பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

கங்கை அமரன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்..




               கங்கை அமரன் அவர்கள் பல துறைகளில் கலக்கிய திறமைசாலிகளில் ஒருவர். இளையராஜாவின் சகோதரர் என்ற அறிமுகம் இருந்தாலும் தனக்கென ஒரு பெயரை தேடிக்கொண்டவர். டைரக்டர், தயாரிப்பாளர், பாடல் ஆசியர், கதாசிரியர், நடிகர், இசை அமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இன்னமும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவர் எத்தனை படங்களுக்கு இசை அமைத்தார் என்பது தெரியவில்லை.ஒரு பேட்டியில் 170 படங்களுக்கு மேல் இசை அமைத்ததாக கூறி இருந்தார். அவர் அதற்கான லிஸ்ட் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

      கங்கை அமரன் இசை அமைத்து வெளியான சில திரைப்படங்களில் பி.சுசீலாவும் பாடி இருக்கிறார். அதிலும் அவர் இசையில் பி.சுசீலா ஒரு பாடலை கேட்டு கங்கை அமரனா இப்பாடலுக்கு இசை அமைத்தார் என வியந்தது உண்டு!!!. அப்பாடல் “மலர்களே மலருங்கள்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ” என்ற பாரதியாரின் பாடல் தான். இனிமையை அம்மாவுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்!! அமுதக்குரலில் தேன் குழைத்து தேனமுதமாய் பொழிந்திருப்பார்கள் !.

கங்கை அமரன் இசை அமைத்த முதல் திரைப்படம் “மலர்களிலே அவள் மல்லிகை”. அதில் பி.ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய “சிந்து நதியோரம் தென்றல் விளையாடும். கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்” என்ற பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். பி.சுசீலாவின் குரல் ஹைபிட்சில் ஒலித்த பாடல்களில் இதுவும் ஓன்று.

அதே படத்தில் “இசையினிலே ராகம் பல நூறு இனிமை தரும் வயதோ பதினாறு” என்ற பாடல் பி.சுசீலாவின் இளமை ததும்பும் குரலில் இனிமையாக ஒலித்தது. நிறைய பேர் கேட்டிருக்க மாட்டீர்கள். ஒரு முறை கேட்டு பாருங்கள்.


நீதிபதி படத்தில் இடம் பெற்ற “பாச மலரே அன்பில் விளைந்த வாசமலரே” என்ற பாடல் குறிப்பிடபடத்தக்க பாடல்களில் ஓன்று. இத்திரைப்படம் மலையாளத்தில் “ஜஸ்டிஸ் ராஜா” என்ற பெயரில் வெளியானது. அதிலும் இதே பாடல் “கன்னி மலரே” என ஒலித்தது.


 சிவாஜி நடிப்பில் வெளிவந்த “இமைகள்” திரைப்படத்தில் “மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ” என்ற பாடலும் மக்கள் மனம் கவர்ந்த பாடல்.


மண்ணுக்கேத்த பொண்ணு திரைப்படத்தில் இடம் பெற்ற “பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட என்ன கொண்டு போ” என்ற சோகமான டூயட் குறிப்பிட பட தக்கது.


சுஜாதா, அம்பிகா மற்றும் சிவகுமார் நடிப்பில் உருவான “கற்பூர தீபம்” படத்தில் இடம் பெற்ற “காலம் காலமாய் பெண் தானே கற்பூர தீபம்” பாடல் தெலுங்கில் இருந்து அப்படியே காப்பி அடிக்க பட்டது. இதன் ஒரிஜினல் "Aaranikuma ee deepam Karpoora deepam" -ஐ கூட பாடியது பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் தான்.


என் தங்கச்சி படிச்சவ படத்தில் “மாமான்னு சொல்ல ஒரு ஆளு” பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்.


ஷோபனா. சுலக்ஷ்னா நடித்த “மருதாணி” படத்தில் “தொட்டில் கிளி தூங்கடி” என்ற தாலாட்டு குறிப்பிட படத்தக்கது.  அதை தவிர “மச்சானுக்கு மச்சமிருக்கு” "விளக்கு வச்சா" ஆகிய பாடல்களும் ரசிக்கக் தக்கவை..

ரூசி படத்தில் இடம் பெற்ற “ஏதோ ஒரு வேகம்” பாடலும் குறிப்பிட தகுந்த பாடல்களில் ஓன்று.

புது யுகம் படத்தில் இடம் பெற்ற “தெய்வம் வந்தது” பாடலும் கேட்கலாம் ரகம்.


இவை தவிர பி.சுசீலாவுடன் இணைந்து கங்கை அமரனும் சில பாடல்களை பாடி இருக்கிறார்.
1. சோலை புஷ்பங்களே ( இங்கேயும் ஒரு கங்கை )
2. தெக்கு தெரு மச்சானே ( இங்கேயும் ஒரு கங்கை )
3. மச்சானுக்கு மச்சமிருக்கு ( மருதாணி  )



YearLanguageMovieSongs
1978Tamilmalargalile aval malligaiSindhu nadhiyoram
1978Tamilmalargalile aval malligaiisaiyinilE raagam palanooRu
1980Tamilmalargale malarungalsuttum vizhichudar
1980Tamilkannile anbirunthaalaasa vecha
1980Tamilkannile anbirunthaalnaan paadum pothu
1980Tamilkaradipaathaalum aasai idhu
1982Malayalamjustice rajakanni malare
1983TamilimaigalmaadapuraavO illai manjal 
1983Tamilneedhipathipaasa malare anbil 
1984Tamilkudumbamthedamal deivam irangi
1984Tamilkuzhanthai padum thalattukaadhal kalayil inaivai thothai 
1984TamilrusiEtho oru vegam
1984Telugumuddu krishnudubhama o bhama
1984Telugumuddu krishnuduooru mottamu
1984MalayalamJeevithammanimekha radhameri
1985Tamilkarpoora deepamkaalam kaalamaai penn
1985Tamilkarpoora deepamvanna mayil ontru
1985Tamilkunguma pottumanmathanin
1985Tamilmannukketha ponnupOnkaathe andha ponnu kitta 
1985Tamilmaruthaanimachanukku machamirukku
1985Tamilmaruthaanivelakku vacha padichi
1985Tamilmaruthaanithottil kili thoongadi 
1985Tamilnaan ungal rasiganoru devathai
1985Tamilpudhu yughamdeivam vanthathu
1985Tamilragasyamamma nee
1985Tamilragasyamnaan paatu
1986Tamilvettaiada ennavo pollatha
1987Tamilchellakkuttyvaanam partha mazhigam
1987Tamilen priyamekambankollayil
1987Tamilen priyamepompalaya
1987Tamilyettiki pottiangalamma nee
1988Tamilen thangachi padichavamaamaannu solla oru aalu
1988Tamilratha thaanamKoyilgalum churchugalum
1979Telugudubb suvar illada chithirangaltholakari (yekkada)
1979Telugudubb suvar illadha sithirangalthilaka pottudu kuriche




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக