This blog is to discuss about the Achievements of South Indian Playback Singer, Isaikuyil "P.Susheela".
பின்பற்றுபவர்கள்
புதன், 31 மே, 2017
பி.சுசீலாவும் மனோவும் இணைந்து பாடிய பாடல்கள்
பாடகர் மனோ அவர்கள் முதலில் நாகூர் பாபு என்ற பெயரிலேயே
பாடிக்கொண்டிருந்தார். தெலுங்கில் அவர் பாடிய பல பாடல்கள் நாகூர் பாபு என்ற
பெயரிலேயே வெளிவந்தன. அவர் இசை அமைப்பாளர்களான சக்ரவர்த்தி, எம்.எஸ்.வி, இளையராஜா
ஆகியோரிடம் உதவியாளராக இருந்து பின்னர் பாடகராக உயர்ந்தவர். சக்ரவர்த்தியிடம் உதவியாளராக இருந்த போது எஸ்.பி.பி அவர்களுக்கு டிராக் பாடுவது, மற்ற பாடகர்களுக்கு டியூன் சொல்லி கொடுப்பது என தன் திறமைகளை மெருகேற்றிக்கொண்டார். பாடகர், நடிகர், டப்பிங்
ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர். இப்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக
இருந்து மக்களை மகிழ்விக்கிறார்.
பாடகர் எஸ்.பி அவர்கள்பி பி.சுசீலா அம்மையாரை பற்றி பேசும் போதெல்லாம் என் முதல் பாடலை என்னுடன் பாடியவர் பி.சுசீலா என்று சொல்லுவார். அந்த பாடலை "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா" என்ற படத்துக்காக பி.பி.எஸ், பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பி இணைந்து பாடினார்கள். அதே போல் மனோவும் தன்னுடைய முதல் பாடலை பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பியுடன் இணைந்து
பாடித் தான் ஒரு பாடகராக தன்னுடைய தொழிலை ஆரம்பித்திருக்கிறார். 1984-இல் கற்பூர தீபம் என்ற தெலுங்கு
படத்துக்காக அந்த பாடலை பாடி இருப்பதாக கூறி இருக்கிறார். என்னிடம் அந்த பாடல்
இல்லை. அந்த வகையில் எஸ்.பி.பிக்கு மட்டும் அல்ல, மனோவுக்கும் “Lucky Mascot” பி.சுசீலா அவர்கள்
தான். மனோ அவர்களும் பி.சுசீலா அம்மையாரும், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
இந்த தொகுப்பில் மனோவும்
பி.சுசீலாவும் இணைந்து பாடிய 112 பாடல்கள் இருக்கிறது. இன்னும் கூட இருக்கலாம். இதில் பெரும்பாலான
பாடல்களை தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள்.
தமிழில் சில பாடல்களை
குறிப்பிட்டு சொல்லலாம்.. 1987-இல் வெளிவந்த “கிருஷ்ணன் வந்தான்” படத்தில் இடம் பெற்ற “ஒரு உறவு
அழைக்குது” பாடல் தான் என்னுடைய தொகுப்பில் இருக்கும் பாடல்களில் இந்த
ஜோடிக்குரல்கள் பாடிய முதல் தமிழ் பாடலாக இருக்கலாம் என நினைக்கிறேன். சரியான தகவல்
இருப்பவர்கள் அனுப்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக