பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 மார்ச், 2016

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ...

பி.சுசீலாவின் கின்னஸ் சாதனை :


         கின்னஸ்  புத்தகத்தில் 1980-லேயே இடம் பிடித்திருக்க வேண்டியவர் பி.சுசீலா அம்மையார்.. லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய எண்ணிக்கையை அப்போதே அவர் தாண்டி விட்டார். இதற்கு காரணம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பி.சுசீலாவே பெரும்பாலான பாடல்களை பாடியது தான். லதா அவர்கள் 25,000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி விட்டார் என ஆதாரமில்லாமல் ஒரு செய்தி உலா வந்தது.  அதனால் தான் என்னவோ பி.சுசீலா அவர்கள் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யாமல் இருந்திருக்கிறார். மேலும் நேரமின்மை கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் நீண்ட வருடங்கள் கழித்து இந்த சாதனைக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தான்,
       சுசீலா அவர்களை ஓரம் கட்டி விட வேண்டும் என தமிழ் சினிமாவில் நடந்த முயற்சிகள் ( எண்பதுகளுக்கு பின் ) ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்லலாம். ஆனால் ரசிகர் மனதில் அவர் இடம் அப்படியே தான்  இருந்தது. நிறைய சுமாரான பாடகர்களின் வெற்றியை பார்த்த பின் பி.சுசீலாவின் தரமும் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது. ஆனால் தெலுங்கு சினிமா பி.சுசீலாவை அப்படியே தலையில் தூக்கி வைத்தி கொண்டாடியது. எண்பதுகளில் கூட தெலுங்கில் வருடத்துக்கு சராசரியாக 350 பாடல்களுக்கு மேல் பாடி வந்தார். (ஆதாரம் ) தெலுங்கில் அன்றைய முன்னணி  இசை அமைப்பாளர் சக்ரவர்த்தியும், கே.வி.மகாதேவனும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள். அவர்கள் இருவர் இசையிலும் தலா 2000 பாடியிருப்பது கூட ஒரு பெரிய சாதனை எனலாம். மற்ற இசை அமைப்பாளர்களும் பி.சுசீலாவையே பாட வைத்தார்கள்.

     இதில் ஒரு உண்மை புரிந்தது.. பி.சுசீலாவை ஓரம் கட்டி விட்டோம் என  இறுமாந்த நெஞ்சங்களுக்கு இந்த சாதனை, ஒரு பாடம். என்றோ கிடைத்திருக்க வேண்டிய சாதனை மகுடம் ரொம்ப தாமதமாக வந்து  இருக்கிறது. அவ்வளவு தான். தமிழில் சொல்வது போல் “ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை” என்று நிருபணம் ஆகி இருக்கிறது.. நான் ஆயிரம் கைகள் என சொல்வது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.. 

4 கருத்துகள்:

  1. இந்த விருது ஒரு பூதக் கண்ணாடியாகி அந்த சூரியனின் கதிர்களை ஒன்று திரட்டி மறைக்கப் பார்க்கும் கைகளை சுட்டெரித்து விடாதோ ?

    பதிலளிநீக்கு
  2. இந்த விருது ஒரு பூதக் கண்ணாடியாகி அந்த சூரியனின் கதிர்களை ஒன்று திரட்டி மறைக்கப் பார்க்கும் கைகளை சுட்டெரித்து விடாதோ ?

    பதிலளிநீக்கு
  3. ( தமிழ் ) திரை மறைவில் , எண்பதுகளில் அவரை ஓரம் கட்டும் முயற்சிகள் ஒரு புறம் ஏராளமாக நடந்தாலும் ,
    அவ்வப்போது அம்மாவுக்கு கிடைக்கும் பாடல்களில் , வழக்கமான தனது முத்திரையை பதிக்க என்றும் தவறியதில்லை அவர் .......தேன் தடவிய அந்த குரலிலிருந்து ஒலிக்கும் பாடல்கள் என்றென்றும் தரம் வாய்ந்தவைகளே ! இன்றளவும் அவரின் குரலின் தரம் , இம்மியளவேனும் குறையாமல் இருப்பது , கடவுள் அவருக்கு அளித்த வரம் ! அந்த இசையரசி கிடைத்தது , திரையுலகத்துக்கு கிடைத்த வரம் !..அவரின் பாடல்களை கேட்கும்படியான பேறு கிடைத்தது , கடவுள் நமக்கு அளித்த வரம் !..அதற்கும் மேலாக , , அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து வருகிறோம் என்பது , நாம் அனைவரும் பெற்ற வரங்களுள் மகத்தான வரம் ! ! .எண்பதுகளில் அவர் பாடிய பாடல்களான .....' லாலி லாலி '.பாடலாகட்டும் ...' பூ பூக்கும் மாசம் தை மாசம் ' பாடலாகட்டும் ...' கண்ணுக்கு மை அழகு ' பாடாகட்டும் ...' சொந்தமில்லை பந்தமில்லை ' பாடலாகட்டும் .....' இசையரசி எந்நாளும் ' பாடலாகட்டும் ...எது சோடையான பாடல் ?...எல்லாவற்றிலும் தனது திறமையையும் , தனித்தன்மையையும் நிரூபித்து காட்டியவர் அம்மா ........மற்றவர் எப்படி நடந்து கொண்டாலும் , அதை கருத்தில் கொள்ளாது , பெருந்தன்மையுடனும் , பணிவுடனும் , அடக்கத்துடனும் நடந்து ........தான் எப்போதும்
    ' நிறைகுடம் ' தான் என்று பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர் சுசீலாம்மா !


    பதிலளிநீக்கு
  4. யாருங்க அந்த சதிகாரர்கள்?!

    பதிலளிநீக்கு