பின்பற்றுபவர்கள்

புதன், 26 ஜூலை, 2023

ஒரே பாடல் ஒரே மொழி ஒரே சூழல் வேறு பாடகிகள் பாடிய பாடல்கள்.

  சில படங்களில் ஒரே பாடல் இரு பாடகிகள் பாடி இருப்பது வாடிக்கை. இரண்டும் வெவ்வேறு situations ஆக இருக்கும். உதாரணமாக " தூரி தூரி தும்மக்க தூரி " (தென்றல் சுடும்) பாடலின் ஒரு வெர்ஷன் பி.சுசீலா அம்மாவும் இன்னொன்றை திருமதி எஸ்.ஜானகி அவர்களும் பாடி இருப்பார்கள். மணி ஓசை படத்தில் "வருஷம் மாசம் தேதி பார்த்து", காடு படத்தில் "என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்", வாழ்ந்து காட்டுகிறேன் படத்தில் "காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்" என பல பாடல்களை சொல்லலாம். 

ஆனால் ஒரே பாடலை இரு பாடகிகள் பாடி ஏதோ ஒருவரின்  வெர்ஷன் படத்தில் இருக்கும் நிலைமை சில படங்களில் நடந்திருக்கிறது. அதற்கும் சில காரணங்கள் இருக்கலாம்.

1. "தேசுலாவதே தேன் மலராலே " பாடல் தமிழில் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும். அதை தெலுங்கிலும் பி.சுசீலா தான் முதலில் பாடினார். ஆனால் தயாரிப்பாளருக்கு ஒரு சென்டிமெண்ட் .. அவருக்கு அதற்கு முந்தைய படமான பெரும் வெற்றியை  கொடுத்த "அனார்கலி" படத்தில் "ராஜசேகரா என் மேல்" என்ற பாடல் மிகப்பெரிய ஹிட். அதை பாடிய ஜிக்கி அவர்களுக்கு ஒரு தரமான பாடலை கொடுக்க வேண்டும் என்பதற்காக பி.சுசீலா பாடிய பின் அதை ஜிக்கியை வைத்து "haayi haayiga " என பாட வைத்தார். அதை பி.சுசீலாவிடமும் சொல்லி அவர் ஒப்புதலுடனேயே நடந்திருக்கிறது. பி.சுசீலா வெர்ஷன் ரெக்கார்டில் கூட வரவில்லை.

2. சமீபத்தில் எஸ்.ஜானகி அவர்களின் தெலுங்கு நேர்முகம் ஒன்றில் அவருக்கும் சாவித்ரிக்குமான பிரச்சனை பற்றி சொல்லி இருந்தார். "படி தாண்டா  பத்தினி " என்ற படத்தில் ஒரு அருமையான மெலடியை அவர் பாடி இருந்ததாகவும், சாவித்திரி தலையிட்டு தனக்கு சுசீலா தான் பாட வேண்டும் என்று கூறி அதை சுசீலாவை வைத்து திரும்பவும் பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார்கள் என்றும் சொன்னார். இருவர் பாடிய வெர்ஷனும்  கேட்டதில்லை. அப்படி ஒரு படம் வந்ததா என்றும் தெரியவில்லை. 

3.சின்ன கவுண்டர் படம் தெலுங்கில் சின்ன ராயுடு என்ற பெயரில் ரீமேக்  செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய "முத்துமணி மாலை" பாடலை தெலுங்கிலும் பி.சுசீலாவே பாடினார். ரெக்கார்டிங் முடிந்து ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று விட்டார். சில நாட்கள் கழித்து அதில் ஓரிரு வார்த்தைகள் மாற்றப்பட்டன. பி.சுசீலா உடனடியாக இல்லாத காரணத்தால் அதை சித்ராவை வைத்து பாடி வெளியிட்டார்கள்.

இந்த மாதிரி சில காரணங்களால் ஒரே பாடல் இரு பாடகிகள் குரலில் ரெகார்ட் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் பி.சுசீலாம்மாவும் வேறு பாடகிகளும் பாடிய பாடல்களின் தொகுப்பு இது.

1. chettulekkagalava oh narahari ( செஞ்சுலக்ஷ்மி) இந்த பாடலை கண்டசாலா-ஜிக்கி குரலிலும் பி.பி.எஸ்-சுசீலா குரலிலும் இரண்டு  பாடல்கள் உள்ளது. 

                                                Chettuleka gelava -P.Susheela - PBS


2. ஓமன கையில் ஒலீவில கொம்புமாய் (bharya -malayalam ).. இப்பாடலும் பி.லீலா குரலிலும் பி.சுசீலா குரலிலும் தனிதனி பாடல்களாய் உள்ளது.

                                                        Omana Kiyil oru oleevila - P.Susheela


3. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு : இதுவும் பி.லீலா குரலிலும், பி.சுசீலா குரலிலும் தனித்தனியாய் ஒலிக்கிறது.


Konjum Salangai Oli - P.Leela
                                            Konjum Sathangi oli kettu - P.Susheela

4. கண்ணீரின் மழையத்தும் (Dweepu -malayalam )இப்பாடல் பி.சுசீலாவின் குரலிலும் கல்யாணி மேனன் குரலிலும் தனித்தனியாய் ஒலிக்கிறது.

                                                  Kanneerin Mazhayathum - Kalyani menon
                                            Kanneerin Mazhayathum - P.Susheela




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக