பி.லீலா அவர்கள் 1948-இல் திரை உலகுக்கு அறிமுகம் ஆனவர். கர்நாடக இசை சார்ந்த பாடல்களை கையாளுவதில் கை தேர்ந்தவர். கனமான சாரீரம், நல்ல இசை ஞானம், பொய் கலப்பில்லாத குரல், தேவையான பயிற்சி போன்றவை அமைந்ததால் எந்த மாதிரி கடினமான பாடல்களையும் எளிதாக பாடும் திறமை இருந்தது. அதுவே அவருக்கு நிறைய கிளாசிகல் கச்சேரிகளையும் உருவாக்கி கொடுத்தது.. நல்ல குரல் வளம் இருந்ததால், 50'களில் திரை உலகின் அதிகம் விரும்பப்படும் பாடகிகளில் ஒருவராக இருந்தார். திரையில் வந்த நடனப்பாடல்களை அதிகம் பாடி இருக்கிறார். வாராயோ வெண்ணிலாவே போல நல்ல மெலடிகளையும் பாடி இருக்கிறார். முக்கல் முனகல் பாடல்கள் இவர் குரலில் வந்ததே இல்லை எனலாம். கிராமியப்பாடல்களை கூட அழகாக பாடுவார். பக்திப் பாடல்களையும் அருமையாக பாடுவார். இன்றும் குருவாயூர் கோயில் நடை திறக்கும் போது இவர் குரல் தான் ஒலிக்கிறது.
பி.சுசீலா அறிமுகமான போது லீலாவும், ஜிக்கியும் முன்னணியில் இருந்தார்கள். 50-களின் பிற்பகுதியில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் இருந்தாலும், இறுதியில் பி.சுசீலா முன்னணிக்கு வந்து விட்டார். அறுபதுகளில் இசை ரசனையில் ஏற்பட்ட மாற்றம் இவரது வாய்ப்புகளை குறைத்தது. இருந்தாலும் இவருக்கான சில பாடல்கள் இருந்து கொண்டே தான் இருந்தன. கண்டசாலா போன்ற இசை அமைப்பாளர்கள் வாய்ப்புகளை வழங்கி வந்தார்கள். பி.லீலா அவர்கள் "சின்னாரி பாப்பலு" என்ற தெலுங்கு படத்துக்கு இடை அமைத்தார். அப்படத்தில் பி.சுசீலாவையும் பாட வைத்தார்.
ஆட வந்த தெய்வம் படத்தில் "கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்" என அருமையான நடனப்பாடல் ஒன்று இருக்கிறது. அக்கா தங்கை பாடுவது போல் பொருத்தமாக இருக்கும் இருவர் குரல்களும். இருவரும் போட்டி போட்டு பாடி இருப்பார்கள்.
குறவஞ்சி படத்தில் "காதல் கடல் கரை ஓரமே" பாடலை சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, பி.சுசீலா இணைந்து பாடி இருக்கிறார்கள்.
தெலுங்கில் இவர்கள் இணைந்து பாடிய "ஸ்வாகதம் ஸ்வாகதம்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.
அதைப்போலவே லவகுசா படத்தில் "ராம கதனு வினரயா", "வினுடு வினுடு இராமாயண காதா", "ராம சுகுணதாமா , "ஸ்ரீ ராமுனி சரிதமுனி" போல பல பாடல்களை இணைந்து பாடினர்.
மலையாளத்தில் "போ குதிரே பட குதிரே", "கண்ணனாம் உண்ணி கண்ணிலுண்ணி", "இல்லத்தம்ம குளிச்சி வரும்போள்". "தம்புராடிக்கொரு" , "இந்தீவர நயனே இந்நலே" போன்ற பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை.
கன்னடத்தில் "Neenu namage siggibiddaya "barave barave ramayana" போல குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு.
|
இன்னமும் நிறைய பாடல்கள் இருக்கலாம். "தெலுங்கில் வந்த "ஜெகதீக வீருனி கதா" கன்னடம் மற்றும் தமிழில் டப் பண்ணப்பட்டது. இவர்கள் இணைந்து பாடிய ஐந்து பாடல்களில் தமிழில் ஒரு பாடலும், கன்னடத்தில் இரு பாடல்களும் கிடைத்திருக்கிறது. இதைப்போல் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கலாம்.
பி.லீலா அவர்கள் மலையாளத்தில் பாடிய "தேவி ஸ்ரீதேவி தேடி வருந்நு ஞான" என்ற பாடலை தமிழில் "தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்" என பி.சுசீலா பாடினார்.
( devi sridevi - P. Leela )
பி.லீலாவும் ஜேசுதாசும் மலையாளத்தில் பாடிய "ஸ்வப்னங்ஙள் ஸ்வப்னங்ஙளே" என்ற பாடலை தமிழில் "தித்திக்கும் முத்தமிழே" என டி.எம்.எஸ்சும் , பி.சுசீலாவும் இணைந்து பாடினர்.
தித்திக்கும் முத்தமிழே - link (TMS-P.SUSHEELA)
பி.லீலா மலையாளத்தில் பாடிய "ஆகாஷத்தின் மஹிமாவே" பாடலை தெலுங்கில் பி.சுசீலா அவர்கள் "ஆலிஞ்சி பாலிஞ்சி ப்ரோவா" என பாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக