பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 ஜூன், 2017

பி.சுசீலாவும் இளையராஜாவும் இணைந்து பாடிய பாடல்கள்.




ஒரு நண்பர் எழுதிய Blog-இல் இளையராஜாவின் முதல் டூயட் பற்றி அலசி இருந்தார்கள்..  (லிங்க்  )


      "  ராஜா பாடிய முதல் டூயட் என்னவாக இருக்கும்? படம் வெளிவராது பாடல்கள் பிரபலமான மணிப்பூர் மாமியார் படத்தில் ஷைலஜாவுடன் " சமையல் பாடமே"? இருக்கலாம்.

என் யூகம், அவர் பாடிய முதல் டூயட் ...அந்தப்பாடகியுடன் அவர் அதற்குப் பிறகு டூயட் பாடவேயில்லை.....இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாடகியுடன், மற்ற பாடகர்களுடனும் ( மனோ) சேர்ந்து அவர் திரைப்பட வாழ்க்கையில் இன்னும் ஒரே பாடல்தான் பாடியிருக்கிறார், தேங்காய் ஶ்ரீனிவாசன் தயாரித்து நடித்து அழிந்த கிருஷ்ணன் வந்தான் படத்தில்.

அந்தப் பாடகி..பி.சுசீலா. பாடல் 1978 ல் வெளியாகி , 1979 வெளியான லட்சுமி படத்தில் " தென்ன மரத்துல தென்றலடிக்குது" .   


    இன்னொரு தளத்தில் ஒரு நண்பர் இப்படி எழுதி இருந்தார்... "I still remember myself and my brother attended the light music prog (1st in a grand scale) of IR for PiLLayar Chathurthi near Luz PiLLayar temple (Luz circle). I was a student that time. PS also sung with him, but she sung only 3 songs (KetteLe ange, KaNNan oru kuzhandhai, Thenna marathula thendral..). Before that duet, IR said "This is my first duet, that too with PS, whom I always respect".




     சரி..  முதல் நண்பர் தெரிவித்தபடி அல்ல... பி.சுசீலாவுடன் இன்னும் சில டூயட்டுகள் பாடி இருக்கிறார்.  பி.சுசீலாவுடன் இணைந்து இளையராஜா பாடிய பாடல்கள் எவை?

1.  1979-ஆம் வருடம் வெளிவந்த லக்ஷ்மி படத்தில் இடம் பெற்ற "தென்ன மரத்துல தென்றல் அடிக்குது" என்ற பாடல் தான் இருவரும் இணைந்து பாடிய முதல் பாடல்.   Here is the beautiful Write up by Vicky Iyengar ( Link
                                             ( தென்ன மரத்துல தென்றல் ) 
2. 1987 -இல் மோகன், ரேகா நடித்து வெளிவந்த  "கிருஷ்ணன் வந்தான்" திரைப்படத்தில் "தனியாக படுத்து படுத்து" என்ற டூயட்.. இப்படம்  தேங்காய் ஸ்ரீநிவாசன் அவர்களின் சொந்தப்படம் என்பது இன்னொரு செய்தி..





3. அதே படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன். மோகன், ரேகா ஆகியோர் நடிப்பில் இடம்பெற்ற "அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க" என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து மனோவும், இளையராஜாவும் பாடி இருந்தார்கள் .



4. 1989-இல் ராமராஜன், கவுதமி நடிப்பில் வெளிவந்த "பொங்கி வரும் காவேரி" படத்தில் இடம் பெற்ற " மன்னவன் வாழும் குடி பிறந்த" என்ற சோகப்பாடல்.


5.  1991-இல்  வெங்கடேஷ், தபு நடிப்பில் வெளிவந்த "கூலி நம்பர் 1 " என்ற தெலுங்கு படத்துக்காக் பாடிய   "கலயா நிசமா" என்ற டூயட்..



6.  பாடாத தேனீக்கள் படத்தில் இடம் பெற்ற "ஆதி அந்தம் இல்லாதவனே" என்ற பாடல்.



7. 1986-இல் சிவாஜி-பத்மினி நடிப்பில் வெளிவந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" படத்தில் இடம் பெற்ற கதம்ப பாடல் "அலையிலே மிதந்தவள்" என்ற பாடலை பி.சுசீலா,  இளையராஜா, மலேஷியா வாசுதேவன்" இணைந்து பாடினார்கள். 





8. தங்கமடி தங்கம் படத்தில் இடம் பெற்ற "அத்த மக தங்கத்துக்கு என்ன மயக்கம்" என்ற பாடலில் மலேஷியா வாசுதேவன், பி.சுசீலாவுடன் இளையராஜாவும் இணைந்து பாடி இருப்பார்.




9.  காளிதாசன் கண்ணதாசன் பாடலில் ஒலிக்கும் ஆரம்ப ஹம்மிங் இளையராஜாவின் குரல் தான்.




10. சீர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி சொல்லடி தோழி பாடலில் ஜதி இளையராஜாவின் குரல் என்று தான் நினைக்கிறேன்..




 

நன்றி .. 
     

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக