பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

தொண்ணூறுகளில் பி.சுசீலா

                 2007-ல் வெளிவந்த  “சில நேரங்களில்” என்ற படத்தில், பி.சுசீலா அவர்கள் “பொட்டு வைத்த முகத்தை” என துவங்கும் பாடலை பாடி இருந்தார்கள். அப்போது பத்திரிகைகளில், “பி.சுசீலா 13 வருடங்களுக்கு அப்புறம் திரை இசையில் பாடுகிறார்” என செய்திகள் வந்தன. அந்த செய்தியை உண்மை என நினைத்துக்கொண்டோ என்னவோ, இன்னொரு பிரபலம், நானும் பல வருடங்களாவது பாடிக்கொண்டே இருக்கிறேன், ஒவ்வொரு வருடமும் ஒரு  திரைப்பாடலாவது ரெக்கார்டிங் செய்திருக்கிறேன் என மீடியாவில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். திருமதி. பி.சுசீலா பதிமூன்று வருடங்கள் பாடவில்லை என்ற செய்தி தவறானது என்பது இந்த தொகுப்பின் மூலம் புரிந்து கொள்வீர்கள். சினிமாவில் எதாவது ஒரு மொழியில் ஒவ்வொரு வருடமும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார் சுசீலா அவர்கள். தன்னை மதித்து, எந்த சிறிய இசை அமைப்பாளர் பாட அழைத்தாலும் பாடிக்கொடுத்து இருக்கிறார்.
    சினிமா தவிர, அதிகபட்ச பக்திப்பாடல்களை தொண்ணூறுகளில் தான் பதிவு செய்திருக்கிறார். தமிழ் பக்தி பாடல்கள் ( link ) ,  தெலுங்கு பக்திப்பாடல்கள் ( link ) தவிர கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் என அதிக பக்திப்பாடல்களை இந்த கால கட்டத்தில் தான் பாடி இருக்கிறார். எங்களிடம் ஆல்பமாகவும், பாடல்களாகவும் கிட்டத்தட்ட 3000  பக்தி பாடல்கள் இருக்கின்றன. இன்னமும் நிறைய இருக்கும். இதில் 80 சதவிகித பாடல்கள் 90-களில் பதிவு செய்யப்பட்டவை. நிறைய மேடைக்கச்சேரிகள் செய்ததும் இந்த காலகட்டத்தில தான்.
   தொண்ணூறுகளில் பல புதிய இசை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்களில் எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, கார்த்திக் ராஜா போல பல புதிய தலைமுறை இசை அமைப்பாளர்களிடமும் பாடி  இருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்கள் இசையில் “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா”, “இது முதன்முதலா வரும் பாட்டு”, ஓர் இரவில் காற்று வந்தது”, “ஆகாய தொட்டில் கட்டி” பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை. சிற்பி இசையில் “செவ்வந்தி பூவெடுத்தேன்”, “ ஏலேலங்கிளியே எனை தாலாட்டும் இசையே” பாடல்கள் ஓரளவு பிரபலமானவை. வித்யாசாகரின் முதல் படமான “நிலாபெண்ணே” படத்தில் “புது உறவு புது இரவு ” பாடலையும், சில தெலுங்கு பாடல்களையும் பாடி இருக்கிறார். தேவாவின் முதல் படத்தில் “ஆத்து மேட்டு தோப்புக்குள்ள” என்ற பாடலும், கட்டபொம்மன் படத்தில் “கூண்டைவிட்டு ஒரு பறவை” என்ற பாடலும்  குறிப்பிடப்படத்தக்கவை. ரஹ்மான் இசையில் “கண்ணுக்கு மை அழகு”, “கப்பலேறி போயாச்சு”, “மெட்டுப்போடு” மற்றும் தெலுங்கில் “கனுலுக்கு சூப்பு அந்தம்” பாடல்கள் பிரபலமானவை. கார்த்திக் ராஜாவின் முதல் படமான மாணிக்கம் படத்தில்  “உனக்கென ராசா நான்தானே” பாடலை பாடி இருக்கிறார். இளையகங்கை இசை அமைத்த “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” பாடலும் அவர் குரலில் ஒலித்தது. நடிகர் அஜித் முதல் முதலில் தெலுங்கில் தான் ( படம் :“பிரேம புஸ்தகம்”) அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் தேவேந்திரன் இசையில் பாடி இருக்கிறார். கீரவாணி (மரகத மணி) இசையில் தெலுங்கு படமான “பல்லெட்டுரி பெள்ளம்” படத்தில் பாடி இருக்கிறார்.
    ஏற்கனவே பிரபலம் ஆகியிருந்த மற்ற இசை அமைப்பளர்கள் இசையிலும் அவ்வப்போது பாடி இருக்கிறார். இளையராஜாவின் இசையில் “கற்பூர பொம்மை ஒன்று”, “முத்துமணி மால”, “பூங்காவியம் பேசும் ஓவியம்”, “காத்திருந்த மல்லி மல்லி”, “இங்கே இறைவன் எனும் கலைஞன்”, “அரும்பரும்பா சரம் தொடுத்த”, “நட்டு வச்ச ரோசாச்செடி” குறிப்பிடத்தக்க பாடல்கள். தாலாட்டு கேட்குதம்மா படத்தில் வரும் “சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்” பாடலை இளையராஜாவின் குழந்தைகளுடன் சேர்ந்து பாடினார் பி.சுசீலா. தவிர, “கலயா நிஜமா” என இளையராஜா அவர்களுடன் தெலுங்கில் ஒரு டூயட் பாடினார்.  “சின்னதாயவள் தந்த ராசாவே” பாடல் தெலுங்கில் “ஆட ஜன்மக்கு என்னி “ என பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது. தவிர எம்.எஸ்.வி, கே,வி,எம், சங்கர் கணேஷ், சத்யம், சக்ரவர்த்தி, ராஜன் நாகேந்திரா, ஜி,தேவராஜன், ஷ்யாம், ராஜ்-கோட்டி, வி.எஸ்.நரசிம்மன் என பழைய இசை அமைப்பாளர்களிடமும் பாடிக்கொண்டு தான் இருந்தார்.
             டைரக்டர்களில் திரு.விக்ரமன் அவர்கள் அவர்களால் முடிந்த அளவு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அப்போது புதிய இயக்குனராக இருந்தாலும் கூட, இந்த வாய்ப்புகள் அளித்த அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். புது வசந்தம் படத்தில் (சின்னதாக வந்தாலும்) மூன்று பாடல்கள், “பெரும்புள்ளி”யில் இரண்டு பாடல்கள் தவிர  கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் படங்களிலும் பாட  வைத்திருக்கிறார். தெலுங்கில் தாசரி நாராயண ராவ் அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள்.
           பழைய பாடல்களை புது பொலிவுடன் கொண்டு வரும் டெக்னிக் 90-களில் இருந்தது. புது ஆர்க்கெஸ்ட்ராவுடன் பழைய பாடல்களை திரும்பவும் ரெகார்ட் செய்து “P.Susheela Sings again” போன்ற தலைப்புகளில் தமிழ், தெலுங்கு பாடல்கள் புது வடிவம் பெற்றன. பி.சுசீலா அவர்கள் தான் பாடிய பல பாடல்களையும், பானுமதி பாடிய “அழகான பொண்ணு தான்”, எம்.எல்.வி பாடிய “கூவாமல் கூவும் கோகிலம்” போன்ற சில பாடல்களையும் பி.சுசீலா பாடினார். இப்பாடல்களே எண்ணிக்கையில் 100-ஐ தாண்டும். ஆனால் பழைய பாடல்களின் தரம் அதில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

    90-களில் அறிமுகமான சில நாயகிகளுக்கும் பின்னணி பாடி இருக்கிறார். ரோஜா, திவ்யபாரதி, சித்தாரா, மோஹினி, சுகன்யா, கஸ்தூரி, தபு, மாலாஸ்ரீ, தீபிகா, சவுந்தர்யா, சுமா ரங்கநாத், ரம்பா, நீனா என சில நாயகிகளின் பெயர்கள் நினைவுக்கு வருகிறது, விட்டுப்போன பலர் இருக்கலாம். தவிர பழைய நடிகைகளில் “மனோரமாவுக்கும் (நீயும் நானுமா ஆச்சி, ஃகும்மாலு தொம்மிடி”), சரோஜாதேவிக்கும் (சின்ன சின்ன மகாராசா) பாடிய பாடல்கள் குறிப்பிடப்படத்தக்கவை.. தவிர வழக்கம்போல்  கே.ஆர்.விஜயா, சுஜாதா, லக்ஷ்மி போன்றோருக்கும் பாடி இருக்கிறார்.

எங்களிடம் இருக்கும் பாடல்களின் லிஸ்ட்.

Sl.No Year Lang Movie Songs Music
1 1990 Tamil gnayangal jeyikaatum aanai kaati poradikkum M.S. Viswanathan
2 1990 Tamil idhaya thaamrai unnai yEn sandithEn oomai naan Shankar Ganesh
3 1990 Tamil keladi kanmani karpoora bommai ontru Ilayaraja
4 1990 Tamil mallu veti minor kaaathiruntha malli malli Ilayaraja
5 1990 Tamil manam maaratha malligai poonthenral kaatraaga Ramanujam
6 1990 Tamil naadodi kadhal maane maane anatntha poonthene ?
7 1990 Tamil neela mala Paatu paada Bala bharathi
8 1990 Tamil nila penne pudhu uravu pudhu varavu vidyasagar
9 1990 Tamil paadi vaa thendrale ye kaadhale S.A. Rajkumar
10 1990 Tamil paalam chinna chinna pengaLukku t. srinivasan
11 1990 Tamil paalam inthakkanneer engal t. srinivasan
12 1990 Tamil pengal veetin kangal pengal vetin kangal antha  Shankar Ganesh
13 1990 Tamil pengal veetin kangal salayila rendu maaddu Shankar Ganesh
14 1990 Tamil periya idathup pillai manasula enna nenache Chandrabose
15 1990 Tamil pudhu vasantham Aaadaludan paadalai kettu S.A. Rajkumar
16 1990 Tamil pudhu vasantham muthan mudala oru paattu S.A. Rajkumar
17 1990 Tamil pudhu vasantham Paatu onnu naan paadattuma S.A. Rajkumar
18 1990 Tamil puriyaadha pudhir or iravil kaatru vandhadhu S.A. Rajkumar
19 1990 Tamil sakthi parasakthi naavinil irukka vachaan Shankar Ganesh
20 1990 Tamil sakthi parasakthi sakthi parasakthi Shankar Ganesh
21 1990 Tamil sathiyam sivam sundharam kanne un ithazh kungumam shankar ganesh
22 1990 Tamil sathiyam sivam sundharam kuppam huppam nochikkuppam shankar ganesh
23 1990 Tamil sivappu nirathil oru chinnapoo kannin manigal irandum vada jayasekar
24 1990 Tamil thaayaa thaaramaa aagaayam engengum Shankar Ganesh
25 1990 Tamil thaayaa thaaramaa adi aathAdi pudhtr povoda Shankar Ganesh
26 1990 Tamil ulavum thenrdal  aadai katti vandha (remix)
27 1990 Telugu ankitham O sande ante shallumana Yuvaraj
28 1990 Telugu ankitham O sari ante sarigamalai Yuvaraj
29 1990 Telugu dharmapeetam dhadharilindhi bommalanti muddugumma J.V. Raghavulu
30 1990 Telugu dharmapeetam dhadharilindhi nee chirunavvula J.V. Raghavulu
31 1990 Telugu dharmapeetam dhadharilindhi sitakalam sayamkaalam J.V. Raghavulu
32 1990 Telugu Film star madhu malaro Chakravarthy
33 1990 Telugu Film star madhurasame Shankar Ganesh
34 1990 Telugu Golmal govindam yendhi bullemmo Chakravarthy
35 1990 Telugu jayamu nischayamura abhimathamo abhinayamo ee raj koti
36 1990 Telugu jayasimha-new priya priya idi yeragamo Chakravarthy
37 1990 Telugu justice rudramma devi sriramunni kannanadu Raj koti
38 1990 Telugu kalikadevi kallu therichindi ? Chakravarthy
39 1990 Telugu kaliyuga raavanasurudu  Premante Edhenemo ellage Raj Koti
40 1990 Telugu kaliyuga rudrudu bhoomata niduroye chandrabose
41 1990 Telugu malupu o thalape ywlaveyana S.A. Rajkumar
42 1990 Telugu mama alludu gundelalo gusagusalu Saloori Vasurao
43 1990 Telugu Missiamma brundavanamadi -revival S. Rajeshwara rao
44 1990 Telugu mouna hrudayam enneno raagale shankar ganesh
45 1990 Telugu nagastram bahipapa nashaka chakravarthy
46 1990 Telugu neti rakshasulu siggulu viresenule bhagyaraju
47 1990 Telugu neti rakshusulu ye maava siggula maava bhagyaraju
48 1990 Telugu Nindu Manasulu Sreesaila sunikethana divya  T.V. Raju
49 1990 Telugu o paapa laali Karpoora bommavu Ilayaraja
50 1990 Telugu padmavati kalyanam padmavati kalyanamu Chakravarthy
51 1990 Telugu pillalu kadu pidugu baba saibaba Arif
52 1990 Telugu pillalu kadu pidugu tholi choopu Arif
53 1990 Telugu pranayam pralayam naa priya teulpani Anand Milind
54 1990 Telugu raajaa vikramarka Aanati nunchi eenati Raj Koti
55 1990 Telugu Rakshasa Rajyam chilaka chikala gorinka Chakravarthy
56 1990 Telugu Rakshasa Rajyam ee kondalaku Chakravarthy
57 1990 Telugu rambha rambabu koora koora gongoora Madhavapeddhi Suresh
58 1990 Telugu rambha rambabu priyathama piluvakumaa Madhavapeddhi Suresh
59 1990 Telugu rowdy mogudu adigithe vijayanand
60 1990 Telugu rowdy mogudu naa kallalo vijayanand
61 1990 Telugu sankaramam meluko meluko S. Rajeshwara rao
62 1990 Telugu sila shasanam bangaru pichi gochi Raj koti
63 1990 Telugu vishnu nuvva avunanna kadanna vidyasagar
64 1990 Telugu yama dharma raju ammadi pandu Raj koti
65 1990 Telugu yama dharma raju gadabida gadabida Raj koti
66 1990 Telugu yama dharma raju kondantha devudivi Raj koti
67 1990 Telugu yeravai satapdham ammanu minchi daivam  J.V.Raghavulu
68 1990 Telugu yeravai satapdham Naa prema nava parijatham J.V.Raghavulu
69 1990 Malayalam aanachandam sree krishna kshethrathin vidhyadharan
70 1990 Malayalam apsarassu theyyaram theyyaram S.P,venkatesh
71 1990 Malayalam kuruppinte kanakkupusthakam  pularivannu pookalam balachandra menon
72 1990 Malayalam medakkaatu sankha naada shanthamaaya vidhyadharan
73 1990 Malayalam oliyambukal vishukkili vilichathenthinenne M.S. viswanathan
74 1990 Malayalam Rendam varavu en neelakasam thedi Shyam
75 1990 Kannada agni divya prema balige shyam
76 1990 Kannada maheswara eke kopa nannolave Vijay Anand
77 1990 Kannada Shabarimale swamy ayyappa poornachandra K.V. Mahadevan
78 1991 Tamil alibabavum 40 thirudargalum azhagana ponnu thaan (resung) S. Dakshina murthy
79 1991 Tamil eashwari Anjaneyane Shankar Ganesh
80 1991 Tamil gnanaparavai neeyum naanuma achi M.S. Viswanathan
81 1991 Tamil ini oru vasantham kannan engal pillai msv raja
82 1991 Tamil kannukkoru vannakili thuli thuli mazhaya Ilayaraja
83 1991 Tamil karpoora mullai poonkaviyam, pesum oviyam Ilayaraja
84 1991 Tamil karpoora mullai poonkaviyam pesum (solo) Ilayaraja
85 1991 Tamil m.g.r.nagaril engE endhan pillai S. Balakrishnan
86 1991 Tamil moondrezhuththil en moochirukkum aagaayam kondaadum boopalame Ilaya Gangai
87 1991 Tamil paasathai thirudathe chittana rani Ilayaraja
88 1991 Tamil paasathai thirudathe ennai pudichukku Ilayaraja
89 1991 Tamil paasathai thirudathe idhu pudhumayana aatam Ilayaraja
90 1991 Tamil paasathai thirudathe sondham adhu enge Ilayaraja
91 1991 Tamil pondati sonna ketutanum ponne poovamma sogham enamma Chandrabose
92 1991 Tamil pondati sonnaketukanum vanthaale thekku seemayile Chandrabose
93 1991 Tamil sir i love you Inge iraivan Ilayaraja
94 1991 Tamil thaalattu ketkuthamma sonna pecahi keatka maatom Ilayaraja
95 1991 Tamil uthavikkarangal uyir paadum paate Jayaraaja
96 1991 Tamil vairamalai koovamal koovum (resung) MSV-TKR
97 1991 Tamil valayatha kodugal Anjathe ini kenjathe Upendra kumar
98 1991 Tamil vedha vaakku karpooram narumo R.Ramanujam
99 1991 Tamil vedha vaakku kalaiyatha kalaiselvam R.Ramanujam
100 1991 Tamil vedha vaakku urakkam marantha R.Ramanujam
101 1991 Tamil vedha vaakku thogai mayil R.Ramanujam
102 1991 Tamil vedha vaakku thillana-vedhavakku R.Ramanujam
103 1991 Tamil vedha vaakku kunitha puruvamum R.Ramanujam
104 1991 Tamil vedha vaakku paramanin tholil R.Ramanujam
105 1991 Tamil vedha vaakku ethanai pavam R.Ramanujam
106 1991 Telugu abhisaarika aadali tholi eedu vasu rao
107 1991 Telugu abhisaarika theeyana maanana vasu rao
108 1991 Telugu anubhandalu pachani pandirilona Ilayaraja
109 1991 Telugu bhadradri sree rama pattabhishekam valape viresenule manoj-kyan
110 1991 Telugu brahma rishi viswamitra ee chinnadhi mudula ravindra jain
111 1991 Telugu brahma rishi viswamitra endaro olipinchana ravindra jain
112 1991 Telugu brahma rishi viswamitra nidura lechindira ravindra jain
113 1991 Telugu brahma rishi viswamitra Priya cheliya Ravindra Jain
114 1991 Telugu Chengalva poodanda sengalla chinagaddi L.Vydyanathan
115 1991 Telugu coolie no1 Kalaya nijama Ilayaraja
116 1991 Telugu dalapathi Aadajanmaku yenni sokhalo Ilayaraja
117 1991 Telugu deepalakshmi oka jyothi manayinta ?
118 1991 Telugu dharma rakshana vuribayatta vulli Chakravarthy
119 1991 Telugu dongadu  vedi vedi asalu Chakravarthy
120 1991 Telugu Eswar oppantu thappantu K. Bhagyaraj
121 1991 Telugu gaana gana sundara sri venugopala unknown
122 1991 Telugu iddaru pellala muddula polisu ammana kokokaro J.V. Raghavulu
123 1991 Telugu jonnalagadda preyasi manohari Ghantasala
124 1991 Telugu mamasri aada pillalam sree
125 1991 Telugu manjeera nadham kalavari koothuru K.V. Mahadevan
126 1991 Telugu manjeera nadham matrudesamunaku K.V. Mahadevan
127 1991 Telugu muddula bidda telukuttindoi babu telukuttindoi unknown
128 1991 Telugu niyantha pedhalu vippi S.A. Rajkumar
129 1991 Telugu palletoori pellam chemma chekka Keeravani
130 1991 Telugu parishkaram illantha uyyalavayya Vidyasagar
131 1991 Telugu pelli pustakam Haayi haayi sri ranga K.V. Mahadevan
132 1991 Telugu pelli pustakam Ammu kutty ammukutty K.V. Mahadevan
133 1991 Telugu pelli pustakam Srirastu subhamasthu K.V. Mahadevan
134 1991 Telugu pelli pustakam srikaram chutukundi K.V. Mahadevan
135 1991 Telugu police bharya kaarteeka maasana kalige unknown
136 1991 Telugu prathidwani kanalennu choopinchara Chakravarthy
137 1991 Telugu prathidwani ochesukko pothe Chakravarthy
138 1991 Telugu prathidwani yemma ikkada evundamma Chakravarthy
139 1991 Telugu prema khaidhi I love for U annadhi prema Rajan Nagendra
140 1991 Telugu prema khaidhi Nee kallalo snehamu Rajan Nagendra
141 1991 Telugu prema khaidhi Antakshari song Rajan Nagendra
142 1991 Telugu prema khaidhi om namaha okate Rajan Nagendra
143 1991 Telugu prema khaidi tittiba gattiga ottura Rajan nagendra
144 1991 Telugu sahasa gattam bangaru kala voosulaade manoj-kyan
145 1991 Telugu sahasa gattam idhiye tholi valapaa manoj-kyan
146 1991 Telugu sahasa gattam paalavelli jabilochene manoj-kyan
147 1991 Telugu sahasa gattam siri siri muvva manoj-kyan
148 1991 Telugu sarpayagam ABCD gundelona Vidyasagar
149 1991 Telugu sarpayagam chubram cheyna vidyasagar
150 1991 Telugu Sasirekha sapadham aakasamlo bhukampam Chakravarthy
151 1991 Telugu Sasirekha sapadham aakasamlo bhukampam Chakravarthy
152 1991 Telugu Stuartpuram dongalu ninnu kanna naa janma Raj Koti
153 1991 Telugu suvaartha ghantalau christaian devotioanal Ch.Moses
154 1991 Telugu toli poddu navvula chanduruda sivareddy
155 1991 Telugu toli poddu nestama laanchala sivareddy
156 1991 Malayalam Ente Surya puthrikku aalapanam paadum thai manam Ilayaraja
157 1991 Malayalam Ente Surya puthrikku poonthennalo kanneer thumbiyo Ilayaraja
158 1991 Malayalam thirichadi vella thamara -resung R. Sudarsanam
159 1992 Tamil amma vanthachu idhu unakkaaga paadum raagam Deva
160 1992 Tamil chinna gowndar Muthu mani maalai Ilayaraja
161 1992 Tamil chinna marumagal Mangala Melangal Chandrabose
162 1992 Tamil chinna thayi arumbarumba saram thodutha Ilayaraja
163 1992 Tamil deiva kuzhanthai per ulagam Shankar Ganesh
164 1992 Tamil idhu thanda sattam azhagana poonthottam sangeetha rajan
165 1992 Tamil kaaval nilayam  singakutty neeye  Shankar Ganesh
166 1992 Tamil lord amman amma nageswari K.V. Mahadevan
167 1992 Tamil mahamayee amma nagamma K.V. Mahadevan
168 1992 Tamil naadodi pattukkaran Vanamellam shenpagapoo Ilayaraja
169 1992 Tamil nila choru ulagaalum kaamatchi Chandrabose
170 1992 Tamil perumpulli aanum pennum onnum  S.A. Rajkumar
171 1992 Tamil perumpulli aaghaya thottil katti anbe nee S.A. Rajkumar
172 1992 Tamil ponnukketha purushan sarangathara sangeethahara Ilayaraja
173 1992 Tamil suyamariyadhai ragam bhavam sivaji raja
174 1992 Telugu naani maa kallalo brundavanam Chakravarthy
175 1992 Telugu nagamma sapatham a song for shobana KVM
176 1992 Telugu nani maa kallalo brundavanam Chakravarthy
177 1992 Telugu pedalakanna pedhavallu allari bullodu Chakravarthy
178 1992 Telugu pedalakanna pedhavallu naa peru polleramma Chakravarthy
179 1992 Telugu pellante noorella panta anunante pichnikku Satyam
180 1992 Telugu pellante noorella panta eeroju nee puttina Satyam
181 1992 Telugu pellante noorella panta aalaap Satyam
182 1992 Telugu prathignya chakkanaivaada chikkaka ?
183 1992 Telugu prathignya neekunde mohaninthi ?
184 1992 Telugu raakasi kona aha adavi Shankar Ganesh
185 1992 Telugu raakasi kona oore ore Shankar Ganesh
186 1992 Telugu seetharatnamgariabbayi Naa mogude bhramachari  Raj Koti
187 1992 Telugu surigaadu oopedhi evvaraina Saloori vasurao
188 1992 Telugu vadhina maata koluvundaraa J.V. Raghavulu
189 1992 Telugu vadhina maata vache vachenamma J.V. Raghavulu
190 1992 Telugu vadhina maata karthika masana J.V. Raghavulu
191 1992 Telugu yamude naa mogudu kannesthe thakadimidha Chandra bose
192 1992 Telugu yamude naa mogudu papalu edisthe Chandra bose
193 1992 Malayalam aanantham anjaatham vedhana vedhana
194 1992 Malayalam Ezhaamedam chella cherukatte  nawas Rahman
195 1992 Malayalam Naruveena meera bhaktha Rajan karivelloor
196 1992 Malayalam Oru dhivasam Pandora dhivasam marakkumo enne marakkumo G.Devarajan
197 1992 Malayalam oru jaathi oru matham oru deivam oru jaathi oru matham
198 1992 Kannada kaala chakra boothayi malagayithu
199 1992 Kannada kaala chakra Prema Latheyu M. Rangarao
200 1993 Tamil aranmanai kili nattu vacha rosa chedi mama Ilayaraja
201 1993 Tamil aval oru kavariman poonthendral kaatraada poonjolai Ramanujam
202 1993 Tamil gokulam Sevvanthi pooveduthan Sirpi
203 1993 Tamil iniya raja vaa mazhai magame-solo V.S. Narasimman
204 1993 Tamil iniya raja iravum pagalum thazhuvum V.S. Narasimman
205 1993 Tamil kattabomman koondavittu oru  Deva
206 1993 Tamil naan pesa ninaippatellam Elalankiliye ennai thaalaattum sirpi
207 1993 Tamil paarambariyam chinna chinna maharasa shankar ganesh
208 1993 Tamil pudhiya mugham kannukku mai azhagu A.R. Rahman
209 1993 Telugu agraham janaki ramula Satyam
210 1993 Telugu bhagwan sri saibaba deepavali jyothulu upendrakumar
211 1993 Telugu bhagwan Sri Saibaba vinayaka nee murthi hamsalekha
212 1993 Telugu inspector jhansi Inthiki chemanthiki seemantham Raj Koti
213 1993 Telugu kaala chakram  ? Saluri Vasurao
214 1993 Telugu kunthiputrudu gummaalu thommidi -sad Ilayaraja
215 1993 Telugu kunthiputrudu Gummalu thommidhi Ilayaraja
216 1993 Telugu ladies special Ada jeevitham S. Vasu Rao
217 1993 Telugu padmavyuham kannulaku choopandham A.R. Rahman
218 1993 Telugu pellikani illalu nudutana diddina Raj koti
219 1993 Telugu prema pusthakam sri krishna tulasiki Devendran
220 1993 Telugu repati rowdy yannatido bhandhamuraa ilayaraja
221 1993 Telugu shiridi sai bhajans -2 gajananam J. Purushothama sai
222 1993 Telugu shiridi sia bhajans alla sai J. Purushothama sai
223 1993 Telugu sreenadha kavi hara vilasam K.V. Mahadevan
224 1993 Telugu sreenadha kavi Nala Damayanthi story K.V. Mahadevan
225 1993 Kannada bhagwan sri saibaba deepavali jyothi Upendrakumar
226 1993 Kannada bhagwan sri saibaba vinayaka ninna padake hamsalekha
227 1994 Tamil duet Mettu podu, mettu podu A.R. Rahman
228 1994 Tamil ezhavathu kadhal penn pierutho Balaji
229 1994 Tamil sa ri ga ma pa odum nadhigalil adum  srikumar
230 1994 Telugu bangaru papa Tara tara madhyalo Ilayaraja
231 1994 Telugu bangaru papa Tara tara madhyalo-bit Ilayaraja
232 1994 Telugu jantar mantar o indiraja sai shankar
233 1994 Telugu jantar mantar o swargama sai shankar
234 1994 Telugu jantar mantar kanula sri chengavala sai shankar
235 1994 Telugu prema vasantham pagaala chilaka S.A. Rajkumar
236 1994 Malayalam kudumba vishesham kollamkottu thookkam nernna  johnson
237 1995 Tamil indian Kappaleri Poyachu A.R. Rahman
238 1995 Telugu maatho pettukoku ammante elelo Madhavapeddi Suresh
239 1995 Telugu pallettoori pellam karunichchavamam M.M. Keeravai
240 1995 Telugu pallettori pellam yenaatiki repani M.M. Keeravani
241 1995 Telugu Premaku Padhi Soothralu saranko saranko saranga chakravarthy
242 1995 Telugu sree sreesaila bhramambika kataksham bhale bhale bhale vijaya krishnamurthy
243 1995 Telugu sree sreesaila bhramambika kataksham bramarambika vijaya krishnamurthy
244 1995 Telugu sree sreesaila bhramambika kataksham navamohini nene raa vijaya krishnamurthy
245 1995 Telugu sree sreesaila bhramambika kataksham raja rani vijaya krishnamurthy
246 1995 Telugu sree sreesaila bhramambika kataksham sreesaila sikharala vijaya krishnamurthy
247 1995 Telugu sree sreesaila bhramambika kataksham valapula chilaka vijaya krishnamurthy
248 1995 Telugu vadina gari gajulu kannayya poogene chakravarthy
249 1995 Malayalam kathorthu Ninnappol aashakal viriyunnoru
250 1995 Malayalam Samudayam manavaatti manavaati G.Devarajan
251 1995 Malayalam unknown oru mutham mani mutham
252 1995 Malayalam unknown ennudal oru ragamalika V.Dakshinamurthy
253 1995 Kannada karunisu sri raghavendra bhakthara hrudaya K.M. Venkatraman
254 1996 Tamil gangai aval kannukkul kalyaana melathaalangal Shankar Ganesh
255 1996 Tamil gangai aval kannukkul kattippidi kadhal kodi Shankar Ganesh
256 1996 Tamil maanikkam Unakkenna raasa naan thaanE karthik raja
257 1996 Tamil paadum paadal unakkaga vaa vaa vennila-sad maharaja
258 1996 Tamil pookkale unakkaaga malaikaatha maariyamma S.A. Rajkumar
259 1996 Telugu puttinti gowravam pudamilo tholi valapu madhavapeddi suresh
260 1996 Telugu puttinti gowravam kovelalo koluvunna devudu madhavapeddi suresh
261 1997 Tamil siva shakthi pillaiyare ramanujam
262 1997 Tamil siva shakthi varungale Ramanujam
263 1998 Telugu Comrade jumbiti jumbiri J.V. Raghavulu
264 1998 Telugu Comrade srimalli poovanti J.V. Raghavulu
265 1998 Kannada karpoora deepa mojo andare naane nodu G.K. Venkatesh
266 1999 Tamil paartha paarvayil oor uranga nee uranga
267 1999 Telugu Andhra vaibhavam pala naadu unknown
268 1999 Telugu venkateswara padamulu manjutarakunjatala K.V. Mahadevan
269 2000 Tamil naagalingam pudhu nilave tharum ithazhe Adityan
270 2001 Telugu kanipaka vinayaka theppalina vinayaka unknown
271 2002 Telugu hrudayanjali hrudayanjalilo L.Vaidhyanathan
272 2003 Telugu kabirdas nenu varana K.V. Mahadevan
273 2004 Malayalam ammakkilikkoodu hrudaya geethamai kelku raveendran
274 2005 Tamil kadhal nilave mannava undhan eashwaran
275 2005 Tamil kadhal nilave ponnila mella mella eashwaran
276 2006 Tamil kannamma en kadhali thennamara thoppukkulla vara
277 2006 Malayalam Chilar  kadalin aazham Sachin Kaidharan
278 2007 Tamil sila nerangalil pottu vaitha mugathathi Srikanth Deva
279 2008 Tamil vaaliban sutrum ulagam thaattu poottu thanjavooru M.S. Viswanathan
280 2009 Telugu neramu siksha ee poodula eragani koti
281 2010 Tamil idhayathil oruvan azhagil pooththa chandirane M. Blasubramani
282 2011 Tamil nilavil mazhai pudhiya karam kondu surendar
283 2013 Telugu saibaba saibaba title song unknown
   

                 2006-இல் "சிலர்" என்ற மலையாள படத்துக்காக "சச்சின் கைதரன்" இசை அமைத்த ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தார். "சச்சின் கைதரன்" அவர்கள்,  ஜி.தேவராஜன் அவர்களிடம் உதவியாளராக பணி ஆற்றியவர். தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும் படத்தில் பி.சுசீலா அவர்கள் பாட வேண்டும் என ரொம்ப ஆசைப்பட்டாராம். அவர் சுசீலாம்மாவை அணுகிய போது, பி.சுசீலா அவர்கள் கனடாவில் டூரில்  இருந்தார்கள். ஆனால் டூர் முடிந்து வருவதற்குள், இசை அமைப்பாளர் ஒரு சாலை விபத்தில்  மரணம் அடைந்து விட்டார். அவர் கனவை நனவாக்க விரும்பிய அவரது மனைவி , பி.சுசீலாவை வைத்து அந்த பாடலை ஒலிப்பதிவு செய்தார். 13-09-2006-இல் சித்ரா ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அப்போதே, அந்த இசை அமைப்பாளரின் ஆத்மா சாந்தி அடைந்து இருக்கும். ஒன்றிரண்டு வருடங்கள் தவிர எல்லா வருடங்கள் பாடிய பாடல்களும் list-ல் இருக்கிறது.  அவற்றையும் சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம்.
              நாங்கள்  சுசீலாம்மாவுடன் பேசும் போதெல்லாம், சினிமாவில் வருஷத்துக்கு ஐந்து அல்லது பத்து பாடல்களாவது பாடினால் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என டார்ச்சர் கொடுப்பதுண்டு. அவர்களும் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொள்வார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு, இந்த பாடல் ஒலிப்பதிவு முடிந்தவுடன் என்னை ஃபோனில் அழைத்து, பாடல் வரிகளை முன்னால் வைத்துக்கொண்டு முழுப்பாடலையும் பாடிக்காண்பித்தார். நான் அப்படியே மிதக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு சாதாரண ரசிகனை , இதை விட வேறு எப்படி சந்தோஷப்படுத்தி இருக்க முடியும்,  கவுரவப்படுத்தி இருக்க முடியும் !!! சுசீலாம்மா சுசீலாம்மா தான் !!! அந்த மயக்கத்தில் பாடலின் முதல் வரியை கூட எழுதி வைக்க மறந்து விட்டேன்.
        சென்ற வருடம் கூட (2013) சாய்பாபாவை பற்றி எடுக்கப்போகும் ஒரு தமிழ் மற்றும் ஹிந்தி படத்துக்காக பாடல் பதிவு செய்திருக்கிறார். 
       2012-இல் ஜனகண மன, 2011-இல் செம்மொழி மாநாட்டு பாடல் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்), என சிறப்பு பாடல்களையும் பாடி இருக்கிறார். அவர் அந்த கால கட்டத்தில் பாடிய பக்தி பாடல்களை இன்னொரு சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.


     90-களில் சில கசப்பான நிகழ்வுகளும் நடந்தன.  ஒரு பெரிய இசை அமைப்பாளர் இசையில் பி.சுசீலா பாடலை ஒலிப்பதிவு செய்தார். ஒலிப்பதிவு செய்யப்பட்ட பின், சுசீலா அவர்கள் வெளிநாட்டுக்கு கச்சேரிக்கு சென்று விட்டார்கள். அதில் ஒரு வரி மாற்றம் செய்ய வேண்டி வந்ததும், சுசீலா அவர்கள் வருவதற்குள் வேறு பாடகியை வைத்து ஒலிப்பதிவு செய்து வெளியிட்டார்கள். வேறொரு இசை அமைப்பாளர், ஒலிப்பதிவு செய்த பின் பாடகியை மாற்றி பாட வைத்தார். அதே இசை அமைப்பாளர், “சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்பேன்” என்ற வரிகளுக்கு இசை அமைக்க வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம். கப்பலேறி போயாச்சு பாடலை முழுப்பாடலாக பி.சுசீலா பாடினார். ஆனால் படத்தில் ஒரு சரணம் மட்டுமே வந்தது. இப்படி சில நிகழ்வுகள். அதனால் தான் என்னவோ தன்னுடைய பொன்விழா ஆண்டில் தான் புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், ரசிகர்களுக்காக தன் முடிவை மாற்றிக்கொண்டு அவ்வப்போது பாடிக்கொண்டு இருக்கிறார்.
       தென்னிந்திய கலைஞர்களை வடக்கில் மதிப்பதில்லை, அவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு பத்ம விருதுகள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என பல குற்றச்சாட்டுகள் உண்டு. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. ஆனால் அதற்கு காரணம் வட இந்தியர்கள் மட்டுமா ?!!. இங்கிருக்கும் கலைஞர்களை மார்க்கட் இருக்கும் வரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவர், இல்லையென்றால்   சுத்தமாக மறந்து விடுவர். அடுத்தது, இங்கே இருந்து பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் சரியான தேர்வு தானா????  வட இந்திய கமிட்டிக்கு தென்னிந்திய சாதனையாளர்களை பற்றி தெரிய வாய்ப்புகள் குறைவு. இங்கிருந்து செல்லும் கமிட்டி மெம்பர்கள் பரிந்துரைக்கும் ஆட்கள் சரியாக இருந்திருந்தால் எம்.எஸ்.விக்கு என்றோ பத்ம விருது கிடைத்திருக்க வேண்டும். இங்கிருக்கும் கடம், கஞ்சிரா வாசிப்பவர்களுக்கு கிடைக்கும் விருதுகள், இத்தனை சாதித்தவர்களுக்கு கிடைக்காமல் போவதற்கு, இங்கிருந்து செல்லும் பரிந்துரைகளும், அதை வழிமொழியும் ஆட்களும் முக்கிய காரணம். இதை நான் எழுத காரணம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மாநில கலைஞர்களுக்கு சரியான நேரத்தில் விருது பெற்று விடுகிறார்கள். நம் மாநிலத்தை சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நம் கலைஞர்களை மதிப்பதில்லை. இங்கிருக்கும் கலைஞர்களை, இங்கிருப்பவர்கள் மதித்திருந்தால் எந்த தாமதமும் இன்றி அரசு கவுரவங்களை பெற்றிருக்க முடியும். 
        தகுதியை வைத்து நாம் கொண்டாடக்கூடிய ஒரு சில தென்னிந்திய பிரபலங்களே உள்ளனர். அதில் முக்கியமானவர் சுசீலா. நம்முடைய பெஸ்ட் என நாம் கர்வம் கொள்ளும் சிவாஜியை கூட ஓவர் ஆக்டிங் என குறை கூறுபவர் உண்டு. ஆனால், ஒரு பாடகியாக சுசீலாவை எவரும் குறை சொல்ல முடியாது. குரலினிமை, இளமை, மொழி சுத்தம் ( proof ), quality, Clarity, Purity போல பல சிறப்புகள் உள்ள குரல். மேல் ஸ்தாயியில் பாடினாலும், கீழே பாடினாலும் குரலில் இருக்கக்கூடிய stability, வேண்டிய பாடலுக்கு ஏற்ற படி, குரலில் காட்டும் வலிமை, மென்மை, பாடலோடு இணைந்த expression என பல தகுதிகள் நிறைந்த குரல். எந்த வகை பாடலானாலும் அதை உட்கொண்டு சரியாய் பாடும் திறன் படைத்தவர். ( proof ) எந்த ஒரு பாடகியுடனும் அவரை கம்பேர் செய்யலாம். யார் பாடிய பாடல்களுடனும் அவர் பாடலை சேலஞ்ச் பண்ணலாம். அவ்வளவு பாடல்களை அத்தனை சிறப்பாக பாடி இருக்கிறார். வைரமுத்து எழுதியது போல, அவர் இன்னும் போதிய அளவுக்கு பெருமைப்படுத்தப்படவில்லை, புகழப்படவில்லை.
             லதா அவர்களின் குரல் எப்படி இருந்தாலும் (வயது ஆவது இயற்கை தானே..) அவரை பாட வைக்க, இங்கிருந்து போன ரஹ்மான் உட்பட பலர் காத்திருக்கிறார்கள். புதியவர்களும் ஒரு பாடலாவது லதாவுடன் பணி புரிய மாட்டோமா என ஏங்குகிறார்கள். அதற்காக பொறாமைப்படவில்லை. சந்தோஷம் தான். ஆனால் இங்கே அப்படியா? ரஜினி படத்தில் ஆஷாவை கூட்டி வந்து பாட வைக்கிறார்கள். அதையும் வரவேற்கிறோம். ஆனால் இங்கிருக்கும் சுசீலாவை ஏன் பாட வைப்பதில்லை? சுசீலா போன்றோருடன் பணிபுரிய இளையதலைமுறை இசை அமைப்பாளர்களை தடுப்பது எது? வட இந்தியர்கள் தங்கள் கலைஞர்களை மதிப்பது போல், இங்கிருக்கும் கலைஞர்கள் சாதனையாளர்களை மதிப்பது இல்லை. நம்மிடம் இருக்கும் அரிய பொக்கிஷங்களை கூட எளிதில் தூக்கி போட்டு விடுகிறோம். காலம் கடந்த பின் யாருக்காக கலங்கி என்ன பயன்? டி.எம்.எஸ் மறைந்த பின் அந்த கம்பீரமான ஆண்குரலை, என்னுடைய ஒரு படத்தில் கூட பாட வைக்க முடியவில்லை என பேட்டி கொடுக்கிறார் பாரதிராஜா. அதனால்  என்ன பயன்? இன்று வரை பி.சுசீலாவின் தரத்தில் ஒரு கலைஞனை வடக்கில் காண்பிக்க முடியுமா? வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, வட இந்திய கிராமிய இசை, தென்னிந்திய கிராமிய இசை என எல்லா வகை பாடல்களையும் அதன் தரம் குறையாமல் பாடி இருக்கிறார். ( proof ) வட இந்திய பாடகிகளில்  யாராவது ஒரு கர்நாடக இசை சார்ந்த பாடலை  இது வரை பாடி இருக்கிறாரா? ஆனால் எத்தனை ஹிந்துஸ்தானி ராகம் சார்ந்த பாடல்களை பி.சுசீலா பாடி இருக்கிறார்!! கர்ணன் படம் ஒன்று போதாதா !! இது மட்டும் அல்ல, கம்பேர் பண்ணினால் அதற்கே பல பக்கங்கள் வேண்டும்.
                         90-களில் கூட 200 -க்கும் அதிகமான திரைப்பாடல்களும், 2000-க்கும் அதிகமான பக்திப்பாடல்களும் பாடி இருக்கிறார். 1952 முதலே சினிமாவில் பாடினாலும், 1955-இல் இருந்து 2000 வருடம் வரை அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அறுபது வருடத்துக்கும் மேற்பட்ட இசை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 45 வருடங்கள் இடை விடாமல்  உழைத்திருக்கிறார். அதற்கான அங்கீகாரம் அவருக்கு கொஞ்சம் தான் கிடைத்திருக்கிறது. சில விமரிசகர்கள் சொல்வதுண்டு, பாடுவதற்கு காசு வாங்குகிறார்கள், அப்புறம் எதற்கு அங்கீகாரம் என்று?. அப்துல் காலாம் சம்பளம் வாங்காமல் வேளை பார்த்தாரா? பாரத ரத்னா வாங்கிய எந்த அறிவியல் வல்லுநர் சம்பளம் வாங்காமல் வேலை செய்தார்? அங்கீகாரங்கள் அவர்களின் அதீத உழைப்புக்கான மரியாதை. அவ்வளவே.

    தென்னிந்திய கலைஞர்களான எம்.எஸ்.வி யும், சுசீலாவும் நமக்கு கிடைத்த அபூர்வ பொக்கிஷங்கள். இவர்களை போற்றிப்பாதுகாப்பது நமது கடமை. 

3 கருத்துகள்:

  1. kalai kumar
    உங்கள் பதிப்பில் எழுதிய அத்தனையும் உண்மை.அவருக்கு நிகர் அவரே.The BEST ever Female singer,unbeatable,uncomparable,unique.

    பதிலளிநீக்கு
  2. http://narasimmaelangovan.blogspot.com/?m=1
    சுசீலா அம்மாவின் சில பாடல்கள் பற்றிய என்னுடைய எண்ணங்கள்.

    பதிலளிநீக்கு