பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 செப்டம்பர், 2013

இஸ்லாம் கலாச்சார பின்னணியில் பி.சுசீலா பாடிய பாடல்கள்


தமிழ் படங்களில்  பெண்கள் பாடும் இஸ்லாம் மத பாடல்கள் மிக குறைந்த அளவிலேயே வந்திருக்கிறது. இஸ்லாம் தழிவிய படங்கள் கூட மிக குறைவு தான்.  ( ஆனால் கேரளத்தில் அப்படி இல்லை. எல்லா மத படங்களும் பாடல்களும் தடையின்றி வெளிவரும் ). அதனால் தான் என்னவோ ரொம்ப தேடியும் என்னால் பி.சுசீலா பாடிய ஒருதமிழ்  இஸ்லாமிய சினிமா பாடலை கூட  கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால்,   பி.சுசீலா அவர்கள் பாடிய இரு இஸ்லாம் பக்தி பாடல்கள், "நாகூர் ஆண்டவர்" என்ற  தொகுப்பில் கிடைத்தது.

அல்லவை தொழுதாலே எல்லாம் வரும்
ஆடவரே உங்கள் ஆடைகளால் 

   மலையாள திரைப்படங்களில் இஸ்லாம் கலாச்சார பின்னணியில் வந்த பாடல்களை தொகுத்திருக்கிறேன். மாப்பிள்ளா பாட்டுக்கள் என அழைக்கப்படும் அந்த பாடல்கள் பிறப்பு, காதல், வீரம், திருமணம் என பல்வேறு நிகழ்வுகளிலும் பாடப்படுகிறது. மணப்பெண்ணை அலங்கரிக்கும் போது "ஒப்பன பாட்டு" , "மயிலாஞ்சி  பாட்டு" "அம்மாயி பாட்டு" என பல பெயர்களில் கோரசாக, கைதட்டி  பாடப்படும் பாடல்கள் அவை.
     மாப்பிள்ள பாட்டுக்களில் "Badarul muneer" மற்றும் "Hansul Jamaal" என்ற பிரசித்தமான காதல் ஜோடியை பற்றியும் பாடல்கள் உண்டு.
      சில பாடல்களை பற்றி குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்
    ஆர்.கே.சேகர் இசை அமைத்த முதல் படம் பழஸ்ஸி ராஜா (1964). இதில் பி.சுசீலா மூன்று பாடல்களை பாடி இருந்தார். அடுத்த படம் தான் ஆயிஷா. இதில் ஏழு பாடல்களை பி.சுசீலா பாடினார். முதன் முதலின் “பூமகளானே” பாட்டை கேட்டதும் கொஞ்சம் அசந்து போய் விட்டேன். மலையாளம் பேச தெரியாத அவர்கள், இஸ்லாம் சமூகத்தின் “மாப்பிள்ள பாட்டுக்களை”, அதன் தனித்தன்மையுடன் அதே பாவத்துடன் பாடுவது என்பது எவ்வளவு சிரமமான விஷயம். அந்த வரிகளை பாடுவதே கஷ்டம், அத்துடன் அந்த ஸ்லான்க் இன்னும் கஷ்டம். பதருல் முனீர்-ஜமால் காதல் பாட்டுக்கள் இப்படத்தில் இடம் பெற்றன. ஏ.எம்.ராஜா-பி.சுசீலா அதை பாடினார்கள்.

மலையாள திரைப்பட உலகில் இஸ்லாமிய கலாச்சார பாடல்களை அதே வடிவில் மிக வெற்றிகரமாக கொடுத்தவர் பாபுராஜ் அவர்கள். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலும், இந்துஸ்தானி இசை படித்திருந்ததாலும், பம்பாயில் வடக்கத்திய இசை அமைப்பாளர்களிடம் பணி புரிந்திருந்ததினாலும் அவருக்கு ஹிந்துஸ்தானி இசை வசப்பட்டிருந்தது. அவர் இசையில் “சுபைதா (1965)” என்ற படத்தில் ஜிக்கியும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் இது. ஒரு தாயின் ஏக்கம் இந்த பாடலில் தொனிக்கும்.

ஒரு குருடன் தன் காதலியை பார்த்து பாடுவது போல் அமைந்த பாடல். “கண்மணி நீ என் கரம் பிடித்தால் எனக்கெதற்கு கண்கள்” என அவன் பாட, “நீ காண வேண்டியதை, உன் மனதால் காண  நான் உண்டல்லவா உனக்கு” என காதல் மொழி சொல்கிறாள் அவள். ஏ.எம்.ராஜாவும், சுசீலாவும் குழைந்து பாடியிருக்கும் அருமையான பாடல் இது. இது குப்பிவளா படத்தில் பாபுராஜ் இசையில் வந்த பாடல்.

அனார்கலி படம் 1966-இல் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டது. கே.ஆர்.விஜயாவும், நசீரும் நடித்திருந்த அப்படத்தில் பாபுராஜ் இசையில் ஏழு பாடல்களை பாடி இருந்தார் சுசீலா. பாபுராஜ் இசை அமைத்த படங்களில் குறைந்த அளவே பி.சுசீலா பாடி இருக்கிறார். ஆனால் உதயா ப்ரொடக்ஷன்ஸ் படங்களில் யார் இசை அமைத்தாலும் பி,சுசீலா தான் ஆஸ்தான பாடகி.. அதனால் தான் என்னாவோ, எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். எல்லாம் ஹிட் பாடல்கள் என்றாலும் “ஏழு சிறகுள்ள தேரு” என்னை கவர்ந்த பாடல்.

கசவுதட்டம் என்ற படத்தில் ஏ.எம்.ராஜா-பி.சுசீலா பாடிய இந்த பாடல், ஒரு முஸ்லிம் காதல் ஜோடியின் பாடல். அவள் ஒன்றொன்றாய் கேட்க அவன் அழகாய் பதில் சொல்லும் பாங்கு சிறப்பு. “பாட்டின்றே சிறகில் மேல் பரிமளம் பகர்த்துந்ந பனிநீர் பூவினு பேர் எந்து?” என கேட்க “மொஹபத்து” என பதிலப்பான் அவன். நல்ல பாடல். 

இந்த பாடலில் பி.சுசீலாவின் குரலில் தெரியும் துள்ளல் எனக்கு பிடிக்கும். மிகவும் பிரபலமான இந்த பாடல் “அச்சனும் பாப்பயும்” என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையில் 1972-இல் வெளிவந்தது.

ஒரு அருமையான் சோகப்பாடல். “கண்ணீரின் மழையிலும், பெருமூச்சின் காற்றிலும் உனக்காக நான் காத்திருப்பேன். கல்லறையின் அடியிலும் உனக்காக காத்திருப்பேன்” என அர்த்தம் வரும் பாடல். 

ஒரு ஜாலியான பாடல். திருமணத்துக்கு முன்பும் ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கேலிசெய்து பாடல் பாடல். ஹிந்தி படங்களில் இம்மாதிரியான கவ்வாலி பாடல்கள் அடிக்கடி வரும். ஷ்யாம் இசையில் பி.சுசீலா, வாணி ஜெயராம். ஜேசுதாஸ். எஸ்.பி,பி சேர்ந்து பாடிய பாடல்.

மணப்பெண்ணை அலங்கரித்து தோழிகள் உறவினர்கள் பாடும் ஒப்பனப்பாட்டு வகையை சேர்ந்தது இந்த பாடல்கள். கன்னிப்பளுங்கே பாடல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய “ஈநாடு” திரைப்படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடல்.

ஒரு ஏழைப்பெண்ணின் காதலை, கதையாய் சொல்லும் பாடல். “தாழே ஓர் ஓமன மண் குடிலில், தகர விளக்கின் அருகில், மிழிநீர் பூக்களும், தாலவுமாய் தாமர பெண் அவனே காத்திருந்நு" என அவள் காதல் தோல்வி வரை கதையாய் சொல்லும் பாடல். அழகாய் பாடி இருப்பார் இசை அரசி.

11. சுல்தான்றே கொட்டாரத்திலு கள்ளன் கேய்றி :
     மலையாளத்தில் அதிகமான காமெடி பாடல்களை பி.சுசீலா பாடியதில்லை. ரொம்ப rare ஆன இந்த காமெடி பாடலை பாடும் விதத்தில் வித்தியாசப்படுத்தி இருப்பார் பி.சுசீலா. "வாலு மடக்கி பாஞ்ஞு  வந்நிட்டோய்" வரிகளை எனக்கு கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். A.T.உம்மர் இசையில் அக்னி (1978) திரைப்படத்தில் வந்த பாடல் இது. 

12. கல்லாயி புழயொரு மணவாட்டி :
       இரு தோழிகள் பாடும் பாடல். பி.சுசீலாவும் மாதுரியும் "மரம்" என்ற படத்துக்காக ஜி.தேவராஜன் இசையில் பாடிய பாடல். கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள  கல்லாயி என்ற இடத்தில் பாயும் ஆற்றை மணவாட்டியாகயும், அது சேரும் கடலை மணவாளனாகவும் உவமை படுத்தி   எழுதிய பாடல். இந்த கல்லாயி புழா (சிறிய நதி) வை பற்றி இன்னொரு பிரபலமான பாடல் "பதினாலாம் ராவுதிசசது மானத்தோ ? கல்லாயி கடவத்தோ?".

Year         Movie                   Song      Music
1965 zubaida layilaha illallah mohammad Baburaj
1964 aayisha akkaanum malayude cheriviloru R.k.Shekar
1964 aayisha muthane ente muthane  R.k.Shekar
1964 aayisha poomagalanu hansul jamal R.k.Shekar
1964 aayisha anganeyangane [Badarul Muneer]  R.k.Shekar
1964 aayisha Manoraajyathu [Badarul Muneer]  R.k.Shekar
1964 aayisha muthane ente muthane -sad R.k.Shekar
1964 aayisha Rajakumari [Badarul Muneer]  R.k.Shekar
1964 kaathirunna nikhah swapnathilenne  vannu  G.Devarajan
1964 kaathirunna nikhah veetil orutharum illatha G.Devarajan
1964 kaathirunna nikkah nenmeni vaaka poonkaavil G.Devarajan
1964 manavaatti  parakkum thalikayil pathira  G.Devarajan
1965 zabaida ente valayitta kaipidichu Baburaj
1966 anarkali ezhu chirakulla theru Baburaj
1966 anarkali bashpa kudeerame baburaj
1966 anarkali ee raathri than baburaj
1966 anarkali maathalapoove Baburaj
1966 anarkali mukilasimhame baburaj
1966 anarkali pranayagaanam paaduvaanai Baburaj
1966 anarkali vidarumo vidarumo veena baburaj
1966 kuppi vala kanmani neeyen karam Baburaj
1967 kasavuthattam mayil peeli(sad) G.Devarajan
1967 kasavuthattam pandu mughal kottarathil G.Devarajan
1967 kasavuthattam mayilpeeli kannukondu G.Devarajan
1967 kasavuthattam aaluvapuzhayil neen pidikkan  G.Devarajan
1972 achanum papayum kanninum kannadikkum  G.Devarajan
1973 maram kallayi puzhayoru manavatti G.Devarajan
1976 Dweepu kanneerin mazhayathum Baburaj
1977 yatheem pandu pandoru padhushavin Baburaj
1978 alavudeenum arputa deepam madhuraangikale G.Devarajan
1979 sarpam swarnameeninte chelotha k.J. Joy
1980 angaadi  kannipalunge ponnum  Shyam
1984 Thirakkil alpa samayam makkathu chandrika poloru shyam
1995 Samudayam manavaatti manavaati G.Devarajan


தமிழ் திரைப்படங்களில் வந்த ஃகஸல், முஜ்ரா, கவ்வாலி வகை பாடல்கள் இஸ்லாமியர்களின்  இசையை தழுவியது தான். அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து இருக்கிறேன். கேரள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையும் , இசையும்  பதிவு செய்யப்பட்டது போல் தமிழ் படங்களில் அதிகமாக பதிவு செய்யப்படவில்லை. மிக குறைந்த அளவே திரைப்படங்கள் வந்திருக்கிறது.

என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு - காவியத்தலைவி
ஆயிரம் பெண்மை மலரட்டுமே - வாழ்க்கைப்படகு
உன்னைத்தான் நான் அறிவேன் 
படகு படகு ஆசைப்படகு - உத்தமன்
நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம் - எதிரிகள் ஜாக்கிரதை - கவாலி
பாரடி கண்ணே கொஞ்சம் - வல்லவனுக்கு வல்லவன் -கவாலி
ஆடல் பாடல் ஊடல் கூடல் - நாயக்கரின் மகள் - கவாலி
பெண் பார்த்த மாப்பிளைக்கு - காவியத்தலைவி - முஜ்ரா
கவிதையில் எழுதிய காவிய தலைவி - முஜ்ரா
காவியமா நெஞ்சில் ஓவியமா 
காதல் கொண்டாலே பயம் என்ன - அக்பர் 
கனவு கண்ட காதல் - அக்பர் 
கண்ணீர் துளியால் எங்கும் -அரபு நாட்டு அழகி 
உன் அன்பை தேடுகின்றேன் - அரபு நாட்டு அழகி 
சொக்குதே மனம் -பாக்தாத் திருடன் 
உண்மை அன்பின் உருவாய் -பாக்தாத் திருடன் 
எந்தன் கதை இதானா - பாக்தாத் திருடன் 
ஆசையுடேன் என் ராசா வருவார் - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
கன்னிப்பெண்ணே வா  - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
கண்ணுக்கு நேரிலே  - அலாவுதீனும் அற்புத விளக்கும் 
அழகு ராணி கதை இது   - எடுப்பார் கை பிள்ளை 
குங்கும பொட்டு குலுங்குதடி  - இது சத்தியம் 


Songs from Telugu Movies

Year Song Movie Music
1967 Aha andhamu chindhe aada brathuku M.S.Viswanathan
1967 piliche na madilo aada brathuku M.S.Viswanathan
1978 kalachukkuna gubulaye akbar saleem anarkali C.Ramachandra
1978 Sippayi sippayi akbar saleem anarkali C.Ramachandra
1978 Thane melimusugutheesi akbar saleem anarkali C.Ramachandra
1978 Reyi aagi poni akbar saleem anarkali C.Ramachandra
1978 madhana mohanudu akbar saleem anarkali C.Ramachandra
1968 Neelo nenai naalo alibaba 40 dongallu Ghantasala
1968 Oh meri mehbooba alibaba 40 dongallu Ghantasala
1968 Ravoyi Ravoyi alibaba 40 dongallu Ghantasala
1968 Siggu siggu chigullu alibaba 40 dongallu Ghantasala
1968 chalakaina chinnadhi alibaba 40 dongallu Ghantasala
1957 Andhaala konetilona allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 manasantha needhira allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 ninu valachi allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1957 pilla pilla raa allavuddin adhbhutha deepam S.Rajeshwara rao
1979 paruvame kadali pongi allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1979 kanuvinthuluga kannele allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1979 maatade chilaka allavuddin adhbhutha deepam  (new) G.Devarajan
1968 Hai allah yelaga baghdad gajadonga T.V.Raju
1968 Rave oh chinadana baghdad gajadonga T.V.Raju
1969 sharabi kallatho-kavvali bhale tammudu M.S.Viswanathan
1976 nazarana ee mahakavi kshetraya Adi narayana rao
1966 vachane neekosam monagallaku monagadu veda
? aktharulo munugi unna unknown unknown


5 கருத்துகள்:

  1. மிக அருமையான ஆய்வு. முஜ்ரா, கவாலி, கசல் என்று பிரித்தறிய இயலாவிட்டாலும் இன்னும் சில அதே போன்ற பாடல்களை சுசீலாம்மா பாடி இருக்கிறார்.

    ஏறக்குறைய எல்லா பாடல்களுமே எல்.ஆர்.ஈஸ்வரிக்கு கொடுக்கப்பட்ட குமரிப்பெண் படத்தில் "தேனிருக்கும் மலரினிலே நீயிருக்க சம்மதமா" என்ற பாடல் இது போன்ற இசையமைப்பை உடையதுதான்.

    "இது சத்தியம்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டு குலுங்குதடி" என்ற பாடலும் "எடுப்பர்ர் கைப் பிள்ளை" படத்தில் வரும் "அழகு ராணி கதை இது" எனும் பாடலும் கூட இது போல இசை அமைப்பு கொண்டவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நன்றி அரவிந்த். உங்கள் கருத்தை பார்த்த பின்தான் "குங்கும பொட்டு குலுங்குதடி" வீடியோ பார்த்தேன். அது இவ்வகை பாடல் என எனக்கு இப்போது தான் தெரியும். தகவலுக்கு நன்றி. "அழகு ராணி கதை இது" பாடலை பி.சுசீலா பின்னி எடுத்திருக்கிறார். வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  2. மேலும் பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் என்ற பாடல் சுசீலாம்மாவால் பாடப்பட்டது இல்லை. அதனை நீக்கி விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றி. பவழக்கொடியிலே பாடலை நீக்கி விட்டேன். அவசரத்தில் நேர்ந்த பிழை அது.

    பதிலளிநீக்கு