இசை அமைப்பாளர்
வி.எஸ்.நரசிம்மன் ஒரு இசை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கோட்டு வாத்தியம்
வாசிப்பதிலும் அவரது தாத்தா வயலின்
வாசிப்பதிலும் சிறந்து விளங்கியவர்கள். மைசூரை பிறப்பிடமாக கொண்ட வி.எஸ்.நரசிம்மன்
இளவயதிலேயே வயலின் கற்றுக்கொண்டார்.. மைசூரில் இருக்கும் பிரிமியர் ஸ்டுடியோ தயாரித்த
படங்களில் வயலின் வாசித்து இருக்கிறார். பின்னர் 1958-இல் விஜயபாஸ்கர் இசை
அமைத்த படங்களில் வயலின் வாசிப்பதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பின்னர்
கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வர ராவ், பெண்டியாலா, அஸ்வத்தாமா போன்ற இசை அமைப்பாளர்கள்
இசையில் வயலின் வாசித்து வந்தார். இந்த கால கட்டத்தில் வெஸ்டர்ன் இசையையும்
கற்றுக்கொண்டார். இளையராஜா வாத்திய கலைஞராக இருந்த கால கட்டத்தில் பல இசை அமைப்பாளர்களிடமும் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அந்த
பழக்கத்தால் இளையராஜா இசை அமைப்பாளராக உயர்ந்த போது அவருக்கு உதவியாளராகவும்,
வயலினிஸ்ட் ஆகவும் பணி ஆற்றினார். இளையராஜாவின் மாஸ்டர் பீசஸ் என்று சொல்ல கூடிய “How
to name it?. “Nothing bit wind” போன்ற ஆல்பங்களிலும் ராஜ பார்வை போல பல படங்களிலும் ஒலித்தது இவரது வயலினிசை தான்.
1984-ல் கே.பாலச்சந்தர் தயாரித்து
இயக்கிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற திரைப்படத்தின் மூலமாக இவரை இசை அமைப்பாளராக
அறிமுக படுத்தினார். அத்திரைப்படமும் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றன. அதற்கு
பின்னும் யார், புதியவன், கல்யாண அகதிகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கடைக்கண் பார்வை.
இளம் கன்று, சின்ன மணிக்குயிலே என பல படங்களுக்கு அவர் இசை அமைத்தார். நல்ல தரமான
இசையை கொடுத்தும் வெற்றி படங்களுக்கும் இசை அமைத்தும் கூட அவருக்கு போதிய அளவு
படங்கள் கிடைக்கவில்லை. Most Underrated Music Director-களில் இவரும் ஒருவர்.
இவர் இசை அமைத்த
பெரும்பாலான படங்களில் பி.சுசீலா பாடி இருக்கிறார். தமிழில் கொஞ்சம் டல்
அடித்தாலும் தெலுங்கில் நிறைந்திருந்த வாய்ப்புகளால் பி.சுசீலா மிகவும் பிசியாக
இருந்தார். அதனால் நினைத்த நேரத்தில் வந்து பாட இயலாது. இவருக்கு பிடித்த பாடகி பி.சுசீலா என்பதால்
பி.சுசீலாவுக்காக சில நாட்களோ வாரங்களோ ஆனாலும் கூட காத்திருந்து பி.சுசீலாவையே
பாட வைப்பார்..
இவர் அறிமுகமான “அச்சமில்லை
அச்சமில்லை” படத்தில் கதாநாயகி சரிதா பாடும் இரு பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
அவ்விரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் ஆகின. “மேகத்த தூது விட்டா திசைமாறி போகுமோன்னு தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்” என துவங்கும் பாடல் கிராமிய
மணம் வீசும் அருமையான வரிகளுடனும், இனிமையான இசையுடனும் ஒலித்த அருமையான
தெம்மாங்கு பாடல். . அன்றைய கால கட்டத்தில் அடிக்கடி ரேடியோவில் ஒலிபரப்ப பட்ட
பாடல்.
அதைப்போல் எஸ்.பி.பியும் பி.சுசீலாவும் ஜோடியாக பாடும் “ஆவாரம்பூவுஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு” என்ற பாடலும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்ட பாடல்களில் ஓன்று.
80-களில் நிறைய வெற்றிப்படங்களை தயாரித்த கோவைத்தம்பி தயாரித்த இன்னொரு
வெற்றிப்படம் தான் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்”. அதுவரை அவர் படங்களுக்கு இளையராஜா தான்
இசை அமைத்து வந்தார். அந்நிலையில் வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இசை அமைக்க வைத்து
எடுத்த இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட். ஆனால் படம் படு தோல்வி. அதனால் வி.எஸ்.நரசிம்மனுக்கு
போதிய வெற்றி கிட்டவில்லை.. இப்படத்தில் பி.சுசீலா பாடிய “ஆயிரம் பூக்கள்மலரட்டும்” என்ற இனிமையான பாடலை பி.சுசீலா பாடினார். படத்தில் பல சூழ்நிலைகளில்
ஒலிக்கும் இந்த பாடல் பிரபலம் ஆனது
.
நடிகர் சரத்குமார் தயாரித்து நடித்த முதல் படம் கார்த்திக் – அம்பிகா
நடிப்பில் வெளியான “கண் சிமிட்டும் நேரம்”. இப்படத்தில் “தானே பாடுதே மனம் எதையோநாடுதே” என மிகவும் இனிமையான பாடலை பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள்.
கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பாடல்.
பாண்டியன் – இளவரசி ஜோடியாக நடித்த “கடைக்கண் பார்வை” என்ற படத்திலும்
“விழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடும்” என்ற மிகவும் இனிமையான ஒரு டூயட் இடம் பிடித்தது.
“கடைக்கண் பார்வை” படத்தில் கிளைமேக்ஸில் இடம் பெரும் ஒரு உணர்ச்சி
மிகும் சோகப்பாடலை ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடி இருப்பார்கள். “ஏதோஒரு ராகம் ஏனோ அதில் சோகம்” என்ற அந்த மிகவும்
அருமையான பாடல் என்றாலும் அதிகம் கவனிக்க படாமல் போனது.
கல்யாண அகதிகள் படத்தில் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.
அதில் இடம் பெற்ற “மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்” என்ற பாடல் வித்தியாசமான இசை அமைப்புடனும், அழகான வரிகளுடனும் கேட்க
சுகமாக இருக்கும். அதே படத்தில் “வர வேண்டும் பெண்ணே வர வேண்டும்”. “கானல்அலைகளிலே”, “கல்யாண அகதிகள் நாங்கள்” என முழுக்க முழுக்க பி.சுசீலாவின் குரலால் நிறைந்திருந்தது.
இத்திரைப்படம் “Aadavallu meeku Joharlu” என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.
அதிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலாவே பாடினார்.
இப்படத்தின்
தயாரிப்பாளரும், இயக்குனருமான
கே.பாலச்சந்தர் அவர்களை நன்றியோடு நினைத்து கொள்கிறோம். பி.சுசீலா அவர்களுக்கு கின்னஸ் சாதனை கிடைக்க அவரும் உதவி
இருக்கிறார்.; கின்னஸ் சரி பார்க்கும் குழுவில் இருந்து “பி.சுசீலா சாதனை செய்த
துறையில் இருந்து இரு சாதனயாளர்கள் அவரை முன்மொழிய வேண்டும்” ஒரு மெயில் வந்தது அப்போது
நாங்கள் கே.பாலச்சந்தர் . ஏ.வி.எம்.
குமரன் ஆகிய இருவரையும் அணுகி இந்த கோரிக்கையை வைத்த போது இருவருமே மிகுந்த
மகிழ்ச்சியுடன் அதை நிறைவேற்றி தந்தார்கள். கே.பாலச்சந்தர் அவர்கள் “பி.சுசீலாம்மாவிற்கு
நான் செய்யாமல் யார் செய்வார்கள் !!” என ஆனந்ததுடன் சிறு பிள்ளை போல் கூறியதையும்
, அவர் படங்களில் பி.சுசீலா எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்கள் என கேட்டறிந்தையும்
எங்கள் குழுவினர் கூற கேட்க ஆனந்தமாக இருந்தது.
.
விஜயகாந்த - அமலா நடிப்பில் வெளியான ஒரு படத்துக்கு பி.சுசீலாவின்
குரலில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான
ஒரு பாடலின் தலைப்பை வைத்தார்கள். படத்தின் பெயர் “உன்னை ஓன்று கேட்பேன்”.
இப்படி வைத்து விட்டு பி.சுசீலாவை பாட வைக்காமல் இருந்தால் எப்படி?! அமலா பாடுவது
போல் அமைந்த “சின்ன கிளியே ஓ சொல்லு கிளியே” என்ற இனிமையான பாடலை கேட்க
தவறாதீர்கள்.
“Terror” என்ற நேரடி
தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார் வி.எஸ்.நரசிம்மன்”. அதில் இடம் பெற்ற “ Neelakasam
nee illu” என்ற பாடலும் “Naa Navvulalo Sarigamalu” என இரு பாடல்கள்
பிரபலமாக அமைந்தன. இதே படம் யுத்தம் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம்
செய்யப்பட்டது. “ Neelakasam nee illu” என்ற பாடல் “கண்ணே வானம் உன் வீடு” என
ஒலித்தது. அடிக்கடி கேட்கின்ற பாடல் தான் இது.
இனியராஜா என்ற படத்தில் “இரவும் பகலும் தழுவும் பொழுதும் நழுவும்
பொழுதும்” என எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலா குரல்களில் ஒரு டூயட் இடம் பெற்றது. அதே
போல் “வா மழை மேகமே, தேன் புது ராகமே” என்ற பாடலும் பி.சுசீலாவின் தேன் குரலில் ஒலித்தது.
எண்ணிக்கையில் கொஞ்சமாக இருந்தாலும் எவ்வளவு நல்ல பாடல்கள்..!! இன்னமும் கொஞ்சம் அதிகமான படங்கள் அவருக்கு கிடைத்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது..
List of Songs...
1984 | Tamil | achamillai achamillai | aavaram poovu arezhu naala | ||||
1984 | Tamil | achamillai achamillai | odugira thanniyile (megatha) | ||||
1984 | Kannada | mugila mallige | oppide kannu | ||||
1984 | Kannada | mugila mallige | prathithina hosa kavitheyu | ||||
1984 | Kannada | mugila mallige | saku saku | ||||
1985 | Telugu | terror | Naa Navvulalo | ||||
1985 | Telugu | terror | Neelakaasam nee ellu | ||||
1985 | Tamil | kalyaana agathigal | Kalyana agathigal naangal | ||||
1985 | Tamil | kalyaana agathigal | manasukkul udkaarnthu mani | ||||
1985 | Tamil | kalyaana agathigal | vara vendum penne vara vendum | ||||
1985 | Tamil | kalyaana agathigal | kaanal alaigalile | ||||
1985 | Tamil | yuddham | kanne vaanam un veedu | ||||
1985 | Tamil | yuddham | ? ( nee navvulalo) | ||||
1985 | Tamil | Kadaikkan paarvai | vizhi deepam unai thedum | ||||
1985 | Tamil | Kadaikkan paarvai | edho oru raagam | ||||
1985 | Telugu | premaradhana | naa gaanam mee sondham | ||||
1985 | Telugu | premaradhana | ? ( edho oru raagam) | ||||
1986 | Tamil | aayiram pookal malarattum | Ayiram pookal malarattum | ||||
1986 | Tamil | unnai ontru ketpen | Chinna kiliye sollu kiliye | ||||
1987 | Tamil | chinna mani kuyile | en jeevan thedum | ||||
1988 | Tamil | chithiram pesuthadi | kannan intru | ||||
1988 | Tamil | chithiram pesuthadi | ravikula venthane | ||||
1988 | Tamil | chithiram pesuthadi | thanga nilavu | ||||
1988 | Telugu | prema ragam | chinni chilaka | ||||
1988 | Tamil | kann chimittum neram | thaane paaduthe manam | ||||
1989 | Telugu | karkotakudu | edho teliyani | ||||
1993 | Tamil | iniya raja | iravum pagalum thazhuvum | ||||
1993 | Tamil | iniya raja | vaa mazhai magame-solo | ||||
1987 | Telugu | aadavallu meeku joharlu (D) | ? kalyana agathigal | ||||
1987 | Telugu | aadavallu meeku joharlu (D) | ? varavendum penne | ||||
1987 | Telugu | aadavallu meeku joharlu (D) | ? manasukkul utkarnthu | ||||
1987 | Telugu | aadavallu meeku joharlu (D) | ? kaanal alaigalile | ||||
1985 | Tamil | ilam kantru | aamaam saami | ||||
1985 | Tamil | ilam kantru | parisam pOdaatha |
இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனுக்கு இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம் என்பது உண்மைதான். இசையரசி பி.சுசீலா அவர்கள்தான் அவருடைய அபிமானப் பாடகி என்று அவரே சொல்லியிருக்கிறார். நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்களை இன்றுதான் கேட்டேன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குமிக அருமையான பணி. சிறப்பாக செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்}.
பதிலளிநீக்குI am a fan of V.S.Narasimman. I had wondered of his songs without knowing anything about him in 1990s.
பதிலளிநீக்குWithout knowing about him I am very much attracted by his music. Once I had an audio cassette collection of his tamil movie songs. A very Good Music composer with a different touch. Unfortunately he can't able to shine and become popular. Anyhow I love his music always. Please share my thoughts with him.
பதிலளிநீக்கு