பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 மார்ச், 2017

சச்சுவுக்கு பி.சுசீலா பாடிய பாடல்கள்.








              நடிகை சச்சு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர். நடனம் கற்று கை தேர்ந்தவர், மேடை நாடகங்களிலும்பி நடித்து புகழ்  பெற்றவர். பின்னர் நகைச்சுவை  வேடத்தில நடிக்க துவங்கி அதிலும் வெற்றிகரமாக வலம்  வந்தார். பின்னர் திரை உலகில் குணச்சிர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றார்.

                                         இவரைப்பற்றிய ஒரு விடியோ  கீழே ..
   
     சச்சு முதன் முதலில் கதாநாயகியாக நடித்த படம் "வீரத் திருமகன்". அதில் இன்னொரு கதாநாயகியாக E.V.சரோஜா அவர்களும் நடித்திருப்பார். அதில் பி.சுசீலா இவருக்காக மூன்று பாடல்கள் பின்னணி பாடி இருந்தார். அதில் பி.பி.எஸ்சும் பி.சுசீலாவும்  பாடிய  "ரோஜா மலரே ராஜ குமாரி" பாடல் இவருக்கு அருமையான அறிமுகத்தை கொடுத்தது. அப்பாடல்  இன்றளவும் சச்சுவை நினைவில் வைக்க உதவுகிறது. சமீபத்திய ஒரு படத்தில் கூட விவேக் இவரை "ரோஸாமலரே ராசகுமாரி" என்று அழைப்பார். என்ன ஒரு அழகிய டூயட்.!!  அதை தவிர "நீலப்பட்டடை கட்டி நிலவென்னும் சேலை கட்டி" , "அழகுக்கு அழகு"  போன்ற இனிமையான பாடல்களையும் சச்சுவுக்காக பி.சுசீலா பாடினார்.


           அதே போல அவர் கதாநாயகியாக நடித்த  இன்னொரு ஹிட்  ஹிட் திரைப்படம் "அன்னை". அப்படத்திலும் "அழகிய மிதிலை நகரினிலே" என்ற பாடல் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. இப்போதும் கூட "ரோஜாமலரே" "அழகிய மிதிலை" பாடல்கள் டிவியிலும், மேடைகளிலும் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள். அதைப்போல் "பக் பக் பக் பக் பக்கும்   பக்கும் மாடப்புறா" என்ற அழகிய பாடலும் படத்தில் மிகவும் பிரபலம்  ஆனது.


            சச்சு கதாநாயகியாக நடித்த இன்னொரு திரைப்படம் "அவன் பித்தனா?". அத்திரைப்படத்தில் ஒலித்த "கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி" பாடல் இப்போது தினமும் முரசு தொலைக்காட்சியில்  பலமுறை ஒலிக்கிறது. திராவிட இயக்கங்கள் இப்பாடலை தேர்தல் நேரத்தில் ஒலிக்க  விடுவதுண்டு.  "ஆயிரம் முத்தம் இந்த" என்ற டூயட்டும் "மாப்பிள்ளை மனசுக்கு பிடிச்சவரு" என்ற பாடலும் ஓரளவு கவனத்தை ஈர்க்க கூடியவை.  அதே போல் பத்தாம் பசலி என்ற படத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பாடும் "அண்ணா என்றொரு நல்லவராம்"  என்ற பாடல் காட்சியிலும் சச்சு நடித்திருக்கிறார்.



                   பி.சுசீலா கின்னஸ் சாதனை புரிந்த செய்தியை கேட்டதும்  60-களின் கதாநாயகியரில் பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்றாலும் சிலர் நேரடியாகவே வந்து வாழ்த்து தெரிவித்தனர். அதில் சரோஜாதேவி, காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு போன்றோர் அடக்கம்.  பி.சுசீலாவின் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் கீழே. 


தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா இவருக்கு பின்னணி பாடி இருக்கிறார். இதில்  சில காமெடி பாடல்களும் அடங்கும்.

List of Songs :

YearLanguage     MovieSongMusic
1962TamilAnnaiazhagiya mithilai nagarinileR. Sudarsanam
1962TamilAnnaioho hoho pakkum pakkumR. Sudarsanam
1966TamilAvan pithanaAyiram muthamR. parthasarathy
1966TamilAvan pithanakizhakku veLuthathadiR. parthasarathy
1966TamilAvan pithanamappillai manasukkuR. parthasarathy
1970TamilPathampasaliaNNa entroru nallavaramV. Kumar
1962TamilVeera thirumaganazhagukku azhaku nilavukkuMSV-TKR
1962TamilVeera thirumaganneela pattadaiMSV-TKR
1962TamilVeera thirumaganrOja malare raja kumariMSV-TKR
1975TeluguAnna thammula kathaardharathri kadasachu
1967TeluguDevuni gelisinna manavadukodevayasu ko antiSachu
1970TeluguMaarina manisiamritham meeku kaavalaSachu
1968TeluguPedarasi peddamma kathaoh jalathaaralonasachu
1963TeluguPenchina prema (D)chakkani mithulasachu
1962TeluguPraja sakthi(D)lokamunele rajakumarisachu, anandan











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக