சில படங்களில் ஒரே பாடல் இரு பாடகிகள் பாடி இருப்பது வாடிக்கை. இரண்டும் வெவ்வேறு situations ஆக இருக்கும். உதாரணமாக " தூரி தூரி தும்மக்க தூரி " (தென்றல் சுடும்) பாடலின் ஒரு வெர்ஷன் பி.சுசீலா அம்மாவும் இன்னொன்றை திருமதி எஸ்.ஜானகி அவர்களும் பாடி இருப்பார்கள். மணி ஓசை படத்தில் "வருஷம் மாசம் தேதி பார்த்து", காடு படத்தில் "என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்", வாழ்ந்து காட்டுகிறேன் படத்தில் "காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்" என பல பாடல்களை சொல்லலாம்.
ஆனால் ஒரே பாடலை இரு பாடகிகள் பாடி ஏதோ ஒருவரின் வெர்ஷன் படத்தில் இருக்கும் நிலைமை சில படங்களில் நடந்திருக்கிறது. அதற்கும் சில காரணங்கள் இருக்கலாம்.
1. "தேசுலாவதே தேன் மலராலே " பாடல் தமிழில் பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும். அதை தெலுங்கிலும் பி.சுசீலா தான் முதலில் பாடினார். ஆனால் தயாரிப்பாளருக்கு ஒரு சென்டிமெண்ட் .. அவருக்கு அதற்கு முந்தைய படமான பெரும் வெற்றியை கொடுத்த "அனார்கலி" படத்தில் "ராஜசேகரா என் மேல்" என்ற பாடல் மிகப்பெரிய ஹிட். அதை பாடிய ஜிக்கி அவர்களுக்கு ஒரு தரமான பாடலை கொடுக்க வேண்டும் என்பதற்காக பி.சுசீலா பாடிய பின் அதை ஜிக்கியை வைத்து "haayi haayiga " என பாட வைத்தார். அதை பி.சுசீலாவிடமும் சொல்லி அவர் ஒப்புதலுடனேயே நடந்திருக்கிறது. பி.சுசீலா வெர்ஷன் ரெக்கார்டில் கூட வரவில்லை.
2. சமீபத்தில் எஸ்.ஜானகி அவர்களின் தெலுங்கு நேர்முகம் ஒன்றில் அவருக்கும் சாவித்ரிக்குமான பிரச்சனை பற்றி சொல்லி இருந்தார். "படி தாண்டா பத்தினி " என்ற படத்தில் ஒரு அருமையான மெலடியை அவர் பாடி இருந்ததாகவும், சாவித்திரி தலையிட்டு தனக்கு சுசீலா தான் பாட வேண்டும் என்று கூறி அதை சுசீலாவை வைத்து திரும்பவும் பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார்கள் என்றும் சொன்னார். இருவர் பாடிய வெர்ஷனும் கேட்டதில்லை. அப்படி ஒரு படம் வந்ததா என்றும் தெரியவில்லை.
3.சின்ன கவுண்டர் படம் தெலுங்கில் சின்ன ராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய "முத்துமணி மாலை" பாடலை தெலுங்கிலும் பி.சுசீலாவே பாடினார். ரெக்கார்டிங் முடிந்து ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று விட்டார். சில நாட்கள் கழித்து அதில் ஓரிரு வார்த்தைகள் மாற்றப்பட்டன. பி.சுசீலா உடனடியாக இல்லாத காரணத்தால் அதை சித்ராவை வைத்து பாடி வெளியிட்டார்கள்.
இந்த மாதிரி சில காரணங்களால் ஒரே பாடல் இரு பாடகிகள் குரலில் ரெகார்ட் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் பி.சுசீலாம்மாவும் வேறு பாடகிகளும் பாடிய பாடல்களின் தொகுப்பு இது.
1. chettulekkagalava oh narahari ( செஞ்சுலக்ஷ்மி) இந்த பாடலை கண்டசாலா-ஜிக்கி குரலிலும் பி.பி.எஸ்-சுசீலா குரலிலும் இரண்டு பாடல்கள் உள்ளது.
Chettuleka gelava -P.Susheela - PBS
Chettulekkagalava - Jikki -Ghantasala
2. ஓமன கையில் ஒலீவில கொம்புமாய் (bharya -malayalam ).. இப்பாடலும் பி.லீலா குரலிலும் பி.சுசீலா குரலிலும் தனிதனி பாடல்களாய் உள்ளது.
Omana Kiyil oru oleevila - P.Susheela
3. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு : இதுவும் பி.லீலா குரலிலும், பி.சுசீலா குரலிலும் தனித்தனியாய் ஒலிக்கிறது.
கன்னட மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கோ அல்லது மற்ற மொழிகளில் இருந்து கன்னட மொழிக்கோ அவ்வப்போது பாடல்களும் மொழி மாற்றம் செய்யப்படுவது உண்டு. இங்கு பி.சுசீலா பாடிய கன்னட மொழி பாடல்களை வேறு மொழிகளில் அவரோ அல்லது வேறு பாடகர்களோ பாடியதை தொகுதது இருக்கிறேன். சில பாடல்கள் கன்னடத்தில் வேறொருவர் பாடி இன்னொரு மொழியில் பி.சுசீலா பாடியதுவாகவும் இருக்கலாம்.
சில படங்கள் கன்னடத்தில் வெற்றி பெற்று அதை வேறு மொழியில் தயாரிக்கும் போது அதே டியூன்களை பயன்படுத்தி கொள்வார்கள். சில நேரங்களில் கன்னட இசை அமைப்பாளர்கள் வேறு மொழிகளில் இசை அமைக்கும் போது அங்கு வெற்றி பெற்ற டியூன்களை திரும்ப உபயோகிப்பதும் உண்டு. சிலர் காப்பி அடிப்பதும் உண்டு.
கன்னடத்தில் இசை அமைப்பாளர்களில் பிரபலம் ஆனவர்கள் என்றால் விஜயபாஸ்கர், ஜி .கே.வெங்கடேஷ், டி .ஜி .லிங்கப்பா, எம்.ரங்காராவ், உபேந்திர குமார், ஹம்சலேகா, சத்யம் போன்ற இசை அமைப்பாளர்களே.இவர்கள் எல்லோருமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இசை அமைத்தது வந்தார்கள்.
இனி பாடல்களின் தொகுப்பை காணலாம்.
Nee banthu ninthaga :
கன்னடத்தில் எல்லா ஜெனெரேஷன் ரசிகர்களும் ரசிக்க கூடிய சில காதல் பாடல்களில் இந்த பாடலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. "கஸ்தூரி நிவாஸா" என்ற திரைப்படத்தில் ஜி .கே.வெங்கடேஷ் இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தமிழில் இசை அமைத்த "யாருக்கும் வெட்கமில்லை" என்ற படததில் திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். தமிழில் அதிகம் கேட்கபடாமல் போன நல்ல பாடல்களில் இதுவும் ஓன்று.
Nee Banthu ninthaga
Anaiyatha Deepam
Nee Muditha Mallige Hoovina maale :
Gandhi Nagara என்ற திரைப்படத்தில் ஜி .கே.வெங்கடேஷ் இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தெலுங்கில் இசை அமைத்த "Kanne Vayasu" என்ற படததில் திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். "Ye divilo Viresena parijathamu" என தெலுங்கில் இப்பாடலை எஸ்.ஜானகி பாடினார். அங்கேயும் அது மிகப்பெரிய ஹிட் பாடல்.
Nee Muditha mallige
uttara druvadim dakshina druvaku
Ye Divilo virisena
Sharapanjara என்ற திரைப்படத்தில் "விஜயபாஸ்கர்" இசையில் வெளிவந்த இப்பாடலை அவரே தமிழில் இசை அமைத்த "தொட்டதெல்லாம் பொன்னாகும் " என்ற படததில் "ஆவணி மலரே ஐப்பசி மழையே" என திரும்பவும் உபயோக படுத்திக்கொண்டார். கன்னடத்தில் இப்படத்தின் பாடல்கள் எல்லாமே பிரபலம் தான்.. தமிழிலும் ஓரளவு பிரபலமான பாடல் தான் இது.
Uttara Druathim
Aaha Mysooru mallige
Aavani Malare
"ஆஹா மைசூரு மல்லிகே" என்ற பாடல் "Bangarada maushya" என்ற படததில் ஜி .கே . வெங்கடேஷ் இசையில் பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் பிரபலமான ஒரு பாடல். இந்த பாடலை சக்ரதாரி என்ற தெலுங்கு படத்தில் எஸ்.ராஜேஸ்வரி ராவ் அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள். "Naalo Evo Vinthalu" என்ற அந்த பாடலும் பிரபலமான பாடலாக அமைந்தது.
Aaha Mysooru Mallige
Naalo Yevo Vinthalu
Thaware Hookereyali :
ஜெயலலிதா நடித்த முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த "சின்னத கொம்பே". அந்த திரைப்பததில் டி .ஜி. லிங்கப்பா இசையில் "thaware hookare", "nodalli meravanige" என்ற இரு பாடல்களை ஜெயலலிதாவுக்காக பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளில் முதன் முதலில் ஜெயாவுக்கு பின்னணி பாடியது பி.சுசீலா அவர்களே.இந்த திரைப்படம் தமிழில் சிவாஜி தேவிகா நடிப்பில் "முரடன் முத்து " என்ற பெயரிலும் ஒரு நேரத்தில் தயாரிக்கப்பட்டது. கன்னடத்திலும் தமிழிலும் அதே டியூன்களே உபயோகிக்க பட்டன. "தாமரை பூ குளத்திலே ". "கல்யாண ஊர்வலம் பாரு" போன்ற பாடல்கள் தமிழில் ஓரளவு பிரபலம் ஆகின.
Thaware Hoo Kareyali
Thamarai poo Kulathile
Nodalli Meravanige :
Nodalli Meravanige
Kalyana oorvalam paaru
Amara Madhura Prema :
தங்கமலை ரகசியம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாரிக்க பட்டது.பின்னர் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா பாடிய "அமுதை பொழியும் நிலவே" என்ற பாடல் கன்னடத்தில் "Amara madhura Prama " என ஒலித்தது. தமிழைப்போல் கன்னடத்திலும் இந்த பாடல் இன்றும் பிரபலம் தான்.தமிழுக்கும் கன்னடத்துக்கும் டி .ஜி. லிங்கப்பாவே இசை அமைத்தார்.
Amara Madura Prama
Radha Madhava Vinoda Haasa :
Amuthai Pozhiyum Nilave
டி .ஜி.லி ங்கப்பா இரு மொழிகளிலும் இசை அமைத்த இன்னொரு திரைப்படம் "ஸ்கூல் மாஸ்டர்". இதில் இடம் பெற்ற "ராதா மாதவ வினோத ஹாசா ". என்ற பாடல் மிகவும் பிரபலம். அததுடன் "Sombada Sanjevele " என்ற பாடலும் "சுகமான அந்தி வேளை" என டி .எம்.எஸ் மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.
Radha MAdhva Vinoda
Sompada Sanje Vela :
Radha MAdhava Vinoda
Sompada Sanje vela
Aakasave Beelali mele : கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள் கன்னட மக்களின் மனதில் ஆழமாக பதிய சில பாடல்களும் திரைப்படங்களும் உறுதுணையாக இருந்தன. அதில் ஓன்று தான் ராஜன் நாகேந்திரா இசை அமைத்த "aakashave beelali mele " ( ஆகாயமே மேலே விழுந்தாலும் நான் என்றும் உங்களுடையவன்) என்ற பாடல். இந்த பாடலை தெலுங்கில் ராஜன் நாகேந்திரா அவர்கள் திரும்பவும் உபயோகித்து கொண்டார். சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஓன்று.
AAkasave Beelali mele
Neekosam Yavvanamatha
T
Hayagide ee dhina mana ஜி .கே.வெங்கேடஷ் இசையிலே பி.பி.எஸ், எஸ்.ஜானகி பாடி ஹிட் ஆன "Haaygide ee dhina mana " என்ற பாடலை மீண்டும் தமிழிலும் தெலுங்கிலும் உபயோகித்ததுக்கொண்டார். தமிழில் எஸ்.பி.பி, எஸ் ஜானகி பாட தெலுங்கில் அதே பாடலை பி.சுசீலா "Mrogindi veena " என்று பாடினார். ஒவ்வொருவர் பாடும் போதும் ஒவ்வொரு flavour அந்த பாடலுக்கு கிடைத்தது. தமிழில் அந்த பாடல் "தேன் சிந்துதே வானம்" என்று ஒலித்தது.
Haayagide ee dhina
Manasa Sarovara :
Mrogindi veena
விஜயபாஸ்கர் இசையில் வெளியான "மானஸ ஸரோவரா" என்ற கன்னட படததில் "manasa sarovara " மற்றும் "haadu haadu " என்ற இரு பாடல்களை வாணி ஜெயராம் பாடி இருந்தார். அந்த பாடல்கள் தெலுங்கில் "Amayaka Chakravarthy " என்ற படத்தில் இடம் பெற்றது. . அந்த படததில் " manasa sarovaram ". "Veena Veena" ஆகிய பாடல்களை பாடியவர் பி.சுசீலா அவர்கள்.
Manasa Sarobara
Haadu Haadu Haadu Haleyathadarenu :
Manasa sarovaram
Haadu Haadu Haadu
veena veena
Amarshilpi Jakkanna Songs :
Amara shilpi jakkanna என்ற கன்னடப்படம் தெலுங்கிலும் "Amara shilpi jakkannachari" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் அது ஒரு பிரமாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. பாடல்களை தெலுங்கிலும் கன்னடததிலும் பி.சுசீலாவே பாடினார்.
Cheluvantha chennigane
Andala bommatho
Surasundaranga Krishna
Nagumomu choopinchava
Eko entho jummenditu
Edo G iligintha
Nillu Nee Nillu Nee
Niluvuma Niluvuma
Manase Maduvagide
Veera keasri Songs :
வீர கேசரி என்ற கன்னட படமம் தெலுங்கில் "Bandhipotu " என்ற படமும் கண்டசாலா இசையில் வெளியான படங்கள். அதில் இடம் பெற்ற பாடல்களை கேளுங்கள்.
Manase Vikasinchera
Mellusiri Savigana
Oohalu Gusagusalade
O naama bharada
Prajala mathanu
Prajara Mathanu
O ante teliyani
Nannedaya Mathella :
பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற "நான் பேச நினைப்பதெல்லாம்" பாடலை "பலே பாஸ்கரா" என்ற கன்னட படததில் இசை அமைப்பாளர் சத்யம் உபயோகித்து கொண்டார். கன்னடத்தில் பி.பி.எஸ் மற்றும் பி.சுசீலா பாடினர் .
Nannedaya Matheella
Naan pesa ninaippathellam
Kedige hoo mudidu : (Muriyada Mane)
பாகப்பிரிவினை படததில் இடம் பெற்ற "தாழையாம் பூமுடிச்சு" என்ற பாடல் கன்னடத்தில் "kedige hoo mudithu" என ஒலித்தது. வீடியோ என்னிடம் இல்லை.
Kalavidu Kalavidu :
சித்தி படம் கன்னடத்தில் ஜெயந்தி நடிக்க கன்னடத்தில் "சிக்கம்மா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற "காலமிது காலமிது" பாடல் கன்னடத்திலும் பி.சுசீலாவின் குரலில் "kaalavidhu kaalavidhu " என ஒலித்தது.
Nanna aase Hannagi :
கன்னடத்தில் "ஆட்டோ ராஜா " படததில் இடம் பெற்ற "nanna aase hannagi" என்ற பாடல் தெலுங்கில் "parimalinchu Punnamilo " என ஒலித்தது. கன்னடத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த பாடலை தெலுங்கில் பி.சுசீலா பாடினார்.
Nanna aase hennagi
Parimalichu punnamilo
Bhoo Kailas Songs
Sundaranga
Andagada Andukora
Baleya Hrudaya
Teeyani Talapula
Naakavane nachusuva
Andamulu vinthulaye
Doora Neenade
Premale Vidhama
Janeyagiru nanna mallige : தெலுங்கு படமான சிவரஞ்சனி படததில் இடம்பெற்ற "jorumeedhunnavu thummeda " என்ற பாடலை கன்னடத்தில் "janeyagiru nanna mallige " என்று மொழிமாற்றம் செய்தார்கள். இரு பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.
JAaneyagiru nanna mallige
Jorumeedunnavu thummeda
Vaalmeeki Songs :
வால்மீகி திரைப்படம் கன்னடத்தில் தெலுங்கிலும் ஒரே வருடததில் வெளியானது. அதில் கண்டசாலா இசையில் கன்னடத்திலும் தெலுங்கிலும் பி.சுசீலா பாடினார்.
Anuragade Ale Ananda
Aniuragamila
Jhalala Jahalala Jala dhare
Anuragade nee padaleke: :
Jhalala Jhalala jhala dahara
" Gaali Gopura " என்ற கன்னடப்படம் அதே தயாரிப்பாளரால் தெலுங்கில் "Gaali Medalu " என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது . அதில் "டி .ஜி.லிங்கப்பா இசையில் "Anuragamu நீ padaleke " என்று கன்னடத்திலும் "navaraagalu" என்று தெலுங்கிலும் இடம் பெற்ற பாடல்களை பி.சுசீலாவும், பி.பி.எஸ்ஸும் இணைந்து பாடினார்.
Anuragalu nee padaleke
dheenalu Moreya :
NavaRaagalu
"Guru shishyaru " என்ற கன்னடப்படம் தமிழில் ராஜமோஹினி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதில் பி.சுசீலா - எஸ். ஜானகி இணைந்து பாடிய "dheenalu Moreya " என்ற பாடலை தமிழில் பி.சுசீலா + வாணிஜெயராம் இணைந்து "ஏழை என் முறைகேள் " என்று பாடினார்.
Dheenalu Moreya
Idu Yaava haadu alla :
Ezhayin Murai kel
ராஜசேகர், ஜீவிதா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் "Talamburalu ". அதை கன்னடத்தில் "kankana bhagya " என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் "idi paata kaane kaadu " என்று ஒலித்த பாடல் கன்னடத்தில் "idu yaava haadu alla " என ஒலித்தது. talamburalu படம் தமிழில் "கல்யாணி" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அதில் இந்த பாடல் "இது பாடும் பாடல் அல்ல" என ஒலித்தது. எல்லா மொழிகளிலும் பி.சுசீலாவே பாடினார்.
Idu yaava haadu alla
Idi paata kaane kaadu
Hey Malish :
தெலுங்கில் "Katakataala Rudraiah" என்ற திரைப்படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதை கன்னடத்தில் "Pralaya rudra " என்ற பெயரிலும் தமிழில் "பட்டாக்ககத்தி பைரவன்" என்ற பெயரிலும் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் இடம் பெற்ற "thel மாலிஷ்" என்ற பாடல் கன்னடத்தில் "hey Malsih " என ஒலித்தது.
He malish
Thel Malish
Harusha doorada meru :
"சலீல் சவுத்திரி " அவர்கள் வங்காள மொழியை சார்ந்தவர் என்றாலும் தெற்கிலும் சில படங்களுக்கு இசை அமைத்தது உள்ளார். அதில் பல படங்களில் அவரது இசையை அவரே திரும்பவும் வேறு மொழிகளில் உபயோகித்தது இருக்கிறார். அதில் ஓன்று தான் இந்த பாடல். அதில் ஓன்று தான் ஹிந்தியில் லதா மங்கேஸ்கர் பாடி வெளிவந்த "madubari ஏ hawayen " என்ற பாடலை கன்னடத்தில் "samshaya phala " என்ற திரைப்படத்தில் பி.சுசீலாவை பாட வைத்து வெற்றி பெற வைத்தார் .
Harusha doorada meru
Madubari ye
Neevu Namage Siggibiddare :
"sathya harishandra " திரைப்படம் பெண்டியாலா இசையில் கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. அதில் பி.சுசீலாவும் ஸ்வர்ணலதாவும் பாடிய "neevu maku chikanavule" பாடல் கன்னடத்தில் பி.சுசீலா மற்றும் பி.லீலா குரல்களில் "நneevu namage siggi biddare " என ஒலித்தது.
Neenu nsnage siggi biddayo
Neevu Maku
Kanasalu Neene :
"kanasulu neene" என்ற பாடல் "bayalu daari " என்ற கன்னட படத்தில் எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் பிரபலமான பாடல். ராஜன் நாகேந்திர இசை அந்த பாடல் தெலுங்கில் "Chinukura raali" என்று ஒலித்தது. தமிழில் கூட "சிறு மழை சாரல் " என்று அந்த பாடல் டப் செய்யப்பட்டது.
Kanasulu neene
Chinukula raali
Khaidhi Songs :
தெலுங்கில் பிளாக்பஸ்டர் மூவியான கைதி திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டுக்கும் சக்ரவர்த்தி தான் இசை அமைப்பாளர். தெலுங்கில் ஹிர் ஆகிய பாடல்களை கன்னடத்திலும் உபயோகித்ததார் சக்ரவர்த்தி. இரு மொழிகளிலும் கேட்டு ரசியுங்கள்.
Tale hoova podarintha
Ragiluthondi mogali
Surasundari menakayo
Jo Jo Laali Naa haduve :
Mera Mera Merupula
இசை அமைப்பாளர் சலீல் சவுத்திரி மலையாளத்தில் "சமயமாயில்லப்போலும் " என்ற திரைப்படததில் பி.சுசீலா குரலில் "onnam thumbi nee odivaa " என்ற அருமையான ஹிட் பாடலை கொடுத்திருந்தார். அதே பாடலை கன்னடத்திலும் எஸ்.ஜானகி குரலில் . திரும்பவும் உபயோகித்தார்.
JoJo Laali Naa haduve
Onnam thumbi Nee odi vaa
O nallane Savi Mathonda :
எஸ்.பி.பி - பி.சுசீலா குரல்களில் ஒலித்த " O Nallane Savi Mathonda " என்ற பாடல் ரஜினி நடித்த "sahothara Savaal " என்ற கன்னட பிரபலமான பாடல். அந்த பாடல் தெலுங்கில் "O bangaru rangula chilaka" என அதே குரல்களில் ஒலித்தது.
O nallane Savi mathonda
O bangaru Rangula chilaka
Sharapanjara Songs :
கன்னடத்தில் இசைக்காகவும் கதைக்காகவும் ஓடிய ஒரு முக்கியமான திரைப்படம் "Sharapanjara ". கன்னடத்தில் மிக முக்கியமான டைரக்டர் ஆனா "புட்டண்ணா கனகல்" இயக்க விஜயபாஸ்கர் இசை அமைக்க எல்லா பாடல்களுமே காலத்தை கடந்தும் ஜெயித்தன. அந்த வெற்றியில் பி.சுசீலாவின் குரலுக்கும் பங்கு இருந்தது. அந்த திரைப்படம் தெலுங்கில் "கிருஷ்ணவேணி " என்ற பெயரில் மீண்டும் தயாரிக்கப்பட்டது. எல்லா பாடல்களையும் கேட்டு ரசியுங்கள்.
Hadinalku Varsha
Padunalugendlu vanavasamegi
Biligiri Rangayya
Srisaila mallayya
Kodagina Kaveri
Krishnaveni
Sandesa Magha Sandesa
Sangeetham madhura sangeetham
Krishna Nee begane baro songs :
ஹிந்தி இசை அமைப்பாளர் பப்பி லஹரி தெலுங்கில் இசை அமைத்த "thene manasulu " படத்தில் எல்லா பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. அந்த திரைப்படம் கன்னடத்தில் "Krishna nne begane baro " என்று ரீமேக் செய்யப்பட்டது. அதில் எல்லா பாடல்களையும் எஸ்.ஜானகி பாடினார்.
Alaare Alaare
Alaare Alaare
Mammayya Mammayya
Mmmaya Mammaya
Mummy Mummy
Mummy Mummy
Nagu Endide Manjina Bindu :
மணிரத்னம் முதலில் இயக்குனராக "பல்லவி அனுபல்லவி" என்ற கன்னட திரை படத்தில் தான் அறிமுகம் ஆனார். அதில் இளையராஜா இசையில் "Nagu Endide Manjina" என்ற பாடலை எஸ்.ஜானகி பாடி இருந்தார். இந்த பாடலை தெலுங்கில் "edhe teeyani teerani" என பாடினார் பி.சுசீலா அவர்கள்.
Nage Endide Manjina
Ede teeyani Teerani
PremaLoka Songs :
கன்னடத்தில் 1987-இல் வெளிவந்த "Premaloka " என்ற திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என கூறலாம். அது தெலுங்கில் "premalokam " என்றும் தமிழில் "பருவராகம்" என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டது. அம்சலேகா இசையில் "Levandi premikulu ", "chittemma chilakamma " என்று இரு பாடல்களை தெலுங்கு பதிப்பில் பி.சுசீலா பாடினார்.
Bathromminalli
Levandi Premikulu
Nodamma Hudugi
Vinayaka ninna padake :
Chilakamma Chittemma
"bhagawan Sathya saibaba " என்ற திரைப்படத்தில் அம்சலேகா இசையில் "Vinayaka ninna padake" என்ற பாடல் "vinayaka nee murthige" என பி.சுசீலாவின் குரலில் இரு மொழிகளிலும் ஒலித்தது.
Vinayaka ninna padake
Vinayaka ninna namake
Nanna Chinna entha Chenna :
எஸ்.பி.பி தெலுங்கில் இசை அமைத்து அவரும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய "Muvaala Gopala " என்ற பாடலை கன்னடத்தில் அவரே இசை அமைத்த "Devarelliddaane" என்ற திரை படத்தில் பி.சுசீலா மற்றும் வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்க வைத்தார் .
* எஸ்.பி.பி இசை அமைத்த பல திரைப்படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். அவர் முதன் முதலாக இசை அமைத்த “கன்யாகுமாரி” என்ற தெலுங்கு படத்தில் பி.சுசீலாவே பின்னணி பாடினார். அப்பட்த்திலேயே "tholi Sandyaku", "rahasyam teeyani rahasyam" என சில பாடல்களை பாடினார் பி.சுசீலா அவர்கள். அதே போல் பி.சுசீலா இசை அமைத்த சில பக்தி ஆல்பங்களில் எஸ்.பிபியையும் பாட வைத்திருக்கிறார்.
இந்த தொகுப்பில் கிட்டத்தட்ட 30 பாடல்கள் இருக்கிறது. இன்னும் இருக்கலாம். தெலுங்கு. கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் பாடல்கள் கிடைத்த்திருக்கிறது. ஆனால் தமிழில் ஒரு பாடல் கூட இல்லாதது ஒரு குறையாக இருக்கிறது.