இசை அமைப்பாளர்களிடமோ, பாடகர்களிடமோ உங்களுக்கு பிடித்த Singer
யார் என்று கேட்டால் பெரும்பாலும் மழுப்பலான பதிலே வரும். ( யார் மனதும்
கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கூட அப்படி பதில் சொல்லலாம்). அப்படியே சொன்னாலும் வட
இந்திய பாடகிகள் பெயர் அல்லது பொத்தாம் பொதுவாக இரண்டு மூன்று பாடகர்கள் பெயரை
சேர்த்து சொல்லி சமாளிப்பார்கள். ஆனால். ஏ.ஆர்..ரஹ்மான்,
பாடகர் டி.எம்.எஸ், ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்றோர் விதிவிலக்கு. தங்களுக்கு
பிடித்த Singer இவர் தான் தெளிவாக சொல்லி விடுவார்கள். மேற்குறிப்பிட்ட எல்லோருக்குமே
பிடித்த பாடகி பி.சுசீலா என்பது இன்னொரு ஒற்றுமை.
ஆனந்த விகடன்
பத்திரிக்கைக்காக. பத்திரிகையாளர் மதன் அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம், “உங்களுக்கு
பிடித்த பாடகர் யார்?” என்ற கேள்வியை கேட்டார். ( Proof ). அதற்கு அவர்,
பி.சுசீலா தான் எனக்கு பிடித்த பாடகி. அவர் குரலில் குவாலிட்டி, இளமை, இனிமை
எல்லாமே இருக்கும் என்று கூறினார். பின்னர் விஜய் டி.வி.யில் “காபி வித் அனு” என்ற
நிகழ்ச்சியில் “நீங்கள் யாருக்கு இந்த காபி அவார்ட்” கொடுக்க விரும்புகிறீர்கள்
என்று கேட்ட போது “என்னோட பேவரைட் சிங்கர். பி.சுசீலாவுக்கு” என்று கூறினார். ( Proof
). ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் அவார்ட் பெற்று வந்த போது அவருக்கு ஆந்திராவில்
ஒரு பாராட்டு விழா நடத்தினார் பி.சுசீலா. The Singer I adore in this world
is P.Susheela என்றார்
ஏ.ஆர்,ரஹ்மான். ( Proof
)
இப்படி பல
நேரங்களில் பி.சுசீலாவின் குரல் மீது தனக்கிருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தி
இருக்கிறார். ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னால் கூட தன்னுடன் பணி புரிந்த
இசைக்கலைஞர்களின் புகைப்படம் தொகுப்பை ஒரு புத்தகமாக வெளியிட்டார், அதிலும் ஒரு
முழுப்பக்க அளவிலான பி.சுசீலாவின் படத்தை சேர்த்திருந்தார். விழாவிலும் அவரை
அழைத்து கவுரவித்தார். ( ஆதாரம் ).
செம்மொழி
மாநாட்டு பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை
அமைத்த போது அதில் பி.சுசீலாவின் குரலையும் இணைத்துக்கொண்டார்.
இவ்வளவு
அபிமானம் இருப்பவர் இசையில் பி.சுசீலா எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார் என்றார்
மொத்தமே ஐந்து தான். முதலில் பாடியது, புதிய முகம் “கண்ணுக்கு மை அழகு” பாடல்
தான். அது ஒரு ஹிட் பாடல்.
( kannukku mai azhagu )
அதை தொடர்ந்து “டூயட்” படத்தில் “மெட்டுப்போடு” பாடலின்
துவக்கத்தில் வரும் “பவிழ நிறமும்” என்ற வரிகளை பாடினார்.
( மெட்டுப்போடு மெட்டுப்போடு )
மூன்றாவதாக பாடியது “இந்தியன்”
படத்தில் “கப்பலேறி போயாச்சு” பாடல். இப்பாடல் முழுவதும் பி.சுசீலாவின் குரலில்
முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கதையில் நாயகனின் விருப்பத்துக்காக அது
ஜோடிப்பாடல் ஆகி, கடைசியில் ஒரே ஒரு ஸ்டான்சா தான் பி.சுசீலாவின் குரலில்
ஒலித்தது.
( கப்பலேறி போயாச்சு )
நான்காவதாக, கண்ணுக்கு மை அழகு பாடலின் தெலுங்கு வடிவமான “கனுலுக்கு
சூப்பந்தம்” பாடலை பாடினார்.
( kanuluku Choopandham - Pdmavyuham )
ஐந்தாவது “செம்மொழி மாநாட்டு பாடல்”. பார்த்தால்
எல்லாமே ஹிட் பாடல்கள். இந்தியன் படம் கூட மெகா ஹிட் தான். ஏ.ஆர்.ரஹ்மான் ஏன்
அதிகம் பாடல்களை பி.சுசீலாவுக்கு அளிக்கவில்லை என்ற கேள்வி எல்லா பி.சுசீலா ரசிகர்களுக்கும் இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் சிறுவனாக
இருந்த போதே எல்லா இசைக்கலைஞர்களுக்கும் பரிச்சயமானவர். அவர் தந்தை ஆர்.கே.சேகர்
மலையாள படங்களில் இசை அமைப்பாளராகவும், ஜி.தேவராஜன் போன்ற பல இசை அமைப்பாளர்களிடம்
Music Conductorஆக வேலை செய்திருக்கிறார். அதானால் அவருடன் ஸ்டுடியோவுக்கு வரும் அவரை
எல்லோருக்குமே தெரிந்து இருக்கிறது. இனி அவரது தந்தை இசையில் பி.சுசீலா பாடிய
பாடல்களை பார்ப்போம்...
ஆர்.கே.சேகர்
கிட்டத்தட்ட 23 மலையாள படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதில் கிட்டத்தட்ட் 25
பாடல்ககளில் பி.சுசீலாவின் குரலை பயன் படுத்தி இருக்கிறார். அவர் இசை
அமைத்த முதல் படமான “பழஸ்ஸி ராஜா” படத்திலேயே மூன்று பாடல்களை பி.சுசீலாவை பாட
வைத்தார். “முத்தே வாவாவோ”
என்ற தாலாட்டு பாடல் மிகவும் பிரபலம். அதை தவிர “கண்ணு ரெண்டும் தாமரைப்பூ”,
“Anjana kunnil thiri” போன்ற பாடல்களும் தரத்தில் சிறந்த பாடல்களாய் அமைந்தன.
அவரது இரண்டாவது
படமான “ஆயிஷா” படத்திலும் பெரும்பாலான பாடல்களை பி.சுசீலா பாடினார். . குறிப்பாக
கேரள வாழ் முஸ்லிம்களின் பாடல் வகையான
“மாப்பிள்ள பாட்டுக்கள்” இப்படத்தில் இடம் பெற்றன. “Poomakalane oh hansul jammal”, “Muthane ente methane”. “Akkanummalayude chariviloru” “thamara poonkaavile”
போன்ற பாடல்களுடன், anganeyangane
[Badarul Muneer]. Rajakumari [Badarul Muneer]. Manoraajyathu [Badarul Muneer] பாடல்களும்
இடம் பெற்றன. Badarul
Muneer என்பது Badarul
Muneer, Hansul Jamaal ஆகிய இருவரின் காதல் கதை அடங்கிய ஒரு
தொகுப்பு. ( விபரங்கள்
). இதை பி.சுசீலா பாடிய விதம் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. மலையாளம்
சுத்தமாக தெரியாத சுசீலா அவர்கள் எப்படி மலபார் மாப்பிள்ள பாட்டுகளை .அதே
உச்சரிப்புடன், அதன் அழகு கெடாமல் பாடினார் என்பது ஆச்சரியமாய் இருக்கும். பூமகளானே
பாடலை கேட்டால் அதன் சிரமம் தெரியும்.
கேரளாவின் பிரபல இந்து
ஆலயங்களில் ஒன்றான “சோட்டாணிக்கர அம்மா” பெயரில் எடுக்கப்பட்ட படத்தில் “மனஸ்ஸு மனஸ்ஸின்றே காதில்
ரஹஸ்யங்ஙள்” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் பி.சுசீலா. கே.ஜெ.யேசுதாஸ் அவர்கள் பாடினர்.
அதே போல் மிஸ் மேரி படத்தில் மூன்று ஹிட் பாடல்களை பாடினார். அதில் “நீயென்றே வெளிச்சம் ஜீவன்றே
தெளிச்சம்” என்ற பாடல் மிகவும் பிரபலம். ஜெயச்சந்திரனுடன் பாடிய “மணிவர்ணன் இல்லாத்த
வ்ருந்தாவனம்” பாடல் இன்னொரு ஹிட் பாடல். “.பொன்னம்பிளியுடே
பூமுக்ஹ வாதிலில்” பாடலும் சிறந்த பாடலே. ஒரு முறை ஆனந்த விகடன் பத்திரிகைக்கு
அளித்த பேட்டியில் தன தந்தையை பற்றி நினைவு கூர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது தன
தந்தையின் இசையில் பி.சுசீலா பாடிய “மனஸ்ஸு மனஸ்ஸின்றே”, “நீயென்றே வெளிச்சம்”
பாடல்களையும் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
இவை தவிர Sapthami Chandrane ( Velicham akale), “EnikkuDahikkunnu ( Velicham akale), “pallavi maathram" ( pattabhishekam), Kathatha karthika vilakku (Anaada Shilpangal ), ragangal bhavangal ( Kuttichathan), Maaridamen
thukhil ( Priye ninakku vendi ) Chendumalli Chendumalli ( Nadeenadanmaare avasyamundu ),A smash A Crash (kaalaapika )
போன்ற பாடல்களையும் ஆர்.கே.சேகர் இசையில் பி.சுசீலா பாடினார்.
மொத்ததில் பார்த்தால் நிறைய நல்ல பாடல்கள் இருக்கிறது. வித்தியாசமான பாடல்கள் இருக்கிறது.
இருந்தும் ஏன் இவர் பெரிய உயரங்களை எட்டவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே
இருக்கிறது. அதற்கும் சேர்த்து அவரது மகன் அந்த நிலையை அடைந்ததும் சந்தோஷப்பட
வேண்டிய விஷயம்.
Total List of Songs in R.K.Sekhar's Music ( Sung by P.Susheela)
(Ponnambiliyude poomukha)
| |
( Pallavi mathram paranju )
| |
Total List of Songs in R.K.Sekhar's Music ( Sung by P.Susheela)
Year |
Movie |
Songs |
Singers |
|
1964 | pazhasi raja | kannu rendum thamarapoo | P. Susheela | |
1964 | pazhasi raja | anjanakunnil | P. Susheela | |
1964 | pazhassi raja | muthe vaa vaavo muthu | P. Susheela | |
1964 | Ayisha | thamara ponnkavile | P. Susheela. Jikki. A.M. raja | |
1964 | Ayisha | akkaanum malayude cheriviloru | A.M.Raja, P. Susheela | |
1964 | Ayisha | anganeyangane [Badarul Muneer] | A.M.Raja, P. Susheela | |
1964 | Ayisha | Manoraajyathu [Badarul Muneer] | A.M.Raja, P. Susheela | |
1964 | Ayisha | muthane ente muthane | A.M.Raja, P. Susheela | |
1964 | Ayisha | muthane ente muthane -sad | A.M.Raja, P. Susheela | |
1964 | Ayisha | poomagalanu | P. Susheela | |
1964 | Ayisha | Rajakumari [Badarul Muneer] | A.M.Raja, P. Susheela | |
1971 | ananda shilpangal | kathatha kaarthika vilakku | P. Susheela | |
1972 | miss mary | manivarnanillatha vrundavanam | P. Jayachandran, P. susheela | |
1972 | miss mary | neeyente velicham | P. Susheela | |
1972 | Miss mary | ponnambiliyude poomukhavathil | P. Jayachandran, P. susheela | |
1973 | kaapaalika | a smash and a crash | P. Susheela | |
1974 | Nadeenadanmare Avasyamundu | chendumalli chandramadham | P. Susheela | |
1974 | pattabhishekam | pallavil mathram | P. Susheela | |
1975 | kuttichathan | raangangal bhavangal | K.J. Yesudas, P. Susheela | |
1975 | priye ninakku vendi | maridameeran thukil | P. Susheela | |
1975 | velicham akale | enikku dahikkunnu | P. Susheela | |
1975 | velicham akale | sapthami chandrane | P. Jayachandran, P. susheela | |
1976 | Chottanikara Amma | manassu manassinte | K.J. Yesudas, P. Susheela |
Informative and Accurate!
பதிலளிநீக்குI think Gana Saraswathi only knows the truth why she didn't sing much for ARR. It clould also be that she declined when an offer was made or when she was approached. No one Knows!
பதிலளிநீக்குAs long as ARR said what he said, I am happy for Amma!
பதிலளிநீக்கு