடிப்பாடல் மிக பிரபலமான பாடல். "ஒரு தேன்கிண்ணம் கேட்டேன்" என்ற மற்றொரு இனிமையான பாடலும் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கிறது.
"அல்லி பெற்ற பிள்ளை" படத்தில் "ஆசை அத்தான் கைப்பிடிக்க காத்திருந்தேனே",, டி.எம்.எஸ் உடன் "நல்ல நாளு ரொம்ப நாளு", "சும்மா சும்மா சிரிச்சிக்கிட்டு" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. இப்படத்தில் பண்டரி பாய், எம்.என்.ராஜம் போன்ற நடிகைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
எங்கள் குலதேவி படத்தில் "ஓ வண்டு ஆடாத சோலையில்", "வாடாமல்லிகையே வாடா", "மல்கோவா மாம்பழமே", "ஏ குட்டி நாகம்மா என் மேல கோபமா", "பச்சை பசுங்கிளியே" என பல பாடல்களை பாடினார். காவேரியின் கணவன் படத்தில் சந்தோஷமாகவும், சோகமாகவும் பாடும் "சின்ன சின்ன நடை நடந்து" பாடல் அருமையான தாலாட்டு. "கன்னி இளம் வயது" என்ற இன்னொரு சோலோவும் உண்டு.
( O vandu aadatha solaiyil )
"நாலு வேலி நிலம்" படத்தில் "இருப்பவர்கள் அனுபவிக்க", "பாடுபட்டு தேடி" என சில பாடல்கள் இடம் சுசீலாவின் குரலில் இடம் பெற்றன. பாஞ்சாலி படத்தில் "அன்பு உள்ளம் வேணும்". "இலவு காத்த கிளி" என்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்ற ஒரு அருமையான டூயட். "ஆரமுதே துரைராஜா" என்ற மற்றொரு பாடலும் சுசீலாவின் குரலில் ஒலித்தது. வாழ வைத்த தெய்வம் படத்தில் "காவேரி தான் சிங்காரி", "வெண்ணிலவே காதல் கதை பேசவா" பாடல்கள் ஹிட் ஆனவை.
சொல்லு தம்பி சொல்லு படத்தில் "கவலை அறியாமல் வாழ்ந்த", "உலகாள வருவான்", "சொல்லுவது ஒண்ணு", "பண்போடு என்னாளுமே" போன்ற பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை படத்தில் "விலை மதிப்பில்லாத", "நாட்டின் கலைத்தொண்டு" என சில பாடல்கள் சுசீலாவின் குரலில் ஒலித்தன. எம்,ஜி,ஆர் நடித்த "தாய் மகளுக்கு கட்டிய தாலி" படத்தில் "தெரியாதா சொல்ல தெரியாதா", "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" படத்தில் "I came from Paris" போன்ற பாடல்கள் இடம் பிடித்தன.
இந்த வருடத்தில் மிக பெரிய ஹிட்ஸ் என்றால் வண்ணக்கிளி பட பாடல்கள் தான். பி.சுசீலா, எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "சித்தாடைக் கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" பாடல் இன்றளவும் ஹிட் ஆன பாடல். "வண்டி உருண்டோட அச்சாணி தேவை" போன்ற கிராமிய மணம் வீசும் பாடல்களை கையாள மாமாவை விட்டால் வேறு யார்? என்பது போல் அமைந்த பாடல் அது. "அடிக்கிற கை தான் அணைக்கும்" என ஒரு வித்தியாசமான சோகப்பாடல். "சின்னப்பாப்பா எங்க செல்லப்பாப்பா" என நிறைவான ஒரு தாலாட்டு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்" என குழந்தைகளுக்கான ஒரு பாடல் என சரமாரியாக ஹிட் அடித்த பாடல்கள். தவிர "ஆனந்தமாய் இன்று ஆடுவோமே" என்று கோரசுடன் பாடும் ஒரு சந்தோஷப்பாடலும் உண்டு. "ஆசை இருக்குது மனசினிலே" என்று இன்னொரு சந்தோஷப்பாடலும் இடம் பெற்றது.
(Chinna paapa enga chella paapa - vannakkili)
( sithadai kattikkittu - vannakkili )

இதே வருடத்தில் தெலுங்கில் இசை அமைத்த "பொம்மல பெள்ளி" படத்தில் "நின்னே நின்னே மேகமா" பாடல் இடம் பெற்றது. ஆலு மகளு படத்தில் "aadukku thandri", "okati okati okati", "samsaram mahasagaram" போன்ற பாடல்களை பாடினார் பி.சுசீலா. "o rachavari vhinavada" என்ற பாடலை "சம்பூர்ண ராமாயணம்" படத்தில் பாடினார். "kotha pelli kutura" என்ற பாடலை சுமங்கலி என்ற திரைப்படத்தில் பாடினார்.
50-களை பொறுத்த வரை கே.வி.எம் அதிக அளவில் பி.சுசீலாவின் குரலை உபயோகிக்கவில்லை என்றே சொல்லலாம். இக்கால கட்டத்தில் பி.சுசீலாவின் குரலை வைத்து அதிக பரீட்சைகளும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. பெரும்பாலான பாடல்கள் கிராமிய மணம் கமழும் பாடல்களாகவே இருந்திருக்கிறது. என்றாலும் குறிப்பிடப்படத்தக்க அளவுக்கு ஹிட்ஸ் சுசீலாவுக்கு கிடைத்திருக்கிறது.
List of Songs in 50's.
( தொடரும்) ....
(Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7)

1955 | Tamil | aasai anna arumai thambi | pozhaikkum vazhiyai paaru | ||
1958 | Tamil | bommai kalyanam | nillu nillu meghamE | ||
1958 | Tamil | maadhavi | sudhanthira daham konda | ||
1958 | Tamil | periya koyil | iruppavargaL maadi | ||
1958 | Tamil | periya koyil | koLLai koLLum azhaginile | ||
1958 | Tamil | periya koyil | valai veesamma valai veesu | ||
1958 | Tamil | pillai kani amudhu | Odugira thanniyile orasi | ||
1958 | Tamil | pillai kani amudhu | seevi mudichi singarichi | ||
1958 | Tamil | pillai kani amudhu | pillaikkani amudhu | ||
1958 | Tamil | senkottai singam | idhuvum iraivan lElaya | ||
1959 | Telugu | aalu magalu-old | aaduko na thandri | ||
1959 | Telugu | aalu magalu-old | Okati Okati Okati | ||
1959 | Telugu | aalu magalu-old | samsaram mahasagaram | ||
1959 | Tamil | abhalai anjugam | vennilaa kudai pidikka | ||
1959 | Tamil | abhalai anjugam | oru thenkinnam kettan | ||
1959 | Tamil | alli petra pillai | aasai athan | ||
1959 | Tamil | alli petra pillai | chumma chumma | ||
1959 | Tamil | alli petra pillai | nalla naaLu romba nalla | ||
1959 | Telugu | bommala pelli | ninne ninne meghama | ||
1959 | Tamil | engal kula devi | malgova maam pazhame | ||
1959 | Tamil | engal kula devi | pachai pasunkiliye, jolikkuum | ||
1959 | Tamil | engal kula devi | vaada malligaye vaada | ||
1959 | Tamil | engal kula devi | oh! Vandu aadatha | ||
1959 | Tamil | engal kula devi | Ea kutty nagamma, en mela | ||
1959 | Telugu | hanthakudevaru | thaggavoyi thaggavoyi | ||
1959 | Tamil | kaaveriyin kanavan | chinna chinna nadai nadanthu | ||
1959 | Tamil | kaaveriyin kanavan | chinna chinna nadai(pathos) | ||
1959 | Tamil | kaaveriyin kanavan | kanni ilam vayathu | ||
1959 | Tamil | nalu veli nilam | iruppavargal anubavikka | ||
1959 | Tamil | nalu veli nilam | paadupattu thEdi | ||
1959 | Tamil | paanchaali | Anbu ullam vEnum | ||
1959 | Tamil | paanchaali | ilavu katha kili | ||
1959 | Tamil | sabaash raamu | kalai ezhil vEsiye | ||
1959 | Tamil | sabash raamu | aaramuthe durai raaja | ||
1959 | Telugu | sampoorna ramayanam | o rachavari vhinavada | ||
1959 | Tamil | sollu thambi sollu | kavalai ariyamal vazhntha | ||
1959 | Tamil | sollu thambi sollu | solluvathu onnu | ||
1959 | Tamil | sollu thambi sollu | ulagala varuvan | ||
1959 | Tamil | sollu thambi sollu | panbodu ennaalume | ||
1959 | Telugu | sumangali | kottha pelli koothura | ||
1959 | Tamil | thaaayaipol pillai noolaipol selai | vilai madhippilladha | ||
1959 | Tamil | thaai magalukku kattiya thaali | theriyatha solla | ||
1959 | Tamil | thaayaipol pillai noolaipol selai | naatin kalaithondu | ||
1959 | Tamil | uzhavukkum thozhilukkum vandanai seivom | I come from paris | ||
1959 | Tamil | vaazha vaitha deivam | kaadhal kadhai pesavaa | ||
1959 | Tamil | vaazha vaitha deivam | kaavEridhaan singaari | ||
1959 | Tamil | vannakkili | aanandamaga | ||
1959 | Tamil | vannakkili | chinna papa enga chella papa | ||
1959 | Tamil | vannakkili | kuzhanthayum deivamum kondadum | ||
1959 | Tamil | vannakkili | vandi urundoda achani thevai | ||
1959 | Tamil | vannakkili | chitthadai kattikittu singaram | ||
1959 | Tamil | vannakkili | adikkira kai than anaikkum | ||
1959 | Tamil | vannakkili | aasaiirukkukthu manasula |
( தொடரும்) ....
(Part-2 ) (Part-3) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7)
YOUR COLLECTION IS FANTASTIC, KALAIKUMAR. GREAT JOB WITH AUDIO PROOF
பதிலளிநீக்குThanks Rajeswari !
நீக்கு