( Part -1) (Part-2 ) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7 )
1963 . 1964, 1965 வருடங்களில் KVM இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு இது.
1963 . 1964, 1965 வருடங்களில் KVM இசை அமைத்த படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு இது.
1963-ல் கே.வி.எம் இசையில் “தர்மம் தலைகாக்கும்”, “நீதிக்குப்பின்
பாசம்”, “பரிசு”, “காஞ்சி தலைவன்”, “கலை அரசி”, கொடுத்து வைத்தவள், போன்ற
எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும், “அன்னை இல்லம்”, “இருவர் உள்ளம்”, குலமகள் ராதை போன்ற
சிவாஜி நடித்த படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். தவிர வானம்பாடி, நீங்காத
நினைவு, நினைப்பதற்கு நேரமில்லை, கடவுளை கண்டேன், காட்டு ரோஜா, ஏழை பங்காளன், ஆசை
அலைகள். ஆஸ்திக்கொரு ஆணும், ஆசைக்கொரு பெண்ணும் போன்ற படங்களில் இசை அமைத்து
இருக்கிறார். இன்னொரு குறிப்பிடப்படத்தக்க படம் கே.வி.எம், கண்டசாலா இணைந்து இசையமைத்த
“லவ குசா” படம்.
எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் என்றால்
கே.வி.எம்முக்கு உற்சாகம் பிய்த்துக்கொள்ளும் போல் இருக்கிறது இளமையான பாடல்களாய்
அள்ளி வீசுவார். தர்மம் தலை காக்கும் படத்தில் .பி.சுசீலா, டி.எம்.எஸ்
குரல்களில் “ஹலோ ஹலோ சுகமா”, “தொட்டு விட தொட்டு விட தொடரும்”. “மூடுபனி குளிர் எடுத்து” போன்ற டூயட்களும் “அழகான வாழைமர தோட்டம்”, “பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க” போன்ற தனிப்பாடல்களும் மிக பிரபலமானவை. ஹலோ ஹலோ சுகமா இப்போதும்
பிரபலமே. நீதிக்குப்பின் பாசம் படத்தில் “மானல்லவோ கண்கள் தந்தது”, “வாங்க வாங்க கோபாலய்யா”, “காடு கொடுத்த கனி இருக்கு”, “அக்கம் பக்கம் பார்க்காதே”, “சிரித்தாலும் போதுமே”, “இடி இடிச்சு மழை பொழிஞ்சி” என ஹிட் பாடல்களாக அமைந்தன. பரிசு படத்தில் “எண்ண எண்ண இனிக்குது”,
“கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு”, “ஆளைப்பார்த்து அழகைப்பார்த்து” போல ஜோடிப்பாடல்களும். "காலமெனும்நதியினிலே", பொன்னுலகம் நோக்கி போகின்றோம் போன்ற தனிப்பாடல்களும் மக்கள் மனதில்
நிலைத்தவை. “காலமெனும் நதியினிலே” பாடலை பி.சுசீலா அனுபவித்து பாடி இருப்பார்.
காஞ்சி தலைவன் படத்தில் “ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா” என ஒரு அண்ணன்
தங்கை பாடல் பிரபலமாக அமைந்தது. தவிர, “வானத்தில் வருவது ஒரு நிலவு” என
டி.எம்.எஸ் உடன் ஒரு ஜோடிப்பாடல், "உயிரை தருகின்றேன்" என ஒரு தனிப்பாடல் என
பி.சுசீலாவின் பங்களிப்பு இருந்தது. காஞ்சித்தலைவன், கலை அரசி படங்களில், சொந்தக்குரலில் பாடும் பானுமதி
ஹீரோயின் என்பதால் இன்னொரு ஹீரோயினுக்கு பாடினார் பி.சுசீலா. “நீ இருப்பது எங்கே”, “என்றும் இளமை”
போன்ற பாடல்களை குறிப்பிடலாம்.. கொடுத்து வைத்தவள் படத்தில் “ நீயும் நானும் ஒன்று”,
“என்னம்மா சவுக்யமா எப்படி இருக்குது மனசு”, “மின்னல் வரும் சேதியிலே” போன்ற
பாடலகள் ஹிட் ஆனவை.
நடித்த படங்களான
அன்னை இல்லம், இருவர் உள்ளம், குங்குமம், குலமகள் ராதை போன்ற படங்களிலும் கே.வி.எம்மின்
இசை சிறப்பாக அமைந்தது. அன்னை இல்லம் படத்தில் “மடி மீது தலை வைத்து” பாடல் அருமையான மெலடி. “சிகப்பு விளக்கு எரியுதம்மா”, “அய்யா பெரியவரே”
அத்தானையே உள்ளம்” போல பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன. இருவர் உள்ளம்
படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம். “அழகு சிரிக்கின்றது”, “நதி எங்கே போகிறது” என
இரு மனதை மயக்கும் அருமையான ஜோடிப்பாடல்கள் இடம் பெற்றன. “இதய வீணை தூங்கும் போது பாட
முடியுமா” என்ற சோகமான சிச்சுவேஷன் பாடல் இன்றும் விரும்பி கேட்கப்படும்
பாடல். “கண்ணே கண்ணே
உறங்காதே” ஒரு இனிமையான மெலடி. குலமகள் ராதை படத்திலும் எல்லா பாடல்களும்
சிறப்பாக அமைந்தன. இந்த கால கட்டத்தில் மிக பலமான கதைகளும், கதைக்கு தேவையான
சிச்சுவேஷன் பாடல்களும் தேவையாக இருந்தன. குலமகள் ராதை படம் அவ்வகையை சேர்ந்தது. “இரவுக்கு ஆயிரம் கண்கள்”,
“பகலிலே சந்திரனை
பார்க்கப்போனேன்”, “ஆருயிரே
மன்னவரே அன்பு மயில் வணக்கம்”, “சந்திரனை காணாமல் அல்லிமுகம்
மலருமா”, “கள்ளமலர்
சிரிப்பிலே” என எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். இதைப்போல் குங்குமம் படத்தில் பாடல்களும்
பிரபலமாயின. “தூங்காத
கண்ணின்று ஒன்று” ஒரு சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. “குங்குமம் மங்கல மங்கையர்
குங்குமம்” என சூலமங்கலத்துடன் சேர்ந்து பாடும் பாடல் பெண்களுக்கான பாடல் ஆகும். “பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா” , “காலங்கள் தோறும் திருடர்கள்
இருந்தார்” என குறிப்பிடத்தக்க பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.
Sirithu sirithu ennai
| |
இவ்வருடத்தில் இன்னொரு முக்கியமான படம்
லவகுசா ஆகும். தெலுங்கில் கண்டசாலாவும் தமிழில் கே.வி.எம் + கண்டசாலா இணைந்தும் இசை
அமைத்து இருந்தார்கள். பி.சுசீலா மற்றும் பி.லீலா இணைந்து பாடிய ராமரின் கதை
சொல்லும் பாடலான “ஜகம்
புகழும் புண்ய கதை ராமனின் கதையே” பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. தமிழ்
சினிமா இசை உலகில் மிகவும் நீண்ட நேரம் ஒலிக்கும் பாடலாகவும் அது அமைந்தது. மிகவும்
சிரமமான பாடல். பி.சுசீலாவும், பி.லீலாவும் இணைந்து பாடுவதை கேட்க அத்தனை சுகம்.
இரு சகோதரிகள் பாடுவது போல் இரு குரல்களும் ஒன்றோடொன்று இணைந்து ஒரே ஸ்ருதியில் பாடும் போது அதை கேட்பது அத்தனை சுகம். இதன் தெலுகு வடிவம் “வினுடு வினுடு இராமாயண ஃகாதா”-வின்
டியுனை மாற்றி தமிழுக்கு ஏற்றாற்போல் புது டியூன் போட்டு வெற்றி பெற்றார் கே.வி.எம்.
அப்படத்தில் “ராம சுகுண சீலா தசரதனின் அருமை பாலா”, “ஜெய ஜெய ராம்” என லீலாவுடன்
பாடிய மற்ற பாடல்களும் முக்கியத்துவம் பெற்றன. “ஈடு இணைக்கு நமக்கு ஏது” என ஒரு
நடனப்பாடலும் படத்தில் இடம் பெற்றது. தவிர நிறைய ஸ்லோகங்கள் பி.சுசீலா மற்றும்
பி.லீலா குரல்களில் இடம் பெற்றன. இப்படத்தின் பாடல்கள் பக்தி இசை சார்ந்த
படங்களுக்கு இசை அமைக்கும் நிறைய வாய்ப்புகளை கே.எம்.முக்கு பெற்று தந்தது என்றே
சொல்லலாம்.
கண்ணதாசனின் படமான “வானம்பாடி”, கே.வி.எம் இசையில் இக்கால கட்டத்தில் வந்த இன்னொரு முக்கியமான படம்.
ஒரே இசை மழை தான் !! காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் “கங்கை கரை தோட்டம்”
பாடலையும் சேர்க்கலாம். கனவில் சுகமும். நிஜத்தில் சோகமுமாக உணர்வுகளை மாற்றி
மாற்றி பாடும் பி.சுசீலாவும், அதை திரையில் கொண்டு வந்த தேவிகாவும் கவியரசர்
கண்ணதாசனின் வரிகளும் அப்பாடலை மறக்க முடியாத பாடலாக செய்து விட்டது. பி.சுசீலாவின் திறமையை
பறைசாற்ற அந்த ஹம்மிங் ஒன்றே போதும். கிராமிய மனம் வீசும் “தூக்கணாங்குருவிக்கூடு தூங்க கண்டாள் மரத்திலே” பாடலை ரசித்து ரசித்து கேட்கலாம். (திரையில்
ரெக்கார்டிங் தியேட்டரில் தேவிகா பாடுவது போல் வரும்). மிகவும் இயல்பாக உணர்வுகளை
சொல்ல கவிஞரின் பேனாவால் தான் முடியும் என்பதை நிருபிக்கும் பாடல் தான் “ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள், அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்” பாடல். பி.சுசீலாவின் குரலால் அவ்வரிகளுக்கு உயிர் வந்தது. டி.எம்.எஸ்-பி.சுசீலாவின் குரலில் வந்த “ஆண் கவியைவெல்ல வந்த பெண்கவியே வருக” பாடல் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு மேடையில் இருவர் போட்டி போடும் பாடலாக அது தோன்றினாலும்,
அது முழுக்க முழுக்க கவிஞரின் தமிழ் விளையாடும் களமாகவே அப்பாடல் அமைந்தது.. குரலில்
துள்ளலும் குறும்புமாய் பாடகர்களும் கலக்கி இருப்பார்கள். காட்டு ரோஜா படத்தில்
“சின்ன சின்ன கண்ணுக்கு என்ன வேண்டும்?”, “ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு”, “கதவுதிறந்ததா”, “வண்டொன்று வந்தது” "சின்ன சின்ன கன்னி எனக்கு" என நல்ல பாடல்கள் இடம் பெற்றன. ஏழை பங்காளன்
படத்தில் “மனதில் என்ன மயக்கம்”, “வீட்டுக்கு வந்த மச்சான்” என குறிப்பிடும்
படியான பாடல்களை பி.சுசீலா பாடினார். “கடவுளை ” கண்டேன் படத்தில் “தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்”, “அண்ணா அண்ணா சுகம் தானா”, "விடிய விடிய பேசினாலும்" போன்ற
பாடல்கள் இடம் பெற்றன. “நீங்காத நினைவு” படத்தில் “எங்கிருந்த போதும் உன்னை மறக்கமுடியுமா” என மனதை வருடும் ஒரு சோகப்பாடல் மிகவும் பிரபலம். “ஓ ஓ ஓ ஓ சின்னஞ்சிறுமலரை மறந்து விடாதே” என எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடும் பாடல் ஒரு ஹிட் பாடல்.
ஹிந்திப்பட டியூனை உபயோகித்து இருந்தார் கே.வி.எம். இதே தனிப்பாடலாகவும்
பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. தவிர “கண்பார்வை கவிபாடும்”, “கன்னி பருவம்”,
“அன்பு வாழ்க, ஆசை வாழ்க” போன்ற பாடல்களும் இடம் பெற்றன. கைதியின் காதலி படத்தில்
“ராஜாவும் வந்திடுவார்”, “மார்கழி போச்சு தை பொறந்தாச்சு” பாடல்கள் குறிப்பிட
படத்தக்கவை. நினைப்பதற்கு நேரமில்லை படத்தில் “அத்தான் கடிதம் நல்ல முத்து” பாடல்
இடம் பெற்றது. “யாருக்கு சொந்தம்?” படத்தில் “வண்டுக்கு தேன் வேண்டும்” பாடலை
குறிப்பிடலாம்.
இதே வருடத்தில் தெலுங்கில் “Mamakaram”,
“Atma balam” என இரு நேரடி தெலுங்குப்படங்களுக்கும் இசை
அமைத்தார் கே.வி.எம். Atma balam படத்தில் “Ekkadiki pothavu”, “Chitapata Chinukulu”, “Parugulu these nee
vayasunaku”, “Gilli
kajalu” , “nalugu
kallu” என எல்லாமே சிறப்பான பாடல்கள். “Mamakaram” படத்தில் “Ghalluna gajjala
ganthulu”, “madhuram madhuram mana” போன்ற பாடல்கள் இடம் பிடித்தன.
1964-ல் வேட்டைக்காரன், தொழிலாளி, அல்லி. ஆயிரம் ரூபாய், நவராத்திரி போன்ற தமிழ் படங்களிலும் “Dhaagudu mootalu”. “mooga manasulu” போன்ற கே.வி.எம் இசை அமைத்த தெலுங்குப்படங்களிலும் பி.சுசீலா பாடி இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் மெதுவா மெதுவா தொடலாமா”, “மஞ்சள் முகமே வருக”, “கதாநாயகன் கதை சொன்னான்”. “என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ” போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. தொழிலாளி படத்தில் டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து “என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்”, “வருக வருக திருமகளின்”, “வளர்வது கண்ணுக்கு தெரியலே” போன்ற பாடல்களையும் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து “அழகன் அழகன் பேரழகன்” பாடலையும் “கலை வந்த விதம் கேளு கண்ணே” பாடலை தனிப்பாடலாகவும் பாடினார் சுசீலா அவர்கள். எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்தன. நவராத்திரி படத்தில் “நவராத்திரி சுபராத்திரி” என்ற பாடல் இப்போதும் நவராத்திரி காலங்களில் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். “சொல்லவா கதை சொல்லவா” ஒரு இனிமையான, குளிர்ச்சியான மெலடி. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அந்த தெருக்கூத்து பாடல் தான். “ராஜாதி ராஜா மகாராஜா” என துவங்கும் தெருக்கூத்து பாடலை, ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட ஒரு பெண் இந்த மண்ணுக்குரிய கலையை, தெருக்கூத்துக்கே உரித்தான உச்சரிப்புடன் பாடி அசத்தி விட்டார். அதை சாவித்திரியும் தன் அனாயசமான நடிப்பால் திரையில் ஒளிர செய்தார். ஆயிரம் ரூபாய் படத்தில் சென்னை தமிழில் “ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தே மடம் ” என்ற வழக்கத்துக்கு மாறான பி.சுசீலாவின் பாடல் இடம் பெற்றது. “நிலவுக்கும் நிழலுண்டு” ஒரு நல்ல தத்துவ பாடலாகும். “பார்த்தாலும் பார்த்தேன் நான் ஒன்ன போல பாக்கலே” என பி.பி.எஸ்ஸுடன் ஒரு இனிமையான, பிரபலமான பாடல் அமைந்தது. “அல்லி” படத்தில் “உன்னை அன்றி யாரிடம்”. காவேரி மீனடியோ” உட்பட ஆறு பாடல்கள் இடம் பெற்றன.
இதய கமலம் படத்தில் எல்லா பாடல்களும் காலத்தால் அழியாதவை. "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல" பற்றி சொல்லவே வேண்டாம். 50 வருடங்கள் ஆகியும் அழியாமல் நிற்கும் பாடல் இது. "மலர்கள் நனைந்தன பனியாலே" பாடலை காலையில் எழுந்ததும் கேளுங்கள். அன்றைய தினம் மனம் அமைதியாகவும், பிரெஷ் ஆகவும் இருக்கும். அத்தனை இனிமையான பாடல். "என்ன தான் ரகசியமோ இதயத்திலே" பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இரு பெண்களுக்கும் பி.சுசீலாவே பாடி இருக்கும் பாடலில் இரு பெண்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி குரலால் நடித்திருப்பார் பி.சுசீலா அவர்கள். கே.ஆர்.விஜயாவுக்கு காதல் மனைவியின் வேடமும், ஷீலாவுக்கு மனைவியை பிரிந்து வாடும் கணவனை அவர் பக்கம் இழுக்கும் வேடமும் கிடைத்தன. இருவருமே குடும்பப்பெண்கள் என்றாலும் ஒருவர் குரலில் காதலும், நிறைவும் ஒலிக்க இன்னொருவர் குரலில் கொஞ்சம் ஆசையும் கலந்து ஒலிக்க வேண்டும். காதலில் குழைந்து கே.ஆர்.விஜயா "நினைத்தால்....." என இழுக்க, "எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" என ஷீலா துவங்கும் இடத்தில் குரலில், எக்ஸ்ப்ரஷனில் அப்படி ஒரு துரிதமான மாற்றம். Hats Off Susheelamma !! பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடல்களும் ஹிட் ஆகின.
காக்கும் கரங்கள் படத்தில் "திருநாள் வந்தது, தேர் வந்தது", "ஞாயிறு என்பது கண்ணாக", "அல்லித்தண்டு கால் எடுத்து" "அக்கா அக்கா அக்கா அக்கக்கா " பாடல்கள் சிறப்பாக அமைந்தன. "திருநாள் வந்தது" பாடல் சோகம் ததும்பும் அருமையான பாடல். கன்னித்தாய் படத்தில் "மானா பொறந்தா", "என்றும் பதினாறு வயது பதினாறு", "வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது" போல சில குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன. படித்த மனைவி படத்தில் "அப்பா ஒரு கண்ணு", "அந்த முகமா இந்த முகம்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. "எங்க வீட்டுப்பெண் படத்தில் "தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்", "கால்களே நில்லுங்கள்" "கார்த்திகை விளக்கு " போன்ற பாடல்கள் பிரபலம் ஆயின.
திருவிளையாடல் படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல்கல். இப்போது வெளியிட்டாலும் ஹிட் ஆகும். அப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சிறப்பானவை. பி.சுசீலா பாடிய "தேவா மகாதேவா", "நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு" பாடல்களும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தன. தாழம்பூ படத்தில் "தாழம்பூவின் நறுமணத்தில்", "வட்ட வட்ட பாத்தி கட்டி", "தூவானம் இது தூவானம்", "ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலம்", "பங்குனி மாதத்தில் ஒரு இரவு" பாடல்கள் ஹிட் ஆனவை. "வீர அபிமன்யு" படத்தில் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" பாடலை யாரால் மறக்க முடியும்? தேன் தேன் என ஒவ்வொரு வரியையும் கவிஞர் முடிக்க, தேன் குரலாள் சுசீலாவும், மதுரக்குரலோன் பி.பி.எஸ்சும் குழைந்து பாடியிருக்கும் பாடல். இப்பாடல் தவிர "வேலும் வில்லும் விளையாட", "நீயும் ஒரு பெண் ஆனால்", "போவோம் புது உலகம்", "தொட்ட இடம் குளிருது" போன்ற பாடல்களும் இடம் பெற்றன. இதே படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளி வந்தது. பார்த்தேன் சிரித்தேன் பாடல் "Choochi valachi" என அதே பாடகர்கள் குரலில் ஒலித்தது. "Rambha oorvasi thaladanne", "adhigo navalokam", "Challani samivi neevaithe" "thagina chota entho", போல இனிமையான பாடல்கள் அமைந்தன.
1965 -ல் வெளிவந்த தெலுங்குப்படங்களில் "anthasthulu" படத்தில் "Tella cheera kattukunadhi", "Ninu veedani needanu", "Nuvvante nakenduko" போன்ற பாடல்கள் குறிப்பிடப்படத்தகவை. "Tene manasulu" படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம். "Divinundi bhuviki digi vachai", "Chandamama andhala mama", "ye yenthikani" "yevaro yevaro", "yevamma ninne", "one two three.. mastaaru" போல எல்லா பாடல்களுமே ஹிட். "Todu Needa" படத்தில் "Athavodi puvvuvale" (அத்தைமடி மெத்தையடி", "Mallunaa manyalunna", "endulake kanneeru" பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. சாரதா படம் தெலுங்கில் "சுமங்கலி" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்" பாடல் "kanulu kanulatho" என தெலுங்கில் ஒலித்தது. "Aanati Manavudu yemi chesadu", "Kannulu neeve kaavali" போன்ற பாடல்களும் இடம் பெற்றன. kanne manasulu படத்தில் "chukkalanti chinnodu", "chitranga unnadi", "valapulo" , "Oho Tamarena", "ammalaganna" போன்ற பாடல்களும் இடம் பிடித்தன. Illalu படத்தில் "neevu naa voohalande", "malle puvulu virisera", "manasunedo kavvisthondi" போல இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.
Iதொடரும்... )
( Part -1) (Part-2 ) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7 )
1964-ல் வேட்டைக்காரன், தொழிலாளி, அல்லி. ஆயிரம் ரூபாய், நவராத்திரி போன்ற தமிழ் படங்களிலும் “Dhaagudu mootalu”. “mooga manasulu” போன்ற கே.வி.எம் இசை அமைத்த தெலுங்குப்படங்களிலும் பி.சுசீலா பாடி இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் மெதுவா மெதுவா தொடலாமா”, “மஞ்சள் முகமே வருக”, “கதாநாயகன் கதை சொன்னான்”. “என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ” போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. தொழிலாளி படத்தில் டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து “என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்”, “வருக வருக திருமகளின்”, “வளர்வது கண்ணுக்கு தெரியலே” போன்ற பாடல்களையும் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து “அழகன் அழகன் பேரழகன்” பாடலையும் “கலை வந்த விதம் கேளு கண்ணே” பாடலை தனிப்பாடலாகவும் பாடினார் சுசீலா அவர்கள். எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்தன. நவராத்திரி படத்தில் “நவராத்திரி சுபராத்திரி” என்ற பாடல் இப்போதும் நவராத்திரி காலங்களில் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். “சொல்லவா கதை சொல்லவா” ஒரு இனிமையான, குளிர்ச்சியான மெலடி. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அந்த தெருக்கூத்து பாடல் தான். “ராஜாதி ராஜா மகாராஜா” என துவங்கும் தெருக்கூத்து பாடலை, ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட ஒரு பெண் இந்த மண்ணுக்குரிய கலையை, தெருக்கூத்துக்கே உரித்தான உச்சரிப்புடன் பாடி அசத்தி விட்டார். அதை சாவித்திரியும் தன் அனாயசமான நடிப்பால் திரையில் ஒளிர செய்தார். ஆயிரம் ரூபாய் படத்தில் சென்னை தமிழில் “ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தே மடம் ” என்ற வழக்கத்துக்கு மாறான பி.சுசீலாவின் பாடல் இடம் பெற்றது. “நிலவுக்கும் நிழலுண்டு” ஒரு நல்ல தத்துவ பாடலாகும். “பார்த்தாலும் பார்த்தேன் நான் ஒன்ன போல பாக்கலே” என பி.பி.எஸ்ஸுடன் ஒரு இனிமையான, பிரபலமான பாடல் அமைந்தது. “அல்லி” படத்தில் “உன்னை அன்றி யாரிடம்”. காவேரி மீனடியோ” உட்பட ஆறு பாடல்கள் இடம் பெற்றன.
“Dhaagudumoothalu” படத்தில் “adagaka icchina manase muddu”. “mella mellaga anuvanuvu”,
“gorankakenduko kondantha
alaka”, “enkochindoy maava
edurochindoy”, “devudane
vadu vunnada”, “Andalam
ekkadamma” போன்ற பாடல்கள்
மிக பிரபலாமனவை. சாவித்திரியின் சொந்த தயாரிப்பான “மூக மனசுலு” படம் இன்னொரு
மியுசிகல் ஹிட். “Godari gattundi” பாடல் எல்லா மக்கள் மனதையும்
கவர்ந்திழுத்த அருமையான கிராமியப்பாடல். “ee Naati ee bandham”, “naa paata nee nota” , “Gowramma nee mogudevaramma”
போன்ற
பாடல்கள் கண்டசாலா, சுசீலாவின் குரல்களின் வந்த மறக்க முடியாத டூயட்ஸ். “Maanu maakkanu kaanu” மனதைக்கரைக்கும் ஒரு சோகப்பாடல். தவிர சில டப்பிங் படங்களும் இவர்
இசையில் வெளி வந்தன.
1965-ல் "இதய கமலம்", "எங்க வீட்டு பெண்", "காக்கும் கரங்கள்",
"கன்னித்தாய்", "படித்த மனைவி", "சுமங்கலி". "தாழம்பூ". "திருவிளையாடல்", "வீர அபிமன்யு" போன்ற தமிழ் படங்களிலும், "Anthasthulu", "illalu", " kanne manasulu", "Raja drohi", "Sumangali", "tene manasulu", "todu needa", "veerabhimanyu" போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம்மின் இசையில் பாடினார் பி.சுசீலா அவர்கள்.இதய கமலம் படத்தில் எல்லா பாடல்களும் காலத்தால் அழியாதவை. "உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல" பற்றி சொல்லவே வேண்டாம். 50 வருடங்கள் ஆகியும் அழியாமல் நிற்கும் பாடல் இது. "மலர்கள் நனைந்தன பனியாலே" பாடலை காலையில் எழுந்ததும் கேளுங்கள். அன்றைய தினம் மனம் அமைதியாகவும், பிரெஷ் ஆகவும் இருக்கும். அத்தனை இனிமையான பாடல். "என்ன தான் ரகசியமோ இதயத்திலே" பாடலைப்பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். இரு பெண்களுக்கும் பி.சுசீலாவே பாடி இருக்கும் பாடலில் இரு பெண்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி குரலால் நடித்திருப்பார் பி.சுசீலா அவர்கள். கே.ஆர்.விஜயாவுக்கு காதல் மனைவியின் வேடமும், ஷீலாவுக்கு மனைவியை பிரிந்து வாடும் கணவனை அவர் பக்கம் இழுக்கும் வேடமும் கிடைத்தன. இருவருமே குடும்பப்பெண்கள் என்றாலும் ஒருவர் குரலில் காதலும், நிறைவும் ஒலிக்க இன்னொருவர் குரலில் கொஞ்சம் ஆசையும் கலந்து ஒலிக்க வேண்டும். காதலில் குழைந்து கே.ஆர்.விஜயா "நினைத்தால்....." என இழுக்க, "எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே" என ஷீலா துவங்கும் இடத்தில் குரலில், எக்ஸ்ப்ரஷனில் அப்படி ஒரு துரிதமான மாற்றம். Hats Off Susheelamma !! பி.பி.எஸ் உடன் இணைந்து பாடிய "தோள் கண்டேன் தோளே கண்டேன்", "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடல்களும் ஹிட் ஆகின.
காக்கும் கரங்கள் படத்தில் "திருநாள் வந்தது, தேர் வந்தது", "ஞாயிறு என்பது கண்ணாக", "அல்லித்தண்டு கால் எடுத்து" "அக்கா அக்கா அக்கா அக்கக்கா " பாடல்கள் சிறப்பாக அமைந்தன. "திருநாள் வந்தது" பாடல் சோகம் ததும்பும் அருமையான பாடல். கன்னித்தாய் படத்தில் "மானா பொறந்தா", "என்றும் பதினாறு வயது பதினாறு", "வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது" போல சில குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன. படித்த மனைவி படத்தில் "அப்பா ஒரு கண்ணு", "அந்த முகமா இந்த முகம்" போன்ற பாடல்கள் இடம் பெற்றன. "எங்க வீட்டுப்பெண் படத்தில் "தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்", "கால்களே நில்லுங்கள்" "கார்த்திகை விளக்கு " போன்ற பாடல்கள் பிரபலம் ஆயின.
திருவிளையாடல் படம் தமிழ் திரை உலகில் ஒரு மைல்கல். இப்போது வெளியிட்டாலும் ஹிட் ஆகும். அப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சிறப்பானவை. பி.சுசீலா பாடிய "தேவா மகாதேவா", "நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு" பாடல்களும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தன. தாழம்பூ படத்தில் "தாழம்பூவின் நறுமணத்தில்", "வட்ட வட்ட பாத்தி கட்டி", "தூவானம் இது தூவானம்", "ஏரிக்கரை ஓரத்திலே எட்டுவேலி நிலம்", "பங்குனி மாதத்தில் ஒரு இரவு" பாடல்கள் ஹிட் ஆனவை. "வீர அபிமன்யு" படத்தில் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்" பாடலை யாரால் மறக்க முடியும்? தேன் தேன் என ஒவ்வொரு வரியையும் கவிஞர் முடிக்க, தேன் குரலாள் சுசீலாவும், மதுரக்குரலோன் பி.பி.எஸ்சும் குழைந்து பாடியிருக்கும் பாடல். இப்பாடல் தவிர "வேலும் வில்லும் விளையாட", "நீயும் ஒரு பெண் ஆனால்", "போவோம் புது உலகம்", "தொட்ட இடம் குளிருது" போன்ற பாடல்களும் இடம் பெற்றன. இதே படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளி வந்தது. பார்த்தேன் சிரித்தேன் பாடல் "Choochi valachi" என அதே பாடகர்கள் குரலில் ஒலித்தது. "Rambha oorvasi thaladanne", "adhigo navalokam", "Challani samivi neevaithe" "thagina chota entho", போல இனிமையான பாடல்கள் அமைந்தன.
1965 -ல் வெளிவந்த தெலுங்குப்படங்களில் "anthasthulu" படத்தில் "Tella cheera kattukunadhi", "Ninu veedani needanu", "Nuvvante nakenduko" போன்ற பாடல்கள் குறிப்பிடப்படத்தகவை. "Tene manasulu" படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணம். "Divinundi bhuviki digi vachai", "Chandamama andhala mama", "ye yenthikani" "yevaro yevaro", "yevamma ninne", "one two three.. mastaaru" போல எல்லா பாடல்களுமே ஹிட். "Todu Needa" படத்தில் "Athavodi puvvuvale" (அத்தைமடி மெத்தையடி", "Mallunaa manyalunna", "endulake kanneeru" பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. சாரதா படம் தெலுங்கில் "சுமங்கலி" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்" பாடல் "kanulu kanulatho" என தெலுங்கில் ஒலித்தது. "Aanati Manavudu yemi chesadu", "Kannulu neeve kaavali" போன்ற பாடல்களும் இடம் பெற்றன. kanne manasulu படத்தில் "chukkalanti chinnodu", "chitranga unnadi", "valapulo" , "Oho Tamarena", "ammalaganna" போன்ற பாடல்களும் இடம் பிடித்தன. Illalu படத்தில் "neevu naa voohalande", "malle puvulu virisera", "manasunedo kavvisthondi" போல இனிமையான பாடல்கள் இடம் பெற்றன.
Year | Lang | Movie | Song | ||
1963 | Tamil | aasai alaigal | chinnanchiru maganai | ||
1963 | Tamil | aasai alaigal | alli alli kodutha | ||
1963 | Tamil | aasthikkoru anum asaikkoru pennum | pazhathaikkande oru | ||
1963 | Tamil | aasthikkoru anum asaikoru pennum | pirivu enbadhu | ||
1963 | Tamil | annai illam | ayya periyavare | ||
1963 | Tamil | annai illam | athaanaye ullam | ||
1963 | Tamil | annai illam | madi mEdhu thalai vaithu | ||
1963 | Tamil | annai illam | sivappu viLakku eriyudhu | ||
1963 | Tamil | annai illam | aalinganam - padhyam | ||
1963 | Tamil | dharmam thalai kakum | Paravaigale paravaigale | ||
1963 | Tamil | dharmam thalai kakum | Azhagana vAzhai mara thOtam | ||
1963 | Tamil | dharmam thalai kakum | Hello Hello sughama | ||
1963 | Tamil | dharmam thalai kakum | Thottu vida Thottu vida | ||
1963 | Tamil | dharmam thalai kakum | Moodupani kulireduthu | ||
1963 | Tamil | ezhai pangalan | veettukku vandha machaan | ||
1963 | Tamil | ezhai pangalan | manadhil enna mayakkam | ||
1963 | Tamil | iruvar ullam | Idhaya veenai thoongum podhu | ||
1963 | Tamil | iruvar ullam | Kanne kanne urangathe | ||
1963 | Tamil | iruvar ullam | azhagu Sirikkintathu | ||
1963 | Tamil | iruvar ullam | Nadhi enge poghirathu | ||
1963 | Tamil | kaattu roja | chinna chinna kanni enakkenna | ||
1963 | Tamil | kaattu roja | Enadi roja ennadi sirippu | ||
1963 | Tamil | kaattu roja | kadhavu thirandhadhaa | ||
1963 | Tamil | kaattu roja | chinna chinna kannanukku enna | ||
1963 | Tamil | kaattu roja | vaNdondru vandhadhu | ||
1963 | Tamil | kadavulai kanden | deepathai vaidhukondu | ||
1963 | Tamil | kadavulai kanden | anna anna sughamthana | ||
1963 | Tamil | kadavulai kanden | vidiya vidiya pesinalum | ||
1963 | Tamil | kaidhiyin kadhali | raajaavum vanthiduvaar | ||
1963 | Tamil | kaidhiyin kadhali | maargazhi pochchu thai | ||
1963 | Tamil | kalayarasi | entrum illamal | ||
1963 | Tamil | kalayarasi | nee iruppathu ingE | ||
1963 | Tamil | kanchi thalaivan | uyirai tharugintren | ||
1963 | Tamil | kanchi thalaivan | oru Kodiyil iru malargal | ||
1963 | Tamil | kanchi thalaivan | Vaanathil varuvathu oru nilavu | ||
1963 | Tamil | koduthu vaithaval | neeyum naanum ontru | ||
1963 | Tamil | koduthu vaithaval | minnal varum sethiyile | ||
1963 | Tamil | koduthu vaithaval | ennammaa sowkkiyamaa | ||
1963 | Tamil | kulamagal radhai | Iravukku aayiram kangal | ||
1963 | Tamil | kulamagal radhai | pagalile chandiranai paarkka | ||
1963 | Tamil | kulamagal radhai | aaruyire mannavanE anbu mayil | ||
1963 | Tamil | kulamagal radhai | Kalla malar chirippile | ||
1963 | Tamil | kulamagal radhai | Chandiranai kaanamal | ||
1963 | Tamil | kumudham | enna un idhayam | ||
1963 | Tamil | kungumam | kaalangal thorum | ||
1963 | Tamil | kungumam | kungumam, mangala mangayar | ||
1963 | Tamil | kungumam | poonthotta kaaval kara poo parikka | ||
1963 | Tamil | kungumam | thoongatha kann entru ontru | ||
1963 | Tamil | lava kusa | hreengaaraadana | ||
1963 | Tamil | lava kusa | veeramaatha kowsaya | ||
1963 | Tamil | lava kusa | eedu iNai namakku yedhu | ||
1963 | Tamil | lava kusa | rama suguna seela | ||
1963 | Tamil | lava kusa | jaya jaya ram, sree rama | ||
1963 | Tamil | lava kusa | jagam pugazhum pinya | ||
1963 | Tamil | lava kusa | thiruvalar nayagan | ||
1963 | Tamil | lava kusa | maari pol | ||
1963 | Tamil | needhikkup pin paasam | kaadu kodutha kaniyirukku | ||
1963 | Tamil | needhikkup pin paasam | vaanga vaanga gopalayya | ||
1963 | Tamil | needhikkup pin paasam | idi idichchu mazhai pozhinju | ||
1963 | Tamil | needhikkup pin paasam | maanallavO kanngaL thandhadhu | ||
1963 | Tamil | needhikkup pin paasam | akkam pakkam paakkaadhE | ||
1963 | Tamil | needhikkup pin paasam | sirithaalum pOdhumE | ||
1963 | Tamil | neengaadha ninaivu | engirundha podhum unai | ||
1963 | Tamil | neengaadha ninaivu | kanpaarvai kavipaadum | ||
1963 | Tamil | neengaadha ninaivu | kanni paruvam | ||
1963 | Tamil | neengaadha ninaivu | chinnanchiru malarai | ||
1963 | Tamil | neengaadha ninaivu | anbu vaazhga aasai | ||
1963 | Tamil | neengadha ninaivu | chinnanchiru malarai-solo | ||
1963 | Tamil | ninaippadharkku neramillai | athaan kaditham nalla muthu | ||
1963 | Tamil | parisu | kaalamenum nadhiyinilE | ||
1963 | Tamil | parisu | ponnulagam nOkki pOgintrOm | ||
1963 | Tamil | parisu | koondhal kaRuppu kungumam | ||
1963 | Tamil | parisu | eNNa eNNa inikkudhu, EdhEdhO | ||
1963 | Tamil | parisu | aalaipaarthu | ||
1963 | Tamil | saaradha | kannaanaal naan imai | ||
1963 | Tamil | vaanampaadi | gangai karai thOttam kannipengal | ||
1963 | Tamil | vaanampaadi | oomai penn oru kanavu kandaaL | ||
1963 | Tamil | vaanampaadi | Thookkanan kurivikkoodu | ||
1963 | Tamil | vaanampaadi | aankaviyai vella vandha peN kaviyE | ||
1963 | Tamil | yaarukku sondham? | poovukkul thEnai vaithavan | ||
1963 | Tamil | yaarukku sondham? | vandukku thEn vEndum | ||
1963 | Telugu | Athirstavathi (D) | ennamma sowkiyama in telugu | ||
1963 | Telugu | Athirstavathi (D) | minnal varum sethiyile in telugu | ||
1963 | Telugu | Athirstavathi (D) | neeym naanum ontru in telugu | ||
1963 | Telugu | atmabalam | Chitapata chinukulu | ||
1963 | Telugu | atmabalam | Giligajjalu petukunne | ||
1963 | Telugu | atmabalam | Naalugu kallu rendainayi | ||
1963 | Telugu | atmabalam | Parugulu theese nee vayasu | ||
1963 | Telugu | atmabalam | Tellavareeku Ee reyini | ||
1963 | Telugu | atmabalam | Yekkadiki pothavu | ||
1963 | Telugu | thyaga murthulu (D) | vanakkam vanakkam in telugu | ||
1963 | Telugu | thyaga murthulu (D) | manadhil konda in telugu | ||
1963 | Telugu | thyagamurthulu (D) | Kannai parikkudha in telugu | ||
1963 | Telugu | Mamakaaram | Ghalluna gajjala ganthulu | ||
1963 | Telugu | Mamakaaram | Madhuram madhuram mana | ||
1964 | Tamil | aayiram roobai | parpodi | ||
1964 | Tamil | aayiram rubaai | aanaakka antha madam | ||
1964 | Tamil | aayiram rubaai | paarthaalum paarthen | ||
1964 | Tamil | aayiram rubaai | nilavukku nizhalundu | ||
1964 | Tamil | alli | ennanga ennai theriyuma | ||
1964 | Tamil | alli | kanni pennai | ||
1964 | Tamil | alli | unnai andri yaaridam | ||
1964 | Tamil | alli | kaaveri meenadiyo | ||
1964 | Tamil | alli | vanam nilavai maranthu | ||
1964 | Tamil | alli | unnai nan arivEn | ||
1964 | Tamil | navaraathri | Sollava kadhai Sollava | ||
1964 | Tamil | navaraathri | rajadhi raja maha raja | ||
1964 | Tamil | thozhilali | kalai vantha vidham kElu kannE | ||
1964 | Tamil | thozhilali | azhagan azhagan perazhagan | ||
1964 | Tamil | thozhilali | enna koduppaai enna koduppaai | ||
1964 | Tamil | thozhilali | varuga varuga thirumagalin | ||
1964 | Tamil | thozhilali | valarvadhu kannukku theriyalE | ||
1964 | Tamil | vetaikkaran | kadhaanaayagan kadhai | ||
1964 | Tamil | vetaikkaran | En kannanukkethani | ||
1964 | Tamil | vetaikkaran | manjaL ugamE varuga | ||
1964 | Tamil | vetaikkaran | medhuvaa medhuvaa | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Adagaka echinna manase | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Andalam yekkadamma | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Devudane vadunadani | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Goranka yenduko kondantha | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Mela Mela Mellaga | ||
1964 | Telugu | dhaagudumoothalu | Yenkonchidoi bava | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Galagalanee milamilanee alalu aadenu | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Kontevaadaa gopaalayya kori vachina | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Kanne vayaaramu kannaraa chatuga | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Bangaaram rangu nicchele muthyalu | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Cycle meeda manasela chakkani chukkaa | ||
1964 | Telugu | Donganu pattina dhora | Kanulandu mohame kavvinchu andame | ||
1964 | Telugu | hanthakudevaru | thaggavoi konjam | ||
1964 | Telugu | hanthakudevaru | andamaina | ||
1964 | Telugu | hanthakudevaru | hello Hello sukhama | ||
1964 | Telugu | hanthakudevaru | moohamule vikasinchi | ||
1964 | Telugu | hanthakudevaru | paruvulide pasi vayasu | ||
1964 | Telugu | inti donga (D) | kathanayagan in telugu | ||
1964 | Telugu | inti donga (D) | Kathaa naayaka kalalone nannu | ||
1964 | Telugu | inti donga (D) | nee kaanaaga jaalani | ||
1964 | Telugu | inti donga (D) | oo bava bava vinarava | ||
1964 | Telugu | inti donga (D) | preyasi mukhame velige | ||
1964 | Telugu | mooga manasulu | Eenati eebandham -ver1 | ||
1964 | Telugu | mooga manasulu | Eenati eebandham -ver2 | ||
1964 | Telugu | mooga manasulu | Godari gattundhi | ||
1964 | Telugu | mooga manasulu | Gouramma nee mogudu | ||
1964 | Telugu | mooga manasulu | Maanu maakunu kaanu | ||
1964 | Telugu | mooga manasulu | Naa paata nenota | ||
1964 | Telugu | muggurammaiyilu moodaithulu | enu enu darula | ||
1964 | Telugu | muggurammaiyilu moodaithulu | kaalamenum nadhiyinilE in telugu | ||
1964 | Telugu | muggurammaiyilu moodaithulu | ponnulagam nOkki in telugu | ||
1964 | Telugu | muggurammaiyilu moodaithulu | koondhal kaRuppu in telugu | ||
1964 | Telugu | muggurammaiyilu moodaithulu | muggurammaiyilu moodaithulu (D) | ||
1965 | Tamil | enga veetu penn | kaarthigai viLakku thiruk | ||
1965 | Tamil | enga veetu penn | kalgale nillungal kangalE | ||
1965 | Tamil | enga veetu penn | deivam malarOdu vaitha | ||
1965 | Tamil | idhaya kamalam | malargal nanainthana | ||
1965 | Tamil | idhaya kamalam | nee poghumidamellam naanum | ||
1965 | Tamil | idhaya kamalam | thOL kanden thOL kanden | ||
1965 | Tamil | idhaya kamalam | unnai kaanadha kannum kannum | ||
1965 | Tamil | idhaya kamalam | enna than ragasyamo idhayathile | ||
1965 | Tamil | kaakkum karangal | thiruNal vandhadhu thEr vandhadhu | ||
1965 | Tamil | kaakkum karangal | akka akka akkakka | ||
1965 | Tamil | kaakkum karangal | allith thaNdu kaaleduthu | ||
1965 | Tamil | kaakkum karangal | gnaayiRu enbadhu kannaaga | ||
1965 | Tamil | kannithaai | vaayaara mutham thandhu | ||
1965 | Tamil | kannithaai | ammAdi thookkamA | ||
1965 | Tamil | kannithaai | endrum padhinaaRu, vayadhu | ||
1965 | Tamil | kannithaai | maanaa poRandhaa | ||
1965 | Tamil | padiththa manaivi | appa oru kannu, amma | ||
1965 | Tamil | padiththa manaivi | avasaramaa avasaramaa | ||
1965 | Tamil | padiththa manaivi | andha mugamaa indha mugam | ||
1965 | Tamil | sumangali | aanandham, aanandham | ||
1965 | Tamil | thaazham poo | vatta vatta paathi katti | ||
1965 | Tamil | thaazham poo | thaazham poovin narumanathil | ||
1965 | Tamil | thaazham poo | thoovaanam idhu thoovaanam | ||
1965 | Tamil | thaazham poo | Erikkarai OrathilE ettu vEli | ||
1965 | Tamil | thaazham poo | panguni maasathil Or iravu | ||
1965 | Tamil | thiruvilayadal | neela selai kattikonda | ||
1965 | Tamil | thiruvilayadal | deva , mahaDeva | ||
1965 | Tamil | veera abhimanyu | neeyum oru pennanaal | ||
1965 | Tamil | veera abhimanyu | povom pudhu ulagam | ||
1965 | Tamil | veera abhimanyu | thotta idam kulirudhu | ||
1965 | Tamil | veera abhimanyu | paarthEn sirithEn pakkam vara | ||
1965 | Tamil | veera abhimanyu | vElum villum viLaiyaada | ||
1965 | Tamil | veera abhimanyu | ezhil Oviyam | ||
1965 | Telugu | anthasthulu | Maikamlo | ||
1965 | Telugu | anthasthulu | Ninu veedani needanu | ||
1965 | Telugu | anthasthulu | Nuvvante nakenduko | ||
1965 | Telugu | anthasthulu | Paikamtho(padhyam) | ||
1965 | Telugu | anthasthulu | Tella cheera kattukunadhi | ||
1965 | Telugu | illalu | anthamatta nuve | ||
1965 | Telugu | illalu | nuvvu poina chotte | ||
1965 | Telugu | illalu -old | malle puvulu virisera | ||
1965 | Telugu | illalu -old | manasunedo kavvisthondi | ||
1965 | Telugu | illalu -old | manasu nedokavvistondi | ||
1965 | Telugu | illalu -old | neerenda deepalu | ||
1965 | Telugu | illalu -old | neevu naa voohalandhe | ||
1965 | Telugu | illalu -old | o batasari idhi | ||
1965 | Telugu | kanne manasulu | ammalaganna | ||
1965 | Telugu | kanne manasulu | oho thamarenaa | ||
1965 | Telugu | kanne manasulu | sithramgaa unnadhi | ||
1965 | Telugu | kanne manasulu | sukkalaanti sinnodu | ||
1965 | Telugu | kanne manasulu | valapulo kannemanasulu | ||
1965 | Telugu | Mangalyamee maguva dhanam | Vidhi bhayankara | ||
1965 | Telugu | Mangalyamee maguva dhanam | Mrudupavanaaleevela | ||
1965 | Telugu | Mugguru Ammailu Moodu hatyalu | Eanni eanni theerula | ||
1965 | Telugu | Mugguru Ammailu Moodu hatyalu | Kurule nalupu kumkuma | ||
1965 | Telugu | Raja Drohi | Challaga navve allari pillaku | ||
1965 | Telugu | Raja Drohi | Ee vilaasam ee vikaasam | ||
1965 | Telugu | sumangali | Aanati Manavudu yemi | ||
1965 | Telugu | sumangali | kannulu neeve | ||
1965 | Telugu | sumangali | Kanulu kanulatho | ||
1965 | Telugu | sumangali | Yenatikaina | ||
1965 | Telugu | thene manasulu | Anadhiga jaruguthunna | ||
1965 | Telugu | thene manasulu | chandamama andala-sad | ||
1965 | Telugu | thene manasulu | Divinundi bhuviki | ||
1965 | Telugu | thene manasulu | Yemama ninenamma | ||
1965 | Telugu | thene manasulu | Chandamama andhala mama | ||
1965 | Telugu | thene manasulu | one two three | ||
1965 | Telugu | thene manasulu | Purushudu nenai puttali | ||
1965 | Telugu | thene manasulu | thellani vannedhaanaa | ||
1965 | Telugu | thene manasulu | ye yenthikani | ||
1965 | Telugu | thodu needa | naa thavodi puvvu vale | ||
1965 | Telugu | thodu needa | enthulaki kannuru ethukila | ||
1965 | Telugu | thodu needa | malluna manyalluna | ||
1965 | Telugu | veerabhimanyu | Adhigo navalokam | ||
1965 | Telugu | veerabhimanyu | Challani samivi neevaithe | ||
1965 | Telugu | veerabhimanyu | choochi valachi | ||
1965 | Telugu | veerabhimanyu | droupati avesha padyam | ||
1965 | Telugu | veerabhimanyu | Thakina chota | ||
1965 | Telugu | veerabhimanyu | paritranaya aadhunam | ||
1965 | Telugu | veerabhimanyu | Rambha oorvasi thala | ||
1965 | Telugu | veerabhimanyu | swagatham |
Iதொடரும்... )
( Part -1) (Part-2 ) ( Part-4) (Part-5) (Part-6) (Part-7 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக