பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 14 மே, 2017

ஜி.ராமநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் -2



          கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய வ.உ.சிதம்பரனாரின் கதை படமாக்கப்பட்டது.. ஜி.ராமநாதன் இசையில் அந்த படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. பாரதியார் எழுதிய  “காற்று வெளியிடை கண்ணம்மா” பாடலை பி.சுசீலாவும், PBS-ம் இணைந்து பாடினர். மெல்லிய சாரலில் நனைவது போல் அத்தனை சுகம் அந்த பாடலை கேட்பது. !! அதிலும் கண்ணம்மா என பி.பி.எஸ் பாட “ஹூம்” என பி.சுசீலாவின் குரலில் அந்த செல்ல சிணுங்கல்.. !! பத்து மாற்று பொன் ஒத்த நின் மேனியும் `என பாடி முடிக்க அதை தொடர்ந்து வரும் ஆலாபனை..! மொத்த காதல் உணர்வையும் ஜீவனுள்ள அந்த  வரிகளையும் தாண்டி, இனிய இசையிலும் குரலிலும் கொண்டு வந்திருப்பார் ஜி.ராமநாதன். இந்த பாடலை ரசித்து கேட்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனை காலம் ஆனாலும் அந்த பாடலுக்கு இணையாக இன்னொரு காதல் பாடல் வராது.



   “சின்ன குழந்தைகள் போல் விளையாடி” என மனம் கவரும் தனிப்பாடல் ஒன்றும் பி.சுசீலாவின் குரலில் கேட்டு ரசிக்க கூடிய பாடல்.

   ( Kaatru Veliyidai Kannamma)
        
( Chinna kuzhanthaigal pol
         

        கடவுளின் குழந்தை படத்தில் “கண்ணா மனம்கல்லோ” என மனதை உருக்கும் ஒரு பாடல் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றது. அதே போல் “சின்ன சின்ன பூவே சிரித்தாடும் பூவே” என பி.பி.எஸ்சுடன் இணைந்து ஒரு இனிமையான பாடல் இடம் பெற்றது.. அதிலும் “குறும்பாக பேசி ஆவலை தூண்டி” என்ற வரிகளை கேட்கும் போதெல்லாம் காதில் தேன் வந்து பாயும்.  அதே பாடல் ஒரு சோக பாடலாகவும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.

    ( Chinna Chinna poove )
        
Kanna manam Kallo
         
    சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்த ஸ்ரீவள்ளி பட பாடல்களையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்படத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பாடல்களை பி.சுசீலா பாடினார். “இதய கோயில் இருக்க”. “வந்தாங்க மாப்பிள்ளை”, “வந்தாங்க மாப்பிள்ளை”, “காளான் குடை பிடிக்க” என் அக்குறிப்பிட தக்க பல பாடல்கள் படத்தில் இடம் பெற்றன.

 Vanna migum Paravaigala
        
Vanthanga maappilaiga
         

 ( Idhaya Koyil Irukka)
        
Unnai deivam Ena
         
எம்.ஜி.ஆர் நடித்த “அரசிளங்குமரி” படத்தில் “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்”. “ஹாவ் ஹாவ் என் ஆசைபுறாவே ஹாவ்”, “ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்” போன்ற பாடல்கள் குறிப்பிட தக்க பாடல்கள்..


  ( Thillalangadi 0
        
( Haav Haav En aasai )
         
“சித்தூர் ராணி பத்மினி” படத்தில் இடம் பெற்றா “தேவி விஜய பவானி” என்ற பாடல் முழுக்க முழுக்க பாரம்பரிய இசையுடன் ( ராகம்: சுப பந்துவராளி ) பக்தி மணம் கமழ இசை அமைக்க பட்ட பாடல். அதே படத்தில் இடம் பெற்ற “சிட்டு சிரித்தது போலே”, “மஞ்சளும் வாழ்க” ஆகிய பாடல்களும் குறிப்பிட படத்தக்கவை.


    Devi Vijaya Bhavani
        
( Chittu Chiragadiththadhu )
         
     ஜி.ராமநாதன் அவர்கள் கடைசியாக இசை அமைத்த படம் “தெய்வத்தின் தெய்வம்”. அத்திரைப்படத்தில் “நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை” என்ற ஒரு பாடல் மிகவும் பிரபலம் ஆனது. “பொன் விலங்கை வேண்டும் என்று போட்டுக்கொண்டேனே, உன்னை புரிந்தும் கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே” போன்ற வரிகளும் அதை உணர்வோடு பாடிய குரலும், உணர்வு பூர்வமான  இசையும் பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். “அன்னமே சொர்ணமே” என இரு இணை பிரியாத தோழிகள் பாடும் பாடலை பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடினர். முழுக்க முழூக்க தோல்வியின் எல்லைக்கே சென்ற ஒரு பெண்ணின விரக்தியான மனநிலையை உணர்த்தும் பாடலாக “பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னு போச்சு ஏலேலோ” என்ற பாடல் அமைந்தது. மொத்த விரக்தியையும் குரலிலேயே கொண்டு வந்திருப்பார் பி.சுசீலா அவர்கள்.


        

         
ஜி.ராமநாதன் அவர்கள் இசை அமைத்த “அருணகிரி நாதர்” திரைப்படத்தின் இசை அவர் மரணமடைந்ததால் பாதியிலேயே நின்றது. பின்னர் அதை தி.ஆர்.பாப்பா நிறைவு செய்தார். அத்திரைப்படத்தில் “நிலவோ அவள் இருளோ” என டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா இணைந்து பாடிய பாடல் குறிப்பிட தக்க பாடல். அதே போல் “பெண் பிறந்த பாவத்தை பிறர் சொல்லி கேட்டதுண்டு” என்ற சோகப்பாடலும் நெஞ்சை பிழியும்..
டி.எம்.எஸ் அவர்கள் கதாநாயகனாக நடித்த “பட்டினத்தார்” திரைப்படத்தில் “வக்கணை பேசுவதில் கெட்டிக்காரி” என துவங்கும் பாடல் பி.சுசீலாவின் குரலில் இடம் பெற்றது. ஒரு சாதாரண பாடல் தான்.. அதிலேயே வித்தைகள் காட்டி இருப்பார் ஜி.ராமநாதன் அவர்கள். “கெட்டிக்காரி” என முடியும் இடத்தில் வரும் கியுட்டான சங்கதியை கேட்டு பாருங்கள் !!!

      Nilavo Aval irulo
        
Penn Pirantha
         
புயலுக்கு பின் என்ற திரைப்படத்தில் “முரளி மாய கோபால கிருஷ்ணா” என்ற பாடல் குறிப்பிட தக்க பாடல்.

சவுக்கடி சந்திரகாந்தா படத்தில் “நீயும் நானும் யாரோ எவரோ” என்ற பாடலும் குறிப்பிட படத்தக்க பாடல்..

       


         
       இந்த தொகுப்பில் மொத்தம் 85 பாடல்களுக்கு மேல் இருக்கிறது.. அதில் 65 தமிழ் பாடல்களும் 20 க்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு படங்களின் பாடல்களும் அடங்கி இருக்கிறது. எண்ணிக்கையில் குறைவு தான்.. ஆனால் தரத்தில் எல்லாமே நிறைவான பாடல்கள். எல்லாமே அபூர்வமான முத்துக்கள்.. 

   இதில் இடம் பெற்ற தெலுங்கு பாடல்கள் எல்லாமே மொழி மாற்றம் செய்யப்பட்ட பாடல்கள். அதை பெரும்பாலும் T.சலபதி ராவ் தான் மொழி மாற்றம் செய்திருக்கிறார். மதுரை வீரன் தமிழ் படத்தில் பி.சுசீலா பாடி இருக்கவில்லை. ஆனால் தெலுங்கில் "Somulaite" என்ற பாடலை பி.சுசீலாவும், ஜிக்கியும் இணைந்து பாடினார்கள். இப்பாடல் தமிழில் "சும்மா இருந்தா சோத்துக்கு கஷ்டம்" என பி.லீலாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல் ஆகும்.

முழு பாடல்களின் தொகுப்பு..


YearLanguage     Movie   Songs
1957TamilAmbikapathiaadattuma konjam padattuma
1957Tamilpudhumai pithanthen madhuvai thedivarum
1957Tamilsamaya sanjeevisinthikkum thaniai
1957TamilvanangamudiEnnai pol penn allavo
1957TamilvanangamudiMohana punnagai seithidum 
1957Tamilvanangamudiraja yogame paareer oru 
1957Tamilvanangamudivaazhvinile vaazhvinile
1957Telugusahasa veerudumaata meedha
1958Teluguveer khadgamee madhuve etalu teerchu
1958Teluguveera pratapmadhuvanamele
1958Teluguveera pratapsundaruda nee sogasu
1958Tamilkaathava rayanniraiveruma ennam
1958Tamilmangalya bhagyammaattuppennai
1958Tamilmangalya bhagyamkannodu kann  kalanthal
1958Tamilsaarangadharathanai maranthadum 
1958Telugusaarangadharapaavurama 
1958TamiluththamaputhirananbE amuthE arum kaniye
1958Tamiluththamaputhiranmannulagellam ponnulagaga
1958Tamiluththamaputhiranmullai malar mele
1958Tamiluththamaputhiranunnazhagai kanniyargal 
1958Tamilvaazhkai oppandhamennaye maranthe
1958Tamilvaazhkai oppandhamnee thaane logamum
1958Tamilvaazhkai oppandhamvaaraai aaruyir raadha
1959Tamilnaan sollum rahasiyamkanatha sorgam
1959Tamilnaan sollum rahasiyamkandene unnai kannale 
1959Tamilnaan sollum rahasiyamthaye idhu gnayama
1959Teluguchevilo rahasyamkani pinchi challaga
1959Teluguchevilo rahasyamchelaregi ooga
1959Teluguchevilo rahasyamradhe daya nyayama
1959Tamilkalyaanikku kalyanamintha maanilathai paarai 
1959Tamilthozhanalai pole thendral malar 
1959TamilthozhanO iraiva un cheyal
1959Tamilthozhanvaazhvile inbam maanilam
1959Tamilveera pandiya kattabommananjatha singam en kaaLai
1959Tamilveera pandiya kattabommanInbam pongum vennilaa
1959Tamilveera pandiya kattabommantakku takku takkunnu
1960Tamilchavukkadi chandrakanthaennaippaar vazhnaalile
1960Tamilchavukkadi chandrakanthaneeyum naanum yaaro 
1960Tamilkadavulin kuzhanthaiChinna chinna poove (pathos)
1960Tamilkadavulin kuzhanthaiChinna chinna poove 
1960Tamilkadavulin kuzhanthaikanna manam kallo
1960Tamilpuyalukku pinmurali maya gopala
1960TamilRaaja desingukadhalin bimbam
1960Telugudesingu raja kathapremato
1960Telugudesinguraja kathayenati yenati
1961Tamilnaaga nandhinithillana illenna
1961Tamilarasilankumarihaav en asai purave
1961Tamilarasilankumarithillalangadi thillalangadi
1961Tamilarasilankumarioorvalamaga
1961Tamilkappalottiya thamizhanchinna kuzhanthaigal
1961Tamilkappalottiya thamizhankaatru veliyidai kannamma
1961Tamilsri valliaalolam
1961Tamilsri valliainthezhuthan
1961Tamilsri valliidhaya koyil irukka
1961Tamilsri vallikaalaan kudai pidikka
1961Tamilsri vallinjnanappazhame
1961Tamilsri vallithaagam thaninthadhu
1961Tamilsri valliunnaye deivamena
1961Tamilsri vallivannamigum (cho cho)
1961Tamilsri vallivanthanga mapillai
1961Telugusrivalli kalyanamom saravana bhava shanmuga
1961Telugusrivalli kalyanamchinni chinni guvvalara
1962Telugusrivalli kalyanamNinne koritira
1962Tamildeivathin theivamanname sorname minnamal 
1962Tamildeivathin theivampaatu paada vayeduthan elelo
1962Tamildeivathin theivamnee illatha ulagathile nimmathi 
1962Tamilpattinatharvakkanai pesuvatil
1963Tamilchittoor rani padminichittu sirithadhu
1963Tamilchittoor rani padminidEvi vijaya bavaani
1963Tamilchittoor rani padminimanjal vazhga
1963Teluguchittoor rani padminiDevi vijaya bhavani chara 
1963Teluguchittoor rani padminiNanu pilichinadevaro lalitha 
1963Teluguchittoor rani padminiRaadhaa madhava gaadha kadidi 
1963Teluguchittoor rani padminiVennela dhoche megam visarenu
1963Tamilpannayar magankalaivani kalyani 
1963Tamilpannayar maganneeradum ullam
1963Tamilpannayar magan?? not clear ( LP record)
1963Tamilpannayar maganthenana kaadhal
1964TamilarunagirinadharnilavO avaL iruLO
1964Tamilarunagirinadharpenn pirantha paavathi
?Tamilcaptain ranjananja nenjan
?Tamilcaptain ranjankanmaniye
1961Telugusakthi patinarathu (D)??-- thillalangadi 
1961TeluguSakthi patinarathu (D)?? -- (hav haav haav)
1961TeluguSakthi patinarathu (D)??-- (oorvalamaaga)...


Part - 1 

Thanks.. ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக