பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பி.ஜெயச்சந்திரன் - பி.சுசீலா டூயட்ஸ்

                                

           வேற்று மொழி ரசிகர்கள், தமிழ் பாடல்களை கேட்கும் போது, பலராலும் எஸ்.பி.பி மற்றும் மனோ குரல்களை உடனடியாக பிரித்தறிய முடியாது. கேட்க கேட்கத்தான் அந்த குரல்களில் இருக்கும் வித்தியாசம் தெரியும். இதே நிலை தான் மலையாளத்திலும். ஆரம்ப காலத்தில், ஜேசுதாஸ் பாடிய பல பாடல்களை ஜெயச்சந்திரன் என்றும், ஜெயச்சந்திரன் பாடியதை ஜேசுதாஸ் பாடியது என்றும் பலமுறை நினைத்திருக்கிறேன். கொஞ்சம் உன்னிப்பாய் கேட்டால் புரிகிற விஷயம் தான். மலையாளத்தில் பாடும் உன்னி மேனன், ஜி.வேணுகோபால், பிஜு நாராயணன், மது பாலகிருஷ்ணன் என பலரின் குரலிலும் ஜேசுதாசின் குரலின் சாயல் தெரியும்.
         மலையாளத்தில் “Bhava Gayakan” என அன்போடு அழைக்கப்படும் பி.ஜெயச்சந்திரன் அறிமுகமானது 1966-ஆம் வருடம். தமிழில் இவர் பாடியது கொஞ்சம் தான் என்றாலும் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் பாடல்கள். 70-களில் “” “பொன்னென்ன பூவென்ன கண்ணே”, “தங்க சிமிழ் போல் இதழோ” போன்ற  பாடல்கள் பிரபலமாக இருந்தன. எண்பதுகளில் “ராசாத்தி உன்ன”, “தாலாட்டுதே வானம்” போல பல ஹிட்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கூட ஒரு தெய்வம் தந்த பூவே” போல பல ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார். தேசீய விருது வென்ற அவருக்கு, அவரது குரல் வளத்துக்கும், இசை ஞானத்துக்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய அளவுக்கு வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை.
       பி.சுசீலாவை உண்மையாகவே மதிக்கக்கூடிய ஒரு சக கலைஞர்,  நல்ல ரசிகர்!. மேடைக்காக ஒரு பேச்சு பேசி விட்டு, வெளியில் போய் வேறு விதமாய் பேசாத உண்மையான மனிதர். இவர். பல இசை மேடைகளிலும், டெலிவிஷன் ஷோக்களிலும் பி.சுசீலா தான் தனக்கு பிடித்த பாடகி, ஏன், உலகிலேயே சிறந்த பாடகி என தன் கருத்தை நேர்மையாய் பதிவு செய்பவர். இவர் இவருக்கு 2012-ல் “பி.சுசீலா விருது” வழங்கப்பட்டு இருக்கிறது. சென்ற வருடத்தில் (2013) பி. சுசீலா அவர்கள் இசை அமைத்த “ஸ்ரீ சிம்ஹாச்சல ஸ்வாமி” என்ற இசைத்தொகுப்பில் “garudani” என துவங்கும் பாடலை பாடி இருக்கிறார் ஜெயச்சந்திரன். பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய பாடல்களை பற்றிய தொகுப்பு இது.
                              

            பி.சுசீலாவும், பி.ஜெயச்சந்திரனும் சேர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் பாடி இருக்கிறார்கள். 1968-இல் “வெளுத்த கத்ரீனா” என்ற மலையாள படத்தில் பாடிய ““மகரம் போயிட்டும்”, பாடல் தான் இவர்கள் சேர்ந்து பாடிய முதல் என நினைக்கிறேன்.
      தமிழில் வெள்ளி ரதம் (1970) படத்தில் பாடிய “கலைமகள் அலைமகள்” ஒரு அருமையான பாடல். “பாலாபிஷேகம் செய்யவோ”, கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில்”, “ஆரம்பம் யாரிடம்”, “நான் மெதுவாக தொடுகின்ற போது”, “பூவண்ணம் போல நெஞ்சம்”, “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்” என எழுபதுகளில் சில  ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்கள். 
        அதே போல் 80-களில் மறக்கமுடியாத சில பாடல்களை பாடி இருக்கிறார்கள். அதில் “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”, “காளிதாசன் கண்ணதாசன்”, “பூவிலே மேடை நான்போடவா”, “உன்னைக்கான துடித்தேன்”,  “சங்கீதமே என் தெய்வீகமே”, “பூந்தென்றல் காற்றே வா”, “ஏதோ ஒரு ராகம்”, “அழகிய அண்ணி” “மாசி மாசம் முஹூர்த்த நேரம்” போன்றவை நான் ரசித்த பாடல்கள்.
    மலையாளத்தில்  1970-ல் “வாழ்வே மாயம்” என்ற படத்தில் பாடிய “சீதாதேவி ஸ்வயம்வரம் செய்தொரு” என்ற பாடல் மிகவும் பிரபலமாக அமைந்தது. அங்கும் பல நல்ல டுயட்ஸ் அமைந்தன. “மணிவர்ணன் இல்லாத்த வ்ருந்தாவனம்”, “பத்ம தீர்த்த கரையில்”, “விலாசலோலுபயாயி”, “பொன்னம்பிளியுடே” “தெய்யம் தெய்யம் தாரே”, “சந்திரோதயம் கண்டு கைக்கூப்பி”, “ஜில் ஜில் ஜில் சிலம்பலங்கி”, “எருசலேமிலே ஸ்வர்க தூதா”, “முல்லப்பூ மணமோ”, “துயிலணரு குடிலுகளே” போல பல ஹிட்ஸ்.
    கன்னடத்தில் “மந்தார புஷ்பவு நீனு”. “ஒலவின உடுகோரே” பாடல்கள் எவர்க்ரீன் பாடல்களாக அமைந்தன.

     தெலுங்கிலும் பல பாடல்களை இணைந்து பாடி இருக்கிறார்கள். "Oka vasantham" (ee chanduvalu maakoddu), pagalantha bhuvananiki (Swathi), "adharam entha madhuram (ooha sundari) போன்றவை ஹிட் பாடல்கள்.

மொத்த பாடல்களின் தொகுப்பு கீழே..



1968 Malayalam veluthu kathirina makaram poyittum G.Devarajan
1970 Tamil velli ratham kalaimagal aalaimagal M.S. Viswanathan
1970 Malayalam vaazhve maayam seethadevi swayamvaram cheithoru G.Devarajan
1972 Malayalam shakthi chandana shilakalil ambili k.J. Joy
1972 Malayalam Manushyabandhangal kanakaswapnangal v.Dakshinamurthy
1972 Malayalam manthrakodi kilukathe kilungunna M.S. viswanathan
1972 Malayalam miss mary manivarnanillatha vrundavanam R.k.Shekar
1972 Malayalam Miss mary ponnambiliyude R.k.Shekar
1973 Malayalam ladies hostel muthuchippi thurannu Baburaj
1974 Malayalam BabuMon padmatheertha karayil M.S. viswanathan
1974 Malayalam chanchala ranagthunthilam M.k. Arjunan
1974 Malayalam Chukku yerusalemile swarga dhootha G.Devarajan
1975 Tamil unnai naan santhithen naan un adimai V. Kumar
1975 Malayalam sindhu chandrodayam kandu M.k. Arjunan
1975 Malayalam Dharmakshethre kurukshetre  lovely lilly M.S. viswanathan
1975 Malayalam velicham akale sapthami chandrane R.k.Shekar
1975 Malayalam neela ponman thaiyyam thaiyyam thaare salil choudry
1976 Tamil oru kodiyil iru malargal kannanin sannadhiyil  M.S. Viswanathan
1976 Tamil muthana muthallavo paalaabishegam seyyavo M.S. Viswanathan
1976 Telugu manchiki maroperu ila ila undipovala S. Rajeswara rao
1976 Malayalam mallarum mathavanum kandal azhakulla k. Ragahavan
1976 Malayalam chirikkudukka rikshawala oh rikshawala shankar-ganesh
1976 Malayalam bandhangal bandhanangal(D) alathallum snehathin alayam Malleswara rao
1977 Tamil nee vaazha vendum anthi varum nerathile  M.S. Viswanathan
1977 Tamil sondhamadi ni enakku peNNalla nI oru bommai V. Kumar
1977 Malayalam bharya vijayam april maasathil M.k. Arjunan
1977 Malayalam chilanka (D) chanchala Naadam  K.V. Mahadevan
1977 Malayalam bharya vijayam kadalum karayum M.k. Arjunan
1977 Malayalam yatheem pandu pandoru padhushavin Baburaj
1977 Malayalam chilanka (D) raagathunthubi K.V. Mahadevan
1977 Malayalam veedu oru swargam velutha vaavinte G.Devarajan
1977 Malayalam Sreemadh Bhagavadh Geetha  vilasa lolupayayi vasantha  v.Dakshinamurthy
1977 Malayalam chilanka (D) vaa vaa swamy vaa K.V. Mahadevan
1978 Tamil puli varuthu puli konju mozhai vanji mayil  Shankar Ganesh
1978 Tamil unakkum vaazhvu varum naan medhuvaaga  Shankar Ganesh
1978 Tamil thanga rangan Udhadugalil unadhu peyar M.S. Viswanathan
1978 Malayalam mudhra mothiram bhoomi nammude pettamma G.Devarajan
1978 Malayalam Anubhoothikalude Nimisham mandhahasa madhurathalam A.T.Ummer
1978 Malayalam mukkuvane snehicha bhootham mullapoo nanamo nin k.J. Joy
1978 Malayalam Madhurikkunna Rathri rajani hemantham M.S. viswanathan
1978 Malayalam sundari marude swapnangal  ore medayil oru sayyayil M.S. viswanathan
1979 Tamil mudhal iravu manjal nilavukku Ilayaraja
1979 Tamil muyalukku moonu kaal nilavo neruppo chandrabose
1979 Tamil azhiyaatha kolangal poovannam pola nanjam Salil Chowdury
1979 Malayalam vellayane parannu aalamudayone G.Devarajan
1979 Malayalam agniparvatham achante swapnam  pugazhenthi
1979 Malayalam Pathivritha iniyoru naalil M.S. viswanathan
1979 Malayalam Puthiya velicham jill jill jill  chilambalangi  salil choudry
1979 Malayalam raage pournami malapatta penninte G.Devarajan
1979 Malayalam Lajjavathi mazha peythu mannu k.J. Joy
1979 Malayalam Ezham kadalinakkare swargathil nandana M.S. viswanathan
1980 Tamil ore mutham aathankarayil oru  Ilayaraja
1980 Tamil karadi paathaalum aasai idhu Gangai amaran
1980 Tamil chakkarangal nirapadhillai un paadal paadhi en paadal Shankar Ganesh
1980 Tamil yaaga saalai Vaa vaa ennodu vaa Vijaya ramani
1980 Telugu ooha sundari adharam entha madhuram chakravarthi
1980 Malayalam Love in singapore cham chacha choom chacha sankar-ganesh
1980 Malayalam suvisesha geetham deivame deivame baby john
1980 Malayalam vaiki vanna vasantham ore paathayil shyam
1980 Malayalam muthuchippikal ranjini ranjini k.J. Joy
1980 Kannada Ranga Nayaki mandara pushpavu  M.Ranga rao
1980 Telugu o enti bagavatham O aadadi managaadu G.K. Venkatesh
1981 Tamil magal marumagalaanaal anbai kuzhiathidum  kudanthai subbaiah
