பின்பற்றுபவர்கள்

புதன், 5 பிப்ரவரி, 2014

நடிகையர் திலகமும் பாடகியர் திலகமும்

   நடிகை சாவித்திரிக்கு பி.சுசீலா பின்னணி பாடிய பாடல்கள்.                                                               
                    நடிகை சாவித்திரி அவர்கள் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் கொடிகட்டி பறந்தவர். 20  வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாகவே நடித்தவர். தமிழில் நடிகையர் திலகம் எனவும், தெலுங்கில் "மஹா நடி" எனவும் கொண்டாடப்பட்டவர். அந்த கால கட்டத்தில் அஞ்சலி தேவி, பானுமதி, கண்ணாம்பா போல சில நடிகைகளே இரு மொழிகளிலும் உச்சத்தில் இருந்தவர்கள். சரோஜாதேவி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா போன்றோர் தமிழில் உச்சத்தில் இருந்தாலும், தெலுங்கில் அப்பவப்போது தான் நடித்து வந்தார்கள். ஜமுனா, கிருஷ்ணகுமாரி, வாணிஸ்ரீ போன்றோர் தெலுங்கில் மிக பிரபலமாக இருந்தாலும், தமிழில் அவ்வப்போது தான் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சாவித்திரி இரு மொழிகளிலும் ஒரே சீராக நடித்து வந்தார். அவர் அமர்ந்த நாற்காலியை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்ததாக கூற கேட்டிருக்கிறேன். நடிப்பை பொருத்த வரை அவர் இடம் இன்னமும் காலியாகவே இருக்கிறது.

                  ஆரம்ப காலங்களில் பி.லீலா, ஜிக்கி மற்றும் கே.ராணி  சாவித்திரிக்கு குரல் கொடுத்து வந்தார்கள். அதில் நிறைய ஹிட் பாடல்கள். தேவதாஸ்  படத்துக்கு பிறகு சாவித்திரியின் மார்க்கெட் அமோகமாகவே இருந்தது. "1954" இல் வெளிவந்த "தொங்க ராமுடு" படத்தில்,  ஹிட் ஆன, "அனுராகமு விரிசின ஈ ரேயி" பாடலைக்கேட்ட பின் தான் சாவித்ரி  பி.சுசீலாவும்  எனக்காக குரல் கொடுக்கட்டும் என கூறினாராம். 1955-56 இல் தான் பி.சுசீலா சாவித்திரிக்கு பாட ஆரம்பித்தார். ( முதலில் சாவித்திரிக்காக பாடல் எது என்று எனக்கு தெரியவில்லை.) 1960 வரையில் பி.லீலா, ஜிக்கி, பி.சுசீலா என மூவரும் சாவித்திரிக்கு குரல் கொடுத்து இருக்கிறார்கள். 1960-இல் இருந்து பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா தான் பாடினார். சாவித்திரியே  தயாரிப்பாளர்களிடம் பி.சுசீலா தான் பாட வேண்டும் என கேட்டு பாட வைப்பார் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த அளவுக்கு பி.சுசீலாவின் குரல் மேல் ஒரு அபிமானம் வைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் எத்தனை எத்தனை முத்தான பாடல்கள்.!! சாவித்திரியே நேரில் பாடுவது போல் இருக்கும். அப்படி ஒரு பொருத்தம் குரலுக்கும், நடிப்புக்கும். பாடல்களில் இருக்கும் சின்ன சின்ன சங்கதிகளை கூட நுணுக்கமாக புரிந்து கொண்டு அதை முகபாவத்தில் கொண்டு வருபவர் நடிகையர் திலகம் சாவித்திரி.
                                                                         

     அமர தீபம் (1956) படத்தில் ஏ.எம்.ராஜா - பி.சுசீலா பாடிய  "தேன் உண்ணும் வண்டு"  பாடலை யாரும் மறக்க முடியுமா? மகாதேவி(1956) படத்தில் "கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே" பாடலை மறக்க முடியுமா? வெல்வெட் போல் இழையும் குரல்களும், அதற்கு  இணையாக சாவித்திரியின் கள்ளமில்லா முகமும், நடிப்பும் கண்முன்னே நிற்கிறது.  கிட்டத்தட்ட 58 வருடங்கள் கழித்து, இப்போது கேட்டாலும் மனதோடு ஒட்டிக்கொள்வதே இப்பாடல்களின் தனிச்சிறப்பு. தெலுங்கில் மகாதேவி படத்தின்  பல  பாடல்களை பி.சுசீலா பாடினார். "காக்கா காக்கா மைகொண்டா", "சிங்காரகண்ணே உன் தேனூறும் சொல்லாலே", "காமுகர் நெஞ்சில் நீதி இல்லை", "சேவை செய்வதே அனந்தம்" என பல பாடல்களின் தெலுங்கு வடிவம் பி.சுசீலாவின்  குரலில் ஒலித்தது.
     இசை மேதை "ஜி.ராமநாதன்" இசையில் வணங்காமுடி பாடல்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏ.எம்.ராஜா-பி.சுசீலா குரலில்   "வாழ்வினிலே வாழ்வினிலே" ,  என தென்றல் போல் வருடும் ஒரு பாடல். சிவாஜியும் சாவித்ரியும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருப்பார்கள். தோடி ராகத்தில்  அமைந்த "என்னைப்போல் பெண்ணல்லவோ" பாடல்  எவர்க்ரீன் செமி-கிளாசிகல் பாடலாக அமைந்தது. "என்னைப்போல் பெண்ணல்லவோ" பாடலில் வரும் சின்ன சின்ன சங்கதிகளையும் முகத்தில் கொண்டு வருவார் சாவித்திரி !  டி.எம்.எஸ், பி.சுசீலா இணைந்து பாடும் "மோகனபுன்னகை செய்திடும் நிலவே"  காதுக்கு இதமான பாடல். "பாகுடன் தேனும் கலந்திடும் நேரம் சாகசம் புரியும்" இந்த பாடலும், தொடர்ந்து வரும் ஆலாபனைகளும் ஜி.ராமநாதன் அவர்கள் ஒரு டூயட்டில் காண்பித்திருக்கும் தரத்தையும், இனிமையையும் பறைசாற்றும். சீர்காழியாரின் " மலையே உன் விலையே நீ பாராய்" என்ற பாடலை தொடர்ந்து சுசீலா குழுவினருடன் பாடும் "ராஜயோகமே பாரீர்" பாடலை கேட்காதவர் ஒரு முறையாவது  கேட்டு பாருங்கள். "தேன் பாயும் சோலை, இளம் தென்றல் வேளை, மான் போவதாலே மயங்கும் இந்நாளே" என பாடலில் ஒரு வரி  வரும். சுசீலாம்மாவின் குரலில் ஒலிக்கும் பாடலும் அப்படித்தான் இருக்கும்.
        அன்னையின் ஆணை படத்தில் ஒலிக்கும்    "கனவின் மாயாலோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே"   என்ற அழகான ஜோடிப்பாடல் நம்மை கனவுலகுக்கே அழைத்து செல்லும். கண்ணுக்கு குளிர்ச்சியான  ஒளிப்பத்திவு, காதுக்கு குளிர்ச்சியான குரல்கள், அழகான சாவித்திரி, தேனிசை என சொல்லிக்கொண்டே போகலாம்.  மஞ்சள் மஹிமை படத்தில் ஒலிக்கும் "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா " பாடலுக்கு மயங்காதோர் இருக்க முடியாது. அதே படத்தில் "மாறாத சோகம் தானோ" , என சோக ரசம் ததும்பும் ஒரு பாடலும் ரசிகர்கள் உளம் கவர்ந்த பாடல். "கோடை மறைந்தால் இன்பம் வரும்" மற்றுமோர் அருமையான பாடல்.மெல்லிசையை நெய்வது, ஐம்பதுகளில் இசை அமைத்த  ஆந்திர இசை அமைப்பாளர்களுக்கு கை வந்த கலையாக இருந்தது. மாஸ்டர் வேணு, பெண்டியாலா, எஸ்.ராஜேஸ்வர ராவ், ஆதி நாராயண ராவ்  என பல மேதைகள் இருந்தார்கள்.
     ஐம்பதுகளின் இறுதியில்  வந்த பல அருமையான பாடல்கள் இந்த கூட்டணிக்கு சொந்தம். காத்தவராயன் படத்தில், ஜி. ராமநாதன் இசையில் "நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா", பதி பக்தியில்  "இரை போடும் மனிதருக்கே", சின்னஞ்சிறு கண்மலர்" , அம்பிகையே முத்து மாரியம்மா" , யார் பையன் படத்தில் "தந்தை யாரோ, தாயும் யாரோ" போன்றவை இப்போதும் ரசிக்கப்படும் பாடல்கள்.
     அறுபதுகளின் துவக்கம் தமிழ் பட இசையின் பொற்காலமாகவே அமைந்தது. இவர்களின் கூட்டணியில் பல வெற்றிப்பாடல்கள் திரையை அலங்கரித்தது. 1960-இல் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் "ஆடாத மனமும் ஆடுதே", கண்களின் வார்த்தைகள் புரியாதோ" பாடல்கள் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள். இவர்கள் கூட்டணியின் கிரீடம் என்றால் "பாசமலர்" பாடல்கள் தான். "மலர்ந்தும் மலராத" ஒன்று போதுமே. சுசீலாம்மா பாடும் போது கொடுத்த ஒவ்வொரு பாவத்தையும் சாவித்திரி நுணுக்கமாய் புரிந்து கொண்டு, திரையில் பிரதிபலிப்பார். அந்த சின்ன விசும்பல் ஒன்று போதுமே..!! அப்பப்பா...!  அதே படத்தில் "மயங்குகிறாள் ஒரு மாது" பாடல் குறிப்பிடப்பட வேண்டிய பாடல். "அன்பே, அன்பே.. அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா" என ஆண்களை அப்படியே சொக்க  வைக்கும் பாடல். "யார் யார் யார் அவள் யாரோ" என அழகிய தமிழில் பி.பி.எஸ் உடன் ஒரு மயக்கும் ஜோடிப்பாடல். "எங்களுக்கும் காலம் வரும்" என ஒரு தன்னம்பிக்கை தரும் பாடல். பல சாதனைகள் படைத்த படத்தில் இசையின் பங்களிப்பும் படத்துக்கு ஒரு தூணாய் அமைந்தது. அதே வருடத்தில் "பாட்டாளியின் வெற்றி", தூய உள்ளம்". எல்லாம் உனக்காக". அன்பு மகன்" போன்ற படங்களில் குறிப்பிடபடத்தக்க பல பாடல்கள் இடம் பெற்றன.

    1961-இல் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வந்த "காற்று வெளியிடை கண்ணம்மா" என்ற பாரதியார் பாடலை பி.பி.எஸ் - சுசீலா இணைந்து பாடினர். பிபி.எஸ் கண்ணம்மா என இரு முறை பாட , ம்..  ..ம்.. என செல்லமாய் கொடுப்பாரே எக்ஸ்ப்ரஷன்..!  அசத்தல்..!! பாடலோடு பின்னிப்பிணைந்த  பாவம் தான் பாடலை நீண்ட நாள் வாழ வைக்கும் என்பதற்கான உதாரணம் இந்த பாடல். ( என்னாலும் பாவத்தோடு பாட முடியும் என நிரூபிக்க பலர் தேவை இல்லாத இடத்தில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன் கொடுத்து எரிச்சலை கிளப்புவார்கள். நன்கு தெளிந்த பாடகருக்கு எங்கு பாவம் கொடுக்க வேண்டும், எங்கே நிறுத்த வேண்டும் என்ற அளவுகோல் தெரிந்திருக்கும். அரைகுறை இசை கலைஞர்கள் மிகைப்படுத்தியே கொடுமைப்படுத்துவார்கள் ) . ஆனால் இப்பாடலில். ஜி.ராமநாதன் இசை ஆகட்டும், பி.பி.எஸ்-சுசீலா குரலால் குழைவதாகட்டும், சாவித்திரி-ஜெமினி நடிப்பாகட்டும்.. தரத்தின் எல்லை இது தான் என உணர வைக்கும் விதத்தில் பணி புரிந்து இருப்பார்கள். தமிழில் வந்த சிறந்த பத்து டுயட்சை வரிசைப்படுத்தினால், அதில் இந்த பாடல் இடம் பிடிக்கும். அதே படத்தில் "சின்ன குழந்தைகள் போல் விளையாடி" என அருமையான பாடல் ஒன்றும் இருக்கிறது. இதே வருடத்தில் வெளி வந்த "பாவ மன்னிப்பு" படத்தில் பாடிய "அத்தான், என்னத்தான்" பாடலைப்பற்றி சொல்லவே தேவையில்லை. காலத்தை வென்ற பாடல். லதா மங்கேஷ்கர், ஆஷா, ஜேசுதாஸ் என பலரும் இப்பாடலை புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

         1962-இல் பந்த பாசம் படத்தில் PBS உடன் பாடிய "இதழ் மொட்டு விரிந்திட" பாடல் கவனத்தை ஈர்க்கும் பாடல். "என் கதை தான் உன் கதையும்"  ஒரு சோகப்பாடல். "காத்திருந்த கண்கள்" படத்தில் வரும் "வளர்ந்த கலை மறந்து விட்டாள்", "காற்று வந்தால் தலை சாயும்", " வா என்றது உருவம்" போன்ற பாடல்கள் ஹிட் பாடல்கள். "வளர்ந்த கலை" பாடலில் குழந்தையை முன்னிறுத்தி தம்பதியரின் ஊடலும், கூடலுமாய் பற்பல பாவங்கள் பாடலில் இழையோடும். சாவித்திரியின் நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கும்.  பாத காணிக்கை பட பாடல்கள் காதுக்கு மற்றுமோர் இசை விருந்து. "எட்டடுக்கு மாளிகையில்", "அத்தை மகனே போய் வரவா" "உனது மலர் கொடியிலே", "காதல் என்பது எது வரை" என தரமான பாடல்கள். எட்டடுக்கு மாளிகையில் பாடலில் "கையளவு உள்ளம் வைத்து, கடல் போல் ஆசை வைத்து" என வரும் வரிகளில் பி.சுசீலாவின் குரலில் தொனிக்கும் ஏக்கமும்  வலியும், மொத்த பாடலில் உணர்வுகளை சொல்லி விடும்.. நல்ல பாடல் கிடைத்தால், சாவித்திரிக்கு நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?!! பார்த்தால் பசி தீரும் படத்தில் "அன்று ஊமைப் பெண்ணல்லோ" பாடல் இரண்டு சூழ்நிலைகளில் ஒலிக்கும். முதலில் குழந்தைத்தனமாகவும், பின்னர் சோகப்பாடலாகவும் ஒலிக்கும். அ ..ஆ.. சொல்லிக்கொடுக்கும் இடத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் சாவித்ரி. அதிலும் குறிப்பாக.. "ஏ" என சொல்லி ஜெமினி அவரை தொட முயற்சிக்கும் போது "ஏய் ..." என சாவித்ரி விலகும் இடம் ரொம்ப இயல்பாக இருக்கும். எப்படி எல்லாம் யோசித்து கவிஞரும், இசை அமைப்பாளரும் இசை அமைத்திருக்கிறார்கள் !   வடிவுக்கு வளைகாப்பு படத்தில் "சாலையிலே புளியமரம்", "நில்லடியோ நில்லடியோ", "சீருலாவும் இன்ப நாதம்" என குறிப்பிடத்தக்க பாடல்கள். "கொஞ்சும் சலங்கை"யில் "கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு" என பி.சுசீலா பாடிய ஒரு பாடல் ரிக்கார்டில் இருக்கிறது. பி.லீலா பாடிய இதே பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தது. ( பி.சுசீலாவின் பாடல் டியூன் கூட கொஞ்சம் வித்தியாசம் தான்). வசந்த கால தென்றலில் என பாடலும் இருக்கிறது. படத்தில் இடம் பெற்றதா என தெரியாது. மனிதன் மாறவில்லை படத்தில் "குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்" என ஒரு அருமையான பாடல் இருக்கிறது. கேட்காதவர் ஒரு முறையாவது கேளுங்கள்.
          1963-இல் கற்பகம் படத்தில்  "ஆயிரம் இரவுகள் வருதுண்டு" பாடலில் "இதழ் தித்திக்க தித்திக்க ... " என ஒரு வார்த்தைக்கான இடைவெளி விடுவார் கவிஞர். அது என்ன வார்த்தை என ரசிகனுக்கு தெரியும். பாடகியும் பாடவில்லை, இசையிலும் சொல்லவில்லை. அதற்கு முந்திய வார்த்தை வரை வரும் வரிகளும், பாடகியின் குரலில் தொனிக்கும் எக்ஸ்ப்ரஷனும் அதை புரிய வைத்து விடும். ரசித்து கேட்க வேண்டிய பாடல். சமீபத்தில் "பக்கத்து வீட்டு பருவ மச்சான்" பாடலை தொலைக்காட்சியில் பார்த்த போது, "மரிக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான், மாந்தோப்பில் வழி மறிச்சி மயக்கத்தையே வர வழச்சான்" என்ற வரிகளில், பாட்டின் சுகமும், எக்ஸ்ப்ரஷன்சும், சட்சட்  என மாறும் சாவித்திரியின் முக பாவங்களும், அப்படியே பாட்டோடு என்னை கட்டிப்போட்டு விட்டது. "பரிசு" படத்தில் "எண்ண எண்ண இனிக்குது, ஏதேதோ நினைக்குது", " கூந்தல் கருப்பு" போன்ற பாடல்கள் ஹிட்ஸ் ஆனாலும், "காலமெனும் நதியினிலே" பாடல் என் கவனத்தை ஈர்த்த அருமையான  தத்துவ பாடல். ரத்த திலகம் படத்தில் இடம் பெற்ற "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடல் கல்லூரியை கடந்து வரும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நினைவிருக்கும் பாடல்.
           1964-இல் கர்ணன் படத்தில் ஒலித்த "என்னுயிர் தோழி" பாடலுக்கு எத்தனை விருது வேண்டுமானாலும் கொடுக்கலாம். விரஹபாவம் ததும்பும் பாடல் என்றாலும், அதை அருவெருப்பாக மாற்றாமல், எம்.எஸ்.வி யும் பி.சுசீலாவும் அதை ஒரு கண்ணியத்தோடு கையாண்டு இருப்பார்கள்,  "அரண்மனை அறிவான் அரியணை அறிவான்" என்ற வரிகளை தொடர்ந்து வரும் ஹம்மிங்கில் அதன் அத்தனை பாவத்தையும் கொண்டு வந்து விடுவார் சுசீலா. "அத்தான் என்னத்தான்" பாடலில் தேவிகாவுக்கு காதல் பாடம் நடத்தும் சாவித்திரி, "மஞ்சள் முகம் நிறம் மாறி" பாடலில்  தாய்மை, பேர் சூட்டல் என தோழியை கிண்டலும் கேலியுமாய் பாடி மகிழ்விப்பார். அதே வருடத்தில் வெளிவந்த நவராத்திரி படத்தில் "சொல்லவா கதை சொல்லவா" என குழலை மயக்கும் குரலில் ஒரு தாலாட்டுப்பாடல் கேட்டிருப்பீகள். "நவராத்திரி சுபராத்திரி" என நவராத்திரி பண்டிகைக்கான  ஒரு பக்தி பாடல் இப்போதும் பிரபலம். ஆனால் என்னைக்கவர்ந்த பாடல் "தங்க சரிகை சேலை எங்கும் பளபளக்க" என்ற தெருக்கூத்து பாடல் தான். தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட சாவித்ரியும், பி.சுசீலாவும் நம்முடைய கிராமியக்கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை அதன் நுணுக்கத்தோடு புரிந்து கொண்டு பாடி நடித்த விதம், பி.சுசீலாவிற்கும், சாவித்திரிக்கும் ஒரு சபாஷ் போட வைக்கிறது. வேட்டைக்காரன் படத்தில் "மஞ்சள் முகமே வருக", " என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ", "மெதுவா மெதுவா தொடலாமா". "கதாநாயகன் கதை சொன்னான்" என வரிசையாய் ஹிட் பாடல்கள். கை கொடுத்த தெய்வம் படத்தில் ஒலித்த "குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்" குறிப்பிடத்தக்க பாடல். ஆயிரம் ரூபாய் படத்தில் "பார்த்தாலும் பார்த்தேன்". "ஆனாக்க அந்த மடம்" பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை.
                                1965-இல் ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தில், பெண்மையை போற்றும் "இளமை கொலுவிருக்கும்" பாடல் இவர்கள் கூட்டணியில் அமைந்த ஒரு அருமையான பாடல். ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் என ஒரு ஜாலியான பாடலும் படத்தில் உண்டு. "மையேந்தும் விழியாட", "உன்னை ஊர் கொண்டு அழைக்க" என அழகிய பாடல்கள்  பூஜைக்கு வந்த மலர் படத்தில் இடம் பெற்றது. திருவிளையாடல் படத்தில் "நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு" பாடல் பிரபலமான பாடல். தேவா மகாதேவா என ஒரு பக்திப்பாடலும் படத்தில் இடம் பெற்றது. வல்லவனுக்கு வல்லவன் படத்தில் இடம் பெற்ற "பாரடி பெண்ணே கொஞ்சம்" ஒரு அருமையான கவ்வாலி வகைப்பாடல்.
                       1966-இல் வெளிவந்த படங்களில் சரஸ்வதி சபதம் படத்தில் "கோமாதா எங்கள்  குலமாதா" பாடல் மெகாஹிட் பாடல். தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் "கல்யாண பந்தல் அலங்காரம்", "ஊர் பாடும் தாலாட்டு" என இனிமையான பாடல்கள் இடம் பெற்றன. அண்ணாவின் ஆசை படத்தில் "கோவிலிலே வீடுகட்டி", "இன்பம் என்பது என்ன" போன்ற குறிப்பிடத்தக்க பாடல்கள் இடம் பெற்றன.
                      1967-இல் வெளிவந்த கந்தன் கருணை படத்தில் "ஆறுமுகனே ஷண்முகா" என தெள்ளத்தெளிவான உச்சரிப்புடன்  ஒரு விருத்தம் இருக்கிறது. முருக பக்தர்களுக்காகவே  அமைந்த  "சொல்ல சொல்ல இனிக்குதடா" பாடலை பற்றி நிறைய எழுதலாம். உச்சரிப்பு, இனிமை, தெளிவு, அழகிய இசை, சிறந்த நடிப்பு, தெளிந்த நீரோடை போன்ற வரிகள்  என எல்லாம் கலந்த உன்னதமான பாடல் அது. காலத்தை கடந்தும் நிற்கிறது. அதே வருடத்தில் வெளி வந்த "சீதா" படத்தில் "காவியத்தின் தலைவன் ராமனடி" என ராமனை துதிக்கும் ஒரு பாடல் இடம் பெற்றது. திருவருட்செல்வர் படத்தில் சிவனை துதிக்கும் "ஆதி சிவன் தாழ் பணிந்து" என்ற அருமையான பாடல் இடம் பெற்றது.
                       1969-இல் வெளிவந்த குழந்தை உள்ளம் படத்தில் "பூமரத்து நிழலும் உண்டு" என அருமையான் ஒரு சோகப்பாடல் இடம் பெற்றது. 1970-இல் சாவித்ரியின் சொந்த தயாரிப்பில் வெளிவந்த பிராப்தம் படத்தில் "சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்". "சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து" போல பல நல்ல பாடல்களை பாடினார் பி.சுசீலா. "மூக மனசுலு" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் இந்த படம்.

பாடல்களின் முழுத்தொகுப்பையும் கீழே அளித்திருக்கிறேன்.

                       தெலுங்கில் பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்தார் சாவித்ரி. சில பிரபலமான பாடல்களை மட்டும் குறிப்பிடுகிறேன். " aaha naa pelliyanta , theliyani anandam. aakasha veedhilo, vadina poole, melimi bangaru, muddabanthi, (தாழையாம் பூமுடிச்சி ),  nee chelimi nede, chaduvurani vadavani , (படித்ததினால் அறிவு பெற்றோர்)  anaganaka oka raju, (ஒரே ஒரு ஊரிலே),  aligina velane choodali, yevandoy srivaru, "chandruni minchu" (மலர்ந்தும் மலராத ), vinipinchani ragale, janani sivakamini, sakhiya vivarichavevenuganamu vinipinchane, saagenu jeevitha naavasagenu jeevitha naava(sad), neevu leka veena, padamani nannadaga thaguna, nijam cheppave pilla, ee naati ee bandham, naa paata nee nota, kannulo musamisalu, kannu moosindi ledu, ninnu choodani, kannayya nallani, (கண்ணா கருமை நிற ) chinnari ponnari puvvu, (பூப்போல பூப்போல)  himagiri sogasulo, kanulu kanulatho,(ஒருத்தி ஒருவனை) annadi  neevena, (சொன்னது நீ தானா) manase kovelaga (happy), manase kovilaga... list goes on..  (please find the complete link blow)

               P.Susheela Sings to  Actress Savithri


Year Language Movie Songs Music
1955 Telugu kanyasulkam anandama arnavamaite Ghantasala
1955 Tamil Chella pillai koyil kaalai (first duet with TMS) R.Sudarsanam
1955 Tamil Chella pillai thannale varum kasu R.Sudarsanam
1956 Tamil amaradeepam then unnum vandu  T. Chalapathi rao
1956 Tamil prema paasam muralidharaa hare S. Rajeshwara rao
1957 Telugu bhale ammayeelu Muddulokilevoyi  S. Rajeshwara rao
1957 Tamil enga veetu mahalakshmi polladha payale Master Venu
1957 Tamil enga veetu mahalakshmi kaathadi kaathadi Master Venu
1957 Tamil enga veetu mahalakshmi palakalam vedhanai Master Venu
1957 Tamil enga veetu mahalakshmi aadipaadi vela senja Master Venu
1957 Tamil maayaabazar pambaramaai aadalam Ghantasala
1957 Tamil maayaabazar thayai seiveera Ghantasala
1957 Tamil mahaadevi kann moodum vElayilum MSV-TKR
1957 Tamil mahadevi sudhanthira thagam MSV-TKR
1957 Telugu mayabazar aaha naa pellanta Ghantasala
1957 Kannada Mayabazzar manavu prema Ghantasala
1957 Tamil MLA arivilum kalayilum Pendyala
1957 Tamil MLA kottayul Pendyala
1957 Telugu thodi kodallu Srirastu subhamastu Master Venu
1957 Telugu thodi kodallu atilobhula me madagamaya Master Venu
1957 Telugu thodi kodallu Aduthupaduthu panichestunte Master Venu
1957 Telugu thodi kodallu kalakalam e kalata nilacEdi Master Venu
1957 Tamil vanangamudi Ennai pol penn allavo G. Ramanathan
1957 Tamil vanangamudi Mohana punnagai seithidum  G. Ramanathan
1957 Tamil vanangamudi raja yogame paareer G. Ramanathan
1957 Tamil vanangamudi vaazhvinile vaazhvinile G. Ramanathan
1957 Tamil yaar paiyan thaayum yaaro, thanthai  T. Chalapathi rao
1957 Telugu evari abbayi antharayam manakuledu Ibrahim
1957 Telugu evari abbayi ennenniyo kalavaya Ibrahim
1957 Telugu evari abbayi swami aa raja raja Ibrahim
1958 Tamil adhisaya thirudan vidinthadhe maharaja Susarla Dakshinamoorthy
1958 Tamil adhisaya thirudan velli nilave oh vennilaave Susarla Dakshinamoorthy
1958 Tamil annaiyin anai kanavin mayaa logathile S. M. Subbiah Naidu
1958 Tamil annaiyin anai vaanga vaanga maapillai S. M. Subbiah Naidu
1958 Tamil annaiyin anai ulaginil uyir vaazha S.M. subbaiah naidu
1958 Tamil annaiyin anai puriyatha inbam S. M. Subbiah Naidu
1958 Tamil kaathava rayan niraiveruma ennam G. Ramanathan
1958 Tamil kadan vangi kalyanam kallamilla kaadhalilE S. Rajeswara Rao
1958 Tamil kadan vangi kalyanam un cheviyil cherathatheno S. Rajeshwara rao
1958 Tamil kudumba gowravam thennavan thai naatu MSV-TKR
1958 Tamil manamalai nadakkathu jambam  Veda
1958 Tamil manamalai pennana pethai vaazhvile Veda
1958 Telugu mangalya balam Theliyani aanandam Master Venu
1958 Telugu mangalya balam sriyuta murthi o  (verse) Master Venu
1958 Telugu mangalya balam Aakasaveedhilo Master Venu
1958 Telugu mangalya balam penuchiikaTaaye lOkaM celerEge Master Venu
1958 Telugu mangalya balam Vaadina poole vikasinchane Master Venu
1958 Tamil panai pidiththaval bhagyasali sOlaikkuLLe S. Rajeshwara rao
1958 Tamil pathi bhakthi chinnanchiru kanmalar MSV-TKR
1958 Tamil pathi bhakthi irai podum manitharukke MSV-TKR
1958 Tamil pathi bhakthi kObama en mel kObama MSV-TKR
1958 Tamil pathi bhakthi omkaara roopini aangara MSV-TKR
1958 Tamil thirumanam engal nadu andhra nadu S.M. subbaiah naidu
1958 Tamil thirumanam naanga pirantha  S.M. subbaiah naidu
1958 Tamil thirumanam malayalam pugazh S.M. subbaiah naidu
1959 Telugu appu chesi pappu kudu moogavainaemile S. Rajeshwara rao
1959 Telugu appu chesi pappu kudu kalam kani kalam S. Rajeshwara Rao
1959 Telugu bhagya devatha Madhini haayi Master Venu
1959 Telugu bhagya devatha mariconjam niddura  Master Venu
1959 Tamil bhagya devathai (D) illara poonkaavil Master Venu
1959 Tamil manjal mahimai aagaya veedhiyil-ver2 Master Venu
1959 Tamil manjal mahimai anbinal entrum ontrai vaazhanum Master Venu
1959 Tamil manjal mahimai aagaya veedhiyil azhagaana Master Venu
1959 Tamil manjal mahimai ethu enna aananthamo Master Venu
1959 Tamil manjal mahimai kodai marainthal inbam Master Venu
1959 Tamil manjal mahimai maradha sogam thaano Master Venu
1959 Tamil manjal mahimai undu enbeero illai poi Master Venu
1959 Telugu nammina bantu Chengu chenguna ghanthulu S. Rajeshwara Rao
1959 Telugu nammina bantu Entha manchivadavura S. Rajeshwara Rao
1959 Telugu pathi bhakthi chinni chinni kannula MSV-TKR
1959 Telugu pathi bhakthi kopama naa pai kopama MSV-TKR
1959 Tamil sowbhagyavathi ohoho machan pendyala
1959 Telugu sri venkateswara mahatyam vinudee kaliyuga Pendyala
1959 Telugu srivenkateswara mahatyam chinnari Oh chilukka  Pendyala
1959 Telugu srivenkateswara mahatyam jhuma jhuma jhum Pendyala
1959 Telugu srivenkateswara mahatyam Kalaga kamani kalaga Pendyala
1959 Telugu srivenkateswara mahatyam Yevaro athadevaru Pendyala
1959 Telugu srivenkateswara mahatyam kalaye jeevitha (padhyam) Pendyala
1960 Telugu nammina bantu raithu medibatti S. Rajeshwara Rao
1960 Telugu nammina bantu aalumagalu pondu S. Rajeshwara Rao
1960 Telugu abhimanam anandham anandham Ghantasala
1960 Telugu abhimanam dhayagala thallini Ghantasala
1960 Telugu abhimanam ooyalaloogi naa hrudayam Ghantasala
1960 Telugu bavaa maradallu Hridayama Oh bela Pendyala
1960 Telugu bavaa maradallu Payaninche(happy) Pendyala
1960 Telugu bavaa maradallu Payaninche(sad) Pendyala
1960 Telugu deepavali Yedhu movli priya sati Sangitha Rao
1960 Telugu deepavali bhagyamu Sangitha rao
1960 Telugu deepavali jaya vijay bhava Sangitha rao
1960 Telugu deepavali sreehari (padhyam) Sangitha rao
1960 Tamil kalathoor kannamma aadaadha manamum aaduthey R. Sudarsanam
1960 Tamil kalathoor kannamma kangalin vaarthigal puriyaadho R. Sudarsanam
1960 Telugu kumkuma rekha Jola padenu nidurinchu baabu laali Master Venu
1960 Telugu kumkuma rekha pilachina naa raaju raadelano Master Venu
1960 Telugu kumkuma rekha neevu veliginchu Master Venu
1960 Tamil paasamalar Yaar Yaar aaval Yaaro MSV-TKR
1960 Tamil paasamalar Mayangukiral oru maadhu MSV-TKR
1960 Tamil paasamalar Engalukkum kaalm varum MSV-TKR
1960 Tamil paasamalar Malarnthum malaradha MSV-TKR
1960 Tamil paattaaliyin vetri uzhavan munnale than Master venu
1960 Tamil paattaaliyin vetri pondaatti purushan Master venu
1960 Tamil paattaaliyin vetri entha nalume naame iruvarum Master Venu
1961 Tamil paattaaliyin vetri jingu jingunnu Master Venu
1961 Tamil pudhiya padhai innum en varavillai Master Venu
1960 Tamil srinivasa kalyanam idhuthan nimmadhi ?
1960 Tamil srinivasa kalyanam ezhil sinthidum ?
1960 Tamil thooya ullam intha pazhasai avuthu Pendyala
1960 Tamil thooya ullam kanne kanne unniathodum Pendyala
1960 Tamil thooya ullam desamengum viduthali Pendyala
1960 Tamil thooya ullam o velappa thanga velappa Pendyala
1960 Tamil thooya ullam valarum kalayin Pendyala
1960 Telugu chivaraku migiledhi kavi kokila Aswathama
1960 Telugu chivaraku migiledhi akkineni  Aswathama
1961 Tamil anbu magan chal chalo T. Chalapathi rao
1961 Tamil anbu magan annam pola unnai T. chalapathi rao
1961 Tamil ellaam unakkaaga konji varum nenjil  K.V. Mahadevan
1961 Tamil ellaam unakkaaga manasu pol maapillayai K.V. Mahadevan
1961 Tamil ellaam unakkaaga thanga magane inbam  K.V. Mahadevan
1961 Tamil ellaam unakkaaga veesiya puyal ennum K.V. Mahadevan
1961 Tamil ellaam unakkaaga asainthu kulungum K.V. Mahadevan
1961 Tamil ellaam unakkaaga malarum kodiyum  K.V. Mahadevan
1961 Telugu Kalasi Vunte Kaladu Sukham bangaram aaha master venu
1961 Telugu Kalasi Vunte Kaladu Sukham kalasivunte kaladu master venu
1961 Telugu Kalasi Vunte Kaladu Sukham melimi bangaram master venu
1961 Telugu kalisivunte kaladhu sukham Muddabanthi poolu peti Master Venu
1961 Tamil kappalottiya thamizhan chinna kuzhanthaigal G. Ramanathan
1961 Tamil kappalottiya thamizhan kaatru veliyidai kannamma G. Ramanathan
1961 Tamil paava mannippu athan ennathan avar ennaithan MSV-TKR
1961 Telugu velugu needalu Oh rangayyo poola Pendyala
1961 Telugu velugu needalu challani vennela Pendyala
1961 Telugu velugu needalu chitti potti chinnari  Pendyala
1962 Telugu aaradhana Nee chelimi nede korithini S. Rajeshwara Rao
1962 Telugu aaradhana vennelaloni vikasame S. Rajeshwara Rao
1962 Telugu atmabandhuvu Chaduvuvu rani vaadavani K.V. Mahadevan
1962 Telugu atmabandhuvu Anaganaga oka raju K.V. Mahadevan
1962 Tamil bandha paasam En kadhai than un kadhayum MSV-TKR
1962 Tamil bandha paasam Ithaz mottu virinthida MSV-TKR
1962 Telugu gundamma katha Aligina velane choodali Ghantasala
1962 Telugu gundamma katha kolokoloyanna kolo  Ghantasala
1962 Tamil kaathirundha kangal vaa entradhu uruvam MSV-TKR
1962 Tamil kaathirundha kangal kaatru vandhal thalai MSV-TKR
1962 Tamil kaathirundha kangal valartha kalai maranthu  T.K. Ramamoorthy
1962 Telugu kalimi levulu Chilipi chilukamma Aswathama
1962 Tamil konjum salangai vasantha kala thendralil S.M. subbaiah naidu
1962 Tamil konjum salangai konjum salangai oli  S.M. Subbiah naidu
1962 Telugu manchi manasulu nannu vadili neevu K.V. Mahadevan
1962 Telugu manchi manasulu Thyagam edhe K.V. Mahadevan
1962 Telugu manchi manasulu Yemandoi sreevaru K.V. Mahadevan
1962 Tamil manidhan maravillai kuRumbinilum oru ezhil  Ghantasala
1962 Tamil paadha kaanikkai athai maganE pOi varavaa MSV-TKR
1962 Tamil paadha kaanikkai ettadukku maaligayil MSV-TKR
1962 Tamil paadha kaanikkai Unadhu malar kodiyile enadhu MSV-TKR
1962 Tamil paadha kaanikkai kaadhal enbadhu edhu varai MSV-TKR
1962 Tamil paadha kaanikkai sonnadhellaam nadathidumaa MSV-TKR
1962 Tamil paarthal pasi theerum antru oomai pennallo M.S. Viswanathan
1962 Tamil paarthal pasi theerum antru oomai penn allo-ver2 M.S. Viswanathan
1962 Tamil padiththal mattum podhuma thannilavu thEn iraikka M.S. Viswanathan
1962 Telugu raktha sambandham(old) chanduruni minchu Ghantasala
1962 Telugu raktha sambandham(old) Bangaru Bomma raveme Ghantasala
1962 Telugu raktha sambandham(old) Oho vayyari Ghantasala
1962 Telugu raktha sambandham(old) Yevaro nanu Ghantasala
1962 Telugu raktha sambandham(old) Manchi roju vacchunule Ghantasala
1962 Telugu sirisampadhalu Gudilo devuni Master Venu
1962 Tamil vadivukku valai kappu chaalayilE puliyamaram  K.V. Mahadevan
1962 Tamil vadivukku valai kappu chillentru poothu sirikkintra K.V. Mahadevan
1962 Tamil vadivukku valai kappu nilladiyo nilladiyo nenachi K.V. Mahadevan
1962 Tamil vadivukku valai kappu seerulaavum inba naadham K.V. Mahadevan
1962 Telugu Muripinche muvvalu Kuluku teenateega ea okatundoi Subbaiah naidu
1963 Telugu chaduvukunna amayeelu vinipinchani raagaale S. Rajeshwara rao
1963 Telugu chaduvukunna amayeelu Adavari matalo ardham S. Rajeshwara Rao
1963 Telugu chaduvukunna amayeelu Okate hridayam kosamu S. Rajeshwara Rao
1963 Tamil karpagam annai madi methayaadi (Sad) MSV-TKR
1963 Tamil karpagam pakkathu vEtu paruva machaan MSV-TKR
1963 Tamil karpagam aayiram iravugal varuvathundu MSV-TKR
1963 Tamil karpagam aayiram iravugal -ver2 MSV-TKR
1963 Telugu narthanasala Janani sivakamini S. Dakshinamoorthy
1963 Telugu narthanasala Dariki raboko S. Dakshinamoorthy
1963 Telugu narthanasala Durvarokya (Padhyam) S. Dakshinamoorthy
1963 Telugu narthanasala Hey Gopalaka S. Dakshinamoorthy
1963 Telugu narthanasala Sakhiya vivarinchave S. Dakshinamoorthy
1963 Tamil parisu aalaipaarthu K.V. Mahadevan
1963 Tamil parisu eNNa eNNa inikkudhu K.V. Mahadevan
1963 Tamil parisu kaalamenum nadhiyinilE K.V. Mahadevan
1963 Tamil parisu koondhal kaRuppu kungumam K.V. Mahadevan
1963 Telugu pooja phalam Pagale vennela (short version) S. Rajeshwara Rao
1963 Telugu pooja phalam Edi Challani Velaina S. Rajeshwara Rao
1963 Telugu pooja phalam Suranandana -andhena ee S. Rajeshwara Rao
1963 Telugu pooja phalam Yendhu daagi vunnavo S. Rajeshwara Rao
1963 Telugu pooja phalam sarasarammuluga-solkam S. Rajeshwararao
1963 Telugu pooja phalam neruthuno ledo-idi challani-sad S. Rajeshwara rao
1963 Tamil ratha thilagam pasumai niRaindha  M.S. Viswanathan
1963 Tamil ratha thilagam mullirukkum rojavile M.S. Viswanathan
1963 Telugu sirisampadhalu Yenduko siggenduko Master Venu
1963 Telugu sirisampadhalu Venuganamu vinipinchane Master Venu
1963 Telugu thobuttuvulu Challani Ee salapamlo C. Mohandas
1963 Telugu thobuttuvulu Saagenu Jeevitha Naava C.Mohandas
1963 Telugu thobuttuvulu Madhuramaina reyilo C.Mohandas
1964 Tamil aayiram rubaai aanaakka antha madam K.V. Mahadevan
1964 Tamil aayiram rubaai paarthaalum paarthen  K.V. Mahadevan
1964 Telugu doctor chakravarthi Neevuleka veena S. Rajeshwara Rao
1964 Telugu doctor chakravarthi Neevulekhaveena(sad) S. Rajeshwara Rao
1964 Telugu doctor chakravarthi Paadamani nannadaga S. Rajeshwara Rao
1964 Telugu doctor chakravarthi Nijam cheppave pilla S. Rajeshwara Rao
1964 Tamil kaikodutha deivam kulunga kulunga  MSV-TKR
1964 Telugu karna evvari M.S. Viswanathan
1964 Telugu karna bangaru M.S. Viswanathan
1964 Tamil karnan Ennuyir Thozhi keloru  MSV-TKR
1964 Tamil karnan Manjal mugam niram MSV-TKR
1964 Telugu mooga manasulu Eenati eebandham -ver1 K.V. Mahadevan
1964 Telugu mooga manasulu Eenati eebandham -ver2 K.V. Mahadevan
1964 Telugu mooga manasulu Naa paata nenota K.V. Mahadevan
1964 Tamil navaraathri navaraathiri subharaathiri M.S. Viswanathan
1964 Tamil navaraathri Sollava kadhai Sollava M.S. Viswanathan
1964 Tamil navaraathri rajadhi raja maha raja  M.S. Viswanathan
1964 Telugu navaraathri Navaraathri subharathri T. Chalapathi Rao
1964 Telugu navaraathri cheppana katha cheppana T. Chalapathi Rao
1964 Telugu navaraathri Yem pillo yekkadiki T. Chalapathi Rao
1964 Telugu navaraathri premaku (Hospital song) T. Chalapathi Rao
1964 Tamil vetaikkaran En kannanukkethani K.V. Mahadevan
1964 Tamil vetaikkaran kadhaanaayagan kadhai K.V. Mahadevan
1964 Tamil vetaikkaran manjaL ugamE varuga K.V. Mahadevan
1964 Tamil vetaikkaran medhuvaa medhuvaa  K.V. Mahadevan
1964 Telugu Aadarsha Sodharulu Naa Katha ea vyadha avuno  T.V. Raju
1964 Telugu Aadarsha Sodharulu Nanu Mudduga Joochedu  T.V. Raju
1965 Telugu devatha Kannulo missamissalu S.P. Kodandapani
1965 Telugu devatha Tholi valape padhe S.P. Kodandapani
1965 Tamil hello mr.zameendar ilamai koluvirukkum MSV-TKR
1965 Tamil hello mr.zameendar thottathup poove T.K. Ramamoorthy
1965 Tamil hello mr.zameendar hello mr.zameendar MSV-TKR
1965 Telugu manushulu mamathalu Kannu moosindhi ledhu T. Chalapathi Rao
1965 Telugu manushulu mamathalu Ninnu choodani T. Chalapathi Rao
1965 Telugu manushulu mamathalu vennelo malliyalu T. Chalapathi Rao
1966 Telugu manushulu mamathalu ontariga vunnavante T. Chalapathi Rao
1967 Telugu manushulu mamathalu neevu edhuruga unnavu  T. Chalapathi Rao
1965 Telugu naadhi aadajanme Kanniah nallani kanniah R. Sudarsanam R. Govardanam
1965 Telugu naadhi aadajanme odilona pavalinchu R. Sudarsanam R. Govardanam
1965 Telugu naadhi aadajanme chinnari ponnari puvvu R. Sudarsanam R. Govardanam
1965 Telugu pandava vanavasam bhaava bhaava Ghantasala
1965 Telugu pandava vanavasam sriKrishna kamalambha Ghantasala
1965 Telugu pandava vanavasam Himagiri sogasulu Ghantasala
1965 Tamil poojaikku vantha malar maiyendum vizhiyaada MSV-TKR
1965 Tamil poojaikku vantha malar unnai oor kondu azhikka  MSV-TKR
1965 Tamil sumangali aanandham aanandham K.V. Mahadevan
1965 Telugu sumangali kannulu neeve (Ea naati paina) K.V. Mahadevan
1965 Telugu sumangali Aanati Manavudu yemi  K.V. Mahadevan
1965 Telugu sumangali Kanulu kanulatho K.V. Mahadevan
1965 Tamil thiruvilayadal deva , mahaDeva K.V. Mahadevan
1965 Tamil thiruvilayadal neela selai kattikonda K.V. Mahadevan
1965 Tamil vallavanukku vallavan paaradi kanne kOnjam veda
1966 Tamil annavin asai Inbam enbathu enna K.V. Mahadevan
1966 Tamil annavin asai kovilile Veedu katti K.V. Mahadevan
1966 Tamil annavin asai Thunbam enbathu enna K.V. Mahadevan
1966 Telugu bhaktha bhothana sarva mangala nama  S. Rajeshwara rao
1966 Telugu manase mandiram Annadhi nee vena M.S. Viswanathan
1966 Telugu manase mandiram allaaru muddu kade M.S. Viswanathan
1966 Tamil saraswathi sabatham hari om namo (divya brabandham) K.V. Mahadevan
1966 Tamil saraswathi sabatham komatha engal kula K.V. Mahadevan
1966 Tamil thattungal thirakkapadum kalyaana pandhal  M.S. Viswanathan
1967 Tamil thattungal thirakkapadum oor paadum thalattu M.S. Viswanathan
1967 Tamil kandhan karunai arumugane shanmuga K.V. Mahadevan
1967 Tamil kandhan karunai solla solla inikkuthada K.V. Mahadevan
1967 Telugu nirdoshi(old) Singari chekkumuki Ghantasala
1967 Telugu nirdoshi(old) Eepaata neekosame Ghantasala
1967 Telugu nirdoshi(old) Merupu theegaloni Ghantasala
1967 Telugu nirdoshi(old) Ounanana kadhanana Ghantasala
1967 Telugu saraswathi sapadam (D) o maatha sakalakula maatha K.V. Mahadevan
1967 Telugu saraswathi sapadam (D) kuvakuvalaadunu K.V. Mahadevan
1967 Tamil seetha kaviyathin thalaivan K.V. Mahadevan
1967 Tamil thiruvarut chelvar Adhisivan thAzh paNindhu K.V. Mahadevan
1967 Telugulugu Shiva leelalu Deva mahadeva shambo K.V. Mahadevan
1967 Telugulugu Shiva leelalu Ealo eaalelo galla cheera  K.V. Mahadevan
1968 Telugu thalli prema kalalo ilalo K.V. Mahadevan
1969 Tamil kuzhanthai ullam Kodu potta pavadai S.P. Kodandapani
1969 Tamil kuzhanthai ullam angum ingum ontre  S.P. Kodandapani
1969 Tamil kuzhanthai ullam poomarathu nizhalum S.P. Kodandapani
1969 Tamil kuzhanthai ullam attankarai S.P. Kodandapani
1969 Telugu sivabhaktha vijayam (D) aadi sivuni nadamuni K.V. Mahadevan
1970 Telugu mathrudevatha manase kovela(sad) K.V. Mahadevan
1970 Telugu mathrudevatha Manase kovelaga (happy) K.V. Mahadevan
1971 Telugu amma maata Yentha baaga anavu Ramesh Naidu
1971 Tamil praptham santhanathil nalla  M.S. Viswanathan
1971 Tamil praptham sondham eppOdhum  M.S. Viswanathan
1971 Tamil praptham maaligai (sontham-ver2) M.S. Viswanathan
1971 Telugu raithukutumbam Oorantha anukuntunaru T. Chalapathi Rao
1971 Telugu vintha samsaram eduru choochina S.P. Kodandapani
1971 Telugu vintha samsaram peddale chesaru S.P. Kodandapani
1972 Telugu kanna thalli -new theeya theeyani K.V. Mahadevan
1973 Tamil engal thai raamanin naayagi kambanin  M.S. Viswanathan
1973 Telugu errakota veerudu koyilale raagam Ghantasala
1973 Telugu errakota veerudu manasulona marugu Ghantasala
1973 Telugu errakota veerudu reraaja neeku Ghantasala
1973 Telugu kodalu diddina kapuram Nee sangam nee dharmam  T.V. Raju
1973 Telugu kodalu diddina kapuram melini bangaru M.S. Viswanathan
1973 Telugu thalli kodukulu ninnu mechani nelu  nijani G.K.Venkatesh
1974 Telugu theerpu vibhatha vela Chakravarthy
1974 Telugu tulasi laali naakanna Ghantasala
1975 Telugu santhaanam sowbhagyam muddu muddu bommalu B. Shankar
1975 Telugu vaikunthapali dakhoo dakhoo K.V. Mahadevan
1975 Telugu vaikunthapali nidura po babu K.V. Mahadevan
1975 Telugu vaikunthapali narayana narayana K.V. Mahadevan
1976 Telugu manchini penchaali kaavaali A.M. Raja
1976 Telugu manchini penchaali telusaa neeku telusaa A.M. Raja
1976 Telugu manchini penchaali Ee roju manchi roju A.M. raja
1979 Telugu gorintaaku Gorinta poosindhi (happy) K.V. Mahadevan
1979 Telugu yevadabba sommu nee sogasu velayentha J.V. Raghavulu
1982 Telugu bhagya lakshmi kanne thanamlone M.S. Viswanathan
1984 Tamil azhagu azhagenum kavidhai G.K. Venkatesh

நன்றி.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக