பின்பற்றுபவர்கள்

சனி, 2 நவம்பர், 2019

இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் படங்களில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.




புதுமை இயக்குனர் என தமிழ் திரை உலகம் கொண்டாடிய இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் 1933 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் பிறந்தவர். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழி படங்களில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து மிக பிரபலமாக இருந்தார்.  பிற்காலத்தில் யதார்த்த சினிமாவால்  ஜெயித்த பல பிரபல இயக்குனர்களுக்கும் இவரே முன்னோடி. இவர் கதாசிரியராக, வசனகர்த்தவாக பணிபுரிந்து பின்னர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். 1959இல் இருந்து 1991 வரை 32 வ ருடங்கள் தொடர்ச்சியாக படங்களை இயக்கி சாதனை படைத்தவர்.ஹிந்தி பட உலகிலும் இவர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் அங்கும்  இவருக்கென ஒரு மார்க்கட் இருந்தது.

ஸ்ரீதருக்கு அபாரமான இசை ரசனை இருந்திருக்கிறது. அதனால் அவர் படங்களில் பாடல்கள் சோடை போனதே இல்லை.

     சமீபத்தில் வலைத்தளங்களை புரட்டிக்கொண்டிருந்த போது  ஸ்ரீதர் சொன்னதாக ஒரு நண்பர் ஒரு தகவலை போஸ்ட் செய்திருந்தார். அதில் அவர் "There could never be another P.Susheela" என  கருதது  தெரிவித்திருந்தார். அவர் படத்தில் இடம் பெற்ற  பல பாடல்களை பி.சுசீலா பாடி இருந்ததால் அதை அவர் உணர்ந்தே சொல்லி இருந்தார் என்றே தோன்றியது.
Proof ..


பி.சுசீலாவுக்கும் ஸ்ரீதருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது . அதனால் பி.சுசீலாவை தவிர்த்து  விட்டு அவர் போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி என இரு படங்களை தயாரித்து இயக்கினார், அப்படங்களில் தோல்வியால் மீண்டும் பி.சுசீலாவையே அடுத்தடுத்த படங்களில் பாட வைத்தார். ஸ்ரீதருக்கும் மற்ற கலைஞர்களுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமாகவே இருந்திருக்கிறது. பத்மினி , சரோஜாதேவி, சிவாஜி என பலருடன் அவருக்கு கருதது வேறுபாடுகள் வந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டு இருக்கிறது.  அப்படியே லதா மங்கேஷ்கருக்கும் ஸ்ரீதருக்கும்  கூட கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. "தில் ஏக் மந்தீர்" என்ற ஹிந்தி படம் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் ரீமேக் ஆகும்.. இதில் இடம் பெற்ற  "முத்தான முத்தல்லவோ" என்ற பாடலின் ஹிந்தி வடிவததை பாட லதா மங்கேஷ்கரை ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ஸ்ரீதர் படப்பிடிப்பு தாமதமாவதாக சொல்லி இசை அமைப்பாளரை நெருக்கினார்..லதா பிசியாக இருந்ததால் "சுமன் கல்யாண்புர்" என்ற பாடகியை வைத்து  அவசரமாக அந்த பாடலை பாட வைத்து விட்டார்கள் அதனால் ஆத்திரம் அடைந்த லதா அந்த இசை அமைப்பாளரின் இசையில் ஏழு வருடங்கள் பாடவில்லை. பின்னர் ஸ்ரீதர் சென்று காம்ரமைஸ் செய்து வைத்ததாக அவரது சுய சரிதையில் எழுதி இருக்கிறார்..இப்படி பல உரசல்கள் அவருக்கு மற்ற கலைஞர்களுடன் இருந்திருக்கிறது.
     


   அறுபதுகளில் பி.சுசீலா கொடிகட்டி பறந்தார். அவர் பாடாத படங்களை  விரல் விட்டு எண்ணி விடலாம். மற்ற எல்லா படங்களிலும் அவர் தவிர்க்க முடியாதவராய் இருந்தார். அதனால் ஸ்ரீதர் எத்தனை முயற்சித்தும் பி.சுசீலாவை அசைக்க முடியவில்லை. போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி என இரு படங்களை பி.சுசீலா இன்றி வெளியிட்டார். அந்த படங்களின் தோல்வியால் மீண்டும் ""காதலிக்க நேரமில்லை" படததில் இருந்து பி.சுசீலாவுக்கே வாய்ப்புகள் வந்தன. போலீஸ்காரன் மகள் படம் தெலுங்கில் "Constable kuturu " என்ற பெயரில் தாயரிக்கப்பட்டது. தமிழில் வெளிவநத பாடல்களின் தெலுங்கு வடிவங்களை பி.சுசீலாவே பாடினார்.
ஸ்ரீதர் இயக்கிய படங்களில் 1975 க்கு பிறகு வந்த படங்களில் பி.சுசீலாவுக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்திருக்கிறது. குறிப்பாக ஹீரோயினுக்கு பாடும் குரலான சுசீலாவின் குரலை இரண்டாம் ஹீரோயின், துணை நடிகைகள் என உபயோகப்படுத்தி  இருப்பார். உதாரணமாக "நானும் ஒரு தொழிலாளி" படத்தில் "ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல்" பாடலை இரண்டாம் கதாநாயகியான பல்லவிக்கும், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற  "கன்னிப்பொண்ணு கைமேல " என்ற பாடலை ஒரு துணை நடிகைக்கும் பயன்படுத்தி இருப்பார். அதிலேயே அவர் மனது என்னவென்று தெரிந்து கொள்ளலாம். எப்போதுமே திரைப்படங்களில் பி.சுசீலாவின் பெயருக்கு பின் தான் மற்ற பாடகிகள் பெயர் இடம் பெறும். அந்த வழக்கத்தை .கூட ஸ்ரீதர் தனது படத்தில் மாற்றினார். சௌந்தர்யமே வருக வருக என்ற படத்தில்  வாணியின் பெயருக்கு பின் பி,சுசீலாவின் பெயர் இடம் பெற  செய்தார். இப்படி தன்னால் எங்கெங்கு முடியுமோ எல்லாம் அங்கு எல்லாம் தன்  வெறுப்பை  காட்டி வந்திருக்கிறார்  ஸ்ரீதர்.

இந்த மனநிலையில் இருந்த ஒருவர் பி.சுசீலாவை பாராட்டி அதுவும் அவரை போல் இன்னொரு பாடகி வரப்போவதில்லை என்னும் அளவுக்கு சொன்னதை மிக பெருமையாகவே பார்க்கிறேன். அங்கே தான் பி.சுசீலாவின் திறமை கவுரவிக்க பட்டிருக்கிறது, பி.சுசீலாவை தவிர்க்க ஸ்ரீதர் எத்தனை முயற்சிததாலும் அவர் படங்களில் அதிகம் பாடிய பாடகி  என்ற பெருமை பி.சுசீலாவுக்கே கிடைத்தது. கிட்டத்தட்ட 135 பாடல்களை பாடி இருக்கிறார்,. எஸ். ஜானகி அவர்கள் 50 முதல் 60 பாடல்கள்  வரை பாடி இருக்கலாம். வாணி ஜெயராம் 40 பாடல்கள் வரை பாடி இருக்கலாம்.

இனி அவர் படங்களில் இடம் பெற்ற  பி.சுசீலாவின் பாடல்களை பார்ப்போம்.

ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய "அமர தீபம்" படத்தில் இடம் பெற்ற  "தேன் உண்ணும் வண்டு " என்ற பாடல் தான் பி.சுசீலா ஸ்ரீதர் படங்களில் பாடிய முதல் பாடல். இப்பாடலும் பி.சுசீலா பாட காரணமான கதை ஓன்று உண்டு. இப்பாடலை முதல் பாட பி.லீலா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாகவும் அவர் தனி மைக் கேட்டதால் அவரை தவிர்த்து  பி.சுசீலாவை இப்பாடலை பாட வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. (proof)

முதன் முதலில் ஸ்ரீதர் இயக்கிய படம் "கல்யாண பரிசு". அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல்களும் ஒரு காரணம். ஏ.எம்.ராஜா தம் துணைவியாரான ஜிக்கி ஒரு பெரிய பாடகியாக இருந்தாலும் கூட பி.சுசீலாவையே கதாநாயகிக்கு பாட வைத்து இருப்பார். பி.சுசீலாவும் அத்தனை அருமையாக பாடி தன்னை நிரூபித்து  இருப்பார். "உன்னை கண்டு நானாட ", "காதலிலே தோல்வியுற்றாள் " என இரு தனிப்பாடல்களும் "வாடிக்கை மறந்தது ஏனோ " " ஆசையினாலே  மனம்", "அக்காவுக்கு வளைகாப்பு" போன்ற பாடல்களை மற்றவர்களுடன் இணைந்தும் பாடி இருப்பார்.

       1960இல் அவர் இயக்கிய மீண்ட சொர்க்கம் படத்தில் "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்", "மன நாட்டிய மேடையில் ஆடினேன்", "துயிலாத பெண் ஓன்று கண்டேன்" போன்ற சிறப்பான பாடல்கள் இடம் பெற்றன.

அதை தொடர்ந்து வெளியான "விடிவெள்ளி" படத்திலும்  "கொடுத்தது பார் பார் உண்மை அன்பை " "இடை கை இரண்டில் ஆடும் ", "எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே" போன்ற அருமையான பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தன. "எந்நாளும் வாழ்விலே" பாடல் சோக பாடலாகவும் ஒலித்தது

1961இல் வெளிவந்த தேன்நிலவு திரைப்படம் ஸ்ரீதரின் வாழ்வில் இன்னொரு மைல்கல். படமும் பாடல்களும் சூப்பர் ஹிட். "மலரே மலரே தெரியாதா", "சின்ன சின்ன கண்ணிலே", "நிலவும் மலரும் பாடுது" என எல்லாமே மனதை கவரும் மெலடிகள் .

 அதே வருடம் வெளிவந்த "புனர் ஜென்மம்" படத்தில் "என்றும் துன்பமில்லை", "இன்ப காவியம் பொய்தானா", "உருண்டோடும் நாளில்", "உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே" போன்ற பாடல்கள் பிரபலம் ஆகின. "உருண்டோடும் நாளில்" பாடலை கதாநாயகி குடிததுக்கொண்டே பாடுவது போல் படமாக்கி இருப்பார்கள். பி.சுசீலாவும் அதே போல் அருமையாக பாடி இருப்பார்கள்.

1962-இல் ஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ் ஆன "நெஞ்சில் ஓர் ஆலயம்" வெளிவந்தது. அதுவரை ஏ.எம்.ராஜா மற்றும் சலபதி ராவுடன் இணைந்து  பணி ஆற்றிய ஸ்ரீதர் முதன் முதலில் எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்தியுடன் இணைந்து பணி ஆற்ற துவங்கினார். படமும் பாடல்களும் தமிழ் திரை உலகம் இன்றளவும் கொண்டாடும் விதமாக அமைந்ததோடல்லாமல் பெரிய வெற்றியையும் பெற்றது. "சொன்னது நீ தானா ", பி.சுசீலாவின் கிரீடத்தில் மற்றுமோர் சிறகு. தவிர "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ", "முத்தான முத்தல்லவோ", "துள்ளி வரும் மான்குட்டி" போன்ற பாடல்கள் எல்லாமே நெஞ்சை அள்ளும் விதம் இனிமையாக அமைந்தன.  நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தெலுங்கில் "மனசே மந்திரம்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

1963 இல் ஸ்ரீதர் "நெஞ்சம் மறப்பதில்லை" திரைப்படததை இயக்கினார். இப்படத்தில் தீம் பாடலான "நெஞ்சம் மறப்பதில்லை" பாடலுக்கு இசை அமைக்க 45 நாட்களுக்கு மேல் எடுததுக்கொண்டாராம் எம்.எஸ்.வி அவர்கள். டியூனை கேட்டு சந்தோஷமான ஸ்ரீதர் அதை வேறொரு பாடகியை பாட வைக்க வேண்டும் என எம்.எஸ்.விக்கு பிரஷர் கொடுத்த்தாராம். எம்.எஸ்.வி அவர்கள் "இந்த பாடலுக்கு உயிர் கொடுக்க பி.சுசீலாவால் மட்டுமே முடியும்" என போராடி பி.சுசீலாவை பாட வைததாராம் . அதை அவர் தனது சுய சரிதையில் "நெ ஞ்சம் மறப்பதில்லை" பாடலின் வெற்றிக்கு 75% பி.சுசீலாவே காரணம் என குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். எத்தனை விசாலமான மனது அவருக்கு !!. அந்த பாடலின் வெற்றிக்கு அவர் பட்ட கஷ்டம் குழுவினரின் உழைப்பு படமாக்கிய விதம் என்று பல இருந்தாலும் ஒரு பாடகிக்கு 75% க்ரெடிட் கொடுப்பதற்கு பெரிய மனது வேண்டும்!!.  பி.சுசீலா அதற்கு தகுதியானவர் என்பது பாடலை கேட்டாலே தெரியும். அதே படததில் , "தேனடி மீனடி நீயடி நானடி" என ஒரு துள்ளலான கிராமிய பாடலும் இடம் பெற்றது. அதே படததில் "முந்தானை பந்தாட" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடி இருப்பார்.. தெலுங்கில் "maarani manasulu " என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

      காதலிக்க நேரமில்லை படம் இளைஞர்களை மிகவும் கவர்ந்த படம். மிகவும் புதுமையான இசையை அக்காலத்திலேயே கொடுத்திருந்தார் எம்,எஸ்,வி அவர்கள். அதில் பி.சுசீலா அவர்கள் பாடிய "நெஞ்சததை  அள்ளி கொஞ்சம் தா தா தா", "அனுபவம் புதுமை", "நாளாம் நாளாம்  திருநாளாம்", "என்ன பார்வை உந்தன் பார்வை" போன்ற பாடல்கள் காலத்தையும்  கடந்து  வெற்றி பெற்ற  பாடல்கள். என்ன பார்வை உந்தன் பார்வை பாடல் ஜேசுதாசுக்கு ஒரு நல்ல திருப்பததை அளித்த பாடல். ஒரு முறை பி.பி.எஸ் அவர்கள் பேசும் போது "நாளாம்  நாளாம் திருநாளாம்" பாடலைப்போல் இன்னொரு முறை எம்.எஸ்.வியால்  கூட  ஒரு பாடலை உருவாக்க முடியாது என்று பிரமித்தார். நெஞ்சத்ததை அள்ளி கொஞ்சம் தா தா " பாடலை ஒரே மைக்கில் நான்கு பாடகர்களும் பாடியதாக அவர்களே கூறி இருக்கிறார்கள். ஸ்ரீதர் புதுமை இயக்குனர் என தன்னை மீண்டும் நிரூபித்த படம் இது.

அதை தொடர்ந்து எம்.எஸ்.வி தயாரிப்பில் ஸ்ரீதருக்கு சறுக்கலாக  அமைந்த படம் "கலைக்கோயில்". அருமையான பாடல்கள் இடம் பெற்றும் படம் படு தோல்வி. அந்த படததில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய தங்கரதம் வந்தது வீதியிலே" பாடல் இப்போதும் இசை போட்டிகளில் பாடப்படுகிறது. "தேவியர் இருவர் முருகனுக்கு" என்ற பாடல் பி.சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ். அருமையான பாடல்!. "நான் உன்னை சேர்ந்த செல்வம்" பாடல் இனிமையான டூயட்.

புதுமுகங்களை வைத்து ஸ்ரீதர் எடுத்த இன்னொரு படம் "வெண்ணிற ஆடை".. ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி என பலரும் இந்த படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர்கள் தான். இப்படத்தில் பி.சுசீலா பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட். ஜெயலலிதாவுக்காக "அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்", "கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல ", "என்ன என்ன வாரத்தைகளோ", "நீரோடும் கண்கள் இங்கே" என எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள். வெண்ணிற ஆடை நிர்மலாவிற்க்காகவும் "ஒருவன் காதலன்" என்ற பாடலை பி.சுசீலா பாடி இருந்தார்.

அதை தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை  சாவித்திரியை கதாநாயகியாக்கி தெலுங்கில் இயக்கினார் ஸ்ரீதர். annadi  neevena  (சொன்னது நீதானா), allaru muddu kade (முத்தான முத்தல்லவோ) போல ஹேழில் ஒலித்த பாடல்கள் தெலுங்கிலும் அதே டியூனில் ஒலித்தன. மற்ற பாடல்கள் தெலுங்கிற்காக மாற்றப்பட்டன.

1966 இல் கொடிமலர் என்ற படத்தை  ஸ்ரீதர் இயக்கினார். ஊமைப்பெண்ணின் மன நிலையை சொல்லும் பாடலாக "மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை " என்ற பாடல் பிரமாதமாக அமைந்தது. "சிட்டாக துள்ளி துள்ளி வா" என்ற ஒரு துள்ளல் பாடலும் பிரபலம் ஆயிற்று.

1967 இல் சிவாஜி நடிப்பில் நெஞ்சிருக்கும் வரை படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இதில் யாருக்கும் மேக்கப் கிடையாது என்ற புதுமையை புகுத்தினார் ஸ்ரீதர்..இப்படத்தில் எல்லா பாடல்களும் முத்தான பாடல்களாய் அமைந்தன. "முத்துக்களோ கண்கள்", " எங்கே நீயோ நானும் அங்கே", "கண்ணன் வரும் நேரமிது" போன்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் தேனாய் இனித்தன.

அதே வருடம் மீண்டும்  சிவாஜி, கே,ஆர்.விஜயா ஜோடியின் நடிப்பில் வெளியான "ஊட்டி வரை உறவு " இன்னொரு மியூசிக்கல் ஹிட். இப்படததில் இடம் பெற்ற  "தேடினேன் வந்தது" பாடலை இன்னொரு பாடகியை பாட வைக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினாராம். ஆனால் எம்.எஸ்.வி மீண்டும் தன பாடலை காப்பாற்றிக்கொள்ள பி.சுசீலாவையே தேர்ந்தெடுத்தார். இப்படததில் இடம் பெற்ற  "பூமாலையில் ஓர் மல்லிகை", "அங்கே மாலை மயக்கம் யாருக்காக?", "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி" போன்ற டூயட்டுகள் மிகவும் பிரபலம் ஆகின.

நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவாஜியை வைத்து சிவந்த மன்ன என்ற படத்தை மிக பெரிய பொருட்செலவில் இயக்கினார் ஸ்ரீதர். அப்படம் போதிய வெற்றி பெறாததால் மிக சிரமத்துக்கு உள்ளானார் ஸ்ரீதர். ஆனாலும் அந்த படத்துடன் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்தன. "சொல்லவோ சுகமான கதை சொல்லவோ", "ஒரு நாளிலே உறவானதே ". "ஒரு ராஜா ராணியிடம்" போன்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் உயிர் பெற்றன. மிக ரிச்சான இசை கோர்ப்பை கொடுத்திருந்தார் எம்.எஸ்.வி அவர்கள்.

அதை தொடர்ந்து மீண்டும் ஒரு ஜாலியான படமாக  "உத்தரவின்றி உள்ளே வா" என்ற திரைப்படததை இயக்கினார் ஸ்ரீதர். "காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ". "உன்னைத்தொடுவது இனியது", "மாதமோ ஆவணி", "உத்தரவின்றி உள்ளே வா போன்ற பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இனிமையாய் ஒலித்தன

1971-இல் "அவளுக்கென்று ஒரு மனம்" என்ற திரைப்படததை இயக்கினார் ஸ்ரீதர். அதில் இடம் பெற்ற  "மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி", "மங்கையரில் மஹராணி " போன்ற பாடல்கள் இனிமையாக அமைந்து பிரபலம் ஆனது.

சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய ஸ்ரீதர் எம்.ஜி.ஆர் அவர்களை இயக்கவே இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் அவருக்கு கை கொடுக்க முன்வந்தார். அப்படி அவர்கள் இணைந்து  கொடுத்த கமர்ஷியல் படமான உரிமைக்குரல் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அவரை உயர்த்தியது. அப்படத்தில் பி.சுசீலாவின் குரலில் "கல்யாண வளை  ஓசை கொண்டு", "விழியே கதை எழுது" போன்ற பாடல்கள் இன்றளவும் ஹிட் பாடல்களே.

மீண்டும் சிவாஜிவை வைத்து "வைர நெஞ்சம்" படைத்தை இயக்கினார் ஸ்ரீதர். அப்படத்தில்  "செந்தமிழ் பாடும் சந்தன காற்று" என்ற ஒரே பாடலை மட்டுமே பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். இந்த படம் ஹீரோ - 76 என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இதிலும் இரு பாடல்களை பி.சுசீலா பாடினார்.

1977 இல் "seetha geetha dadithe" என்ற தெலுங்கு படத்தை இயக்கினார் ஸ்ரீதர். அவர் கே.வி.மஹாதேவனுடன் இணைந்து பணியாற்றிய ஒரே படம் அது தான். அதில் நான்கு பாடல்களை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். 

இதற்குப்பின் ஸ்ரீதர் படங்களில் பி.சுசீலா பாடுவது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நாடோடி மன்னன் படத்துக்கு பின் எம்.ஜி.ஆர் படங்களில் பி.சுசீலா பாடாத படங்கள் இல்லை. ஆனால் ஸ்ரீதர் இயக்கிய மீனவ நண்பன் படம் பி.சுசீலாவின் குரல் இன்றி வெளிவந்தது. "ஓ மஞ்சு" படத்தில் இரு பாடல்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது தெலுங்கு பதிப்பில் "இலாகே இலாகே  சராகமாடிதே", "சௌந்தர்யமே வருக வருக" படததில் "இரவில் இரண்டு பறவைகள்", "நினைவெல்லாம் நித்யா படததில் "கன்னிப்பொண்ணு கைமேலே ". அதன் தெலுங்கு டப்பிங்கில் "சூஸாவே அந்தால மைனா", "குந்தலக்கடி" போன்ற பாடல்களையும் , நானும் ஒரு தொழிலாளி படத்தில் "ஏஞ்செல் ஆடும் ஏஞ்சல் " என்ற பாடலையும் பாடினார். 

மொத்தமாக பார்க்கையில் பெரும்பாலான பாடல்கள் சகாப்தம் படைத்த பாடல்கள். தமிழ் திரை உலகால் மறக்க முடியாத பாடல்கள். இசை ஆகட்டும், பாடல் வரிகள் ஆகட்டும், பாடிய குரல் ஆகட்டும் எல்லாமே முதல் தரமாகவே இருந்திருக்கிறது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவை தமிழர்களால் நேசிக்கப்படும். ரசிக்கப்படும். 



List of songs. ( few movies in earlier days of sridhar are as a story witter and dialogue writer)

NoyearLanguageMovieSongMusic
11956Tamilamaradeepamthen unnum vanduT. Chalapathi rao
21956Tamilamaradeepamthen unnum -bitT. Chalapathi rao
31956Tamilmadharkula manikkamkaadhalin jyothiytidhuS. Rajeshwara rao
41956Tamilmadharkula manikkamoho anadhaiyeS. Rajeshwara rao
51956Tamilmadharkula manikkamisai arase kalanithiyeS. Rajeshwara rao
61957Tamilenga veetu mahalakshmipattanam than pOgalaamadi Master Venu
71957Tamilenga veetu mahalakshmiaadipaadi vela senjaMaster Venu
81957Tamilenga veetu mahalakshmikaathadi kaathadiMaster Venu
91957Tamilenga veetu mahalakshmipalakalam vedhanaiMaster Venu
101957Tamilenga veetu mahalakshmipolladha payaleMaster Venu
111957Tamilyaar paiyanthaayum yaaro thanthai T. Chalapathi rao
121958TamiluththamaputhirananbE amuthE arum kaniyeG. Ramanathan
131958Tamiluththamaputhiranmannulagellam ponnulagagaG. Ramanathan
141958Tamiluththamaputhiranmullai malar meleG. Ramanathan
151958Tamiluththamaputhiranunnazhagai kanniyargal G. Ramanathan
161959Tamilmannan magalpaasamellam kanavoB. Gopalam
171959Tamilmannan magalun mel maiyalaginenB. Gopalam
181959Tamilmannan magalvaango vanthu paarungoB. Gopalam
191959Tamilmannan magalunnai kangal thedutheB. Gopalam
201959Tamilmannan magalkannodu kann pesi B. Gopalam
211959Tamilmanjal magimaianbinal entrum ontrai vaazhanumMaster Venu
221959Tamilmanjal magimaiaagaya veedhiyil azhagaanaMaster Venu
231959Tamilmanjal magimaiaagaya veedhiyil-ver2Master Venu
241959Tamilmanjal magimaiithu enna aananthamoMaster Venu
251959Tamilmanjal magimaikodai marainthal inbam varumMaster Venu
261959Tamilmanjal magimaimaratha sogam thaanoMaster Venu
271959Tamilmanjal magimaiundu enbeero illai poi enbeeroMaster Venu
281959Tamilkalyaana parisuaasayinaale manam anjuthuA.M. Raja
291959Tamilkalyaana parisuakkavukku valaikaapuA.M. Raja
301959Tamilkalyaana parisukaadhalile tholviyuttal kanni orutA.M. Raja
311959Tamilkalyaana parisumangayar mugathile konjiA.M. Raja
321959Tamilkalyaana parisuunnai kandu naanada ennai kanduA.M. Raja
331959Tamilkalyaana parisuvaadikai maranthathum enoA.M. Raja
341960Telugupelli kanukaAde Paade pasivaadaA.M. Raja
351960Telugupelli kanukaAkkaiaku seemanthamA.M. Raja
361960Telugupelli kanukaTheerenugaA.M. Raja
371960Telugupelli kanukakannulatho palakarinchuA.M. Raja
381960Telugupelli kanukavaduka marachedhavelaA.M. Raja
391960Tamilmeenda sorgamKalaye en Vaazhkayin thisaiT. Chalapathi rao
401960Tamilmeenda sorgamKalaye en Vaazhkayin thisai (solo)T. Chalapathi rao
411960Tamilmeenda sorgammana naatiya medayil aadinEnT. Chalapathi rao
421960Tamilmeenda sorgamThuyiladha penn ontru kandenT. Chalapathi rao
431960Tamilvidivelliennalum vaazhvile (happy)A.M. Raja
441960Tamilvidivelliennalum vaazhvile (sad)A.M. Raja
451960Tamilvidivelliidai kaiyirandil aadumA.M. Raja
461960Tamilvidivellikoduthup paar paar unmai A.M. Raja
471961Tamilthen nilavuChinna chinna kannileA.M. Raja
481961Tamilthen nilavuMalare Malare theriyadhaA.M. Raja
491961Tamilthen nilavuNilavum malarum paaduthuA.M. Raja
501961Tamilpunar jenmamentrum thunbamillai ini sogamillaT. chalapathi rao
511961Tamilpunar jenmamkannadi pathirathil(inba kaviyam)T. chalapathi rao

531961Tamilpunar jenmamullangal ontragi thullum pothileT. chalapathi rao
541961Tamilpunar jenmamurundodum naalilkarainthodumT. chalapathi rao
551962Tamilnenjil or aalayamenna ninaidhu ennai M.S. Viswanathan, T
561962Tamilnenjil or aalayammuthana muthallavo M.S. Viswanathan, T
571962Tamilnenjil or aalayammuthana muthallavo (ver-2)M.S. Viswanathan, T
581962Tamilnenjil or aalayamsonnadhu nee dhaanaM.S. Viswanathan, T
591962Tamilnenjil or aalayamthulli varum maankuttiM.S. Viswanathan, T
601963Tamilnenjam marappathillaimunthaanai panthaada M.S. Viswanathan, T
611963Tamilnenjam marappathillainanjam maRappadhillaiM.S. Viswanathan, T
621963Tamilnenjam marappathillainenjam marappadhillai -ver2M.S. Viswanathan, T
631963Tamilnenjam marappathillaithEnadi mEnadi maanadi nEyadiM.S. Viswanathan, T
641963Teluguconstable kuthuruandham kosam kannuluGovardanam
651963Teluguconstable kuthuruvagala cupululela vecitiGovardanam
661963Teluguconstable kuthurupoovuvale -movie versionGovardanam
671963Teluguconstable kuthuruchigurakula ooyalaloGovardanam
681963Teluguconstable kuthuruchigurakula ooyalalo -sadGovardanam
691963Teluguconstable kuthuruPoovu vale vira booya valeGovardanam
701964Tamilkalai koyilnaan unnai serndha selavmM.S. Viswanathan, T
711964Tamilkalai koyilthangaratham vandhadhuM.S. Viswanathan, T
721964Tamilkalai koyilDeviyar iruvar muruganukkuM.S. Viswanathan, T
731964Tamilkaadhalikka neramillaienna paarvai undan paarvaiM.S. Viswanathan, T
741964Tamilkaadhalikka neramillainaaLaam naaLaam thirunaaLaamM.S. Viswanathan, T
751964Tamilkaadhalikka neramillainenjathai alli konjam thaa thaaM.S. Viswanathan, T
761964Tamilkaadhalikka neramillaiAnubhavam pudhumaiM.S. Viswanathan, T
771965Tamilvennira adaiAmmamma kAtru vanthu AdaiM.S. Viswanathan, T
781965Tamilvennira adaienna enna vaarthaigaloM.S. Viswanathan, T
791965Tamilvennira adaikannan ennum mannan pEraiM.S. Viswanathan, T
801965Tamilvennira adaineeraadum kangal inge M.S. Viswanathan, T
811965Tamilvennira adaioruvan kaadhalanM.S. Viswanathan, T
821965Telugumaarani manasulu aatala paatalapamarthi
831965Telugumaarani manasulu hrudayam ninipamarthi
841965Telugumaarani manasulu muthyala paanditlopamarthi
851965Telugumaarani manasulu hridayam pamarthi
861966Telugumanase mandiramAnnadhi nee venaM.S. Viswanathan
871966Telugumanase mandiramallaaru muddu kadeM.S. Viswanathan
881966Telugumanase mandiramninneM.S. Viswanathan
891966Telugumanase mandiramyemanukoniM.S. Viswanathan
901966Telugumanase mandiramallaaru muddu kade-sadM.S. Viswanathan
911966Telugumanase mandiramAnnemu punnemun (poem)M.S. Viswanathan
921966Tamilkodi malarchittaaga thuLLi thuLLi vaaM.S. Viswanathan
931966Tamilkodi malarkannanukku Enindha sirippuM.S. Viswanathan
941966Tamilkodi malarmalarE nee solla oru mozhiyumM.S. Viswanathan
951966Tamilkodi malarkannaadi mEniyadi thaNNeerilM.S. Viswanathan
961967Tamilnenjirukkum varaiEnge nEyo naanum ange unnoduM.S. Viswanathan
971967Tamilnenjirukkum varaikannan varum neramidhu M.S. Viswanathan
981967Tamilnenjirukkum varaimuthukkalao kangal M.S. Viswanathan
991967Tamilnenjirukkum varaimuthukkalo kangal_movie_verM.S. Siswanathan
1001967Tamilnenjirukkum varainenje neeyumM.S. Viswanathan
1011967Tamilooty varai uravuangE maalai mayakkamM.S. Viswanathan
1021967Tamilooty varai uravuhappy intru muthal happyM.S. Viswanathan
1031967Tamilooty varai uravupoo maalayil or malligaiM.S. Viswanathan
1041967Tamilooty varai uravuthEdinEn vanthathuM.S. Viswanathan
1051969Tamilsivantha mannOru naalile ennavamM.S. Viswanathan
1061969Tamilsivantha mannOru Raja RaniyidamM.S. Viswanathan
1071969Tamilsivantha mannsollavO sughamaana kadhai M.S. Viswanathan
1081971Tamilutharavinti ulle vakaadhal kaadhal entru M.S. Viswanathan
1091971Tamilutharavinti ulle vaunnaith thoduvathu M.S. Viswanathan
1101971Tamilutharavinti ulle vautharavintri ulle vaaM.S. Viswanathan
1111971Tamilutharavintri ulle vaMadhamo aavanai MangayoM.S. Viswanathan
1121971Tamilavalukkentor manammalar edhu en kangal than entruM.S. Viswanathan
1131971Tamilavalukkentor manammangayaril maharani (movie versiM.S. Viswanathan
1141971Tamilavalukkentor manammangayaril maharani maankaniM.S. Viswanathan
1151974Tamilurimaik kuralkalyaaNa vaLaiyOsai M.S. Viswanathan
1161974Tamilurimaik kuralvizhiye kadhai ezhthuM.S. Viswanathan
1171975Tamilvaira nenjamsenthamizh paadumchandanaM.S. Viswanathan
1181975Telugulakshmi nirdhoshiroju rojuM.S. Viswanathan
1191976Tamiloh manjuintha vilaiyaatuM.S. Viswanathan
1201976Tamiloh manjuUlagam oru kavidhaiM.S. Viswanathan
1211977Teluguseetha geetha dadithechallani vennelaK.V. Mahadevan
1221977Teluguseetha geetha dadithekanna thallaluK.V. Mahadevan
1231977Teluguseetha geetha daditheyenduku nakura manasichhavuK.V. Mahadevan
1241977Teluguseetha geetha dadithenaa vadilo neevuK.V. Mahadevan
1251978Teluguvayasu pilichindhiEllage ellage saragamaditheIlayaraja
1261980Teluguhare krishna hallo radhavalappu guvala Vijaya Bhaskar
1271980Tamilsoundaryame varuga varugairavil irandu paravaigalvijaya bhaskar
1281982Tamilninaivellam nithyakanni ponnu kaimele Ilayaraja
1291981TeluguPrema sangamamChoosave andalamainaIlayaraja
1301986Tamilnaanum oru thozhilaliAngel aadum angelIlayaraja
1311986TelugusooryodayamAngel aade angelIlayaraja
1321986Telugusooryodayamvettagalla chinnoduIlayaraja
1331986KannadasooryodayaHaado gombeIlayaraja
1341976TeluguHero76  (vairanenjam dub)Kartheeka masamadiM.S. Viswanthan
1351976TeluguHero 76 (vairanenjam dub)Rahamu paadeM.S. viswanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக