* எஸ்.பி.பி இசை அமைத்த பல திரைப்படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். அவர் முதன் முதலாக இசை அமைத்த “கன்யாகுமாரி” என்ற தெலுங்கு படத்தில் பி.சுசீலாவே பின்னணி பாடினார். அப்பட்த்திலேயே "tholi Sandyaku", "rahasyam teeyani rahasyam" என சில பாடல்களை பாடினார் பி.சுசீலா அவர்கள். அதே போல் பி.சுசீலா இசை அமைத்த சில பக்தி ஆல்பங்களில் எஸ்.பிபியையும் பாட வைத்திருக்கிறார்.
இந்த தொகுப்பில் கிட்டத்தட்ட 30 பாடல்கள் இருக்கிறது. இன்னும் இருக்கலாம். தெலுங்கு. கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் பாடல்கள் கிடைத்த்திருக்கிறது. ஆனால் தமிழில் ஒரு பாடல் கூட இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.
இசை அமைப்பாளர்கள் அவ்வப்போது பாடுவது உண்டு. எம்.எஸ்.வி (உனக்கென்ன குறைச்சல்), இளையராஜா (ஜனனி ஜனனி), தேவா (கவலைப்படாதே சகோதரா), எஸ்.ஏ.ராஜ்குமார் (ஏ புள்ள கருப்பாயி) போல பல இசை அமைப்பாளர்கள் பின்னணியும் பாடி இருக்கிறார்கள். அதைப்போல் பின்னணிப்பாடகர்களும் அவ்வப்போது சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்கள். அவர்கள் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பை இப்போது காணலாம்.
டி .எம் . சௌந்தரராஜன் :
டி .எம்.எஸ் இசை அமைத்த ஒரே தமிழ் திரைப்படம் "பலப்பரீட்சை". அந்த படத்தில் "மாப்பிள்ளை சாருக்கு" என்ற டூயட்டை இருவரும் இணைந்து பாடினார். அதை தவிர டி .எம்.எஸ் இசை அமைத்த "சிவக்ஷேத்ரங்கள்" என்ற பக்தி இசை தொகுப்பிலும் ஐந்து பாடல்களை பாடி இருக்கிறார் பி.சுசீலா. அதை தவிர "கண்ணதாசனுக்கு அஞ்சலி செலுத்த ஒரு இசைத்தட்டை வெளியிட்டார் டி .எம்.எஸ் அவர்கள். அதில் "காவிய நிலவே என்ற பாடலை பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். எம்.ஜி.ஆர் கட்சிக்கென "அனைந்திந்திய அண்ணா தி.மு.க பாடல்கள் என ஓர் இசை தட்டு டி .எம்.எஸ் இசையில் வெளிவந்தது. அதில் "தங்க மகன் தலைவன்", "எங்க வாத்தியார் ஆட்சி நடக்குது" என இரு பாடல்களை பாடினார் பி.சுசீலா.
கண்டசாலா தெலுங்கில் மிகப்பெரிய பாடகர் என்றாலும் பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணி ஆற்றினார். அவரது இசையில் பி.சுசீலா அவர்கள் கிட்டத்தட்ட 300 பாடல்கள் பாடி இருக்கிறார். அந்த தொகுப்பு இதோ.. Link : https://isaikuyil.blogspot.com/2020/06/blog-post_23.html
ஏ.எம்.ராஜா:
பழம்பெரும் பாடகரான ஏ.எம்.ராஜா அவர்கள் சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணி ஆற்றினார். கல்யாண பரிசு விடிவெள்ளி, தேன் நிலவு, ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, எனக்கொரு மகன் பிறப்பான் என பல தமிழ் படங்களுக்கும் pelli kanuka , manchini penchali, Virisena vennela போன்ற தெலுகு படங்களுக்கும் "அம்மாயென்ன ஸ்த்ரீ" என்ற மலையாள படத்துக்கும் இசை அமைத்தார். எல்லா படங்களிலும் பி.சுசீலா பாடினார். கிட்டத்தட்ட 40 பாடல்களை இவர் இசையில் பாடி உள்ளார்.
Year
Language
Movie
Songs
1959
Tamil
kalyaana parisu
aasayinaale manam anjuthu
1959
Tamil
kalyaana parisu
akkavukku valaikaapu
1959
Tamil
kalyaana parisu
kaadhalile tholviyuttal kanni oruthi
1959
Tamil
kalyaana parisu
mangayar mugathile konji
1959
Tamil
kalyaana parisu
unnai kandu naanada ennai kandu
1959
Tamil
kalyaana parisu
vaadikai maranthathum eno
1960
Tamil
anbukkor anni
kannana kanne
1960
Tamil
anbukkor anni
chittu muthu paapaa
1960
Tamil
anbukkor anni
thangath thamarai onnu
1960
Tamil
vidivelli
ennalum vaazhvile (happy)
1960
Tamil
vidivelli
ennalum vaazhvile (sad)
1960
Tamil
vidivelli
idai kaiyirandil aadum
1960
Tamil
vidivelli
koduthup paar paar unmai
1960
Telugu
pelli kanuka
Ade Paade pasivaada
1960
Telugu
pelli kanuka
Akkaiaku seemantham
1960
Telugu
pelli kanuka
Theerenuga
1960
Telugu
pelli kanuka
kannulatho palakarinchu
1960
Telugu
pelli kanuka
vaduka marachedhavela
1961
Tamil
then nilavu
Chinna chinna kannile
1961
Tamil
then nilavu
Malare Malare theriyadha
1961
Tamil
then nilavu
Nilavum malarum paaduthu
1961
Telugu
virisina vennela
kannu kannu kalisenu
1961
Telugu
virisina vennela
kaluva poolu
1961
Telugu
kashta sukhalu
aaha sowbhagyame andala
1961
Telugu
kashta sukhalu
anuragmu nee valane
1961
Telugu
kashta sukhalu
preminchu pathi entho
1961
Telugu
kashta sukhalu
saiyataladu nadumu
1961
Telugu
kashta sukhalu
kalasi po po vanamuna
1961
Telugu
virisina vennela
pranayam adi nee talachenu
1962
Tamil
aadipperukku
Idhu thaan ulagamaa
1962
Tamil
aadipperukku
kannaale pesum kaadhal
1962
Tamil
aadipperukku
kannizhantha maidhar munne
1962
Tamil
aadipperukku
kaveri Oram kavi sonna kaadhal
1962
Tamil
aadipperukku
peNgaLillaadha ulagathilE
1962
Tamil
aadipperukku
thanimayile inimai-ver2
1962
Tamil
aadipperukku
Thanimayile thanimayile
1973
Tamil
veetu maappillai
kanna pesum kannal
1975
Tamil
enakkoru magan pirappan
malarukku neer thaan
1975
Tamil
enakkoru magan pirappan
roja malarai pol
1976
Telugu
manchini penchaali
kaavaali okati
1976
Telugu
manchini penchaali
telusaa neeku telusaa
1976
Telugu
manchini penchaali
Ee roju manchi roju
1976
Telugu
manchini penchaali
kaavaali
1970
Malayalam
ammayenna stree
aali maali aattin karaiyil
1970
Malayalam
ammayenna stree
aadyathe devante kanmaniyallo
பி.பி.ஸ்ரீனிவாஸ் :
திரைப்பட துறையில் பி.சுசீலாவின் 25 வருட நிறைவையொட்டி அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் பி.சுசீலாவை கவுரவிக்கும் விதமாக பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் "மீரா பஜன்ஸ்" என்ற இசைத்தட்டை வெளியிட்டார். அதில் மூன்று பாடல்களை பாடி இருந்தார் பி.சுசீலா. .
1976
Hindi
Meera Bhajan
mohe laagi latak
1976
Hindi
Meera Bhajan
jaav kahan
1976
Hindi
Meera Bhajan
prabhuji tumho
பாலமுரளி கிருஷ்ணா :
"தியாகராஜ திவ்யநாம சங்கீர்த்தனம்" மற்றும் "ஸ்ரீ அன்னமையா " என இரு ஆல்பங்களை பி.சுசீலாவின் குரலில் இசை அ மைதது உடன் பாடி வெளியிட்டார் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.
கான கந்தர்வன் ஜேசுதாஸ் அவர்கள் முதலில் அழகுள்ள சலீனா" என்ற மலையாள படத்துக்கு இசை அமைத்தார். அதில் :தாஜ்மஹால் நிர்மிச்ச ராஜஷில்பி " என்ற விரக பாடலை அழகாக கம்போஸ் செய்து பி.சுசீலா அம்மாவே பாட வேண்டும் என விரும்பி கேட்டுக்கொண்டார். அந்த பாடலை பி.சுசீலா பாடி காஞ்சனா நடிக்க அருமையாக படமாக்கி இருந்தார்கள். இனிமையான பாடல்.
பாடும் நிலா பாலு என அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி.பி, அவர்கள் கிட்டத்தட்ட தெலுகு தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் இசை அமைத்த முதல் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த "கன்யாகுமாரி". அப்படத்திலேயே "tholi sandhyaku", "anandama arnavamaite", "rahasyam teeyani rahasyam" என மூன்று பாடல்களை பாட வைத்து இருந்தார். கிட்டத்தட்ட 25 பாடல்களை அவர் இசையில் பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள். அனால் தமிழில் ஒரு படத்தில் கூட அவர் இசையில் பாட வைக்கவில்லை என்பது ஒரு குறையே.
மலேஷியா வாசுதேவன் சில தமிழ் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைப்பில்,வெளியான "கொலுசு " என்ற படத்தில் " கோவம் என்ன ராசாவுக்கு" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருக்கிறார்.
1985
Tamil
F
kolusu
kovam enna raasaavukku
கே.பி.உதயபானு:
மலையாளத்தில் பிரபல பாடகர்களில் ஒருவர் உதயபானு. இவர் சில மலையாள படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் இசை அமைத்தது இருக்கிறார். அதில் பி.சுசீலா "samassya" என்ற படத்தில் "நிறபற சார்த்திய " என்ற பாடலை பாடி இருக்கிறார். அதை தவிர "கால்வரி குந்நில் யாகமேகிய " என்ற பாடலையும் பாடி இருக்கிறார்.
மாணிக்க விநாயகம் :
"ஆதி சக்தி நீயே", "கருணை மழையே கற்பகமே", "துர்கா தேவி சரணம்" என மூன்று ஆல்பங்களில் பி.சுசீலாவை பாட வைத்திருக்கிறார் மாணிக்க விநாயகம் அவர்கள்.
1998
aadhi Shakthi neeye
aadhi shakthi neeye paNNAri thAye
1998
aadhi Shakthi neeye
Amma en maari amma arul kOttai
1998
aadhi Shakthi neeye
amma un thiruvadikkai
1998
aadhi Shakthi neeye
anbAna Annaye meenatchi thAye
1998
aadhi Shakthi neeye
anbin deivamam ivmaruvathur
1998
aadhi Shakthi neeye
ezhilmigum
1998
aadhi Shakthi neeye
kaanthimathi devi
1998
aadhi Shakthi neeye
kalvi perunkadaley
1998
aadhi Shakthi neeye
kAmatchi kAmakOti thAye kanmalar
1998
aadhi Shakthi neeye
pakthikkum thAyentu
1998
aadhi Shakthi neeye
ponmedai thanil
1998
aadhi Shakthi neeye
thirumagalae
1998
aadhi Shakthi neeye
thirumayilai Alayathin karpagavalli
1991
bakthi maalai
mangala roopini
1996
DurgaDevi saranam(vol-1)
durga saranam
1996
DurgaDevi saranam(vol-1)
jaya jaya oM shakthi
1996
DurgaDevi saranam(vol-1)
kantha veera maakaaLi
1996
DurgaDevi saranam(vol-1)
lalitha navrathna maalai
1996
DurgaDevi saranam(vol-1)
raagu kaala poojai
1996
DurgaDevi saranam(vol-1)
saranam saranam durgaiyamma
1999
karunai mazhaiye karpagame
karpagame un pugazhai
1999
karunai mazhaiye karpagame
kettadhellam
1999
karunai mazhaiye karpagame
kungumam uyarnthu
1999
karunai mazhaiye karpagame
mayilaiyil oru kayilai
1999
karunai mazhaiye karpagame
mayilaiyil vazhum
1999
karunai mazhaiye karpagame
nee koduthal
1999
karunai mazhaiye karpagame
pachai veppilai
1999
karunai mazhaiye karpagame
punnai maram poochoriya
பானுமதி ராமகிருஷ்ணா:
பாடி நடிக்கும் நடிகையர்களில் பானுமதியும் ஒருவர். அவர் மிகுந்த இசை திறமை உள்ளவர். அதனால் சில படங்களுக்கு இசை அமைத்தார் .தமிழில் "பக்த துருவ மார்க்கண்டேயா " என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அதில் பி.சுசீலா இரு பாடல்களை பாடி இருக்கிறார். அதே படம் தெலுங்கு. மலையாள மொழிகளிலும் வெளியானது. அந்த படங்களிலும் பி.சுசீலாவே பாடினார் தவிர சில தெலுங்கு மொழி படங்களுக்கும் இசை அமைத்தார்.. அவற்றிலும் சில பாடல்களுக்கு பி.சுசீலா பின்னணி குரல் கொடுத்ததார்.
பிரபல கர்நாடக இசை மற்றும் பக்திப்பாடல் இசை வல்லுனரான இவர் சில படங்களுக்கும் இசைஅமைத்தார். அதில் தரிசனம் மற்றும் பிள்ளையார் போன்ற திரைப்படங்களில் பி.சுசீலா பாடினார்.
1970
Tamil
F
darisanam
kalyaaNam kalyaaNam
1984
Tamil
F
pillayar
maragatha thOranam
பி.லீலா :
முழுக்க முழுக்க பெண்கள் பங்கு பெற்ற ஒரு தெலுங்குப்படம் தான் "சின்னாரி பாப்பலு ". அதை இயக்கியவர் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள். அந்த படத்துக்கு இசை அமைக்க முதலில் பி.சுசீலாவை அணுகினார். பி.சுசீலா இசை அமைப்பதில் நாட்டம் இல்லை என்று மறுத்ததால் அந்த திரைப்படத்துக்கு பி.லீலா இசை அமைத்தார் . அதில் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார்.
"ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்" என்ற பாடலை பாடிய பி.வசந்தா தமிழ் தவிர மலையாளத்திலும் தெலுங்கிலும் நிறைய பின்னணி பாடல்கள் பாடி இருக்கிறார். அவர் "manchiki sthanam ledu" என்ற தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார் பி.வசந்தா. அதில் "sruti veedina veenanu" என்ற பாடலை பாடினார் பி.சுசீலா.