புதுமை இயக்குனர் என தமிழ் திரை உலகம் கொண்டாடிய இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் 1933 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் பிறந்தவர். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து மிக பிரபலமாக இருந்தார். பிற்காலத்தில் யதார்த்த சினிமாவால் ஜெயித்த பல பிரபல இயக்குனர்களுக்கும் இவரே முன்னோடி. இவர் கதாசிரியராக, வசனகர்த்தவாக பணிபுரிந்து பின்னர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். 1959இல் இருந்து 1991 வரை 32 வ ருடங்கள் தொடர்ச்சியாக படங்களை இயக்கி சாதனை படைத்தவர்.ஹிந்தி பட உலகிலும் இவர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் அங்கும் இவருக்கென ஒரு மார்க்கட் இருந்தது.
ஸ்ரீதருக்கு அபாரமான இசை ரசனை இருந்திருக்கிறது. அதனால் அவர் படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை.
சமீபத்தில் வலைத்தளங்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஸ்ரீதர் சொன்னதாக ஒரு நண்பர் ஒரு தகவலை போஸ்ட் செய்திருந்தார். அதில் அவர் "There could never be another P.Susheela" என கருதது தெரிவித்திருந்தார். அவர் படத்தில் இடம் பெற்ற பல பாடல்களை பி.சுசீலா பாடி இருந்ததால் அதை அவர் உணர்ந்தே சொல்லி இருந்தார் என்றே தோன்றியது.
Proof ..
பி.சுசீலாவுக்கும் ஸ்ரீதருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது . அதனால் பி.சுசீலாவை தவிர்த்து விட்டு அவர் போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி என இரு படங்களை தயாரித்து இயக்கினார், அப்படங்களில் தோல்வியால் மீண்டும் பி.சுசீலாவையே அடுத்தடுத்த படங்களில் பாட வைத்தார். ஸ்ரீதருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமாகவே இருந்திருக்கிறது. பத்மினி , சரோஜாதேவி, சிவாஜி என பலருடன் அவருக்கு கருதது வேறுபாடுகள் வந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டு இருக்கிறது. அப்படியே லதா மங்கேஷ்கருக்கும் ஸ்ரீதருக்கும் கூட கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. "தில் ஏக் மந்தீர்" என்ற ஹிந்தி படம் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் ரீமேக் ஆகும்.. இதில் இடம் பெற்ற "முத்தான முத்தல்லவோ" என்ற பாடலின் ஹிந்தி வடிவததை பாட லதா மங்கேஷ்கரை ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ஸ்ரீதர் படப்பிடிப்பு தாமதமாவதாக சொல்லி இசை அமைப்பாளரை நெருக்கினார்..லதா பிசியாக இருந்ததால் "சுமன் கல்யாண்புர்" என்ற பாடகியை வைத்து அவசரமாக அந்த பாடலை பாட வைத்து விட்டார்கள் அதனால் ஆத்திரம் அடைந்த லதா அந்த இசை அமைப்பாளரின் இசையில் ஏழு வருடங்கள் பாடவில்லை. பின்னர் ஸ்ரீதர் சென்று காம்ரமைஸ் செய்து வைத்ததாக அவரது சுய சரிதையில் எழுதி இருக்கிறார்..இப்படி பல உரசல்கள் அவருக்கு மற்ற கலைஞர்களுடன் இருந்திருக்கிறது.
அறுபதுகளில் பி.சுசீலா கொடிகட்டி பறந்தார். அவர் பாடாத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்ற எல்லா படங்களிலும் அவர் தவிர்க்க முடியாதவராய் இருந்தார். அதனால் ஸ்ரீதர் எத்தனை முயற்சித்தும் பி.சுசீலாவை அசைக்க முடியவில்லை. போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி என இரு படங்களை பி.சுசீலா இன்றி வெளியிட்டார். அந்த படங்களின் தோல்வியால் மீண்டும் ""காதலிக்க நேரமில்லை" படததில் இருந்து பி.சுசீலாவுக்கே வாய்ப்புகள் வந்தன. போலீஸ்காரன் மகள் படம் தெலுங்கில் "Constable kuturu " என்ற பெயரில் தாயரிக்கப்பட்டது. தமிழில் வெளிவநத பாடல்களின் தெலுங்கு வடிவங்களை பி.சுசீலாவே பாடினார்.
ஸ்ரீதர் இயக்கிய படங்களில் 1975 க்கு பிறகு வந்த படங்களில் பி.சுசீலாவுக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோயினுக்கு பாடும் குரலான சுசீலாவின் குரலை இரண்டாம் ஹீரோயின், துணை நடிகைகள் என உபயோகப்படுத்தி இருப்பார். உதாரணமாக "நானும் ஒரு தொழிலாளி" படத்தில் "ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல்" பாடலை இரண்டாம் கதாநாயகியான பல்லவிக்கும், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற "கன்னிப்பொண்ணு கைமேல " என்ற பாடலை ஒரு துணை நடிகைக்கும் பயன்படுத்தி இருப்பார். அதிலேயே அவர் மனது என்னவென்று தெரிந்து கொள்ளலாம். எப்போதுமே திரைப்படங்களில் பி.சுசீலாவின் பெயருக்கு பின் தான் மற்ற பாடகிகள் பெயர் இடம் பெறும். அந்த வழக்கத்தை .கூட ஸ்ரீதர் தனது படத்தில் மாற்றினார். சௌந்தர்யமே வருக வருக என்ற படத்தில் வாணியின் பெயருக்கு பின் பி,சுசீலாவின் பெயர் இடம் பெற செய்தார். இப்படி தன்னால் எங்கெங்கு முடியுமோ எல்லாம் அங்கு எல்லாம் தன் வெறுப்பை காட்டி வந்திருக்கிறார் ஸ்ரீதர்.
இந்த மனநிலையில் இருந்த ஒருவர் பி.சுசீலாவை பாராட்டி அதுவும் அவரை போல் இன்னொரு பாடகி வரப்போவதில்லை என்னும் அளவுக்கு சொன்னதை மிக பெருமையாகவே பார்க்கிறேன். அங்கே தான் பி.சுசீலாவின் திறமை கவுரவிக்க பட்டிருக்கிறது, பி.சுசீலாவை தவிர்க்க ஸ்ரீதர் எத்தனை முயற்சிததாலும் அவர் படங்களில் அதிகம் பாடிய பாடகி என்ற பெருமை பி.சுசீலாவுக்கே கிடைத்தது. கிட்டத்தட்ட 135 பாடல்களை பாடி இருக்கிறார்,. எஸ். ஜானகி அவர்கள் 50 முதல் 60 பாடல்கள் வரை பாடி இருக்கலாம். வாணி ஜெயராம் 40 பாடல்கள் வரை பாடி இருக்கலாம்.
இனி அவர் படங்களில் இடம் பெற்ற பி.சுசீலாவின் பாடல்களை பார்ப்போம்.
" என்ற பாடல் தான் பி.சுசீலா ஸ்ரீதர் படங்களில் பாடிய முதல் பாடல். இப்பாடலும் பி.சுசீலா பாட காரணமான கதை ஓன்று உண்டு. இப்பாடலை முதல் பாட பி.லீலா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாகவும் அவர் தனி மைக் கேட்டதால் அவரை தவிர்த்து பி.சுசீலாவை இப்பாடலை பாட வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. (proof)
முதன் முதலில் ஸ்ரீதர் இயக்கிய படம் "கல்யாண பரிசு". அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல்களும் ஒரு காரணம். ஏ.எம்.ராஜா தம் துணைவியாரான ஜிக்கி ஒரு பெரிய பாடகியாக இருந்தாலும் கூட பி.சுசீலாவையே கதாநாயகிக்கு பாட வைத்து இருப்பார். பி.சுசீலாவும் அத்தனை அருமையாக பாடி தன்னை நிரூபித்து இருப்பார். "
" போன்ற பாடல்களை மற்றவர்களுடன் இணைந்தும் பாடி இருப்பார்.
" போன்ற சிறப்பான பாடல்கள் இடம் பெற்றன.
" போன்ற அருமையான பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தன. "
அதே வருடம் வெளிவந்த "புனர் ஜென்மம்" படத்தில் "
என்றும் துன்பமில்லை", "
இன்ப காவியம் பொய்தானா", "
உருண்டோடும் நாளில்", "
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே" போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின. "
உருண்டோடும் நாளில்" பாடலை கதாநாயகி குடிததுக்கொண்டே பாடுவது போல் படமாக்கி இருப்பார்கள். பி.சுசீலாவும் அதே போல் அருமையாக பாடி இருப்பார்கள்.
1962-இல் ஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ் ஆன "நெஞ்சில் ஓர் ஆலயம்" வெளிவந்தது. அதுவரை ஏ.எம்.ராஜா மற்றும் சலபதி ராவுடன் இணைந்து பணி ஆற்றிய ஸ்ரீதர் முதன் முதலில் எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்தியுடன் இணைந்து பணி ஆற்ற துவங்கினார். படமும் பாடல்களும் தமிழ் திரை உலகம் இன்றளவும் கொண்டாடும் விதமாக அமைந்ததோடல்லாமல் பெரிய வெற்றியையும் பெற்றது. "
சொன்னது நீ தானா ", பி.சுசீலாவின் கிரீடத்தில் மற்றுமோர் சிறகு. தவிர "
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ", "
முத்தான முத்தல்லவோ", "துள்ளி வரும் மான்குட்டி" போன்ற பாடல்கள் எல்லாமே நெஞ்சை அள்ளும் விதம் இனிமையாக அமைந்தன. நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தெலுங்கில் "மனசே மந்திரம்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
1963 இல் ஸ்ரீதர் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படததை இயக்கினார். இப்படத்தில் தீம் பாடலான "
நெஞ்சம் மறப்பதில்லை" பாடலுக்கு இசை அமைக்க 45 நாட்களுக்கு மேல் எடுததுக்கொண்டாராம் எம்.எஸ்.வி அவர்கள். டியூனை கேட்டு சந்தோஷமான ஸ்ரீதர் அதை வேறொரு பாடகியை பாட வைக்க வேண்டும் என எம்.எஸ்.விக்கு பிரஷர் கொடுத்த்தாராம். எம்.எஸ்.வி அவர்கள் "இந்த பாடலுக்கு உயிர் கொடுக்க பி.சுசீலாவால் மட்டுமே முடியும்" என போராடி பி.சுசீலாவை பாட வைததாராம் . அதை அவர் தனது சுய சரிதையில் "
நெ ஞ்சம் மறப்பதில்லை" பாடலின் வெற்றிக்கு 75% பி.சுசீலாவே காரணம் என குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். எத்தனை விசாலமான மனது அவருக்கு !!. அந்த பாடலின் வெற்றிக்கு அவர் பட்ட கஷ்டம் குழுவினரின் உழைப்பு படமாக்கிய விதம் என்று பல இருந்தாலும் ஒரு பாடகிக்கு 75% க்ரெடிட் கொடுப்பதற்கு பெரிய மனது வேண்டும்!!. பி.சுசீலா அதற்கு தகுதியானவர் என்பது பாடலை கேட்டாலே தெரியும். அதே படததில் , "
தேனடி மீனடி நீயடி நானடி" என ஒரு துள்ளலான கிராமிய பாடலும் இடம் பெற்றது. அதே படததில் "
முந்தானை பந்தாட" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடி இருப்பார்.. தெலுங்கில் "maarani manasulu " என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.
காதலிக்க நேரமில்லை படம் இளைஞர்களை மிகவும் கவர்ந்த படம். மிகவும் புதுமையான இசையை அக்காலத்திலேயே கொடுத்திருந்தார் எம்,எஸ்,வி அவர்கள். அதில் பி.சுசீலா அவர்கள் பாடிய "
நெஞ்சததை அள்ளி கொஞ்சம் தா தா தா", "
அனுபவம் புதுமை", "
நாளாம் நாளாம் திருநாளாம்", "
என்ன பார்வை உந்தன் பார்வை" போன்ற பாடல்கள் காலத்தையும் கடந்து வெற்றி பெற்ற பாடல்கள்.
என்ன பார்வை உந்தன் பார்வை பாடல் ஜேசுதாசுக்கு ஒரு நல்ல திருப்பததை அளித்த பாடல். ஒரு முறை பி.பி.எஸ் அவர்கள் பேசும் போது "
நாளாம் நாளாம் திருநாளாம்" பாடலைப்போல் இன்னொரு முறை எம்.எஸ்.வியால் கூட ஒரு பாடலை உருவாக்க முடியாது என்று பிரமித்தார்.
நெஞ்சத்ததை அள்ளி கொஞ்சம் தா தா " பாடலை ஒரே மைக்கில் நான்கு பாடகர்களும் பாடியதாக அவர்களே கூறி இருக்கிறார்கள். ஸ்ரீதர் புதுமை இயக்குனர் என தன்னை மீண்டும் நிரூபித்த படம் இது.
அதை தொடர்ந்து எம்.எஸ்.வி தயாரிப்பில் ஸ்ரீதருக்கு சறுக்கலாக அமைந்த படம் "கலைக்கோயில்". அருமையான பாடல்கள் இடம் பெற்றும் படம் படு தோல்வி. அந்த படததில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய
தங்கரதம் வந்தது வீதியிலே" பாடல் இப்போதும் இசை போட்டிகளில் பாடப்படுகிறது. "
தேவியர் இருவர் முருகனுக்கு" என்ற பாடல் பி.சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ். அருமையான பாடல்!. "
நான் உன்னை சேர்ந்த செல்வம்" பாடல் இனிமையான டூயட்.
புதுமுகங்களை வைத்து ஸ்ரீதர் எடுத்த இன்னொரு படம் "வெண்ணிற ஆடை".. ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி என பலரும் இந்த படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர்கள் தான். இப்படத்தில் பி.சுசீலா பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட். ஜெயலலிதாவுக்காக "
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்", "
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல ", "
என்ன என்ன வாரத்தைகளோ", "
நீரோடும் கண்கள் இங்கே" என எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். வெண்ணிற ஆடை நிர்மலாவிற்க்காகவும் "
ஒருவன் காதலன்" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார்.
அதை தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை சாவித்திரியை கதாநாயகியாக்கி தெலுங்கில் இயக்கினார் ஸ்ரீதர்.
annadi neevena (சொன்னது நீதானா),
allaru muddu kade (முத்தான முத்தல்லவோ) போல ஹேழில் ஒலித்த பாடல்கள் தெலுங்கிலும் அதே டியூனில் ஒலித்தன. மற்ற பாடல்கள் தெலுங்கிற்காக மாற்றப்பட்டன.
1966 இல் கொடிமலர் என்ற படத்தை ஸ்ரீதர் இயக்கினார். ஊமைப்பெண்ணின் மன நிலையை சொல்லும் பாடலாக "
மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை " என்ற பாடல் பிரமாதமாக அமைந்தது. "
சிட்டாக துள்ளி துள்ளி வா" என்ற ஒரு துள்ளல் பாடலும் பிரபலம் ஆயிற்று.
1967 இல் சிவாஜி நடிப்பில் நெஞ்சிருக்கும் வரை படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இதில் யாருக்கும் மேக்கப் கிடையாது என்ற புதுமையை புகுத்தினார் ஸ்ரீதர்..இப்படத்தில் எல்லா பாடல்களும் முத்தான பாடல்களாய் அமைந்தன. "
முத்துக்களோ கண்கள்", "
எங்கே நீயோ நானும் அங்கே", "
கண்ணன் வரும் நேரமிது" போன்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் தேனாய் இனித்தன.
அதே வருடம் மீண்டும் சிவாஜி, கே,ஆர்.விஜயா ஜோடியின் நடிப்பில் வெளியான "ஊட்டி வரை உறவு " இன்னொரு மியூசிக்கல் ஹிட். இப்படததில் இடம் பெற்ற "
தேடினேன் வந்தது" பாடலை இன்னொரு பாடகியை பாட வைக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினாராம். ஆனால் எம்.எஸ்.வி மீண்டும் தன பாடலை காப்பாற்றிக்கொள்ள பி.சுசீலாவையே தேர்ந்தெடுத்தார். இப்படததில் இடம் பெற்ற "
பூமாலையில் ஓர் மல்லிகை", "
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?", "
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி" போன்ற டூயட்டுகள் மிகவும் பிரபலம் ஆகின.
நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவாஜியை வைத்து சிவந்த மன்ன என்ற படத்தை மிக பெரிய பொருட்செலவில் இயக்கினார் ஸ்ரீதர். அப்படம் போதிய வெற்றி பெறாததால் மிக சிரமத்துக்கு உள்ளானார் ஸ்ரீதர். ஆனாலும் அந்த படத்துடன் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்தன. "
சொல்லவோ சுகமான கதை சொல்லவோ", "
ஒரு நாளிலே உறவானதே ". "
ஒரு ராஜா ராணியிடம்" போன்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் உயிர் பெற்றன. மிக ரிச்சான இசை கோர்ப்பை கொடுத்திருந்தார் எம்.எஸ்.வி அவர்கள்.
சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய ஸ்ரீதர் எம்.ஜி.ஆர் அவர்களை இயக்கவே இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவருக்கு கை கொடுக்க முன்வந்தார். அப்படி அவர்கள் இணைந்து கொடுத்த கமர்ஷியல் படமான உரிமைக்குரல் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அவரை உயர்த்தியது. அப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் "
கல்யாண வளை ஓசை கொண்டு", "
விழியே கதை எழுது" போன்ற பாடல்கள் இன்றளவும் ஹிட் பாடல்களே.
மீண்டும் சிவாஜிவை வைத்து "வைர நெஞ்சம்" படைத்தை இயக்கினார் ஸ்ரீதர். அப்படத்தில் "
செந்தமிழ் பாடும் சந்தன காற்று" என்ற ஒரே பாடலை மட்டுமே பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். இந்த படம் ஹீரோ - 76 என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இதிலும் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார்.
1977 இல் "seetha geetha dadithe" என்ற தெலுங்கு படத்தை இயக்கினார் ஸ்ரீதர். அவர் கே.வி.மஹாதேவனுடன் இணைந்து பணியாற்றிய ஒரே படம் அது தான். அதில் நான்கு பாடல்களை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள்.
இதற்குப்பின் ஸ்ரீதர் படங்களில் பி.சுசீலா பாடுவது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நாடோடி மன்னன் படத்துக்கு பின் எம்.ஜி.ஆர் படங்களில் பி.சுசீலா பாடாத படங்கள் இல்லை. ஆனால் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் படம் பி.சுசீலாவின் குரல் இன்றி வெளிவந்தது. "ஓ மஞ்சு" படத்தில் இரு பாடல்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது தெலுங்கு பதிப்பில் "
இலாகே இலாகே சராகமாடிதே", "சௌந்தர்யமே வருக வருக" படததில் "
இரவில் இரண்டு பறவைகள்", "நினைவெல்லாம் நித்யா படததில் "
கன்னிப்பொண்ணு கைமேலே ". அதன் தெலுங்கு டப்பிங்கில் "சூஸாவே அந்தால மைனா", "குந்தலக்கடி" போன்ற பாடல்களையும் , நானும் ஒரு தொழிலாளி படத்தில் "ஏஞ்செல் ஆடும் ஏஞ்சல் " என்ற பாடலையும் பாடினார்.
மொத்தமாக பார்க்கையில் பெரும்பாலான பாடல்கள் சகாப்தம் படைத்த பாடல்கள். தமிழ் திரை உலகால் மறக்க முடியாத பாடல்கள். இசை ஆகட்டும், பாடல் வரிகள் ஆகட்டும், பாடிய குரல் ஆகட்டும் எல்லாமே முதல் தரமாகவே இருந்திருக்கிறது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவை தமிழர்களால் நேசிக்கப்படும். ரசிக்கப்படும்.
List of songs. ( few movies in earlier days of sridhar are as a story witter and dialogue writer)
No | year | Language | Movie | Song | Music |
1 | 1956 | Tamil | amaradeepam | then unnum vandu | T. Chalapathi rao |
2 | 1956 | Tamil | amaradeepam | then unnum -bit | T. Chalapathi rao |
3 | 1956 | Tamil | madharkula manikkam | kaadhalin jyothiytidhu | S. Rajeshwara rao |
4 | 1956 | Tamil | madharkula manikkam | oho anadhaiye | S. Rajeshwara rao |
5 | 1956 | Tamil | madharkula manikkam | isai arase kalanithiye | S. Rajeshwara rao |
6 | 1957 | Tamil | enga veetu mahalakshmi | pattanam than pOgalaamadi | Master Venu |
7 | 1957 | Tamil | enga veetu mahalakshmi | aadipaadi vela senja | Master Venu |
8 | 1957 | Tamil | enga veetu mahalakshmi | kaathadi kaathadi | Master Venu |
9 | 1957 | Tamil | enga veetu mahalakshmi | palakalam vedhanai | Master Venu |
10 | 1957 | Tamil | enga veetu mahalakshmi | polladha payale | Master Venu |
11 | 1957 | Tamil | yaar paiyan | thaayum yaaro thanthai | T. Chalapathi rao |
12 | 1958 | Tamil | uththamaputhiran | anbE amuthE arum kaniye | G. Ramanathan |
13 | 1958 | Tamil | uththamaputhiran | mannulagellam ponnulagaga | G. Ramanathan |
14 | 1958 | Tamil | uththamaputhiran | mullai malar mele | G. Ramanathan |
15 | 1958 | Tamil | uththamaputhiran | unnazhagai kanniyargal | G. Ramanathan |
16 | 1959 | Tamil | mannan magal | paasamellam kanavo | B. Gopalam |
17 | 1959 | Tamil | mannan magal | un mel maiyalaginen | B. Gopalam |
18 | 1959 | Tamil | mannan magal | vaango vanthu paarungo | B. Gopalam |
19 | 1959 | Tamil | mannan magal | unnai kangal theduthe | B. Gopalam |
20 | 1959 | Tamil | mannan magal | kannodu kann pesi | B. Gopalam |
21 | 1959 | Tamil | manjal magimai | anbinal entrum ontrai vaazhanum | Master Venu |
22 | 1959 | Tamil | manjal magimai | aagaya veedhiyil azhagaana | Master Venu |
23 | 1959 | Tamil | manjal magimai | aagaya veedhiyil-ver2 | Master Venu |
24 | 1959 | Tamil | manjal magimai | ithu enna aananthamo | Master Venu |
25 | 1959 | Tamil | manjal magimai | kodai marainthal inbam varum | Master Venu |
26 | 1959 | Tamil | manjal magimai | maratha sogam thaano | Master Venu |
27 | 1959 | Tamil | manjal magimai | undu enbeero illai poi enbeero | Master Venu |
28 | 1959 | Tamil | kalyaana parisu | aasayinaale manam anjuthu | A.M. Raja |
29 | 1959 | Tamil | kalyaana parisu | akkavukku valaikaapu | A.M. Raja |
30 | 1959 | Tamil | kalyaana parisu | kaadhalile tholviyuttal kanni orut | A.M. Raja |
31 | 1959 | Tamil | kalyaana parisu | mangayar mugathile konji | A.M. Raja |
32 | 1959 | Tamil | kalyaana parisu | unnai kandu naanada ennai kandu | A.M. Raja |
33 | 1959 | Tamil | kalyaana parisu | vaadikai maranthathum eno | A.M. Raja |
34 | 1960 | Telugu | pelli kanuka | Ade Paade pasivaada | A.M. Raja |
35 | 1960 | Telugu | pelli kanuka | Akkaiaku seemantham | A.M. Raja |
36 | 1960 | Telugu | pelli kanuka | Theerenuga | A.M. Raja |
37 | 1960 | Telugu | pelli kanuka | kannulatho palakarinchu | A.M. Raja |
38 | 1960 | Telugu | pelli kanuka | vaduka marachedhavela | A.M. Raja |
39 | 1960 | Tamil | meenda sorgam | Kalaye en Vaazhkayin thisai | T. Chalapathi rao |
40 | 1960 | Tamil | meenda sorgam | Kalaye en Vaazhkayin thisai (solo) | T. Chalapathi rao |
41 | 1960 | Tamil | meenda sorgam | mana naatiya medayil aadinEn | T. Chalapathi rao |
42 | 1960 | Tamil | meenda sorgam | Thuyiladha penn ontru kanden | T. Chalapathi rao |
43 | 1960 | Tamil | vidivelli | ennalum vaazhvile (happy) | A.M. Raja |
44 | 1960 | Tamil | vidivelli | ennalum vaazhvile (sad) | A.M. Raja |
45 | 1960 | Tamil | vidivelli | idai kaiyirandil aadum | A.M. Raja |
46 | 1960 | Tamil | vidivelli | koduthup paar paar unmai | A.M. Raja |
47 | 1961 | Tamil | then nilavu | Chinna chinna kannile | A.M. Raja |
48 | 1961 | Tamil | then nilavu | Malare Malare theriyadha | A.M. Raja |
49 | 1961 | Tamil | then nilavu | Nilavum malarum paaduthu | A.M. Raja |
50 | 1961 | Tamil | punar jenmam | entrum thunbamillai ini sogamilla | T. chalapathi rao |
51 | 1961 | Tamil | punar jenmam | kannadi pathirathil(inba kaviyam) | T. chalapathi rao |
| | | | | |
53 | 1961 | Tamil | punar jenmam | ullangal ontragi thullum pothile | T. chalapathi rao |
54 | 1961 | Tamil | punar jenmam | urundodum naalilkarainthodum | T. chalapathi rao |
55 | 1962 | Tamil | nenjil or aalayam | enna ninaidhu ennai | M.S. Viswanathan, T |
56 | 1962 | Tamil | nenjil or aalayam | muthana muthallavo | M.S. Viswanathan, T |
57 | 1962 | Tamil | nenjil or aalayam | muthana muthallavo (ver-2) | M.S. Viswanathan, T |
58 | 1962 | Tamil | nenjil or aalayam | sonnadhu nee dhaana | M.S. Viswanathan, T |
59 | 1962 | Tamil | nenjil or aalayam | thulli varum maankutti | M.S. Viswanathan, T |
60 | 1963 | Tamil | nenjam marappathillai | munthaanai panthaada | M.S. Viswanathan, T |
61 | 1963 | Tamil | nenjam marappathillai | nanjam maRappadhillai | M.S. Viswanathan, T |
62 | 1963 | Tamil | nenjam marappathillai | nenjam marappadhillai -ver2 | M.S. Viswanathan, T |
63 | 1963 | Tamil | nenjam marappathillai | thEnadi mEnadi maanadi nEyadi | M.S. Viswanathan, T |
64 | 1963 | Telugu | constable kuthuru | andham kosam kannulu | Govardanam |
65 | 1963 | Telugu | constable kuthuru | vagala cupululela veciti | Govardanam |
66 | 1963 | Telugu | constable kuthuru | poovuvale -movie version | Govardanam |
67 | 1963 | Telugu | constable kuthuru | chigurakula ooyalalo | Govardanam |
68 | 1963 | Telugu | constable kuthuru | chigurakula ooyalalo -sad | Govardanam |
69 | 1963 | Telugu | constable kuthuru | Poovu vale vira booya vale | Govardanam |
70 | 1964 | Tamil | kalai koyil | naan unnai serndha selavm | M.S. Viswanathan, T |
71 | 1964 | Tamil | kalai koyil | thangaratham vandhadhu | M.S. Viswanathan, T |
72 | 1964 | Tamil | kalai koyil | Deviyar iruvar muruganukku | M.S. Viswanathan, T |
73 | 1964 | Tamil | kaadhalikka neramillai | enna paarvai undan paarvai | M.S. Viswanathan, T |
74 | 1964 | Tamil | kaadhalikka neramillai | naaLaam naaLaam thirunaaLaam | M.S. Viswanathan, T |
75 | 1964 | Tamil | kaadhalikka neramillai | nenjathai alli konjam thaa thaa | M.S. Viswanathan, T |
76 | 1964 | Tamil | kaadhalikka neramillai | Anubhavam pudhumai | M.S. Viswanathan, T |
77 | 1965 | Tamil | vennira adai | Ammamma kAtru vanthu Adai | M.S. Viswanathan, T |
78 | 1965 | Tamil | vennira adai | enna enna vaarthaigalo | M.S. Viswanathan, T |
79 | 1965 | Tamil | vennira adai | kannan ennum mannan pErai | M.S. Viswanathan, T |
80 | 1965 | Tamil | vennira adai | neeraadum kangal inge | M.S. Viswanathan, T |
81 | 1965 | Tamil | vennira adai | oruvan kaadhalan | M.S. Viswanathan, T |
82 | 1965 | Telugu | maarani manasulu | aatala paatala | pamarthi |
83 | 1965 | Telugu | maarani manasulu | hrudayam nini | pamarthi |
84 | 1965 | Telugu | maarani manasulu | muthyala paanditlo | pamarthi |
85 | 1965 | Telugu | maarani manasulu | hridayam | pamarthi |
86 | 1966 | Telugu | manase mandiram | Annadhi nee vena | M.S. Viswanathan |
87 | 1966 | Telugu | manase mandiram | allaaru muddu kade | M.S. Viswanathan |
88 | 1966 | Telugu | manase mandiram | ninne | M.S. Viswanathan |
89 | 1966 | Telugu | manase mandiram | yemanukoni | M.S. Viswanathan |
90 | 1966 | Telugu | manase mandiram | allaaru muddu kade-sad | M.S. Viswanathan |
91 | 1966 | Telugu | manase mandiram | Annemu punnemun (poem) | M.S. Viswanathan |
92 | 1966 | Tamil | kodi malar | chittaaga thuLLi thuLLi vaa | M.S. Viswanathan |
93 | 1966 | Tamil | kodi malar | kannanukku Enindha sirippu | M.S. Viswanathan |
94 | 1966 | Tamil | kodi malar | malarE nee solla oru mozhiyum | M.S. Viswanathan |
95 | 1966 | Tamil | kodi malar | kannaadi mEniyadi thaNNeeril | M.S. Viswanathan |
96 | 1967 | Tamil | nenjirukkum varai | Enge nEyo naanum ange unnodu | M.S. Viswanathan |
97 | 1967 | Tamil | nenjirukkum varai | kannan varum neramidhu | M.S. Viswanathan |
98 | 1967 | Tamil | nenjirukkum varai | muthukkalao kangal | M.S. Viswanathan |
99 | 1967 | Tamil | nenjirukkum varai | muthukkalo kangal_movie_ver | M.S. Siswanathan |
100 | 1967 | Tamil | nenjirukkum varai | nenje neeyum | M.S. Viswanathan |
101 | 1967 | Tamil | ooty varai uravu | angE maalai mayakkam | M.S. Viswanathan |
102 | 1967 | Tamil | ooty varai uravu | happy intru muthal happy | M.S. Viswanathan |
103 | 1967 | Tamil | ooty varai uravu | poo maalayil or malligai | M.S. Viswanathan |
104 | 1967 | Tamil | ooty varai uravu | thEdinEn vanthathu | M.S. Viswanathan |
105 | 1969 | Tamil | sivantha mann | Oru naalile ennavam | M.S. Viswanathan |
106 | 1969 | Tamil | sivantha mann | Oru Raja Raniyidam | M.S. Viswanathan |
107 | 1969 | Tamil | sivantha mann | sollavO sughamaana kadhai | M.S. Viswanathan |
108 | 1971 | Tamil | utharavinti ulle va | kaadhal kaadhal entru | M.S. Viswanathan |
109 | 1971 | Tamil | utharavinti ulle va | unnaith thoduvathu | M.S. Viswanathan |
110 | 1971 | Tamil | utharavinti ulle va | utharavintri ulle vaa | M.S. Viswanathan |
111 | 1971 | Tamil | utharavintri ulle va | Madhamo aavanai Mangayo | M.S. Viswanathan |
112 | 1971 | Tamil | avalukkentor manam | malar edhu en kangal than entru | M.S. Viswanathan |
113 | 1971 | Tamil | avalukkentor manam | mangayaril maharani (movie versi | M.S. Viswanathan |
114 | 1971 | Tamil | avalukkentor manam | mangayaril maharani maankani | M.S. Viswanathan |
115 | 1974 | Tamil | urimaik kural | kalyaaNa vaLaiyOsai | M.S. Viswanathan |
116 | 1974 | Tamil | urimaik kural | vizhiye kadhai ezhthu | M.S. Viswanathan |
117 | 1975 | Tamil | vaira nenjam | senthamizh paadumchandana | M.S. Viswanathan |
118 | 1975 | Telugu | lakshmi nirdhoshi | roju roju | M.S. Viswanathan |
119 | 1976 | Tamil | oh manju | intha vilaiyaatu | M.S. Viswanathan |
120 | 1976 | Tamil | oh manju | Ulagam oru kavidhai | M.S. Viswanathan |
121 | 1977 | Telugu | seetha geetha dadithe | challani vennela | K.V. Mahadevan |
122 | 1977 | Telugu | seetha geetha dadithe | kanna thallalu | K.V. Mahadevan |
123 | 1977 | Telugu | seetha geetha dadithe | yenduku nakura manasichhavu | K.V. Mahadevan |
124 | 1977 | Telugu | seetha geetha dadithe | naa vadilo neevu | K.V. Mahadevan |
125 | 1978 | Telugu | vayasu pilichindhi | Ellage ellage saragamadithe | Ilayaraja |
126 | 1980 | Telugu | hare krishna hallo radha | valappu guvala | Vijaya Bhaskar |
127 | 1980 | Tamil | soundaryame varuga varuga | iravil irandu paravaigal | vijaya bhaskar |
128 | 1982 | Tamil | ninaivellam nithya | kanni ponnu kaimele | Ilayaraja |
129 | 1981 | Telugu | Prema sangamam | Choosave andalamaina | Ilayaraja |
130 | 1986 | Tamil | naanum oru thozhilali | Angel aadum angel | Ilayaraja |
131 | 1986 | Telugu | sooryodayam | Angel aade angel | Ilayaraja |
132 | 1986 | Telugu | sooryodayam | vettagalla chinnodu | Ilayaraja | | |
133 | 1986 | Kannada | sooryodaya | Haado gombe | Ilayaraja | | |
134 | 1976 | Telugu | Hero76 (vairanenjam dub) | Kartheeka masamadi | M.S. Viswanthan | | |
135 | 1976 | Telugu | Hero 76 (vairanenjam dub) | Rahamu paade | M.S. viswanathan | | |