பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 ஜூலை, 2017

பி.சுசீலாவின் ஒரு அபூர்வ இசை ஆல்பம்

     

  1982-ஆம் வருடம்...

இசை அமைப்பாளர் திரு ரங்கசாமி பார்த்தசாரதி அவர்கள் இந்தியாவின்  படைப்புக்களான பகவத் கீதை, உபநிஷத்துகள் ஆகியவற்றை மற்ற நாட்டவரும் அறிய வேண்டும் என்பதற்காக பல இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்தார். அவரது நிறுவனமான  "ஓரியன்டல் ரிக்கார்ட்ஸ்" என்ற அமெரிக்க இசைத்தட்டு கம்பெனி மூலமாக ISHA AND KENA ஆகிய உபநிஷத்துக்களை இசையாக வெளியிட   முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.   இந்த இசை தட்டுக்கான  பாடகரை  தேர்வு செய்ய திருவுள சீட்டு போடப்பட்டதாம். அப்போது பி.சுசீலா அவர்களின் பெயர் வந்ததால் பி.சுசீலா அவர்களையே தேர்வு செய்தார்கள். பெரும்பாலும் ஆண் பாடகர்களே உபநிஷத்துக்களை பாடும் வழக்கம் இருந்த நிலையில் பி.சுசீலா அவர்களுக்கு அந்த உபநிஷத்துக்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக தினமும் காலையில் ஒரு சம்ஸ்கிருத விறபன்னர் வந்து பி.சுசீலா அவர்களுக்கு சமஸ்கிருதம் சரியாக உச்சரிக்க  கற்று கொடுத்தார்.  அந்த கால கட்டத்தில் தெலுங்கிலும் தமிழிலும்  மிகவும் பிசியாக இருந்தார் பி.சுசீலா அவர்கள்.  என்றாலும்  அதற்கும்  நேரம் ஒதுக்கி இந்த சிறப்பான ஆல்பத்தை முழு சிரத்தையுடன் பாடி கொடுத்தார். எத்தனையோ பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு இசைத்தட்டு.  பெரிய அளவில் மார்க்கட்டிங் செய்யப்படாதால் என்னவோ பி.சுசீலா ரசிகர்களில் பலருக்கு கூட அறிமுகம் ஆகாமல் போய் விட்டது.



              என்ன ஒரு ஆல்பம் !! ஷாந்தி ஷாந்தி என பாடும் குரலில் என்ன ஒரு அமைதி !! பி.சுசீலாவின் குரலில் என்ன  ஒரு கிளாரிட்டி !! கேட்க கேட்க பரவசமாக இருந்தது!!!. அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பத்தை பகிர்கிறேன். பி.சுசீலாவின் குரலில்  பக்தியும், இனிமையும் மேலோங்கி நிற்கின்றன. பி.சுசீலாவின் மொத்த அனுபவமும் ஒவ்வொரு வரியிலும் இனிமை கூட்டுகின்றது. கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேளுங்கள்.

           இந்த ஆல்பத்தின் கவரில் இசை அமைப்பாளர் மற்றும் பி.சுசீலா அவர்களை பற்றி விரிவாக எழுதி இருப்பதை தவறாமல் படியுங்கள்.


About the Album :



It is with a Profound sense of joy and anticipation that I present to you this recording — the first one on the Upanisads. The enthusiastic listener "acceptance of my earlier productions on the Vedas and the Bhagavad-Gita emboldens me to attempt the recording of the Upanisads.

The Word» “Ullanisad” literally means “sitting down at the feet of the teacher”. That is to say, the Upanishads embody the secret and sacred teachings which were imparted by the Guru to his disciples. 'I'hese teaching of cource were about the nature of Ultimate Reality
"lwentieth-century man looks outward to the conquest of outer space. But the seers and sages of the Upanisads looked inward to the conquest of inner space. They believed that the Soul of man was as infinite as the vast expanse of the limitless Universe. They_ believed also that the individual Self ot Jivatma, partakes of the character of the Obsolute self‘, or Paramatma. The goal and purpose of human life is to let our individual Selves dissolve into that Ocean of Truth, Consciousness, and Bliss which the obsolute is, and thus experience the Peace that passeth all understanding, which the mystics of alla ages and all faiths affirm is vouchsafed to the true seeker.

Modern Criticism is generally agreed that these Upanishads,  numbering 108, belong to the period earlier than the first millennium before Christ. As almost all the early literature of India was anonymous, we do not know the names of the authors of these Upanisads. According to. tradition, the great sage, Vyasa, was the first compiler of the Vedas, and the compilation of the Upan-isads remains a matter of speculation. Of theoriginal number only about a dozen and a half, which are considered the principal Upanisads, are still extant.

The Upanisads are considered part of Sruti that which was “heard” as the revealed Word of God. We do not, however, possess any 1’9C91’d Of how these words of the Upani§ads, pregnant with potency and words  with luminosity, were chanted, and to What
meter they were set for incantation by the sages themselves.

But since they are known to Produce powerful vibrations, induce a tranquil state of mind, and summon a beatific vision of the Absolute, I have engaged the mellifluous voice of Srimati P. Susheela to render them in song. 

The devotion with which she has done this is certain to enable you to 

experience the ecstasy of having communion with the Ineffable.

In this day and age, when we crave for peace in the world, peace with nature, peace with all
mankind, and peace with ourselves, I offer this recording as my humble salutation to the sages
of the Upanisads, who made them replete with the invocation:
OM, SHANTHI, SI-lANTHl, SI-lANTHI


Let there be Peace, Peace, Peace.



About the Vocalist : 

South India's most celebrated singer of film and semi-classical music is being introduced to audiences abroad through this recording. Srimati P. Susheela who has rendered these sacred songs of the Upanisads, obtained her initial training in Vijayawada from the well-known violinist  Dwaram Venkatasamy Naidu. Subsequently in Madras She received further Training from the renowned Musiri Subramanya Iyer.

Commencing her singing career in South Indian films in 1951, While she was still in her teens, Srimati Susheela has sung more than 20,000 songs. She is the leading Singer of South India, and has sung in several Indian languages- The foundation of rigor and discipline having been laid by her teachers, she has developed her talent With the aid of her own creative imagination and personal intuition. It is these qualities which were decisive in her being chosen to render the Upanisads.

Before she did the actual recording, Srimati Susheela diligently studied the Upanisads with the
asistance of an eminent Sanskrit scholar. The recipient year after year, of many coveted awards,
too numerous to catalog, she is married to Dr. Mohan Rao, and has a son twelve years old.



The Composer - Director

A pioneer in introducing North American audiences to the rich treasures of India’s music and 
dance, Rangasami Parthasarathy has been widely acclaimed as much for teaching, promoting and staging concerts in all the major centers, as for his own performance and direction.

He has founded the Academy of East Indian Arts in New York in 1971, and has directed it with a view to making it an effective instrument to attain his objective.

          In recognition of his sterling contribution to the enrichment of Indian ethnicity in North America, Parthasaratliy was given the Award for the Perfonning Arts by the First Convention of Asian Indians in 1980.

With the intention of reaching much wider audiences than those of concert halls, Parthasarathy has founded his own recording company, ORIENTAL RECORDS in 1977, to bring to them the infinite variety of Indian music, both sacred and secular. It has been his singular mtisfaction that all the leading vocalists and instrumentalists of both the Northern and Southem traditions of Indian music have recorded under his company’s label.

Now more than ever, Parthasarathy senses the role music can play in creating the atmosphere for the reception of the message of Peace as a new  century dawns.


பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் பாடலை கேட்டு மகிழுங்கள்...  ( Video கீழே )



 இந்த இசை தட்டு CD-ஆகவும் வெளிவந்தது.
http://www.ebay.de/itm/Celestial-Songs-Of-Upanishad-P-Susheela-CD-/271180197308

நன்றி ..


4 கருத்துகள்:

  1. அருமையான பதிவு...நான் முதல் முறையாக கேட்கிறேன்..இசையரசியின் குரலை தவிர யார் பாடியிருந்தாலும் இத்தனை இனிமை இருந்திருக்காது...இந்த பாடல்கள் அதிகம் விளம்பரம் செய்யாமல் போனதில் ரசிகர்களுக்குத்தான் மிகப் பெரிய நஷ்டம்..இதை கேட்கும் வாய்ப்பை பலர் இழந்திருக்கலாம்..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி..பாராட்ட வார்த்தைகளே இல்லை..����������

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி Antony Raj !
      நானும் Youtube-இல் லிங்க் தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. எனவே தான் நானே அப்லோட் செய்தேன். சமஸ்கிருதம் நமக்கு அன்னியம் ஆனதும் ஒரு காரணமாக இருக்கலாம். மொழி புரியாமல் ரசிப்பதும் கடினம் தானே.

      நீக்கு
  2. அருமையான வலைத்தளம்
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு