பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வி.குமார் இசையில் பி.சுசீலா


“மெல்லிசை மாமணி” வி.குமார் அவர்கள் பாலச்சந்தர் அவர்களால் நீர்க்குமிழி படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். காலத்தால் அழியாத நல்ல  மேலோடிகள், நகைச்சுவை பாடல்கள், தத்துவப்பாடல்கள் என அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நல்லிசையை கொடுத்தவர். மேடை நாடகங்களை திரைப்படம் ஆன போது அதன் அளவை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தரமான இசையை கொடுத்தவர். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என தத்துவப்பாட்டு ஆகட்டும், “சிவப்புக்கல்லு மூக்குத்தி” என கிராமியப்பாட்டு ஆகட்டும், “உன்னைத்தொட்ட காற்று வந்து” என மெலடி ஆகட்டும், “வா வாத்யாரே ஊட்டாண்ட” போல காமடி பாடல்கள் ஆகட்டும் அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. அவர் திறமை போதிய அளவுக்கு அங்கீகரிக்க படவில்லை. போதிய அளவுக்கு புகழப்படவில்லை.

  பி.சுசீலா ரசிகர்கள் வி.குமாருக்கு நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம். அவரது மனைவி சொர்ணா ஒரு பாடகியாக இருந்தும் கூட அவரது பெரும்பாலான படங்களில் பி.சுசீலா தான் ஆஸ்தான பாடகி. படத்தின் ஒப்பனிங் பாடல் பெரும்பாலும் பி.சுசீலாவின் குரலில் தான் இருக்கும். அவர் இசையில், நல்ல மெலடிகளை பி.சுசீலாவின் குரலில் கேட்க முடிகிறது. அதைப்போல் “நான் சத்தம் போட்டு தான் பாடுவேன்” என வித்தியாசமான பாடலையும், பிராமணர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் “அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா”, “அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்” போன்ற பாடல்களையும் பாட வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் அவர் இசை அமைத்த முதல் படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். ஒருவருக்கொருவர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். வி.குமார் இசையில் பி.சுசீலா அவர்கள் இருநூற்றுக்கு அதிகமான பாடல்களை பாடி இருந்தாலும், சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை அடைந்திருக்கின்றன. எனக்கு பிடித்த சில பாடல்களை குறிப்பிடுகிறேன். 



No Year Song Movie
3 1965 கன்னி நதியோரம்  நீர்க்குமிழி 
4 1965 நீரில் நீந்திடும் மீனினமே  நீர்க்குமிழி 
1 1965 என்ன தான் பாடுவது  நாணல் 
2 1965 விண்ணுக்கு மேலாடை  நாணல் 
5 1966 நேற்று நீ சின்ன பப்பா மேஜர் சந்திரகாந்த் 
6 1966 ஒரு நாள் யாரோ  மேஜர் சந்திரகாந்த் 
7 1966 காண கண்கோடி வேண்டும்  மேஜர் சந்திரகாந்த் 
8 1966 நானே பனி நிலவு  மேஜர் சந்திரகாந்த் 
9 1967 தொட்டதா தொடாததா  நினைவில் நின்றவள் 
10 1967 என்ன தெரியும் இந்த  நினைவில் நின்றவள் 
11 1967 தம்பி வாடா அடிச்சது  நினைவில் நின்றவள் 
12 1968 புன்னகை மன்னன் பூவிழி  இரு கோடுகள் 
13 1968 அடுத்தாத்து அம்புஜத்தை  எதிர் நீச்சல் 
14 1968 என்னம்மா பொன்னம்மா  எதிர் நீச்சல் 
15 1968 சேதி கேட்டோ  எதிர் நீச்சல் 
16 1968 தாமரை கன்னங்கள்  எதிர் நீச்சல் 
17 1968 நல்ல நாள் பார்க்கவோ  பொம்மலாட்டம் 
18 1968 மயக்கத்தை தந்தவன்  பொம்மலாட்டம் 
19 1969 புலவர் சொன்னதும் பொய்யே  ஆயிரம் பொய்
20 1969 தில்லையிலே சபாபதி  ஆயிரம் பொய்
21 1969 தமிழ் விடு தூது  ஆயிரம் பொய்
22 1969 கண்ணொரு பக்கம்  நிறைகுடம் 
23 1969 அழைக்கின்றேன் தேவா  நிறைகுடம் 
24 1969 அத்தான் நிறம் சிவப்பு  நிறைகுடம் 
25 1969 காலங்கள் உனக்காக  பெண்ணை வாழ விடுங்கள் 
26 1969 நெஞ்சே உனக்கொரு  பெண்ணை வாழ விடுங்கள் 
27 1969 பாதையிலே கால் நடந்தால்  பெண்ணை வாழ விடுங்கள் 
28 1969 சமையலுக்கும் மையலுக்கும்  பெண்ணை வாழ விடுங்கள் 
29 1970 உன்னை தொட்ட காற்று  நவக்ரஹம்
30 1970 அண்ணா என்றொரு  பத்தாம்பசலி 
31 1970 கல்லூரிப்பெண்ணே நில்லடி  பத்தாம்பசலி 
32 1970 ஊரெல்லாம் பாக்குவைத்து   பத்தாம்பசலி 
33 1970 ஒரு வீடு வேண்டுமா  பெண் தெய்வம் 
33 1970 வெட்கம் கொள்ளாமே  பெண் தெய்வம் 
34 1970 தாயொரு பக்கம் தந்தை  பெண் தெய்வம் 
35 1971 நான் உன்னை வாழ்த்தி  நூற்றுக்கு நூறு 
38 1971 ஆத்தாடி பறக்குது  ரங்கராட்டினம் 
39 1971 முள்ளுக்கு ரோஜா சொந்தம்  வெகுளிப்பெண்
40 1971 கண்ணான கண்ணுறங்கு  வெகுளிப்பெண்
41 1972 புன்னகையோ பூமாலையோ  டெல்லி டு மெட்ராஸ் 
42 1972 கிண்ணத்தில் தேனெடுத்து  அப்பா டாட்டா 
43 1972 தமிழே பிள்ளை தமிழே  அப்பா டாட்டா 
44 1972 நான் என்னும்  உனக்கும் எனக்கும் 
45 1972 கண்மணியோ காதலியோ  பேரபிள்ளை 
46 1972 உலகம் சிறிது  பேரபிள்ளை 
47 1972 உள்ளத்தில் நூறு நினைத்தேன்  மாப்பிள்ளை அழைப்பு 
48 1972 நான் நிலவாகி  மாப்பிள்ளை அழைப்பு 
49 1973 ஆண்டவனின் தோட்டத்திலே  அரங்கேற்றம் 
50 1973 ஆரம்ப காலத்தில் அது  அரங்கேற்றம் 
51 1973 மூத்தவள் நீ கொடுத்தாய்  அரங்கேற்றம் 
52 1973 ஆண்டவனின் -சோகம்  அரங்கேற்றம் 



54 1973 ஒருவித மயக்கம்  கட்டிலா தொட்டிலா 
55 1973 நான் நல்லவர் இல்லறம்  கட்டிலா தொட்டிலா 
56 1973 ஒன்றா இரண்டா மன்னவன்  தெய்வ குழந்தைகள் 
57 1973 நான் எண்ணத்தில் நீந்தும்  தெய்வ குழந்தைகள் 
58 1973 பொன்னுலகம் வந்தாலும்  தெய்வ குழந்தைகள் 
59 1973 ஒரு தேன்கிண்ணம்  தெய்வ சங்கல்பம் 
60 1973 அச்சம் விட்டு நாணம்  தெய்வ சங்கல்பம் 
61 1973 கண்ணீரே நீ கண்ணோடு  பெண்ணை நம்புங்கள் 
62 1973 நீ நினைத்த நேரமெல்லாம்  பெண்ணை நம்புங்கள் 
63 1973 தாய் உன் தாய்  பெண்ணை நம்புங்கள் 
64 1973 அம்மாடி எரேடுத்து பெத்தமனம் பித்து 
65 1973 காலம் நமக்கு தோழன்  பெத்தமனம் பித்து 
66 1973 பனி மலரோ  பொன்வண்டு 
67 1973 வாடியம்மா மல்லியப்பூ பொன்வண்டு 
68 1973 நான் கொண்ட மாங்கல்யம்  மல்லிகைப்பூ 
69 1973 நீ போட்ட மூக்குத்தியோ  மல்லிகைப்பூ 
70 1973 கை நிறைய சோழி  வெள்ளி விழா 
71 1973 நான் சத்தம் போட்டு  வெள்ளி விழா 
72 1973 ஒரு நாள் வருவாள்  வெள்ளி விழா 
73 1974 சேலை கட்டும் கடையை  அவளுக்கு நிகர் அவளே 
74 1974 பால்மனம் பூமனம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 
75 1974 கன்னையா நீ எனக்கு  கலியுக கண்ணன் 
76 1974 காதல் பொன்னேடு  கலியுக கண்ணன் 
77 1974 ராஜாதிராஜன் பிள்ளைக்கு  தாய் பாசம் 
78 1974 பட்டணத்து மாமா  தாய் பாசம் 
79 1974 தேவன் வேதமும்  ராஜநாகம் 
80 1974 மன்னவன் தொட்டானடி  ராஜநாகம் 
81 1974 சமுதாய வீதியில்  ராஜநாகம் 
82 1974 ஆயிரமாயிரம் ஆண்டின்  ஸ்வாதி நட்சத்திரம் 
83 1975 வார்த்தைகள் என் நெஞ்சில்  அவளும் பெண்தானே 
84 1975 நான் உன் அடிமை  உன்னை நான் சந்தித்தேன் 
85 1975 கண்ணனுக்கு பொருத்தம்  உன்னை நான் சந்தித்தேன் 
86 1975 சிவப்புக்கல்லு மூக்குத்தி  எல்லோரும் நல்லவரே 
87 1975 தங்கபொண்ணு இங்கே  எல்லோரும் நல்லவரே 
88 1975 பொட்டழகு கொஞ்ச காரோட்டி கண்ணன் 
89 1975 திருக்கோயில் தேடி  தெய்வம் வந்த வீடு
90 1975 ஓ மிட்டாய் மம்மி  தெய்வம் வந்த வீடு
91 1975 பெண்ணுள்ளமே பொன்னானது  தேன் சிந்துதே வானம் 
92 1975 இயற்கை எழில் கொஞ்சுகின்ற  தேன் சிந்துதே வானம் 
93 1975 பல்லாண்டு பல்லாண்டு   கஸ்தூரி விஜயம் 
94 1975 இது பருவகால குயில்  கஸ்தூரி விஜயம் 
95 1976 என்ன தவம் செய்தேன்  அதிர்ஷ்டம் அழைக்கிறது 
96 1976 ஒரு குடும்பம் இங்கே  அதிர்ஷ்டம் அழைக்கிறது 
97 1976 பிறந்து வந்தேன்  ஆசை அறுபது நாள் 
98 1976 கோயில் நல்ல கோயில்  ஆயிரத்தில் ஒருத்தி 
99 1976 நினைத்ததை முடிப்பது  ஆயிரத்தில் ஒருத்தி 
100 1976 மோஹம் என்னும் ராகம்  ஏழைக்கும் காலம் வரும் 
101 1976 if U happen ஏழைக்கும் காலம் வரும் 
102 1976 ஓராயிரம் கற்பனை  ஏழைக்கும் காலம் வரும் 
103 1976 சொர்க்கம் தான்  கணவன் மனைவி 
104 1976 மலைகளில் மேகங்கள்  கணவன் மனைவி 
105 1976 ஒரு நாள் கேட்டது  நல்ல பெண்மணி 
106 1976 இனங்களிலே என்ன இனம்  நல்ல பெண்மணி 
107 1976 இருபது வயதின்  மோஹம் 30  வருஷம் 
108 1976 அன்பு உள்ளம் வேணும்  பாஞ்சாலி 
109 1976 தங்க முகத்தில்  ஜானகி சபதம் 
110 1976 உன்ன நெனச்சா இனிக்குது  ஜானகி சபதம் 
111 1977 பச்சைக்கிளி இங்கம்மா  ஒருவனுக்கு ஒருத்தி 
112 1977 அடி ஆத்தாடி என்ன  ஒருவனுக்கு ஒருத்தி 
113 1977 வா வள்ளியம்மை கணவா  சக்ரவர்த்தி 
114 1977 கங்கை யமுனை  சக்ரவர்த்தி 
115 1977 ஆதாரமா நிக்கும்  சக்ரவர்த்தி 
116 1977 பெண்ணிலா நீ ஒரு சொந்தமடி நீ எனக்கு 
117 1977 எங்கெங்கோ சில மணிகள்  சொன்னதை செய்வேன் 
118 1977 பால் பொங்குது பால்  சொன்னதை செய்வேன் 
119 1977 வாழ்வில் சௌபாக்கியம்  தூண்டில் மீன் 
120 1977 திருக்கோயில் தேடி  மிட்டாய் மம்மி 
121 1978 ஐயிரண்டு திங்களிலே  அன்னபூரணி 
122 1978 கண்ணனுக்கு கோபமென்ன  அன்னபூரணி 
123 1978 மணமகளே மணமகளே இவள் ஒரு சீதை 
124 1978 இரவில் பார்த்தேன்  கண்ணாமூச்சி 
125 1978 அட அபிஷ்டு நோக்கும்  சதுரங்கம் 
126 1978 உலகெல்லாம் வாழ  மனோரஞ்சிதம் 
127 1979 கண்ணா காதல் நதி  கேளுங்கள் கொடுக்கப்படும் 
128 1979 இல்லை இல்லை நீ  நங்கூரம் 
129 1979 தென்றல் போல் ஆடினால்  நங்கூரம் 
130 1979 ஆண்டவன் பூமியில்  நாடகமே உலகம் 
131 1979 சாமி சத்தியம்  நாடகமே உலகம் 
132 1980 அமுதமே குமுதமே  இணைந்த துருவங்கள் 
133 1980 கிரிதாரி நந்தலாலா இணைந்த துருவங்கள் 
134 1980 கண்ணா காதல் நதி  இணைந்த துருவங்கள் 
135 1980 கண்களால் நான் வரைந்தேன்  மங்கள நாயகி 
136 1980 வடிவேலனே சிவபாலனே  மங்கள நாயகி 
137 1980 விண்படைத்தான் மண்  மங்கள நாயகி 
138 1981 ஐ லவ் யூ பெண்ணெல்லாம்  காலம் ஒருநாள் மாறும் 
139 1981 தும்ப பூவே  செங்கனி 
140 1981 தென்றல் தாலாட்டும்  வசந்தம் வரும் 
141 1982 மாங்கா பிழிஞ்சி  தியாகம் ஒரு தீபம் 
142 1983 கோடி இன்பங்கள்  அவள் ஒரு காவியம் 
143 1983 ஓ கிருஷ்ணபிரபு அவள் ஒரு காவியம் 
144 1984 நானோ உன் அடிமை  அவள் ஒரு காவியம் 
145 1984 அடுத்தாத்து செங்கமலம்  சங்கரி 
146 1984 வாய் பேச தெரியாது  சங்கரி 
147 1987 ராதை என்ற ஒருத்தி  இவள் ஒரு புதுயுகம் 
148 1987 தாதா தகஜுனுதா இவள் ஒரு புதுயுகம் 
149 1968 ஏசுவே இங்கு மானிடராய்  christian interest
150 1968 கல்வாரி சிலுவையில்  christian interest
151 1969 அண்ணா இருக்கின்றார்  அண்ணா பாடல்கள் 
152 1969 சந்தன பெட்டியில்  அண்ணா பாடல்கள் 
Telugu songs
153 1975 Kattinid yerrakoka andaru manchivare
154 1975 Kotha pellikoduku andaru manchivare
155 1972 neevannadi neevanukunnadi collector janaki
156 1972 Anaganaga oka chilakamma collector janaki
157 1972 vendi therapai collector janaki
158 1973 babu chinnari babu kannavari kalalu
159 1973 madhu valaka pose kannavari kalalu
160 1973 baabu chinnari babu (sad) kannavari kalalu
161 1974 oka naati maata kannavari kalalu
162 1973 ee chilipi kannavari kalalu
163 1973 sorry so sorry kannavari kalalu
164 1969 Maama chandamama sambarala rambabu
165 1969 Kannule navveyi sambarala rambabu
166 1969 Poruginti Meenakshammanu sambarala rambabu
167 1969 mama chandamama  sambarala rambabu
168 1973 amma manasantha sthree gowravam
169 1973 papa chinni papa sthree gowravam
Kannada Songs
170 1984 kannali sree maathaa pushpanjali
171 1984 soundharya sree maathaa pushpanjali
172 1984 sree durga sree maathaa pushpanjali
173 1984 praarthisuvae sree maathaa pushpanjali
174 1984 banthu navaraathri sree maathaa pushpanjali
175 1984 bhagyada baagila sree maathaa pushpanjali
176 1984 navaraaga rasadhaare sree maathaa pushpanjali
177 1984 thaaye savithri sree maathaa pushpanjali
178 1984 harana dehadallu sree maathaa pushpanjali
179 1984 kolloora maathaayi sree maathaa pushpanjali

வியாழன், 5 செப்டம்பர், 2013

இஸ்லாம் கலாச்சார பின்னணியில் பி.சுசீலா பாடிய பாடல்கள்


தமிழ் படங்களில்  பெண்கள் பாடும் இஸ்லாம் மத பாடல்கள் மிக குறைந்த அளவிலேயே வந்திருக்கிறது. இஸ்லாம் தழிவிய படங்கள் கூட மிக குறைவு தான்.  ( ஆனால் கேரளத்தில் அப்படி இல்லை. எல்லா மத படங்களும் பாடல்களும் தடையின்றி வெளிவரும் ). அதனால் தான் என்னவோ ரொம்ப தேடியும் என்னால் பி.சுசீலா பாடிய ஒருதமிழ்  இஸ்லாமிய சினிமா பாடலை கூட  கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால்,   பி.சுசீலா அவர்கள் பாடிய இரு இஸ்லாம் பக்தி பாடல்கள், "நாகூர் ஆண்டவர்" என்ற  தொகுப்பில் கிடைத்தது.

அல்லவை தொழுதாலே எல்லாம் வரும்
ஆடவரே உங்கள் ஆடைகளால் 

   மலையாள திரைப்படங்களில் இஸ்லாம் கலாச்சார பின்னணியில் வந்த பாடல்களை தொகுத்திருக்கிறேன். மாப்பிள்ளா பாட்டுக்கள் என அழைக்கப்படும் அந்த பாடல்கள் பிறப்பு, காதல், வீரம், திருமணம் என பல்வேறு நிகழ்வுகளிலும் பாடப்படுகிறது. மணப்பெண்ணை அலங்கரிக்கும் போது "ஒப்பன பாட்டு" , "மயிலாஞ்சி  பாட்டு" "அம்மாயி பாட்டு" என பல பெயர்களில் கோரசாக, கைதட்டி  பாடப்படும் பாடல்கள் அவை.
     மாப்பிள்ள பாட்டுக்களில் "Badarul muneer" மற்றும் "Hansul Jamaal" என்ற பிரசித்தமான காதல் ஜோடியை பற்றியும் பாடல்கள் உண்டு.
      சில பாடல்களை பற்றி குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்
    ஆர்.கே.சேகர் இசை அமைத்த முதல் படம் பழஸ்ஸி ராஜா (1964). இதில் பி.சுசீலா மூன்று பாடல்களை பாடி இருந்தார். அடுத்த படம் தான் ஆயிஷா. இதில் ஏழு பாடல்களை பி.சுசீலா பாடினார். முதன் முதலின் “பூமகளானே” பாட்டை கேட்டதும் கொஞ்சம் அசந்து போய் விட்டேன். மலையாளம் பேச தெரியாத அவர்கள், இஸ்லாம் சமூகத்தின் “மாப்பிள்ள பாட்டுக்களை”, அதன் தனித்தன்மையுடன் அதே பாவத்துடன் பாடுவது என்பது எவ்வளவு சிரமமான விஷயம். அந்த வரிகளை பாடுவதே கஷ்டம், அத்துடன் அந்த ஸ்லான்க் இன்னும் கஷ்டம். பதருல் முனீர்-ஜமால் காதல் பாட்டுக்கள் இப்படத்தில் இடம் பெற்றன. ஏ.எம்.ராஜா-பி.சுசீலா அதை பாடினார்கள்.

மலையாள திரைப்பட உலகில் இஸ்லாமிய கலாச்சார பாடல்களை அதே வடிவில் மிக வெற்றிகரமாக கொடுத்தவர் பாபுராஜ் அவர்கள். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலும், இந்துஸ்தானி இசை படித்திருந்ததாலும், பம்பாயில் வடக்கத்திய இசை அமைப்பாளர்களிடம் பணி புரிந்திருந்ததினாலும் அவருக்கு ஹிந்துஸ்தானி இசை வசப்பட்டிருந்தது. அவர் இசையில் “சுபைதா (1965)” என்ற படத்தில் ஜிக்கியும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் இது. ஒரு தாயின் ஏக்கம் இந்த பாடலில் தொனிக்கும்.

ஒரு குருடன் தன் காதலியை பார்த்து பாடுவது போல் அமைந்த பாடல். “கண்மணி நீ என் கரம் பிடித்தால் எனக்கெதற்கு கண்கள்” என அவன் பாட, “நீ காண வேண்டியதை, உன் மனதால் காண  நான் உண்டல்லவா உனக்கு” என காதல் மொழி சொல்கிறாள் அவள். ஏ.எம்.ராஜாவும், சுசீலாவும் குழைந்து பாடியிருக்கும் அருமையான பாடல் இது. இது குப்பிவளா படத்தில் பாபுராஜ் இசையில் வந்த பாடல்.

அனார்கலி படம் 1966-இல் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டது. கே.ஆர்.விஜயாவும், நசீரும் நடித்திருந்த அப்படத்தில் பாபுராஜ் இசையில் ஏழு பாடல்களை பாடி இருந்தார் சுசீலா. பாபுராஜ் இசை அமைத்த படங்களில் குறைந்த அளவே பி.சுசீலா பாடி இருக்கிறார். ஆனால் உதயா ப்ரொடக்ஷன்ஸ் படங்களில் யார் இசை அமைத்தாலும் பி,சுசீலா தான் ஆஸ்தான பாடகி.. அதனால் தான் என்னாவோ, எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். எல்லாம் ஹிட் பாடல்கள் என்றாலும் “ஏழு சிறகுள்ள தேரு” என்னை கவர்ந்த பாடல்.

கசவுதட்டம் என்ற படத்தில் ஏ.எம்.ராஜா-பி.சுசீலா பாடிய இந்த பாடல், ஒரு முஸ்லிம் காதல் ஜோடியின் பாடல். அவள் ஒன்றொன்றாய் கேட்க அவன் அழகாய் பதில் சொல்லும் பாங்கு சிறப்பு. “பாட்டின்றே சிறகில் மேல் பரிமளம் பகர்த்துந்ந பனிநீர் பூவினு பேர் எந்து?” என கேட்க “மொஹபத்து” என பதிலப்பான் அவன். நல்ல பாடல். 

இந்த பாடலில் பி.சுசீலாவின் குரலில் தெரியும் துள்ளல் எனக்கு பிடிக்கும். மிகவும் பிரபலமான இந்த பாடல் “அச்சனும் பாப்பயும்” என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையில் 1972-இல் வெளிவந்தது.

ஒரு அருமையான் சோகப்பாடல். “கண்ணீரின் மழையிலும், பெருமூச்சின் காற்றிலும் உனக்காக நான் காத்திருப்பேன். கல்லறையின் அடியிலும் உனக்காக காத்திருப்பேன்” என அர்த்தம் வரும் பாடல். 

ஒரு ஜாலியான பாடல். திருமணத்துக்கு முன்பும் ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கேலிசெய்து பாடல் பாடல். ஹிந்தி படங்களில் இம்மாதிரியான கவ்வாலி பாடல்கள் அடிக்கடி வரும். ஷ்யாம் இசையில் பி.சுசீலா, வாணி ஜெயராம். ஜேசுதாஸ். எஸ்.பி,பி சேர்ந்து பாடிய பாடல்.

மணப்பெண்ணை அலங்கரித்து தோழிகள் உறவினர்கள் பாடும் ஒப்பனப்பாட்டு வகையை சேர்ந்தது இந்த பாடல்கள். கன்னிப்பளுங்கே பாடல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய “ஈநாடு” திரைப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடல்.

ஒரு ஏழைப்பெண்ணின் காதலை, கதையாய் சொல்லும் பாடல். “தாழே ஓர் ஓமன மண் குடிலில், தகர விளக்கின் அருகில், மிழிநீர் பூக்களும், தாலவுமாய் தாமர பெண் அவனே காத்திருந்நு" என அவள் காதல் தோல்வி வரை கதையாய் சொல்லும் பாடல். அழகாய் பாடி இருப்பார் இசை அரசி.

11. சுல்தான்றே கொட்டாரத்திலு கள்ளன் கேய்றி :
     மலையாளத்தில் அதிகமான காமெடி பாடல்களை பி.சுசீலா பாடியதில்லை. ரொம்ப rare ஆன இந்த காமெடி பாடலை பாடும் விதத்தில் வித்தியாசப்படுத்தி இருப்பார் பி.சுசீலா. "வாலு மடக்கி பாஞ்ஞு  வந்நிட்டோய்" வரிகளை எனக்கு கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். A.T.உம்மர் இசையில் அக்னி (1978) திரைப்படத்தில் வந்த பாடல் இது. 

12. கல்லாயி புழயொரு மணவாட்டி :
       இரு தோழிகள் பாடும் பாடல். பி.சுசீலாவும் மாதுரியும் "மரம்" என்ற படத்துக்காக ஜி.தேவராஜன் இசையில் பாடிய பாடல். கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள  கல்லாயி என்ற இடத்தில் பாயும் ஆற்றை மணவாட்டியாகயும், அது சேரும் கடலை மணவாளனாகவும் உவமை படுத்தி   எழுதிய பாடல். இந்த கல்லாயி புழா (சிறிய நதி) வை பற்றி இன்னொரு பிரபலமான பாடல் "பதினாலாம் ராவுதிசசது மானத்தோ ? கல்லாயி கடவத்தோ?".

Year         Movie                   Song      Music
1965 zubaida layilaha illallah mohammad Baburaj
1964 aayisha akkaanum malayude cheriviloru R.k.Shekar
1964 aayisha muthane ente muthane  R.k.Shekar
1964 aayisha poomagalanu hansul jamal R.k.Shekar
1964 aayisha anganeyangane [Badarul Muneer]  R.k.Shekar
1964 aayisha Manoraajyathu [Badarul Muneer]  R.k.Shekar
1964 aayisha muthane ente muthane -sad R.k.Shekar
1964 aayisha Rajakumari [Badarul Muneer]  R.k.Shekar
1964 kaathirunna nikhah swapnathilenne  vannu  G.Devarajan
1964 kaathirunna nikhah veetil orutharum illatha G.Devarajan
1964 kaathirunna nikkah nenmeni vaaka poonkaavil G.Devarajan
1964 manavaatti  parakkum thalikayil pathira  G.Devarajan
1965 zabaida ente valayitta kaipidichu Baburaj
1966 anarkali ezhu chirakulla theru Baburaj
1966 anarkali bashpa kudeerame baburaj
1966 anarkali ee raathri than baburaj
1966 anarkali maathalapoove Baburaj
1966 anarkali mukilasimhame baburaj
1966 anarkali pranayagaanam paaduvaanai Baburaj
1966 anarkali vidarumo vidarumo veena baburaj
1966 kuppi vala kanmani neeyen karam Baburaj
1967 kasavuthattam mayil peeli(sad) G.Devarajan
1967 kasavuthattam pandu mughal kottarathil G.Devarajan
1967 kasavuthattam mayilpeeli kannukondu G.Devarajan
1967 kasavuthattam aaluvapuzhayil neen pidikkan  G.Devarajan
1972 achanum papayum kanninum kannadikkum  G.Devarajan
1973 maram kallayi puzhayoru manavatti G.Devarajan
1976 Dweepu kanneerin mazhayathum Baburaj
1977 yatheem pandu pandoru padhushavin Baburaj
1978 alavudeenum arputa deepam madhuraangikale G.Devarajan
1979 sarpam swarnameeninte chelotha k.J. Joy
1980 angaadi  kannipalunge ponnum  Shyam
1984 Thirakkil alpa samayam makkathu chandrika poloru shyam
1995 Samudayam manavaatti manavaati G.Devarajan


தமிழ் திரைப்படங்களில் வந்த ஃகஸல், முஜ்ரா, கவ்வாலி வகை பாடல்கள் இஸ்லாமியர்களின்  இசையை தழுவியது தான். அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து இருக்கிறேன். கேரள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையும் , இசையும்  பதிவு செய்யப்பட்டது போல் தமிழ் படங்களில் அதிகமாக பதிவு செய்யப்படவில்லை. மிக குறைந்த அளவே திரைப்படங்கள் வந்திருக்கிறது.

என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு - காவியத்தலைவி
ஆயிரம் பெண்மை மலரட்டுமே - வாழ்க்கைப்படகு
உன்னைத்தான் நான் அறிவேன் 
படகு படகு ஆசைப்படகு - உத்தமன்
நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம் - எதிரிகள் ஜாக்கிரதை - கவாலி
பாரடி கண்ணே கொஞ்சம் - வல்லவனுக்கு வல்லவன் -கவாலி
ஆடல் பாடல் ஊடல் கூடல் - நாயக்கரின் மகள் - கவாலி
பெண் பார்த்த மாப்பிளைக்கு - காவியத்தலைவி - முஜ்ரா
கவிதையில் எழுதிய காவிய தலைவி - முஜ்ரா
காவியமா நெஞ்சில் ஓவியமா 
காதல் கொண்டாலே பயம் என்ன - அக்பர் 
கனவு கண்ட காதல் - அக்பர் 
கண்ணீர் துளியால் எங்கும் -அரபு நாட்டு அழகி 
உன் அன்பை தேடுகின்றேன் - அரபு நாட்டு அழகி 
சொக்குதே மனம் -பாக்தாத் திருடன் 
உண்மை அன்பின் உருவாய் -பாக்தாத் திருடன் 
எந்தன் கதை இதானா - பாக்தாத் திருடன் 
ஆசையுடேன் என் ராசா வருவார் - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
கன்னிப்பெண்ணே வா  - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
கண்ணுக்கு நேரிலே  - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
அழகு ராணி கதை இது   - எடுப்பார் கை பிள்ளை 
குங்கும பொட்டு குலுங்குதடி  - இது சத்தியம் 


Songs from Telugu Movies

Year Song Movie Music
1967 Aha andhamu chindhe aada brathuku M.S.Viswanathan
1967 piliche na madilo aada brathuku M.S.Viswanathan
1978 kalachukkuna gubulaye akbar saleem anarkali C.Ramachandra
1978 Sippayi sippayi akbar saleem anarkali C.Ramachandra
1978 Thane melimusugutheesi akbar saleem anarkali C.Ramachandra
1978 Reyi aagi poni akbar saleem anarkali C.Ramachandra
1978 madhana mohanudu akbar saleem anarkali C.Ramachandra
1968 Neelo nenai naalo alibaba 40 dongallu Ghantasala
1968 Oh meri mehbooba alibaba 40 dongallu Ghantasala
1968 Ravoyi Ravoyi alibaba 40 dongallu Ghantasala
1968 Siggu siggu chigullu alibaba 40 dongallu Ghantasala
1968 chalakaina chinnadhi alibaba 40 dongallu Ghantasala
1957 Andhaala konetilona allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 manasantha needhira allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 ninu valachi allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 pilla pilla raa allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1979 paruvame kadali pongi allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1979 kanuvinthuluga kannele allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1979 maatade chilaka allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1968 Hai allah yelaga baghdad gajadonga T.V.Raju
1968 Rave oh chinadana baghdad gajadonga T.V.Raju
1969 sharabi kallatho-kavvali bhale tammudu M.S.Viswanathan
1976 nazarana ee mahakavi kshetraya Adi narayana rao
1966 vachane neekosam monagallaku monagadu veda
? aktharulo munugi unna unknown unknown