( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-5) (Part-6) (Part -7)
( 1966 , 1967, 1968, 1969 ஆகிய வருடங்களில் பாடிய பாடல்கள் )
1968-ல் தில்லானா மோகனம்பாள், திருமால் பெருமை, தேர் திருவிழா, அன்னை சொன்ன சொல், பேசும் தெய்வம், பணமா பாசமா, முகராசி, காதல் வாகனம், ஜீவனாம்சம், டெல்லி மாப்பிள்ளை, அன்று கண்ட முகம் போன்ற தமிழ் படங்களும் “adrushtavanthulu”, “bangaru picchikஎ”. “lakshmi nivasam”, “niluvu dopidi”, “thalli prema”., “undamma bottu pedatha” போன்ற தெலுங்குப் படங்களும் வெளி வந்தன.
List of Songs (1966-1969)
( தொடரும் ... )
( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-5) (Part-6) (Part -7)
( 1966 , 1967, 1968, 1969 ஆகிய வருடங்களில் பாடிய பாடல்கள் )
இந்த குறிப்பிட்ட கால
கட்டத்தில் எல்லா பெரிய நடிகர்களின் படங்களுக்கும் கே.வி.எம் இசை அமைத்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி. என்.டி.ஆர், ஏ.என்.ஆர் என தமிழ் மற்றும் தெலுங்கு
சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் இசை அமைத்தார். பாரம்பரிய இசையாகட்டும், கிராமிய
இசை ஆகட்டும், மெல்லிசை ஆகட்டும் அதை கையாளும் திறன் அவருக்கு இருந்தது. சுருங்க சொன்னால், கே.வி.எம்மின் இசை பற்றி “சொல்ல சொல்ல இனிக்குதடா”..
1966-ல் அண்ணாவின் ஆசை, சின்னஞ்சிறு உலகம், மஹாகவி காளிதாஸ், சரஸ்வதி
சபதம், செல்வம், தாலி பாக்யம், தனிப்பிறவி, தேடி வந்த திருமகள் போன்ற தமிழ்
படங்களிலும், ஆஸ்திபருலு, டாக்டர் ஆனந்த், பெள்ளி பந்திரி போன்ற தெலுங்கு
படங்களிலும் பாடினார்.
இக்காலகட்டத்தில்
சமூக படங்களும், பக்திப்படங்களும் சமமாக வெற்றி பெற்றன. எவ்வகை பாடலாக இருந்தாலும்
அதற்கு பொருந்தும் குரல் அமைப்பும், அதை கையாளும் திறனும் இருந்ததால்
பி.சுசீலாவின் திறமை எல்லா வகையிலும் மிளிர்ந்தது.
மஹாகவி காளிதாஸ்
படத்தில் இடம் பெற்ற “மலரும்
வான் நிலவும்” பாடலில் பி.சுசீலாவின் குரல் தண்ணிலவு போல் குளிர்ச்சியாக
இருக்கும். இதை வேறு யாராலும் இப்படி பாடி இருக்கவே முடியாது. “கலைமகள்
எனக்கொரு ஆணை இட்டாள்” என டி.எம்.எஸ் உடன் பாடிய பாடலும் குறிப்பிட படத்தக்கது. ஆண்மை
பொங்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும், பெண்மை மிளிரும் பி.சுசீலாவின் குரலும் ஒன்றை
ஒன்று மிஞ்சும் வகையில் தரமாக ஒலிக்கிறது. இதைத்தவிர “சாகுந்தலம்” நாடகம் இசை
வடிவில் நாட்டியப் பாடலாக ஒலித்தது.
சரஸ்வதி சபதம் படத்தின்
பாடல்கள் எல்லாமே முத்துக்கள். “கோமாதா
எங்கள் குலமாதா பாடல்
தமிழ் பட உலகில் ஒரு சாகாவரம் பெற்ற பாடல்.
( வர்ணனை ) .
இந்த தலைமுறை குழந்தைகளும்கூட ரசித்து பாடும் பாடல் என்பதை ரியாலிட்டி ஷோ-க்கள்
மூலமாக பார்க்க முடிகிறது. சுசீலாவின் குரலும், சாவித்திரியின் முகபாவமும்,
கண்கவர் காட்சி அமைப்புகளும் எல்லோரையுமே ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்தது. “தாய் தந்த பிச்சையிலே” என
பிச்சைக்காரி பாடுவது போல் ஒரு பாடலை இசை அமைத்து அதை வெற்றி பெறவும் வைத்த
கே.வி.எம் அவர்களும், பாடி வெற்றி பெற செய்த சுசீலாம்மாவும்
பாராட்டுக்குரியவர்கள். “உருவத்தைக்காட்டிடும்
கண்ணாடி” என அழகு கொஞ்சும் ஒரு பாடல் இனிமையோ இனிமை.. (வர்ணனை ). இவை
தவிர “ஹரி ஓம் நமோ” என ஒலிக்கும் திவ்யபிரபந்தம்
சுசீலாவின் குரலாலும் உச்சரிப்பாலும் அழகு பெற்றது. இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட
வேண்டும். தமிழுக்கு தேவையான தெளிவு,
அழுத்தம் திருத்தம் போன்ற தனித்துவங்கள் பி.சுசீலாவின் குரலில் இருந்ததால் தான்
என்னாவோ பல இலக்கியம் சார்ந்த பாடல்களை பாடும் வாய்ப்பு பி.சுசீலாவுக்கு
கிடைத்திருக்கிறது. 2000- ஆண்டுகளுக்கு முந்தைய சிலப்பதிகாரம் முதல் தேவாரம், திருவாசம்,
திருப்பாவை போன்ற பல பழந்தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்ற பாடல்களையும் பாடி
இருக்கிறார் பி.சுசீலா. ( ஆதாரம் )..
செல்வம்
படத்தில் “என்னடி இத்தனை
வேகம்” என ஒரு பாடல் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப்பின் காதலனை காண
காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஆவல், சந்தோஷம், துள்ளல் என பாடல் முழுதும்
பி.சுசீலாவின் குரல் துள்ளி விளையாடும். “ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல”
என்ற சிச்சுவேஷன் பாடல், பாடகர்களின் திறமைக்கு அளிக்கப்பட்ட சேலஞ்ச். விரஹத்தின்
விளிம்பில் நிற்கும் அவனின் உணர்வும், ஜாதகத்தை நம்பி, அவனை மறுக்கவும் முடியாமல்
இணையவும் முடியாமல் தவிக்கும் அவளின் உணர்வும் பாடலாக மாறிய போது டி.எம்.எஸ்-சும்
பி.சுசீலாவும் அதற்கு உயிர் கொடுத்தார்கள். அருமையான பாடல்.
