பின்பற்றுபவர்கள்

திங்கள், 1 மே, 2017

T.G.லிங்கப்பாவின் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள் -2


    1961-ம் வருடம் “Kittooru Chinnamma”  என கன்னடத்தில் ஒரு திரைப்படம் வெளியானது. சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த இந்த மாபெரும் வெற்றி திரைப்படம் கன்னட திரை உலகில் ஒரு முக்கியமான படம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய கர்நாடகாவை சேர்ந்த கிட்டூர் ராணியின் கதையை B.R.பந்துலு இயக்கினார். இதில் சரோஜாதேவி பாடும் இரு மறக்க முடியாத பாடல்களை பி.சுசீலா பாடினார்.  11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்க மகாதேவி என்ற பெண் எழுதிய “Thanukkaragadavaralli pushpava”  என்ற பாடலை பாடும் வாய்ப்பு பி.சுசீலாவுக்கு கிடைத்தது.. பக்த மீரா கண்ணனை பாடியது போல். ஆண்டாள் பாசுரங்கள் பாடியது போல் கன்னடத்தில் "அக்க  மஹாதேவி" சிவனை கணவனாக நினைத்து பல பாடல்களை பாடி இருக்கிறார். இத்திரைப்படத்தில் “அக்க மகாதேவியின்” கருத்து மிக்க பாடலை பொருளறிந்து அருமையாக பாடி இருப்பார் பி.சுசீலா அவர்கள். இப்பாடலுக்கு நண்பர் விக்கி அவர்கள் அருமையான விளக்கம் எழுதி இருக்கிறார்கள். தவறாமல் படியுங்கள். ( link ). அதே போல் சரோஜாதேவி பாடும் “Nayanadali Dore iralu” என்ற பாடலும் பி.சுசீலாவின் குரலில் தேனாய் இனித்தது. இப்பாடலை பற்றி நண்பர் “ ஸ்ரீராம் லக்ஷ்மன் “ எழுதிய வரிகள் இதோ.. ( Link ) .

               
     ( Thanukaragadavaralli Pushpava )
        

         Nayanadali Dore iralu

           இந்த திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ராணி சென்னம்மா” என்ற பெயரிலேயே மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. தெலுங்கில் “kalusha hrudayamulichu”,  “kanula cheli solinadi” என இரு பாடல்கலை பாடினார் பி.சுசீலா. தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.


                 1962-ல் வெளிவந்த “Gaali Gopura” என்ற கன்னட படத்தில் “Anuragade nee paadalekeஎன்ற இனிமையான பாடல் PBS மற்றும் பி.சுசீலா குரல்களில் இடம் பெற்றது.   

        1963-ஆம் வருடம் “Saku Magalu” என்ற கன்னட திரைப்படத்தில் “Naanu Andalade neenu mooganadeஎன்றொரு இனிமையான பாடல் இடம் பெற்றது. இப்பாடலில் சௌகார் ஜானகி குருடியாக நடித்திருப்பார். சந்தோஷமாகவும் சோகமாகவும் பாடப்படும் இப்பாடலில் இரு வடிவங்களில் சந்தோஷமாக பாடும் “Naanu Andalaade” பாடலில் T.G.லிங்கப்பா அவர்கள் ஹம்மிங் செய்திருப்பார். 


        Naanu Andalade
Naanu Andalade - Sad
          

இத்திரைப்படம் “Pempudu Koothuru” என தெலுங்கில் NTR, தேவிகா, சௌகார்  நடிப்பில் வெளியானது. அதிலும் இதே பாடலின் டியூன் தான் உபயோகிக்க பட்டது. Naaku kanulu levu என்று துவங்கும் அந்த பாடல் சந்தோஷமாகவும், சோகமாகவும் படத்தில் இடம் பெற்றது. “Ravvala Jabililo” என்ற இன்னொரு பாடலும் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தது.

        Naaku Kanulu Levu
          Naaku Kanulu Levu - Sad

                       சிவாஜி நடித்த “முரடன் முத்து” படத்தில் TMS-பி.சுசீலா இனைந்து பாடிய “தாமரைப்பூ குளத்திலே” என்ற பாடல் குறிப்பிட படத்தக்க பாடல். “கல்யாணம்ஊர்வலம் பாரு மாப்பிள்ளை பெண்ணையும் பாரு” என்ற பாடலும் பி.சுசீலாவின் சோலோ பாடல் ஹிட்டான பாடல். 


        Thamarai poonkulathile
          Kalyana Oorvalam Paaru



        ஜெயலலிதாவின் முதல் கன்னட படமான “Chinnada Gombe” படத்தில் பி.சுசீலா தான் அவருக்கு பின்னணி பாடி இருந்தார். Nodalli meravanige” , “thaware hoo kereyali”  என்ற இரு பாடல்களுமே ஹிட் ஆன பாடல்கள். ஜெயலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பி.சுசீலாவே முதலில் பின்னணி பாடியவர் என்பது குறிப்பிட படத்தக்கது.


        Nodalli Meravenge 
          Thaware Hoo Kereyali

                       
 1965-ல் வெளியான “Naaga Pooja” படத்தில் “Neethiya meresi nyayava  என்ற சோக பாடல் குறிப்பிட படத்தக்கது. அப்படத்தில் “Belagisu Belagisu”, Baramma ohKamadenu நீ பி.சுசீலா பாடிய மூன்று பாடல்களுமே மனம் கவரும் பாடல்களே..


        Neethiya Merisi
                             Baramma Kamadhenu


   1966-ல் வெளிவந்த “தாயின் மேல் ஆணை” படத்தில் “பனி இருக்கும் குளிர் எடுக்கும்” என்ற பாடல் குறிப்பிட தக்க பாடல்.

1967-ல் வெளிவந்த “CHAKRA THEERTHA” என்ற கன்னட படத்தில் இடம் பெற்ற “Ninna roopa Kannaliஎன்ற பாடல் பிரபலம் ஆன பாடல்.

1968-ல் வெளிவந்த Dhoomakthu படத்தில் இடம் பெற்ற “aaha aaha idenu nade” என்ற பாடலும் மிகவும் பிரபலமான பாடல்.


        Ninna Roopa Kannali
          Anda Chanda Vedake


   1969-ல் வெளிவந்த தங்கமலர் திரைப்படத்தில் “தங்கமலரே உள்ளமே”.,  “அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி ”. “நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்”, “கண் கவரும் போம்மையடி” என நான்கு இனிமையான பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தன.

        Thanga Malare Ullame


       


             I971-இல் வெளிவந்த “Kula Gowrava” என்ற கன்னட படத்தில் “Raaganinnathu bhava nannathu”. “Ondu maathu Ondu maathu yenuஆகிய பாடல்கள் ஹிட் பாடல்கள். அதே படதில் “Ye hudugi ye bedagi”, “yaare bandavanuஆகிய பாடல்களும் ரசிக்க தக்கவை..

        Raaga Ninnadu 
          Ondu Maathu Ondu Maathu


Kula Gowrava திரைப்படம் தெலுங்கிலும் “Kula Gowravam” என்ற  பெயரில் தயாரிக்க  பட்டது. “hello Hello Doctor”,  “Matruthvamlone undi”. “Enni kalalu kannanura”. “Kalakantinani Palikavu”, “deshamante nuvve kadhu” என பல பாடல்கள் பி.சுசீலாவின் குரலில் ஒலித்தன..


“Sri Krishna Devaraya” என்ற கன்னட திரைப்படத்தில் “திருப்பதிகிரிவாசா ஸ்ரீ வெங்கடேசா” என்ற பாடல் PBS, பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோர் குரல்களில் ஒலித்த அருமையான பக்தி பாடல்களில் ஓன்று.

Devara Kannu படத்தில் இடம் பெற்ற “ninna neenu maradarenu”, “ O iniyaElliruveபாடல்களும் குறிப்பிட படத்தக்க பாடல்கள்.


        Thirupathi Girivasa


          Ninna Neendu Maretharenu



இந்த தொகுப்பில்  107  பாடல்களை வரிசைப்படுத்தி இருக்கிறேன். நிறைய நல்ல பாடல்கள் இருக்கிறது. கேட்டு ரசியுங்கள்..


மொத்த பாடல்களின் லிஸ்டை கீழே காணவும். 


11957TeluguRatnagiti RahasyamYamuna mukhamum
21957Tamilthanga malai rahasyamAmudhai pozhiyum nilave
31957Tamilthanga malai rahasyamAmudhai pozhiyum nilave (Pathos)
41957KannadaRatnagiri rahasyaamara madhura prema
51957KannadaRatnagiri rahasyaamara madhura -sad
61957Teluguratnagiri rahasyamYamuna Mukhamum
71957Teluguratnagiri rahasyamyamuna mukhamum-sad
81957Teluguratnagiri rahasyamiha lokame mana 
91957Teluguratnagiri rahasyamkalyanam mana
101958KannadaSchool masterradha madhava vinodha haasa
111958KannadaSchool mastersompaada sanjeevele
121958Telugubadi panthulu (D)radha madhava vinoda leela
131958Telugubadi panthulu (D)undala sampadana
141958Tamilenga kudumbam perisuradha madhava vinodha
151958Tamilenga kudumbam perisusugamana anthi velai
161958Tamilenga kudumbam perisukuyiluk kunju summaa 
171958Tamilthedi vandha selvamjallikkattu kaaLai
181958Tamilthedi vandha selvampanguni poi chithirai
191958Tamilthedi vandha selvamthangame thangam[1]
201958Tamilveera amarsingh(D)irul padintha
211958Tamilveera amarsingh(D)jam jam paadal
221958Tamilveera amarsingh(D)O varuvaayo -sad
231958Tamilveera amarsingh(D)varuvaayo
241958Tamilsabhash meenaaanaaga piranthathellam
251958Tamilsabhash meenayerungamma summa
261958Tamilsabhash meenaKaana inbam kaninthadhenO
271958Tamilthirumanamengal nadu andhra nadu
281958Tamilthirumanammalayalam pugazh
291958Tamilthirumanamnaanga pirantha thamizhnadu
301958Tamilthirumanamthulli vara poren
311959Telugusabhash pilla? (kaana inbam)
321959Telugusabhash pilla[2]ekkadamma meeru ekkadamma
331959Telugusabhash pillaaasa deepam
341959Telugusabhash pillaaadala maggala
351959Tamilpudhumai pennmaaRaadha kaadhalaalE
361959Tamilpudhumai pennninachathai
371960Tamilkuzhanthaigal kanda kudiyarasuamuthe odi vaa
381960Tamilellorum innattu mannarmanam enum-solo
391960Tamilellorum innattu mannarmanmennum vaanile
401960Tamilellorum innattu mannarmiruga inam thaan uyarnthathu
411960Tamilellorum innattu mannarvetri petta mamanukku
421960Tamilsangilithevansarasa kalayil ival 
431960KannadaMakkala Rajyamalaye Suriduba
441961Tamilennaipparkanniyare kanniyare
451961Tamilennaipparvanjiyarin gunamo
461962KannadaGaali gopuraanuraagade nee paadleke
471962KannadaKittooru Chennammanayanadali doreyiralu
481962KannadaKittooru Chennammathanukaragadavaralli
491961TeluguRani chennammakalusha hrudayamulichu
501961TeluguRani chennammakanula cheli solinadi
511962TamilRani Channamma? Nayanadali
521962TamilRani Channamma? Thanukka
531963Telugupempudu koothurunaaku kanulu (sad)
541963Telugupempudu koothurunaaku kanalulevu
551963Telugupempudu koothururavvala jabililo
561963KannadaSaku magalunaanu andhalade (happy)
571963KannadaSaku magalunaanu andhalade (sad)
581964Tamilmuradan muththukalyaana Urvalam paaru 
591964Tamilmuradan muththuthaamaraip poo kozhathilE
601964KannadaChinnada Gombenodalli merevanige noothana
611964KannadaChinnada Gombetaavare hookere
621965KannadaNaaga Poojabelagisu belagisu
631965KannadaNaaga Poojaneethiya merisi
641965KannadaNaaga Pooja baaramma oh kaamadhenu 
651966Tamilthaayin mel aanaimounam enbadhu
661966Tamilthaayin mel aanaioorillamal
671966Tamilthaayin mel aanaipaniyirukkum kuliredukkum
681967KannadaChakra theerthaninna roopa kannali-solo
691967KannadaChakra theerthaninna roopa kannali
701968KannadaDhoomaKethuaaha aaha idhenu nade
711968KannadaDhoomaKethurangu rangula
721969Tamilthanga malarkann kavarum boomayadi
731969Tamilthanga malarninaikka vaithai pesa vaidhai
741969Tamilthanga malarthangamalare ullame
751969Tamilthanga malarvithagi mulayagi(amaithiamaithi)
761971KannadaKula Gowravayaare bandavanu
771971KannadaKula Gowravaye hudugi baa
781971KannadaKula Gowravaondhu mathu 
791971KannadaKula Gowravaraaga ninnadhu bhava 
801972Telugukula gowravamHello hello doctor
811972Telugukula gowravamMatruthvamlone undi
821972Telugukula gowravamEnni kalalu kannanura
831972Telugukula gowravamKalakantinani
841972Telugukula gowravamDeshamante neevena
851972TamilAll india Radioisaimegame  sugamagume
861974KannadaSriKrishna Devaryathirupathi girivasa
871975Kannadadevara kannuninna neenu maradarenu
881975Kannadadevara kannuo iniya elliruve
891975KannadaHosilu mettidha hennuhoonage daivada sannidiyo
901975KannadaHosilu mettidha hennusaavira prasheneya
911977Kannadalakshmi nivasaenendu naa haadali
921984Kannadashiva kanyenambide ninna
931985Kannadashiva kotta sowbhagyayaara kopa yaara shapa
941982TelugunarasimhavataramAa Gajarajunu Brochina
951982Telugunarasimhavataramgovinda govinda narayana
961982Telugunarasimhavataramhari hariyani
971982TelugunarasimhavataramIdi Tagadura Moorkha
981982Telugunarasimhavataramkenchave naanna
991982Telugunarasimhavataramnamo namo narasimha
1001982Telugunarasimhavataramnee bhaktulara
1011982TelugunarasimhavataramSouriki Seshudu Sayyaga
1021982Telugunarasimhavataramnamonamo -ver2
1031982TelugunarasimhavataramNarayana Hari Narayana
1042001Kannadasharanu sharanu sri annapoorneshwaricheluva horanaada
1052001Kannadasharanu sharanu sri annapoorneshwarigiriraja tanaye
1062001Kannadasharanu sharanu sri annapoorneshwarihoranaada annapoorne
1072001Kannadasharanu sharanu sri annapoorneshwarihoranaadige hogana


( பாகம் - 1 )

4 கருத்துகள்: