பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 மார்ச், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்- 2

          சங்கர் கணேஷ் இசையில் “எஸ்.பி.பி”iயும்  பி.சுசீலாவும் இணைந்து பாடிய சில இனிமையான ஜோடிப்பாடல்ககளின் தொகுப்பு இது. . 70-களின் ஆரம்ப கால கட்டத்தில் அவ்வப்போது எஸ்.பி.பியின் குரலிலும் பாடல்கள் வர துவங்கி இருந்தது. சங்கர் கணேஷ், வி.குமார் மற்றும் எம்.எஸ்.வி அவர் குரலை ஓரளவு பயன்படுத்தி வந்தார்கள். அக்கால கட்டத்தில் வந்த டூயட்டுகளில் எஸ்.பி.பியின் இளமையான குரலும், பி.சுசீலாவின் இனிமையான குரலும் சில மறக்க முடியாத பாடல்களை தமிழ் திரை உலகுக்கு அளித்திருக்கின்றன.



    எனக்கு பிடித்த மிகவும் அழகான வரிகள். “கடவுள் மீது ஆணை உன்னை கைவிட மாட்டேன், உயிர் காதல் மீது ஆணை வேறு கை தொட மாட்டேன்”.  

















       



     























கண்ணே வானம் உன் வீடு 



    
..
YEAR Lang Movie Songs
1970 Tamil maanavan Kalyana ramanukkum kannana
1971 Tamil veetukku oru pillai Kelvi ketkum neramalla
1972 Tamil aval Geetha oru naal pazhagum
1972 Tamil thaaikku oru pillai kalyana raaman kolam 
1972 Tamil thaaikku oru pillai naan kaadhal kili
1972 Tamil ponmagal vandhaal endhan devanin paadal
1973 Tamil amman arul ontre ontru nee thara
1973 Tamil raadha Kadavul meethu aanai 
1973 Tamil iraivan irukkintran azhage un peyar
1974 Tamil kai niraya kasu dei vaada raaja
1975 Tamil anbu roja paal nilavu neram
1975 Tamil anbu roja pannirendu mani
1976 Tamil inspector manaivi naan radhai thaan
1976 Tamil nee oru maharani Aval Oru PachaiKuzhanthai
1977 Tamil ragupathi rakava rajaram thanga therodum azakinilE
1977 Tamil antru sinthiya ratham idhu naan ariyatha mayakkam
1978 Tamil kaamakshiyin karunai kannanukku
1978 Tamil kamatchiyin karunai kannanukku thottil kattum
1978 Tamil sakka podu podu raja kulirkalam nathiyoram
1979 Tamil adukku malli kaakaye neeti muzhakku
1979 Tamil neeya naan kattil mele kanden
1979 Tamil neeya unai ethanai murai
1979 Tamil nee siriththaal naan sirippen kadavul thantha kannirukku
1979 Tamil nenjukku neethi enakkoru kadhai
1979 Tamil mearke uthikkum sooriyan maharaani theerile maharaajan
1980 Tamil natchathiram ponnankanni poothu 
1980 Tamil natchathiram radha krishna gokulabala
1980 Tamil panam paghai paasam enakku piditha roja 
1980 Tamil neer nilam neruppu kaiyagal pottukkari (kannula)
1981 Tamil makarantham nee intri naano naan
1981 Tamil needhidevan mayakkam aaru irandu pannirendu
1981 Tamil needhidevan mayakkam othikayil thaane ippadi aanaal
1982 Tamil naan unna nenachen unnai thotta thoshamilla
1983 Tamil ninaivugal koyil deivam nee thendral 
1985 Tamil deivapiravi nill nill nill ilam thendrale
1985 Tamil deivapiravi poovai oru poo entru
1985 Tamil deivapiravi mounam ennum
1985 Tamil deivapiravi paanayile paalikku
1985 Tamil needhiyin nizhal hey manthaara poovo
1985 Tamil yuddham kanne vaanam un veedu
1986 Tamil nanban idhu adithadi

வியாழன், 23 மார்ச், 2017

சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்கள்.-பாகம் 1





     சங்கர்-கணேஷ் என்ற இரட்டையர்கள் தேவர் அவர்களால் இசை அமைப்பாளர்களாக அறிமுகம் செய்து வைக்க பட்டவர்கள். இதில் சங்கர் அவர்கள் இசைமேதை C.R.சுப்பராமன் அவர்களின் சகோதரர். இவர்கள் இருவரும் 1964-ல் இருந்தே எம்.எஸ்.வி-ராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளர்களாக பணி ஆற்றி வந்தார்கள். இசைகோர்வை பற்றி அங்கே தான் கற்றுக்கொண்டார்கள். 

     1967-ல் ஜெயலலிதா நடித்த “மகராசி” என்ற படத்தின் மூலமாக இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள். 1965-ல் ஜெயலலிதா நடத்திய நாட்டிய நாடகத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர் கணேஷ் என்ற காரணத்தால் ஜெயலலிதாவும் இந்த இரட்டையர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க சிபாரிசு செய்தார். பின்னர் ஜெயலலிதா நடித்த “வந்தாளே மகராசி” என்ற படத்துக்கும் சங்கர் கணேஷ் இசை அமைத்து இருக்கிறார்கள்.
   சங்கர் கணேஷ் எத்தனை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள் என்ற தகவல் எங்கும் இல்லை. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்ததாக சொன்னாலும் போதிய அளவுக்கு ஆதாரம் இல்லை. இருந்தாலும் எண்பதுகளில் இளையராஜாவுக்கு அடுத்த படியாக அதிக  படங்களுக்கு இசை அமைத்தவர் இவர் தான் என நினைக்கிறேன். சின்ன பட்ஜெட் படங்களில் இவர் பங்கு அதிகமாக இருந்தது. குறைந்த கால அவகாசத்தில் குறைந்த செலவில் பாடல்களை அளிக்கும் திறமை இவர்களுக்கு இருந்தது. அதிகம் பந்தா இல்லாமல் எல்லோரிடமும் இணக்கமாக செல்லும் குணம் இவர்களுடையது.

      சங்கர் கணேஷ் திருமணத்தில் பி.சுசீலா அவர்கள் கணவருடன் .


    பி.சுசீலா பிரதான பாடகியாக இருந்த கால கட்டத்தில் தான் இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அதனால் இவர்களது ஆரம்ப கால படங்களில் பி.சுசீலாவின் குரல் ஆதிக்கம் நிறைய படங்களில் இருந்தது. பின்னர் வாணி ஜெயராமின் அறிமுகத்துக்கு பின் பல படங்களில் இவர் வாணி ஜெயராமின் குரலை பயன் படுத்திக்கொண்டார்கள். குறிப்பாக எண்பதுகளில் வாணியின் குரலை இவர்கள்  இசை அமைத்த படங்களில் அதிகம் கேட்க முடிந்தது. என்றாலும் பி.சுசீலாவின் குரலையும் ஒரளவு உபயோகித்து வந்திருக்கிறார்கள். பி.சுசீலா இவர்கள் இசையில் நானூறு பாடல்களுக்கு மேல் பாடி இருப்பது சிறப்பு.
    எம்.ஜி.ஆர் நடித்த “நான் ஏன் பிறந்தேன்”. “இதய வீணை” போன்ற படங்கள் இவர்களுக்கு பெரிய திருப்புமுனை. அதற்குப்பின் தேவரின் “ஆட்டுக்கார அலமேலு” திரைப்படம் ஒரு பெரிய ப்ரேக் ஆக அமைந்தது. அதற்கு பின்  இவர்களுக்கு ஏறுமுகம் தான். இதில் கணேஷ் ஆறேழு படங்களில் கதாநாயகனாக கூட நடித்திருக்கிறார்.
·         பி.சுசீலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட சங்கர் கணேஷுக்காக வீல் செயரில் அமர்ந்து கொண்டே ஒரு பாடலை ரிக்கார்ட் செய்து கொடுத்தார். இதை கணேஷ் ஒரு பேட்டியில் நன்றியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

·         பி.சுசீலாவின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தினார் கணேஷ் அவர்கள்.. பி.சுசீலாவுடன் இணைந்து “ரோஜாமலரே ராஜகுமாரி” பாடலை மேடையில் பாடினார்.

·         பி.சுசீலாவுடன் இணைந்து திரைப்படங்களிலும் பாடி இருக்கிறார். உதாரணமாக, "நீ ஒரு மகாராணி" படத்தில் இடம் பெற்ற  "பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்" பாடலை குறிப்பிடுகிறேன். இந்த பாடல் காட்சியில் சங்கர் கணேஷ் இருவருமே தோன்றுகிறார்கள். 

·         பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்த செய்தி கேட்டதும் நேரில் வந்து வாழ்த்தியவர்களில் இவரும் ஒருவர்.

·         1967-இல் இவர்கள் இசை அமைத்த முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் பாடி இருந்தார் பி.சுசீலா அவர்கள். இந்த பயணம் 2015 வரை தொடர்ந்திருக்கிறது. 2015-இல் கணேஷ் இசை அமைத்த “சுவாமி ஐயப்பன்” என்ற இசை ஆல்பத்தில் “என்ன சொல்லி பாடுவது” என்ற பாடலை பாடினார் பி.சுசீலா அவர்கள். கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஒருவர் இசையில் பாடுவது என்பது பி.சுசீலா போல சிலருக்கே அமைந்த வரம்.

          



         இனி சங்கர் கணேஷ் இசையில் பி.சுசீலா பாடிய சில வித்தியாசமான பாடல்களை பார்க்கலாம். அவர்கள்
1.       எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது  ( காலம் வெல்லும் ). வில்லன்களை மயக்குவதற்காக கதாநாயகி பாடும் பாடல். Western இசையில் ஒரு மயக்கமும் துள்ளலுமாக அந்த பாடலை பி.சுசீலாவை பாட வைத்திருப்பார்கள் சங்கர் கணேஷ் அவர்கள்.

2.       விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா ( மாணவன் ). விடலை பருவத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்களான கமலும், குட்டி பத்மினியும் ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியுமாக பாடி களிக்கும் Campus பாடலை டி.எம்.எஸ்சும், பி.சுசீலாவும் இணைந்து ஜாலியாக பாடி இருப்பார்கள்.

3.       அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்:(அவள்) குடித்துக்கொண்டே போதையுடன் பாடுவது போல் பி.சுசீலா பல பாடல்களை பாடி இருக்கிறார். உதாரணமாக  “உன்னை கண் தேடுதே”, “உருண்டோடும் நாளில்”. “ஜவ்வாது மேடையிட்டு” போன்ற பல பாடல்கள் இருந்தாலும். இது கொஞ்சம் வித்தியாசமான பாடலாக அமைந்தது.
     
4.       நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்” ( இதய வீணை) விரஹம தொனிக்கும் பாடலை அதுவும் குளித்துக்கொண்டே பாடுவது போல் காட்சி அமைப்பு இருந்தது. நீர் தொடும் போதும்.நீ தொடும் போதும் தோன்றும் சிலிர்ப்பை குரலில் கொண்டு வந்திருப்பார் பி.சுசீலா. கொஞ்சம் கூட ஆபாசமே தோன்றாமல், தேவையான இடத்தில் ஹஸ்கி வாயிஸில் திறம்பட பாடியிருப்பார் கானக்குயில்.


  
5.       அட தட்டிக்கேட்க ஒரு ஆளில்லாமல் ( வந்தாளே ஒரு மகராசி ). பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பேசும் ஒரு பாடல். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வும் கூட இதே போல் துணிச்சலாகவே அமைந்தது வரலாறு.
   
6.       இல்லை என்பான் யாரடா ? (அன்னை அபிராமி) நாத்திகர் குரல் கடவுள் எங்கே என கேட்கும்? அதற்கு பதிலான  ஆத்திகர்கள் குரல் தான் இந்த பாடல்.  


7.       ஓல்ட் எல்லாம் ஓல்டு உன் மண்ட பால்டு ( ஓடி விளையாடு தாத்தா) பி.சுசீலாவின் குரலில் வந்த நகைச்சுவை கலந்த பாடல். எழுபதுகளில் அடிக்கடி இப்பாடல் ரேடியோவில் ஒலிக்கும். பி.சுசீலாவின் குரலில் வெளிவந்த வித்தியாசமான பாடல்களில் இதுவும் ஓன்று.  

8.       எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேல (அதை விட ரகசியம்). 70-களில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டலில் அடிக்கும் கூத்தும் கும்மாளமும் எப்படி இருந்தது என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம்.

9.       ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம் ( இன்ஸ்பெக்டர் மனைவி ) பி.சுசீலாவின் குரலில் ஒலிக்கும் இன்னொரு வித்தியாசமான பாடல் இது.
    
10.   மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன். ( கோமாதா எங்கள் குலமாதா). இப்படத்தின் எல்லா பாடல்களையும் பி.சுசீலா மட்டுமே பாடினார். படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றன. அதை தவிர “பட்டும் படாமல்” என்ற பாடல் இசைத்தட்டில் வெளிவந்தது. கோமாதா எங்கள் குலமாதா என்ற பாடலைப்போல் பசுவின் பெருமையை உயர்த்தும் பாடலாக “அன்பு தெய்வம் என்ற பாடல் அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற “மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்” பாடல் கதையின் போக்கை திருப்பும் ஒரு பாடல்.


     இனி இவர்கள் இசையில் பி.சுசீலாவின் குரலில் வெளி வந்த ஹிட் பாடல்களை பார்க்கலாம்.

( Part 2 )

ஞாயிறு, 12 மார்ச், 2017

சச்சுவுக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்.








              நடிகை சச்சு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர். நடனம் கற்று கை தேர்ந்தவர், மேடை நாடகங்களிலும்பி நடித்து புகழ்  பெற்றவர். பின்னர் நகைச்சுவை  வேடத்தில நடிக்க துவங்கி அதிலும் வெற்றிகரமாக வலம்  வந்தார். பின்னர் திரை உலகில் குணச்சிர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றார்.

                                         இவரைப்பற்றிய ஒரு விடியோ  கீழே ..
   
     சச்சு முதன் முதலில் கதாநாயகியாக நடித்த படம் "வீரத் திருமகன்". அதில் இன்னொரு கதாநாயகியாக E.V.சரோஜா அவர்களும் நடித்திருப்பார். அதில் பி.சுசீலா இவருக்காக மூன்று பாடல்கள் பின்னணி பாடி இருந்தார். அதில் பி.பி.எஸ்சும் பி.சுசீலாவும்  பாடிய  "ரோஜா மலரே ராஜ குமாரி" பாடல் இவருக்கு அருமையான அறிமுகத்தை கொடுத்தது. அப்பாடல்  இன்றளவும் சச்சுவை நினைவில் வைக்க உதவுகிறது. சமீபத்திய ஒரு படத்தில் கூட விவேக் இவரை "ரோஸாமலரே ராசகுமாரி" என்று அழைப்பார். என்ன ஒரு அழகிய டூயட்.!!  அதை தவிர "நீலப்பட்டடை கட்டி நிலவென்னும் சேலை கட்டி" , "அழகுக்கு அழகு"  போன்ற இனிமையான பாடல்களையும் சச்சுவுக்காக பி.சுசீலா பாடினார்.


           அதே போல அவர் கதாநாயகியாக நடித்த  இன்னொரு ஹிட்  ஹிட் திரைப்படம் "அன்னை". அப்படத்திலும் "அழகிய மிதிலை நகரினிலே" என்ற பாடல் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இப்போதும் கூட "ரோஜாமலரே" "அழகிய மிதிலை" பாடல்கள் டிவியிலும், மேடைகளிலும் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். அதைப்போல் "பக் பக் பக் பக் பக்கும்   பக்கும் மாடப்புறா" என்ற அழகிய பாடலும் படத்தில் மிகவும் பிரபலம்  ஆனது.


            சச்சு கதாநாயகியாக நடித்த இன்னொரு திரைப்படம் "அவன் பித்தனா?". அத்திரைப்படத்தில் ஒலித்த "கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி" பாடல் இப்போது தினமும் முரசு தொலைக்காட்சியில்  பலமுறை ஒலிக்கிறது. திராவிட இயக்கங்கள் இப்பாடலை தேர்தல் நேரத்தில் ஒலிக்க  விடுவதுண்டு.  "ஆயிரம் முத்தம் இந்த" என்ற டூயட்டும் "மாப்பிள்ளை மனசுக்கு பிடிச்சவரு" என்ற பாடலும் ஓரளவு கவனத்தை ஈர்க்க கூடியவை.  அதே போல் பத்தாம் பசலி என்ற படத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பாடும் "அண்ணா என்றொரு நல்லவராம்"  என்ற பாடல் காட்சியிலும் சச்சு நடித்திருக்கிறார்.



                   பி.சுசீலா கின்னஸ் சாதனை புரிந்த செய்தியை கேட்டதும்  60-களின் கதாநாயகியரில் பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்றாலும் சிலர் நேரடியாகவே வந்து வாழ்த்து தெரிவித்தனர். அதில் சரோஜாதேவி, காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு போன்றோர் அடக்கம்.  பி.சுசீலாவின் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் கீழே. 


தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா இவருக்கு பின்னணி பாடி இருக்கிறார். இதில்  சில காமெடி பாடல்களும் அடங்கும்.

List of Songs :

YearLanguage     MovieSongMusic
1962TamilAnnaiazhagiya mithilai nagarinileR. Sudarsanam
1962TamilAnnaioho hoho pakkum pakkumR. Sudarsanam
1966TamilAvan pithanaAyiram muthamR. parthasarathy
1966TamilAvan pithanakizhakku veLuthathadiR. parthasarathy
1966TamilAvan pithanamappillai manasukkuR. parthasarathy
1970TamilPathampasaliaNNa entroru nallavaramV. Kumar
1962TamilVeera thirumaganazhagukku azhaku nilavukkuMSV-TKR
1962TamilVeera thirumaganneela pattadaiMSV-TKR
1962TamilVeera thirumaganrOja malare raja kumariMSV-TKR
1975TeluguAnna thammula kathaardharathri kadasachu
1967TeluguDevuni gelisinna manavadukodevayasu ko antiSachu
1970TeluguMaarina manisiamritham meeku kaavalaSachu
1968TeluguPedarasi peddamma kathaoh jalathaaralonasachu
1963TeluguPenchina prema (D)chakkani mithulasachu
1962TeluguPraja sakthi(D)lokamunele rajakumarisachu, anandan











வியாழன், 9 மார்ச், 2017

எம்.என்.ராஜத்துக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்


             
 காலத்தையும் கடந்து வெற்றி பெற்ற பாடல்களில் ஒன்று "காவியமா நெஞ்சில் ஓவியமா" .. இப்பாடலில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருப்பவர் எம்.என்.ராஜம் அவர்கள்.  சிதம்பரம் ஜெயராமன், பி.சுசீலா குரல்களில் ஒலித்த இந்த பாடல் இன்றளவும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.

                 மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம் அல்லது எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ஏழு வயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப்   பயின்றவர்.            

                ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. முதன்மை நாயகியாக, எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர். இவரது கணவர் ஏ.எல்.ராகவன் ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார். 2012 ஆம் வருடம் ஏ.எல்.ராகவன் அவர்களுக்கு பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அதில் எம்.என்.ராஜம் அவர்களும் கலந்து கொண்டு பி.சுசீலாவை வாழ்த்தி பேசினார்.

       
 
      நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர் .. நிறைய படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்கள் அதிகம் என்றாலும் பாடல் காட்சிகள் குறைவு தான். பி.சுசீலா இவருக்கென 25 பாடல்களுக்கு மேல் பின்னணி பாடி  இருக்கிறார்.

                                           kaaviyama Nenjil Oviyama.



1959Tamilalli petra pillaiaasai athanK.V. Mahadevan
1959Tamilalli petra pillaichumma chummaK.V. Mahadevan
1960Tamilkavalai illatha manithansirikka sonnar sirithan MSV-TKR
1961Tamilmaamiyarum oru veettu marumagalevaa entru sonnadhumPendyala 
1959Tamilore vazhianbum aranum uyirena R. Govardanam
1959Tamilore vazhivanamenum veedhiyile R. Govardanam
1959Tamilore vazhivellathal azhiyathuR. Govardanam
1959Tamilore vazhivelli mEnum thulli aaduthuR. Govardanam
1959Tamilpenn kulathin ponn vilakkukangal urangidaMaster Venu
1959Tamilpenn kulathin ponn vilakkuvanakkam vaanga maapillaiMaster Venu
1959Tamilpenn kulathin ponn vilakkuvizhi vaasal azhaganaMaster Venu
1956Tamilpennin perumaiazhuvadhaa illai sirippadhaaA. Rama Rao
1958Tamilperiya koyiliruppavargaL maadiK.V. Mahadevan
1958Tamilperiya koyilkoLLai koLLum azhaginileK.V. Mahadevan
1958Tamilperiya koyilvalai veesamma valai veesuK.V. Mahadevan
1959Tamilpudhumai pennmaaRaadha kaadhalaalET.G. Lingappa
1959Tamilpudhumai pennninachathaiT.G. Lingappa
1956Tamilrambayin kadhalkannaala ulagile kaadhal T.R. Paapa
1959Tamilsivagangai seemaiIamyum vizhiyum edhiraanaalMSV-TKR
1960Tamilthanga rathinamenakku nE unakku naanK.V. Mahadevan
1960Tamilthanga rathinamInnoruvar thayavatherkkuK.V. Mahadevan
1960Tamilthangam manasu thangammangala thulasi matha K.V. Mahadevan
1960Tamilthangam manasu thangampongum azhagu poothuK.V. Mahadevan
1960Tamilthangam manasu thangamsirikkudhu mullai adhuK.V. Mahadevan
1960TamilPaavai vilakkukaaviyama nenjil oviyamaK.V. Mahadevan