பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

கங்கை அமரன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்..




               கங்கை அமரன் அவர்கள் பல துறைகளில் கலக்கிய திறமைசாலிகளில் ஒருவர். இளையராஜாவின் சகோதரர் என்ற அறிமுகம் இருந்தாலும் தனக்கென ஒரு பெயரை தேடிக்கொண்டவர். டைரக்டர், தயாரிப்பாளர், பாடல் ஆசியர், கதாசிரியர், நடிகர், இசை அமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இன்னமும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர் எத்தனை படங்களுக்கு இசை அமைத்தார் என்பது தெரியவில்லை.ஒரு பேட்டியில் 170 படங்களுக்கு மேல் இசை அமைத்ததாக கூறி இருந்தார். அவர் அதற்கான லிஸ்ட் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

      கங்கை அமரன் இசை அமைத்து வெளியான சில திரைப்படங்களில் பி.சுசீலாவும் பாடி இருக்கிறார். அதிலும் அவர் இசையில் பி.சுசீலா ஒரு பாடலை கேட்டு கங்கை அமரனா இப்பாடலுக்கு இசை அமைத்தார் என வியந்தது உண்டு!!!. அப்பாடல் “மலர்களே மலருங்கள்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ” என்ற பாரதியாரின் பாடல் தான். இனிமையை அம்மாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்!! அமுதக்குரலில் தேன் குழைத்து தேனமுதமாய் பொழிந்திருப்பார்கள் !.

கங்கை அமரன் இசை அமைத்த முதல் திரைப்படம் “மலர்களிலே அவள் மல்லிகை”. அதில் பி.ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய “சிந்து நதியோரம் தென்றல் விளையாடும். கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்” என்ற பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். பி.சுசீலாவின் குரல் ஹைபிட்சில் ஒலித்த பாடல்களில் இதுவும் ஓன்று.

அதே படத்தில் “இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு” என்ற பாடல் பி.சுசீலாவின் இளமை ததும்பும் குரலில் இனிமையாக ஒலித்தது. நிறைய பேர் கேட்டிருக்க மாட்டீர்கள். ஒரு முறை கேட்டு பாருங்கள்.


நீதிபதி படத்தில் இடம் பெற்ற “பாச மலரே அன்பில் விளைந்த வாசமலரே” என்ற பாடல் குறிப்பிடபடத்தக்க பாடல்களில் ஓன்று. இத்திரைப்படம் மலையாளத்தில் “ஜஸ்டிஸ் ராஜா” என்ற பெயரில் வெளியானது. அதிலும் இதே பாடல் “கன்னி மலரே” என ஒலித்தது.


 சிவாஜி நடிப்பில் வெளிவந்த “இமைகள்” திரைப்படத்தில் “மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ” என்ற பாடலும் மக்கள் மனம் கவர்ந்த பாடல்.


மண்ணுக்கேத்த பொண்ணு திரைப்படத்தில் இடம் பெற்ற “பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட என்ன கொண்டு போ” என்ற சோகமான டூயட் குறிப்பிட பட தக்கது.


சுஜாதா, அம்பிகா மற்றும் சிவகுமார் நடிப்பில் உருவான “கற்பூர தீபம்” படத்தில் இடம் பெற்ற “காலம் காலமாய் பெண் தானே கற்பூர தீபம்” பாடல் தெலுங்கில் இருந்து அப்படியே காப்பி அடிக்க பட்டது. இதன் ஒரிஜினல் "Aaranikuma ee deepam Karpoora deepam" -ஐ கூட பாடியது பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் தான்.


என் தங்கச்சி படிச்சவ படத்தில் “மாமான்னு சொல்ல ஒரு ஆளு” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்.


ஷோபனா. சுலக்ஷ்னா நடித்த “மருதாணி” படத்தில் “தொட்டில் கிளி தூங்கடி” என்ற தாலாட்டு குறிப்பிட படத்தக்கது.  அதை தவிர “மச்சானுக்கு மச்சமிருக்கு” "விளக்கு வச்சா" ஆகிய பாடல்களும் ரசிக்கக் தக்கவை..

ரூசி படத்தில் இடம் பெற்ற “ஏதோ ஒரு வேகம்” பாடலும் குறிப்பிட தகுந்த பாடல்களில் ஓன்று.

புது யுகம் படத்தில் இடம் பெற்ற “தெய்வம் வந்தது” பாடலும் கேட்கலாம் ரகம்.


இவை தவிர பி.சுசீலாவுடன் இணைந்து கங்கை அமரனும் சில பாடல்களை பாடி இருக்கிறார்.
1. சோலை புஷ்பங்களே ( இங்கேயும் ஒரு கங்கை )
2. தெக்கு தெரு மச்சானே ( இங்கேயும் ஒரு கங்கை )
3. மச்சானுக்கு மச்சமிருக்கு ( மருதாணி  )



YearLanguageMovieSongs
1978Tamilmalargalile aval malligaiSindhu nadhiyoram
1978Tamilmalargalile aval malligaiisaiyinilE raagam palanooRu
1980Tamilmalargale malarungalsuttum vizhichudar
1980Tamilkannile anbirunthaalaasa vecha
1980Tamilkannile anbirunthaalnaan paadum pothu
1980Tamilkaradipaathaalum aasai idhu
1982Malayalamjustice rajakanni malare
1983TamilimaigalmaadapuraavO illai manjal 
1983Tamilneedhipathipaasa malare anbil 
1984Tamilkudumbamthedamal deivam irangi
1984Tamilkuzhanthai padum thalattukaadhal kalayil inaivai thothai 
1984TamilrusiEtho oru vegam
1984Telugumuddu krishnudubhama o bhama
1984Telugumuddu krishnuduooru mottamu
1984MalayalamJeevithammanimekha radhameri
1985Tamilkarpoora deepamkaalam kaalamaai penn
1985Tamilkarpoora deepamvanna mayil ontru
1985Tamilkunguma pottumanmathanin
1985Tamilmannukketha ponnupOnkaathe andha ponnu kitta 
1985Tamilmaruthaanimachanukku machamirukku
1985Tamilmaruthaanivelakku vacha padichi
1985Tamilmaruthaanithottil kili thoongadi 
1985Tamilnaan ungal rasiganoru devathai
1985Tamilpudhu yughamdeivam vanthathu
1985Tamilragasyamamma nee
1985Tamilragasyamnaan paatu
1986Tamilvettaiada ennavo pollatha
1987Tamilchellakkuttyvaanam partha mazhigam
1987Tamilen priyamekambankollayil
1987Tamilen priyamepompalaya
1987Tamilyettiki pottiangalamma nee
1988Tamilen thangachi padichavamaamaannu solla oru aalu
1988Tamilratha thaanamKoyilgalum churchugalum
1979Telugudubb suvar illada chithirangaltholakari (yekkada)
1979Telugudubb suvar illadha sithirangalthilaka pottudu kuriche




ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

வி.எஸ்.நரசிம்மன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.




      இசை அமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் ஒரு இசை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கோட்டு வாத்தியம் வாசிப்பதிலும் அவரது தாத்தா வயலின்  வாசிப்பதிலும் சிறந்து விளங்கியவர்கள். மைசூரை பிறப்பிடமாக கொண்ட வி.எஸ்.நரசிம்மன் இளவயதிலேயே வயலின் கற்றுக்கொண்டார்.. மைசூரில் இருக்கும் பிரிமியர் ஸ்டுடியோ தயாரித்த படங்களில் வயலின் வாசித்து இருக்கிறார். பின்னர் 1958-இல் விஜயபாஸ்கர் இசை அமைத்த படங்களில் வயலின் வாசிப்பதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வர ராவ், பெண்டியாலா, அஸ்வத்தாமா போன்ற இசை அமைப்பாளர்கள் இசையில் வயலின் வாசித்து வந்தார். இந்த கால கட்டத்தில் வெஸ்டர்ன் இசையையும் கற்றுக்கொண்டார். இளையராஜா வாத்திய கலைஞராக இருந்த கால கட்டத்தில் பல இசை அமைப்பாளர்களிடமும் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அந்த பழக்கத்தால் இளையராஜா இசை அமைப்பாளராக உயர்ந்த போது அவருக்கு உதவியாளராகவும், வயலினிஸ்ட் ஆகவும் பணி ஆற்றினார். இளையராஜாவின் மாஸ்டர் பீசஸ் என்று சொல்ல கூடிய “How to name it?. “Nothing bit wind” போன்ற ஆல்பங்களிலும்  ராஜ பார்வை போல பல படங்களிலும் ஒலித்தது இவரது வயலினிசை தான்.

   1984-ல் கே.பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற திரைப்படத்தின் மூலமாக இவரை இசை அமைப்பாளராக அறிமுக படுத்தினார். அத்திரைப்படமும் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றன. அதற்கு பின்னும் யார், புதியவன், கல்யாண அகதிகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கடைக்கண் பார்வை. இளம் கன்று, சின்ன மணிக்குயிலே என பல படங்களுக்கு அவர் இசை அமைத்தார். நல்ல தரமான இசையை கொடுத்தும் வெற்றி படங்களுக்கும் இசை அமைத்தும் கூட அவருக்கு போதிய அளவு படங்கள் கிடைக்கவில்லை. Most Underrated Music Director-களில் இவரும் ஒருவர்.

    இவர் இசை அமைத்த பெரும்பாலான படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். தமிழில் கொஞ்சம் டல் அடித்தாலும் தெலுங்கில் நிறைந்திருந்த வாய்ப்புகளால் பி.சுசீலா மிகவும் பிசியாக இருந்தார். அதனால் நினைத்த நேரத்தில் வந்து பாட இயலாது.  இவருக்கு பிடித்த பாடகி பி.சுசீலா என்பதால் பி.சுசீலாவுக்காக சில நாட்களோ வாரங்களோ ஆனாலும் கூட காத்திருந்து பி.சுசீலாவையே பாட வைப்பார்..

       இவர் அறிமுகமான “அச்சமில்லை அச்சமில்லை” படத்தில் கதாநாயகி சரிதா பாடும் இரு பாடல்களையும் பி.சுசீலா பாடினார். அவ்விரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் ஆகின. “மேகத்த தூது விட்டா திசைமாறி போகுமோன்னு தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்” என துவங்கும் பாடல் கிராமிய மணம் வீசும் அருமையான வரிகளுடனும், இனிமையான இசையுடனும் ஒலித்த அருமையான தெம்மாங்கு பாடல். . அன்றைய கால கட்டத்தில் அடிக்கடி ரேடியோவில் ஒலிபரப்ப பட்ட பாடல்.

அதைப்போல் எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் ஜோடியாக பாடும் “ஆவாரம்பூவுஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு” என்ற பாடலும் ரசிகர்களால்  விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்களில் ஓன்று.

80-களில் நிறைய வெற்றிப்படங்களை தயாரித்த கோவைத்தம்பி தயாரித்த இன்னொரு வெற்றிப்படம் தான் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”. அதுவரை அவர் படங்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்து வந்தார். அந்நிலையில் வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இசை அமைக்க வைத்து எடுத்த இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட். ஆனால் படம் படு தோல்வி. அதனால் வி.எஸ்.நரசிம்மனுக்கு போதிய வெற்றி கிட்டவில்லை.. இப்படத்தில் பி.சுசீலா பாடிய “ஆயிரம் பூக்கள்மலரட்டும்” என்ற இனிமையான பாடலை பி.சுசீலா பாடினார். படத்தில் பல சூழ்நிலைகளில் ஒலிக்கும் இந்த பாடல் பிரபலம் ஆனது
.
நடிகர் சரத்குமார் தயாரித்து நடித்த முதல் படம் கார்த்திக் – அம்பிகா நடிப்பில் வெளியான “கண் சிமிட்டும் நேரம்”. இப்படத்தில் “தானே பாடுதே மனம் எதையோநாடுதே” என மிகவும் இனிமையான பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்.

பாண்டியன் – இளவரசி ஜோடியாக நடித்த “கடைக்கண் பார்வை” என்ற படத்திலும் “விழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடும்” என்ற மிகவும்  இனிமையான ஒரு டூயட் இடம் பிடித்தது.

“கடைக்கண் பார்வை” படத்தில் கிளைமேக்ஸில் இடம் பெரும் ஒரு உணர்ச்சி மிகும் சோகப்பாடலை ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். “ஏதோஒரு ராகம் ஏனோ அதில் சோகம்” என்ற அந்த மிகவும்  அருமையான பாடல் என்றாலும் அதிகம் கவனிக்க படாமல் போனது.


  கல்யாண அகதிகள் படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார். அதில் இடம் பெற்ற “மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்” என்ற பாடல் வித்தியாசமான இசை அமைப்புடனும், அழகான வரிகளுடனும் கேட்க சுகமாக இருக்கும். அதே படத்தில் “வர வேண்டும் பெண்ணே வர வேண்டும்”. “கானல்அலைகளிலே”, “கல்யாண அகதிகள் நாங்கள்” என முழுக்க முழுக்க பி.சுசீலாவின் குரலால் நிறைந்திருந்தது. இத்திரைப்படம் “Aadavallu meeku Joharlu” என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அதிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.


       இப்படத்தின் தயாரிப்பாளரும்,  இயக்குனருமான கே.பாலச்சந்தர் அவர்களை நன்றியோடு நினைத்து கொள்கிறோம். பி.சுசீலா அவர்களுக்கு  கின்னஸ் சாதனை கிடைக்க அவரும் உதவி இருக்கிறார்.; கின்னஸ் சரி பார்க்கும் குழுவில் இருந்து “பி.சுசீலா சாதனை செய்த துறையில் இருந்து இரு சாதனயாளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்” ஒரு மெயில் வந்தது அப்போது நாங்கள்  கே.பாலச்சந்தர் . ஏ.வி.எம். குமரன் ஆகிய இருவரையும் அணுகி இந்த கோரிக்கையை வைத்த போது இருவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை நிறைவேற்றி தந்தார்கள். கே.பாலச்சந்தர் அவர்கள் “பி.சுசீலாம்மாவிற்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள் !!” என ஆனந்ததுடன் சிறு பிள்ளை போல் கூறியதையும் , அவர் படங்களில் பி.சுசீலா எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்கள் என கேட்டறிந்தையும் எங்கள் குழுவினர் கூற கேட்க ஆனந்தமாக இருந்தது.


.
    
    விஜயகாந்த - அமலா நடிப்பில் வெளியான ஒரு படத்துக்கு பி.சுசீலாவின் குரலில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  ஒரு பாடலின் தலைப்பை வைத்தார்கள். படத்தின்  பெயர் “உன்னை ஓன்று கேட்பேன்”. இப்படி வைத்து விட்டு பி.சுசீலாவை பாட வைக்காமல் இருந்தால் எப்படி?! அமலா பாடுவது போல் அமைந்த “சின்ன கிளியே ஓ சொல்லு கிளியே” என்ற இனிமையான பாடலை கேட்க தவறாதீர்கள்.

 கார்த்திக் – ரேகா நடித்த “சின்ன மணிக்குயிலே “ என்ற படத்திலும் “ என் ஜீவன் தேடும் தீபம் உன் பார்வையே” என்ற பாடலை எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் இணைந்து பாடினர்.

“Terror”  என்ற நேரடி தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார் வி.எஸ்.நரசிம்மன்”. அதில் இடம் பெற்ற “ Neelakasam nee illu” என்ற பாடலும் “Naa Navvulalo Sarigamalu” என இரு பாடல்கள் பிரபலமாக அமைந்தன. இதே படம் யுத்தம் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. “ Neelakasam nee illuஎன்ற பாடல் “கண்ணே வானம் உன் வீடு” என ஒலித்தது. அடிக்கடி கேட்கின்ற பாடல் தான் இது.

இனியராஜா என்ற படத்தில் “இரவும் பகலும் தழுவும் பொழுதும் நழுவும் பொழுதும்” என எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒரு டூயட் இடம் பெற்றது. அதே போல் “வா மழை மேகமே, தேன் புது ராகமே” என்ற பாடலும் பி.சுசீலாவின் தேன் குரலில் ஒலித்தது.

எண்ணிக்கையில் கொஞ்சமாக இருந்தாலும் எவ்வளவு நல்ல பாடல்கள்..!! இன்னமும் கொஞ்சம் அதிகமான படங்கள் அவருக்கு கிடைத்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது..  

List of Songs...


1984Tamilachamillai achamillaiaavaram poovu arezhu naala
1984Tamilachamillai achamillaiodugira thanniyile (megatha)
1984Kannadamugila malligeoppide kannu 
1984Kannadamugila malligeprathithina hosa kavitheyu
1984Kannadamugila malligesaku saku
1985TeluguterrorNaa Navvulalo
1985TeluguterrorNeelakaasam nee ellu
1985Tamilkalyaana agathigalKalyana agathigal naangal
1985Tamilkalyaana agathigalmanasukkul udkaarnthu mani
1985Tamilkalyaana agathigalvara vendum penne vara vendum
1985Tamilkalyaana agathigalkaanal alaigalile
1985Tamilyuddhamkanne vaanam un veedu
1985Tamilyuddham? ( nee navvulalo)
1985TamilKadaikkan paarvaivizhi deepam unai thedum
1985TamilKadaikkan paarvaiedho oru raagam
1985Telugupremaradhananaa gaanam mee sondham
1985Telugupremaradhana? ( edho oru raagam)
1986Tamilaayiram pookal malarattumAyiram pookal malarattum
1986Tamilunnai ontru ketpenChinna kiliye sollu kiliye
1987Tamilchinna mani kuyileen jeevan thedum
1988Tamilchithiram pesuthadikannan intru
1988Tamilchithiram pesuthadiravikula venthane
1988Tamilchithiram pesuthadithanga nilavu
1988Teluguprema ragamchinni chilaka
1988Tamilkann chimittum neramthaane paaduthe manam
1989Telugukarkotakuduedho teliyani
1993Tamiliniya rajairavum pagalum thazhuvum
1993Tamiliniya rajavaa mazhai magame-solo
1987Teluguaadavallu meeku joharlu (D)? kalyana agathigal
1987Teluguaadavallu meeku joharlu (D)? varavendum penne
1987Teluguaadavallu meeku joharlu (D)? manasukkul utkarnthu
1987Teluguaadavallu meeku joharlu (D)? kaanal alaigalile
1985Tamililam kantruaamaam saami
1985Tamililam kantruparisam pOdaatha

சனி, 15 ஏப்ரல், 2017

எஸ்.பி.பி இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்


     பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பல திறமைகளை ஒருங்கே கொண்டவர் எஸ்.பி.பி அவர்கள்.
      தெலுங்கில் கன்யாகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாக இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். தமிழில் "துடிக்கும் கரங்கள், சிகரம், தையல்காரன், மயூரி போல சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இவர் படங்களில் இசை அமைத்து இருக்கிறார். .
      எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50 படங்களுக்கு  இசை அமைத்திருக்கிறார்.
அவரது இசையில் பி.சுசீலா பாடிய பாடல்களின் தொகுப்பை கீழே காணவும். தமிழில் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பதில் சிறிய ஏமாற்றம் இல்லாமல் இல்லை....





                                          ( Yemittidi yemittidi - Thoorpu velle railu )

                                         ( Sandepoodu Andalunna- Thoorpu velle Railu )

                                        (  Segathaggani sapal pulusu- Seethamam pelli )

                                          ( Yemayane thalli - Seethamma pelli )


Song List is below..



1977Telugukanyakumarirahasyam teeyani rahasyam
1977Telugukanyakumaritholi sandhyaku
1979TeluguRa Ra krishnaiahaa vannelu
1979Teluguthoorpu velle railukanne ma chinnari
1979Teluguthoorpu velle railuyemitidhi yemitidhi
1979Teluguthoorpu velle railuSandhepodhu andhaluna chinnadhi
1979Telugucaptain krishnakaalakalam idi paadanee
1983TelugubharyamaniSeethave vellama seethave
1983Teluguoorantha sankranthijoom joom mantu
1983Teluguoorantha sankranthiOorantha gola gola
1983Teluguoorantha sankranthiSambarala sankurathri
1984Teluguseethamma pellisagashagani
1984Teluguseethamma pellishochu oh yemma shochu
1984Teluguseethamma pelliPapikondalo paita
1984Teluguseethamma pelliyemaayani thali
1985Telugubangaru chilakarani vasamunu veedi
1985Telugudongalo doraGopaludu evarikai yedhuru
1985Telugumuddula manavaraluabba meeru marinandi
1985Malayalammayurichanchala (iniyen)
1985Malayalammayuriee paadam omkaara brahmma 
1985Malayalammayurimounam geetham
1985Malayalammayurivennila muthumayi
1987Telugugowthamiveligindhi naa prana deepam
1987Teluguraamu(new)Kaane kaanee
1987Teluguraamu(new)Ontiganta
1999Telugukraisthava bhakthi geethaluraa raa jeevadhara
1999Telugukraisthava bhakthi geethalusreerasthu kristhuni


Thanks..


செவ்வாய், 11 ஏப்ரல், 2017

எஸ்.பி.பி - பி.சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் - 6




1986 முதல் எஸ்.பி.பி – பி.சுசீலா குரல்களில் ஒலித்த ஜோடிப்பாடல்கள்..

எம்.எஸ்.வியும் இளையராஜாவும் இணைந்து இசை அமைத்த “மெல்ல திறந்தது கதவு” படத்தில் இடம் பெற்ற “தில் தில் தில் மனதில்” பாடல் ஒரு வெற்றிப்பாடல்.

எம்.எஸ்.வி இசையில் மோகன், நளினி நடித்த “சரணாலயம்” படத்தில் இடம் பெற்ற “நெடுநாள் ஆசை ஓன்று” பாடலும் குறிப்பிட பட தக்க பாடல்.


இளையராஜா இசையில் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா படத்தில் இடம் பெற்ற அழுகின்றோம்சாய்பாபா” என்கிற பாடலும் பிரமாதமான பாடல்.


1988-ல் வெளிவந்த “தர்மத்தின் தலைவன்” படத்தில் இடம் பெற்ற “தென் மதுரை வைகை நதி” பாடல் பிரபலமான பாடல்.

1988-இல் வெளிவந்த “தாயம் ஒண்ணு” படத்தில் இடம் பெற்ற “மனதிலே ஒரு பாட்டு. மழை வரும் அதை கேட்டு” பாடலும் மிகவும் பிரபலம் ஆன பாடல்.

1989-ல் வெளிவந்த சின்னப்ப தாஸ் படத்தில் இடம் பெற்ற “மஞ்சக்குருவி மஞ்சக்குருவி கொஞ்ச பாக்குதடி” பாடல் குறிப்பிட தக்க பாடல்.

இசை அமைப்பாளர் தேவா இசை அமைத்த படம் என குறிப்பிட படுவது 
1989-ல் “மனசுக்கேத்த மகாராசா” படம். அதில் “ஆத்து மேட்டு தோப்புக்குள்ள” என்ற பாடலும் பிரபலம் ஆகியது. ஆனால் அதற்கு முன்னாலேயே “மாட்டுக்கார மன்னாரு” என்ற திரைப்படத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார். அதில் இடம் பெற்ற “ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது” என்ற பாடலும் எஸ்.பி.பி-பி.சுசீலா குரல்களில் ஒலித்தது.

எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பெரிய பெயர் பெற்று தந்த படம் “புது வசந்தம்”. அதில் இடம் பெற்ற “பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா” என்ற பாடலும் மிகவும் பிரபலம் ஆன பாடல்.

1992-ல் வெளிவந்த “சின்ன கவுண்டர் படத்தில்” இடம் பெற்ற “முத்துமணி மால” பாடல் இப்போதும் கூட பிரபலம் தான்.


1992-ல் வெளிவந்த “நாடோடி பாட்டுக்காரன்” படத்தில் இடம் பெற்ற “வனமெல்லாம்செண்பக பூ” பாடலும் பிரபலம் ஆன பாடல்.

1993-ல் வி.எஸ்.நரசிம்மன் இசையில் “இளையராஜா என ஒரு படம் தயாரிக்க பட்டது”. இளையராஜா தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பால் அது “இனியராஜா” என மாற்றப்பட்டது. அதில் “இரவும் பகலும் தழுவும்” என்ற பாடலை SPB-பி.சுசீலா இணைந்து பாடினார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் K.Balachandar இயக்கிய “டூயட்” படத்திலும் “மெட்டு போடு போடு மெட்டு போடு” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல். பி.சுசீலா என்னும் ஒரு சாதனையாளரை பாட வைக்கும் போது இந்த மாதிரி ஒரு Stanza அல்லது பல்லவி மட்டும் பாட வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைப்பது எந்த வகையிலும் நியாயமாக இல்லை என்பது என் கருத்து.

     ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சங்கர் டைரக்ஷனில் கமல் சுகன்யா நடித்த இந்தியன் படத்தில் இடம் பெற்ற “கப்பலேறி போயாச்சு” பாடலும் பிரபலமான பாடல். இப்பாடலை [பி.சுசீலா தனிப்பாடலாகவும் பாடி இருக்கிறார் என கேள்விப்பட்டு இருக்கறேன். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் கேட்டிருக்கிறேன்., விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறை டைரக்டர்களில் ஒருவரான ஷங்கர் படத்திலும் பி.சுசீலா பாடி இருப்பது குறிப்பிட படத்தக்கது.


     M.A.இனியவன் என்ற இசை அமைப்பாளர் இசை அமைத்த “பார்த்த பார்வையில்” என்ற படத்தில் “ஊர் உறங்க நீ உறங்க” என்ற பாடல் SPB-பி.சுசீலா குரலிகளில் ஒலித்தது. இப்பாடல் வெளிவந்த காலகட்டம் 1998-1999 என எங்கோ பார்த்த ஞாபகம். அது உண்மையாக இருக்கும் என்றால் தமிழில் இவர்கள் இணைந்து பாடி இது வரை வெளிவந்த பாடல்களில் இதுவே  கடைசி பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.

      தமிழில் எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் இணைந்து  கிட்டத்தட்ட 300 பாடல்கள் பாடி இருக்கிறார்கள். டப்பிங் படங்களும் விடுபட்ட படங்களின் பாடல்களும் கிடைத்தால் 350 ஐ நெருங்கும் என எதிர் பார்க்கலாம். நேரம் இன்மையால் பிற மொழி படங்களில் இடம் பெற்ற பாடல்களை  தொகுக்க இயலவில்லை.. 

மொத்த பாடல்களின் தொகுப்பு..




1969adimai pennayiram nilave vAK.V. Mahadevan
1969kuzhanthai ullammuthu chippikkulleS.P. Kodandapani
1969paal kudamMalligai Poo vaangi vanthenM.S. Viswanathan
1969patti sonna kadhaiiyarkai azhagai ellam
1969shanthi nilayamIyarkai ennum ilaya kanniM.S. Viswanathan
1970kaadhal jyothikaadhal Jyothi anayathathuT.K. Ramamoorthy
1970maalathienge povom engepovomM.S. Viswanathan
1970maalathiKarpanayo kai vanthathoM.S. Viswanathan
1970maanavanKalyana ramanukkum kannanaShankar Ganesh
1970maaya theevu rahasiyamkanni manamovijaya krishnamurthy
1970maaya theevu rahasiyamneela kannoru semmeenavijaya krishnamurthy
1970maaya theevu rahasiyamilaigalileVijaya Krishnamurthy
1970navagrahamUnnai thotta kaatru vanthuV. Kumar
1970thalaivanneerazhi mandapathil S. M. Subbiah Naidu
1971naangu suvargalninaithaal naan vaanam sendruM.S. Viswanathan
1971arunodhayamEnga vEtu thanga therilK.V. Mahadevan
1971avalukkentor manammangayaril maharani (movie version)M.S. Viswanathan
1971avalukkentor manammangayaril maharani maankaniM.S. Viswanathan
1971kulama gunamaUlagil irandu kiligalK.V. Mahadevan
1971moontru deivangalmullillaa rojaM.S. Viswanathan
1971needhi devanmaanikka padhumaikkuK.V. Mahadevan
1971neerum neruppummalai nera thendral ennaM.S. Viswanathan
1971thirumagalUllangal palavitham K.V. Mahadevan
1971utharavinti ulle vaunnaith thoduvathu M.S. Viswanathan
1971utharavintri ulle vaMadhamo aavanai MangayoM.S. Viswanathan
1971yaanai valartha vanambadiyin maganjaam jaam entru neeK.V. Mahadevan
1971utharavinti ulle vautharavintri ulle vaaM.S. Viswanathan
1972avalGeetha oru naal pazhagumShankar Ganesh
1972gauravamYamuna Nadhi ingeM.S. Viswanathan
1972idho enthan deivamAmbigai neril vanthalM.S. Viswanathan
1972karunthel kannayiramnetruvarai vinnil shyam philips
1972kula gowravamradha radha unga S.M. Subbiah naidu
1972mapillai azhaippuullathil nooru ninaithenV. Kumar
1972mr.sampathaarambam Yaaridam M.S. Viswanathan
1972ponmagal vandhaalendhan devanin paadalshankar ganesh
1972sange muzhanguirandu kaigal pEsum mozhiyilM.S. Viswanathan
1972thaaikku oru pillaikalyana raaman kolam Shankar Ganesh
1972thaaikku oru pillainaan kaadhal kilishankar ganesh
1972thikku theriyatha katilkettathellam naan M.S. Viswanathan
1972yaar jambulingamkani mutham pathinthadhuT.R Paapa
1973amman arulontre ontru nee tharaShankar Ganesh
1973anbu sahodarargalethir paarthen unnai ethirK.V. Mahadevan
1973arangettamAramba kaalathil athu irukkumV. Kumar
1973iraivan irukkintranazhage un peyarShankar Ganesh
1973kadavul padaitha manthargal (D)Dora vayasu chinnadhi in teluguRamesh Naidu
1973kadavul padaitha manthargal (D)tholisari Ninnu in teluguRamesh Naidu
1973pennai nambungalkadhalikka enakkuV, Kumar
1973pennai nambungalnee ninaitha neeramellam V. Kumar
1973raadhaKadavul meethu aanai Shankar Ganesh
1974engamma sapathamVaa Ilamai azhiakkirathuVijaya Bhaskar
1974kai niraya kasudei vaada raajaShankar Ganesh
1974kanmani rajakaadhal vilayada kattiliduM.S. Viswanathan
1974kanmani rajaOdam kadal odumM.S. Viswanathan
1974onne onnu kanne kannuPaal manam poo manam V. Kumar
1974panaththukkagayaarummillai ingeM.S. Viswanathan
1974penn ontru kandenkaathirunthen kattiM.S. Viswanathan
1974raaja naagamDevan vedhamumV. Kumar
1974roshakkaariaanandha mayakkam M.S. Viswanathan
1974thirudinilavu vanthu vaanathaiM.S. Viswanathan
1974thirumangalyamPonnana manam enguM.S. Viswanathan
1974vaani raanibhoomiyil thneral ponnaadai K.V. Mahadevan
1974vaani raanimullaipoo pallakku K.V. Mahadevan
1975anbu rojapaal nilavu neramshankar ganesh
1975anbu rojapannirendu maniShankar Ganesh
1975avalukku ayiram kangalennaikkelu ennaikeluT.K. Ramamoorthy
1975avalum penthanevaarthaigal en nenjil V. Kumar
1975engalukkum kaadhal varummunniravu neramVijaya bhaskar
1975kaarotti kannanpottazhagu konja konjaV. Kumar
1975pattam poochipasi edukkura nEram vanthaaP. Srinivasan
1975therga sumangaliAyiram Ayiram andinM.S. Viswanathan
1975thottathellam ponnaagumAvaNi malarE aippasi mazhaiyEVijaya Bhaskar
1975thottathellam ponnaagumPanimalai mahangal pozhigintraVijaya Bhaskar
1975vaazhnthu katugirenKotti kidakkuthu kaniyiranduM.S. Viswanathan
1975yaarukku maapillai yaaromuthukkal sinthiVijaya Bhaskar
1976aayirathil oruthininaithaathai mudippathu V. Kumar
1976inspector manaivinaan radhai thaanShankar Ganesh
1976manmadha leelaisugam thaana sollu M.S. Viswanathan
1976mayor meenatchiKanden kalyana penn M.S. Viswanathan
1976nee oru maharaniAval Oru PachaiKuzhanthaiShankar Ganesh
1976paalooti valartha kiliettu vagaiIlayaraja
1976sathiyamazhagam kodi siridhu athilumK.V. Mahadevan
1976sathiyamkalyana koyilil deivega kalsamK.V. Mahadevan
1976uthamanpadagu padagu aasaipadaguK.V. Mahadevan
1976veedu varai uravumaanikka veenayin M.S. Viswanathan
1977antru sinthiya rathamidhu naan ariyatha mayakkamShankar Ganesh
1977engal thalaivankuyilamma kalyanamK.V. Mahadevan
1977engal thalaivanun paarvaiK.V. Mahadevan
1977engal thalaivan amman Anai Appan AnaiK.V. Mahadevan
1977enna thavam seithenEtho oru nadhiyil M.S. Viswanathan
1977madhura geethamKanna enge radhaichandrabose
1977mazhai megamaaagaya Gangai indru K.V. Mahadevan
1977oruvanukku oruthipachaikili ingammaaV. Kumar
1977paruvam oru paadamoru pushpam malarnthathuK.V. Mahadevan
1977ragupathi rakava rajaramthanga therodum azakinilEShankar Ganesh
1977sainthadamma sainthaduoru kaadhal devathaiIlayaraja
1977sonnadhai seivenengengo sila manigalV. Kumar
1977sonnadhai seivenpaal pongudhu paal V. Kumar
1977thoondil meenvaazhvil sowbhagiyam V. Kumar
1977raasi nalla raasiovvoru muraiyum ovvoruM.S. Viswanathan
1978aanandha bhairavisirithai antha sirippil naanRamanujam
1978achanithaalatu pillai ennaiIlayaraja
1978achanithaalattu pillai -sadIlayaraja
1978aval oru adhisayamadi kannmani vannaVijaya Bhaskar
1978chittu kuruviEn kanmani un kadali Ilayaraja
1978jagan mohiniKadahl alaigal melevijaya krishnamurthy
1978kamatchiyin karunaikannanukku thottil kattumShankar Ganesh
1978kai pidithavalvaarungal vilayaaduvomShankar Ganesh
1978kannamoochiiravil paarthEn irandu nilavuV. Kumar
1978kannan oru kaikuzhanthaimegame thoothaagavaa azhaginIlayaraja
1978mela thaalangalenadhu vilasam manmadhaRamesh naidu
1978mudisooda mannanThodangum thodarumSathyam
1978mudisooda mannannaan sonnal pothumSathyam
1978sakka podu podu rajakulirkalam nathiyoramShankar Ganesh
1978seer varisaikannanai nianikkathaM.S. Viswanathan
1978seer varisaiPanchangam pathu sollavaM.S. Viswanathan
1978shankar salem simonvanthale oru maharasiM.S. Viswanathan
1978vaazhkai alaigalun kangalilo kanigalChakravarthy
1978varuvan vadivelanJoyfull singapore colorful malaysiaM.S. Viswanathan
1979adukku mallikaakaye neeti muzhakkushankar ganesh
1979annai oru alayamappane appane pillayaarIlayaraja
1979annai oru alayamnadhiyoram naanal ontruIlayaraja
1979enippadigalenunga mapilla intha nenappuK.V. Mahadevan
1979gandarva kanniramyam nadhamvijaya krishnamurthy
1979kelungal kodukkappadumkanna kadhal nadhi ontruV. Kumar
1979mearke uthikkum sooriyanmaharaani theerile maharaajanShankar Ganesh
1979naan nantri solvenandhimalli Shyam
1979Naan oru kai paarkirenKamban kaiyanda thamizh
1979naan vazha vaipenthirutheril varum chilayoIlayaraja
1979nangooramIllai illai nee illamal V. Kumar
1979nee siriththaal naan sirippenkadavul thantha kannirukkuShankar Ganesh
1979neechal kulamkattazhagai konjaDharapuram Sundararajan
1979neeyanaan kattil mele kandenShankar Ganesh
1979neeyaunai ethanai muraiShankar Ganesh
1979nenjukku neethienakkoru kadhaiShankar Ganesh
1979ninaithale inikkumyaadum oore yaavarum kelirM.S. Viswanathan
1979ninaivil oru malarsugama thalaivaVijaya ramani
1979ore vanam ore bhoomisorgathile naam adi eduthomM.S. Viswanathan
1979oru koyil iru depangalMuthu Muthu punnagayeV. Dakshinamurthy
1979pattakathi bhairavanVaruvai kanna nEradaIlayaraja
1979sirikkum salangaijammendru nadhamK.V. Mahadevan
1979sirikkum salangaiullathu anbu uraikkintraK.V. Mahadevan
1979sirikkum salangaivaa vaa swamyK.V. Mahadevan
1979veetukku Veedu vasapadiveettukku veedu vaasapadiRajan Nagendra
1979yaarukku yaar kavalSippiyin ulle muthadumK.J. Joy
1980adhikaaramee kanagamIlayaraja
1980anbukku nan adimaikaathodu poovurasaIlayaraja
1980azhaithaal varuvensonthangal thirumbaM.S. Viswanathan
1980emanukku emannaadaga sangeetha nadamadadiChakravarthy
1980emanukku emanAthoram pootha malliChakravarthy
1980emanukku emanmazhai vizhnthathathu kattileChakravarthy
1980emanukku emanpoo mottu ponnu idhu pennallaChakravarthy
1980inaintha druvangalKanna kaadhal nadhi V. Kumar
1980iru nilavugalAnbulla kannanoRajan Nagendra
1980kannil theriyum kathaigalnaan oru ponnoviyam Ilayaraja
1980kuruvikkooduvannathu poochi chirikkuthuK.V. Mahadevan
1980madhana manjarikannamma chinnammaVijaya Krishnamoorthy
1980manmatha radhangalmanmatha radhangalK.V. Mahadevan
1980megathukkum thaagamunduMaragatha megam ingeM.S. Viswanathan
1980nadhiyai thedi vanthakadalengeyo edho paatontru kettenIlayaraja
1980natchathiramponnankanni poothu Shankar Ganesh
1980neer nilam neruppukaiyagal pottukkari (kannula)Shankar Ganesh
1980oru kai osaiMuthuTharagai vaanaM.S. Viswanathan
1980panam paghai paasamenakku piditha roja Shankar Ganesh
1980raaman parasuramankalyana maalai kondadumSathyam
1980raaman parasuramanyevanda enakku eeduSathyam
1980soundaryame varuga varugairavil irandu paravaigalvijaya bhaskar
1980then chittugalmargazhi maasamadiVijaya ramani
1980thiriloga sundarimanam oru veenai[1]M.S. Viswanathan
1980thiriloga sundharithen kinname sel vannamEM.S. Viswanathan
1980thoorathu idi muzhakkamvalai yenthi kolvomSalil Chowdury
1980vanjam kannkalale pesavaChakravarthy
1980vanjam kilai melechakravarthy
1980vanjam pushpangal Chakravarthy
1981aaraadhanaiennai yemaatrumT.K. Ramamoorthy
1981enga oor kannagi idha thaan romba M.S. Viswanathan
1981kodeeswaran magalsujatha I love u sujathaM.S. Viswanathan
1981kodeeswaran magalullathil oru oonjal adhil M.S. Viswanathan
1981maadi veetu ezhaipadagu veedugalil pachaikiligalM.S. Viswanathan
1981makaranthamnee intri naano naanShankar Ganesh
1981needhidevan mayakkamaaru irandu pannirenduShankar Ganesh
1981needhidevan mayakkamothikayil thaane ippadi aanaalShankar Ganesh
1981oru iravu oru paravaithanga kudameilayaraja
1981paadi parantha kuyilAvanukku than theriyum M.S. Viswanathan
1981pattam pathaviVaanathai PaarthirunthenM.S. Viswanathan
1981pennin vaazhkkaiJanagan ponmaaneG.K. Venkatesh
1981raam lakshmanvizhiyil en vizhiyilIlayaraja
1981salanampaniye vaa panju mazhaye shyam
1981savaaltheriyum theriyum vishayamM.S. Viswanathan
1981udhayamagirathumanjalum malayum varumOA.A. Raj
1981udhayamagirathunaan unai mantadinenA.A. Raj
1982agni satchivanakkam muthal variyaiM.S. Viswanathan
1982andha rathirikku satchi illaisumaithangi enintru K.V. Mahadevan
1982garuda sowkiyama?chandhana malarin sundhara M.S. Viswanathan
1982kavidhai malarneerellam panneerilayaraja
1982naan unna nenachenunnai thotta thoshamillaShankar Ganesh
1982nanagu thoongal aattamsiru mazhai chaaral -ver2
1982naangu thoongal aattamsiru mazhai chaaral Rajan Nagendra
1982naangu thoongal aattam? (kaliki chilakalara)Rajan Nagendra
1982oorukku oru pillaimuthumani chirippirukkaM.S. Viswanathan
1982pagadai pannirenduvaravendum maharajanChakravarthy
1982parvayin marupakkammmm..santhosha nErangalchandrabose
1982pokkiri rajaVidiya Vidiya solli M.S. Viswanathan
1982sri lakshmi sapathampani mozhi thaan
1982thyagimullai poovena naan M.S. Viswanathan
1983kaatu rajaveera vikraman theera sundaran
1983adutha vaarisupesa koodathu Ilayaraja
1983anthappura marmamazhagu konjum kangalammaChakravarthy
1983ival oru thamizhachineeyo manikuyil muzhakkamM.S. Viswanathan
1983nalu perukku nantriEn ithayarani thegamM.S. Viswanathan
1983ninaivugalkoyil deivam nee thendral Shankar Ganesh
1984achamillai achamillaiaavaram poovu arezhu naalaV.S. Narasimman
1984iru medhaigalNee oru kadithamM.S. Viswanathan
1984manmadha ennai thedivamalaridhu malarathuSethupathi
1984meendum varuvenvelli muthukkal
1984ninaivugal maraivathillaimalara thudikkum[2]M.S.V Raja
1984sridevimai vacha kannammaShyam
1984sridevivasamulla Santhaname Shyam
1984thangamadi thangamkaalam ilamai kaalamilayaraja
1985anbin mughavaripon vaanile ezhil Ilayaraja
1985avalukkul or ragasiyamraaja raajeswari arugilchandrabose
1985deivapiravinill nill nill ilam thendraleShankar Ganesh
1985deivapiravipoovai oru poo entruShankar Ganesh
1985deivapiravimounam ennumShankar Ganesh
1985deivapiravipaanayile paalikkuShankar Ganesh
1985kaakki sattaiPattu kannam thottu kollaIlayaraja
1985kollaikkarankollai kollaiChakravarthy
1985kollaikkaranmanganiya then kaniyaChakravarthy
1985kollaikkaransari sari ennaiChakravarthy
1985kunguma pottumanmathaninGangai Amaran
1985meendum kaidhikaalayil paarthal seetharamChakravarthy
1985meendum kaidhikaiyai thottathumChakravarthy
1985meendum kaidhiromba roma ho hoChakravarthy
1985meendum kaidhithavazhgintra alaiChakravarthy
1985naan ungal rasiganoru devathaiGangai Amaran
1985needhiyin nizhalhey manthaara poovoShankar Ganesh
1985nermaiethanai iniya kudumbamM.S. viswanathan
1985oonjaladum uravugalpoonkodiye kai veesuchakravarthy
1985paartha njyabagam illayoKalla sirippu kattazhaguM.S. Viswanathan
1985puli petra pillairaajaadhi raaja Chakravarthy
1985puli petra pillaisirikkum silai azhagiChakravarthy
1985raajaa yuvaraajaahey raadha raadhaBenn Surendar
1985raajaa yuvaraajaaraajaathi nee dhaan rojaappooBenn Surendar
1985raaman sreeramankanni thendral veesumShivaji Raja
1985santhosha kanavukalmehangale vaarungaleSathyam
1985sugamana ragangalaathakadkka venum M.S. Viswanathan
1985yuddhamkanne vaanam un veeduShankar Ganesh
1986charanalayamnedunaal aasai onRu intha M.S. Viswanathan
1986kadaikan parvaivizhi deepam unai thedumShivaji Raja
1986matukkara mannaruOru naal rathiri thirunalaDeva
1986mella thiranthathu kathavuDil dil dil manathailM.S. Viswanathan, T.K. Ramamurthy
1986nanbanidhu adithadiShankar Ganesh
1986pookalai parikkathergaladiye vanitha inge vaadiT. Rajendar
1986raaga devathaividhadha ninaivilK.V. Mahadevan
1986raaga devathaien kaatreK.V. Mahadevan
1986raaga devathaipaattellamK.V. Mahadevan
1986shri shirdi saibabaazhugintrom saibabaIlayaraja
1986simhasanamidhu ilam thendralbappi lahari
1986simhasanamkanpattu pongumbappi lahari
1986simhasanamvaa vaa nalla yavvanambappi lahari
1986simhasanamvandadum kangalBappi Lahari
1987chinna mani kuyileen jeevan thedumV.S. Narasimman
1987Deiva magalUn neela vizhiyadaM.S. Viswanathan
1987irumbu manidhaniravu nerathuChakravarthy
irumbu manidhanoor ennaChakravarthy
1987irumbu manidhanoor enna-ver2chakravarthy
1987irumbu manidhanyaar seithaChakravarthy
1987isaikku oru koyilthanadhu perumK.V. Mahadevan
1987ival oru pudhuyugamrathi mathanarangamV. Kumar
1987ival oru pudhuyugamtha tha tha ga ginu tha kElaaiV. Kumar
1987needhikku vilangunee aachu naan aachu

1987veshakkaranartha raathriyilChakravarthy
1987veshakkaranen kannangalChakravarthy
1987veshakkaranidli paapaChakravarthy
1987veshakkaranveNpanippooChakravarthy
1988dharmathin thalaivanthen madhurai vaigai nadhiIlayaraja
1988geetham sangeethamun geetham thansiddartha
1988geetham sangethammaanai thedum manasuSiddartha
1988kaadhal viduthalaihello my dear sowkiyamaS.A. Rajkumar
1988ratha thaanamKoyilgalum churchugalumGanagi Amaran
1988telugu dubbed -1vaadai vanthu vaatuthu
1988thaayam onnumanadhile oru paatu mazhaiIlayaraja
1988tucker raja(tel. dub)antha deivameChakravarthy
1988tucker raja(tel. dub)pattai namangalChakravarthy
1988tucker raja(tel. dub)poonkothai oyyariChakravarthy
1989chithiram pesuthadikannan intruV.S. Narasimman
1989chithiram pesuthadiravikula venthaneV.S. Narasimman
1989chithiram pesuthadithanga nilavuV.S. Narasimman
1989chinnappa dasmanja kuruviIlayaraja
1989manasukketha maharasaaathu mettu ThoppukulleDeva
1990pudhu vasanthamAaadaludan paadalai kettuS.A. Rajkumar
1990pudhu vasanthamPaatu onnu naan paadattumaS.A. Rajkumar
1992chinna gowndarMuthu mani maalaiIlayaraja
1992naadodi pattukkaranVanamellam shenpagapooIlayaraja
1993iniya rajairavum pagalum thazhuvumV.S. Narasimman
1994duetMettu podu mettu poduA.R. Rahman
1995indianKappaleri PoyachuA.R. Rahman
1999paartha paarvayiloor uranga nee urangaM.A. Inievan
0unknownnanthavanam athu en ?


Thanks....