“மெல்லிசை மாமணி” வி.குமார் அவர்கள் பாலச்சந்தர் அவர்களால் நீர்க்குமிழி படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். காலத்தால் அழியாத நல்ல மேலோடிகள், நகைச்சுவை பாடல்கள், தத்துவப்பாடல்கள் என அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நல்லிசையை கொடுத்தவர். மேடை நாடகங்களை திரைப்படம் ஆன போது அதன் அளவை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தரமான இசையை கொடுத்தவர். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என தத்துவப்பாட்டு ஆகட்டும், “சிவப்புக்கல்லு மூக்குத்தி” என கிராமியப்பாட்டு ஆகட்டும், “உன்னைத்தொட்ட காற்று வந்து” என மெலடி ஆகட்டும், “வா வாத்யாரே ஊட்டாண்ட” போல காமடி பாடல்கள் ஆகட்டும் அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. அவர் திறமை போதிய அளவுக்கு அங்கீகரிக்க படவில்லை. போதிய அளவுக்கு புகழப்படவில்லை.
பி.சுசீலா ரசிகர்கள் வி.குமாருக்கு
நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம். அவரது மனைவி சொர்ணா ஒரு பாடகியாக இருந்தும் கூட
அவரது பெரும்பாலான படங்களில் பி.சுசீலா தான் ஆஸ்தான பாடகி. படத்தின் ஒப்பனிங்
பாடல் பெரும்பாலும் பி.சுசீலாவின் குரலில் தான் இருக்கும். அவர் இசையில், நல்ல
மெலடிகளை பி.சுசீலாவின் குரலில் கேட்க முடிகிறது. அதைப்போல் “நான் சத்தம் போட்டு
தான் பாடுவேன்” என வித்தியாசமான பாடலையும், பிராமணர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்
“அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா”, “அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்” போன்ற
பாடல்களையும் பாட வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் அவர் இசை அமைத்த முதல்
படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். ஒருவருக்கொருவர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள்.
வி.குமார் இசையில் பி.சுசீலா அவர்கள் இருநூற்றுக்கு அதிகமான பாடல்களை பாடி
இருந்தாலும், சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை அடைந்திருக்கின்றன. எனக்கு
பிடித்த சில பாடல்களை குறிப்பிடுகிறேன்.
No | Year | Song | Movie |
3 | 1965 | கன்னி நதியோரம் | நீர்க்குமிழி |
4 | 1965 | நீரில் நீந்திடும் மீனினமே | நீர்க்குமிழி |
1 | 1965 | என்ன தான் பாடுவது | நாணல் |
2 | 1965 | விண்ணுக்கு மேலாடை | நாணல் |
5 | 1966 | நேற்று நீ சின்ன பப்பா | மேஜர் சந்திரகாந்த் |
6 | 1966 | ஒரு நாள் யாரோ | மேஜர் சந்திரகாந்த் |
7 | 1966 | காண கண்கோடி வேண்டும் | மேஜர் சந்திரகாந்த் |
8 | 1966 | நானே பனி நிலவு | மேஜர் சந்திரகாந்த் |
9 | 1967 | தொட்டதா தொடாததா | நினைவில் நின்றவள் |
10 | 1967 | என்ன தெரியும் இந்த | நினைவில் நின்றவள் |
11 | 1967 | தம்பி வாடா அடிச்சது | நினைவில் நின்றவள் |
12 | 1968 | புன்னகை மன்னன் பூவிழி | இரு கோடுகள் |
13 | 1968 | அடுத்தாத்து அம்புஜத்தை | எதிர் நீச்சல் |
14 | 1968 | என்னம்மா பொன்னம்மா | எதிர் நீச்சல் |
15 | 1968 | சேதி கேட்டோ | எதிர் நீச்சல் |
16 | 1968 | தாமரை கன்னங்கள் | எதிர் நீச்சல் |
17 | 1968 | நல்ல நாள் பார்க்கவோ | பொம்மலாட்டம் |
18 | 1968 | மயக்கத்தை தந்தவன் | பொம்மலாட்டம் |
19 | 1969 | புலவர் சொன்னதும் பொய்யே | ஆயிரம் பொய் |
20 | 1969 | தில்லையிலே சபாபதி | ஆயிரம் பொய் |
21 | 1969 | தமிழ் விடு தூது | ஆயிரம் பொய் |
22 | 1969 | கண்ணொரு பக்கம் | நிறைகுடம் |
23 | 1969 | அழைக்கின்றேன் தேவா | நிறைகுடம் |
24 | 1969 | அத்தான் நிறம் சிவப்பு | நிறைகுடம் |
25 | 1969 | காலங்கள் உனக்காக | பெண்ணை வாழ விடுங்கள் |
26 | 1969 | நெஞ்சே உனக்கொரு | பெண்ணை வாழ விடுங்கள் |
27 | 1969 | பாதையிலே கால் நடந்தால் | பெண்ணை வாழ விடுங்கள் |
28 | 1969 | சமையலுக்கும் மையலுக்கும் | பெண்ணை வாழ விடுங்கள் |
29 | 1970 | உன்னை தொட்ட காற்று | நவக்ரஹம் |
30 | 1970 | அண்ணா என்றொரு | பத்தாம்பசலி |
31 | 1970 | கல்லூரிப்பெண்ணே நில்லடி | பத்தாம்பசலி |
32 | 1970 | ஊரெல்லாம் பாக்குவைத்து | பத்தாம்பசலி |
33 | 1970 | ஒரு வீடு வேண்டுமா | பெண் தெய்வம் |
33 | 1970 | வெட்கம் கொள்ளாமே | பெண் தெய்வம் |
34 | 1970 | தாயொரு பக்கம் தந்தை | பெண் தெய்வம் |
35 | 1971 | நான் உன்னை வாழ்த்தி | நூற்றுக்கு நூறு |
38 | 1971 | ஆத்தாடி பறக்குது | ரங்கராட்டினம் |
39 | 1971 | முள்ளுக்கு ரோஜா சொந்தம் | வெகுளிப்பெண் |
40 | 1971 | கண்ணான கண்ணுறங்கு | வெகுளிப்பெண் |
41 | 1972 | புன்னகையோ பூமாலையோ | டெல்லி டு மெட்ராஸ் |
42 | 1972 | கிண்ணத்தில் தேனெடுத்து | அப்பா டாட்டா |
43 | 1972 | தமிழே பிள்ளை தமிழே | அப்பா டாட்டா |
44 | 1972 | நான் என்னும் | உனக்கும் எனக்கும் |
45 | 1972 | கண்மணியோ காதலியோ | பேரபிள்ளை |
46 | 1972 | உலகம் சிறிது | பேரபிள்ளை |
47 | 1972 | உள்ளத்தில் நூறு நினைத்தேன் | மாப்பிள்ளை அழைப்பு |
48 | 1972 | நான் நிலவாகி | மாப்பிள்ளை அழைப்பு |
49 | 1973 | ஆண்டவனின் தோட்டத்திலே | அரங்கேற்றம் |
50 | 1973 | ஆரம்ப காலத்தில் அது | அரங்கேற்றம் |
51 | 1973 | மூத்தவள் நீ கொடுத்தாய் | அரங்கேற்றம் |
52 | 1973 | ஆண்டவனின் -சோகம் | அரங்கேற்றம் |
54 | 1973 | ஒருவித மயக்கம் | கட்டிலா தொட்டிலா |
55 | 1973 | நான் நல்லவர் இல்லறம் | கட்டிலா தொட்டிலா |
56 | 1973 | ஒன்றா இரண்டா மன்னவன் | தெய்வ குழந்தைகள் |
57 | 1973 | நான் எண்ணத்தில் நீந்தும் | தெய்வ குழந்தைகள் |
58 | 1973 | பொன்னுலகம் வந்தாலும் | தெய்வ குழந்தைகள் |
59 | 1973 | ஒரு தேன்கிண்ணம் | தெய்வ சங்கல்பம் |
60 | 1973 | அச்சம் விட்டு நாணம் | தெய்வ சங்கல்பம் |
61 | 1973 | கண்ணீரே நீ கண்ணோடு | பெண்ணை நம்புங்கள் |
62 | 1973 | நீ நினைத்த நேரமெல்லாம் | பெண்ணை நம்புங்கள் |
63 | 1973 | தாய் உன் தாய் | பெண்ணை நம்புங்கள் |
64 | 1973 | அம்மாடி எரேடுத்து | பெத்தமனம் பித்து |
65 | 1973 | காலம் நமக்கு தோழன் | பெத்தமனம் பித்து |
66 | 1973 | பனி மலரோ | பொன்வண்டு |
67 | 1973 | வாடியம்மா மல்லியப்பூ | பொன்வண்டு |
68 | 1973 | நான் கொண்ட மாங்கல்யம் | மல்லிகைப்பூ |
69 | 1973 | நீ போட்ட மூக்குத்தியோ | மல்லிகைப்பூ |
70 | 1973 | கை நிறைய சோழி | வெள்ளி விழா |
71 | 1973 | நான் சத்தம் போட்டு | வெள்ளி விழா |
72 | 1973 | ஒரு நாள் வருவாள் | வெள்ளி விழா |
73 | 1974 | சேலை கட்டும் கடையை | அவளுக்கு நிகர் அவளே |
74 | 1974 | பால்மனம் பூமனம் | ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு |
75 | 1974 | கன்னையா நீ எனக்கு | கலியுக கண்ணன் |
76 | 1974 | காதல் பொன்னேடு | கலியுக கண்ணன் |
77 | 1974 | ராஜாதிராஜன் பிள்ளைக்கு | தாய் பாசம் |
78 | 1974 | பட்டணத்து மாமா | தாய் பாசம் |
79 | 1974 | தேவன் வேதமும் | ராஜநாகம் |
80 | 1974 | மன்னவன் தொட்டானடி | ராஜநாகம் |
81 | 1974 | சமுதாய வீதியில் | ராஜநாகம் |
82 | 1974 | ஆயிரமாயிரம் ஆண்டின் | ஸ்வாதி நட்சத்திரம் |
83 | 1975 | வார்த்தைகள் என் நெஞ்சில் | அவளும் பெண்தானே |
84 | 1975 | நான் உன் அடிமை | உன்னை நான் சந்தித்தேன் |
85 | 1975 | கண்ணனுக்கு பொருத்தம் | உன்னை நான் சந்தித்தேன் |
86 | 1975 | சிவப்புக்கல்லு மூக்குத்தி | எல்லோரும் நல்லவரே |
87 | 1975 | தங்கபொண்ணு இங்கே | எல்லோரும் நல்லவரே |
88 | 1975 | பொட்டழகு கொஞ்ச | காரோட்டி கண்ணன் |
89 | 1975 | திருக்கோயில் தேடி | தெய்வம் வந்த வீடு |
90 | 1975 | ஓ மிட்டாய் மம்மி | தெய்வம் வந்த வீடு |
91 | 1975 | பெண்ணுள்ளமே பொன்னானது | தேன் சிந்துதே வானம் |
92 | 1975 | இயற்கை எழில் கொஞ்சுகின்ற | தேன் சிந்துதே வானம் |
93 | 1975 | பல்லாண்டு பல்லாண்டு | கஸ்தூரி விஜயம் |
94 | 1975 | இது பருவகால குயில் | கஸ்தூரி விஜயம் |
95 | 1976 | என்ன தவம் செய்தேன் | அதிர்ஷ்டம் அழைக்கிறது |
96 | 1976 | ஒரு குடும்பம் இங்கே | அதிர்ஷ்டம் அழைக்கிறது |
97 | 1976 | பிறந்து வந்தேன் | ஆசை அறுபது நாள் |
98 | 1976 | கோயில் நல்ல கோயில் | ஆயிரத்தில் ஒருத்தி |
99 | 1976 | நினைத்ததை முடிப்பது | ஆயிரத்தில் ஒருத்தி |
100 | 1976 | மோஹம் என்னும் ராகம் | ஏழைக்கும் காலம் வரும் |
101 | 1976 | if U happen | ஏழைக்கும் காலம் வரும் |
102 | 1976 | ஓராயிரம் கற்பனை | ஏழைக்கும் காலம் வரும் |
103 | 1976 | சொர்க்கம் தான் | கணவன் மனைவி |
104 | 1976 | மலைகளில் மேகங்கள் | கணவன் மனைவி |
105 | 1976 | ஒரு நாள் கேட்டது | நல்ல பெண்மணி |
106 | 1976 | இனங்களிலே என்ன இனம் | நல்ல பெண்மணி |
107 | 1976 | இருபது வயதின் | மோஹம் 30 வருஷம் |
108 | 1976 | அன்பு உள்ளம் வேணும் | பாஞ்சாலி |
109 | 1976 | தங்க முகத்தில் | ஜானகி சபதம் |
110 | 1976 | உன்ன நெனச்சா இனிக்குது | ஜானகி சபதம் |
111 | 1977 | பச்சைக்கிளி இங்கம்மா | ஒருவனுக்கு ஒருத்தி |
112 | 1977 | அடி ஆத்தாடி என்ன | ஒருவனுக்கு ஒருத்தி |
113 | 1977 | வா வள்ளியம்மை கணவா | சக்ரவர்த்தி |
114 | 1977 | கங்கை யமுனை | சக்ரவர்த்தி |
115 | 1977 | ஆதாரமா நிக்கும் | சக்ரவர்த்தி |
116 | 1977 | பெண்ணிலா நீ ஒரு | சொந்தமடி நீ எனக்கு |
117 | 1977 | எங்கெங்கோ சில மணிகள் | சொன்னதை செய்வேன் |
118 | 1977 | பால் பொங்குது பால் | சொன்னதை செய்வேன் |
119 | 1977 | வாழ்வில் சௌபாக்கியம் | தூண்டில் மீன் |
120 | 1977 | திருக்கோயில் தேடி | மிட்டாய் மம்மி |
121 | 1978 | ஐயிரண்டு திங்களிலே | அன்னபூரணி |
122 | 1978 | கண்ணனுக்கு கோபமென்ன | அன்னபூரணி |
123 | 1978 | மணமகளே மணமகளே | இவள் ஒரு சீதை |
124 | 1978 | இரவில் பார்த்தேன் | கண்ணாமூச்சி |
125 | 1978 | அட அபிஷ்டு நோக்கும் | சதுரங்கம் |
126 | 1978 | உலகெல்லாம் வாழ | மனோரஞ்சிதம் |
127 | 1979 | கண்ணா காதல் நதி | கேளுங்கள் கொடுக்கப்படும் |
128 | 1979 | இல்லை இல்லை நீ | நங்கூரம் |
129 | 1979 | தென்றல் போல் ஆடினால் | நங்கூரம் |
130 | 1979 | ஆண்டவன் பூமியில் | நாடகமே உலகம் |
131 | 1979 | சாமி சத்தியம் | நாடகமே உலகம் |
132 | 1980 | அமுதமே குமுதமே | இணைந்த துருவங்கள் |
133 | 1980 | கிரிதாரி நந்தலாலா | இணைந்த துருவங்கள் |
134 | 1980 | கண்ணா காதல் நதி | இணைந்த துருவங்கள் |
135 | 1980 | கண்களால் நான் வரைந்தேன் | மங்கள நாயகி |
136 | 1980 | வடிவேலனே சிவபாலனே | மங்கள நாயகி |
137 | 1980 | விண்படைத்தான் மண் | மங்கள நாயகி |
138 | 1981 | ஐ லவ் யூ பெண்ணெல்லாம் | காலம் ஒருநாள் மாறும் |
139 | 1981 | தும்ப பூவே | செங்கனி |
140 | 1981 | தென்றல் தாலாட்டும் | வசந்தம் வரும் |
141 | 1982 | மாங்கா பிழிஞ்சி | தியாகம் ஒரு தீபம் |
142 | 1983 | கோடி இன்பங்கள் | அவள் ஒரு காவியம் |
143 | 1983 | ஓ கிருஷ்ணபிரபு | அவள் ஒரு காவியம் |
144 | 1984 | நானோ உன் அடிமை | அவள் ஒரு காவியம் |
145 | 1984 | அடுத்தாத்து செங்கமலம் | சங்கரி |
146 | 1984 | வாய் பேச தெரியாது | சங்கரி |
147 | 1987 | ராதை என்ற ஒருத்தி | இவள் ஒரு புதுயுகம் |
148 | 1987 | தாதா தகஜுனுதா | இவள் ஒரு புதுயுகம் |
149 | 1968 | ஏசுவே இங்கு மானிடராய் | christian interest |
150 | 1968 | கல்வாரி சிலுவையில் | christian interest |