1981 Tamil anbulla athan paavai malar mottu M.S. Viswanathan
1981 Tamil pennin vaazhkkai maasimaasam muhoortha G.K. Venkatesh
1981 Tamil pennin vaazhkkai malligai poovil intru  G.K. Venkatesh
1981 Tamil pennin vaazhkkai veedu thedi vandhadhu G.K. Venkatesh
1981 Telugu seethalu matakari ammayi M.S. Viswanathan
1981 Malayalam Jeevikkan Padikkanam ambeyyan M.K. Arjunan
1982 Tamil mull illadha roja maman mammuthan thaan MuraliRaj
1982 Tamil marumagale vaazhga Mangala medai shankar Ganesh
1982 Tamil parvayin marupakkam poovachu poothu vandhu chandrabose
1982 Tamil manjal nila poonthentral kaatre Ilayaraja
1982 Tamil mull illadha roja vasanthame varugave MuraliRaj
1982 Telugu ooru nidralechindi janta ee janta Ramji
1982 Malayalam Maattuvin Chattangale jwalichu sankar-ganesh
1982 Malayalam pancha paandavar [U] thirayude chilangakal M.S. viswanathan
1982 Malayalam ankuram thuyilunaru M.S. viswanathan
1983 Tamil soorakkottai singakutty kaalidaasan kannadaasan kavidhai nE Ilayaraja
1983 Tamil aval oru kaviyam kodi inbangal thedum V. Kumar
1983 Tamil aval oru thani ragam nilavaagi vandhathoru Shankar Ganesh
1983 Tamil shashti viratham kantha shasti  Shankar Ganesh
1983 Tamil malargalile aval malligai Sindhu nadhiyoram Ganagi Amaran
1983 Tamil serum singangal thannikkul nikkuthu thaavani Shankar Ganesh
1983 Tamil kashmir kaadhali sangEthamE en deivEgamE G.K. Venkatesh
1983 Telugu koteeswarudu ide pata ide pata chakravarthi
1983 Telugu kurukshetramlo seetha ippude thelisindhi Ramesh naidu
1983 Telugu kurukshetramlo seetha maatalu ranivela Ramesh naidu
1983 Telugu konte kodallu na srimathi chakravarthi
1983 Malayalam naanayam pranayaswaram  shyam
1984 Telugu apanindalu adavallakena aparanji bommalle chakravarthi
1984 Telugu mukkopi idhe edhele Madhumaasam chakravarthi
1984 Telugu evaru veeru evaru veeru kalalu vachhe vela Ramesh naidu
1984 Telugu ee chaduvulu makokku oka vasantham chakravarthi
1984 Kannada aadarsha  baare nanna M.Ranga rao
1984 Kannada baddi bangaramma ibbare ibbare chakravarthi
1984 Malayalam Jeevitham manimekha radhameri gangai amaran
1984 Kannada mugila mallige oppide kannu  V.S.Narasimman
1985 Tamil ragasyam amma nee Ganagi Amaran
1985 Tamil thiramai em paatu nee ketu Shankar Ganesh
1985 Tamil pagal nilavu poovilE mEdai naan pOdavaa Ilayaraja
1985 Tamil deivapiravi poovai oru poo entru Shankar Ganesh
1985 Tamil naane raja nane manthiri mayanginen solla thayanginen Ilayaraja
1985 Tamil maruthaani velakku vacha padichi Ganagi Amaran
1985 Telugu swathi Pagalantha bhuvananiki chakravarthi
1985 Kannada Thulasidala Namma muddu maguva Upendra kumar
1985 Tamil perumai Mogham vandhu mutham Shankar Ganesh
1985 Tamil perumai noorandu vazhga Shankar Ganesh
1986 Tamil kadaikan parvai etho oru raagam eno Shivaji Raja
1986 Tamil oru nallavan oru vallavan mayila maana Chandrabose
1986 Tamil mendum pallavi sugantham manakkintra M.S. Viswanathan
1986 Tamil natpu unnai kaana thudithen Ilayaraja
1986 Tamil samsaram athu minsaram azhagiya anni anubhavam enni Shankar Ganesh
1987 Tamil isaikku oru koyil Thirunaalum varumO saami K.V. Mahadevan
1987 Kannada Olavine Udugore olavina udugore M.Ranga rao
1988 Tamil adhu antha kaalam Chinnanchiru vannakilai Chandrabose
1988 Tamil en thangachi padichava maamaannu solla oru aalu Ganagi Amaran
1988 Tamil manaiviye kadhali Radha radha kanne radha Ben Surendar
1988 Kannada kuthuhala needu inde kampu chumbana Gunasingh
1988 Kannada kuthuhala ninna roopa mechuta Gunasingh
1990 Tamil sathiyam sivam sundharam kanne un ithazh kungumam shankar ganesh
1990 Tamil paadi vaa thendrale ye kaadhale S.A. Rajkumar
1990 Tamil en veedu en kanavar raadha raadha kannaa Surendar
1990 Malayalam apsarassu theyyaram theyyaram S.P,venkatesh
1992 Tamil amma vanthachu idhu unakkaaga paadum raagam Deva
1994 Tamil sa ri ga ma pa odum nadhigalil adum  srikumar
2000 Telugu yeasayunnu chudamu ra randi selayerulu
2013 Telugu sri simhachala swami garudani P.Susheela
0 Tamil sentru va nila Ilamai madhamo Andrewkumar

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

இசைக்குயிலும் சின்னக்குயிலும்


                                  


இசைக்குயில் பி.சுசீலா அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு அறிமுகமானவர் சின்னக்குயில் சித்ரா. இருவருமே தங்கள் திறமையால், குறுகிய காலத்திலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வேகமாக முன்னேறியவர்கள். 
    தான் குழந்தையாக தொட்டிலில் இருந்த போதே பி.சுசீலா பாடிய “ப்ரியதமா ப்ரியதமா” என்ற பாடலை பாடியதாக, சித்ராவின் தாய் சொல்லக்கேட்டிருக்கிறார் சித்ரா. அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். சித்ரா பாட ஆரம்பித்த காலங்களில் பி.சுசீலாவுக்கு மலையாளத்தில் ட்ராக் பாடி இருக்கிறார். எனக்கு தெரிந்த தகவலின் படி அவர் ட்ராக் பாடிய ஆல்பம் ராக வீணா ( link ). ( இசை கண்ணூர் ராஜன் ). வேறு சில படங்களுக்கும் ட்ராக் பாடி இருக்கிறார்.  
                          
                 சித்ரா அவர்கள், தனக்கு சீனியர் ஆன தன் சக பாடகிகள் ஆன எஸ்.ஜானகியுடனோ, எல்.ஆர்.ஈஸ்வரியுடனோ இணைந்து பாடி இருக்கிறாரா என எனக்கு தெரியாது. ஆனால் பி.சுசீலாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பாடி இருக்கிறார். இதில் ஓரளவு பாப்புலர் ஆன பாடல் “உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா” (ராஜாதி ராஜா). ஆனால் படத்தில் பாடல் இடம் பெறவில்லை. இந்த பாடலை ராமராஜன் ஒரு படத்தில் உபயோகிக்க போவதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். ஆனால் படம் வெளிவந்ததா என தெரியாது. இளையராஜா இசையில் “தத்தெடுத்த முத்துப்பிள்ளை யாரோ” (ரெட்டைவால் குருவி) எனற பாடலையும் இருவரும் பாடி இருக்கிறார்கள். ஆனால் அந்த பாடலும் படத்தில் இடம் பெறவில்லை. தேவா இசையில் அம்மா வந்தாச்சு படத்தில் “இது உனக்காக பாடும் ராகம்” என்ற பாடலை பாடினார்கள். அதுவும் படத்தில் இடம் பெறவில்லை. இந்த மூன்று படங்களையும் சுசீலாம்மா பாடி இருக்காங்க என்கிற ஒரே காரணத்துக்காக போயி பாத்து ஏமாந்து... ஹூம்...  அடுத்தது “ஆனைகட்டி போரடிக்கும் திராவிட நாடு” (நியாயங்கள் ஜெயிக்கட்டும்) என்ற பாடலை  மனோ, பி.சுசீலா, சித்ரா பாடி இருக்கிறார்கள். அப்பாடா...!! பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தது. கற்பூர முல்லை படத்தில் கே.ஜெ.யேசுதாஸ், பி.சுசீலா, சித்ரா பாடிய “பூங்காவியம் பேசும் ஓவியம்” பாடல் ஹிட் ஆன பாடல். அனால் பி.சுசீலா சோலோவாக பாடிய "பூங்காவியம்" பாடல் படத்தில் இல்லை.  இதே பாடல் மலையாளத்தில் “ஆலாபனம் தேடும் தாய் மனம்” என ஒலித்தது. தனிப்பாடலான "பூந்தென்னலோ கண்ணீர் தும்பியோ" படத்தில் இல்லை. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால். பி.சுசீலா, பி.லீலாவின் பெயர்கள் சித்ராவின் பெயருக்கு பின்னால் டைட்டில் கார்டில் வரும். 
   
 தெலுங்கில் sravana meghalu (1986) படத்தில் srunganiki ishta sakhalamuஎன ஒரு அருமையான பாடலை சக்கரவர்த்தி இசையில் பாடி இருக்கிறார்கள். Anna thammudu (1989) படத்தில் மனோ, சுசீலா, சித்ரா மூவரும் சேர்ந்து “puttu puttuaaஎன்ற பாடலை பாடி இருக்கிறார்கள். Srirama chandrudu (1989) படத்தில் “chinni chinni kannayaku என்ற பாடலை பாடி இருக்கிரார்கள். ரொம்ப நல்ல பாடல்.
மலையாளத்தில் வித்யாதரன் அவர்கள் இசையில் "நவமி" என்ற இசைத்தொகுப்பில் "Navarathri maholsava" என்ற பாடலை இணைந்து பாடி இருக்கிறார்கள்.   
      சென்ற வருடம் (2013) –இல் பி.சுசீலா அவர்கள் இசை அமைத்த “Sri Simhachala Swamy” இசைத்தொகுப்பில் “deva vyasaparashara” என்ற  பாடலை பாடி இருக்கிறார் சித்ரா. ஆக மொத்தத்தில் பி.சுசீலா இசையிலும் பாடி விட்டார்.

                   சில பாடல்கள் ஒரு மொழியில் சுசீலாவும், இன்னொரு மொழியில் சித்ராவும் பாடியிருக்கிறார்கள். அந்த தொகுப்பு கீழே..


P.Susheela K.S.Chitra
nenoka sindhu (sindhu bahiravi -telugu)naanoru sindhu (Sindhu Bhairavi -tamil)
krishna raavela (Nandhini -telugu)kanna varuvaaya -Tamil
enthi enthi (nandhini - telugu)kannin maniye -Tamil
pachani pandirilona (anubandalu -telugu)maalai soodum (pudhiya raagam -Tamil)
naane un kadhali (thayam onnu -Tamil)naa vayasu needele (chilipi donga -Telugu)
college agelo (indrudu chandrudu -Telugu)college degree - tamil
hey chitti nana (premanjali -Telugu)ye ayya saamy (varusham 16 -Tamil)
eenaati anuraga - Teluguengengu nee sentra (jallikattu- tamil)
varam thantha samikku - Tamillaali laali (swathi muthu -kannada)
aadum neram (soora samharam- Tamil)aade eedu (police diary -Telugu)
paata paadana (Telugu)maasi maasam than -Tamil
aasalanni needaipothe (telugu)aathukkulle theepudicha -Tamil
aliveni enthu cheyvu (gaanam- malayalam)aliveni enthu cheyvu
minnum ponnin kireedam (malayalam)minnum ponnin (sargam)

    பி.சுசீலா பாடிய பல பாடல்களை சித்ரா இசை நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறார். அவை youtube-ல் upload  செய்யப்பட்டு இருக்கிறது. "சின்னஞ்சிறு கண்மலர், செம்பவழ வாய்மலர்" பாடலை ஒரு ராம நாராயணன் படத்தில் சித்ரா பாடி கேட்டிருக்கிறேன்.