தாலி பாக்கியம் படத்தில் “கண் பட்டது கொஞ்சம்”, “அன்னை இல்லாமல் பிறந்தவர்
யார்”, “இப்படியே
இருந்து விட்டால், “உள்ளம்
ஒரு கோயில்” போல ஜாலியான ஜோடிப்பாடல்கள் இடம் பெற்றன. தனிப்பிறவி படத்தில் “கன்னத்தில் என்னடி காயம்”,
“சிரிப்பென்ன சிரிப்பென்ன
சின்னம்மா”, “ஒரே முறை
தான் உன்னோடு பேசி பார்த்தேன்”, “நேரம் நல்ல நேரம்” என
எல்லாமே இளமை குலுங்கும் காதல் பாடல்களாய் அமைந்தன. தாயே உனக்காக படத்தில் இடம்
பெற்ற “அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை” பாடல் போதிய வெற்றி பெற்றதா என
தெரியவில்லை. சமாதானத்தை விரும்பும் ஒவ்வொரு பேரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல்.
தேடி வந்த திருமகள் படத்தில் “சின்ன சின்ன இதழ் விரிக்கும்” பாடலை குறிப்பிட்டு
சொல்லலாம். அண்ணாவின் ஆசை படத்தில் “கோவிலிலே வீடு கட்டி”,
“பூப்போல் மலர போட்டு வைத்தான்”, பாட்டெழுதட்டும் பருவம்” “இன்பம் என்பது என்ன”
போன்ற பாடல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தன. சின்னஞ்சிறு உலகம் படத்தில் “உள்ளம்
என்பது உலகம் ஆகலாம்” குறிப்பிடத்தக்க பாடல்.
இதே வருடம் தெலுங்கில் “Aasthiparulu”
படத்தில் “Soggade china naayana”
, Erra Errani buggaladaana ponravai பிரபலமான பாடல்கள். டாக்டர் ஆனந்த் படத்தில் peruguthunnathi, , Neelala kannullo ” போல்
ஹிட் பாடல்கள் அமைந்தன. அனால் கிரீடம் போல அமைந்தது “Neela Mohana Rama”
பாடல் தான். மிக அருமையான
பாடல். மொத்ததில் 1966-ஆம் வருடம் கே.வி.எம், பி.சுசீலா கூட்டணிக்கு வெற்றிகரமான வருடமாக
அமைந்தது என்றே சொல்லலாம்.
Komatha engal kulamatha | |
Ontra iranda eduthu solla | |
(Ore murai thaan unnodu pesi) | |
(amaithi purave )
(soggade chinna nayana) | (neela mohana rama ) |
thaai thantha pichayile | |
1967-ல் அரச
கட்டளை. கந்தன் கருணை, திருவருட்செல்வர், விவசாயி. தாய்க்கு தலைமகன், முகூர்த்த
நாள், பாலாடை, கண்கண்ட தெய்வம், பெண்ணே நீ வாழ்க, பேசும் தெய்வம், பொன்னான வாழ்வு,
ராஜாத்தி, சீதா, தங்க தம்பி, தங்க வளையல் போல நிறைய தமிழ் படங்களுக்கு இசை அமைத்தார்
கே.வி.எம். அதைப்போல் தெலுங்கிலும் “Baalaraju katha”, Kachu kota”,
“Private master”, “polla rangadu”, “Upayanlu apayam”, “Prana mithrulu”, “sabash
Ranga”, “Sakshi”, “Saraswathi sapatham”, “Shiva leelalu”, “thanamey prapancha
leela” என பல தெலுங்குப் படங்களுக்கும் இசை அமைத்தார் கே.வி.எம். 1967-லேயே 25
படங்களுக்கு இசை அமைப்பது என்பது பெரிய விஷயம் தான். அதுவும்
எப்படிப்பட்ட கம்போசிஷன்ஸ்! பிரமிக்க வைக்கும் இசை என்றே சொல்லலாம்.
அரசகட்டளை படத்தில்
இரண்டு டாப் ஹீரோயின்ஸ். ஜெயலலிதா, சரோஜாதேவி என இருவருக்குமே பி.சுசீலா தான்
பின்னணி பாடினார். “புத்தம்
புதிய புத்தகமே”, “முகத்தை
பார்த்ததில்லை”, “வேட்டையாடு
விளையாடு”, “என்னை
பாட வைத்தவன் ஒருவன்” போல ஒன்றை ஒன்று மிஞ்சும் காதல் பாடல்களும், “பண்பாடும் பறவையே என்ன
தூக்கம்” போன்ற எழுச்சி மிக்க ஒரு பாடலும், “எத்தனை காலம் கனவுகள் கண்டேன்”
போன்ற நடனப்பாடலும் பெரிய வெற்றியை ஈட்டின. அரச கட்டளையில் இரண்டு
கதாநாயகிகளுக்கும் பாடிய பி.சுசீலா, கந்தன் கருணையில் சாவித்திரி, கே.ஆர்.விஜயா,
ஜெயலலிதா என மூன்று டாப் ஹீரோயினிகளுக்கும் பாடினார். சாவித்ரிக்காக “சொல்ல சொல்ல இனிக்குதடா”
என தேன் சொட்டும் பக்திப்பாடலையும், ஆறுமுகனே ஷண்முகா என ஒரு விருத்தத்தையும் பாடினார்.
கே.ஆர்.விஜயாவுக்காக “மனம்
படைத்தேன் உன்னை நினைப்பததற்கு” என்ற மனதை கொள்ளும் கொள்ளும் காதல் பாடலை
பாடினார் பி.சுசீலா. ஜெயலலிதாவுக்காக “திருப்பரங்குன்றத்தில் நீ
சிரித்தால் முருகா”, “வெள்ளி மலை பொதிகை
மலை எங்கள் மலை அம்மே” “குறிஞ்சியிலே
பூ மலர்ந்து” என மூன்று பாடல்களை பாடினார் பி.சுசீலா. தாயின் குரலாக சாவித்ரிக்கும்,
அரச குல கன்னியின் காதல் குரலாய் கே.ஆர்.விஜயாவுக்கும், குறத்தியின் குரலாய்
ஜெயலலிதாவுக்கும் பின்னணி .குரலாய்
ஒலித்தது பி.சுசீலாவின் குரலே. எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.
திருவருட்செல்வர்
படத்தில் “ஆதி சிவன் தாழ்
பணிந்து அருள் பெறுவோமே” என்ற பக்திப்பாடல் மனதை கொள்ளை கொள்ளும் பாடல். ஆனால்
“மன்னவன் வந்தானடி தோழி”
பி.சுசீலாவின் திரை இசை வாழ்க்கையில் ஒரு மைல்கல். ( Write-up ) .கிளாசிக்கல் பாடல்களை கையாளுவது
பி.சுசீலாவுக்கு கஷ்டமான விஷயம் ஒன்றும் இல்லை. “Pralaya payodhi jale”,
“ariya paruvamada”, “ennai pol pennallavo”, “தேவி
விஜயபவானி”, “நெஞ்சிருக்கும்
வரைக்கும் நினைவிருக்கும்”, “கொஞ்சும் சலங்கை
ஒலி கேட்டு” “எங்கோ
பிறந்தவராம்” "nadireyi gadinchene" போல் பல
பாடல்களை ஆரம்ப காலத்திலேயே பாடி இருக்கிறார். ஆனால், இந்த பாடலை பாடும் போது
பி.சுசீலாவிடம் நிறைய அனுபவம் கூடி இருந்தது. பாடிப்பாடி குரலில் உரம் ஏறி
இருந்தது. அதை முழுமையாய் உபயோகித்து கல்யாணி ராகத்தை பிழிந்தெடுத்து கே.வி.எம்
கொடுத்த அதி அற்புதமான பாடல் தான் “மன்னவன் வந்தானடி”. இசை விமர்சகர் சுப்புடு இப்பாடலை
பற்றி எழுதும் போது “பி.சுசீலாவைப்போல் இப்பாடலை பாட வட இந்தியாவில் ஒரு
பாடகியாவது இருக்கிறாரா?” என கேள்வியே கேட்டிருந்தார். எம்.எல்.வி போன்ற கர்நாடக
மேதைகளும் கூட இப்பாடலை பாராட்டி
இருந்தார்கள்.
தாய்க்கு தலைமகன்
படத்தில் “அன்னையென்று
ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன்”, “பார்த்துக்கொண்டது கண்ணுக்கு”.
“வாழ வேண்டும் சுகம் வளர
வேண்டும்” போன்ற பாடல்கள் இடம் பெற்றன. விவசாயி படத்தில் “காதல் எந்தன் மீதில் என்றால்”,
“இப்படித்தான் இருக்க
வேண்டும் பொம்பளே”, “என்னம்மா
சிங்கார கண்ணம்மா” பாடல்கள் பிரபலமான பாடல்கள்.
முகூர்த்த நாள்
படத்தில் “மாணிக்க மூக்குத்தி
மதுரை மீனாட்சிக்கு”, பாலாடை படத்தில் “பட்டாடை தொட்டில் கட்ட
வேண்டும்”, “அப்படி
என்ன பார்வை அங்கும் இங்கும்”, “என் கண்ணுக்கு விருந்தெங்கே”,
“பேசும் தெய்வம்” படத்தில் “இதய
ஊஞ்சல் ஆடவா”, “அழகு
தெய்வம் மெல்ல மெல்ல”. “பத்து மாதம் சுமக்கவில்லை”, “பொன்னான வாழ்வு” படத்தில் “வாழி நலம் சூழ”, சீதா படத்தில் “காவியத்தின் தலைவன் ராமனடி”,
“நலம் காக்கும் குல
தெய்வமே” தங்க தம்பி படத்தில் “ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா
கன்னத்தில்” பெண்ணே நீ வாழ்க படத்தில் “உயிர் நீ உனக்கொரு உடன் நான்”
போன்ற பல சிறப்பான பாடல்களை இவ்வருடத்தில் கே.வி.எம் இசையில் பி.சுசீலா பாடினார்.
தெலுங்கு படங்களை பொறுத்த வரை இவ்வருடம்
கே.வி.எம்முக்கு மிகவும் ஏற்றமான ஒரு வருடமாக இருந்தது. “kanchu kota” படம்
பெரிய ஹிட். “ee puttina
roju”, “siggenduku cheli”, “ledu ledani” and “sari leri neekkavvaru” போன்ற
பாடல்கள் பிரபலம் ஆனவை. Private
master படத்தில் “adhamlo kanipichedi”, “chiru chiru jallula”, “theravaku
theravku”. “ekkadakellave pilla” என எல்லாமே ஹிட் பாடல்கள். Prana
mitrulu படத்தில் “Gunde
jallu mannadi”,
”, “manasu mamatha”
போன்ற பாடல்கள் ஹிட் ஆனவை. “Upayamlo apayam” படத்தில்
“chinnari ponnari”, “nisha enthuku”, “padaru gadichi”
“o baala raja” , Sakshi படத்தில் “amma kadupu challaga”
போல நல்ல பாடல்கள் இடம்
பெற்றன.
Putham puthiya puthagame | |
Annai entru aagum munne | |
Thirupparankunrathil nee
| Sarileru neekkevvaru |
1968-ல் தில்லானா மோகனம்பாள், திருமால் பெருமை, தேர் திருவிழா, அன்னை சொன்ன சொல், பேசும் தெய்வம், பணமா பாசமா, முகராசி, காதல் வாகனம், ஜீவனாம்சம், டெல்லி மாப்பிள்ளை, அன்று கண்ட முகம் போன்ற தமிழ் படங்களும் “adrushtavanthulu”, “bangaru picchikஎ”. “lakshmi nivasam”, “niluvu dopidi”, “thalli prema”., “undamma bottu pedatha” போன்ற தெலுங்குப் படங்களும் வெளி வந்தன.
தில்லானா மோகனாம்பாள்
படத்தில் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன”, “நலந்தானா, நலந்தானா” என இரண்டு
பாடல்களை பாடினார் பி.சுசீலா. ஷண்முகப்ரியா ராகத்தில் ஸ்ருங்கார ரசம் சொட்டும் நடன பாடலான “மறைந்திருந்து பார்க்கும்”
எப்படி. மறக்க முடியும்!?. படத்தின்
வெற்றிக்கு இவ்விரு உறுதுணையாக நின்றன. “நலந்தானா நலந்தானா”
இன்னொரு மைல்கல். நாதஸ்வர இசையின் ஓசைக்கு தன்னாலும் ஈடு கொடுக்க முடியும் என
பி.சுசீலா நிரூபித்த பாடல். படத்தின் உயிர் நாடியான பாடலும் கூட. அதுவரை
பெரும்பாலான கிளாசிகல் நடனப்பாடல்களை எம்.எல்.வி, பி.லீலா போன்ற கர்நாடக இசை
மேதைகளே பாடி வந்தார்கள். ஆனால் இப்பாடல் அவ்வகை பாடல்களுக்கு பி.சுசீலாவின்
குரலும் உகந்ததே என நிருபித்தது. வெறும் ஸ்ருங்கார நடன பாடலாக இல்லாமல், நடனத்துடன்
ஒரு பெண்ணின் காதலை, வலியை, இயலாமையை, துடிப்பை உணர்த்தும் பாடலாக அமைந்தது..
அத்தனை உணர்வுகளையும் குரலில் கொண்டு வந்தார் பி.சுசீலா. என்ன இல்லை இந்த பாடலில்
! இனிமையான குரல், தெளிவான வார்த்தைகள், சுத்தமான ஸ்ருதி, ஒவ்வொரு வார்த்தையிலும்
இருக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ் ( Eg. இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்? ) என எல்லாமே இருக்கும். ஒரு
கம்பீரமான, சுமரியாதை உள்ள, அதே சமயம் பெண்மையின் நலம் கெடாத நடன மணியாய் பத்மினி திரையில் வாழ்ந்து காட்டினார். அந்த
கேரக்டரின் தன்மையை உள்வாங்கி, அதை தன் குரலில் கொண்டு வந்தார் பி.சுசீலா.
இப்பாடலில் சரோஜாதேவி நடித்திருந்தால் அதற்கேற்றார் போல் பாடி இருப்பார் இசை அரசி
என்றே நினைக்கிறேன். ஏன், ஒருவர் கூட இப்பாடலை ரியாலிட்டி ஷோ-க்களில் பாடுவதில்லை
!!? இப்படம் “raga gaal”
என தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. நலந்தானா பாடலை தெலுங்கிலும்
கேளுங்கள். “Nee dega”
“திருமால் பெருமை”யில்
திருப்பாவையில் இருந்து “மார்கழி
திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்”, ”வாரணமாயிரம் சூழ வலம் செய்து”
“ஓங்கி உலகளந்த உத்தமன் தாழ் வாழ்க” போன்ற பாடல்களை பாடினார் சுசீலா. என்னே ஒரு
பக்தி மணம்! “ஹரி ஹர கோகுல
ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா” என டி.எம்.எஸ்-உடன் இணைந்து செவி குளிரும்
இன்னொரு பக்திப்பாடல். “கண்ணனுக்கும்
கள்வனுக்கும் பேதமில்லை தோழி”., “கரை ஏறி மீன் விளையாடும்”
போன்ற பாடல்களையும் பாடினார் சுசீலா.
இதற்கு நேரெதிராக “தஞ்சாவூரு சீமையிலே”
என்று “தேர் திருவிழா” படத்தில் கிராமிய மணம் வீசும் பாடலை பாடினார். “சித்தாடை கட்டியிருக்கும்
சிட்டு”, “அடிக்கட்டுமா
முரசு அடிக்கட்டுமா” என மேலும் துள்ளலான பாடல்கள் அப்படத்தில் இடம் பெற்றன. “மழை முத்து முத்து பந்தலிட்டு”
என இன்னொரு காதல் பாடலும் குறிப்பிட தக்கது.
இவ்வருடத்தில் இதை தவிர “முகராசி”, “காதல் வாகனம்” போன்ற எம்.ஜிஆர்
படங்களுக்கும் இசை அமைத்தார் கே.வி.எம். காதல் வாகனம் படத்தில் “என்னங்க,
சொல்லுங்க” , “வணக்கம் என் வணக்கம்”, “வா பொண்ணுக்கு பொட்டு வைக்க”, “நடப்பது 68”,
“இங்கே வா இங்கே வா ஒரு ரஹசியம்” என எல்லாமே குதூகலமான பாடல்கள்.
முகராசி படத்தில் “எனக்கும்
உனக்கும் தான் பொருத்தம்”, “முகத்தை காட்டி காட்டி”,
“என்னென்ன என்னென்ன
எண்ணங்கள்” போன்ற டூயட்டுகளும் “தண்ணீரேனும் கண்ணாடி”
என்ற சோலோவும் ஹிட் ஆகின. பணமா பாசமா படத்தில் “மாறியது நெஞ்சம் மாற்றியவர்
யாரோ”, “மெல்ல
மெல்லமெல்ல எந்த மேனி நடுங்குது மெல்ல” பாடல்கள் குறிப்பிட தக்க பாடல்கள்.
தெலுங்கில் adrushtavanthulu
படத்தில் “Mokkajonna thotalo” ஹிட் பாடல். தவிர Kodi
koose jamu, Muddante chedha, Naa manase godari, padina mudhra, Chinta chettu என
எல்லாமே சிறப்பான பாடல்களாய் அமைந்தன. “bangaru
picchika” படத்தில் “manase gani karagani”, “Antunnadihi
radha”, “po po nidurapo” போன்ற
பாடல்கள் இடம் பெற்றன. “thalli
prema” படத்தில் “kalalo ilalo”, “komma
meedhi koyilamma” “letha
letha” பாடல்களும் “undamma
bottu pedatha” படத்தில் “Sandhya
gali theli murali”, “Raavama
Mahalakshmi”, “chaalule nidurapo” போன்ற
பாடல்கும் குறிப்பிட படத்தக்கவை.
1969-ல்
அடிமைப்பெண், குலவிளக்கு, மனைவி, சுபதினம். துணைவன் போன்ற தமிழ் படங்களிலும் , Adarsha
kutumbam. Akka chellelu, anna thammudu, bhale Rabgadu, eka veera, muhoortha
phalam. Manushulu Marali, Sivabhaktha
Vijayam போன்ற தெலுங்கு படங்களிலும் கே.வி.எம் இசையில் பாடினார் பி.சுசீலா.
|
Nalanthana nalanthana
|
( thanneerenum kannadi ) | |
( Thanjaavooru seemaiyle )
| |
அடிமைப்பெண் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.சுசீலாவுடன் இணைந்து
எஸ்.பி.பி பாடிய “ஆயிரம் நிலவே
வா” பாடல் எஸ்,பி,பிக்கும் ஒரு திருப்புமுனை பாடலாக அமைந்தது. “காலத்தை வென்றவன் நீ”
பாடல் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய பாடல். இப்பாடலை ஹிந்தியில்
“பி.சுசீலாவும், ஆஷா போன்ஸ்லேவும்” இணைந்து பாடினர். குலவிளக்கு படத்தில் “பூ பூவா பூத்திருக்கு பூமியிலே
ஆயிரம் பூ” பாடல் சந்தோசமாகவும்,
சோகமாகவும் சுசீலாவின் குரலில் ஒலித்தது. “பனை மரம். தென்னை மரம் வாழை மரம்” என
குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடலும் உண்டு. சுபதினம் படத்தில் “புத்தம் புது மேனி” என
கர்நாடக இசை மேதை “பாலமுரளி கிருஷ்ணாவுடன்”, பி.சுசீலா பாடிய ஒரு அழகிய டுயட் இடம்
பெற்றது. “வேறென்ன வேண்டும் உன்னைத்தவிர” என்ற பாடலை “ஏ’எல்.ராகவனுடன்” இணைந்து
பாடினார் பி.சுசீலா அவர்கள். மனைவி படத்தில் “பெண்ணின் பெருமையே பெருமை” என்று
பெண்ணின் பெருமை கூறும் பாடல் ஓரளவு பிரபலமான பாடல். இவ்வருடமும் துணைவன் என்ற பக்திப்படம் கே.வி.எம் இசையில் வெளிவந்தது. “மருத மலை மீதிலே” என்ற
அருமையான முருகன் புகழ் பாடும் பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். அதைத்தவிர “நான் யார் என்பதை நீ சொல்ல”,
“”,போன்ற பாடல்களும் இடம் பெற்றன.
தெலுங்குப்படங்களில் கே.வி.எம்மின் இசை பெரிய
வெற்றியை பெற்று வந்ததால் இவ்வருடதிலும் குறிப்பிட படத்தக்க படங்கள் கிடைத்தன. ஆனால்
பெரும்பாலும் படங்கள் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெரும் ஜாலியான காதல் பாடல்களை
போலவே ஜாலியாக இருந்தன. Adarsha
kutumbam படத்தில் “hello saaru oh dora gaaru
“, Bidiyamela o cheli, kalagajjagangalamma, Cheyi cheyi போல எல்லாமே ஹிட் பாடல்கள். Akka
chellelu பட பாடல்களும் மிகவும் பிரபலமானவை. “பாண்டவுலு பாண்டவுலு தும்மேதா”
இப்போதும் கூட பிரபலம். சரியான குத்துப்பாட்டு. தவிர chekachekalade, Chita patachinnukulatho, santhosham chesukunda, Srimati yemanna srivaru என
எல்லாமே ஹிட்ஸ். Anna
thammudu படத்தில் “nannu
choosi vennela”, navve o chilakamma, siggesthundoi
cheppa போன்றவை குறிப்பிடப்படத்தக்கவை. Bhale rangadu படத்தில் “emitoidi emito”, “merisipoye yennelaaye”,
“Hip hip hurray oho bhale” பாடல்களும் ஹிட் பாடல்களே. Buddhimanthudu
படத்தில் “Guttameedhaguvva kusindhi”, “thotaloki raaku raa”
பாடல்கள் இடம் பெற்றன. இவ்வருடத்தில் இன்னொரு மியுசிகல் ஹிட் “Eka veera” படம்.
கிட்டத்தட்ட 10 பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றன. “thottalonaa raju”, “Nee peru Talachina chalu", “avunacheliya sari” போன்றவை காலத்தால் அழியாத பாடல்கள். “manushulu
maaraali” படத்தில் “holiday holiday”, “maapaayinavvali” "toorupu sindoorapu" பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம். muhoortha balam படத்தில் “ammalaganna
ammallara”, “ugga gillagane”, “doy
doy vasthunnaadoy”, “kaay kaay kaavalikaai”, “matthulogammatthule”, “neeku endaa manasunho” போன்ற பாடல்கள் குறிப்பிட பட தக்கவை.
List of Songs (1966-1969)
Sl |
Lang |
Movie |
Songs |
Singers |
1966 | Tamil | thanippiravi | ALaip pArppadhAl azhagenna | TMS, P. Susheela |
1966 | Tamil | thaaye unakkaaga | amaidhi purAve amaidhi purAve | P. Susheela |
1966 | Tamil | thaali bhagyam | annai illamal piranthavar | P. Susheela |
1966 | Tamil | thedi vandha thirumagal | chinna chinna idhazh | P. Susheela |
1966 | Tamil | thanippiravi | edhir paaramal nadanthadi | P. Susheela |
1966 | Tamil | selvam | Ennadi ithani vegham | P. Susheela |
1966 | Tamil | saraswathi sabatham | hari om namo (divya brabandham) | P. Susheela |
1966 | Tamil | annavin asai | Inbam enbathu enna | TMS, P. Susheela |
1966 | Tamil | thaali bhagyam | ippadiyE irundhuvittaal eppadi irukkum | TMS, P. Susheela |
1966 | Tamil | chinnanjiru ulagam | P. Susheela | |
1966 | Tamil | saraswathi sabatham | kalai vaazhga (komatha engal kula) | P. Susheela |
1966 | Tamil | mahakavi kaalidas | kalaimagaL enakkoru aaNaiyittaaL | TMS, P. Susheela |
1966 | Tamil | thaali bhagyam | kann pattadhu konjam | TMS, P. Susheela |
1966 | Tamil | thanippiravi | kannathil ennadi kaayam | P. Susheela, TMS |
1966 | Tamil | thedi vandha thirumagal | TMS, P. Susheela | |
1966 | Tamil | annavin asai | kovilile Veedu katti | TMS, P. Susheela |
1966 | Tamil | mahakavi kaalidas | malarum vaan nilavum | P. Susheela |
1966 | Tamil | chinnanjiru ulagam | manasirukkanum manasu | TMS, P. Susheela |
1966 | Tamil | thanippiravi | nEram nalla nEram | TMS, P. Susheela |
1966 | Tamil | thedi vandha thirumagal | nizhal pOl kuzhal mudithu | TMS, P. Susheela |
1966 | Tamil | selvam | ondraa iraNdaa eduthuch cholla | TMS, P. Susheela |
1966 | Tamil | thanippiravi | orE muRaidhaan unnOdu pEsi | TMS, P. Susheela |
1966 | Tamil | annavin asai | paatezhuthattum paruvam | P.B. Srinivas, P. Susheela |
1966 | Tamil | thanippiravi | pEsip pEsiyE pozhudhum | TMS, P. Susheela |
1966 | Tamil | annavin asai | poo pol malara pottu vaithan | P. Susheela |
1966 | Tamil | chinnanjiru ulagam | pudhumai pengaladi bhumikku | P. Susheela |
1966 | Tamil | mahakavi kaalidas | saakunthalam -part1 | TMS, P. Susheela, ponnusami, soolamangalam |
1966 | Tamil | mahakavi kaalidas | saakunthalam -part2 | TMS, P. Susheela |
1966 | Tamil | thanippiravi | sirippenna sirippenna | P. Susheela |
1966 | Tamil | saraswathi sabatham | thai thantha pichayile | P. Susheela |
1966 | Tamil | annavin asai | Thunbam enbathu enna | P. Susheela |
1966 | Tamil | chinnanjiru ulagam | ullam enbadhu ulagam aghalaam | P. Susheela |
1966 | Tamil | thaali bhagyam | ullam oru koyil | TMS, P. Susheela |
1966 | Tamil | saraswathi sabatham | uruvathai kaatidum kannadi | P. Susheela |
1966 | Tamil | chinnanjiru ulagam | vizhuntha sUriyan | P. Susheela |
1966 | Telugu | Pelli Pandiri | Ghantasala, P. Susheela | |
1966 | Telugu | antastulu | amma kadupu challaga | P. Susheela |
1966 | Telugu | aasthiparulu | Andariki theliyanidhi | Ghantasala, P. Susheela |
1966 | Telugu | doctor anand | Chakkani challani ellu | Ghantasala, P. Susheela, Vasantha |
1966 | Telugu | doctor anand | chakkani challani ellu | P. Susheela |
1966 | Telugu | aasthiparulu | Chali chali chali | Ghantasala, P. Susheela |
1966 | Telugu | Pelli Pandiri | P. Susheela | |
1966 | Telugu | aasthiparulu | Magavadivale Egaresukupo | P. Susheela |
1966 | Telugu | doctor anand | mathilono naa swami | P. Susheela |
1966 | Telugu | doctor anand | neela mohana rara | P. Susheela |
1966 | Telugu | doctor anand | neelala kannulatho | P. Susheela |
1966 | Telugu | doctor anand | peruguthunnathi | P. Susheela |
1966 | Telugu | aasthiparulu | Soggade chinni nayana | P. Susheela |
1966 | Telugu | aasthiparulu | Yerra yerani buggala | Ghantasala, P. Susheela |
1967 | Tamil | thanga thambi | aalukkoru mutham | P. Susheela |
1967 | Tamil | kann kanda deivam | aandavane saamiyo | TMS, P. Susheela |
1967 | Tamil | ponnana vazhvu | acham piranthadhu | P. Susheela |
1967 | Tamil | thiruvarut chelvar | Adhisivan thAzh paNindhu | TMS, P. Susheela |
1967 | Tamil | thaaikku thalaimagan | annayentru Agum munne ArArO | TMS, P. Susheela |
1967 | Tamil | paaladai | appadi enna paarvai angum | P. Susheela |
1967 | Tamil | kandhan karunai | arumugane shanmuga | P. Susheela |
1967 | Tamil | deivega uravu | azhagiya thennanjOlai, amaidhi | TMS, P. Susheela |
1967 | Tamil | thanga thambi | azhuvatharka piranthen | P. Susheela |
1967 | Tamil | paaladai | en kannukku virundhengE | TMS, P. Susheela |
1967 | Tamil | arasa kattalai | Ennai paada vaithavan | P. Susheela |
1967 | Tamil | vivasayi | ennamma singara kannamma | TMS, P. Susheela |
1967 | Tamil | arasa kattalai | Ethanai kaalam kanavukal kanden | P. Susheela |
1967 | Tamil | vivasayi | Evaridathum thavaru illai, enakkuthan | TMS, P. Susheela |
1967 | Tamil | pesum deivam | idhaya oonjal aada vaa | TMS, P. Susheela, PL |
1967 | Tamil | vivasayi | Ippadithan irukka vendum pombale | P. Susheela |
1967 | Tamil | vivasayi | kaadhal enthan mEthil entral | TMS, P. Susheela |
1967 | Tamil | kann kanda deivam | kannukkutti kannukkutti | TMS, P. Susheela |
1967 | Tamil | seetha | kaviyathin thalaivan | P. Susheela |
1967 | Tamil | kandhan karunai | kurinjiyile poo malarnthu | P. Susheela |
1967 | Tamil | mugoorththa naal | maanikka mookuthi madhurai | P. Susheela |
1967 | Tamil | kandhan karunai | manam padaithEn unnai | P. Susheela |
1967 | Tamil | thiruvarut chelvar | mannavan vanthaanadi | P. Susheela |
1967 | Tamil | deivega uravu | maram pazhuthaal | P. Susheela |
1967 | Tamil | mugoorththa naal | TMS, P. Susheela | |
1967 | Tamil | raajaathi | Moongilile varum | P. Susheela |
1967 | Tamil | arasa kattalai | mughathai paarthathillai | TMS, P. Susheela |
1967 | Tamil | seetha | naadi thudikkudhu | TMS, Seergazhi, P. Susheela |
1967 | Tamil | mugoorththa naal | Nadandhadhu netru mudindhadhu | P. Susheela, L.R. Eashwari |
1967 | Tamil | seetha | nalam kaakkum kula | P. Susheela, Soolamangalam |
1967 | Tamil | raajaathi | paadi paranthu varum | P. Susheela |
1967 | Tamil | thaaikku thalaimagan | paarthu kondathu kanukku kannu | TMS, P. Susheela |
1967 | Tamil | mugoorththa naal | paatukku paatteduppEn | TMS, P. Susheela |
1967 | Tamil | arasa kattalai | panpaadum paravaye | P. Susheela |
1967 | Tamil | paaladai | pattadai thottil katta vendum | P. Susheela |
1967 | Tamil | seetha | pennukku rahasiyam | P. Susheela |
1967 | Tamil | thanga thambi | pozhuthellaam | P. Susheela |
1967 | Tamil | arasa kattalai | Putham puyhiya puthagame | TMS, P. Susheela |
1967 | Tamil | kandhan karunai | solla solla inikkuthada | P. Susheela |
1967 | Tamil | mugoorththa naal | sooriyan poy chandhiran | TMS, P. Susheela |
1967 | Tamil | thanga valaiyal | P. Susheela | |
1967 | Tamil | kandhan karunai | Thiruparankuntrathil | P. Susheela, Soolamangalam |
1967 | Tamil | ponnana vazhvu | ullathin ulle | TMS, P. Susheela |
1967 | Tamil | penne nee vaazhga | uyir nee unakkoru udal naan | P. Susheela |
1967 | Tamil | thaaikku thalaimagan | vaazhavendum sugham valara vendum | TMS, P. Susheela |
1967 | Tamil | ponnana vazhvu | vaazhi nalam soozha | P. Susheela |
1967 | Tamil | kandhan karunai | Vellimalai podhigai malai | P. Susheela |
1967 | Tamil | thanga thambi | vetkamenna thendral vanthu | P. Susheela, TMS |
1967 | Tamil | arasa kattalai | vettayadu vilayadu viruppampole | TMS, P. Susheela |
1967 | Telugu | saraswathi sapadam (D) | aalinchi pedalni | P. Susheela |
1967 | Telugu | Piravate Master | adhamlo kanipitchedi | ghantasala, P. Susheela |
1967 | Telugu | kanchu kota | alala poola (ee puttina roju) ver2 | P. Susheela |
1967 | Telugu | poola rangadu | Burrakatha | Ghantasala, P. Susheela |
1967 | Telugu | sabash ranga | chaala manchikalam | P. Susheela, Ghantasala |
1967 | Telugu | thanamay prapancha leela (D) | chakkani ella | P. Susheela |
1967 | Telugu | sakshi | chilipoda chinnoda | ghantasala, P. Susheela |
1967 | Telugu | uppayanlu appayam | chinnari ponnari | P. Susheela |
1967 | Telugu | sakshi | daya lethe na meetha | P.B. Srinivas, P. Susheela |
1967 | Telugu | Shiva leelalu | Deva mahadeva shambo mahadeva | P. Susheela |
1967 | Telugu | Shiva leelalu | Ealo eaalelo galla cheera kattukunna | P. Susheela |
1967 | Telugu | kanchu kota | Ee puttina roju | P. Susheela |
1967 | Telugu | pirivate Master | ekkadikellave pilla | P. Susheela, PNR |
1967 | Telugu | uppayanlu appayam | ethi siguragulalu | P. Susheela, Chorus |
1967 | Telugu | prana mithrulu | Gunde jhallu mannadi | P. Susheela |
1967 | Telugu | Sabash ranga | Jilibili jilibili chinnamma singaaram | P. Susheela |
1967 | Telugu | prana mithrulu | kalakala navve | Ghantasala, P. Susheela |
1967 | Telugu | thanamay prapancha leela (D) | P. Susheela | |
1967 | Telugu | saraswathi sapadam (D) | kalalani vilasilu | P. Susheela |
1967 | Telugu | saraswathi sapadam (D) | kuvakuvalaadunu | P .Susheela |
1967 | Telugu | kanchu kota | Ledhu Ledhani | Ghantasala, P. Susheela |
1967 | Telugu | prana mithrulu | manasu mamatha manishiki | P. Susheela |
1967 | Telugu | Sabash ranga | Ne priyamaara talachitini sukham | P. Susheela |
1967 | Telugu | uppayanlu appayam | nisha enthuku | P. Susheela |
1967 | Telugu | uppayanlu appayam | o baala raaja | P. Susheela |
1967 | Telugu | saraswathi sapadam (D) | o maatha sakalakula maatha | P. Susheela |
1967 | Telugu | uppayanlu appayam | padaru gadichi | P.B. Srinivas, P. Susheela |
1967 | Telugu | prana mithrulu | pilupu vinu paluku | P. Susheela |
1967 | Telugu | uppayanlu appayam | prathi pappa puttethe | P. Susheela |
1967 | Telugu | kanchu kota | Sari leru neekeveru | P. Susheela, S. Janaki |
1967 | Telugu | kanchu kota | Siggenduke cheli | P. Susheela, S. Janaki |
1967 | Telugu | Piravate Master | siru siru jallula | P. Susheela |
1967 | Telugu | Piravate Master | siru siru jallula (sad) | P. Susheela |
1967 | Telugu | Upaayamlo Apaayam | P. Susheela | |
1967 | Telugu | sabash ranga | sudha murali manohara | P. Susheel, Ghantasala |
1967 | Telugu | balaraju katha | suklam-slogam | P. Susheela |
1967 | Telugu | Piravate Master | theravaku theravaku | ghantasala, P. Susheela |
1967 | Telugu | kanchu kota | Uluki uliki | P. Susheela |
1967 | Telugu | thanamay prapancha leela (D) | velaveyani | P. Susheela |
1967 | Telugu | sabash ranga | Ye laye chekkili gayam | P. Susheela, Ghantasala |
1968 | Tamil | ther thiruvizha | adikkattuma murasu | TMS, P. Susheela |
1968 | Tamil | annai sonna sol | adikkirathu doopu | P. Susheela |
1968 | Tamil | jeevanamsam | akkakkO kai kai | TMS, P. Susheela |
1968 | Tamil | pesum deivam | azhagu deivam mella | TMS, P. Susheela |
1968 | Tamil | panama paasama | chinnanchiru vEdu idhu | P. Susheela |
1968 | Tamil | jeevanamsam | enakkuLLE nee irukka unakkuLLE | TMS, P. Susheela |
1968 | Tamil | mugarasi | enakkum unakkumdhaan | TMS, P. Susheela |
1968 | Tamil | kaadhal vaaganam | ennanga ennanga | TMS, P. susheela |
1968 | Tamil | mugarasi | ennenna ennenna eNNangaL | TMS, P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | hari hari gOkula ramaNaa undhan | TMS, P. Susheela, Master Maharajan |
1968 | Tamil | antru kanda mugam | idhayam pollathathu naan | P. Susheela |
1968 | Tamil | kaadhal vaaganam | Inge vaa inge vaa oru rahasyam | P.B. Srinivas, P. Susheela |
1968 | Tamil | annai sonna sol | kaadhalukku nalu pakkam | P. Susheela |
1968 | Tamil | antru kanda mugam | kann padaithaan unnaik | TMS, P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | kanna kanna kaviya | P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | Kannanukkum kalvanukkum | P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | karaiyeri mEn vilayadum | P. Susheela, Soolamangalam |
1968 | Tamil | panama paasama | maariyathu nenjam maatriyavar yaarO | P. Susheela |
1968 | Tamil | delli mapillai | malai mudiyil pani azhagu | P. Susheela, Jamunarani |
1968 | Tamil | thillana moghanambal | marainthirunthu paarkkum | P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | margazhi thingal mathi | P. Susheela |
1968 | Tamil | ther thiruvizha | mazhai muthu muthu | TMS, P. Susheela |
1968 | Tamil | panama paasama | mella, mella mella, endhan mEni | TMS, P. Susheela |
1968 | Tamil | mugarasi | mugathaik kaatti kaatti | TMS, P. Susheela |
1968 | Tamil | kaadhal vaaganam | nadappadhu 68, idhu 68 | P. Susheela |
1968 | Tamil | thillana moghanambal | Nalanthaana nalanthaana | P. Susheela |
1968 | Tamil | thirumaal perumai | ongi ulagalantha | P. Susheela |
1968 | Tamil | delli mapillai | paadaatha paadal ethu | TMS, P. Susheela |
1968 | Tamil | pesum deivam | pathu maatham sumakkavillai | TMS, P. Susheela |
1968 | Tamil | delli mapillai | shOkkuthaan, jaalithaan, jOruthaan | P. Susheela, L.R. Eashwari |
1968 | Tamil | ther thiruvizha | sithaadai kattiyirukkum | TMS, P. Susheela |
1968 | Tamil | ther thiruvizha | thanjaavooru seemayile | TMS, P. Susheela |
1968 | Tamil | mugarasi | Thannerenum kannadi | P. Susheela |
1968 | Tamil | kaadhal vaaganam | vaa ponnukku pottu vaikka | TMS, P. Susheela |
1968 | Tamil | thirumal perumai | vaaranamaayiram | P. Susheela |
1968 | Tamil | kaadhal vaaganam | vanakkan en vanakkam | P. Susheela |
1968 | Tamil | antru kanda mugam | vazhakkondru thoduppEn | TMS, P. Susheela |
1968 | Telugu | niluvu dopidi | aadapillalante hoyhoy | P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | adugaduguna gudi undi | P. Susheela |
1968 | Telugu | mangalya vijayam (D) | annai illamal piranthavar in telugu | P. Susheela |
1968 | Telugu | niluvu dopidi | ayyindi ayyindi anukunnadi | P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | chaalule nidurapo | P. Susheela |
1968 | Telugu | adrushtavanthulu | Chinta chettu | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | chukkaltho cheppalani | S.P. Balasubrahmanyam, P. Susheela |
1968 | Telugu | dopidi dongalu (D) | eannenno eannenno | P. Susheela |
1968 | Telugu | bangaru pichuka | Ee radha | P. Susheela |
1968 | Telugu | lakshmi nivasam | guvvalaanti chinnadhi | P. Susheela |
1968 | Telugu | mangalya vijayam (D) | ippadiyE irundhuvittaal in telugu | P. Susheela, ? |
1968 | Telugu | thalli prema | kalalo ilalo | P. Susheela, P. Leela |
1968 | Telugu | mangalya vijayam (D) | kann pattadhu konjam in telugu | P. Susheela, ? |
1968 | Telugu | adrushtavanthulu | Kodi koose jamu | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | thalli prema | komma meedhi koyilamma | P. Susheela |
1968 | Telugu | bangaru pichuka | krishna alakinchu | P. Susheela |
1968 | Telugu | vichitra sagotharagalu (D) | Kunguma pottin in telugu | P. Susheela, ? |
1968 | Telugu | undamma bottu pedatha | P. Susheela | |
1968 | Telugu | thalli prema | letha letha | P.B. Srinivas, P. Susheela |
1968 | Telugu | niluvu dopidi | lokam idhi lokam | P. Susheela |
1968 | Telugu | bangaru picchika | manase gani karagani | P. Susheela |
1968 | Telugu | adrushtavanthulu | Mokkajonna thotalo | P. Susheela |
1968 | Telugu | adrushtavanthulu | Muddante chedha | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | dopidi dongalu (D) | mutchaladi aadi momu | P. Susheela, ? |
1968 | Telugu | adrushtavanthulu | Naa manase godari | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | dopidi dongalu (D) | naa yavvanam eenade | P. Susheela |
1968 | Telugu | lakshmi nivasam | navvu navvinchu | P. Susheela |
1968 | Telugu | vichitra sagotharagalu (D) | Neeye than enakku in telugu | P. Susheela, ? |
1968 | Telugu | thalli prema | ninna munna | P.B. Srinivas, P. Susheela |
1968 | Telugu | lakshmi nivasan | oho oorinche | P. Susheela |
1968 | Telugu | adrushtavanthulu | padina mudhra | P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | Patala gangamma | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | vichitra sagotharagalu (D) | pattu mugathu chutti in telugu | P. Susheela, ? |
1968 | Telugu | bangaru pichuka | po po nidurapo | P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | Raavama Mahalakshmi | S.P. Balasubrahmanyam, P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | Sandhya gali theli murali | P. Susheela |
1968 | Telugu | undamma bottu pedatha | Srisailam mallana | Ghantasala, P. Susheela |
1968 | Telugu | dopidi dongalu (D) | taluku belukula muripem | P. Susheela, ? |
1968 | Telugu | prana mithrulu | thalapu theru thalapu | P. Susheela. GS. JVR |
1968 | Telugu | mangalya vijayam (D) | ullam oru koyil in telugu | P. Susheela |
1969 | Tamil | manaivi | anniyaval thagathukku | P. Susheela, L.R. Eashwari |
1969 | Tamil | adimai penn | ayiram nilave vA | S.P. Balasubrahmanyam, P. Susheela |
1969 | Tamil | adimai penn | kaalathai ventravan nee | P. Susheela, S. Janaki |
1969 | Tamil | thunaivan | marudha malai meedhilE | TMS, P. Susheela |
1969 | Tamil | thunaivan | naan yaar enbadhai nE solla | TMS, P. Susheela |
1969 | Tamil | manaivi | Osaiyillaamal mozhi | TMS, P. Susheela |
1969 | Tamil | kulavilakku | panai maram thennai maram vazhai | P. Susheela |
1969 | Tamil | thunaivan | parvadha raja kumaranin magane | TMS, P. Susheela |
1969 | Tamil | manaivi | pennin perumaye perumai | P. Susheela |
1969 | Tamil | kulavilakku | poo poova poothirukku bhoomiyle | P. Susheela |
1969 | Tamil | kulavilakku | P. Susheela | |
1969 | Tamil | subha dinam | putham puthu mEni | BalaMuraliKrishna, P. Susheela |
1969 | Tamil | manaivi | TMS, P. Susheela | |
1969 | Tamil | thunaivan | velodu vilayaadum | P. Susheela |
1969 | Tamil | subha dinam | verenna vendum unnaithavira | TMS, A.L. Raghavan, P. Susheela |
1969 | Telugu | sivabhaktha vijayam (D) | aadi sivuni nadamuni | P. Susheela, ? |
1969 | Telugu | kondaveeti simham(D) | amma anaga velpu | P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | ammalaganna ammallara | P. Susheela |
1969 | Telugu | eka veera | avuna cheliya sari | P. Susheela |
1969 | Telugu | eka veera | bhama kalabam | P. Susheela. ? |
1969 | Telugu | manushulu maaraali | bhoomata eenadu | P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | bugga gillagane | S.P. Balasubrahmanyam, P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | chekachekalade | P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | Chita pata chinnukulatho kurisindhi | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | doy doy vasthunnaadoy | P. Susheela |
1969 | Telugu | eka veera | edhuru choosina valapu | P. Susheela |
1969 | Telugu | bhale rangadu | emito idi emito | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | eka veera | entha dhooramo adhi | Ghantasala, P. Susheela, S.P. Balasubrahmanyam |
1969 | Telugu | eka veera(old) | entha haayi ee reyi | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | buddhimanthudu | Guttameedha guvva kusindhi | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | kondaveeti simham(D) | hayiga velagavayya | P. Susheela, S. Janaki |
1969 | Telugu | adarsha kutumbam | hello saaru oh dora gaaru | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | bhale rangadu | Hip hip hurray oho bhale | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | manushulu maaraali | holiday holiday | P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | kaay kaay kaavali | P. susheela |
1969 | Telugu | eka veera | kanipetta geleva | P. Susheela |
1969 | Telugu | eka veera | krishna nee peru | P. Susheela |
1969 | Telugu | manushulu maaraali | maapaayi navvali | P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | matthulo gammatthule | P. susheela |
1969 | Telugu | bhale rangadu | merisipoye yennelaaye | P. Susheela |
1969 | Telugu | anna dammulu | nannu choosi vennela | P. Susheela |
1969 | Telugu | anna dammulu | navve o chilakamma | P. Susheela, Ghantasala |
1969 | Telugu | eka veera | navvula adhi | P. Susheela |
1969 | Telugu | raagagaal | nee dhega | P. Susheela |
1969 | Telugu | muhoortha balam | neeku endaa manasunho | P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | o pilla fata fata | P. Susheela |
1969 | Telugu | eka veera | oka deepam velagindhi | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | Paandavulu paandavulu thummedha | P. Susheela |
1969 | Telugu | sivabhaktha vijayam (D) | pallavi paadenule | P. Susheela |
1969 | Telugu | bhale rangadu | Palukaleni mounageethi | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | kondaveeti simham(D) | ragamu nilicheva | P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | santhosham chesukunda | P. Susheela |
1969 | Telugu | anna dammulu | siggesthundoi cheppa | P. Susheela |
1969 | Telugu | akka chellelu -new | Srimati yemanna srivaru | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | manushulu maaraali | thooruppu mandhaarapu | P. Susheela |
1969 | Telugu | buddhimanthudu | thotaloki raaku raa | P. Susheela |
1969 | Telugu | eka veera | thottalo naa raju | Ghantasala, P. Susheela |
1969 | Telugu | anna dammulu | yenduku yenduku ee | P. Susheela, Ghnatasala |
( தொடரும் ... )
( Part -1) (Part-2 ) (Part-3) ( Part-5) (Part-6) (Part -7)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக