பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 ஜூன், 2017

பி.சுசீலாவும் சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல்கள்.


       


       சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழ் இசை உலகில் மறக்க முடியாத தனித்தன்மை வாய்ந்த பாடகர். கோயில் மணி போல் கணீர் என ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.  தெளிவான குரல் , வார்த்தை சுத்தம்,  கம்பீரம், அருமையான சங்கதிகள் என ஒவ்வொரு பாட்டிலும் அவர் தனித்துவம் வெளிப்படும். ஐம்பதுகளில் ஒரு குரலுக்கும் இன்னொரு குரலுக்கும் ஒற்றுமை கண்டு பிடிக்கவே முடியாது. எல்லா பாடகர்கள் குரலிலும் தனித்துவம் இருந்தது. டி.எம்.எஸ், ஏ.எம்.ராஜா டி.ஆர்.மஹாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி,  பி.பி.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் என யார் குரலிலும் இன்னொருவர் குரலின் சாயல் இருக்காது.
    
       சீர்காழி அவர்கள் 1953-இல் பொன்வயல் என்ற திரைப்படத்தில் பாடி தன் திரை இசை பயணத்தை ஆரம்பித்தார். அதே போல் கர்நாடக இசை கச்சேரிகளும் நிறைய செய்து வந்தார். அவர் பாடிய பக்தி பாடல்கள் ஆலயங்கள் உள்ள வரை ஒலித்துக்கொண்டே இருக்கும் என கூறும் அளவுக்கு பிரபலம் ஆனவை. அகத்தியர், கந்தன் கருணை, தெய்வம் போல பல  படங்களில் நடித்தும் இருக்கிறார். 1988-ல் இவர் இறைவனடி சேர்ந்தார்..

  
        எண்பதுகளில் பொம்மை, பேசும் படம், ஜெமினி சினிமா, சினிமா எக்ஸ்ப்ரஸ் என பல சினிமா பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஒரு முறை சினிமா எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையில் பி.சுசீலாவை பற்றி இப்படி குறிப்பிட்டார். “இன்று சமயபுரத்தாளே சாட்சி” பாடல் ரிக்கார்டிங்குக்காக சென்ற போது சகோதரி பி.சுசீலா பாடிக்கொண்டு  இருந்தார். அன்று “கண்ணான கண்ணனுக்கு அவசரமா” என்று பாடிய அதே குரலை இப்போதும் கேட்டேன். அன்று முதல் இன்று வரை அதே இனிமையுடன் பாடும் அந்த குரலை “தேவ அமுதம் என்று தானே கூற வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார். உண்மை தானே.
  .

             
     பி.சுசீலா பாட ஆரம்பித்து 25 வருடங்கள் நிறைவு செய்ததை ( வெள்ளி விழா ) அடுத்து அவருக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அதற்காக அன்றைய பொம்மை பத்திரிக்கை பி.சுசீலாவுக்கு ஒரு சிறப்பு மலரும் வெளியிட்டது. அதில் பாடகர், பாடகியர் பலரும் பி.சுசீலாவை புகழ்ந்து எழுதி இருந்தார்கள். அதில் சீர்காழி அவர்கள் பி.சுசீலாவை பற்றி எழுதியதை படியுங்கள்..




             பி.சுசீலாவும், சீர்காழியாரும் இணைந்து பாடிய முதல் பாடல் எது என அவரே குறிப்பிட்டு இருக்கிறார். 1957 –இல் மாஸ்டர் வேணு இசையில்  வெளிவந்த “எங்க வீட்டு மகாலக்ஷ்மி” படத்தில் இடம் பெற்ற “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே” என்ற பாடலே அது.  அதற்கு பின் பல படங்களில் அவர்கள் இணைந்து பின்னணி பாடினார்கள்.   சில பாடல்களின் வீடியோவை இணைத்திருக்கிறேன்.. 

           

       Pattanam thaan Pogalamadi
        
Vandi urundoda
         

     Sirikkintraal intru
        
Sengani Vaay thiranthu
         

      Ennai vittu odippoga
       


Oh Ezhil Raja
         

     Yaarukku Yaar Sontham Enbathu


Kannana Kannanukku
       

    Sange Muzhangu Sange Muzhangu


Paaradi kanne konjam

         

    Vatta Vatta Paarayile ( pazhani )


Shambo Mahadeva ( thiruvilayadal )
       



மொத்த பாடல்களின் தொகுப்பு :


1957enga veetu mahalakshmipattanam than pOgalaamadi Master Venu
1957maayaabazarthayai seiveeraGhantasala
1958panai pidiththaval bhagyasalisOlaikkuLLe kuyilu S. Rajeshwara rao
1958penn kula perumaikangal urangida maranthidum?
1958periya koyilkoLLai koLLum azhaginileK.V. Mahadevan
1958periya koyilvalai veesamma valai veesuK.V. Mahadevan
1958pillai kani amudhuseevi mudichi singarichiK.V. Mahadevan
1958pillai kani amudhuOdugira thanniyila K.V. Mahadevan
1958thirumanamengal nadu andhra naduS.M. subbaiah naidu
1958thirumanammalayalam pugazhS.M. subbaiah naidu
1958thirumanamnaanga pirantha thamizhnaduS.M. subbaiah naidu
1958thirumanamthulli vara porenS.M. subbaiah naidu
1959engal kula devioh! Vandu aadatha K.V. Mahadevan
1959kalaivaananen kannil ambu unduPendyala Nageswara Rao
1959kann thiranthathukann thiranthathu oliT. R. rajagopal
1959kann thiranthathupengalai kandaaleT. R. rajagopal
1959kann thiranthathupudhu vazhvu peruvomeT. R. rajagopal
1959manaiviye manidanin manikkamthathith thathi hanumantha rao
1959penn kulathin ponn vilakkuvanakkam vaanga maapillaiMaster Venu
1959penn kulathin ponn vilakkuvizhi vaasal azhaganaMaster Venu
1959sollu thambi sollupanbodu ennaalume K.V. Mahadevan
1959thaai magalukku kattiya thaalithanjavooru bommaiK.V. Mahadevan
1959ulagam sirikkirathuSanthosham than ini vaazhvilESusarla Dakshinamoorthy
1964naatukkoru nallavanvaNNa malarOdu konjum Susarla Dakshinamoorthy
1959vannakkilivandi urundoda achaaniK.V. Mahadevan
1960paattaaliyin vetrientha nalume naame Master Venu
1960patti vikramathithanOh ezhil rajapendyala
1960thangam manasu thangampongum azhagu poothuK.V. Mahadevan
1960thangam manasu thangamsirikkudhu mullai adhuK.V. Mahadevan
1960veerakkanalkaigaL iraNdil vaLai kulungaK.V. Mahadevan
1960veerakkanalsithiramE sithiramEK.V. Mahadevan
1960yanaippaganchengani vaai thirandhuK.V. Mahadevan
1961kongu natu thangamkarumbaga inikkintraK.V. Mahadevan
1961kongu natu thangamnenjinile enna veeram K.V. Mahadevan
1961kumudhamennai vittu odi poga mudiyumaK.V. Mahadevan
1961maamiyarum oru veettu marumagalevaa entru sonnadhumPendyala Nageswara Rao
1961nallavan vazhvansirikkintal intu sirikkintralT. R. Papa
1961sabaash maapillemaapillai maapillaiK.V. Mahadevan
1961sabaash maapilleMandhil irukkuthu oNNuK.V. Mahadevan
1961sabaash maapilleyaarukku yaar sontham K.V. Mahadevan
1961sri valliainthezhuthanG. Ramanathan
1961sri vallikaalaan kudai pidikkaG. Ramanathan
1961sri vallithaagam thaninthadhuG. Ramanathan
1961thaai illa pillaivaamma vaamma ChinnammaK.V. Mahadevan
1962aalaya maniKannana kannanukku avasaramaM.S. Viswanathan
1962azhagu nilakaattukkuyilkkum K.V. Mahadevan
1962azhagu nilamoongil mara kaatrinilEK.V. Mahadevan
1963aasthikkoru anum asaikkoru pennumennumpazhathaikkande oruK.V. Mahadevan
1963aasthikkoru anum asaikoru pennumnnumpirivu enbadhuK.V. Mahadevan
1963chittoor rani padminichittu sirithadhuG. Ramanathan
1963kalayarasinee iruppathu ingE K.V. Mahadevan
1965iravum pagalumkoothaadum kondayileT. R. Papa
1965kalankarai vilakkamsange muzhanguM.S. Viswanathan
1965pazanivatta vatta paaRaiyilEM.S. Viswanathan, T.K. Ramamurthy
1965thiruvilayadaldeva  mahaDevaK.V. Mahadevan
1965vallavanukku vallavanpaaradi kanne kOnjam veda
1966gowri kalyanamthottathu pol kanavu kandenM.S. Viswanathan
1966naan aanaiyittaalodi vanthu meetpatharku(mehangal)M.S. Viswanathan
1967seethanaadi thudikkudhu K.V. Mahadevan
1969kuzhanthai ullamkudagu naadu ponniS.P. Kodandapani
1969magane nee vaazhgaazhagu mayil kolamenaT. R. Papa
1971paatondru kettenninaippadhu nadappthuC. Ramachandra
1973Raadhahari hari giridariShankar Ganesh
1958mangalya bhagyamkannodu kann  kalanthalG. Ramanathan
1977odi vilayadu papaadikkadhe thiruthadeVijaya Krishnamoorthy
1978varuvan vadivelanPathu malaithiru muthukkumaraniM.S. Viswanathan
1981devi dharisanamsamayapura thaayEM.S. Viswanathan



3 கருத்துகள்: