பின்பற்றுபவர்கள்

புதன், 22 பிப்ரவரி, 2017

சௌகார் ஜானகிக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்



Sowcar Janaki with P.Susheela
சௌகார் ஜானகி 1949-ல் சௌகார் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு பின் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார் என்றாலும் நிறைய வித்தியாசமான குணசித்திர கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்தன. தமிழ் தெலுங்கு. கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நடித்திருக்கிறார்.
         இவர் அதிக படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்ததால் என்னவோ பல படங்களில் இவருக்கு பாடல் காட்சிகள் குறைந்த அளவிலேயே இருந்திருக்கிறது. இவருக்கான பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார் என்பது சிறப்பு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அவருக்கு பின்னணி பாடி இருக்கிறார் பி.சுசீலா அவர்கள்.  "இறைவா உன் மாளிகையில்" போல் ஒரு சோகப்பாடல ஆகட்டும், "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" போல ஒரு காமடி கலந்த பாடல் ஆகட்டும், "பார்த்த ஞாபகம் இல்லையோ" போல இரு வெஸ்டேர்ன் பாடல் ஆகட்டும், "ஆணி முத்து வாங்கி வந்தேன்" போல ஒரு குடும்ப பாடல் ஆகட்டும் "தன்னந்தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே" போல வயோதிக குரல் ஆகட்டும் .சுசீலாவின் குரலும் இவர் நடிப்பும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது போல் அப்படி ஒரு நேர்த்தியாக இருக்கும்.  எதை எடுப்பது எதை விடுவது என்று கூட தெரியவில்லை. இருந்தாலும் காலத்தையும் கடந்து நிற்கும் சில பாடல்களை குறிப்பிடுகிறேன்


  1.        இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
  2.        மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி
  3.        பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
  4.       அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
  5.       நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
  6.       புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
  7.       நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்குது தம்பி
  8.       அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
  9.      ஆணிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
  10.    கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு
  11.   கையோடு கை சேர்க்கும் காலங்களே
  12.  ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
  13. என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
  14. மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் கலைவண்ணமே
  15.  சின்ன சின்ன நடை நடந்து செம்பவழ வாய் திறந்து
  16.  கண் காட்டும்  ஜாடையிலேகாவியம் கண்டேன்
  17.  தன்னந் தனிமையிலே உடன் தள்ளாடும் வயதினிலே
  18. வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளி மீன் தலை அசைக்க
  19. சேதி கேட்டோ சேதி கேட்டோ சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
  20. கலைமகள் எனக்கொரு ஆணை இட்டாள்

     சௌகாரின்  பேத்தி வைஷ்ணவி கூட சில படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் படமான “நெத்தியடி” படத்தில்  கூட பி.சுசீலா அவர்கள் "விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம்" என்ற பாடலை பாடி இருக்கிறார். பாட்டிக்கும் பேத்திக்கும் பி.சுசீலாவின் குரல் அற்புதமாக பொருந்திய விந்தையை காணும் பாக்கியம் நமக்கும் கிடைத்தது. 

P. Susheela and Vaishnavi


List of Songs.


YearLanguageMovieSongsMusic
1959TamilAbhalai anjugamvennilaa kudai pidikkaK.V. Mahadevan
1961TamilbhaagyalakshmiEnnai naan ariyatha chinnaMSV_TKR
1961Tamilbhaagyalakshmikanne raja kavalai vendamMSV_TKR
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin mayakkathileMSV_TKR
1961Tamilbhaagyalakshmimaalai pozhuthin -ver2MSV_TKR
1968Tamilbhama vijayamaanimuthu vaangi vanthenM.S. Viswanathan
1968Tamiledhir neechaladuthathu ambujathai pAthelaV. Kumar
1968Tamiledhir neechalSethi ketto sethi kettoV. Kumar
1968Tamiliru kodugalnavraathriyil koluV. Kumar
1961Tamilkaanal neerO matha jegan mathaMaster Venu
1959Tamilkaaveriyin kanavanchinna chinna nadai nadanthuK.V. Mahadevan
1959Tamilkaaveriyin kanavanchinna chinna nadai(pathos)K.V. Mahadevan
1959Tamilkaaveriyin kanavankanni ilam vayathuK.V. Mahadevan
1970Tamilkaaviya thalaivien vaanathil ayiramM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivikaiyodu kai serkkum M.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivikavidhaiyil ezhudhiyaM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivioru naal iravu pagal pOlM.S. Viswanathan
1970Tamilkaaviya thalaivipeN paartha maapillaikkuM.S. Viswanathan
1970Tamilmaanavanchinna chinna paapa Shankar Ganesh
1966Tamilmahakavi kaalidaskalaimagaL enakkoru aaNaiyittaaLK.V. Mahadevan
1966Tamilmahakavi kaalidasmalarum vaan nilavumK.V. Mahadevan
1970Tamilnadu iravilkann kaattum jaadaiyile S. Balachandar
1970Tamilnadu iravilkann kaattum -sadS. Balachandar
1970Tamilnadu iraviloru kOdi ezhil serthu-ver2S. Balachandar
1965Tamilneerkkumizhineeril neendhidumV. Kumar
1968Tamiloli vilakkuIraiva un maaligayilM.S. Viswanathan
1962Tamilpaar magale paarNeerodum VaigayileMSV-TKR
1962Tamilpaar magale paarPoo choodum nErathile MSV-TKR
1962Tamilpaar magale paarthuyil kondal kanalgathu MSV-TKR
1966Tamilpetral thaan pillaiyanalla nalla pillaigalai nambiM.S. Viswanathan
1959Tamilraaja sevaikaadhal kadhaigalT.V. Raju
1959Tamilraaja sevaimudiyathu adhuT.V. Raju
1959Tamilraaja sevaithoothu selvaayoT.V. Raju
1971Tamilranga raatinamaathadi parakkuthuV. Kumar
1973Tamilschool masterthannan thanimayile indhaT.G. Lingappa
1972Tamilthanga duraiezhugave ezhugaveM.S. Viswanathan
1972Tamilthanga duraikaalamagal thanthaM.S. Viswanathan
1972Tamilthanga duraithanga thuraye engal thamizheM.S. Viswanathan
1969Tamilthunaivanmarudha malai meedhilEK.V. Mahadevan
1969Tamilthunaivannaan yaar enbadhai nE sollaK.V. Mahadevan
1969Tamilthunaivanparvadha raja kumaranin K.V. Mahadevan
1968Tamiluyarntha manidhanathanin muthangalM.S. Viswanathan
1963Tamilaasai alaigalalli alli koduthaK.V. Mahadevan
1963Tamilaasai alaigalchinnanchiru maganaiK.V. Mahadevan
1964Tamilalliunnai andri yaaridamK.V. Mahadevan
1964Tamilalliunnith than nE arivaaiK.V. Mahadevan
1964TamilKaliyuga kannankannayya nee endhanV. Kumar
1964Tamilpudhiya paravaipaartha njabagam illaiyoM.S. Viswanathan
1964Tamilpudhiya paravaipaartha njabagam -sadM.S. Viswanathan
1968TamilThirumal perumaikanna kanna kaviya vannaK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldsamsaram mahasagaramK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldOkati Okati OkatiK.V. Mahadevan
1959Teluguaalu magalu-oldaaduko na thandriK.V. Mahadevan
1980KannadaAarada gayananna baala baaninallisowcar
1980KannadaAarada gayananna baala -sadsowcar
1970TeluguakkachelleluPaandavulu paandavulu thummedhaK.V. Mahadevan
1961Telugubatasarimounamulu chaluraMaster Venu
1961Telugubatasarisaranamu neeve deviMaster Venu
1983Telugubezawada bebbuliNavvithe vennelaChakravarthy
1957Telugubhale baavakalala baava kadali ravaS. Dakshinamurthy
1957Telugubhale bavanaa anthaala rani neevethaS.Dhakshinamurthy
1968Telugubhale kodalluaasthi mooreduM.S. Viswanathan
1968Telugubhale kodalluchallani illuM.S. Viswanathan
1968Teluguchinnari paapaluoyabba yenodhee sogasuP. Leela
1968Teluguchinnari paapaluuyyala uyyala oohalalP. Leela
1964Telugudoctor chakravarthiNijam cheppave pillaS. Rajeshwara Rao
1968Teluguevaru monagaduunnanu oka nadu ontarikaveda
1968Teluguevaru monagaduunnanu oka nadu-sadveda
1958Teluguganga gowri samvadhamswamy idhe saranagathiPendyala
1958Teluguganga gowri samvadhamvaadulatho apavaadulathoPendyala
1958Teluguganga gowri samvadhamnyayama idhuPendyala
1981TeluguHrudayamunna manishi (D)athanin muthangalM.S. Viswanathan
1993Telugukaala chakram aduthathuSaluri Vasurao
1967Telugukaala chakram (edhir neechal dub)sakhuniVeluri krishna murthy
1964TeluguKavala PillaluNaa Janakuni mano vidhi MSV-TKR
1964TeluguKavala Pillalunidura potheMSV-TKR
1967Telugumanchi kutumbamManase aandhala BrindavanamS.P. Kodandapani
1967Telugumanchi kutumbamTulli tulli paduthundhiS.P. Kodandapani
1964Telugupeetala meedhi pellichinnari manasunaAswathama
1963Telugupempudu koothurunaaku kanulu (sad)T.G. Lingappa
1963Telugupempudu koothurunaaku kanalulevuT.G. Lingappa
1963Telugupempudu koothururavvala jabililoT.G. Lingappa
1976Teluguprema bandhamEkkadunnanuK.V. Mahadevan
1959Telugurechukka pagati chukkaKaadha ounaT.V.Raju
1959Telugurechukka pagati chukkaPreme PremaniT.V.Raju
1956Telugusadaramaandari anandalaR. Sudarsanam
1956Telugusadaramamanajalanoi devaR. Sudarsanam
1956Telugusadaramasudigalilon jadivanalonaR. Sudarsanam
1956Telugusadaramavanamanta vuyyalaloogeR. Sudarsanam
1956Telugusadaramathudiye ledaR. Sudarsanam
1956Telugusadaramatelugu pillaR. Sudarsanam
1963KannadaSaku magalunaanu andhalade (happy)sowcar
1963KannadaSaku magalunaanu andhalade (sad)sowcar
1963Telugusavati kodukumanasaaragaa neevusatyam
1963Telugusavithi kodukuchaka chaka saageSatyam
1965TeluguSingapoor CIDPaatha gnaapakamediyo MSV-TKR
1965TeluguSingapoor CIDPaatha gnaapakamediyo -sadMSV-TKR
1978Teluguthayaramma bangariahMy name is bangaraiahChakravarthy





1 கருத்து: