பின்பற்றுபவர்கள்

புதன், 27 நவம்பர், 2019

பி.சுசீலா பாடிய மஹாகவி பாரதியார் பாடல்கள்:


( எட்டையபுரத்தில் பாரதியார் நினைவு இல்லத்தில் பி.சுசீலா அவர்கள்.)
       
       இந்திய சுதந்திர எழுச்சிக்காக  பாரதியாரின் கவிதைகள் பெருமளவில் உதவின. ஒரு சுதந்திர போராட்ட வீரராக அவர் பங்கு மிகவும் பெரிது. அதை தவிரவும் குழந்தைகள் பாடல்கள், காதல் பாடல்கள், சமூக சிந்தனை மிகுந்த பாடல்கள், பக்தி பாடல்கள் என அவரது பங்களிப்பு தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்பட தக்கதாகவே இருந்து வருகிறது .

அவர் மறைவுக்கு பின் இந்தியாவை பற்றிய அவரது கனவுகளும் அவர் கவிதைகளும் மிகவும் போற்றப்பட்டன. தேசீய ஒருமைப்பட்டாளராகவும், சமூக சிந்தனையாளராகவும் அவர் இன்றும் போற்றப்படுகிறார். 1921-லேயே அவர் மறைந்து விட்டாலும் சுதந்திர போராட்டததுக்கு ஆதரவாக வந்த திரைப்படங்களில் அவரது பாடல்கள் நிறைய இடம் பெற்றன.

மஹாகவி பாரதியார் எழுதி பி.சுசீலா அவர்கள் குரலில் திரைப்படங்களிலும் தனி தொகுப்புகளிலும் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு இது.

தேச பக்தி பாடல்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே :
இந்திய சுதந்திரம் அடைந்த அன்று தமிழ் வானொலியில் முதலில் ஒலித்த பாடல் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே". அப்போது அதை பாடியவர் டீ.கே.பட்டம்மாள். அதே பாடலை "ஏழாவது மனிதன்" திரைப்படத்தில் இசை அமைப்பாளர் எல்.வைத்தியநாதன் அவர்கள் பி.சுசீலாவின் குரலில் மீண்டும் ஒலிக்க வைத்தார் ..




தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பாடல்கள்:

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் :
பாரதியாரின் மிக பிரபலமான இந்த வரிகளை "ஒரு மாணவி என் காதலி " என்ற திரைப்பததில் பயன்படுத்தி இருந்தார்கள். கதாநாயகி ஒரு பாரதியார் கவிதையின் ரசிகை ஏன்பதால் ஒரு மேடையில் இந்த பாடலை பாடுவது காட்சி அமைப்பு இருக்கும். எம்.எஸ்.வி என்ற மாமேதையின் இசை மற்றும் பி.சுசீலாவின் குரல்கள் இந்த பாடலின் வரிகளை ரசித்து கேட்க வைக்கும். "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து" என்று பாடிய பாரதி "தமிழ் போல்  இனிதானது எங்கும் காணோம்" என்று தமிழுக்கே மகுடத்தை சூட்டி பெருமைப்படுத்தி இருக்கிறார்.


செந்தமிழ் நாடெனும் போதினிலே:
ஏழாவது மனிதன் திரைப்படத்தில் எல்.வைத்தியநாதன் பாரதியாரின் பாடல்களை படம் முழுதும் உபயோகப்படுத்தி இருந்தார். பி.சுசீலாவின் குரலில் ஒலித்த இந்த பாடல் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கர்வம் சேர்க்கும் வகையில் அமைந்த பாடல்.

சமூக பாடல்கள் :

கும்மியடி பெண்ணே கும்மியடி:
மூட பழக்க வழக்கங்களை கேலி செய்யும் பாடலாகவும் பெண்ணுரிமை பாடலாகவும் இந்த பாடல் அமைந்தது."பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற பாரதியாரின் கனவு இந்திரா காந்தி போன்ற பெண்களால் நிறைவேறின என்றே சொல்லலாம்..

நல்ல காலம் வருகுது :
குறி சொல்லும் பாடல்கள் மூலமாக பல சமூக  கருத்துக்கள் சமூகததை சென்று அடைத்தது, அந்த வகையில் ஏழை சமூகததை சுரண்டும் சிலருக்கு அறிவுரை சொல்லும் விதமாக அமைந்த பாடல். புதையல் படத்தில் இந்த பாடல் டி .எம்.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.
 
ஓடி விளையாடு பாப்பா: நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா:

பள்ளிக்கூடங்களில் பாட புத்தக்தில் :படித்த ஞாபகம் எல்லோருக்கும் இருக்கும். இதை குழந்தைகள்  பாடல்கள் என்ற  தனி தொகுப்பில் பி.சுசீலா பாடி இருக்கிறார்.


வெள்ளை நிறத்தொரு  பூனை எங்கள் வீட்டில் இருப்பது கண்டீர் :
:
இன பேதங்கள் குழந்தைகள் மனதிலேயே களையப்பட வேண்டும் என்ற பாரதியாரின் அறிவே இந்த பாடலின் கருத்து. பி.சுசீலாவின் குரலில் கேட்க வேண்டிய பாடல்.

குழந்தைகள் பாடல்கள்:
குழந்தைகள் தாலாட்டு பாடல்:
சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா :
மலர்களே  மலருங்கள் என்ற திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையில் பி.சுசீலா பாடி வெளிவந்த அருமையான  பாரதியார் பாடல் இது. பி.சுசீலாவின் குரல் கற்கண்டாய் இனிக்கும்.
:

காதல் பாடல்கள்:
காற்று வெளியிடை  கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன் ..
   கப்பலோட்டிய  தமிழன் திரைப்படத்தில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது. பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் காதல் ரசம் ததும்பிய பாடல்.

நித்திரையில் வந்து நெஞ்சில் குடிகொண்ட உத்தமன் யாரோடி :

இந்த பாடலின் முதல் இரு வரிகளை மட்டும்  ராமு திரைப்படத்தில் ஒரு அரிய சூழ்நிலையில் உபயோகப்படுத்தி இருந்தார்கள். மிகவும் பிரபலமான நிலவே என்னிடம் நெருங்காதே பாடலுக்கு முன் தூக்கம் இழந்து தவிக்கும் கன்னிப்பெண் பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்தது. பி.சுசீலாவின் குரலில் தேனாய் இனிக்கும் இந்த பாடல்.


சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா:
ராமு படத்தில் கதாநாயகி குளிக்கும் பொது முணுமுணுத்துக்கொண்டே பாடுவது போன்ற சூழ்நிலையில் இதன் காட்சி அமைந்தது.

சின்ன குழந்தைகள் போல் விளையாடி

திருவே நினை காதல் கொண்டேன் 


காதல் தோல்வி பாடல்:

கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் முகம் முழுதில்லை:
ஆட வந்த தெய்வம் படத்துக்காக கேவி.மஹாதேவன்  இசையில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் கர்நாடக இசை கச்சேரிகளில் பாரதியாரின் "ஆசை முகம் மறந்து போச்சே" என்ற பாடல் இடம் பெறுவதுண்டு. பலர் இப்பாடலை பாடி இருந்தாலும் பி.சுசீலாவின் குரலில் இருக்கும் அந்த ஏக்கம் இந்த பாடலை மிகவும் ரசிக்க வைக்கும்.

பக்தி பாடல்கள் :

 மலரின் மேவு திருவே
:

 நின்னை சில  வரங்கள் கேட்பேன்

( கைதியின் காதலி திரைப்படத்தில் இடம் பெற்ற "நின்னை சில வரங்கள் " பாடல்  )

வெள்ளை  தாமரை பூவில் :


 காக்கை சிறகினிலே நந்தலாலா


 யாதுமாகி நின்றாய் காளி


List of Songs:
YearMovie / AlbumSongMusic
1988deiveega vazhibaadukaakai chiraginileL.krishnan
1988deiveega vazhibaadumalarin mevu thiruveL.krishnan
1988deiveega vazhibaaduNinnai sila varangalL.krishnan
1988deiveega vazhibaaduVellai thaamari poovilL.krishnan
1982ezhavadhu manidhanaaduvome pallu paaduvomeL. Vaidyanathan
1982ezhavadhu manidhansenthamizh naadenum L. Vaidyanathan
1987kaalam maaruthuYaamarintha mozhigalileM.S. Viswanathan
1963kaidhiyin kadhaliNinnai sila varangal keatenK.V. Mahadevan
1961kappalottiya thamizhanchinna kuzhanthaigalG. Ramanathan
1961kappalottiya thamizhankaatru veliyidai kannammaG. Ramanathan
1983kottu murasethiruve ninai kaadhalVeeramani
2006Kuzhanthai Paadalgalodi vilayadu paapa
2006Kuzhanthai Paadalgalvellai nirathoru
1980malargale malarungalsuttum vizhichudarGangai Amaran
1959odi vilayadu papakummiyadiVijaya krishnamurthy
1987sri kaalikambal isai malargalyaadhumaagi nintraiL.krishnan
1960aada vantha deivamkannil theriyuthoru thotramK.V. Mahadevan
1966RamuNithiraiyil vanthuM.S. Viswanathan
1966Ramusuttum vizhichudarM.S. Viswanathan
1957pudhayalnalla kaalam varuguthuM.S. Viswanathan

1 கருத்து:

  1. அருமையான பதிவு சார்...இசைப்பேரரசியின் குரலில் பாரதியின் வரிகள் ஒலிப்பது பாடலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.. அதிகம் கேட்டிராத பாடல்களின் அரிய தொகுப்பு..🙏🙏🙏👌👌👌

    பதிலளிநீக்கு