பின்பற்றுபவர்கள்

புதன், 12 ஜூலை, 2017

ஆனந்த தாண்டவம் - பி.சுசீலாவின் சங்கீத மழை

   

   

       சிந்து பைரவி படத்தின்  பெரிய வெற்றிக்கு பின் கிளாசிகல் இசை சார்ந்த பல படங்கள் வெளிவந்தன. ஓரிரு படங்கள வெற்றியும் பெற்றன. அதை தொடர்ந்து எல்.வைத்தியநாதன் இசையில் தயாரிக்கப்பட்ட படம் தான் "ஆனந்த தாண்டவம்".

        எல்.வைத்தியநாதன் அவர்கள் "ஏழாவது மனிதன்", "பேசும் படம்" " மறுபக்கம்" போன்ற தமிழ் படங்களுக்கும் பல கன்னட  இசை அமைத்து இருக்கிறார்.  கர்நாடக இசையில் நல்ல ஞானம் உள்ள இவர் பல இசை அமைப்பாளர்களிடம்  உதவியாளராக பணி புரிந்து இருக்கிறார்.  யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் அறிய பெற்றவர். பாரதியாரின் பாடல்களுக்கு புது வடிவம் தந்தவர். மற்றவர்கள் தயங்குகின்ற சவாலான  படங்களுக்கு இசை அமைத்தவர்.   வயலின் மேதை எல்.வைத்தியநாதன் அவர்களின் மூத்த சகோதரர் என்பது இன்னொரு தகவல். எல்.வைத்தியநாதன் இசையில் பி.சுசீலா பாடிய ஒரு  பாரதியார் பாடல் கீழே.. 
                                         ( செந்தமிழ் நாடெனும் போதினிலே )            

      " ஆனந்த தாண்டவம் " திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசை தட்டு 1986-இல் வெளிவந்தது. முழுக்க முழுக்க சுத்தமான கர்நாடக சங்கீதம்  ஒலித்த இசை ஆல்பங்களில் இதுவும் ஓன்று. பி.சுசீலாவையே எல்லா பாடல்களையும் பாட வைக்க வேண்டும் என விரும்பி பி.சுசீலாவின் வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்து பாட வைத்தாராம். 22 பாடல்கள் அடங்கிய இசைத்தட்டில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டது. ஐந்து மொழிகளிலும் பி.சுசீலாவே  பாடினார்..  என்னிடம் தமிழ், தெலுங்கு  மற்றும் ஹிந்தி மொழி பாடல்கள் இருக்கின்றன. மற்ற இரு மொழிகள் எவை என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. ஒருவேளை கன்னடம் மற்றும் மலையாளமாக இருக்கலாம்.  இந்த படங்கள் வெளியானதா என்று தெரியாது. வெளியாகாததால் என்னவோ இவ்வளவு சிறப்பான பாடல்கள் வெளியே தெரியாமல் போய் விட்டது.



   நல்ல தரமான பாடல்கள் என்றால் மிகை இல்லை. . "மோகனம் சிருங்கார காவிய தாண்டவம்", "ஆசையே மத யானை போல் நடை போடுது", "ஓம்கார ஒலியோடு மாயை வந்தாள்", "குணமேதும் இல்லாத முக்கண்ணன் சிவன்" என எல்லாமே சிறந்த பாடலகள். கிளாசிகல் பிடிக்கும் என்பவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடலகள் இவை..  தமிழில் இதன் வரிகளை வாலி  அவர்கள் எழுதி  இருந்தார்கள்.



One Video here ..
                              ( மோகனம் ஸ்ருங்கார காவிய  தாண்டவம் )

YearLang                  Movie                  Songs    Music
1986TamilAanandha dhandavamaandavan aanaalumL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamaasaye madhayanai pOl L. Vaidyanathan
1986TamilAanandha dhandavamarthanAreeswaramL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamathmajyothiye nathane kEl maganeL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamdehinos aasmin yadhaL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamgunamethum illatha mukkannanL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamjaadasyaviL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamkaamathil thOntri L. Vaidyanathan
1986TamilAanandha dhandavammai vannamum manjal mugamumL. Vaidyanathan
1986TamilAanandha dhandavammaranamendra kodiyaL. Vaidyanathan
1986TamilAanandha dhandavammohanam singara kavya dhandavamL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamOm yogi yoogithaL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamomkaara oliyodu maya vanthaalL. Vaidyanathan
1986TamilAanandha dhandavampadaikkum kariyam seyyumL. Vaidyanathan
1986TamilAanandha dhandavampiranthu irappadhuvumL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamsachidhanandha murthyinL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamsambOga santhOshamEL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamshakthi dhandavamL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamsivajyothi thathuvaL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamsri satguru arulaal nighazhumL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamulaganaidhum azhidhuvidaL. Vaidyanathan
1986TamilAanandha dhandavamyadha viniyathamL. Vaidyanathan




தெலுங்கிலும்  இத்திரைப்படத்தின் பாடல்களை கேளுங்கள் .. தெலுங்கில் Arudra, A.Raghunatha Reddy மற்றும் Eashwar  ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தார்கள்.





1986TeluguAananda thandavamaathma jyotiniL. Vaidyanathan
1986TeluguAananda thandavamaradanareeswaramL. Vaidyanathan
1986TeluguAananda thandavambhuvanamuluL. Vaidyanathan
1986TeluguAananda thandavambusalu kotteL. Vaidyanathan
1986TeluguAananda thandavamdehino aasminL. Vaidyanathan
1986TeluguAananda thandavamgunadosha rahidhuluL. Vaidyanathan
1986TeluguAananda thandavamjaathasyahiL. Vaidyanathan
1986TeluguAananda thandavamkama sambootamuL. Vaidyanathan
1986TeluguAananda thandavamragame punnagamaiL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsakthi thatva thandavamL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsamuoga santhoshamuL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsarasa srungaraL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsatchidanandaL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsiva sathhuleL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsivajyothi thatva swaroopamL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsree sathguruL. Vaidyanathan
1986TeluguAananda thandavamsrujana karyamuL. Vaidyanathan
1986TeluguAananda thandavamtananundi taneL. Vaidyanathan
1986TeluguAananda thandavamteera jalaniL. Vaidyanathan
1986TeluguAananda thandavamyada viniyatamL. Vaidyanathan
1986TeluguAananda thandavamyogi yunjitha sathathamL. Vaidyanathan


ஹிந்தியில்  இத்திரைப்படம் "Kam Kala Dhandav" என்ற பெயரில் தயாரானது. பாடல்கள் கீழே..
                                                      Kamini Gaja Kamini

YearLangMovieSongsMusic
1986Hindikaam kala tandavaadi kaal se kaal shakthiL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavaatma jyothi hoon meinL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavardhanaareeshwar L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavdehino aasminL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavjaatasyahiL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavkaam kala kai L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavkaam ki kamna haiL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavkaamini gaja kaamini vilasiniL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavphan ko khole mrityujwala L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavrasavanthi shringarL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavsainyog anand hai L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavsatchit anand trinetra L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavshakthi tatva rupdharL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavshiva jyothi rupiniL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavshiva jyoti tatva roop haiL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavshiva shakthi ka madhuL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavshri satguru ka aashish L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavsrijan karya kartha haiL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavwidhwansini hai L.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavyada viniyatamL.Vaidyanathan & lakshmi kiran
1986Hindikaam kala tandavyogi yunjita sattatamL.Vaidyanathan & lakshmi kiran



Thanks..







2 கருத்துகள்: