பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 மார்ச், 2017

எம்.என்.ராஜத்துக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்


             
 காலத்தையும் கடந்து வெற்றி பெற்ற பாடல்களில் ஒன்று "காவியமா நெஞ்சில் ஓவியமா" .. இப்பாடலில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருப்பவர் எம்.என்.ராஜம் அவர்கள்.  சிதம்பரம் ஜெயராமன், பி.சுசீலா குரல்களில் ஒலித்த இந்த பாடல் இன்றளவும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.

                 மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம் அல்லது எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஏழு வயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப்   பயின்றவர்.            

                ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. முதன்மை நாயகியாக, எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர். இவரது கணவர் ஏ.எல்.ராகவன் ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார். 2012 ஆம் வருடம் ஏ.எல்.ராகவன் அவர்களுக்கு பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அதில் எம்.என்.ராஜம் அவர்களும் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தி பேசினார்.

       
 
      நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர் .. நிறைய படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்கள் அதிகம் என்றாலும் பாடல் காட்சிகள் குறைவு தான். பி.சுசீலா இவருக்கென 25 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி  இருக்கிறார்.

                                           kaaviyama Nenjil Oviyama.



1959Tamilalli petra pillaiaasai athanK.V. Mahadevan
1959Tamilalli petra pillaichumma chummaK.V. Mahadevan
1960Tamilkavalai illatha manithansirikka sonnar sirithan MSV-TKR
1961Tamilmaamiyarum oru veettu marumagalevaa entru sonnadhumPendyala 
1959Tamilore vazhianbum aranum uyirena R. Govardanam
1959Tamilore vazhivanamenum veedhiyile R. Govardanam
1959Tamilore vazhivellathal azhiyathuR. Govardanam
1959Tamilore vazhivelli mEnum thulli aaduthuR. Govardanam
1959Tamilpenn kulathin ponn vilakkukangal urangidaMaster Venu
1959Tamilpenn kulathin ponn vilakkuvanakkam vaanga maapillaiMaster Venu
1959Tamilpenn kulathin ponn vilakkuvizhi vaasal azhaganaMaster Venu
1956Tamilpennin perumaiazhuvadhaa illai sirippadhaaA. Rama Rao
1958Tamilperiya koyiliruppavargaL maadiK.V. Mahadevan
1958Tamilperiya koyilkoLLai koLLum azhaginileK.V. Mahadevan
1958Tamilperiya koyilvalai veesamma valai veesuK.V. Mahadevan
1959Tamilpudhumai pennmaaRaadha kaadhalaalET.G. Lingappa
1959Tamilpudhumai pennninachathaiT.G. Lingappa
1956Tamilrambayin kadhalkannaala ulagile kaadhal T.R. Paapa
1959Tamilsivagangai seemaiIamyum vizhiyum edhiraanaalMSV-TKR
1960Tamilthanga rathinamenakku nE unakku naanK.V. Mahadevan
1960Tamilthanga rathinamInnoruvar thayavatherkkuK.V. Mahadevan
1960Tamilthangam manasu thangammangala thulasi matha K.V. Mahadevan
1960Tamilthangam manasu thangampongum azhagu poothuK.V. Mahadevan
1960Tamilthangam manasu thangamsirikkudhu mullai adhuK.V. Mahadevan
1960TamilPaavai vilakkukaaviyama nenjil oviyamaK.V. Mahadevan







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக