இசைக்குயில் பி.சுசீலா அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு அறிமுகமானவர் சின்னக்குயில் சித்ரா. இருவருமே தங்கள் திறமையால், குறுகிய காலத்திலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வேகமாக முன்னேறியவர்கள்.
தான் குழந்தையாக தொட்டிலில் இருந்த போதே பி.சுசீலா பாடிய “ப்ரியதமா ப்ரியதமா” என்ற பாடலை பாடியதாக, சித்ராவின் தாய் சொல்லக்கேட்டிருக்கிறார் சித்ரா. அதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். சித்ரா பாட ஆரம்பித்த காலங்களில் பி.சுசீலாவுக்கு மலையாளத்தில் ட்ராக் பாடி இருக்கிறார். எனக்கு தெரிந்த தகவலின் படி அவர் ட்ராக் பாடிய ஆல்பம் ராக வீணா ( link ). ( இசை கண்ணூர் ராஜன் ). வேறு சில படங்களுக்கும் ட்ராக் பாடி இருக்கிறார்.
சித்ரா
அவர்கள், தனக்கு சீனியர் ஆன தன் சக பாடகிகள் ஆன எஸ்.ஜானகியுடனோ,
எல்.ஆர்.ஈஸ்வரியுடனோ இணைந்து பாடி இருக்கிறாரா என எனக்கு தெரியாது. ஆனால்
பி.சுசீலாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பாடி இருக்கிறார்.
இதில் ஓரளவு பாப்புலர் ஆன பாடல் “உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா” (ராஜாதி
ராஜா). ஆனால் படத்தில் பாடல் இடம் பெறவில்லை. இந்த பாடலை ராமராஜன் ஒரு படத்தில்
உபயோகிக்க போவதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். ஆனால் படம் வெளிவந்ததா என
தெரியாது. இளையராஜா இசையில் “தத்தெடுத்த முத்துப்பிள்ளை யாரோ” (ரெட்டைவால் குருவி)
எனற பாடலையும் இருவரும் பாடி இருக்கிறார்கள். ஆனால் அந்த பாடலும் படத்தில் இடம்
பெறவில்லை. தேவா இசையில் அம்மா வந்தாச்சு படத்தில் “இது உனக்காக பாடும் ராகம்”
என்ற பாடலை பாடினார்கள். அதுவும் படத்தில் இடம் பெறவில்லை. இந்த மூன்று படங்களையும் சுசீலாம்மா பாடி இருக்காங்க என்கிற ஒரே காரணத்துக்காக
போயி பாத்து ஏமாந்து... ஹூம்... அடுத்தது “ஆனைகட்டி போரடிக்கும் திராவிட நாடு” (நியாயங்கள் ஜெயிக்கட்டும்) என்ற பாடலை மனோ, பி.சுசீலா, சித்ரா பாடி இருக்கிறார்கள்.
அப்பாடா...!! பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தது. கற்பூர முல்லை படத்தில்
கே.ஜெ.யேசுதாஸ், பி.சுசீலா, சித்ரா பாடிய “பூங்காவியம் பேசும் ஓவியம்” பாடல் ஹிட்
ஆன பாடல். அனால் பி.சுசீலா சோலோவாக பாடிய "பூங்காவியம்" பாடல் படத்தில் இல்லை. இதே பாடல் மலையாளத்தில் “ஆலாபனம் தேடும் தாய் மனம்” என ஒலித்தது. தனிப்பாடலான "பூந்தென்னலோ கண்ணீர் தும்பியோ" படத்தில் இல்லை. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால். பி.சுசீலா, பி.லீலாவின் பெயர்கள் சித்ராவின் பெயருக்கு பின்னால் டைட்டில் கார்டில் வரும்.
தெலுங்கில் sravana meghalu (1986) படத்தில் “srunganiki ishta sakhalamu” என ஒரு அருமையான பாடலை சக்கரவர்த்தி இசையில் பாடி இருக்கிறார்கள். Anna thammudu (1989) படத்தில் மனோ, சுசீலா, சித்ரா மூவரும் சேர்ந்து “puttu puttuaa” என்ற பாடலை பாடி இருக்கிறார்கள். Srirama chandrudu (1989) படத்தில் “chinni chinni kannayaku” என்ற பாடலை பாடி இருக்கிரார்கள். ரொம்ப நல்ல பாடல்.
மலையாளத்தில் வித்யாதரன் அவர்கள் இசையில் "நவமி" என்ற இசைத்தொகுப்பில் "Navarathri maholsava" என்ற பாடலை இணைந்து பாடி இருக்கிறார்கள்.
சென்ற வருடம் (2013) –இல் பி.சுசீலா அவர்கள் இசை அமைத்த “Sri Simhachala Swamy” இசைத்தொகுப்பில் “deva vyasaparashara” என்ற பாடலை பாடி இருக்கிறார் சித்ரா. ஆக மொத்தத்தில் பி.சுசீலா இசையிலும் பாடி விட்டார்.
சில
பாடல்கள் ஒரு மொழியில் சுசீலாவும், இன்னொரு மொழியில் சித்ராவும்
பாடியிருக்கிறார்கள். அந்த தொகுப்பு கீழே..
பி.சுசீலா பாடிய பல பாடல்களை சித்ரா இசை நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறார். அவை youtube-ல் upload செய்யப்பட்டு இருக்கிறது. "சின்னஞ்சிறு கண்மலர், செம்பவழ வாய்மலர்" பாடலை ஒரு ராம நாராயணன் படத்தில் சித்ரா பாடி கேட்டிருக்கிறேன்.
இதைப்போலவே தளபதி படத்தின் தெலுகு dabbuing இல் சுசீலா அவர்களின் பெயர் எல்லாருக்கும் கீழ் கடைசியில் இருக்கும்.
பதிலளிநீக்கு