பின்பற்றுபவர்கள்

சனி, 8 நவம்பர், 2014

பி.சுசீலாவுடன் பாடிய வட இந்திய பாடகர்கள்.

 வட இந்திய பின்னணி கலைஞர்களுடன் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பு.
             “King Of Ghazals” என அழைக்கப்படும் Talat Mehmoodஅவர்களுடன் இணைந்து “மனோரமா” (1958) என்ற தெலுங்கு படத்துக்காக இரு பாடல்களை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். “Marachi poyedemo”, “Gati Lenivani”  என இரு பாடல்களையும் கேளுங்கள். என்ன இனிமை! என்ன இனிமை!! ..இப்பாடல்கள்  மக்களை எளிதில் சென்றடைந்தது.
                       
                                                                 ( Gati Lenivavi )
                                                                  ( Marachi poye )
                                    
      இந்தியாவின் தலை சிறந்த பாடகர்களில் ஒருவரான “Mohammed Rafiஅவர்களுடன் இணைந்து “Bhale Tammudu”, “Akbar Saleem Anarkali” என இரு தெலுங்கு படங்களில் பாடி இருக்கிறார் பி.சுசீலா. 



                 T.V.Raju இசையில் “Bhale Tammudu” பாடல்கள் எல்லாமே ஹிட். அதில் இடம் பெற்ற கவ்வாலி பாடலான Bangaru guvvanu nenu” கேட்டு அப்படியே அசந்து போயிருக்கிறேன். கவ்வாலி ஸ்டைலை அப்படியே புரிந்து கொண்டு அந்த எனெர்ஜியை அப்படியே கொண்டு வந்திருப்பார் பி.சுசீலா. அதிலும் அந்த நீளமான ஹம்மிங்.... எவ்வளவு பாராட்டினாலும் தகும். “Nede ee naade “ ஒரு இனிமையான டூயட். தவிர Iddari Manasulu okasari”. “Gopala Ninne kori”, Gumma Gumma , போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. 

                   ( Nede Ee Naade  )

                ( Quwali song  )


                   ( Gopala bala ninne kori  )

                ( Gumma Gumma  )

                  அதே போல “அக்பர் சலீம் அனார்கலி” பட பாடல்களும் மிகவும் பிரபலம் ஆனவை. பிரபல வட இந்திய இசை அமைப்பாளர் சி.ராமச்சந்திரா அவர்கள் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ஏற்கனவே பி.சுசீலாவை பாட வைத்திருக்கிறார். இப்படத்திலும் அவர் இசையில் எல்லா பாடல்களையும் பி.சுசீலா பாடினார். Rafi அவர்களுடன் இணைந்து பாடிய Sipayee Sipayee” பாடல் சூப்பர் ஹிட் பாடல். அதைப்போல் இருவரும் பாடிய “Thane Meli Mugusi theesi” , “Reyi Aagiponee, “Kalasukunna gubulaye” பாடல்கள் ரசிக்கத்தக்கவை.
                   ( Sipaayee Sipaayee )

                ( Kalasukkunnava )

                   ( Reyi Aagiponee  )

                ( Thane Meli Mugusu )


                                                                           
       ஹிந்தி திரை உலகின் இன்னொரு பிரபல பாடகரான கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்து “Singhasan” என்றார் நேரடி ஹிந்திப்படத்தில் “chalta hai do dilon ka kaise sansaar”, tere liye mene janam liya” என்ற இரு பாடல்களை பாடி இருக்கிறார். கேட்டு ரசியுங்கள்.
                                               ( Takatu Taka Tai Taka Tai )

                                               ( Tere Liye Maine Janam liya )

             
         Manna Dey அவர்களுடன் “ganga hi god mein” என்ற ஹிந்தி படத்தில், “ay ho ganga maiyya teri” என்ற பாடலை பாடி இருக்கிறார். யாரிடமாவது பாடல் இருந்தால் ஷேர் பண்ணுங்கள். 
       Anup Jalota உடன் "mohabat ka paigham" (1989) என்ற படத்தில் " Nache more man mandir mein" என்ற பாடலை பாடி இருக்கிறார். பாடலில் நடித்தவர் மீனாக்ஷி சேஷாத்ரி.  
                                                   

             பெண் பாடகிகளில் ஆஷா போன்ஸ்லேவுடன் இணைந்து “Koi ghulam Nahin” படத்தில் “aandhiyan door hui hain asha” என்ற பாடலை பாடி இருக்கிறார். இப்பாடல் “காலத்தை வென்றவன் நீ” பாடலின் ஹிந்தி வடிவம். ( பாடல் இன்னும் கிடைக்கவில்லை )
                         


      
              “Brahma rishi viswamitra” என்ற தெலுங்கு படத்துக்காக Ravindra Jain இசையில் கவிதா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து “ee Chinnadi muddula chintamani” என்ற பாடலை பாடி இருக்கிறார். 

Thanks.. 



1 கருத்து:


  1. Manna Dey அவர்களுடன் “ganga hi god mein” என்ற ஹிந்தி படத்தில், “ay ho ganga maiyya teri” என்ற பாடலை பாடி இருக்கிறார். யாரிடமாவது பாடல் இருந்தால் ஷேர் பண்ணுங்கள்.

    https://www.youtube.com/watch?v=iQvgz8GyI2k

    பதிலளிநீக்கு