வட இந்தியாவில் பாடகர்களுக்கும் ராயல்டி வழங்கும் வழக்கம் இருந்தது. அதைப்போல் தங்களுக்கும் வேண்டும் என பி.சுசீலாவும் குரல் எழுப்பினார். அது தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. அதனால் பி.சுசீலாவுக்கு மாற்றாக வேறு பாடகிகளை வளர்த்து விட முடிவு செய்து, போலீஸ்காரன் மகள். சுமைதாங்கி ஆகிய படங்களில் முயற்சியும் செய்தார். ஆனால் அந்த படங்கள் தோல்வி அடைந்ததால். "காதலிக்க நேரமில்லை" படத்தில் இருந்து ஸ்ரீதர் பட வாய்ப்புகள் மீண்டும் பி.சுசீலாவையே தேடி வந்தன. அப்படத்தின் இமாலய வெற்றியால் பின்னர் அவரின் பெரும்பாலான படங்களில் பி.சுசீலாவே பாடினார். அப்போது எல்லா பாடகர்களும் ஒன்றாய் குரல் கொடுத்திருந்தால் இப்போது ராயல்டி கேட்டு போராடும் நிலை வந்திருக்காது. ஸ்ரீதர் அவர்கள் பி.சுசீலாவின் குரல் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதற்கு இணையத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தது. Sridhar said that there could never be another P.Susheela as for the Singing Voice. ( Proof -See the image dowm)
இந்த தொகுப்பில் 1963, 1964 ஆம் ஆண்டு வந்த படங்களில் பாடல்களை பற்றி பார்ப்போம். ஐம்பதுகளில் வெளிவந்த புராண, இதிகாச படங்களின் தாக்கம் குறைந்து, அறுபதுகளின் துவக்கத்தில் அதிகமான குடும்ப படங்கள் வெளிவந்து வெற்றி அடைய துவங்கி இருந்தன. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வு முறையை விளக்கும் பல திரைப்படங்கள் வெளிவந்தன. படங்களின் எண்ணிக்கையும் கூட 40 முதல் 50 என்ற அளவில் உயர்ந்து இருந்தன.
1963-ல் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்த "ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், மணி ஓசை, நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பெரிய இடத்து பெண், ரத்த திலகம்" போன்ற தமிழ் படங்களிலும், "Manchi Chedu". "vijaya nagarada veeraputruni katha" போன்ற தெலுங்கு படங்களிலும் பி.சுசீலா அவர்கள் பாடினார்கள்.
பணத்தோட்டம் படத்தில் "பேசுவது கிளியா", "ஜவ்வாது மேடையிட்டு", "ஒரு நாள் இரவில் கண் உறக்கம்" போல எல்லாஎம் ஹிட் பாடல்கள். குடித்து விட்டு பாடுவது போல் உன்னைக்கண் தேடுதே", "உருண்டோடும் நாளில்" போல சில பாடல்களை ஏற்கெனவே பி.சுசீலா பாடி இருந்தார். இப்படத்தில் டி.எம்.எஸ் அவர்களும், பி.சுசீலாவும் பாடிய "ஜவ்வாது மேடையிட்டு" பாடலை குடித்து விட்டு பாடுவது போல் அவ்வளவு ஒரிஜினலாக பாடி இருப்பார்கள். "இத்திரைப்படம் "Donga Notlu" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
பெரிய இடத்துப்பெண் படத்தில் "அன்று வந்ததும் இதே நிலா", "கட்டோடு குழல் ஆட ஆட", "ரகஸ்யம் பரம ரகஸ்யம்", "துள்ளி ஓடும் கால்கள் எங்கே" எல்லாமே நல்ல பாடல்கள். "அன்று வந்ததும் இதே நிலா" பாடல் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்த பாடல். வெஸ்டர்ன் இசையை எல்லோரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்தனர் மெல்லிசை மன்னர்கள்.
ஆவி உருவில் வந்து பாடும் பாடல்கள் இவ்வருடத்தில் பிரபலம் ஆயின. ஒரு பக்கம் "மன்னவனே அழலாமா" ஹிட் என்றால் இன்னொரு பக்கம் "நெஞ்சம் மறப்பதில்லை" பாடலும் அதைப்போலவே பிரபலமாகிற்று. நெஞ்சம் மறப்பதில்லை பாடலை இன்னொரு பாடகியை வைத்து பாட வைக்க வேண்டும் என ஸ்ரீதர் முயற்சித்தாராம்., கிட்டத்தட்ட 45 நாட்கள் நேரம் எடுத்து உருவாக்கிய ஒரு பாடல், அதன் தரம் குறையக்கூடாது என்பதற்காக போராடி பாடலை காப்பாற்றி பி.சுசீலாவையே பாட வைத்து, அதை காலத்தால். அழியாத பாடல் ஆக்கினார் எம்.எஸ்.வி. இப்பாடலின் வெற்றிக்கு 75 % பி.சுசீலாவே காரணம் என தன்னுடைய சுய சரிதையில் புகழாரம் சூட்டி இருக்கிறார். ( அந்த இன்னொரு பாடகி குரலில் இந்த பாட்டை கேப்பதை நினைச்சாலே... காது குய்ங்...ங்குது) நெஞ்சம் மறப்பதில்லை பாடல் இருமுறை படத்தில் ஒலிக்கும். ( Happy & Sad ) "முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி" என எல்.ஆர்.ஈஸ்வரியுடன் ஒரு பாடலும், "தேனடி மீனடி நீயடி நானடி" என டி.எம்.எஸ் அவர்களுடன் பாடிய ஒரு வேகமான கிராமியப்பாடலும் குறிப்பிடத்தக்க பாடல்கள். இப்படம் "maarani manasulu" என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் நான்கு பாடல்களை பி.சுசீலா பாடினார்.
இது சத்தியம் படத்தில் வரும் "சரவண பொய்கையில் நீராடி" பாடல் பல மேடைகளிலும் ஆரம்ப பாடலாக ஒலிக்கின்ற பாடல். பெரும்பாலான முருகன் கோயில்களில் தவறாமல் ஒலிக்கின்ற பாடல். ஆலாபனையும், இளமையான குரலும், தெளிவான வார்த்தைகளும் இப்பாடலின் பலம் எனலாம். பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய "குங்கும பொட்டு குலுங்குதடி" பாடல் இன்னொரு சிறந்த பாடல். " காதலிலே பற்று வைத்தால் அன்னையடா அன்னை " என்ற சோகப்பாடலும், "மனம் கனிவான் அந்த கன்னியை" பாடலும் மனம் கவர்பவை.. "ரத்த திலகம்" படத்தில் "பசுமை நிறைந்த நினைவுகளே" பாடல் ரொம்ப வருடங்களாக கல்லூரி நிறைவு நாளன்று எல்லோர் மனத்திலும் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது.
இதயத்திலே நீ படத்தில் "உறவு என்றொரு சொல் இருந்தால்", "ஒடிவது போல் இடை இருக்கும்", "சித்திரப்பூவிழி வாசலிலே வந்து" போன்ற பாடல்கள் இனிமையானவை. "மணி ஓசை" படத்தில் "வருஷம் மாசம் தேதி பார்த்து", "பாயுது பாயுது கண்ணம்மா" பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை. பாசம் படம் தெலுங்கில் "Manchi Chedu" என ரீமேக் செய்யப்பட்டது. "Repanti Roopam kanti" (பால் வண்ணம் பருவம் கண்டு) உட்பட ஐந்து பாடல்களை பாடினார் பி.சுசீலா. இது சத்தியம் படத்தில் புகழ் பெற்ற "சரவண பொய்கையில் நீராடி" பாடலின் இசையை இப்படத்தில் "Poosina poove naa hrudayam".என ஒலிக்க செய்தார் கே.வி.எம் அவர்கள்.
பல புதுமையான முயற்சிகள் இவ்வருடத்தில் எடுக்கப்பட்டன. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட கர்ணன் படம் அக்காலத்திலேயே டெக்னிகலாக அசத்திய படம். அதன் பெரும்பாலான பாடல்களை ஹிந்துஸ்தானி இசையை தழுவி அமைத்தனர் மெல்லிசை மன்னர்கள். ஒரே இசை மழை என்றால் மிகை இல்லை. பி.சுசீலாவுக்கு மட்டுமே ஏழு பாடல்களை அள்ளி வழங்கினார்கள் மெல்லிசை மன்னர்கள். அவை எல்லாமே முத்துக்கள். "இரவும் நிலவும் மலரட்டுமே" பாடல் "சுத்த சாரங்கா" என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் இசை அமைக்கப்பட்டது. பி.சுசீலா ஹம்மிங்கில் பிரமாதப்படுத்தி இருப்பார். டி.எம்.எஸ்சும், பி.சுசீலாவும் பாடல் முழுவதையுமே அனுபவித்து பாடி இருப்பார்கள். தமிழ் சினிமா டூயட்ஸ்களில் ஒரு முக்கியமான இடம் இப்பாடலுக்கும் உண்டு. "அமீர் கல்யாணி" ராகத்தில் அமைந்த "என்னுயிர் தோழி" இன்னொரு மாஸ்டர் பீஸ்.. பி.சுசீலாவின் குரலும், பாடும் விதமும், ஹம்மிங்கும் பாடலை தமிழ் பாடல்களில் "கிளாஸிக்" என சொல்லக்கூடிய சில குறிப்பிட்ட பாடல்களின் தரத்துக்கு இப்பாடலை உயர்த்தியது. . அரண்மனை அறிவான், அரியணை அறிவான் வரியை தொடர்ந்து வரும் ஆலாபனை... சான்சே இல்லை.. அபாரம் ..! அபாரம்!! சுத்த தன்யாசி ராகத்தில அமைந்த "கண்கள் எங்கே" பாடல் இன்னொரு கிளாசிக். பி.சுசீலாவின் குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். "கண்ணுக்கு குலமேது" பாடலை பஹாடி ராகத்தில் அமைத்திருப்பார்கள். கர்ணனை தேற்றுவதற்காக அவர் மனைவி பாடவதை போல் அமைந்த பாடலில் வரிகளும் அதை பாடிய விதமும் மிக அற்புதம். டி.எம்.எஸ், பி.சுசீலா குரலில் ஒலித்த "மகாராஜன் உலகை ஆளலாம்" பாடல் கரகரப்ப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்டது. வளைகாப்பு என்ற மங்கள நிகழ்ச்சிக்காக ஒரு பாடலை அமைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள். "மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி" என்ற பாடலில் இசைக்கோர்வை மிக அருமையாய் இருக்கும். பி.சுசீலாவின் குரலில் பாடல் கேட்க நிறைவாய் இருக்கும். இத தவிர "மலர்கள் சூட்டி" என துவங்கும் ஒரு பாடல் PBS-பி.சுசீலா குரலில் ஒலித்தது. படத்தில் இடம் பெறவில்லை. இத்திரைப்படம் கர்ணா என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.. "இரவும் நிலவும் மலரட்டுமே" பாடலை "Neevu nenu valachithimi" என பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா அவர்கள். கண்ணுக்கு குலமேது (Gaaliki kulamedi) . கண்கள் எங்கே (Kannulandhe ) என தெலுங்கிலும் எல்லா பாடல்களையும் பி.சுசீலா பாடினார்.
அதைப்போலவே கலைக்கோயில் என ஒரு கிளாசிகல் படத்தை ஸ்ரீதர் டைரக்ஷனில். சொந்தமாக தயாரித்தார் எம்.எஸ்.வி அவர்கள். கையை சுட்டுக்கொண்டாலும் பாடல்கள் அபாரமாக அமைந்தன. ஆபோகி ராகத்தில் பாலமுரளி கிருஷ்ணாவுடன் பி.சுசீலா பாடிய "தங்க ரதம் வந்தது வீதியிலே" இப்போது கூட அடிக்கடி கேட்கும் பாடல். ஸ்ரீ ராகத்தில் அமைந்த "தேவியர் இருவர் முருகனுக்கு" பாடல் இன்னொரு கிளாசிக். மேடையில் அதிகமாக யாரும் பாடிக்கேட்டதில்லை.. பாடலின் இடையில் வரும் ஆலாபனை பாடுவதற்கு ரொம்ப சிரமமானது. பி.சுசீலா ரொம்ப அனாயாசமாய் பாடி இருப்பார்கள். பி.பி.எஸ் , பி.சுசீலா குரல்களில் ஒலித்த "நான் உன்னை சேர்ந்த செல்வம்" இன்னொரு குளிர்ச்சியான ஜோடிப்பாடல்.
புதிய பறவையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்.. பி.சுசீலாவுக்கும் மிகவும் பேர் பெற்று கொடுத்த பாடல்கள். இன்று வரை இதன் பாடல்களை பி.சுசீலா மேடையில் பாடுகிறார். பார்த்த ஞாபகம் இல்லையோ, உன்னை ஓன்று கேட்பேன், சிட்டுக்குருவி முதம் கொடுத்து என மூன்று பாடல்கள். "உன்னை ஓன்று கேட்பேன்" பாடல் பியானோவின் இசையுடன் பி,சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பிரமாதமான பாடல். படத்தில் மூன்று முறை ஒலிப்பதாக ஞாபகம். ஒரு வெஸ்டர்ன் மேடைப்பாடகி பாடுவது போன்ற வகையில் உச்சஸ்தாயி இசையுடன் தொடங்கும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடல், பி.சுசீலாவுக்கே சவாலாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பாடலுக்கும் இரு வடிவங்கள் உண்டு. இரண்டுமே அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இத்திரைப்படம் "Singapore CID" என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. சிவாஜி நடிப்பில் வெளிவந்த "ஆண்டவன் கட்டளை", "பச்சை விளக்கு" போன்ற படங்களுக்கும் மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்தார்கள். ஆண்டவன் கட்டளை படத்தில் "அமைதியான நதியினிலே ஓடம்", " அழகே வா அருகே வா" பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ்.. "அமைதியான நதியினிலே" பாடல் சோகப்பாடலாகவும் ஒலித்தது. "பச்சை விளக்கு" படத்தில் "அவள் மெல்ல சிரித்தாள்", "குத்து விளக்கெரிய", "தூது செல்ல ஒரு தோழி இல்லையென" என எல்லாமே இனிமையான பாடல்கள்.
இவ்வருடத்தில் தான் "சர்வர் சுந்தரம்" படமும் வெளிவந்தது. மெல்லிசை மன்னர்கள் இசையுடன் பி.சுசீலாவின் துள்ளும் குரலும், கே.ஆர்.விஜயாவின் இளமையும் சேர்ந்து "சிலை எடுத்தான் ஒரு சின்னபெண்ணுக்கு" பாடலை ஒரு ஹிட் பாடலாக்கின. "தத்தை நெஞ்சம் சித்தத்திலே", "பாட்டொன்று தருவார் பாரடியம்மா", "போக போக தெரியும்" என எல்லாமே பிரபலமான பாடல்கள். இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கிலும் வெளி வந்தது. Kasi Kasile oke kannapilla (சிலை எடுத்தாள்), "pootha poche hridayam" (போக போக ) பாடல்கள் குறிப்பிட படத்தக்கவை.
1964-ல் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம் ஆகிய நான்கு படங்களுக்கு மெல்லிசை மன்னர்கள் இசை அமைத்தார்கள்.
மீனவர்களின் வாழ்க்கை முறையை சொல்லும்.படமாக படகோட்டி படம் அமைந்தது. "கரை மேல் இருக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்" என வாலியின் வரிகளில் மொத்த கதையே அடங்கி விடும். "என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி" பாடலில் பி.சுசீலாவின் குரல் உணர்ச்சி பிழம்பாய் ஒலிக்கும். "நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி" என பாடும் போது கலங்காத மனமும் கலங்கும். பி.சுசீலாவுக்கு பெருமை சேர்த்த பாடல்களில் இப்பாடலும் அடங்கும். காதலர்களின் பிரிவை உணர்த்தும் "பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்பாயோ" என்ற பாடல் டி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் ஒலித்தது. இருவரும் பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்கள். இதற்கு மாறாக அழகு கொஞ்சும் பாடலாக "அழகு ஒரு ராகம்" அமைந்தது. "தொட்டால் பூ மலரும்" பாடல் ஏ.ஆர்.ரஹ்மானால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரிஜினல் கேட்க கேட்க அலுக்காத பாடல். மெல்லிசை மன்னர்கள், வாலி, டி.எம்.எஸ், பி.சுசீலா, எம்.ஜி.ஆர், சரோஜாதேவி என எல்லோருடைய பங்கும் இப்பாடலில் மிக சிறப்பாக இருக்கும். இப்படம் "Kaalam Marindi" என்ற பெயரில் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
பணக்கார குடும்பம் படத்திலும் எல்லாம் ஹிட் பாடல்கள். "அத்தை மகள் ரத்தினத்தை", "பறக்கும் பந்து பறக்கும்", "இதுவரை நீங்கள் பார்த்த பார்வை", "வாடியம்மா வாடி" போல ஜாலியான பாடல்களும், "உன்னை நம்பினார் கெடுவதில்லை" என ஒரு சோகப்பாடலும் பிரபலம் ஆகின. இத்திரைப்படம் Srimanthalu என மொழி மாற்றம் செய்யப்பட்டது.
தெய்வத்தாய் படத்தில் "இந்த புன்னகை என்ன விலை", "வண்ணக்கிளி சொன்ன மொழி எனன் மொழியோ", "காதலிக்காதே கவலைப்படாதே" போன்ற ஜோடிப்பாடல்களும் "பருவம் போன பாதையிலே" என ஒரு தனிப்பாடலும் பிரபலம் ஆகின.
என் கடமை படத்தில் "யாரது யாரது தங்கமா", "தேனோடும் தண்ணீரின் மீது", "மீனே மீனே மீனம்மா", "இரவினிலே என்ன நெனப்பு" என எல்லா பாடல்களுமே பேசப்பட்டன. இப்படம் Karanahanthakudu என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
கருப்புப்பணம் படத்தில் "கண்மணி கண்மணி கனியே சிறுமணி" பாடல் ஓரளவு பிரபலமான பாடல். பார் மகளே பார் படம் "Kavala pillalu" என்ற பெயரில் இவ்வருடம் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
Year | Lang | Movie | Songs | |||||||
1963 | Tamil | aanandha jyothi | kaalamagal kannthirappaaL | |||||||
1963 | Tamil | aanandha jyothi | ninaikka therintha maname | |||||||
1963 | Tamil | aanandha jyothi | pani illatha maargazhiya | |||||||
1963 | Tamil | aanandha jyothi | poyyile piranthu poyyile | |||||||
1963 | Tamil | idhayathil nee | odivathu pol idai irukkum | |||||||
1963 | Tamil | idhayathil nee | Chithira poovizhi vasalile | |||||||
1963 | Tamil | idhayathil nee | pazhagi vantha (uravu entoru) | |||||||
1963 | Tamil | idhu saththiyam | kadhalile patru vaidhal | |||||||
1963 | Tamil | idhu saththiyam | manam kanivaana andha | |||||||
1963 | Tamil | idhu saththiyam | saravana poigayil nEraadi | |||||||
1963 | Tamil | idhu saththiyam | kunguma pottu kulunguthadi | |||||||
1963 | Tamil | karpagam | annai madi methayaadi (Sad) | |||||||
1963 | Tamil | karpagam | athai madi methaydi | |||||||
1963 | Tamil | karpagam | mannavanE azhalaamaa | |||||||
1963 | Tamil | karpagam | aayiram iravugal varuvathundu | |||||||
1963 | Tamil | karpagam | pakkathu vEtu paruva machaan | |||||||
1963 | Tamil | karpagam | aayriam iravugal -unheared version | |||||||
1963 | Telugu | manchi chedu | Repanti roopam kanti | |||||||
1963 | Telugu | manchi chedu | dora dora vayasu | |||||||
1963 | Telugu | manchi chedu | poochina poove | |||||||
1963 | Telugu | manchi chedu | therela gudiyela | |||||||
1963 | Telugu | manchi chedu | thodu needa | |||||||
1963 | Tamil | mani osai | paayudhu paaudhu kannamma | |||||||
1963 | Tamil | nenjam marappathillai | munthaanai panthaada | |||||||
1963 | Tamil | nenjam marappathillai | nanjam maRappadhillai | |||||||
1963 | Tamil | nenjam marappathillai | nenjam marappadhillai -ver2 | |||||||
1963 | Tamil | nenjam marappathillai | thEnadi mEnadi maanadi nEyadi | |||||||
1963 | Tamil | panathottam | javvathu medayittu | |||||||
1963 | Tamil | panathottam | oru naal iravil kannurakkam | |||||||
1963 | Tamil | panathottam | pesuvathu kiliya illai | |||||||
1963 | Tamil | periya idathup penn | Antru vanthathum ithe nila | |||||||
1963 | Tamil | periya idathup penn | antru vanthathum (sad) | |||||||
1963 | Tamil | periya idathup penn | kattOdu kuzhalaada | |||||||
1963 | Tamil | periya idathup penn | ragasiyam parama ragasiyam | |||||||
1963 | Tamil | periya idathup penn | thulli odum kaalgalenge | |||||||
1963 | Tamil | ratha thilagam | mullirukkum | |||||||
1963 | Tamil | ratha thilagam | pasumai niRaindha | |||||||
1963 | Telugu | vijaya nagarada veeraput | madhura mohana veena | |||||||
1964 | Tamil | aandavan kattalai | Amaidhiyana nadhiyinile odam | |||||||
1964 | Tamil | aandavan kattalai | Azhage vA Aruge vA | |||||||
1964 | Tamil | aandavan kattalai | Thennai ilam keetrinile | |||||||
1964 | Tamil | deiva thaai | Intha punnagai Enna vilai | |||||||
1964 | Tamil | deiva thaai | kaadhalikkathe kavalaipadathe | |||||||
1964 | Tamil | deiva thaai | Paruvam pona padhayile | |||||||
1964 | Tamil | deiva thaai | Vannkili sonna mozhi enna | |||||||
1964 | Tamil | en kadamai | iravinile enna nenappu | |||||||
1964 | Tamil | en kadamai | meene meene meenamma | |||||||
1964 | Tamil | en kadamai | thEnodum thannErin mEdhu | |||||||
1964 | Tamil | en kadamai | Yaarathu Yaarathu thangama | |||||||
1964 | Tamil | kaadhalikka neramillai | enna paarvai undan paarvai | |||||||
1964 | Tamil | kaadhalikka neramillai | naaLaam naaLaam thirunaaLaam | |||||||
1964 | Tamil | kaadhalikka neramillai | nenjathai alli konjam thaa thaa | |||||||
1964 | Tamil | kaadhalikka neramillai | Anubhavam pudhumai | |||||||
1964 | Tamil | kaikodutha deivam | kulunga kulunga sirikkum | |||||||
1964 | Tamil | kalai koyil | Deviyar iruvar muruganukku | |||||||
1964 | Tamil | kalai koyil | naan unnai serndha selavm | |||||||
1964 | Tamil | kalai koyil | thangaratham vandhadhu | |||||||
1964 | Telugu | karna | bangaru momu | |||||||
1964 | Telugu | karna | evvari korake | |||||||
1964 | Telugu | karna | gaaliki kulamedhi | |||||||
1964 | Telugu | karna | Kannulanthe kannapadi | |||||||
1964 | Telugu | karna | Neevu nenu kalisithimi | |||||||
1964 | Telugu | karna | padathi galamuna | |||||||
1964 | Tamil | karnan | Kangal Enge nenjamum ange | |||||||
1964 | Tamil | karnan | Kannukku kulamedhu | |||||||
1964 | Tamil | karnan | Maharajan Ulagai aalalaam | |||||||
1964 | Tamil | karnan | Iravum Nilavum malarattume | |||||||
1964 | Tamil | karnan | Ennuyir Thozhi keloru sedhi | |||||||
1964 | Tamil | karnan | Manjal mugam niram mari | |||||||
1964 | Tamil | karuppuppanam | kanmani kanmai kaniye sirumani[1] | |||||||
1964 | Telugu | Kavala Pillalu | Madhuraa nagaraana vasantham | |||||||
1964 | Telugu | Kavala Pillalu | Naa Janakuni mano vidhi | |||||||
1964 | Telugu | Kavala Pillalu | naa karu patalani | |||||||
1964 | Telugu | Kavala Pillalu | nenu | |||||||
1964 | Telugu | Kavala Pillalu | nidura pothe | |||||||
1964 | Tamil | pachai vilakku | aval Mella Sirithal | |||||||
1964 | Tamil | pachai vilakku | Kuthu Vilakkeriya | |||||||
1964 | Tamil | pachai vilakku | thoodhu sella oru thozhi | |||||||
1964 | Tamil | padagotti | azhagu oru raagam | |||||||
1964 | Tamil | padagotti | Ennai eduthu thannai | |||||||
1964 | Tamil | padagotti | paatukku paateduthu | |||||||
1964 | Tamil | padagotti | Thottal Poo malarum | |||||||
1964 | Tamil | panakkara kudumbam | Athai magal rathinathai | |||||||
1964 | Tamil | panakkara kudumbam | idhuvari nEngal paartha | |||||||
1964 | Tamil | panakkara kudumbam | parakkum panthu parakkum | |||||||
1964 | Tamil | panakkara kudumbam | unnai nambinor | |||||||
1964 | Tamil | panakkara kudumbam | vaadiyamma vaadi | |||||||
1964 | Tamil | pudhiya paravai | chittu kuruvi mutham | |||||||
1964 | Tamil | pudhiya paravai | paaratha njabagam (sad) | |||||||
1964 | Tamil | pudhiya paravai | Paartha njabagam illayo | |||||||
1964 | Tamil | pudhiya paravai | Unnai ontru ketpen | |||||||
1964 | Tamil | sarvar sundaram | paattontru tharuvaar | |||||||
1964 | Tamil | sarvar sundaram | pOga pOga theriyum | |||||||
1964 | Tamil | sarvar sundaram | silayeduthaal oru | |||||||
1964 | Tamil | sarvar sundaram | thathai nenjam sithathile | ` | ||||||
1964 | Telugu | server sundaram | pootha poche hridayam | |||||||
1964 | Telugu | server sundaram | kasi kasile oke | |||||||
1964 | Telugu | server sundaram | mohini ilapye velisene | |||||||
1964 | Telugu | server sundaram | kanne dendham |
(Part-1) (Part-2)........ (Part-4) (Part 5)
Melody Doyenne – P Susheela
பதிலளிநீக்குThe early 1950s introduced to the South Indian Musical world a voice destined to rule music world for times to come. A calm and composed prodigy named Pulapaka Susheela recorded her first song ‘ Yethuku Azhathai’ (meaning - why u invited me ) for the tamil movie Petra thai. Not many then understood that years from then she would be crowned ‘ Isaiarasi – Queen of Music’. The beginning was a tough and arduous - it was said a popular music director felt the voice was too soft as singers in that period had base voices.The AVM production house appointed a tamizh pandit to teach the intricacies and nuances of the language. ‘Missiamma’ songs (1955) popularized PS voice in Tamil and Telugu. In 1957, ‘Azhaikaathey Ninaikathey’ song pushed her to top rung of music in Tamizh. From then on it was history in the making…
PS voice defined the voice of feminism in the 50s 60s and 70s; the choice of every household listener. Almost every heroine of the south, be it Anjali Devi, Padmini, Ragini, Saroja devi, Savitri,Devika, KR Vijaya,Jayalaalitha, Sarada ,Jamuna, Sowcar Janaki, Sheela, Jayanthi ,Kanchana,EV.Saroja,L.Vijayalkshmi, Rajasulochana, Manjula, Latha, Lakshmi, Jayachitra .. Etc, treasure the voice of the genius in almost all their movies. Her voice modulation imbibed the characteristics of every actress she sung and gifted her voice to them with individuality. The 60’s can simply be termed the Golden era of Tamizh music. There was not a movie recorded without PS honey soaked voice. Her voice kept reverberating across the various radiostations across the globe 24 /7.
It is impossible for anyone to simply say that these are my top ten favorite songs of PS. Probably, we can say top 1000 favorite songs… but for an ardent music listener every song of PS is a delight. Be it a sad melancholy like ninaika therindha manamey, sonnadhu neethana, unnai kaanatha kannum….. or a classical like Mannavan vanthanadi….or a duet like poomailaiyil orr malligai, aayiram nilvay vaa , a western number like enna enna varthaigalo… The PS stamp for each song is unique and inimitable...Till date there has been no voice that has surpassed the glorious voice of PS. (To be contd PS & Tamizh...)
Super Shravan ! Find more time to write more on PS..
நீக்குsuperb article Kalai.!! Well done!
பதிலளிநீக்குThanks Sri.
பதிலளிநீக்கு