பின்பற்றுபவர்கள்

வியாழன், 30 மே, 2019

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்



P.Susheela and Vennira Aadai Nirmala.



1965-இல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படம் பல திறமையான நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தது. ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா என பலரும் அந்த படத்தில் அறிமுகம் ஆனவர்கள் தான். வெண்ணிற ஆடை நிர்மலா அறுபதுகளின் மத்தியில் அறிமுகம் ஆனாலும் எழுபதுகளின் இறுதிவரை பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பின் அம்மா, அக்கா வேடங்களிலும் நடித்து குணசித்திர நடிகையாக விளங்கினார், மென்மையான அழகும், நடன திறமையும் ஒருங்கே இணைந்த நடிகை இவர். முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பதால் நிறைய நடன நிகழ்சிகளையும் நடத்தி நடன துறையிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொண்டார். இப்போதும் சீரியல்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் உஷா குமாரி என்ற பெயரில் நடித்து வந்தார்.

இவர் முதலில் நடித்து வெளிவந்த “வெண்ணிற ஆடை” படத்தில் “ஒருவன் காதலன் ஒருத்தி காதலி” என்ற பாடலை இவருக்காக பி.சுசீலா பாடி இருந்தார். அப்படத்தின் முதல் கதாநாயகியான ஜெயலலிதாவுக்கு எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடி இருந்தாலும் இரண்டாவது கதாநாயகியான நிர்மலாவுக்கும் பி.சுசீலா பாடி இருந்தார். பி.சுசீலா இவருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பின்னணி பாடி இருக்கிறார். பக்த பிரஹலாதா ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியான போது அதிலும் ஒரு பாடலை பி.சுசீலா இவருக்காக பாடி இருந்தார்.. பி.சுசீலா இவருக்கு கிட்டத்தட்ட 100 பாடல்கள் வரை பின்னணி பாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆருடனும் ( ரகசிய போலிஸ், நாளை நமதே, இதயக்கனி, ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க, ,மீனவ நண்பன்) , சிவாஜியுடனும் ( எங்க மாமா, சொர்க்கம், பாபு,) என  பல படங்களில் நடித்திருக்கிறார். மற்றும் ஜெய்சங்கர், முத்துராமன். ரவிச்சந்திரன், சிவகுமார். மு,க,முத்து போன்ற எழுபதுகளின் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். எண்பதுகளில் ரஜினி, கமலுடனும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் உஷா குமாரி என்ற பெயரில் நடித்திருக்கிறார்.

பி.சுசீலாவுக்கு தகுந்த மரியாதை செய்யும் நடிகைகளில் இவரும் ஒருவர். பி.சுசீலா கின்னஸில் இடம் பிடித்த செய்தி கேட்டு நேரில் வந்து பாராட்டிய நடிகைகளில் இவரும் ஒருவர். பி.சுசீலாவுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டு பி.சுசீலாவை பாராட்டி பேசினார்.



பக்த பிரஹலாதா படத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா என நால்வரும் ஹிரண்யகசிபு அரசவையில் நடனமாடும் பாடல் காட்சியை ஜெயஸ்ரீ, கீதாஞ்சலி, விஜயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என  நால்வரின் நடனத்துடன் படமாக்கி இருந்தனர். பி.சுசீலா, எஸ்,ஜானகி, சூலமங்கலம் ஆகியோர் பாடினர். ரம்பாவுக்கும் திலோத்தமைக்கும் பி.சுசீலா பாடி இருந்தார். இப்பாடல் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் இதே குரல்களிலேயே இடம் பெற்றது.  தெலுங்கில் இவர் நடித்த முதல் படமும் இதுவே.


மலையாளத்தில் அவர் நடித்த முதல் படமான சேட்டத்தி படத்திலும் "பதினாறு வயஸ்ஸு கழிஞ்சால்" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார்.

அதே போல் கன்னடத்திலும் அவர் நடித்த முதல் படமான "RenukaDevi Mahatme" என்ற படத்திலும் "Priyathama swagatha" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார். மொத்தத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் இவருக்கு அறிமுக  பாடலை பாடியது பி.சுசீலா அவர்களே.

பி.சுசீலா இவருக்கு பாடிய முக்கியமான பாடல் என்றால் லக்ஷ்மி கல்யாணம் படத்தில் இடம் பெற்ற "ராமன் எத்தனை ராமனடி" பாடலை சொல்லலாம். காலங்கள் பல கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்களில் அதுவும் ஓன்று.

அதே போல் பி.சுசீலாவுக்கு தமிழ் நாட்டின் அரசு விருதை பெற்று தந்த "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" என்ற பாடலுக்கும் பெரும் பங்கு உண்டு.

தாய்க்கு ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற " கல்யாண ராமன் கோலம் கண்டான்" பாடலும் மிக சிறந்த பாடலே.

மன்னிப்பு படத்தில் பி.சுசீலாவும் கோமளாவும் இணைந்து பாடிய "குயிலோசையை வெல்லும்" பாடல் மிக சிறந்த பாடல். இப்படத்தில் "நீ எங்கே என் நினைவுகள் எங்கே" என்ற இன்னொரு பாடலையும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக பாடி இருந்தார் பி.சுசீலா.
இதயக்கனி படத்தில் இடம் பெற்ற "தொட்ட இடமெல்லாம்" பாடலும் புகழ் பெற்ற பாடல்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம் பெற்ற "அழகெனும் ஓவியம்  இங்கே"  பாடல் ஹிட்டான பாடல். அருமையான மெலடி.

ஒரு டப்பிங் படம். ஆனால் அருமையான பாடல். வி.தட்சிணாமூர்த்தி இசையில் "Sri Anjaneya charithra" என்ற படத்தில் அருமையான ஒரு செமி;கிளாசிகல் பாடல்.



YearLanguageMovieSongmusic
1965Tamilvennira adaioruvan kaadhalanMSV-TKR

1965MalayalamChettathipathinaru vayasu kazhinjalG.Devarajan
1967Tamilbhaktha prahaladavaazhgave mannulagumS. Rajeshwara Rao
1967Telugubhaktha prahladaJayaho andani suraseemaS. Rajeshwara Rao
1967Hindibhaktha prahladaJayaho jayaho aaj naya mereS. Rajeshwara Rao
1967Tamilkaadhalithaal podhumaaayyaa muzhikkiRa muzhiyaiVeda
1967Tamilkaadhalithaal podhumaakonjam nilladi en kannEVeda
1967Tamilpandhayamnaalapuramum kodukattiT.R. Papa
1967Tamilpandhayamthendral vandhu thottadhinaalET.R. papa
1968Tamillakshmi kalyaanambrindavanathukku varugintrenM.S. Viswanathan
1968Tamillakshmi kalyaanamraman ethanai ramandiM.S. Viswanathan
1968Tamilneelagiri expresspereecham pazhangalukkuT.K. Ramamurthy
1968Tamilsopu sepu kannadinichayam naanE natural beautyT.K. Ramamoorthy
1968Tamilsopu sepu kannadithookkam kannilE yEkkam T.K. Ramamoorthy

1969Tamilmannippukuyilosayai vellumS. M. Subbiah Naidu
1969TamilmannippuNee engeen ninaivugal -ver2S. M. Subbiah Naidu
1969Tamilmannippuvennilaa vaanil varumS. M. Subbiah Naidu
1969Tamilpoova thalayapaaladai meni panivaadai M.S. Viswanathan
1969Tamilthangaikkagaazhage neeyoru kadhaiM.S. Viswanathan
1970Tamilnoorandu kalam vazhgamaangalyam thirumaangalyamK.V. Mahadevan
1970Telugupelli koothururamunu roopameM.S. viswanathan
1970Telugupelli koothuruchakkani pilla pakkanaM.S. Viswanathan
1971Tamilbadhilukku badhilEzhettup peNgaL endhanS.M. subbaiah naidu
1971Telugubangaru thallibangaru thalliS. Rajeshwara Rao
1971Tamilneedhi devanmaanikka padhumaikkuK.V. Mahadevan
1971MalayalamPanchavan kaadumanmadha pournami G.Devarajan
1971Tamilthanga gopuramMuthuthamizh madurayin[1]S. M. Subbiah Naidu
1972Tamilavalboys and girlsShankar Ganesh
1972TamilavalGeetha oru naal pazhagumShankar Ganesh
1972Telugudatta putruduandhaniki andanivaiT. Chalapathi rao
1972Tamilkaadhalikka vaangakadhal entral thenallavoRagava naidu
1972Tamilkaadhalikka vaangaunakkum enakkum uravuRagava naidu
1972Telugukattula rattayyaentho machu rojuK.V. Mahadevan
1972Tamilprarththanaiadimai naan anaiyiduShankar Ganesh
1972Telugusomari pothuyemanukkunnavo naavoduG.K.Venkatesh
1972Tamilthaaikku oru pillaikalyana raaman kolam Shankar Ganesh
1972Tamilthaaikku oru pillaimaadhulai muthukkalShankar Ganesh
1972Tamilthaaikku oru pillainaan kaadhal kilishankar ganesh
1973Tamilanbu sahodarargalethir paarthen unnai ethirK.V. Mahadevan
1973Telugudhanama deivamaEmito edhi emito GuduguduT.V. Raju
1973Tamilengal thaairaamanin naayagi kambanin M.S. Viswanathan
1973Tamilnalla mudivumaamaa veetu kalyanathilaShankar Ganesh
1973Tamilpetha manam pithuammadi ereduthu vanthavareV. Kumar
1973Tamilprarththanainetru varai pathinaaruT.K. Ramamoorthy
1973Tamilprarththanaikaadhal piRandhadhuT.K. Ramamoorthy
1973Telugusthree gowravamamma manasanthaV. Kumar
1973Telugusthree gowravampapa chinni papav. kumar
1973TamilvaakkuruthikannE thEdi vanthathuShankar Ganesh
1973TamilvaakkuruthipaadangaLai sollida vaaShankar Ganesh
1973Tamilvaakkuruthithanneeril meniShankar Ganesh
1974Tamilavalukku nigar avalesElai virkum kadayai kandEnV. Kumar
1974Malayalamdurgakaatoodum malayoramG.Devarajan
1974Tamilidhayakanithotta idamellamM.S. Viswanathan
1974Telugumangalya bhagyampuvvula renduS.P. Kodandapani
1974Telugumangalya bhagyamneeli gagnala thakeS.P. Kodandapani
1974Tamilpaththu madha bandhamaathooru maamaa pottaarushankar ganesh
1974Tamilsamayalkaranunakkum vishayamM.S. Viswanathan
1975Tamileduppar kai pillaiponnum mayangumM.B. Srinivasan
1975Teluguprema dharma (D)vayasulo vasanthamM.S. Viswanathan
1976Telugudatta putruduravamma ravammaT. Chalapthi rao
1977Tamilellam avalekulirukku bayanthavanM.S. Viswanathan
1977Tamiloorukku uzhaippavanazhagenum oviyam ingeM.S. Viswanathan
1977MalayalamSree Murugan jnanappazham neeyalleG.Devarajan
1977KannadaSri Renukadevi Mahatmepriyathama swagatha Hanumantharao
1978Tamilkaviraja kaala megamyaaraaga irunthaal ennaS.M. Subbiah naidu
1978Tamilkaviraja kaala megampodhigai thendral paduthuS.M. Subbiah naidu
1979MalayalamPuthiya velichamchuvanna pottumsalil choudry
1980Teluguchukkallo chandruduputtukathoneS. Rajeshwara Rao
1980Teluguchukkallo chandruduboga bhagyalathoS. Rajeshwara Rao
1980Teluguchukkallo chandruduninu kannadi evaroS. Rajeshwara Rao
1980Telugusri anjaneya charitranaadha niradham swara sancharamV. Dakshinamurthy
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyammanasu theerkaraS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamnee papanu naanaS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamninnati kathaveruS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamvalle ani allukoneS. Rajeshwara Rao
1980Telugusrivasavi kannika parameswari mahatmiyamveena na veenaS. Rajeshwara Rao
1981Tamilsathiyam thavaraadhemuthuk kuLippavareCN Pandurangam
1984Telugubhola sankarududrama-song-2Chakravarthy


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக