ஆர்.சுதர்சனம் அவர்கள் ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர்.
எல்லாராலும் சுதர்சனம் மாஸ்டர் என மரியாதையாக அழைக்கப்பட்டவர். ஐம்பதுகளில் பெரும்பாலான ஏ.வி.எம் தயாரிப்புகளுக்கு இவர் தான் இசை.
பி.சுசீலா ஏ.வி.எம் நிறுவனத்தில் நான்கு வருடங்கள் பாடகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவரை ஒரு நல்ல பாடகியாக உருவாக்கிய பெருமை ஐம்பதுகளில் இசை அமைத்த எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் இருந்தது. ஆர்.சுதர்சனம் அவர்களும் பல சிறந்த பாடல்களை கொடுத்து பி.சுசீலாவின் திறமையை வெளி உலகுக்கு கொண்டுவர உதவினார்.
1953-ஆம் வருடத்தில் இருந்தே பி.சுசீலா அவர்கள் ஆர்.சுதர்சனம் இசையில் பாடி வந்திருக்கிறார்கள். ஏ.வி.எம்மின் மாபெரும் வெற்றிப்படமான "பெண்" படத்தில் இருந்தே இந்த கூட்டணி வெற்றிப்பாடல்களை அளிக்க ஆரம்பித்து இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் பி.சுசீலா அவர்கள் ஆர்.சுதர்சனம் இசையில் பாடி இருக்கிறார்கள்.
70 களில் குணா சித்திர நாயகியாக தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் பிரமீளா அவர்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் "வாழையடி வாழை" படத்தில் அறிமுகமாகி கே.பாலச்சந்தரின் "அரங்கேற்றம்" படத்தின் மூலமாக புகழ் வெளிச்சதுக்கு வந்தவர். தேவரின் "கோமாதா என் குலமாதா" படத்தில் குணச்சித்திர கதாநாயகியாக நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.. தங்கப்பதக்கம் இவர் நடிப்பில் வந்த இன்னொரு சிறந்த படம். "காஞ்சு போன பூமியெல்லாம்" என இளைய தலைமுறையினரும் பேசும் புகழ் மிக்க வசனத்தை பேசியவரும் இவர் தான். ராதா, வள்ளி தெய்வானை, பெண் ஓன்று கண்டேன், தாய் பாசம், பிரியாவிடை, கண்ணம்மா, சதுரங்கம் என குறிப்பிட படத்தக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கு பி.சுசீலா அவர்கள் பல படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். இவருக்கு பிடித்த பாடகியும் ப.சுசீலா அவர்களே. இவர் நன்றாக பாடும் திறன் படைத்தவரும் கூட.
பி.சுசீலா இவருக்கென பாடிய சில பாடல்களின் வீடியோக்கள் கீழே..
இசை அமைப்பாளர் திரு ரங்கசாமி பார்த்தசாரதி அவர்கள் இந்தியாவின் படைப்புக்களான பகவத் கீதை, உபநிஷத்துகள் ஆகியவற்றை மற்ற நாட்டவரும் அறிய வேண்டும் என்பதற்காக பல இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்தார். அவரது நிறுவனமான "ஓரியன்டல் ரிக்கார்ட்ஸ்" என்ற அமெரிக்க இசைத்தட்டு கம்பெனி மூலமாக ISHA AND KENA ஆகிய உபநிஷத்துக்களை இசையாக வெளியிட முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். இந்த இசை தட்டுக்கான பாடகரை தேர்வு செய்ய திருவுள சீட்டு போடப்பட்டதாம். அப்போது பி.சுசீலா அவர்களின் பெயர் வந்ததால் பி.சுசீலா அவர்களையே தேர்வு செய்தார்கள். பெரும்பாலும் ஆண் பாடகர்களே உபநிஷத்துக்களை பாடும் வழக்கம் இருந்த நிலையில் பி.சுசீலா அவர்களுக்கு அந்த உபநிஷத்துக்களை பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக தினமும் காலையில் ஒரு சம்ஸ்கிருத விறபன்னர் வந்து பி.சுசீலா அவர்களுக்கு சமஸ்கிருதம் சரியாக உச்சரிக்க கற்று கொடுத்தார். அந்த கால கட்டத்தில் தெலுங்கிலும் தமிழிலும் மிகவும் பிசியாக இருந்தார் பி.சுசீலா அவர்கள். என்றாலும் அதற்கும் நேரம் ஒதுக்கி இந்த சிறப்பான ஆல்பத்தை முழு சிரத்தையுடன் பாடி கொடுத்தார். எத்தனையோ பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு இசைத்தட்டு. பெரிய அளவில் மார்க்கட்டிங் செய்யப்படாதால் என்னவோ பி.சுசீலா ரசிகர்களில் பலருக்கு கூட அறிமுகம் ஆகாமல் போய் விட்டது.
என்ன ஒரு ஆல்பம் !! ஷாந்தி ஷாந்தி என பாடும் குரலில் என்ன ஒரு அமைதி !! பி.சுசீலாவின் குரலில் என்ன ஒரு கிளாரிட்டி !! கேட்க கேட்க பரவசமாக இருந்தது!!!. அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பத்தை பகிர்கிறேன். பி.சுசீலாவின் குரலில் பக்தியும், இனிமையும் மேலோங்கி நிற்கின்றன. பி.சுசீலாவின் மொத்த அனுபவமும் ஒவ்வொரு வரியிலும் இனிமை கூட்டுகின்றது. கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேளுங்கள்.
இந்த ஆல்பத்தின் கவரில் இசை அமைப்பாளர் மற்றும் பி.சுசீலா அவர்களை பற்றி விரிவாக எழுதி இருப்பதை தவறாமல் படியுங்கள்.
About the Album :
It is with a Profound sense of
joy and anticipation that I present to you this recording — the
first one on the Upanisads. The enthusiastic listener
"acceptance of my earlier productions on theVedas and the Bhagavad-Gita emboldens me to attempt
the recording of the Upanisads. The Word» “Ullanisad” literally means “sitting down
at the feet of the teacher”. That is to say,the Upanishads embody the secret and sacred teachings which
were imparted by the Guru to his disciples. 'I'hese teaching of cource were
about the nature of Ultimate Reality "lwentieth-century man looks outward to the conquest of
outer space. But the seers and sages of theUpanisads looked inward to the conquest of inner
space. They believed that the Soul of man was asinfinite as the vast expanse of the limitless
Universe. They_ believed also that the individualSelf ot Jivatma, partakes of the character of the Obsolute
self‘, or Paramatma. The goal and purposeof human life is to let our individual Selves dissolve
into that Ocean of Truth, Consciousness, and Blisswhich the obsolute is, and thus experience the Peace that
passeth all understanding, which the mysticsof alla ages and all faiths affirm is vouchsafed to the
true seeker.
Modern Criticism is generally
agreed that these Upanishads, numbering 108, belong to the period earlier than the first millennium before Christ. As
almost all the early literature of India was anonymous, we do not know the names of the authors of
these Upanisads. According to. tradition, the great sage, Vyasa, was the first compiler of the Vedas,
and the compilation of the Upan-isads remains a matter of speculation.
Of theoriginal number only about a dozen and a half, which are considered the principal Upanisads, are still extant.
The Upanisads are considered part of Sruti that which was
“heard” as the revealed Word of God. We do not, however, possess any 1’9C91’d Of how these words
of the Upani§ads, pregnant with potency and words with luminosity, were chanted, and to What
meter they were set for incantation by the sages themselves.
But since they are known to Produce powerful vibrations,
induce a tranquil state of mind, and summon a beatific vision of the Absolute, I have
engaged the mellifluous voice of Srimati P. Susheela to render them in song.
The devotion with which she
has done this is certain to enable you to
experience the ecstasy of having communion with the
Ineffable.
In this day and age, when we crave for peace in the
world, peace with nature, peace with all mankind, and peace with ourselves, I offer this recording
as my humble salutation to the sages of the Upanisads, who made them replete with the invocation:
OM, SHANTHI, SI-lANTHl, SI-lANTHI Let there be Peace, Peace, Peace.
About the Vocalist : South India's most celebrated singer of film and semi-classical
music is being introduced to audiences abroad through this recording. Srimati P. Susheela who has
rendered these sacred songs of the Upanisads, obtained her initial training in Vijayawada
from the well-known violinist Dwaram
Venkatasamy Naidu. Subsequently in Madras She received further Training from
the renowned Musiri Subramanya Iyer.
Commencing her singing career in South Indian films in
1951, While she was still in her teens, Srimati Susheela has sung more than 20,000 songs. She is
the leading Singer of South India, and has sung in several Indian
languages- The foundation of rigor and discipline having been laid by
her teachers, she has developed her talent With the aid of her own
creative imagination and personal intuition. It is these qualities which were decisive in her being chosen to render
the Upanisads.
Before she did the actual recording, Srimati Susheela
diligently studied the Upanisads with the asistance of an eminent Sanskrit scholar. The recipient
year after year, of many coveted awards, too numerous to catalog, she is married to Dr. Mohan Rao,
and has a son twelve years old.
The Composer - Director
A pioneer in introducing North American audiences to
the rich treasures of India’s music and dance, Rangasami Parthasarathy has been widely acclaimed
as much for teaching, promoting and staging concerts in all the major centers, as for his own
performance and direction.
He has founded the Academy of East Indian Arts in New
York in 1971, and has directed it with a view to making it an effective instrument to attain his objective.
In recognition of his sterling contribution to the enrichment of
Indian ethnicity in North America, Parthasaratliy was given the Award
for the Perfonning Arts by the First Convention of Asian Indians
in 1980.
With the intention of reaching
much wider audiences than those of concert halls, Parthasarathy has founded his own recording company, ORIENTAL RECORDS
in 1977, to bring to them the infinite variety of Indian music, both sacred and secular. It
has been his singular mtisfaction that all the leading vocalists and instrumentalists of both the Northern
and Southem traditions of Indian music have recorded under his company’s label.
Now more than ever, Parthasarathy senses the role music can play in
creating the atmosphere for the reception of the message of Peace as a
new century dawns.
பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் பாடலை கேட்டு மகிழுங்கள்... ( Video கீழே )
இந்த இசை தட்டு CD-ஆகவும் வெளிவந்தது.
http://www.ebay.de/itm/Celestial-Songs-Of-Upanishad-P-Susheela-CD-/271180197308