151 | 1969 | அண்ணா இருக்கின்றார் | அண்ணா பாடல்கள் |
152 | 1969 | சந்தன பெட்டியில் | அண்ணா பாடல்கள் |
Telugu songs | |||
153 | 1975 | Kattinid yerrakoka | andaru manchivare |
154 | 1975 | Kotha pellikoduku | andaru manchivare |
155 | 1972 | neevannadi neevanukunnadi | collector janaki |
156 | 1972 | Anaganaga oka chilakamma | collector janaki |
157 | 1972 | vendi therapai | collector janaki |
158 | 1973 | babu chinnari babu | kannavari kalalu |
159 | 1973 | madhu valaka pose | kannavari kalalu |
160 | 1973 | baabu chinnari babu (sad) | kannavari kalalu |
161 | 1974 | oka naati maata | kannavari kalalu |
162 | 1973 | ee chilipi | kannavari kalalu |
163 | 1973 | sorry so sorry | kannavari kalalu |
164 | 1969 | Maama chandamama | sambarala rambabu |
165 | 1969 | Kannule navveyi | sambarala rambabu |
166 | 1969 | Poruginti Meenakshammanu | sambarala rambabu |
167 | 1969 | mama chandamama | sambarala rambabu |
168 | 1973 | amma manasantha | sthree gowravam |
169 | 1973 | papa chinni papa | sthree gowravam |
Kannada Songs | |||
170 | 1984 | kannali | sree maathaa pushpanjali |
171 | 1984 | soundharya | sree maathaa pushpanjali |
172 | 1984 | sree durga | sree maathaa pushpanjali |
173 | 1984 | praarthisuvae | sree maathaa pushpanjali |
174 | 1984 | banthu navaraathri | sree maathaa pushpanjali |
175 | 1984 | bhagyada baagila | sree maathaa pushpanjali |
176 | 1984 | navaraaga rasadhaare | sree maathaa pushpanjali |
177 | 1984 | thaaye savithri | sree maathaa pushpanjali |
178 | 1984 | harana dehadallu | sree maathaa pushpanjali |
179 | 1984 | kolloora maathaayi | sree maathaa pushpanjali |
வி.குமார். விஸ்வநாதனின் குமார் என சொல்லும் அளவிற்கு மெல்லிசை மன்னருக்கு அடுத்து மெல்லிசையில் வல்லவராக திகழ்ந்தவர். இவர் இசையமைக்கும் படங்களில் “Opening" பாடல் இசையரசி தான் பாடவேண்டும் என்ற கொள்கை உடையவராக இருந்தார். வி.குமார் - வாலி கூட்டணி மாதிரி வி.குமார்-பி.சுசீலா கூட்டணி ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணி .. “ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ”, “ நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்”, “ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது”, “புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்”,” நான் நல்லவர் இல்லறம் நலமுற பாடுகிறேன்” என இசையரசியின் குரலில் பல அற்புத பாடல்களை தந்தவர் குமார்.
பதிலளிநீக்குநன்றி ராஜேஷ் !
பதிலளிநீக்கு